Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. சுற்றுலா தளமாக்கப்படும் மோடி தேத்தண்ணீர் விற்ற இடம்... ஏழை மகனுக்கு புகழாரம்..! பிரதமர் நரேந்திர மோடி தேத்தண்ணீர் விற்ற இடம் சுற்றுலா இடமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மோடி இளம் வயதில் தான் தேத்தண்ணீர் விற்றதாக அவரே கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் தேத்தண்ணீர் விற்க பயன்படுத்திய இடம் ஒரு சுற்றுலா இடமாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குஜராத்தில் உள்ள வாட்நகர் ரயில் நிலையத்தில்தான் தேத்தண்ணீர் விற்பனை செய்து வந்தார். கடந்த காலங்களில் அவர் கணிசமான நேரத்தை செலவிட்ட ஸ்ராலை ஒரு சுற்றுலா இடமாக மாற்ற மாநில அரசு இப்போது முடிவு செய்துள்ளது. அதன் பழமையை மாற்றாமல் இந்த ஸ்ரால் ஒரு சுற்றுலாத் தளமாக்கப்பட உள்ளது. இது தொடர்…

  2. ‘என் கடவுளே, என்ன நடந்தது?’ டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசியம் கசிந்தது! பிரான்ஸில் 22 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பிரித்தானிய இளவரசி டயானா பேசிய இறுதிவார்த்தை குறித்த இரகசிய தகவல்கள் கசிந்துள்ளன. டயானாவின் உயிரை காப்பாற்ற போராடிய பரிஸ் தீயணைப்பு வீரர் அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஊடாக இந்த இரகசியம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஊடகத்திற்கு கருத்து வெளியிட்டுள்ள பரிஸ் தீயணைப்பு வீரர் Xavier Gourmelon, ‘1997 ஆம் ஆண்டில் பரிஸில் உள்ள ஆல்மா சுரங்கப்பாதையில் இளவரசி சென்ற விபத்துக்குள்ளான போது, சம்பவ இடத்திற்கு சென்ற அவசர உதவி சேவை வீரர்களில் நானும் ஒருவர். கார் விபத்துக்குள்ளாகி இருந்தது, வழக்கமான வீதி விபத்து …

  3. சூழலுக்கு உகந்த வகையில், செடிகளாக வளரும் விநாயகர் சிலைகளை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளதாக இந்து தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. "தமிழக அரசின் தோட்டக்கலைத் துறை சார்பில் இந்த விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்துப் பேசிய துறை இயக்குநர் சுப்பையன், ''இந்த ஆண்டு 3000 சிலைகளை உருவாக்கி உள்ளோம். மாதவரத்தில் கிடைக்கும் களிமண் மிகுந்த சத்துகள் நிறைந்தது. செடிகள் வளர ஏதுவானது. அதனால் மாதவரத்தில் கிடைக்கும் மண்ணைப் பயன்படுத்தியுள்ளோம். கத்தரி, தக்காளி, மிளகாய் மற்றும் பச்சைக் காய்கறிகளின் விதைகளை மட்டுமே சிலைகளில் பயன்படுத்தினோம். விருப்பமுள்ளவர்கள் பழ வகைகள், மரங்கள் ஆகியவற்றைக் கொண்ட விதைகளைக் கேட்டாலும், உருவாக்கிக் கொடுக்கத் தயாராக இருக்கிறோம். சிலைக…

    • 2 replies
    • 916 views
  4. மகாராணி ஒருவிதமான மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல்! பிரித்தானிய மகாராணி ஒருவிதமான மன அழுத்தத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இளம் பெண்கள், குழந்தைகள் என பலரையும் பாலியல் குற்றத்தில் ஈடுபட வைத்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன் கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் சிறைச்சாலையில் தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில் அவருடைய நெருங்கிய நண்பரான பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூவும், சிறுமிகளுடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எனினும், குறித்த குற்றச்சாட்டுகளுக்கு அரண்மனை நிர்வாகமும், இளவரசரும் மறுப்பு தெர…

