செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7111 topics in this forum
-
பன்றி வேட்டையின் போது தந்தையை சுட்டுக் கொன்ற இளைஞர் கைது! இத்தாலியில் வனப் பகுதியொன்றில் பன்றி வேட்டைக்குச் சென்ற இளைஞர் ஒருவர் வைத்த குறி தவறி அவரது தந்தையின் உயிரை காவு கொண்டுள்ளது. இந்த சம்பவத்தை அடுத்து குறித்த சந்தேகநபர் இத்தாலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் இடம்பெற்ற அன்று இரண்டு பேரும் தென் மாகாணமான சலேர்நோவில் உள்ள போஸ்டிக்லியோனில் காணப்படும் அடர்ந்த புதர் பகுதியில் பன்றி வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது புதர் பகுதியில் ஏதோவொன்று அசைவதை அவதானித்த இளைஞன் தனது துப்பாக்கியை இயக்கியுள்ளான். அது பன்றி என நினைத்து அந்த இளைஞன் இலக்கு வைத்த நிலையில், மறுமுனையில் வேட்டையில் ஈடுபட்டிருந்த தந்தையின் மீது துப்பாக்கி குண்டு தாக்கியுள்ளது.…
-
- 0 replies
- 287 views
-
-
(ஜெயந்தி) ஆண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று வழுக்கை. வயோதிபத்தின் அடையாளமான வழுக்கை இளம் வயதிலேயே வருவதுதான் பிரச்சினையாகின்றது. இதற்குப் பலவாறு மருந்துகளும் பூச்சுகளும் அறிமுகப்படுத்தப்பட்ட போதும். இது இன்னமும் ஆண்களுக்கு ஒரு நிரந்தர தீர்வை தரவில்லை என்றுதான் கூறு வேண்டும். புதிய முயற்சியாக ஆண்கள் விரும்பி அணியும் தொப்பிகளில் ஒரு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வழுக்கைகளில் முடி வளர்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். தானாக சிறியமின்கலன்கள் மூலம் மின்னை உற்பத்திசெய்து உச்சந்தலையில் ஒரு சிறு அதிர்வை ஏற்படுத்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தொப்பி வழுக்கைத்தலையில் ஒரு மாதத்திற்குள் முடியை மீண்டும் வளரவைக்கும் என ஆராய்ச்சியா…
-
- 1 reply
- 350 views
-
-
கென்யாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள மாசாய் மரா என்ற தேசிய விலங்கியல் பூங்காவில், வெள்ளை நிற புள்ளிகளுடன் அரிய வகை வரிக்குதிரை வளர்ந்து வருவதாக கூறி, அதுதொடர்பான புகைப்படத்தை அண்மையில் பூங்கா நிர்வாகம் அதன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. இதனை கண்டு ஆச்சரியப்பட்ட பலரும், அதனை நேரில் படம் பிடிக்க பூங்கா நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில், இந்த தகவலை உண்மை என உறுதி செய்த சுற்றுலா வழிகாட்டியும், புகைப்பட கலைஞருமான ஆன்டனி டோரா என்பவர், இந்த அரிய வகை வரிக்குதிரையை முதன் முதலில் பார்த்து, புகைப்படம் எடுத்தது நான் தான் என்று தெரிவித்துள்ளார். மேலும், வரிகளுக்கு பதில் வரிக்குதிரையின் உடலில் வெள்ளை நிற புள்ளிகளை பார்த்தபோது, இடம்பெயர்வ…
-
- 1 reply
- 468 views
-
-
கடலுக்கடியில் காதலை வெளிப்படுத்த முயன்ற இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு September 22, 2019 அமெரிக்க இளைஞர் ஒருவர் தன்சானியாவில் கடலுக்கடியில் தன் காதலை வெளிப்படுத்த முயன்ற போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீவன் வெபர் என்பவர் தன் தோழி கெனிஷாவுடன் தன்சானியாவில் உள்ள பெம்பா தீவில் தண்ணீருக்கு அடியில் உள்ள மாண்டா விடுதியில் தங்கியிருந்துள்ளார். இந’;தநிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ள முடியுமா? என்பதைக் கவித்துவமாகக் கேட்க விரும்பிய அவர் நீருக்குள் இதனைக் கேட்க முடிவு செய்து தான் கைப்பட எழுதிய ஒரு காதல் கடிதத்துடன் நீருக்குள் இறங்கிய அவர் தன் காதல் கடிதத்தைக் காட்டி, தன் பையிலிருந்து மோதிரத்தை எடுத்த …
