துளித் துளியாய்
தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள்
துளித் துளியாய் பகுதியில் தாயக மக்களுக்கு, அவர்களின் மறுவாழ்வுக்கு உதவுதல்/உதவி கோரல்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தாயக மக்களின் மறுவாழ்வுக்கு உதவும் தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல் வேண்டும்.
தொண்டு, பரோபகாரம் என்பவை பற்றிய பொதுவான செய்திகள், கட்டுரைகள் தவிர்க்கப்படல் வேண்டும். அவை சமூகச் சாளரம் பகுதியில் இணைக்கப்படலாம்.
350 topics in this forum
-
மண்முனை , போரதீவு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 100புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான கற்றல் செயற்பாட்டுக்கான மாதிரி வினாத்தாள்கள் பால்மா போன்றவை 31.07.2011 அன்று வழங்கப்பட்டுள்ளது. இம்மாணவர்கள் முன்மாதிரி பரீட்சையில் 100புள்ளிகளுக்கு குறைவாக புள்ளிகள் பெற்றுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை நடாத்தி பரீட்சையில் தேற்ற வைக்கும் முயற்சியில் ஊதியமற்று கற்பிக்கும் ஆசிரியர்களின் வேண்டுகைக்கு இணங்க நேசக்கரம் 60000ரூபா(அறுபதாயிரம் ரூபா) பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது. மேலதிகமாக பல மாணவர்கள் உதவிகளை எதிர்பார்க்கின்றனர் எம்மால் முழுமையான உதவிகளை வழங்க முடியாத நிலமையில் இச்சிறு உதவியைக் கொண்டு சேர்த்திருக்கிறோம். உதவிகள் கிடைக்கப்பெறும் பட…
-
- 1 reply
- 1.3k views
-
-
உயிர் கொல்லும் புற்றுநோயிலிருந்து வாழத் துடிக்கும் 22 வயது இளைஞனின் கதை. 13.06.1991 உலகின் மகிழ்ச்சிகளை அனுபவிக்கப் பிறந்த அவனது பிறப்பு மர்மமானது. ஓவ்வொரு பிள்ளையும் விரும்பும் அம்மாவின் மடிவாசம் அப்பாவின் தோழ்வாசம் எதையும் அவன் அனுபவிக்காதவன். பெற்றவர்களை அவன் காணவேயில்லை. உறவென்று சொல்லி உரிமை கொண்டாட யாருமில்லாத சிசுவாகவே தனித்துப் போனான். அவனை வளர்த்தவர்களும் பாலக வயதிலேயே ஏனோ கைவிட்டு விட்டார்கள். யாரில்லாது போனாலென்ன 'புனிதபூமி' இருக்கிறது என அவனை புனிதபூமியே தத்தெடுத்துக் கொண்டது. புனிதபூமியின் குழந்தையாகி மீண்டது அவனது மகிழ்ச்சிக்காலம். உறவில்லை உறவினர்கள் இல்லையென்று அழுத பிஞ்சு மனசில் ஆயிரக்கணக்கான உறவுகளின் அணைப்பையும் ஆற்றுதலையும் புனிதபூமி கொடு…
-
- 1 reply
- 656 views
-
-
தலைவர் புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அன்புடையீர் வணக்கம். மலசலகூடம் அமைப்பதற்கு உதவி புரிந்தமைக்கான நன்றி மடல். கிருஸ்னராஜா சந்திராதேவி என்ற மாவீரர் குடும்பத்திற்கு மலசலகூடம் அமைப்பதற்காக ரூபா 45000.00 (ரூபா நாற்பத்து ஐந்தாயிரம்) நிதியுதவி வழங்கியமைக்கு புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் சார்பில் - நிதியுதவி வழங்கிய மனிதநேயமுள்ள திரு.சிவராஜா- மார்கண்டு அவர்களுக்கும் சமூக பொருளாதார சிறுவர் அபிவிருத்தி நிறுவனத்தின் சார்பிலும் பயனாளி குடும்பத்தின் சார்பிலும் நன்றியையும் மகிழ்ச்சியையும் கூறுகின்றோம். போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமைதாங்கும் குடும்பங்களின் நலன் கருதி தங்களினால் முன்னெடுக்கப்படும் புனித கங்கரியங்களுக்கும் மனித நேய தொ…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஆயிரம் ரூபாவிற்கு விற்கப்படும் தமிழ் குழந்தைகள் 3வயதுப் பெண்குழந்தையை ஆயிரம் ரூபாவிற்கு விற்க ஒரு தமிழ்த்தாய் மட்டக்களப்பு காத்தான்குடி சந்தையில் பேரம் பேசிக்கொண்டிருந்தாள். அந்தக் குழந்தையை காப்பாற்றிக் கொண்டு வந்து தந்த தமிழனுக்கு முதலில் நன்றிகள். 