மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
957 topics in this forum
-
லெப். கேணல் சந்திரன் வன்னியின் முழுநிலவு” வன்னிப் பிராந்திய அரசியல்த்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் சந்திரன். சந்தின், உன்னை நாங்கள் மறந்து விட்டோமா? இல்லை. அது எங்களால் முடியாது.உன்னை மட்டுமல்ல, உன்னைமாதிரி இந்த மண்ணை நேசித்து, இந்த் மண்ணுக்கு உயிர் தந்த எவரையுமே எங்களால் மறக்க முடியாது. சந்திரன், உன்னை – உனது உணர்வுகளை மறக்கமுடியாமல் நாங்கள் மட்டுமா தவிக்கிறோம்? இல்லை. புதரிகுடாவில் காற்சட்டை இல்லாமல் உன்னைக் கண்டதாகவும் சிறுசுகளும், பொன் நகரிலும் முள்ளியவளையிலும் உரலுக்குள் பாக்கிடித்தபடியே விழிகளால் உன்னைத் தேடும் கிழவிகளும், களைத்து விழுந்துவரும் உன்னைத் தடவி உற்சாகமாக வழியனுப்பும் நிழல்மரங்களும் உன்னைக் காணாமல், உன்னை விழ…
-
- 2 replies
- 1.4k views
-
-
17.10.1995 அன்று திருகோணமலை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துருப்புக்காவி கலத்தினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் சிவசுந்தர், கப்டன் ரூபன், கப்டன் சிவகாமி ஆகியோரின் 15ம் ஆண்டு வீரவணக்க இன்றாகும். தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம்மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/news/flashnews/2011/10/17/ தமிழீழ தாயகத்தின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இம்மானமாவீரர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 15 replies
- 1.4k views
-
-
21.07.1997 அன்று மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டிப் பகுதியில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 32 மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மட்டக்களப்பு மாவட்டம் சித்தாண்டிப் பகுதியில் 21.07.1997 அன்று சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற எதிர்பாராத மோதலில் மேஜர் ஜெயநீதன் (சதா) (வடிவேல் விமலன் - பெரிபுல்லுமலை, மட்டக்களப்பு) கப்டன் குலேந்திரன் (வனவேல் சுந்தரலிங்கம் - உன்னிச்சை, மட்டக்களப்பு) கப்டன் கார்முகிலன் (கோபு) (வெள்ளைச்சாமி கர்ணன் - நுணுகலை, மட்டக்களப்பு) கப்டன் தேரு (தம்பிரத்தினம் ஜெயாபரன் - ம்பிலுவில், அம்பாறை) லெப்டினன்ட் வன்னி (சின்னத்தம்பி புஸ்பராஜா - அக்கரைப்பற்று, அம்பாறை) லெப்டினன்ட் சபேசன் (செலலத்தம்பி கணேஸ் - சித்தாண்டி, மட்டக்களப்பு) 2ம் லெப்ட…
-
- 16 replies
- 1.4k views
-
-
நாட்டுப் பற்றாளர் அம்பலவாணர் குமாரவேலு ஆசிரியர் அவர்கள் பதிவு-2005. மீள்பதிவு.2017 “காலத்தால் செய் உதவி சிறிதெனினும் ஞானத்தில் மாணல் பெரிது„ வள்ளுவப் பெரும்தகையின் திருக்குறள் போதிக்கும் விடையம் இது. உதவிகளைப் பொறுத்தவரை அவை புரியப்படும் காலத்தைப் பொறுத்தே பெறுமதி மதிப்பிடப்படுகிறது. அந்த வகையில் எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு “ஞானத்தில் மாணல் பெரிது” என்னும் அளவில் பங்களிப்பை வழங்கிய நாட்டுப்பற்றாளர் உயர்திரு அம்பலவாணர் குமாரவேலு ஆசிரியர் அவர்கள் எம்மால் என்றும் நினைவு கூறப்படவேண்டியவர். இன்று எமது தேசிய விடுதலைப் போராட்டத்தில் 18000க்கு மேற்பட்ட மாவீரர்கள் வீரச்சாவடைந்துள்ளனர். பல்லாயிரக் கணக்கானோர் போராளிகளாக உள்ள…
