துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
France - புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிதி உதவியுடன் இயங்கும் முன்பள்ளிகளின் விபரங்களும் கோரிக்கைகளும் - 2014/2015
-
- 1 reply
- 528 views
-
-
ஈச்சலவக்கை மாணவர்களுக்கு யேர்மனி வூப்பெற்றால் நவதுர்க்கா ஆலயத்தின் உதவி யேர்மனி வூப்பெற்றால் நவதுர்க்கா ஆலயத்தினர் தந்துதவிய 163000.00ரூபா (ஒரு லட்சத்து ஆறுபத்து மூவாயிரம் ரூபா) நிதியுதவியில் மன்னார் மாவட்டம் மடுவலயம் ஈச்சலவக்கை அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 118மாணவ மாணவியருக்கான அடிப்படைத் தேவைக்கான பொருட்கள் 10.05.2013 அன்று வழங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் ஈச்சலவக்கை அ.த.க.பாடசாலை அதிபர் திரு.பயஸ் , ஆசிரியர்கள் , எழுவான் அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் , நேசக்கரம் பிறைட் பியூச்சர் விளையாட்டுப்பிரிவுப் பொறுப்பாளர் ஜோன்சன் , மற்றும் துணைத்தலைவர் சுதேஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். போரால் பாதிக்கப்பட்டு மிகவும் பின் தங்கிய நிலமையில் கல்விக்கா…
-
- 1 reply
- 1.1k views
-
-
இன்றைய குரலுக்குரியவள் ஒரு மாவீரனின் மனைவி. ஒரு தளபதியாய் எத்தனையோ வெற்றிகளுக்கெல்லாம் வேராக இருந்த ஒரு மாவீரனினுடன் வாழ்ந்த வாழ்வின் இனிமைகளையும் அவனை இழந்த துயரின் வலிகளையும் பகிர்கிறாள். இந்தப் பெண்ணின் துயரங்கள் ஆயிரமாயிரம் தமிழ்ப்பெண்களின் கண்ணீரின் கதைகளாக வருகிறது. வெற்றிகளை மட்டுமே கேட்ட காதுகளிற்கு இத்தகைய கண்ணீரின் கனம் புரியாமலேயே இருந்திருப்பதை உணர்கின்ற தருணங்களில் இந்த இழப்புகள் பிரிவுகளுக்காக நாமென்ன செய்தோமென்ற கேள்வியே மிஞ்சிக்கிடக்கிறது. வாழ்வும் மரணமும் இயற்கையின் தீர்வாகிற போதே மனிதம் எத்தனை தவித்துப்போகிறது. ஆனால் எங்கள் மண்ணிலும் எங்கள் மனிதர்களிலும் வாழ்வு துயராலேயே தின்னப்பட்டிருக்கிறது. இதோ ஒரு மாவீரனின் மனைவி பேசுகிறாள். இவளது கண்ணீரின் ஊடா…
-
- 1 reply
- 988 views
-
-
https://chng.it/ZZCGSdj7Bn Justice for the Forcibly Disappeared: Ensure Truth, Justice, and Accountability for Chemmani and Beyond We, the undersigned, call upon the Government of Sri Lanka to take immediate, transparent, and meaningful action to address the long-standing issue of enforced disappearances and mass graves, including the recent discovery at Chemmani, Jaffna. The excavation at the Ariyalai Siththupaaththi Hindu Crematorium has already uncovered 19 bodies, including three infants. This painful discovery has reopened the wounds of thousands of families whose loved ones were forcibly disappeared during Sri Lanka’s brutal civil war. Chemmani is not just a site of…