19.01.2014அன்று நேசக்கரம் அமைப்பானது டென்மார்க் அன்னை அறக்கட்டளை அமைப்பின் நிதியாதரவில் குசேலன்மலை (கரடியனாறு) மாணவர்களுடனான பொங்கல் விழாவினைச் செய்திருந்தது. வளமையான வரவிலிருந்து 2பிள்ளைகள் அதிகமாயிருந்தார்கள். 2பிள்ளைகளின் வரவுக்கான காரணத்தை விசாரித்ததில் ஒரு பெண்குழந்தைக்கு நடந்த அவலம் தெரியவந்தது. குசேலன்மலை (கரடியன்குளம்) கிராமத்தில் பணத்திற்காக பல குழந்தைகள் விற்கப்பட்ட விடயமும் வெளிச்சத்துக்கு வந்தது. அது மட்டுமன்…
-
- 1 reply
- 850 views
-
-
புங்குடுதீவு நோர்வே மக்கள் ஒன்றியம் கிளிநொச்சி விவேகானந்த நகர் மாணவர்களுக்கு உதவி! POSTED IN NEWS புலம்பெயர் உறவுகளின் அமைப்பான நோர்வே புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் எமது வேண்டுகோளுக்கிணங்க கிளிநொச்சி விவேகானந்த நகர் மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கியுள்ளது. கடந்த 26ஆம் திகதி விவேகானந்தநகர் பொதுநோக்கு மண்டபத்தில் கரைச்சி பிரதேச சபையின் உபதவிசாளர் நகுலேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் தயாபரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் அக்கராயன் பிரதேச அமைப்பாளர் கரன், அக்கராயன் பிரதேச கட்சிக் கிளையின் செயலாளர் கதிர்மகன், வன்னேரிப் பிரதேச கட்சி செயற்பாட்டாளர் மகேஸ், விவேகானந்தநகர் கிராமத்தின் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர். இ…
-
- 1 reply
- 547 views
-
-
ஒட்டுசுட்டான் சின்னச் சாளம்பன் ஈஸ்வரன் வித்தியாலய மாணவர்கள் அடிப்படை வசதிகளின்றி , தகரக் கொட்டகைக்குள் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர். இது பற்றிய பிரதேச மக்களின் தகவலையடுத்து வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரில் சென்று மேற்படி நிலைமையை உறுதிப்படுத்தினார். அங்கு அவர் கருத்துத் தெரிவிக்கையில் , தரம் 5 வரை , சுமார் 65 மாணவர்கள் கல்வி கற்கும் ஈஸ்வரன் வித்தியாலயத்தின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அங்கு சென்று நிலைமையை நேரில் அவதானித்ததுடன் அப்பாடசாலை அதிபரையும் சந்தித்து குறைகளின் தரவுகளைக் கேட்டறிந்தேன். அப்பாடசாலையானது பழைய தகரங்களால் அமைக்கப்பட்டுள்ளது. கூரையில் பல இடங்களில் துளைகள் காணப்படுவதால், மழை பெய்யும் போது , கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. கா…
-
- 1 reply
- 446 views
-
-
புலமைப்பரிசில் 3வது கையேடு வினாத்தாள் அச்சடிக்க உதவுங்கள் நேசக்கரம் பிறைட் பியூச்சர் நிறுவனத்தின் இலவச கல்வித்திட்டம் 2013 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மாதாந்த பயிற்சி வகுப்புகளையும் பிரத்தியேக தயார்படுத்தல் வகுப்புகளையும் நடாத்திவருகிறோம். 3வது வழிகாட்டி கையேடு தயாரிப்பிற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 12ஆயிரம் மாணவர்களுக்கான வழிகாட்டி ,விளாத்தாள்கள் அச்சடிப்பதற்கான கடதாசி , மை கொள்வனவு செய்வதற்கு 60ஆயிரம் ரூபா (அண்ணளவாக 375€) தேவைப்படுகிறது. ஆனிமாதம் 10ம் திகதிக்குள் அச்சடித்து வழங்க வேண்டும். ஆவணி மாதம் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களின் இறுதிபரீட்டசையை நடாத்தி முடிக்க கருணையாளர்களின் உதவியினை வேண்டுகிறோம். ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்’ Bank infom…