-
-
- 1 reply
- 1.4k views
-
-
கேணல் கிட்டு உட்பட பத்து வேங்கைகளின் 19ம் ஆண்டு நினைவு நாள் 16.01.2012 http://www.eeladhesa...ndex.php?option தமிழ் ஈழம் என்ற உயரிய இலட்சியத்துக்காக கிட்டுஅண்ணா உட்பட தம் இனிய உயிர்களை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு வீரவணக்கம். http://youtu.be/oODsLTp3jOk
-
- 12 replies
- 1.4k views
-
-
[size=3][size=4]பூநகரி கூட்டுப்படைத் தளம் மீது மேற்கொள்ளப்பட்ட தவளை படை நடவடிக்கையில் வீரச்சாவை அணைத்து கொண்ட வேங்கைளின் நினைவு நாள் இன்றாகும்.[/size] [size=4]11.11.1993 தொடங்கப்பட்ட படை நடவடிக்கையில் பூநகரி படைத்தளத்தின் பெரும் பகுதி விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு தகர்த்து அழிக்கப்பட்டதுடன் பெருந்தொகையான போராயுதங்களும் வெடி பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இந்த வெற்றிகர சமரில் லெப்.கேணல் குணா, லெப்.கேணல் நவநீதன், லெப்.கேணல் அருணன்(சூட்), லெப்.கேணல் அன்பு, லெப்.கேணல் பாமா, கடற்கரும்புலிகள் மேஜர் கணேஸ்(குயிலன்), மேஜர் கோபி(குமணன்) உட்பட 460 வரையான போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். பலாலி படைத்தளத்திலிருந்து பூநகரியில் தாக்குதலுக்க…
-
-
- 11 replies
- 1.3k views
- 1 follower
-
-
லெப். கேணல் நாகதேவன் பன்முகத் திறன்கள் கொண்ட லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப். கேணல் நாகதேவன். “நவம்பர்” என்று போராளிகளால் அன்போடு அழைக்கப்பட்ட நாகதேவன், யாழ். மாவட்டம் மானிப்பாய், கட்டுடை கிராமத்தில் பிறந்தார். கெங்காரட்ணம் ரமேஸ் என்ற இயற்பெயரைக் கொண்ட நாகதேவன் தனது ஆரம்பக் கல்வியை கட்டுடை சைவ வித்தியாலயத்தில் பயின்றார். தொடர்ந்து மானிப்பாய் இந்து கல்லூரியில் கல்வி கற்றார். பின்னர் தமிழீழ விடுதலைக்காகப் போராடும் உயரிய நோக்குடன் 1993ம் ஆண்டு ஆரம்பத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். க.பொ.த. சாதாரண தர கல்வியை முடித்துக் கொண்டு இயக்கத்தில் இணைந்த கெங்காரட்ணம் ரமேஸ் படைய தொடக்கப் பள்ளியில் தனது ஆரம்பப் ப…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிங்கள பேரினவாத அரசானது கடல்கடந்து தமிழ் மக்கள் மீது, தமிழீழ விடுதலைக்காக உழைத்தவர்கள் மீது தனது கொலைவெறியினை ஏற்படுத்தி மக்களின் மனதில் பயத்தினை உண்டு பண்ணும் வகையில் சிறீலங்கா அரசின் கைக்கூலிகளின் படுகொலைக்கு உள்ளான லெப். கேணல் நாதன், கப்ரன் கஐன் ஆகியோரது 16 வது ஆண்டு நினைவு வணக்கம் பிரான்சில் ஒபவில்லியே என்னும் இடத்தில் அவர்கள் துயில் கொள்ளும் துயிலும் இல்லத்தில் 26.10.2012 வெள்ளிக்கிழமை இன்று பிற்பகல் 15.30 மணிக்கு பிரான்சு வாழ் தமிழீழ மக்களால் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இவ் வணக்க நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் திரு. த. சத்தியதாசன் அவர்கள் ஏற்றிவைத்தார். மாவீரர்களுக்கான ஈகைச்சுடரினை மாவீரர் 2ம் லெப். குழலினியின் சகோதரரும், கப…
-
- 5 replies
- 1.3k views
-
-
-
