Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.

  1. “ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது யாழ். நாகர்கோவில் பகுதியில் காவியமான லெப்.கேணல் சாந்தகுமாரி(ஜெயசுதா) உட்பட்ட 23 மாவீரர்களினதும், அரியாலை, கல்வயல், சாவகச்சேரி பகுதிகளில் காவியமான நான்கு மாவீரர்களினதும் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 06.10.2000 அன்று யாழ். நாகர்கோவில் பகுதியில் “ஓயாத அலைகள் - 04” நடவடிக்கையின்போது லெப்.கேணல் சாந்தகுமாரி (ஜேசுதா) (சூசைப்பமொராயஸ் ரமணி - மன்னார்) மேஜர் வேழினி (முருகையா சந்தானலட்சுமி - வவுனியா) கப்டன் அறிவொளி (தேவசகாயம் கமலதாஸ் - வவுனியா) லெப்டினன்ட் களத்தேவி (செபமாலை மரியான் நிர்மலா - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் பனிநிலா (இரத்தினம் திலகவதி - யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் ஈகைவேங்கை (தங்கவேல் பக்தகௌரி - கண்டி) 2ம் லெப்டின…

  2. [size=4]ஜெயசிக்குறு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினருடனான மோதல் மற்றும் பிற நிகழ்வுகளில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் பிரதீபராஜ் உட்பட்ட 13 மாவீரர்களின் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 03.10.1998 அன்று ஒலுமடு பகுதியில் சிறிலங்கா படையினரின் எறிகணை வீச்சில் லெப்.கேணல் பிரதீபராஜ் (பூபாலப்பிள்ளை திரேஸ்காந் - மட்டக்களப்பு) லெப்டினன்ட் இதயக்கண்ணன் (சிவலிங்கம் சாந்தலிங்கம் - மட்டக்களப்பு) லெப்டினன்ட் புண்ணியசீலன் (அருணாசலம் ஜெயகுலம் - மட்டக்களப்பு) லெப்டினன்ட் பரிதரன் (பேரின்பம் அரசரத்தினம் - மட்டக்களப்பு) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இம் மாவீரர்களினதும் ஓயாத அலைகள் - 2 நடவடிக்கையின் போது விழுப்புண்ணடைந்து இதேநாளில…

  3. கார்த்திகை 27 - மாவீரர் நாள் பிள்ளைகள் துயிலும் கல்லறைகளுக்கு நெய்விளக்கேற்றும் திருநாள். உள்ளே உடல் வியர்த்துக் கிடப்பவரை மனதால் வெளியே தூக்கி மெய் கழுவி வாசம் பூசி முத்தம் பொழிந்து மீண்டும் குழிவைப்பதான பாவனையில் சுற்றம் சூழும் பெருநாள். தெய்வங்களுக்குப் படைப்பதில்லையே தவிர வரம் கேட்டு வணங்கும் நாள். நீண்ட விதைவயலின் வரிசையில் கூடி நிற்கும் சுற்றத்துக்கு அவர்கள் குரல்கேட்கும் தினம். பத்துமாதம் சுமந்து பகலிரவாய்க் கண்விழித்து அமுத முலைகொடுத்து தூக்கிச் சுமந்தவர் முன்னே அவர்கள் விழிதிறக்கும் நாள். பெற்றவளின் முன்னே பெரிதாய் நெடிதுயர்ந்து அம்மா என அழைப்பார்கள். அந்த ஒற்றைச்சொல் போதுமே சுமந்தவள் மெழுகாய் உருக. விதைத்த…

  4. லெப்.கேணல் அகிலா - லெப்.கேணல் பௌத்திரன் நினைவு சூரியக்கதிர் நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் அகிலா மற்றும் லெப்.கேணல் பௌத்திரன் உட்பட்ட மாவீரர்களின் 24ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 30.10.1995 அன்று சூரியக்கதிர் நடவடிக்கைக்கு எதிரான சமரில் லெப்.கேணல் உருத்திரன் (உருத்திரா) சிதம்பரநாதன் கருணாகரன் சந்திவெளி, முறக்கொட்டாஞ்சேனை, மட்டக்களப்பு லெப்.கேணல் அகிலா சோமசேகரம் சத்தியதேவி கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம் ஆகியோர் உட்பட்ட போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் எமது நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