  5. தெற்கு ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வயதான பெண் ஒருவர் தனது வீட்டில் சில கோழிகளை வளர்த்து வந்தார். கோழிகளைப் பராமரிப்பது, அவற்றுக்குத் தேவையான பணிகளையும் அவரே கவனித்து வந்துள்ளார். கோழி முட்டைகளை எடுப்பதற்காக வீட்டின் பின்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள கூண்டுக்குச் சென்று அங்கிருந்த முட்டைகளை எடுத்துள்ளார். இதைக் கவனித்த சேவல் ஒன்று அவரது கால் நரம்புகளில் கொத்தியுள்ளது. அவரைத் தொடர்ந்து அங்கிருந்து நகரவிடாமல் காலில் கொத்தியுள்ளது. அந்தப்பெண் வெரிகோஸ் வெயின் என்னும் நோயால் பாதிக்கப்பட்டவர். இந்த நோய்த் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் காலின் தொடைப்பகுதிகளுக்குக் கீழ் நரம்புகள் முடிச்சு போட்டு இருப்பதுபோல் இருக்கும். இதன் காரணமாகக் கால் பகுதியில் ரத்த ஓட்டத்தில் பாத…

    • 0 replies
    • 592 views
  6. சென்னையில் தலைக்கவசம் அணியவில்லை என கார் ஓட்டிய பெண்ணுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்த சம்பவம் நடந்தேறியுள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. "சென்னை கொட்டிவாக்கம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் - நந்தினி தம்பதியினருக்கு போக்குவரத்து காவல்துறையினரிடமிருந்து குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில், தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டியதற்காக 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் அதில் குறிப்பிட்டிருந்த எண், நந்தினி பயன்படுத்தி வந்த காரின் வாகன பதிவெண் ஆகும். இதுகுறித்து, யானைகவுனி போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையத்தில் இந்த தம்பதியினர் புகார் அளித்துள்ளனர். இது குறித்து போக்குவரத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று அ…

    • 0 replies
    • 318 views
  7. 50 டொலர்கள் கொள்ளையடித்தமைக்காக 36 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டவர் விடுதலை August 31, 2019 50 அமெரிக்க டொலர்களை அங்காடி ஒன்றிலிருந்து திருடியதற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 36 ஆண்டுகளை சிறை வைக்கப்பட்டவரை அமெரிக்காவின் அலபாமா மாகாண நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை தண்டிக்கும் வகையில் 1970களில் அமுல்படுத்தப்பட்ட கடுமையான விதிமுறைகளின் கீழ் கைது செய்யப்பட்ட ஆல்வின் கென்னார்ட் என்பவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார். தற்போது 58 வயதாகின்ற ஆல்வின் தான் கைதுசெய்யப்படுவதற்கு முன்னர் செய்துகொண்டிருந்த தச்சர் வேலையை மீண்டும் தொடருவதற்கு விரும்புவதாக தெரிவித்துள்ளார். 1983ஆம் ஆண்டு, அவருக்கு 22 வயதிரு…

  8. எனக்கு பெட் அனிமல்ஸ் பிடிக்கும், நான் விலங்கு நல ஆர்வலர் என யார் வேண்டுமானாலும் சோசியல் மீடியாவில் சொல்லிக் கொள்வது சுலபம். ஆனால், நிஜ வாழ்க்கையில் மற்ற உயிரினங்களின் மீது அளவு கடந்த அன்பு காட்டுபவர்கள் வெகு சிலரே. அப்படியான ஒருவர்தான் குரோசியாவைச் சேர்ந்த ஸ்டெஜபன் வோகிக். கடந்த 27 ஆண்டுகளாகத்தான் தத்தெடுத்த நாரையைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார். இந்தக் கட்டுரை வோகிக் பற்றியது என நீங்கள் நினைக்கலாம். ஆனால், கட்டுரையின் முடிவில் ஒரு அற்புதமான ரொமாண்டிக் மூவி பார்த்த உணர்வு உங்களுக்கு இருக்கும் என்பது நிச்சயம். குரோசியாவில், Brodski Varos என்னும் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு அடிப்பட்ட நிலையில் கிடந்த நீர் பறவையை மீட்டு முதலுதவி செய்தார் வ…