- 3 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் எழில்கொஞ்சும் அழகிய கிராமங்களில் ஒன்றான சித்தாண்டி மண்ணில் மோகனசுந்தரம் (மோகன்) என்ற இயற்பெயரை கொண்ட ஆட்சி நம்பி பிறந்தான் காசுபதி அவர்களின் கடைசி மாகனான மோகான் வீட்டின் செல்லப் பிள்ளையாகவே வளர்ந்து வந்தான் ஆரம்ப கல்வியை மத்திய மாக வித்தியாலையம் சித்தாண்டியில்( m.m.v ) மேற்கொண்ட மோகன் குடும்ப கஷ்ரநிலமை காரணமாக தனது படிப்பை இடைநடுவே விட்டுவிட்டு தனுது தந்தையுடன் விவசாயம் செய்வது மாடு மேய்ப்பது என தனது தந்தைக்கு உதவியாக இருந்து வந்தான் அந்த காலகட்டத்தில் தான் வீட்டுக்கொரு போராளி தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இனையவேண்டும் என சொல்லப்பட்டது எல்லாரது வீடுகளுக்கும் கடிதங்கள் வந்தது போலவே மோகனின் வீட்டுக்கும் கடிதம் வந்தது கடிதத்த…
-
- 1 reply
- 1.3k views
-
-
நாகர்கோவில் கடற்பரப்பில் கடற்படையின் கூகர், டோறா பீரங்கிப் படகு மூழ்கடிப்பில் ஏழு கடற்கரும்புலிகளின் வீரவணக்க நாள் இன்றாகும் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில் 01-11-2008 அன்று சிறீலங்கா கடற்படையினருக்கும், கடற்புலிகளுக்கும் இடையோ ஏற்பட்ட கடற்சமரின் போது காலை 5.45 மணியளவில் நடைபெற்ற சமரின்போது கூகர் படகு ஒன்றும் டோறாப்படகு ஒன்றும் கடற்புலிகளின் கரம்புலிகளால் மூழ்கடிக்கப்பட்டுள்ளதுடன் நீரூந்து விசைப்படகு ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளதோடு ,இருபது கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர் ‘ வடமராட்சி கிழக்கில் உள்ள மணற்காட்டுக்கு நேரான கடற்பரப்பில் 01-11-2008 சனிக்கிழமை அதிகாலை 4:00 மணியளவில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்புலிகள் அணியை ச…
-
- 7 replies
- 1.3k views
-
-
சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் சிறப்புத்தளபதி லெப் கேணல் வீரமணி அவர்களின் 7 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்று 24-05-13 சாவு தயங்கிய ஒரு வீரனின் சாவு. சிங்கள படைகளின் போர்முனைத் தளங்களில் அதிகம் உயரமில்லாத மிகமிக மெலிந்த ஓரல்முகமும் மினுங்கும் கண்ணும் கொண்ட சிற்றுருவம் ஒன்று நடுநிசியில் உலாவித் திரியும். கழுத்தில் ஒரு நீள வெள்ளைப் பல்லிருக்கும். ஒருமுறை கண்டுவிட்டு மறுவேளை பார்த்தால் மறைந்துவிடும். சுட்டால் சூடுபிடிக்காது. வருவதுபோல் தெரிந்தால் பின் எப்படிப் போனதென்று தெரியாது. ஆயிரம்பேர் வைத்துத் தேடினாலும் கண்ணுக்குள் புலனாகாது. இப்படியொரு பிசாசு சிங்கள இராணுவத் தளத்தில் உலவுவதாகக் கதையிருந்தால் அதுதான் வீரமணி. வீரமணியிடம் தலைமுறை தலைமுறையாக சலிக்காது கேட்கக்கூடிய வ…
-
- 4 replies
- 1.3k views
-
-
2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும். யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜி.நடேசன் மட்டக்களப்பில் பல ஆண்டுகள் வாழ்ந்ததுடன், தென் தமிழீழ மக்கள் மீதும், அந்த மண் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டிருந்தார். நீண்ட காலம் ஊடகப் பணி செய்து அனுபவம் பெற்றிருந்த இவர், ஊடகத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றாது விட்டாலும், ஒரு முழுநேர ஊடகவியலாளன் ஆற்றும் பணிக்கு ஈடாக, அல்லது அதற்கு மேலாகவும் தனது ஊடப்பணியை செவ்வனே ஆற்றி வந்தவர். இவரது பணிக்கு சாகித்திய விருது, சிறந்த ஊடகவியலாளர் விருது (2000), ஆளுநர் விர…
-
- 11 replies
- 1.3k views
- 1 follower
-
-