  5. லெப்.சுடரொளி (சிம்மான்) நவம்பர் 10, 2013 | ஒரு போராளியின் குருதிச் சுவடுகள். Edit Post வீட்டுக்கொரு ஆண் பிள்ளையாயிருந்தும் விடுதலையை நேசித்த வீரன். கடல் அலைகளும் அதன் நுரைகளும் கால்தடவிச் சென்றோடும் மணற்கரைகளில் சிம்மானின் நினைவுகளை காலம் எழுதிச் செல்கிறது. ஆம் அவன் பிறந்த வடமராட்சி கிழக்கு சிம்மானின் வரலாற்றாலும் தனது வீரத்தை நிரப்பியிருக்கிறது. கடலோரக் கிராமத்தில் பிறந்தவன் அந்தக் கரைகளில் காலாற நடந்தவன் கடுமையான போராட்ட வாழ்வை நேசித்தானென்பது வியப்புக்குரியதே. ஓவ்வொரு வீரனின் இயல்பான வாழ்வினுள் ஒரு பெரிய வரலாறே புதைந்து கிடப்பதை அவர்களோடு வாழ்ந்தவர்களால் மட்டுமே அறியவும் ஆழமாய் உணரவும் முடியும். அத்தைகயவனாய் தான் சிம்மான் என்னோடு அறிமுகமானான். 1989ம் …

    • 0 replies
    • 908 views
  6. உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் கேணல் சாள்ஸ்.! Last updated Jan 5, 2020 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ் சாள்ஸ் உண்மையில் எல்லோருக்கும் தெரியாத ஒருவர். ஆனால் எதிரிக்கு இவரை நன்கு தெரியும். கடந்த காலங்களில் பல வரலாற்றுத் திருப்பங்களை ஏற்படுத்திய பல வெற்றிகரமான தாக்குதல்களை தெற்கில் தளம் அமைத்து வழிநடத்திய தளபதி. யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த கேணல் கிட்டண்ணாவின் நிர்வாகத்தின் கீழ் குடாநாட்டுப் படையினர் முகாம்களுக்கு முடக்கம் காண வைக்கப்பட்ட போது பாடசாலையயில் கல்வி பயின்று கொண்டு பகுதி நேரமாக பருத்தித்துறை காவலரணில் காவலிற்காக வந்து நின்றவர் தான் சாள்…

  7. பிரிகேடியர் சொர்ணம் - உதிக்கும் திசையில் உதித்த ஆதவன் இரத்தினம் கவிமகன் தமிழீழத்தின் தலைநகரில் தொடங்கிய 5 ஆம் கட்ட ஈழ யுத்தம் மணலாறு காட்டிடை மேவிய தளபதி பிரிகேடியர் சொர்ணம் தமிழீழத்தின் தலைநகரில் தொடங்கிய 5 ஆம் கட்ட ஈழ யுத்தம் மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம் என்று விரிந்து மணலாறு மண்ணிலும் தரித்து நின்ற காலம் அது. அந்தக் காலத்தின் ஒரு நாளில் தாயக தேசத்தை மூடி நின்ற வானம் இருண்டு போய்க் கிடக்கிறது. வானத்திற்கு வெளிச்சமூட்ட முனைந்து தோற்றுப் போன நிலையில் தன்னை முகில் கூட்டங்களுக்குள் மறைத்து மறைத்து எட்டிப் பார்க்கிறது தேய்பிறை. அந்த அழகை ரசித்தபடி நிற்கிறார்கள் சோதியா படையணியின் பெண் போராளிகள். அவர்களின் கரங்கள் திடமாக பற்றி இருந்த துப்பாக்…

  8. முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கையில் 21.07.1996 அன்று வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் மிதுபாலன் மற்றும் கப்டன் சயந்தன் உட்பட்ட 12 மாவீரர்களின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீதான ஓயாத அலைகள் நடவடிக்கை தொடங்கப்பட்டு படைத்தளத்தின் பெரும்பகுதி மீட்கப்பட்ட நிலையில் இந்நடவடிக்கையை முறியடிக்கவும், இழந்த தளத்தை மீளக் கைப்பற்றவும் சிறிலங்கா கடற்படையினரால் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட படையினரால் முல்லைத்தீவுதளம் நோக்கி பாரிய முன்னகர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்க மேலதிக தரையிறக்கும் முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா…