-
-
- 1 reply
- 150 views
- 1 follower
-
-
பெண்கள் தலைமை தாங்கும் 53 குடும்பங்களுக்கான வலுவூட்டல் மேம்பாடு. மட்டக்களப்பு முறுத்தானை கிராமத்தில் 241 குடும்பங்களைக் கொண்ட 855பேர் வாழ்கின்றனர். போர் நடைபெற்ற காலங்களில் இக்கிராமமும் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகிய கிராமம். மெல்ல மெல்லத் தனது இயல்பை மீளப்பெற விரும்பும் இக்கிராமமானது அனைத்து வசதிகளாலும் மிகவும் பின் தங்கிய கிராமமாகும். கல்வி , சுகாதாரம் , உட்பட சமூகப்பிறள்வுகளும் நிறைந்த இடமாகக் காணப்படுகிறது. வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களையே கொண்ட இக்கிராமத்தின் கல்வி , பொருளாதாரம் ஆகியவற்றை உயர்த்த வேண்டிய தேவையை உணர்கிறோம். ஊருக்குள் கிடைக்கும் வளங்களை சரியான முறையில் பயன்படுத்தி முன்னேற்றமடையக் கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனினும் வழிநடத்தல…
-
- 1 reply
- 549 views
-
-
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து கல்வி கற்கும் 15மாணவர்களுக்கான கல்வியுதவிகள் எதிர்பார்க்கப்படுகிறது. மீள்குடியேறியுள்ள கிராமங்களில் வாழும் இம்மாணவர்கள் தமது கல்விச் செயற்பாட்டைத் தொடர்வதற்கான பொருளாதார உதவிகளை இழந்து நிற்கின்றனர். ஒரு மாணவருக்கு 10€ (அண்ணளவாக இலங்கை ரூபா 1500ரூபா) தேவைப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் முன்னாள் போராளிகளிலிருந்து 5மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்கான உதவிகளை எம்மிடம் வேண்டியுள்ளனர். 2மாணவிகளும் 3மாணவர்களும் உறவுகளிடமிருந்து உதவிகளை எதிர்பார்த்து விண்ணப்பித்துள்ளனர். ஒரு மாணவருக்கு தலா 4ஆயிரம் ரூபா தேவைப்படுகிறது. உதவ விரும்பும் உறவுகள் கீழ் வரும் விபரங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். உதவிகளை…
-
- 1 reply
- 1.1k views
-
-
200ஏக்கர் நிலத்தில் உருவாகும் மாதிரிக்கிராமம். மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலக பிரிவக்கு உட்பட்ட காரமுனை பகுதியில் நேசக்கரம் கைவினைப் படைப்பாளிகள் அமைப்பினால் 99வருட குத்தகைக்கு 200ஏக்கர் காணி பெறப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு சுயதொழில் ஊக்குவிப்புகளை உயர்த்தும் வகையில் மேற்படி காணி பெறப்பட்டுள்ளது. இந் நிலத்தினை மாதிரிக் கிராமமாக உருவாக்கும் எமது முயற்சிக்கு ஆதரவுகளை வேண்டி நிற்கிறோம். பாற்பண்ணை, மீன் வளர்ப்பு, சேனைப்பயிர்ச்செய்கை ,கால்நடை வளர்ப்பு போன்றவைகள் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் பெற்றுக் கொள்வோர் கீழ்வரும் விபரங்களில் பெற்றுக் கொள்ளலாம். Shanthy +49 (0)678…
-
- 1 reply
- 1.4k views
-
-