-
- 1 reply
- 357 views
-
-
பி.வி.சிந்துவை தூக்கிட்டு வந்து கல்யாணம் செய்யாமல் விடவே மாட்டேன்... கலெக்டரிடம் கெஞ்சி ரவுசு பண்ணும் ராமநாதபுரம் தாத்தா..! பிரபல பேட்மின்ண்டன் வீராங்கனை பி.வி. சிந்துவை தனக்கு திருமணம் செய்து வைக்கக் கோரி 75 வயது முதியவர் மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார். தெலங்கானாவை சேர்ந்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உலக சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று இந்தியாவுக்கு தங்க பதக்கம் வென்று பெறுமை சேர்த்தார். ஏற்கனவே பேட்மிண்டனில் பல்வேறு சாதனை புரிந்த பி.வி.சிந்து இந்த சாதனைக்கு பிறகு உலகெங்கிலும் உள்ள மக்கள் மத்தியில் புகழ்பெற்று விட்டார். இவருக்கான ரசிகர்கள் பட்டாளமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம்,…
-
- 9 replies
- 1k views
-
-
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பல வருடங்களாக தலையில் கொம்புடன் அவதிப்பட்டு வந்த முதியவரின் பிரச்சினை பெரிதாக பேசப்பட்டு வருகிறது. சாகர் மாவட்டத்தில் ரஹ்லி கிராமத்தில் வசிக்கும் ஷியாம் லால் யாதவ், பல வருடங்களாக தலையில் கொம்பு போன்ற மேடு உருவானதால் அவதிப்பட்டார். சமீபத்தில் அதை அகற்றுவதற்கான ஒரு நடவடிக்கையை மேற்கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு தலையில் ஏற்பட்ட காயத்திற்குப் பிறகு அவரது தோலில் ஒரு கொம்பு போன்ற மேடு உருவாகத் தொடங்கியது என்று ஷியாம் லால் யாதவ் தெரிவித்துள்ளார். காலப்போக்கில் மேடு பெரிதாகியுள்ளதாகவும் குறிப்பிடதக்கது. ஆரம்பத்தில் இது சற்று விசித்திரமாகத் தெரிந்துள்ளது. ஆனால் பின்னர், அவர் அதைத் தானே துண்டிக்கத் தொடங்கினார். மேடு தொடர்ந்து…
-
- 8 replies
- 1.3k views
-
-
-
அலுவலக பயணத்தின்போது அறிமுகம் இல்லாத ஒருவருடன் உடலுறவு கொண்ட நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு அலுவலர் இறந்ததற்கு பிரான்ஸ் நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவருடைய மரணம் ஒரு தொழிற்சாலை விபத்து என்று கூறி, இறந்த ஊழியருடைய குடும்பத்தினருக்கு நஷ்டஈடு பெறும் உரிமை உள்ளது என்று பாரிஸ் நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது. இறந்த ஊழியருடன் உடலுறவு கொண்ட பெண் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு தங்கள் அலுவலர் சென்றபோது, அவர் அலுவல் காரணத்துக்காக செல்லவில்லை என்று அந்த நிறுவனம் வாதிட்டது. ஆனால், அலுவலக பயணம் மேற்கொண்டிருக்கும் காலத்தில் எந்த விபத்தில் சிக்கினாலும் அதற்கு அந்த நிறுவனம் பொறுப்பேற்க வேண்டும் என்பது பிரான்ஸ் சட்டம் என்று நீதிபதிகள் கூறினர். சே…
-
- 0 replies
- 784 views
-
-