இறுதிமூச்சுவரை எதிரியோடு சண்டைபிடித்துக் காட்டிய வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம்! Last updated May 14, 2020 பன்னாட்டு சதிகளும் – சிறிலங்கா இராணுவமும் இணைந்து மேற்கொண்ட தமிழின அழிப்பிற்கு எதிராக களமாடி நின்றவேளை…., சிறிலங்க இரானுவத்தின் எறிகணைத் தாக்குதலில் விழுப்புண்ணடைந்தும், முறியடிப்புத் தாக்குதல் சம்பவத்திலும் 15.05.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர்களும், முதுநிலைத் நிலை கட்டளைத் தளபதிகளுமான பிரிகேடியர் சொர்ணம், ஆகிய மாவீரரின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். திருகோணமலை எப்பொழுதும் அலை எழுந்து ஆர்ப்பரிக்கும் ஒரு அழகிய நகரம். தமிழினத்தின் தலை நகரம் என்னும் சிறப்பை பெற்று நிமிர்ந்து நிற்கிறது. இந்தத் தலை நகரந்…
-
- 1 reply
- 1.3k views
-
-
கப்டன் விக்னம் இயக்கப் பெயர்: கப்டன் விக்னம் இயற்பெயர்: கந்தையா தவராசா முகவரி: உடுத்துறை வடக்கு, தாளையடி, வடமராட்சிக் கிழக்கு, யாழ்ப்பாணம். ஈழமண்ணில்: 07.08.1968. ஈழவர் மனங்களில்: 05.08.1990. 1984ம்ஆண்டில் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் கல்விப்பொதுத்தராதர சாதாரணதரத்தில் கல்விகற்றுக்கொண்டிருந்த மாணவர்களில் அவர் ஒரு முதன்மைமாணவன். கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்துவிளங்கிய அவர் அன்றையநாட்களில் உடுத்துறை மகா வித்தியாலயத்தில் தனக்கென ஒரு இடத்தைப்பதித்திருந்தார் என்றால் அது மிகையாகாது. தமிழீழ இலட்சியத்தை வரித்துக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் இராணுவரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் முனைப்புப்பெற்ற 1984-ம்ஆண்டு ஒக்டோபர்மாதத…
-
-
- 4 replies
- 1.3k views
-
-
லெப். கேணல் சந்தோசம் லெப். கேணல் சந்தோசம்: ஒரு முன்னுதாரணமான போராளி. இரட்டை இலக்கத்தில் அங்கத்தவர்களைக் கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கம் விளங்கிய காலத்தில் தாக்குதல்கள் பற்றிய திட்டங்கள் போடப்படும்போது குண்டு வீசுவது என்ற பொறுப்பு சந்தோசத்திற்குதான். வெடிமருந்துகள், இயக்கத்தின் நிதி வசதி இவை மிகக் குறைவாக இருந்த காலம் அது. வீசப்படும் ஒவ்வொரு குண்டுகளுக்கும் நிறையப் பலன் எதிர்பார்க்கப்பட்டது. ஆகவே நிதானமாகச் சரியாகக் குண்டு வீசுவதற்குப் பொருத்தமான ஆளாகச் சந்தோசந்தான் பதிவு செய்யப்பட்டான். ஒவ்வொரு தாக்குதலிலும் இயக்கத்தின் எதிர்பார்ப்புக்கும் ஏற்ற வகையில் செயற்பட்டான் சந்தோசம். பின்னர் கண்ணிவெடியை சரியாகக் குறிதவறாது வெடிக்க வைப்பதற்குரிய நபராவும் தேர்ந்தெடுக்க…
-
- 2 replies
- 1.3k views
-
-
26.06.2000 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா படையினரின் “உகண” ஆயுதக் கப்பலை மூழ்கடித்து காவியமான கடற்கரும்புலிகளின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். யாழ். குடாவில் நிலை கொண்டிருக்கும் படையினருக்குத் தேவையான ஆயுதங்கள் வெடிபொருட்களுடன் காங்கேசன்துறைத் துறைமுகம் நோக்கி டோறா பீரங்கிப் படகுகளின் வழித்துணையுடன் சென்ற “உகண” கப்பல் 26.06.2000ம் அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளால் வழிமறிக்கப்பட்டு தாக்குதல் தொடுக்கப்பட்டது. சுமார் எட்டு மணிநேரம் இடம்பெற்ற கடும் சமரின் நடுவே தமது வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட படகுகளால் குறித்த கப்பலை கடற்கரும்புலிகள் தகர்த்து மூழ்கடித்தனர். இதன்போது சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகு ஒன்றும் கடு…