நிவாரண உதவிப் பொருட்களை பொதுமக்கள் வழங்குவதற்காக யாழ். மருத்துவ பீடத்தில் பொருட்கள் சேகரிப்பு மையம் ஒன்றை ஆரம்பித்து உள்ளோம். இன்றைய தினம் காலை 7.00மணியிலிருந்து பிரதான வாயில் அமைந்துள்ள பகுதியில் (ஆடியபாதம் வீதி) அமைக்கப்பட்ட இடத்தில் சேகரிப்பு மையம் உள்ளது. உதவி செய்ய விரும்பும் மக்கள் உடனடித் தேவையான பொருட்களான - குழந்தையுணவுகள் (பிஸ்கட், பால்மா, ரஸ்க்) - அணையாடைகள் ( Sanitary pads & Diaper) (பெண்களுக்கு & குழந்தைகளுக்கு) - குழந்தைகளுக்கான சோப் - தொற்றுநீக்கிகள் - நுளம்புவலை - பிளாஸ்டிக் பாய் - படுக்கை விரிப்புகள் - தேயிலை - பால்மா - சீனி - நுளம்புத் திரி - பிஸ்கெட் வகைகள் - பொதி செய்யப்பட்ட உணவுகள் - தண்ணீர் போத்தல்கள் - தறப்பாள் - Towels போன்றவற்றை…
-
-
- 1 reply
- 124 views
- 1 follower
-
-
ஆனந்தபுரம் நிலத்திற்கு மரங்கள் தேவை. மட்டக்களப்பு ஆனந்தபுரம் கிராமத்தின் குடியேறியுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் மீள வாழ்வுக்கான பணிகளை நேசக்கரம் அமைப்பின் உப அமைப்பான தேன்சிட்டு அமைப்பானது முன்னெடுத்து வருகிறது. இக்கிராமத்திற்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் குளாய்கிணறுகள் அமைக்கப்பட்டு மக்களின் தண்ணீர் தேவையானது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் தேவையை நிறைவு செய்ய புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பின் நிதியுதவியில்12 குளாய்கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தின் புவியில் அமைவுக்கேற்ற வகையிலான பயன்தரு மரங்கள் நாட்டுவதற்கான உதவிகளை வேண்டுகிறோம். முதலில் குடும்பமொன்றுக்கு 10 தென்னைமரங்களை வழங்க விரும்புகிறோம். ஒரு தென்னங்கன்ற…
-
- 1 reply
- 996 views
-
-
அவசர உதவி. கனடிய உறவுகள் கவனத்திற்கு. கீழ் வரும் இணைப்பில் அழுத்தி செய்தியை படியுங்கள்.உறுப்பினர்கள் மட்டுமே இச்செய்தியை படிக்க முடியும். 2013 ஒரு போராளிக்கான உதவி கோரயிருந்தேன். தற்போது குறித்த போராளி உடல்நலமின்றி இருப்பதால் மீண்டு உதவியை வேண்டுகிறேன். அங்கத்தவர்கள் செய்தியை வாசியுங்கள். உதவ முடிந்தோர் உதவுங்கள். https://www.yarl.com/forum3/topic/133094-யாழ்கள-கனடிய-உறவுகளே-உங்களிடமிருந்து-அவசர-உதவி-தேவை/?page=3#comment-1265521
-
- 1 reply
- 671 views
-
-
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய ஆலோசனை சபை உறுப்பினர்களுள் ஒருவரான திரு.கைலாசநாதன் (குழந்தை) அவர்கள், தான் பணிபுரியும் பேர்ன் நகரிலுள்ள சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் (Stifftung Klinik SILOAH Worb Str-316 3073GUMLIGEN) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் விடுத்த வேண்டுகோளுக்கமைய, சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் திரு. கைலாசநாதன் அவர்களிடம் கையளிக்கப்பட்ட வைத்தியசாலை தேவைக்கான ஒரு தொகை பொருட்கள், புங்குடுதீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே. பேர்ன், சிலோவா வைத்தியசாலை நிர்வாகத்தினரால் கையளிக்கப்பட்ட வைத்தியர்கள் பயன்படுத்தும் உடைகள், சத்திர சிகிச்சைக்குப் பயன்படும் உடைகள், மற்றும் நோயாளிகள் பயன…