கூவுவதற்கான உரிமையை.. சட்டப் போராட்டத்தின் ஊடாக வெற்றி கொண்ட சேவல்! பாரம்பரியமாக இயற்கையுடன் ஒன்றித்து மனித சமூகத்திற்கு பயனுள்ள பறவையாக வாழும் சேவலுக்கு கூவுவதற்கும் சட்டரீதியாக உரிமையை பெற வேண்டிய சூழ்நிலை பிரான்சில் ஏற்பட்டுள்ளது. இந்த விடயம் அந்த நாட்டினரிடையே அபூர்வமான வழக்காக பார்க்கப்படுகிறது. எவ்வாறாயினும், மொரிஸ் என்கின்ற சர்ச்சைக்குரிய சேவலுக்கு காலையில் கூவுவதற்கான அனுமதியை பிரான்ஸ் நீதிமன்றம் ஒன்று வழங்கியுள்ளது. கிராமத்தில் வசிப்பவர்களுக்கும், நகரத்தில் வசிப்பவர்களுக்கும் இடையே ஏற்படும் மோதலின் அடையாளமாக நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில், மொரிஸ் என்ற இந்த சேவல் தனது காலை வழக்கத்தை தொடரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சேவல் உரிமையாளரின்…
-
- 2 replies
- 513 views
-
-
டைம்ஸ் ஆஃப் இந்தியா: மத்திய பிரதேசத்தில் மழை நிற்க வேண்டி தவளைகளுக்கு விவாகரத்து மத்திய பிரதேசத்தில் பெய்துவரும் கடும் மழையை நிறுத்த வேண்டி ஓம் ஷிவ் சேவா மண்டல் உறுப்பினர்கள் தவளைக்கு விவாகரத்து செய்யும் பூஜையை பரிகாரமாக செய்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. இதில், சுவாரஸ்யம் என்னவென்றால் இதே தவளைகளுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் ஓம் ஷிவ் சேவா மண்டல் உறுப்பினர்கள் திருமணம் செய்து வைத்தனர். மழை கடவுளை மகிழ்விக்கும் முயற்சியில் மத்திய பிரதேசம் போபாலில் உள்ள இந்திரபுரி கோயிலில் வேத மந்திரங்கள் ஒலிக்க …
-
- 1 reply
- 1k views
-
-
மனைவி தூங்குவதற்காக, 6 மணி நேரம் விமானத்தில் நின்று கொண்டே பயணித்த கணவர்! மனைவிக்காக விமானத்தில் சுமார் 6 மணி நேரம் நின்று கொண்டே பயணித்த கணவரின் புகைப்படம் வைரலாகியுள்ளது. சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகும். பெரும்பாலும் அவை சினிமா நடிகர், நடிகையரின் புகைப்படங்களாகவோ, அல்லது விலங்குகள், குழந்தைகள் சேட்டை செய்யும் புகைப்படங்களாகவோ, வீடியோக்களாகவோ தான் இருக்கும். ஆனால் தற்போது வைரலாகியுள்ள புகைப்படம், மனிதநேயத்தையும், கணவன் - மனைவி இடையேயான காதலை சொல்லும் வகையில் அமைந்துள்ளது. சம்பந்தப்பட்ட அந்த புகைப்படத்தில் ஒரு ஆண் விமானத்தில் நின்றபடி இருக்கிறார். அவருக்கு அருகில் ஒரு பெண் இருக்கையில் படுத்து உறங்குகிறார்.இந்த…
-
- 9 replies
- 1.3k views
- 1 follower
-
-
வங்கி தவறுதலாக வைப்பிலிட்ட பணத்தை, செலவிட்ட தம்பதி மீது வழக்கு! அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள வங்கி ஒன்று, தங்களது வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கில் தவறுதலாக லட்சக்கணக்கான அமெரிக்க டொலர்கள் பணத்தை வைப்பிலிட்ட நிலையில், அதனை அவர்கள் முழுவதுமாக செலவு செய்துள்ளனர். ரொபர்ட் மற்றும் டிஃபானி வில்லியம்ஸ் ஜோடியின் வங்கி கணக்கில் 1,20,000 டொலர்கள் பணத்தை வங்கி தவறுதலாக வைப்பு செய்திருந்தது. அதில் அவர்கள் SUV கார், மற்றும் பிற பொருட்களை வாங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப்பணம் அவர்களுக்கு சொந்தம் இல்லை என்று தெரிந்தும், அவர்கள் அதனை செலவு செய்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்…
-
- 1 reply
- 800 views
-
-