-
- 1 reply
- 2.6k views
-
-
ஏழை குடும்பத்திற்கு செல்வம் அடைக்கலநாதனால் வீடு வழங்கி வைப்பு வவுனியா ஆச்சிபுரத்தில் வசித்து வரும் ஏழை குடும்பத்திற்கு பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனால் இன்று வீடு கையளிக்கப்பட்டது. முன்னர் வசித்து வந்த வீடு மண்ணினால் கட்டப்பட்ட மழைக்கு இடிந்து விழும் நிலையில் காணப்பட்டமையினால் அம்மா அறக்கட்டளை மற்றும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஜேர்மன் மகளீர் அமைப்பினரின் ஒரு இலட்சத்தி ஜம்பதாயிரம் ரூபா நிதியில் இவ் தற்காலிக வீடு அமைக்கப்பட்டது. குறித்த வீட்டினை பயனாளிக்கு கையளிக்கும் இந் நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோதரலிங்கம், வவுனியா தெற்கு பிரதேச சபையின் தலைவர் து. நடராஜசிங்கம் , முன்னாள் வடமா…
-
- 1 reply
- 788 views
-
-
புலம்பெயர் உறவான லண்டனைச் சேர்ந்த பரஞ்சோதி லோகஞானம் தனது பெற்றோரின் 29வது வருட திருமண நாள் நிறைவை முன்னிட்டு நேற்று (17.07.2016) வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக முல்லைத்தீவு மாவட்ட அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியத்திற்கு உலர்உணவுப்பொருட்களும் வள்ளுவபுரம் மாணவி ஒருவருக்கு புதிய துவிச்சக்கர வண்டி மற்றும் பாரதி இல்ல பிள்ளைகளுக்கு சிறப்பு மதிய உணவினையும் வழங்க, 56300 ரூபா நிதி அனுசரனையினை வழங்கியுள்ளார். முல்லைத்தீவு மாவட்ட அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்களின் ஒன்றியத்தின் கோரிக்கைக்கு அமைய புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பத்து குடும்பங்களுக்கு தலா 2000 பெறுமதியான 20000ரூபா பெறுமதியில் உடையார்கட்டு தெற்க…
-
- 1 reply
- 572 views
-
-
சாதாரண தர( O/L) மாணவர்களை பரீட்சைக்கு தயார் படுத்துவதுக்கான மதிய உணவு வழங்கல் புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் இந்த வருடம் சாதாரண தர (O/L) பரீட்சை எழுத இருக்கும் மாணவர்கள் கொரோனா வைரஸின் தொற்று காரணமாக தமது பாடத்திட்டத்தை முடிக்க முடியாததால் அவர்களுக்கான வகுப்புகளை பாடசாலை நேரத்தின் பின்னரும் தொடர்ந்து நடாத்த அந்த குறிப்பிட்ட மாணவர்களுக்கு மதிய உணவை வழங்கி உதவுமாறு புங்குடுதீவு மகா வித்தியாலயத்தின் அதிபர் அவர்களால் விடுக்கப்பட்ட அவசர வேண்டுகோளை உடனடியாக பரிசோதனை செய்த பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நிர்வாக குழு அதனை உடனடியாக செய்வது என்று முடிவு செய்து உடனடியாகவே 1லட்சம் ரூபாய்களை அனுப்பி இருந்தோம். பரீட்சைக்கு தோன்றும் வரை 3 மாதங்கள் நடைபெற்ற மதிய உணவு…
-
- 1 reply
- 526 views
-
-