-
- 1 reply
- 577 views
-
-
வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் அன்பளிப்பு…. ஜேர்மனியில் வாழும் புலம்பெயர் தமிழ் இளையோர் தாயகத்தில் போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக புலரும் பூபாளர் 2018 ஜேர்மனி என்னும் திட்டத்தின் மூலம் திட்டப்பட்ட நிதியிலிருந்து தாயகத்தில் வாழும் வறிய மாணவர்கள் 80 பேருக்கு துவிச்சக்கர வண்டிகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடாக வழங்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால், கௌதாரிமுனை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களில் மேற்படி உதவிகள் வழங்கப்பட்டது. http://globaltamilnews.net/2018/91478/
-
- 1 reply
- 830 views
-
-
தொழில் செய்ய விரும்பும் போராளிக்கான உதவி ஓரு முன்னாள் போராளி. காலொன்றை இழந்தவர். 3பிள்ளைகளின் தந்தை. மனைவி இருதய நோய் பாதிப்புக்கு உள்ளானவர். நீண்டகாலம் சிறையில் இருந்து விடுதலையானவர்.வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிக்கடன் எடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் வங்கிக்கடன் எடுக்க முடியாது எல்லா முயற்சிகளும் தோற்றுப்போனது. தற்போது வியாபாரம் ஒன்றைச் செய்வதற்காக உதவி கோரியுள்ளார். 50ஆயிரம் ரூபா(அண்ணளவாக 285€) உதவினால் தன்னால் வியாபாரத்தை மேற்கொள்ள ஆதரவாக இருக்குமென உதவி கோரியுள்ளார். இவருக்கான உதவியை உறவுகளிடமிருந்து எதிர்பார்க்கிறோம். 18வருட போராட்ட வாழ்வில் எல்லாவற்றையும் இழந்து எதுவுமற்றுப் போன இக்குடும்பத்துக்கு உதவுங்கள். நேரடியாகவே உங்கள் உதவியை வழங்க …
-
- 1 reply
- 668 views
-
-
குசேலன்மலை குழந்தைகளுக்கு கல்வியுதவி செய்யுங்கள். மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரடியனாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு கரடியன்குளம் குசேலன்மலை எனப்படும் கிராமத்தில் 27குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றனர். இங்கு கல்வி கற்கும் வயதில் 62பிள்ளைகள் உள்ளனர். இப்பகுதியில் இதுவரையில் மின்சார வசதியோ அல்லது சரியான கல்விக்கான வசதிகளோ இல்லை. விவசாயத்துக்கு ஏற்ற வளமும் வசதியும் உள்ள இந்தக் கிராமம் இதுவரையில் எந்த அரசியல் தலைவர்களாலும் கவனிக்கப்படாதிருக்கிறது. மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள கரடியன்குளம் குசேலன்மலை வாழ் மாணவர்களின் அடைவுமட்டம் குறைந்த நிலையில் இருக்கும் கல்விகற்கும் வயதில் உள்ள சிறுவர்களுக்கான முன்பள்ளிக் கற்பித்தலுக்கான வசதியும் மா…
-
- 1 reply
- 869 views
-
-