  9. முச்சக்கர வண்டி மோதியதில் அடிபட்டு உயிருக்கு போராடிய தனது கன்றுக் குட்டியைப் பார்த்து பதறிய தாய்ப் பசு, கன்றை நாக்கினால் தடவி பாசப் போராட்டம் நடத்தியக் காட்சி கண்டோரின் கண்களில் நீரை வரவழைத்தது. தமிழகத்தின் திருச்சி மன்னார்புரத்தில் இருந்து கே.கே.நகருக்கு ஒரு முச்சக்கர வண்டி சென்று கொண்டிருந்தது. காஜாமலை காலனி அருகே அந்த முச்சக்கர வண்டி சென்றபோது, ஓடிவந்த கன்றுக் குட்டி அதன் மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதில், முச்சக்கர சாரதிக்கு லேசான காயம் ஏற்பட்டது. முச்சக்கர வண்டி மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட கன்றுக் குட்டி, படுகாயமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் ஓடி வந்…

  10. சுமார் 3.8 மில்லியன் வருடங்களுக்கு முந்திய குரங்கின மனிதர் ஒருவரது மண்டை ஓட்டை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எத்தியோப்பியாவில் இந்த மண்டையோடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஆய்வுக்கு உட்படுத்தி, மனித இனப்பரம்பல் குறித்த புதிய தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குரங்குகளில் இருந்து மனிதர்கள் கூர்ப்பு அடைந்ததாக நம்பப்படுகிறது. இந்த கோட்பாட்டில் இதுவரையில் நம்பப்பட்டுவந்த விடயங்களில் மாற்றி அமைக்கக்கூடிய தகவல்கள், இந்த மண்டை ஓட்டின் ஆய்வின் மூலம் வெளிப்படலாம் என்றும் நம்பப்படுகிறது. http://www.hirunews.lk/tamil/223198/குரங்கின-மனிதர்-ஒருவரது-மண்டை-ஓடு-கண்டுப்பிடிப்பு

    • 0 replies
    • 356 views
  11. இந்தியாவின் தேசிய விளையாட்டு தினமான இன்று (வியாழக்கிழமை) இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, விளையாட்டு மற்றும் உடல் பயிற்சியை ஊக்குவிக்கும் நோக்குடன் 'ஃபிட் இந்தியா மூமண்ட்' (FIT INDIA MOVEMENT) எனும் பிரசாரத்தை டெல்லியில் தொடங்கி வைத்தார். இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில் நடந்த இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் அனைவரும் உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இதன் நோக்கம் என்ன? இந்தியாவின் தேசிய விளையாட்டு தினம் இன்று (வியாழக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நாட்டு மக்களின் தினசரி செயல்பாட்டில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டை இணைப்பதற்கு ஊக்குவிக்கும் 'ஃபிட் இந்தியா மூமண்ட்' எனும் பிரசாரத்தின் தொடக்க விழ…

    • 0 replies
    • 297 views
  12. பெருவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் வரலாற்றில் மிகப்பெரிய குழந்தைகளின் திரள் குழந்தைகள் பிணக்குவியலை கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஐந்து முதல் 14 வயதுக்குட்பட்ட 227 சிறார்களின் சடலங்கள் பெருவின் தலைநகர் லிமாவுக்கு வடக்கே உள்ள கடலோர நகரமான ஹுவான்சாகோ அருகே கண்டெடுக்கப்பட்டன. இந்த குழந்தைகள் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்னர் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சென்ற ஆண்டு இதே நாட்டின் இருவேறு பகுதிகளில் 200 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதற்கான தடயங்கள் கண்டெடுக்கப்பட்டன. சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிறுவர்களின் பிணக்குவியலில் சிலரது முடி மற்றும் தோல் புதைக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுவதாக ஏ.எஃப்.பி செய்தி முகமையிடம் ப…

  13. வெலிஓயா – நிக்கவெவ தெற்கு பிரதேசத்தில் உள்ள பிள்ளையார் கோவிலிலிருந்த, பிள்ளையார் சிலையொன்று, காணாமல் போயுள்ளதென, வெலிஓயா பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்திலுள்ள பெரும்பான்மையின மக்களால், இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட, மிகவும் பெறுமதியான பிள்ளையார் சிலையே காணாமல் போயுள்ளதெனத் தெரிவிக்கப்படுகின்றது. வெலிஓயா பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் நெல் அருவடையின் பின்னர், பெறப்படும் முதலாது அரிசியை குறித்த பிள்ளையார் சிலைக்கே படைத்து பூஜை செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காணாமல் போன பிள்ளையார் சிலையை கண்டுபிடிப்பதற்கான, விசாரணைகளை வெலிஓயா பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். http://www.tamilmirror.lk/செய்திகள்…