யாருடைய உதவியையும் பெறாமல், படகில் உலகைச் சுற்றிவந்த 77 வயது பெண்! உலக சாதனைக்கும், வீரதீர செயல்களுக்கும் வயதோ, தோற்றமோ தடையல்ல என்பதை பிரித்தானியாவைச் சேர்ந்த 77 வயதான பெண்ணொருவர் நிரூபித்துக் காட்டியுள்ளார். ஜீன் சோக்ரடீஸ் (Jeanne Socrates) என்பவர் தன்னந்தனியாக, இடையில் எங்கும் தங்காமல், யாருடைய உதவியும் இன்றி உலகத்தை சுற்றிவந்த படகோட்டி என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த வருடம் ஒக்ரோபர் 3 ஆம் திகதியில் இருந்து இந்த மாதம் 7 வரையான 330 நாள்களைத் தனியே கடலில் கழித்த அவர் கனடாவின் விக்டோரியா துறைமுகத்தைச் சென்றடைந்தார். தனது வெற்றிப்பயணம் பல சவால்கள் நிறைந்ததாக இருந்து என்று ஜீன் தெரிவித்துள்ளார். படகின் ரேடார் தொடர்புக் கருவி, திரைச்சீலை போன்றவை சேதமடைந…
-
- 0 replies
- 381 views
-
-
ஹிஜாப் அணிந்து கொண்டு ஆபாசக்காட்சியில் நடிக்க சொன்னபோது, "அப்படி ஒரு காட்சியில் நடித்தால் நான் கொல்லப்படுவேன்" என்று அவர்களிடம் சொன்னேன். ஆனால், அவர்கள் சிரித்தார்கள். செய்ய மாட்டேன் என்று சொல்ல தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது என்கிறார் பிபிசி ஹார்ட் டாக் நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் ஆபாசப்பட நடிகை மியா கலிஃபா. அவர் எவ்வாறு ஆபாசப்படத்துறைக்கு வந்தார், அவரது அனுபவங்கள், அதிலிருந்து வெளியேறியது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் பேசியுள்ளார். அந்தப் பேட்டியின் தொகுப்பு: …
-
- 0 replies
- 549 views
-
-
ஆன்மீக சக்தியால் நோயை குணப்படுத்துவதாக நடத்தப்பட்ட நிகழ்வில் நோயாளர்கள் இருவர் உயிரிழப்பு ஆன்மீக சக்தியால் நோய்களை குணப்படுத்துவதாக கூறி அனுராதபுரம் ஹொரவபொத்தானை பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஆரோக்கிய முகாமில் கலந்துகொண்டிருந்த நோயாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண்னொருவரும் காலி பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆணொருவரும் இவ்வாறாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மேலும் 18பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆன்மீக சக்தியில் நோய்களைக் குணப்படுத்துவதாக கூறப்படும் நபர் ஒருவரால் ஹொரவப்பொத்தானை மத்திய மகா வித்தியாலயத்தின் மைத்தானத…
-
- 0 replies
- 389 views
-
-
74 வயதான எர்ராமட்டி மங்கம்மா என்ற வயோதிப பெண் அறுவை சிகிச்சை மூலம் இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் ஒன்று இந்தியாவின் ஆந்திராவில் குண்டூர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நெலபார்த்திபாடு கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எர்ராமட்டி மங்கம்மா (வயது 74) அவரின் கணவர் எர்ராமட்டி ராஜா ராவ் (வயது 80). இந்த தம்பதிக்கு நீண்ட காலமாக குழந்தைகள் இல்லத காரணத்தால் சமூகத்தில் பெரும் குற்றச்சாட்டுகளையும் அவதூறுகளையும் எதிர்கொள்ள நேர்ந்தது. இதனால் எப்படியாவது ஒரு குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்ற அவர்களின் கனவை நனவாக்க முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றி கண்டுள்ளனர். பொதுவாக ஒரு பெண்ணின் கருத்தரித்தல் காலம் அவரின் (…
-
- 16 replies
- 1.4k views
- 1 follower
-
-
சீனாவில் பெரும் டிராஃபிக் நடுவே 12 வழிச்சாலையை கடக்க முயன்ற முதியவர் - பிறகு நடந்தது என்ன? சிசிடிவி காட்சிகள்
-
- 1 reply
- 374 views
-
-