முரளி - 02.05.10 அன்று பேபால் ஊடாக 14,06 EUR கிடைத்தது. சஜீவன் - 13.05.10 அன்று பேபால் ஊடாக 32,91 EUR கிடைத்தது. நெல்லையன் - 23.05.10 அன்று பேபால் ஊடாக 195,85 EUR கிடைத்தது. இந்த உதவியானது ஒரு மாவீரரின் 3வயதுக் குழந்தையின் மருத்துவத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இணையவன் - 26.05.10 அன்று பேபால் ஊடாக 48,70 EUR கிடைத்தது. முரளி - 31.05.10 அன்று பேபால் ஊடாக 14,06 EUR கிடைத்தது.(இம்மாதத்துக்கான முரளியின் பங்களிப்பு பல்கலைக்கழகமாணவர்களின் உதவிக்காக பயன்படுத்தப்படுகிறது) கயந்தி - 28.04.10 அன்று நேசக்கரம் வங்கியூடாக 50€ கிடைத்தது. (இம்மாதத்துக்கான கயந்தியின் உதவியும் பல்கலைக்கழக மாணவர் உதவிக்காக பயன்படுத்தப்படுகிறது) முக்கிய குறிப்பு - யாழ் இணைய கருத்தாளர்க…
-
- 1 reply
- 993 views
-
-
முன்பு கோரைக்கிழங்கு புடுங்கப்போதல் பற்றி ஒரு பதிவிட்டிருந்தேன் - பெரிதாக விமர்சனக் கருத்தாடல்கள் வரவில்லை ।। திண்ணைக்கு புதிதாக வந்த சிறுவனுக்கு என்ன துடுக்கு என பெரியவர்கள் எண்ணியிருக்கக் கூடும் . அது போக , இன்றைய தினம் புதுவருடத்தில் இருந்து ஒவ்வொரு கிழமையும் 10 வெள்ளி வீதம் காலியாகிப் போன நெஸ்கபே டின் இல் சேமித்து வருவது என புது வருட தீர்மானம் போட்டு நடைமுறைப்படுத்தி இருக்கிறேன். சேமிக்கும் பணம் யாழ் திண்ணையில் பிரேரிக்கப்படும் ஏதாவது பொது வேலைத்திட்டத்திற்கு கிடைக்கக் கூடியதாக இருக்கும் ( சப்ஜெக்ட் டு கண்டிஷன்ஸ் ப்ரபோஸ்ட் எர்லியர் ) ஆர்வமுள்ளவர்களை சேர்ந்து கொள்ள அழைக்கிறேன் …
-
- 1 reply
- 1.1k views
-
-
பா.உறுப்பினர் சி.சிறீதரனின் வேண்டுகோளுக்கு அமைய சுயதொழில் முயற்சியை ஊக்குவிக்கும்பொருட்டு கிளிநொச்சி இராமநாதபுரம், சம்புக்குளம் கிராமத்தில் இராமஜெயம் என்பவரின் முகாமைத்துவத்தின் கீழ் கனடா மறுவாழ்வு அமைப்பு அப்பளத் தொழிற்சாலையொன்றை ஆரம்பித்துள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வுகள் கடந்த 16ம் நாள் இராமஜெயம் தலைமையில் நடைபெற்றது. இதில் கரைச்சி பிரதேச உறுப்பினர்களான சுவிஸ்கரன் பொன்னம்பலநாதன், சம்புக்குளம் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் தவச்செல்வம், செயலாளர் குமார், சம்புக்குளம் அம்மன் கோவில் போசகர் சதாசிவம் மற்றும் பணியாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். கனடா மறு வாழ்வு அமைப்பின் இத்தகைய சுயதொழில் முயற்சிக்கான ஊக்குவிப்பு மூலம் சம்புக்குளம் பிரதேசத்தில் கணிசமானவர்களுக்கு வேலைவா…
-
- 1 reply
- 495 views
-
-
