துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
Reecha - வியக்க வைக்கும் தமிழனின் முயற்சி..! Baskaran Kandiah இலங்கையின் வடக்கில், இயக்கச்சி எனும் கிராமத்தில் 250 ஏக்கர் பரப்பளவிலான ஒரு காணியை புலம்பெயர் தமிழ்ச் செல்வந்தர் ஒருவர் வாங்குகிறார். அதில் பெரும்பண்ணை ஒன்றை உருவாக்குகிறார். பண்ணையில் ஆடு, மாடு, கோழி, பன்றி என ஆயிரக்கணக்கான விலங்குகள் வளர்க்கப்படுகின்றன. பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் மற்றும் பல்வேறு பயன்தரு மரங்கள், தாவரங்கள் வளர்க்கப்படுகின்றன. மேலும் உள்ளே ஹொட்டேல்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தரத்திலான உணவங்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், சிறுவர் விளையாட்டுத்திடல்கள், நீச்சல் தடாகங்கள் என அத்தனை வசதிகளும் கொண்டுவரப்படுகின்றன. குறுகிய காலத்தில் இந்த நிறுவனம் பெரும்வளர்ச்சி காண்கிறத…
-
-
- 10 replies
- 1.7k views
-
-
அன்பார்ந்த தமிழீழ பிரஜைகளுக்கும், யாழ்க்கள உறவுகளுக்கும், சர்வதேசநாடுகளிலிருந்து அகதிகளுக்காக இலங்கை அரசிடம் அனுப்பிவைக்கப்படும் உதவிகள், தேவையானோர் பலருக்கு சில தடவைகள் செல்லத்தவறுவதைக் கண்டு நாம் மிகவும் வருத்தப்பட்டிருக்கிறோம். இதில் எதையாவாது நாம் நிவிர்த்தி செய்ய முடியாதா என நம்மில் பலரும் ஆதங்கப்பட்டதுண்டு. இந்த ஏக்கங்களின் பலனாக, நாம், நலிந்த அகதிகளுக்குள் நலிந்த சமூகமான, விதவைகளுக்கும், அனாதைச் சிறார்களுக்கும் உதவுமுகமாக, “காயப்பட்ட விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் புது சந்தர்ப்பம்” (NOWWOW -New opportunities for Widowed, Wounded, and Orphans of War - http://nowwow-us.org/) என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கியுள்ளோம். இதை ஒரு அங்கீகரிக்கப்பட்ட அறநிலையமாக ப…
-
- 15 replies
- 1.9k views
-
-
கொடிது கொடிது வறுமை கொடிது அதனிலும் கொடிது இளமையில் வறுமை. - ஔவையார் https://www.facebook.com/vara.mahadevan.1/videos/10164968333845724 அருந்ததி- 0772151592 மலையாளபுரம் கிளிநொச்சி. நன்றி. முடிந்தளவு share செய்து உதவுங்கள்
-
- 11 replies
- 2.6k views
-
-
கனடா வாழ வைப்போம் அமைப்பூடாக பா.உறுப்பினர் சி.சிறீதரனின்வேண்டுகோளுக்கிணங்க “வைத்திலிங்கம் அறக்கட்டளை” அமரர் வைத்திலிங்கம் அவர்களின் ஓராண்டு நினைவாக, அவரது குடும்பத்தாரால் இன்று கிளிநொச்சியில் வைத்து போரால் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு அர்ப்பணிப்புக்களின் அடையாளமாக இருப்பவர்களில் 20 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன இந்த நிகழ்வு கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயலகமான அறிவகத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் மாவட்டக்கிளையின் உபதலைவருமான பொன்.காந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ப.குமாரசிங்கம், முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்…
-
- 1 reply
- 602 views
-
-
இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600
-
- 0 replies
- 937 views
-
-