வீடு கட்ட, அஸ்திவாரம் தோண்டியவருக்கு தங்கப் புதையல்.. அள்ளிக்கொண்டு போன போலீஸ் உத்தப்பிரதேசத்தில் வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியவருக்கு குவியல் குவியலாக தங்க நகைகள் புதையலாக கிடைத்துள்ளது. இதை அவர் மறைக்க முயன்ற நிலையில், ஊருக்குள் தகவல் கசிந்து கடைசியில் போலீஸ் நகைகளை அள்ளிக்கொண்டுபோனது. இதன் மதிப்பு ரூ.25லட்சம் என போலீசார் தெரிவித்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஹார்டோய் நகரில் ஒருவர் புதிதாக வீடு கட்டுவதற்காக நிலத்தை தோண்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது மண்ணுக்குள் தங்கம் புதைத்து வைக்கப்பட்டு இருப்பதை கண்டு இன்ப அதிர்ச்சியில் உறைந்தார். அந்த புதையலை எடுத்து பார்த்த போது, அதில் 650 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளி ஆபரணங்களை இருப்பதை அறிந்தார். ஆனால் இதை யாருக்கும்…
-
- 0 replies
- 1.4k views
-
-
இரவில் மாடுகளால் ஏற்படும் விபத்தை தடுக்க சூப்பர் பிளான் போட்ட உ.பி. அரசு ! ஐடியாவை கண்டு அசந்து போன மக்கள் ! பொதுவாக இரவு நேரங்களில், கார், பைக், லாரி, பஸ் போன்ற வாகனங்கள் அதிகமாக இயக்கப்படுவது இல்லை. இரவு நேர பேருந்துகள், மற்றும் சொந்த பயணங்களை மேற்கொள்ளுபவர்கள் மட்டுமே பயணம் செய்வார்கள். அதுவும் இரவு நேரங்களில் டிராபிக் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாமல் இருப்பதால், 100 கிலோ மீட்டருக்கு குறைவாக வாகனங்கள் செல்வதில்லை. இப்படி செல்லும் போது, அடிக்கடி... நாய்கள் மற்றும் மாடுகள் விபத்துக்குள்ளாகிறது. குறிப்பாக மாடுகளால் ஏகப்பட்ட விபத்துகள் நடப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் உத்திர பிரதேச மாநிலத்தில், இது போல் நடு ரோடுகளில் அலைந்து கொண்டிருக்கும் மாட…
-
- 1 reply
- 739 views
-
-
தென் ஆப்பிரிக்க சமையல்காரர் ஒருவர், பூச்சி உணவின் ருசியை அறிந்து கொள்ள முயன்று தற்போது பூச்சி உணவு மட்டுமே கொண்ட உணவகத்தை தொடங்கி நடத்தி வருகிறார். 4 ஆண்டுகளுக்கு முன்பு தாய்லாந்து சென்றிருந்த சமையல்காரர் மரியோ பர்னார்ட், உணவகம் ஒன்றில் சாப்பிட சென்றுள்ளார். அங்கு கொடுக்கப்பட்ட வறுத்த தேள் மற்றும் மசாலாவுடன் சேர்த்த பூச்சிகளை அருவருப்பால் உண்ணமுடியாமல் உணவகத்தை விட்டு வெளியேறியுள்ளார். ஆனால் அந்த பூச்சிகளின் சுவை எப்படி இருக்கும் என்ற ஆர்வம் மரியோவுக்கு அதிகரிக்கவே அது அவரை தென் ஆப்பிரிக்காவில் முதல் பூச்சி உணவகம் ஒன்றை தொடங்கி தூண்டியுள்ளது. இது குறித்து மரியோ பேசுகையில், இன்செட் எக்ஸ்பீரியன்ஸ் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த பூச்சி உணவகம் உலகம் முழுவதும் ப…
-
- 1 reply
- 344 views
-
-
மனிதனுக்கு மரணம் என்பது எந்த நேரத்தில் நிகழும் என்பது தெரியாது என்பதற்கு சான்றாக கர்நாடகாவில் ஒரு விடயம் நடந்தேறியுள்ளது. இந்தியாவில், கர்நாடகாவில் மேடை பாடகர் ஒருவருக்கு நேர்ந்த மரணம், நினைத்தாலே நெஞ்சத்தை பதற வைப்பதாக உள்ளது. கர்நாடகாவில் புழக்கத்தில் உள்ள மொழிகளில் ஒன்று கொங்கணி. இந்த மொழியில் அருமையான பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம்பிடித்தவர், ஜெர்ரி போஜ்ஜோடி. 51 வயததகிறது. கர்நா…
-
- 0 replies
- 809 views
-
-