வாழ்வாதார உதவி பெற்றுக்கொண்ட 14குடும்பங்கள். எமது உப அமைப்பான அரவணைப்பின் வழிகாட்டலில் 2013 யூன் மாதம் குசேலன்மலை (கரடியன்குளம்) கிராமத்தில் கல்வி , சமூக வலுவூட்டல் பணியை ஆரம்பித்திருந்தோம். இங்கு வாழும் 27 குடும்பங்களினதும் குழந்தைகளுக்கான கல்வியூட்டலில் குழந்தைகள் நிறைந்த பயனைப் பெற்றுள்ளனர். 27 குடும்பங்களைக் கொண்ட குசேலன்மலை (கரடியன்குளம்) கிராமத்தில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட 14 குடும்பங்களுக்கான சுயதொழிலுக்கான வலைகள் , மீன்பெட்டி, தராசு,தங்கூசி, நூல்கட்டை, தூண்டில் போன்ற பொருட்கள் 17.07.2014 அன்று வழங்கப்பட்டது. அரவணைப்பு அமைப்பின் தலைவர் அருணா தலைமையில் நடைபெற்ற பொருட்கள் வழங்கும் நிகழ்வில் அதிதிகளாக ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேசசெயலாளர் உதயசிறீதர் , குசேலன்ம…
-
- 1 reply
- 781 views
-
-
(குறிப்பு : படங்களை அழித்துவிட்டேன். காரணம் வளர்ந்த பிள்ளைகளும் இருக்கிறார்கள். மன்னிக்கவும்)
-
- 1 reply
- 590 views
-
-
http://nesakkaram.org/ta/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2013/ தேன்சிட்டு உளவள அமைப்பு 2013 முன்னேற்ற அறிக்கை. 2013ம் ஆண்டு ஆவணி முதலாம் திகதி நேசக்கரத்தின் உப அமைப்புகளில் ஒன்றாக தேன்சிட்டு உளவள அமைப்பினை ஆரம்பித்திருந்தோம். போருக்குப் பின்னர் அதிகரித்துள்ள தற்கொலைகள் , சமூகச்சீர்கேடுகள் , மன அழுத்தப் பாதிப்பு என பல்வகையில் பாதிக்கப்பட்டவர்களின் உளவள ஆரோக்கியத்தை மேம்படுத்தலை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவ்வமைப்பினால் 50இற்கும் மேற்பட்ட பாலர்கள் பயனடைந்துள்ளார்கள். 01.08.2013 அன்று அம்பாறையில் 2 கிராமங்க…
-
- 1 reply
- 549 views
-
-
மூளைப்புற்றுநோயால் கண்பார்வையை இழந்து தவிக்கும் முன்னாள் போராளி. மட்டக்களப்பு மயிலம்பாவெளி , தன்னாமுனையைச் சேர்ந்த சுந்தரதாஸ் ஒரு முன்னாள் போராளி. இவர் 3பிள்ளைகள் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். இவருக்கு மூளைப்புற்றுநோய் கண்டறியப்படாமல் நீண்ட நாட்கள் நோயோடு போராடினார். நோய் கண்டுபிடிக்கப்பட்ட போது நோயின் தாக்கம் அதிகமாகியிருந்தது. இந்நிலையில் மருத்துவம் பெற்றார். மின்சாரம் பாய்ச்சல் சிகிச்சை செய்யப்பட்டது. அத்தோடு இவரது கண்கள் இரண்டும் பார்வையை இழந்துவிட்டது. நிரந்தர நோயாளியாகிவிட்ட கணவர் 3பிள்ளைகளோடும் குடும்ப வாழ்வாதாரத்தை இவரது மனைவியே சுமக்கிறார். வருமானம் எதுவுமற்ற நிலமையில் இக்குடும்பம் மிகவும் துன்பப்படுகிறது. இவர்கள் சிறு கடையொன்று போட்டு வியாபாரம் செய்…
-
- 1 reply
- 903 views
-
-
ஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சி வெற்றியை நோக்கிச் செல்கிறது வறுமையாலும் கல்வி நிலமையாலும் பின்தங்கி யாராலும் கவனிக்கப்படாதிருந்த மட்டக்களப்பு கரடியன்குளம் (குசேலன்மலை) கிராமம் இவ்வருடம் வெள்ள அனர்த்தத்தின் போது எமது அமைப்பால் இனங்காணப்பட்டது. அவசர உதவியாக இக்கிராமத்து மக்களுக்கான வெள்ள நிவாரணத்தை இவ்வருடம் தைமாதம் வழங்கியிருந்தோம். இக்கிராமத்தின் புவியியல் அமைவு வாழ்வாதார உயர்வுக்கான வழிமுறைகள் கல்வித் தகைமை போன்றவற்றை ஆராய்ந்து அவர்களை உயர்த்தும் நோக்கில் நேசக்கரம் களக்குழுவினர் நீண்ட நாட்கள் இந்தக் கிராமத்தின் குழந்தைகளோடும் குடும்பங்களோடும் கூடியிருந்து அவர்களது தேவைகள் பிரச்சனைகள் போன்றவற்றை ஆராய்ந்து அறிக்கையினை சமர்ப்பித்திருந்தனர். இக்கிராமத்தின் தேவைகள…