35குடும்பங்களுக்கான குடிநீர் வசதி அவசரம் தேவை. செங்கலடி பிரதேச செயலர் பிரிவு வந்தாறு மூலை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் வாழும் 35குடும்பங்களுக்கான குடிநீர் வசதி மற்றும் வாழ்வாதார உதவிகள் தேவைப்படுகிறது. கட்டாய நிலப்பறிப்பை தடுக்கும் நோக்கில் இந்தப் பகுதியில் உள்ள தமிழ்ப்பற்றாளர்களினால் உருவாக்கப்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் தற்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட காணிகள் அற்ற 35 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். மேற்படி கிராமத்தில் குடியேறியுள்ள குடும்பங்களுக்கான அடிப்படைத் தேவைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. குடிநீர் வசதிகள் கூட இல்லாத நிலமையில் வாழும் இக்குடும்பங்களுக்கு குளாய்கிணறுகளை அமைத்துக் கொடுப்பதன் மூலம் குடிதண்ணீரை அவர்கள் …
-
- 19 replies
- 1.5k views
-
-
பளை வீமன்காமம் பகுதியைச் சேர்ந்த நூற்றி இருபத்துநான்கு முன்பள்ளி மற்றும் தரம் ஒன்று முதல் ஐந்து வரையான வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் 13.30 மணியளவில் பளை வீமன் காமமம் கிராம அலுவலர் பிரிவு கிராம அபிவிருத்தி சங்கத்தலைவர் லயன்ஸ் எஸ் . சுந்தரேஸ்வரன் தலைமையில் நடை பெற்றது . மானிப்பாய் நகர லயன்ஸ் கழகம் கிராம அபிவிருத்தி சங்கத்துடன் இனைந்து மேற்க்கொண்ட இந்நடவடிக்கைக்கான நிதியை சுவிஸ் நாட்டில் இருந்து வந்த லயன்ஸ் எஸ் . மகேந்திரன் மற்றும் அவருடைய பாரியார் திருமதி ம . விஜயகுமாரி வழங்கி இருந்தார்கள் . மங்கள விளக்கினை லயன்ஸ் பிராந்திய ஆலோசகர் லயன்ஸ் வைத்தியகலாநிதி வி . தியாகராசா மாகாண பிரதி செயலாளர் லயன்ஸ் …
-
- 0 replies
- 548 views
-
-
யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு மிகவும் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை மன்னார் மாவட்டத்தின் பிரபல வர்த்தகர் இருதயநாதன் சாள்ஸ் தொடர்ந்தும் வழங்கி வருகின்றார் . - மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மீள் குடியேற்றக் கிராமங்களான சன்னார் , ஈச்சளவக்கை , பெரிய மடு ஆகிய மூன்று கிராமங்களுக்கும் கடந்த 30 ஆம் திகதி விஜயம் செய்த பிரபல வர்த்தகர் இருதயநாதன் சாள்ஸ் சுமார் 500 மாணவர்களுக்கு 2 இலட்சம் ரூபாய் பெறுமதி வய்ந்த பாடசாலை உபகரணங்களை பங்கீடு செய்து வழங்கி வைத்தார் . இந்த நிலையில் நேற்று முந்தினம் மன்னார் நூறு வீட்டுத்திட்டம் மற்றும் மன்னார் முப்பது வீட்டுத்திட்டம் ஆகிய கிராமங்களுக்குச் சென்ற வர்த்தகர் இருதயநாதன் சாள்ஸ் சுமார் 50…
-
- 2 replies
- 626 views
-
-
பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு இணங்க கனடா வாழவைப்போம் அமைப்பு கனடாவில் வாழும் புலம் பெயர் தமிழ் உறவுகளின் கருணை உள்ளங்களுடன் இணைத்து மாற்றுவலுவுள்ள போரினால் பாதிக்கப்பட்ட பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு உதவி வருகின்றது. கனடாவாழவைப்போம் அமைப்பின் உதவியின் மூலம் ஏராளமான உறவுகள் வாழ்வின் ஆதாரத்தை பெற்றுக் கொண்டுள்ளன. இந்த உதவிகளின் தொடர்ச்சியாக 2015ம் ஆண்டின் கிளிநொச்சியில் முதல் உதவி வழங்கலாக கனடாவாழ் புலம் பெயர் உறவுகளான பாகிதா சங்கரலிங்கம் பொ.குணதாசன் பயஸ் மரியதாஸன்(ம.ஜெபக்சன் ம.றொசான்) ஆகிய கருணையுள்ளங்களின் மூலம் முள்ளந்தண்டு வடம் பாதிப்புற்று குடும்பமாக இருப்பவர்களின் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சி கருதி கற்றல் உபகரணங்…