சுற்றுலா தளமாக்கப்படும் மோடி தேத்தண்ணீர் விற்ற இடம்... ஏழை மகனுக்கு புகழாரம்..! பிரதமர் நரேந்திர மோடி தேத்தண்ணீர் விற்ற இடம் சுற்றுலா இடமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மோடி இளம் வயதில் தான் தேத்தண்ணீர் விற்றதாக அவரே கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் தேத்தண்ணீர் விற்க பயன்படுத்திய இடம் ஒரு சுற்றுலா இடமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குஜராத்தில் உள்ள வாட்நகர் ரயில் நிலையத்தில்தான் தேத்தண்ணீர் விற்பனை செய்து வந்தார். கடந்த காலங்களில் அவர் கணிசமான நேரத்தை செலவிட்ட ஸ்ராலை ஒரு சுற்றுலா இடமாக மாற்ற மாநில அரசு இப்போது முடிவு செய்துள்ளது. அதன் பழமையை மாற்றாமல் இந்த ஸ்ரால் ஒரு சுற்றுலாத் தளமாக்கப்பட உள்ளது. இது தொடர்…
-
- 1 reply
- 594 views
-
-
‘என் கடவுளே, என்ன நடந்தது?’ டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசியம் கசிந்தது! பிரான்ஸில் 22 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய இளவரசி டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசிய தகவல்கள் கசிந்துள்ளன. டயானாவின் உயிரை காப்பாற்ற போராடிய பரிஸ் தீயணைப்பு வீரர் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஊடாக இந்த இரகசியம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஊடகத்திற்கு கருத்து வெளியிட்டுள்ள பரிஸ் தீயணைப்பு வீரர் Xavier Gourmelon, ‘1997 ஆம் ஆண்டில் பரிஸில் உள்ள ஆல்மா சுரங்கப்பாதையில் இளவரசி சென்ற விபத்துக்குள்ளான போது, சம்பவ இடத்திற்கு சென்ற அவசர உதவி சேவை வீரர்களில் நானும் ஒருவர். கார் விபத்துக்குள்ளாகி இருந்தது, வழக்கமான வீதி விபத்து …
-
- 0 replies
- 369 views
-
-
சூழலுக்கு உகந்த வகையில், செடிகளாக வளரும் விநாயகர் சிலைகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. "தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை சார்பில் இந்த விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்துப் பேசிய துறை இயக்குநர் சுப்பையன், ''இந்த ஆண்டு 3000 சிலைகளை உருவாக்கி உள்ளோம். மாதவரத்தில் கிடைக்கும் களிமண் மிகுந்த சத்துகள் நிறைந்தது. செடிகள் வளர ஏதுவானது. அதனால் மாதவரத்தில் கிடைக்கும் மண்ணைப் பயன்படுத்தியுள்ளோம். கத்தரி, தக்காளி, மிளகாய் மற்றும் பச்சைக் காய்கறிகளின் விதைகளை மட்டுமே சிலைகளில் பயன்படுத்தினோம். விருப்பமுள்ளவர்கள் பழ வகைகள், மரங்கள் ஆகியவற்றைக் கொண்ட விதைகளைக் கேட்டாலும், உருவாக்கிக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். சிலைக…
-
- 2 replies
- 916 views
-
-
மகாராணி ஒருவிதமான மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல்! பிரித்தானிய மகாராணி ஒருவிதமான மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம் பெண்கள், குழந்தைகள் என பலரையும் பாலியல் குற்றத்தில் ஈடுபட வைத்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் சிறைச்சாலையில் தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் அவருடைய நெருங்கிய நண்பரான பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவும், சிறுமிகளுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எனினும், குறித்த குற்றச்சாட்டுகளுக்கு அரண்மனை நிர்வாகமும், இளவரசரும் மறுப்பு தெர…
-
- 6 replies
- 992 views
-