கனடா வாழ வைப்போம் அமைப்பூடாக பா.உறுப்பினர் சி.சிறீதரனின்வேண்டுகோளுக்கிணங்க “வைத்திலிங்கம் அறக்கட்டளை” அமரர் வைத்திலிங்கம் அவர்களின் ஓராண்டு நினைவாக, அவரது குடும்பத்தாரால் இன்று கிளிநொச்சியில் வைத்து போரால் முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு அர்ப்பணிப்புக்களின் அடையாளமாக இருப்பவர்களில் 20 பேருக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன இந்த நிகழ்வு கிளிநொச்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் செயலகமான அறிவகத்தில் பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் மாவட்டக்கிளையின் உபதலைவருமான பொன்.காந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் வடமாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ப.குமாரசிங்கம், முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்துகொண்…
-
- 1 reply
- 602 views
-
-
வறிய மாணவர்களுக்கு பேருதவி! - ரொரன்ரோ மனித நேயக் குரலுக்கு நன்றி தெரிவித்த பள்ளி அதிபர் மிகவும் பின் தங்கிய பிரதேசத்தை சேர்ந்த தமது பாடசாலைக்கு கனடா நாட்டின் ரொரன்ரோ மனித நேயக் குரல் அமைப்பு வழங்கிய உதவி பேருதவியாக அமைந்துள்ளதாக கிளிநொச்சி மாயவனூர் அதிபர் திருமதி ல. கோபாலராசா தெரிவித்தார். கிளிநொச்சி மாயவனூர் வித்தியாலயத்தில் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று பாடசாலையின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பேசிய பாடசாலை அதிபர் திருமதி ல. கோபாலராசா தமது பாடசாலை மிகவும் பின்தங்கிய பாடசாலை என்றும் அங்கு கல்வி பயிலும் மாணவர்கள் பல்வேறு நிலையிலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்…
-
- 1 reply
- 703 views
-
-
'கனடியத் தமிழர் தேசிய அவை- NCCT' கனடா வாழ் தமிழ் மக்களால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டு, சட்ட ரீதியாக பதிவு செய்யப்பட்டு கனடிய மண்ணில் பல்வேறு பணிகளை கனடா வாழ் தமிழ் மக்களுக்கும் தமிழீழ தாயக மக்களுக்கும் ஆற்றி வருகின்றது. குறிப்பாக தமிழர்களின் மறுக்கப்பட்ட நீதியை வென்றெடுக்க சனநாயக ரீதியாக பெரும் பணியை செய்வதோடு 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை யுத்தத்தின் கோர வடுவால் பாரிய அளவில் பாதிக்கப்பட்ட தமிழீழ தாயக மக்களை அவல வாழ்வில் இருந்து மீட்டு மீண்டும் மறுவாழ்வு கொடுத்து வாழவைக்கும் பணியையும் 'மண்வாசனை' திட்டத்தினூடாக இந்த மண்ணில் இருந்து ஆற்றி வருகின்றது. முற்று முழுதாக தாயக மக்களின் துயர் துடைப்பை மையப்படுத்திய பணிகளை மட்டுமே கொண்டதாக கனடிய தமிழர் தே…
-
- 1 reply
- 459 views
-
-
பாடசாலைக்கல்வியை இடைநிறுத்தவிருந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள். வறுமையால் பாடசாலையை விட்டு இடைவிலகும் நிலையில் இருந்த மாணவர்கள், தமது கல்வியைத் தொடர உதவும் பொருட்டு யாழ்.வணிகர் கழகத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன. யாழ்ப்பாணப் பிரதேச செயலகத்தில் கடந்த வியாழக்கிழமை வணிகர் கழகத்தலைவர் ஆர்.ஜெயசேகரம் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் எமது பதிவுகளாக வறுமை, குடும்பப் பிரைச்சனைகள் காரணமாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களில் பாடசாலையை விட்டு இடை விலகும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேசமயம் இடைவிலகும் நிலையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையும் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றது. எனவே இந்நிலையை மாற்றி பாடசாலையை விட்டு இடைவிலகும் நிலையில் உள்ள மாணவர்களை இனங்க…
-
- 1 reply
- 2k views
-
-
-