-
- 0 replies
- 440 views
-
-
நேசக்கரம் எழுவான் அமைப்பு வாழ்வாதார கடனுதவி வழங்கல். மன்னார் மாவட்டத்தில் எம்மால் உருவாக்கப்பட்ட நேசக்கரத்தின் உப அமைப்பான எழுவான் அமைப்பின் ஆய்வறிக்கைக்குழுவினால் தெரிவு செய்யப்பட்ட 11குடும்பங்களுக்கான விவசாயக்கடனுதவியானது இம்மாதம் வழங்கப்பட்டுள்ளது. 1) ஜெயராசன் மாலினி 2) சிவானந்தராசா கென்சிகா 3) வடிவேல் அருள்வாசகம் 4) சூசைப்பிள்ளை எட்மன் 5) பிரான்சிஸ் 6) செபஸ்ரியன் 7) அந்தோனிப்பிள்ளை 8) சந்திரகுமார் 9)வீரசிங்கம் …
-
- 2 replies
- 640 views
-
-
IBC தமிழ் தொலைக்காட்சியில் பிரதி ஞாயிற்று கிழமைகளில் மத்திய ஐரோப்பிய நேரம் மாலை 7:30 மணிக்கு ( 19h 30 ) ஒளிபரப்பாகும் "லகர தொடு கரம் கொடு " நிகழ்ச்சியில் பங்குபற்ற இன்றே தொடர்பு கொள்ளுங்கள்..... இது கடந்த வரம் ஒளிபரப்பானது...
-
- 0 replies
- 724 views
-
-
தை,மாசி,பங்குனி 2015 கணக்கறிக்கைகள் தை,மாசி,பங்குனி 2015 கணக்கறிக்கைகள். 1) januar2015 2)februar2015 3) march2015 http://nesakkaram.org/ta/nesakkaram.3915.html
-
- 2 replies
- 1.2k views
-
-
மத்திய - மாகாண கல்வி அமைச்சர்கள் - அதிகாரிகள் நித்திரையா? நெடுந்தீவு பாடசாலைகளுக்கு ஆங்கில ஆசிரியர் இல்லாத குறையை நெடுந்தீவு ஒன்றியம் (ஐக்கிய இராச்சியம்) நிபர்த்தி செய்துள்ளது. நெடுந்தீவுக் கோட்டக்கல்வி அதிகாரி திருமதி சாரதாதேவி கிருஷ்ணதாஸ் அவர்கள் நெடுந்தீவு ஒன்றிய பொருளாளர் மாலினி தர்மலிங்கம் அவர்களை தொடர்வு கொண்டு ஆங்கில ஆசிரியர் அவசியம் பற்றி எடுத்து கூறியதன் எடுத்துக் கூறியனை அடுத்து அல்பிறட் டேனிகிளாஸ் M,A(ind English) அவர்களை ஒன்றிய நிர்வாகசபையின் ஒப்புதலுடன் ஒன்றியத் தலைவர் கந்தையா புண்ணியமூர்த்தி நியமித்துள்ளார். இவ் ஆங்கில ஆசிரியர் வாரத்தின் மூன்று நாட்கள் நெடுந்தீவு மகா வித்தியாலயத்திலும் வாரம் இரு தினங்கள் நெடுந்தீவு சைவப்பிரகாசா வி…
-
- 5 replies
- 716 views
-
-
100பாலர் பாடசாலை மழலைகளுக்கான கற்றல் உபகரணம் வழங்கல். மட்டக்களப்பு சவுக்கடி,ரமேஸ்புரம்,ஐயங்கேணி ஆகிய கிராமங்களின் முன்பள்ளி மழலைகள் 100பேருக்கான உளவள பயிற்சிக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. தேன்சிட்டு நேசக்கரம் உளவள அமைப்பின் களச்செயற்பாட்டாளர்களால் தெரிவு செய்யப்பட்ட 100 குழந்தைகளுக்குமான உதவியை 30.03.2015அன்று பிறந்தநாளைக் கொண்டாடிய பெயர் குறிப்பிட விரும்பாத உறவு ஒருவர் வழங்கியிருந்தார். தலா குழந்தையொன்றுக்கு 200ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டது. இவ்வுதவியை முன்வந்து உவந்தளித்த பெயர் குறிப்பிட விரும்பாத உறவுக்கு நேசக்கரம் தேன்சிட்டு உளவள அமைப்பானது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. http://nesakkaram.org/ta/nesakkaram.3920.html
-
- 4 replies
- 1.2k views
-
-
10/10/2024 புலர் அறக்கட்டளையின் மூன்றாவது ஆண்டு நிறைவும் நன்கொடையாளர் கௌரவிப்பும்.