    • 0 replies
    • 298 views
  14. நடுவானில் மயங்கிய விமானி – விடுமுறையிலிருந்த விமானியின் உதவியால் தரையிறங்கிய விமானம்! பிரித்தானியாவின் மன்செஸ்டரிலிருந்து மடைரா என்னும் தீவு நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்றின் விமானி திடீரென மயக்கமடைந்த நிலையில், அதே விமானத்தில் பயணம் செய்த விடுமுறையிலிருந்த மற்றொரு விமானி விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார். மான்செஸ்டரிலிருந்து புறப்பட்ட விமானம் சிறிது நேரத்தில் நிலைதடுமாறி பறப்பதை உணர்ந்த பயணிகளும், விமான ஊழியர்களும் திடீரென பரபரப்படைந்தனர். விமான ஊழியர்கள் அனைவரும் தங்கள் அறைக்கு செல்லுமாறு அறிவிக்கப்பட்ட நிலையில் குளிர்பானங்கள் முதலானவை வழங்குவது நிறுத்தப்பட்டு, அனைத்து ஊழியர்களும் அறையில் முடங்கினர். விமானத்திற்கு என்ன நடந்தது என்பது தெரியாமல் அனை…

    • 1 reply
    • 506 views
  15. இணையத்தில் வைரலாகும் மெலனியா ட்ரூடோ புகைப்படம் ஜி 7 உச்சிமாநாட்டில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை மெலனியா டிரம்ப் ஆசையோடு உற்றுநோக்கிய புகைப்படம் மிகவும் வைரலாகியுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான G7 உச்சிமாநாடு பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் சனிக்கிழமை (24.08.2019) குறித்த மாநாடு நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி, பிரிட்டன், கனடா, இத்தாலி ஆகிய நாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்ள கொண்டனர். கடந்த ஞாயிற்றுகிழமை மாலை உச்சிமாநாட்டில் ஐரோப்பிய பத்திரிகை ஏஜென்சி புகைப்படக் கலைஞரால் உலகத் தலைவர்களும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்களும் “குடும்ப புகைப்படம்” எடுக்க வந்தனர். அப்போது தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களில்…

  16. வாஷிங்டன்: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் தினேஷ் சாவ்லா. இவர் அமெரிக்காவின் கிளைவ்லேண்ட் பகுதியில் வசித்து வருகிறார். அதிபர் டிரம்ப் நடத்தி வரும் 4 ஓட்டல்களில் இவர் வர்த்தக கூட்டாளியாக இருந்தார். இந்த ஓட்டலின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் தினேஷ் சாவ்லா இருந்தார். கடந்த பிப்ரவரி மாதம் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கொடுத்த நெருக்கடியின் காரணமாக, இவருடன் இருந்த வர்த்தக உறவை டிரம்ப் முறித்து கொண்டார். கடந்த 18ம் தேதி அமெரிக்காவில் உள்ள மெம்பிஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு விமானத்தில் செல்வதற்காக தினேஷ் சாவ்லா சென்றார். அப்போது, அங்கு சோதனையிடப்பட்ட வேறு நபரின் சூட்கேசை எடுத்த அவர், அதை தான் வந்திருந்த காரில் வைத்துவிட்டு மீண்டும் வந்து விமானத்தில் பயணம் செய்தார். பயணத்தை …