சாகும் நிலையில் வாழத் துடிக்கும் முன்னாள் போராளி! உதவுமா தமிழினம்… நான் வறுமையில் சாகும் நிலையில் உள்ளேன் கழுத்திற்கு கீழ் உணர்வற்று இருக்கும் முன்னாள் போராளிக்கு நேரடியாக உதவ முன்வாருங்கள் பூநகரியில் வனாந்திரத்தில் தனது வாழ்வை மீட்கப் போராடும் முன்னால் போராளி யூட்யெசீலன். யுத்தத்தின் கோர தாண்டவத்தினால் பாதிக்கப்பட்டு கழுத்தின் கீழ் உள்ள பாகங்கள் அனைத்தும் இயங்க முடியாத நிலையில் படுக்கையில் உயிர்வாழப் போராடும் அவல நிலை. ஏ.சி அறையில் இருக்க வேண்டிய நிலையில் சிறு கொட்டகையில் வெப்பத்தின் சூட்டினைத் தாங்கமுடியாது நீரில் நனைத்து துணியினை உடலில் போட்டு உதவிக்கு எவரும் இன்றி பாடசாலை செல்லும் மாணவனின் தயவில் தனது வாழ்வை நடாத்தும் நிலமை. உதவும் நல்ல உள்ளம் கொண்டோரே ந…
-
- 1 reply
- 1.2k views
-
-
தாயக உறவுகளுக்கு உதவிய கனடா வாழ் உறவுகள் இலங்கையில் தமிழர் தாயக விடுதலைப் பயணத்தின்போதும் அதன் அசம்பாவிதங்களிலும் பாதிப்புகுள்ளாகி மாற்றுத்திறனாளிகளாகி வாழ்க்கையில் பெரும் சவாலை எதிர்கொள்ளும் உறவுகளின் நலனை கவனிக்க அவர்களாலேயே உருவாக்கப்பட்டு இயங்கி வரும் உயிரிழை முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்புற்றோர் அமைப்பு தன் பணிகளை மேலும் விரிவுபடுத்தவுள்ளது. இந் நிலையில் தன் பணிகளை விரிவாக்கி செயற்படவிருக்கும் கட்டடத் தொகுதி நிர்மாணத்திற்கான பொறுப்பை கனடா பிரம்டன் வாழ் உறவுகள் ஏற்றுள்ளதாக பிராம்டன் தமிழ் ஒன்றியத்தினர் தெரிவித்துள்ளனர். இதன் முதற்பகுதியாக 12 இலட்சத்து 54ஆயிரம் ரூபாய்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 417 views
-
-
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி மீள முடியாமல் தவிக்கும் குடும்பம்
-
- 0 replies
- 602 views
-
-
ஒக்டோபர் 29ம் திகதி நடைபெற்ற கொஸ்லந்தை மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான நிதியை திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியினர் வழங்கினர். மீரியபெத்த தமிழ் வித்தியாலயம் ஸ்ரீ கணேசா தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசலைகளைச் சேர்ந்த 61 மாணவர்களுக்கு 4 இலட்சத்துக்கு மேற்பட்ட நிதி அவர்களது எதிர்கால கல்வித் தேவைகளுக்காக பகிர்ந்து வழங்கப்பட்டது. கடந்த 8ம் திகதி கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் திருகோணமலை மாவட்ட தமிழரசுக்கட்சியின் தலைவருமாகிய திரு.சி.தண்டாயுதபாணி, மாகாண சபை உறுப்பினர்கள் திரு.மு.நாகேஸ்வரன், திரு.ஜெ.ஜெனார்த்தனன் ஆகியோரும், தமிழரசுக்கட்சியின் மூதூர் தொகுதித் தலைவர் திரு.க.திருச்செல்வம், சேருவில் தொகுதித் தலைவர் திரு.க.…
-
- 0 replies
- 472 views
-
-
மறக்கப்படும் புற்று நோயாளரும் மாற்று வழிகளும் – வடக்கு கிழக்கு புற்றுநோய் சங்கம் (CANE) 4 Views புற்றுநோயானது, உலகில் ஏற்படும் அதிகமான இறப்புகளுக்கான காரணிகளில் 2ஆம் இடத்தை வகிக்கும் அதே நேரம், இலங்கையில் வைத்தியசாலைகளில் இடம்பெறம் இறப்புக்கான காரணிகளிலும் 2ஆம் இடத்தை வகிக்கின்றது. உலகளாவிய ரீதியில் 2018ஆம் ஆண்டு 9.6 மில்லியன் இறப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 2008ஆம் ஆண்டு 20,246 ஆகவும் 2014இல் 23,105 ஆகவும் அதிகரித்துள்ளது. இதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திலும் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. வட மாகாணத்தில் 2010ஆம் ஆண்டு 445 ஆக இருந்த புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 2011ஆம…