-
-
- 36 replies
- 2.5k views
- 2 followers
-
-
வறிய மாணவர்களுக்கு பேருதவி! - ரொரன்ரோ மனித நேயக் குரலுக்கு நன்றி தெரிவித்த பள்ளி அதிபர் மிகவும் பின் தங்கிய பிரதேசத்தை சேர்ந்த தமது பாடசாலைக்கு கனடா நாட்டின் ரொரன்ரோ மனித நேயக் குரல் அமைப்பு வழங்கிய உதவி பேருதவியாக அமைந்துள்ளதாக கிளிநொச்சி மாயவனூர் அதிபர் திருமதி ல. கோபாலராசா தெரிவித்தார். கிளிநொச்சி மாயவனூர் வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பேசிய பாடசாலை அதிபர் திருமதி ல. கோபாலராசா தமது பாடசாலை மிகவும் பின்தங்கிய பாடசாலை என்றும் அங்கு கல்வி பயிலும் மாணவர்கள் பல்வேறு நிலையிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்…
-
- 1 reply
- 703 views
-
-
2 குழாய்கிணறுகளின் வேலைகளும் பூர்த்தி செய்யப்பட்டன. அம்மாவின் திவசம் மற்றும் பெரியக்காவின் 75வது பிறந்தநாள் சார்ந்த உதவிகளின் படி 2 குழாய்க்கிணறுகளை செய்வதற்கான காலம் ஆனி என கணிக்கப்பட்டது. அதாவது இதற்கு முன்னர் தண்ணீருக்கான துவாரம் போடும் போது மழைத்தண்ணீர் மேலே நிற்பதால் தண்ணீரை தொடர்ந்து பெற முடியாது போய் விடும் என்பதால் தண்ணீர் கீழிறங்கும்வரை பொறுக்கவேண்டியதாயிற்று. ஆனால் அதற்கிடையில் கொரோனா காரணமாக உள்ளிருப்பு அறிவிக்கப்பட்டதால் மேலும் தள்ளிப்போடவேண்டி வந்து விட்டது. ஆனாலும் இனியும் தாமதித்தால் மீண்டும் மழை வந்தால் மீண்டும் ஒரு வருடம் தோண்டமுடியாது போய் விடும் என்பதால் கொரோனா உள்ளிருப்பு காலத்தில…
-
- 11 replies
- 1.7k views
- 1 follower
-
-
கணக்கறிக்கையினை PDF Fileவடிவில் இணைத்துள்ளோம். கீழ் வரும் இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கையினைப் பாருங்கள். செப்ரெம்பர் 2011 கணக்கறிக்கை இம்மாதம் பயன்பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை – 10 இம்மாதம் பயன்பெற்ற குடும்பங்கள் எண்ணிக்கை – 07. நேரடியாக பயன்பெறும் குடும்பங்கள் மாணவர்கள் எண்ணிக்கை இங்கு சேர்க்கப்படவில்லை. *உதவிய அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்*
-
- 2 replies
- 1.1k views
-
-
08.07.2011 அன்று நேசக்கரம் தொடர்பாளர்கள் ஊடாக செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி தற்காலி முகாமிற்குள் வதியும் மாணவர்களில் ஒருபகுதியினருக்கான கற்கை உபகரணங்களை வழங்கியிருந்தோம். தொடர்புபட்ட செய்தியைப்பார்க்க இந்த இணைப்பில் அழுத்துங்கள். தரம் 5 , தரம் 11, தரம் 12,13ஆகிய வகுப்புகளில் கற்கும் 244மாணவர்களுக்கான உதவிகள் மட்டுமே வழங்கியிருந்தோம். ஆனால் இம்முகாமில் 2031 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 55ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். உயர்தர மாணவர்களுக்கான ஆசியர்கள் பற்றாக்குறை போன்ற பல அவசியத்தேவைகளை இவர்கள் இழந்து நிற்கிறார்கள். முகாமில் வதியும் குடும்ப மற்றும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை:- மொத்த குடும்ப எண்ணிக்கை – 1827 (ஆண்கள் =2268, பெண்கள் =3153) மாணவர்கள்: 5வயதிலிருந்து 10…