    • 1 reply
    • 324 views
  17. என் புருஷன் ஓவர் செல்லம் கொஞ்சுகிறார்.. தாங்க முடியலை.. ரைவர்ஸ் கொடுங்க.. அதிர வைத்த மனைவி.! புஜைரா: புருஷன் சரியில்லை, டைவர்ஸ் குடுங்க என்று சொன்னால்கூட பரவாயில்லை.. ரொம்ப சரியாக இருக்கிறார், ஒரு சண்டையும் இல்லை.. சச்சரவும் இல்லை.. அதனால் டைவர்ஸ் குடுங்க என்று கேட்டு கோர்ட்டையே அதிர வைத்துள்ளார் பெண் ஒருவர். வரதட்சணை கொடுமை, கள்ளக்காதல் கொடூரங்கள் தாங்க முடியாமல் எத்தனையோ பெண்கள் விவகாரத்து கேட்டு கோர்ட் வாசலை மிதித்துள்ளனர். ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் ஒரு பெண் படு வித்தியாசமாக இருக்கிறார்.புஜைரா நகரைச் சேர்ந்த பெண் இவர்.. டைவர்ஸ் கேட்டு கோர்ட்டுக்கு போயுள்ளார். ஏன் விவகாரத்து செய்யறீங்க என்று கோர்ட்டில் வக்கீல் கேட்கவும், லிஸ்ட் போட்டு சொன்னார். …

  18. வாஷிங்டன்: தனது முன்னாள் வாழ்க்கை துணையின் வங்கிக்கணக்கை, சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து இயக்கியதாக விண்வெளி வீரர் மீது புகார் எழுந்துள்ளது. விண்ணில் நடந்ததாக கூறப்படும் இந்த முதல் குற்றச்சாட்டு குறித்து நாசா விசாரணை நடத்தி வருகிறது. ஒரு பாலின ஜோடியான மெக்லைன் மற்றும் அமெரிக்க விமானப்படையின் முன்னாள் அதிகாரி சம்மர் வொர்டன் இருவரும் கடந்த 2014 ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர், 2018 ல் விவாகரத்துக்கு விண்ணப்பம் செய்துள்ளனர். இந்நிலையில், சம்மர் வொர்டன், அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையத்திடம் அளித்த புகாரில், மெக்லைன், விண்வெளியில் இருந்து, வங்கி கணக்கை இயக்கியதாக புகார் அளித்துள்ளார். தற்போது பூமிக்கு திரும்பியுள்ள மெக்லைன், விண்ணில் இருந்து வங்கிக்கணக்கை…

    • 0 replies
    • 587 views
  19. இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்! இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர் என்று துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி பேசியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி தற்போது ஆர்பிஐ இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார். அரசியல் ஆலோசகராக இருக்கும் இவர் பாஜக கட்சித் தலைவர்களுடன் மிகவும் நெருக்கமானவர். தமிழகத்திலும் அதிமுக தலைவர்களுடன் நெருக்கமாக இருக்க கூடியவர். சமீபத்தில் துணை குடியரசுத் தலைவர் சென்னையில் வெளியிட்ட புத்தக விழாவிலும் நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்திருந்த அதே மேடையில் இவரும் காணப்பட்டார்.இந்த நிலையில் நேற்று சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றின் 10…

  20. ஜெர்மனியில் பெற்றோருக்குத் தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு ஓர் எட்டு வயது சிறுவன் மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது என்று அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டோர்முன்ட் எனும் நகரை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் அந்தச் சிறுவன் காரை நிறுத்தி வைத்திருந்தபோது உள்ளூர் நேரப்படி, இன்று, புதன்கிழமை, அதிகாலை மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல் அதிகாரிகளைப் பார்த்ததும் அந்தச் சிறுவன் கண்ணீர் விட்டு அழுதுள்ளான். காரை ஓட்டும்போது காரின் அபாய எச்சரிக்கை விளக்குகளை எரியவிட்டதுடன், காரின் பின்புறம் ஒரு சிறிய எச்சரிக்கை முக்கோணம் ஒன்றையும் அச்சிறுவன் மாட்டியுள்ளான். காவல் துறையினரிடம் தா…

  21. அவுஸ்திரேலியாவின் பிறிஸ்பேன் நகரில் அமைந்துள்ள வீடொன்றின் கூரையில் இருந்து மிகப்பெரும் தேன் கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து 50 கிலோகிராம் தேன் பெறப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் தேனீ வளர்பாளரான போல் வூட் என்பவர் பிறிஸ்பேன் நகரின் சுபுர்பன் எனும் இடத்தில் அமைந்துள்ள பெண்ணொருவரின் வீட்டுக் கூரையில் இருந்து குறித்த மிகப்பெரும் தேன் கூட்டைக் கண்டு பிடித்துள்ளார். ஏறக்குறைய 10 மாதங்கள் அக்கூடு அங்கு இருந்ததாகவும், அதில் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேனீக்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. குறித்த தேன் கூட்டில் இருந்து 50 கிலோ கிராம் தேன் பெறப்பட்டுள்ளது. குறித்த வீட்டுக் கூரையில் இருந்து கூட்ட…