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
1996 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளமைப்பில் இணைந்து லெப். கேணல் பொன்னம்மான் 06ல் அடிப்படைப் பயிற்சியை முடித்து கடற் புலிகளிகள் அணியில் உள்வாங்கப்பட்ட விடுதலை அதன் பின் கனரக ஆயுதப் பயிற்சிக்கு உள்வாங்கப்பட்டு கனரக ஆயுதப் பயிற்சியில் தனது திறமையான செயற்பாட்டால் பொறுப்பாளர்களின் பாராட்டைப்பெறுகிறான். இவரின் திறமையான செயற்பாடு காரணமாக இவர் அணிகள் பிரிக்கப்படும் போது கடற்புலிகளின் கடற்தாக்குதலணியான சாள்ஸ் படையணிக்குள் உள்வாங்கப்பட்டு அங்கே நடந்த பெரும்பாலான கடற்சமர்களில் அதாவது விநியோகப் பாதுகாப்புச் சமராகிலும் வலிந்த தாக்குதலாகிலும் சரி பங்குபற்றினார் விடுதலை. 1996ம் ஆண்டு தந்திரோபாயப் பின்வாங்கல் மூலம் வன்னிக்கு வந்து மரபுவழிச் சமருக்கான புதிது புதிதாக அணிகளை உருவாக்கினார் …
-
- 1 reply
- 1.3k views
-
-
ஓயாத அலைகள் – 4 படைநடவடிக்கையில் 24.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலிகள் மேஜர் சோபிதன், மேஜர் வர்மன் மற்றும் கப்டன் சந்திரபாபு ஆகியோரின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதேநாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/news/flashnews/2011/10/24/ தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதேநாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எனது வீரவணக்கங்கள்.
-
- 7 replies
- 1.3k views
-
-
திருமலை மாவட்டத்தில் காவியமான கரும்புலி கப்டன் தமிழ்க்குமரன் உட்பட்ட ஆறு மாவீரர்களினதும், யாழ். மாவட்டத்தில் காவியமான லெப்.கேணல் சிவம் உட்பட்ட 21 மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 10.09.2000 அன்று திருகோணமலை மாவட்டம் 13ம் கட்டைப்பகுதியில் சிறிலங்கா படையினர் சுற்றிவளைக்க முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் கரும்புலி கப்டன் தமிழ்க்குமரன் (சின்னக்குட்டி சதீஸ்வரராஜா - யாழ்ப்பாணம்) தென்னமரவாடிப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் கப்டன் கலையரசன் (வேலாயுதம் பிரபாகர் - கிளிநொச்சி) புல்மோட்டைப் பகுதியில் பகுதியில் இடம்பெற்ற மோதலில் லெப்டினன்ட் அரவிந்தன் (கனகராசா விவேகா - யாழ்ப்பாணம்) மொறவேவ சிறிலங்கா படையினர் மற்றும் காவல்துறையினரின் கூட்டு ம…
-
- 10 replies
- 1.3k views
-
-
ஆனையிறவு படைத்தளம் மீதான ஆகாய கடல்வெளி நடவடிக்கையின்போது தடைமுகாம் மீதான இரண்டாவது தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் சரா உட்பட்ட 69 மாவீரர்களினதும் இதேநாளில் வாகரையில் வீரச்சாவைத் தழுவிய வீரவேங்கை விவே என்ற மாவீரரினதும் 21ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஆகாய கடல்வெளி நடவடிக்கையின்போது 11.07.1991 அன்று தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு வெற்றிக் கொள்ளப்படாதிருந்த தடைமுகாம் மீது 27.07.1991 இரண்டாவது தடவையாக விடுதலைப் புலிகளால் பாரிய தாக்குதல் தொடுக்கப்பட்டது. தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நடாத்தப்பட்ட இந்த தாக்குதலில் சிறிலங்கா படையினர் பலர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்தனர். இந்த நடவடிக்கையின்போது படைத்தளம் நோக்கி முன்னகர்ந்த போராளிகளிற்கு காப்பாக விடுதலை…