-
- 4 replies
- 1.2k views
-
-
சம்பூர் மீள்குடியேற்ற மக்களுக்கு வீடுகள் கையளிப்பு திருகோணமலை சம்பூரில் மீள்குடியேற்றப்பட்ட பொதுமக்களுக்கு சொந்த வீடுகள் வழங்கும் நிகழ்வு இன்று (25) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன், மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு இந்து கலாசார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னான்டோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதன்போது 18 பயனாளிகளுக்கு கனடா தமிழ்ப் பேரவையினால் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் பொது மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. 2006ம் ஆண்டு இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்து தற்போது சொந்த வீடுகளில் வாழ்வதற்கு உதவி வழங்கிய இ…
-
- 5 replies
- 660 views
- 1 follower
-
-
இரண்டாம் இணைப்பு.தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறிதரனின் அலுவலகத்தில் பதிவுசெய்தால் புலம்பெயர்ந்து வாழுகின்ற உறவிகளிடமிருந்து வாழ்வாதார உதவிகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற பரபரப்புத் தகவலொன்று சமூகவலைத் தளமான ' பேஸ்புக் ' வாயிலாக பரப்பப்பட்டுவருவதால் போராளிகளும் பாதிக்கப்பட்ட பொதுமக்களும் குழப்பமடைந்துள்ளனர் . புலம்பெயர்ந்து வாழுகின்றவர்களின் உதவிகளை குறித்த பாராளுமன்ற உறுப்பினரின் அலுவகத்தின் ஊடாக மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அதற்கான பதிவுகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் இந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது . அத்துடன் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகளுக்கும் ம…
-
- 2 replies
- 760 views
-
-
சாம்பிராணி உற்பத்திகள் வெற்றியா தோல்வியா ? 2012 நேசம் உற்பத்திகள் தொழில் முயற்சியினை பரீட்சார்த்தமாக ஆரம்பித்திருந்தோம். இதில் உணவு உற்பத்தியாக மிக்சர் மட்டக்களப்பினை தளமாகக் கொண்டும் மற்றும் சாம்பிராணி உற்பத்தியினை அம்பாறையிலும் ஆரம்பித்திருந்தோம். 25.05.2012அன்று அம்பாறையில் சாம்பிராணி உற்பத்திக்கான ஒருநாள் பயிற்சி வகுப்பினை நடாத்தி அதில் பயிற்சி பெற்றவர்களை வைத்து செயற்படத் தொடங்கியது நேசம் சாம்பிராணி உற்பத்தி. இதுவொரு சிறு கைத்தொழில் முயற்சியாகையால் ஆரம்ப வருமானமும் உற்பத்திக்கு ஏற்பவே எனும் அடிப்படையில் தொடங்கப்பட்டது. தொழிலில் ஈடுபட்ட 11 பெண்களுக்கும் மாதம் 4ஆயிரம் ரூபாய் வருவாயை தரக்கூடியதாக முதலில் நடைபெறத் தொடங்கியது. இத்தோடு உணவு உற்பத்திகளிலும் 11பேரை…