  22. சுற்றுலா நினைவுப் பொருளாக கடற்கரை மணலை சேகரித்த இருவருக்கு 6 வருட சிறை! இத்தாலிக்கு சுற்றுலா சென்றதற்கான நினைவுப் பொருளாக கடற்கரை மணலை எடுத்துச் சென்றதாக குற்றம்சுமத்தப்பட்ட பிரான்ஸை சேர்ந்த இருவருக்கு நேற்று (செவ்வாய்க்கிழமை) 6 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தெற்கு ஐரோப்பாவின் இத்தாலி, மத்திய தரைக் கடல் பகுதிகளான சிசிலி மற்றும் சார்தீனியா தீவுப்பகுதிகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இத்தாலியின் வடக்கே ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ், சுவிஸ்லாந்து, ஒஸ்ட்ரியா, சிலோவேனியா ஆகிய நாடுகள் எல்லைகளாகவும் அமைந்துள்ளன. எனவே, அங்கு உல்லாசச் சுற்றுலாவுக்கு செல்லும் பயணிகளுக்கு பஞ்சமில்லை. ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான பொது மக்கள் பல்வேறு நாடுகளில் இருந்தும் அந்…

  23. ஐஸ்கிறீம் கேட்டு வாங்கித் தர மறுத்த காதலரை குத்திக்கொலை செய்த இளம்பெண்! சீனாவில் ஐஸ்கிறீமிற்காக இளம்பெண்ணொருவர் காதலரை கத்தரிகோலால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெனான் மாகாணத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடியொன்று, ஜூமாடியன் நகரில் உள்ள சந்தைத் தொகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, ஐஸ்கிறீம் வாங்கித் தருமாறு குறித்த இளம் பெண் கோரியுள்ளார். ஆனால் பெண்ணின் காதலரோ “நீ ஏற்கனவே உடல் பருமனாக இருக்கிறாய். இன்னும் ஐஸ்கிறீம் வாங்கி உண்ண விரும்புகிறாயா?” என கூறி மறுப்பு தெரிவித்தார். ஐஸ்கிறீம் வாங்கி தர மறுத்ததோடு தனது உடல் பருமன் குறித்து கேலி செய்ததால் அந்த பெண் ஆத்திரம் அடைந்தார். எனினும் அவர் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் முன்னோக்…

  24. ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்த 9 தாதிகளுக்கு குழந்தைகள் பிறந்தன – அமெரிக்காவில் அபூர்வ நிகழ்வு! அமெரிக்காவில் தனியார் மருத்துவமனையொன்றில் பணிபுரிந்து வந்த 9 தாதியர்கள் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்து ஒரே காலகட்டத்தில் குழந்தைகளை பிரசவித்துள்ள அபூர்வ நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஓரிகன் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்ட் நகரில் ‘மைன் மெடிக்கல் சென்டர்’ என்ற தனியார் மருத்துவமனையில் இந்த அபூர்வ நிகழ்வு இடம்பெற்றுள்ளது. அங்கு பணியாற்றும் தாதியர்கள் 9 பேர் ஒரே நேரத்தில் கர்ப்பம் தரித்து மகப்பேற்றுக்காக எதிர்பார்த்திருந்தனர். இதையடுத்து கர்ப்பிணி தாதியர்கள் 9 பேரும் ஒன்றாக இருக்கும் ஔிப்படத்தை மருத்துவமனை நிர்வாகம் சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு “எங்கள்…

  25. மிக அரிதான நாசி ஜெர்மனி காலத்தில் வடிவமைக்கப்பட்ட 'போர்ஸ்சா' மோட்டார் வாகன ஏல விற்பனையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அதனது ஏலம் தடைப்பட்டது கோரப்பட்ட தொகை 17 மில்லியன்கள் திரையில் 70 மில்லியன்கள் என காட்டப்பட்ட பொழுது அந்த தவறு உணரப்பட்டு ஏலம் நிறுத்தப்பட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.