-
- 1 reply
- 671 views
-
-
அமரர் தில்லையம்பலம் பாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவும் அன்னதான நிகழ்வும். யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட தில்லையம்பலம் பாலசிங்கம் அவர்கள் 05-09-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார். அன்னாரின் 31ம் நாள் நினைவுநாளை முன்னிட்டு அன்னாரின் புதல்வி திருமதி பாலகௌரி சிவலிங்கம் (டென்மார்க்) குடும்பத்தினர் அன்னதானம் வழங்க முன்வந்து நேசக்கரம் அமைப்பிடம் ஆயிரம் டெனிஸ்குறோணர்களை வழங்கியிருந்தார்கள். அமரர் தில்லையம்பலம் பாலசிங்கம் அவர்களின் 31ம் நினைவுநாளன்று மட்டக்களப்பில் நேசக்கரம் அமைப்பால் ஒழுங்கு செய்யப்பட்ட அன்னதானம் வழங்கும் நிகழ்வில் 120இற்கும் மேற்பட்ட சிறுவ…
-
- 1 reply
- 559 views
-
-
சின்னச் சின்ன உதவிகள் தேவை (பணம் அல்ல) நீங்களும் வருவியளோ ? நேசக்கரம் , மற்றும் கைவினைப்படைப்பாளிகள் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பு அல்லாத உதவிகள் செய்வதற்கான ஆர்வமுள்ளவர்கள் தேவைப்படுகின்றனர். வாரத்தில் 2மணித்தியாலம் ஒதுக்கி இந்தப் பணியில் உதவிட உறவுகளை வரவேற்கிறோம். தேவைப்படும் உதவிகள் :- 1) செய்திகள் தொகுப்பு. 2) கணக்கறிக்கை தயாரித்தல். 3) மாதாந்த தொகுப்பறிக்கை தயாரித்தல். 4) தமிழில் எழுதப்படும் செய்திகள் அறிக்கைகளை ஆங்கிலம் , டொச் மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்தல். 5) ஊடகங்களில் வெளிவரும் பாதிக்கப்பட்டோரின் விபரங்களை தொகுத்தல். 6) நீங்கள் அறியும் பெண்கள் மீதான வன்முறைகள் தகவல்களை தொகுத்தல். 7) புதிய திட்டமிடல்கள் செயற்பாடுகளுக்கு உங்கள் தரப்பு ஆலோசனைகள் திட…
-
- 1 reply
- 860 views
-
-
விவசாயம் செய்ய உதவி கோரும் போரால் பாதிக்கப்பட்ட தர்சினி போரால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு கித்துள் பகுதியைச் சேர்ந்த தர்சினி போரில் தனது கணவனை இழந்துள்ளார். தர்சினி கழுத்தில் புற்றுநோய்க்கு ஆளாகி சத்திரசிகிச்சை செய்து மீண்டுள்ளார். இவரது குடும்ப முன்னேற்றம் கருதிய கருணையுள்ளங்கள் உதவுமாறு வேண்டுகிறோம். 2பெண் பிள்ளைகளுடன் மிகவும் வறுமையில் வாடுகின்றார்கள்.அடிப்படை பொருளாதார வசதிகளை இழந்துள்ள இக்குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த தர்சினி அவர்கள் தோட்டம் செய்வாற்கான உதவியினைக் கோரியுள்ளார். கிணறு அமைத்து தோட்டத்துக்கான வசதிகளை அமைக்க இலங்கைரூபா 51ஆயிரம் ரூபா (320€)தேவைப்படுகிறது. தர்சினி எமக்கு எழுதிய கடிதத்தை இணைக்கிறோம். உதவ விரும்புவோர் நேரடியாகவோ அல்லது நேசக…
-
- 1 reply
- 777 views
-