-
- 13 replies
- 1.3k views
- 1 follower
-
-
''ஒரு பிச்சைக்காரனின் வயிறு, எளிய சுமை, வலிமை ஏறிய கால்கள்." ஒரு கெரில்லாப் போராளி கொண்டிருக்கவேண்டிய தகுதிகள் இவைகள்தான். உலகின் தலை சிறந்த விடுதலை வீரன் சேகுவேராவின் இதயத்திலிருந்து உதிர்ந்த வார்த்தைகள் அவை. இதை வாசிக்கும்போது என்னுள் ஓடோடி வந்தவர்களுள் நிலவனும் ஒருவன். இடுப்பில் ரவைதாங்கிக்குக் கீழே எப்போதும் கட்டப்பட்டிருக்கும் 'சறம்' ஒன்றை மட்டுமே நம்பி வன்னியின் கானகங்களுக்குள் மாதக்கணக்கில் அவன் திரிந்திருக்கிறான். விடுதலைப்போரைத் தொய்ந்துபோக விடாது மக்களைப் போராட்டத்தின்பால் அணி திரட்டிச் செல்லும் பணியில் வன்னியின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் அவன் மிதி வண்டிப் பயணம் செய்திருக்கிறான். கஞ்சியும், கத்தரிக்காயும்தான் சாப்பாடாய் இருந்த காலத்தில் கண்டதில் எல்…
-
- 8 replies
- 1.3k views
-
-
பிரபாகரன் வழங்கிய ஆவணங்களுடன் மகனைத் தேடிய தாய்: முன்னாள் போராளிகள் ஆறுதல்! தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்ட முக்கிய ஆவணங்களுடன் தனது மகனது புகைப்படத்தினைத் தாயொருவர் தேடியலைந்த சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வீரச்சாவடைந்த மாவீரர்களின் உருவப் படங்களை அவர்களது பெற்றோருக்கு வழங்கி கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்று (சனிக்கிழமை) ஜனநாயகப் போராளிகள் கட்சியினால் மட்டக்களப்பு வெல்லாவெளியில் நடத்தப்பட்டது. இதனையறிந்த மாவீரரின் தாயொருவர் வீரச்சாவடைந்த தனது மகனது பிரபாகரன் வழங்கிய முக்கிய ஆவணங்களுடன் மகனின் புகைப்படத்தைக் காண குறித்த நிகழ்விற்கு ஓடிவந்தார் அந்த வயது முதிர்ந்த தாய். இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கா…
-
- 2 replies
- 1.3k views
-
-
லெப். கேணல் சேகர் சாவுக்குள் உழைத்த வீரம் ‘சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தளபதி’ லெப். கேணல் சேகர் 1998 சுதந்திர நாளுக்குக் கிளிநொச்சியிலிருந்து கண்டி வீதியால் தலதாமாளிகைக்குப் பேரூந்து வருமென சிங்களத்து ஜெனரல் விடுத்த சவாலுக்குச் சாட்டையடியாகக் கிளிநொச்சித்தளம் மீதான பாய்ச்சலுக்குத் தலைவர் கட்டளையிட்டார். அவரின் கட்டளைக்கிணங்க மையத்தளத்தினுள் முன்னேறிய எமது போராளிகளை வீழ்த்தி எமது முன்னேற்றத்தைத் தடுத்துக் கொண்டிருந்தான் எதிரி. எதிரிக்காக எடுத்த சாட்டையின் அடி எங்கள் முதுகுகளிலேயே விழுந்து விடுமா? எதிரி கொடியேற்றும் நாளில் எங்கள் தேசியக்கொடி அரைக்கம்பத்திற் பறக்குமா? அர்த்தமற்ற உயிரிழப்புக்களுடன் நாம் தளம் திரும்ப நேருமா? தலைவன் இட்ட ஆணையை வீணேபோக…
-
-
- 1 reply
- 1.3k views
-
-
சமர்க்களங்களின் துணை நாயகன் பிரிகேடியர் தீபன்! Last updated Apr 3, 2020 கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன். தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் – கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று…
-
- 1 reply
- 1.3k views
-