-
- 0 replies
- 779 views
-
-
ஏப்றல்2011 கணக்கறிக்கை கீழ் உள்ள இணைப்பில் அழுத்திப் பாருங்கள். ஏப்றல் 2011 கணக்கறிக்கை உதவிய அனைவருக்கும் நன்றிகள். (ஒவ்வொரு மாதமும் 5ம் திகதிக்கிடையில் மாதாந்த கணக்கறிக்கை இணைக்கப்படும்)
-
- 0 replies
- 1.2k views
-
-
வணக்கம் உறவுகளே கணிணி, கைப்பேசி இணையம் மூலம் நடைபெறும் தொழில்களை கற்று தனது உழைப்பில் முன்னேற விரும்பும் தாயக உறவுகளுக்கு மட்டும் என்னால் இயன்ற அளவு கட்டணமில்லாமல் கற்றுக்கொடுத்து வருகிறேன்.. விருப்பமுள்ள தமிழீழ தாயக உறவுகள் எம்மை தொடர்புகொள்ளவும்.. பெரியார்தளம் அகரன் whatsapp: +918973979933
-
- 0 replies
- 533 views
-
-
அன்பான நண்பர்களுக்கும், கொடையாளிகளுக்கும், NOW-WOWன் நலன்விரும்பிகளுக்கும்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான தங்கள் சேவைகளுக்கு பராட்டுக்களும், பற்றாத்தொகை உதவிக்கான கோரிக்கையும் சந்தேகத்திற்கிடமில்லாமல், அண்மையில் வடக்கு கிழக்கில் பெய்த கடும்மழையையும் அதனால் அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையும் பற்றி நீங்கள் தெரிய வந்திருப்பீர்கள். NOW-WOW, பிரதானமாக, கடுமையாக பாதிக்கப்ப்ட்ட கிளிநொச்சி, மட்டக்களப்பு ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் தனி அக்கறை கொண்டுள்ளது. சிறியதும், புதியதுமான NOW-WOW, பெரிய மனது கொண்ட தங்கள் ஆதரவுடன், அவசர உதவியாக மருதங்கேணிக் கிராமத்திலிருக்கும் கைக்குழந்தைத் தாய்மார்களுக்கு 248 பால்மாப் பெட்டிகளை வழங்கியிருக்கிறது. மேலும் சித்தாண்டிக்கிராமத…
-
- 0 replies
- 457 views
-
-
யுத்தத்தால் நலிவுற்ற தமிழ்ச் சமூகத்தை மீள நிலைநிறுத்தும் வகையில் 'வாழ்வோம் வளம்பெறுவோம்' செயற்றிட்டத்தின் கீழ் முல்லைத்தீவு, தேவிபுரம் மற்றும் கைவேலி பகுதிகளைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களுக்கு தலா 250 வாழைக்குட்டிகள் புதன்கிழமை (11) வழங்கப்பட்டன. புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வாழும் ஒருவரின் நிதியுதவியில் வழங்கப்பட்ட இந்த வாழைக் குட்டிகளுடன் நீர் இறைப்பதற்கான பைப்புகளும் வழங்கப்பட்டன. வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் இந்த வாழைக்குட்டிகளை பயனாளிகளிடம் கையளித்தார். http://www.tamilmirror.lk/141482#sthash.CRX8AFvM.dpuf
-
- 0 replies
- 586 views
-
-
கிளிநொச்சி விஸ்வமடுவில் அமைந்துள்ள மாற்றுத்திறனாளிகள் செயற்கை உறுப்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் ஏற்பாட்டில் லயன் மாவட்டம் 306-B1 இன் கொழும்பு மத்தி லயன்ஸ் கழகத்தினால் யுத்தத்தினால் அவையவங்களை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது. பல நன்கொடையாளர்களின் அனுசரணையுடன் யுத்தத்தினால் அவையவங்களை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான சக்கர நாற்காலிகள், தையல் இயந்திரங்கள், கோழிக்குஞ்சுகள், துவிச்சக்கர வண்டிகள், ஊன்றுகோல்கள், வங்கி சேமிப்புகணக்கு புத்தகங்கள் ஆகியன வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது தகவலுக்கு நன்றி Chelvadurai Shanmugabaskaran
-
- 0 replies
- 628 views
-