-
- 0 replies
- 1k views
-
-
நேசம் உணவு உற்பத்தி கணக்கறிக்கையும் பெற்ற வெற்றியும். 2012 நேசம் உற்பத்திகள் தொழில் முயற்சியின் பரீட்சார்த்தமாக சாம்பிராணி உற்பத்தியினையடுத்து மிக்சர் உணவு உற்பத்தியினை 09.06.2012 அன்று ஆரம்பித்திருந்தோம். மிக்சர் உற்பத்தியினை மட்டக்களப்பினைத் தளமாகக் கொண்டு ஆரம்பித்திருந்தோம். முதல் கட்டம் 4பிரதான தொழிலாளர்களைக் கொண்டு ஆரம்பித்திருந்த இம்முயற்சிக்கு மொத்தம் 336500.00ரூபாவினை முதலிட்டிருந்தோம். அத்தோடு உதவியாளர்கள் நிர்வாக ஒருங்கிணைப்பாளர் உட்பட 7பேர் பணியில் இணைந்தார்கள். வேலைசெய்வோருக்கான மதிய உணவும் வழங்கியிருந்தோம். தேவைக்கு ஏற்ப தொழிலாளர்களுக்கான உணவுகளும் வழங்கப்பட்டது. வேலைக்கு ஏற்ப முதல் ஆறுமாதங்களும் சம்பளங்களும் வழங்கப்பட்டு தொழிலில் தொடர்ந்த வெற்றி…
-
- 4 replies
- 973 views
-
-
மன்னார் மாவட்டம் நேசம் இலவச கல்வித்திட்டம் 171 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். நேசம் இலவச கல்வித்திட்டத்தினை இவ்வாண்டு மன்னார் மாவட்டத்திற்கும் விரிவுபடுத்தியிருந்தோம். மன்னார் மாவட்டத்திற்கு 3ஆயிரம் வழிகாட்டி வினாத்தாழ்கள் 3 வகையில் தயாரிக்கப்பட்டு பெப்ரவரி, ஏப்றல்,யூன் ஆகிய மாதங்கள் வழங்கியிருந்தோம். இவ்வழிகாட்டி வினாத்தாழ்கள் மன்னார் மாவட்டத்தில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலையில் கல்வி கற்கும் 5ம் வகுப்பு புலமைப்பரிசில் தோற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டிகள் வழங்கப்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களால் சிறந்த முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. தங்கள் கவனிப்பு கற்பித்தல் மூலம் மாணவர்களின் முன்னேற்றத்தில் ஆதரவு தந்த அனைத்து ஆசிரியர்கள் வலயக்கல்விப்பணிப்பாளர் அ…
-
- 0 replies
- 566 views
-
-
சாவின் வாசலில் துடிக்கும் உயிர் காக்க நேசக்கரம் தருவீர். சாவின் நாளை எப்போதும் சந்திக்கத் தயாராகினாள் அக்கா. தன்னை மட்டுமே நம்பிய தன்னைத் தவிர யாருமேயில்லாத கணவனைத் தவிக்க விட்டுவிட்டுப் போகவும் மனமில்லை. ஆனால் இனி உயிர்வாழும் விதியை பணமே தீர்மானிக்கும் நிலமையில் வேறு வழிகள் ஏதுமற்றுப் போனது. ஏழரைலட்ச ரூபாய் கட்டினால் அக்காவின் உயிரை மீளத் தரமுடியுமென்றார்கள் பணத்தை மட்டுமே நேசிக்கும் மனிதத்தை மறந்தவர்கள். அடுத்தவேளை உணவிற்கே யாராவது ஏதாவது கொடுத்தால் மட்டுமே உணவென்று வாழும் அக்காவிடமும் அக்காவின் கணவரிடமும் லட்சங்களைச் சேர்க்கும் வலுவேதுமில்லை. இனி விதியே எல்லாம் அப்படித்தான் அக்கா போனமாதம் யாழ்ப்பாணத்திலிருந்து ஊர்; திரும்பினாள். தனது வலிகளை அவளையே உலகாய் ந…
-
- 9 replies
- 1.6k views
-