  9. தாயக விடுதலையென்ற உயரிய இலட்சியத்திற்காக அயராது உழைத்த இலட்சிய வீரர்கள் தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம். 04.11.1996 பாரிஸ் நகரில் உள்ள விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அனைத்துலகத் தலைமைச் செயலகத்தில் முக்கிய பணியாளர்களாகப் பணிபுரிந்த திரு.கந்தையா பேரின்பநாதன் (நாதன்) திரு. கஜேந்திரன் (கஜன்) ஆகிய எமது உறுப்பினர்கள் இருவர் பகைவனின் சூழ்ச்சியால் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வை அறிந்து நான் ஆழ்ந்த கவலையும் வேதனையும் அடைகின்றேன். திரு. நாதன் எமது விடுதலை இயக்கத்தின் ஒரு மூத்த உறுப்பினர் நேர்மையும் கண்ணியமும் மிக்கவர். விடுதலை இலட்சியத்தில் அசையாத உறுதி கொண்டவர். நீண்ட காலமாக சர்வதேச நிதி திரட்டும் பெரும் பொறுப்பைச் சுமந்து உலக…

  10. தலைவரையும் , தமிழர்களையும் உயிருக்கும் மேலாக நேசித்த லெப் கேணல் சரிதா .! On Jun 8, 2020 மன்னார் பாலம்பிட்டிக் களமுனை மிகக் கடுமையாகவும் ஆக்ரோசமகவும் இருந்தது. சிங்கள படைகளின் எறிகணைகள் மழைபோல் பொழிந்த வண்ணம் இருந்தன கொத்துக்குண்டுகளுக்கும் குறைவில்லை. எங்கும் புற்றீசல்கள் போல படையினர் சளைத்திடாத தமிழீழத்தின் மகளிர் படையணியான . மேஜர் சோதிய படையணி பொருத்திக்கொண்டு இருந்தது. பெண்களை இளக்கமாக நினைத்த சிங்கள படைகளுக்கு அண்ணனின் புலித்தங்கைகள் சரியான படம் புகட்டிக்கொண்டு இருந்தார்கள் . குறைந்த அளவு பெண்போராளிகள் பலநூறு இராணுவத்துடன் போர்புரிந்துகொண்டு இருந்தார்கள். நேரம் சென்றுகொண்டு இருந்தது படைகளுக்கு சாதகமாக மாறிக்கொண்டு இருந்தது . அக்கா!… அல்பா பகுதியை உடைச்…

  11. வீரத்தின் சிகரங்கள் நவம்பர் 5, 2020/தேசக்காற்று/தேசத்தின் புயல்கள்/0 கருத்து இவைகள் ஒரு சாதாரண வீரனால் செய்யப்பட முடியாதவை. இதைச் செய்வதற்கென்றொரு ஆன்மீகப்பலம் தேவை. தன்னை அழித்துக்கொள்ள தயாரான மனோதிடம் தேவை. தனது இறுதி நேரத்திலும் கூட பதற்றமின்றி, உறுதியுடன், குறிபிசகாது எதிரியைத் தேடியோடும் வீரம் தேவை. விரக்தி காரணமாகவோ, முட்டாள்தனமாகவோ தன்னை அழித்துக்கொள்ள முனையும் தற்கொலை முயற்சியை போலல்ல இது. அல்லது எதிரியின் கண்ணோட்டத்தின் படி கொடூரம் மிக்கதும் மானிட இனமாக இல்லாததுமான ஒரு பூதம் அல்ல இது: அடிமைப்பட்டுக் கிடக்கும் ஒரு தேசிய இயக்க சக்திக்கு உந்துவிசையாக விளங்கும் உயரிய போர்வடிவம் தான் எங்களது கரும்புலிகள். உலகின் எந்த ஆயுதங்களாலும…

  12. 19.09.1994 அன்று “சாகரவர்த்தனா” போர்க்கப்பல் மூழ்கடித்து வெற்றிக்கு வித்திட்ட மறவர்கள் நினைவில் கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி, கடற்கரும்புலி மேஜர் மங்கை, கடற்கரும்புலி கப்டன் வாமன், கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் வீரவணக்க நாள் இன்றாகும். மன்னார் மாவட்டம் கற்பிட்டிக் கடற்பரப்பில் 19.09.1994 அன்று சிறிலங்கா கடற்படையில் “சாகரவர்த்தனா” போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட “கடற்புலிகளின் மகளிர் சிறப்புத் தளபதி” கடற்கரும்புலி லெப். கேணல் நளாயினி, கடற்கரும்புலி மேஜர் மங்கை, கடற்கரும்புலி கப்டன் வாமன் / தூயமணி, கடற்கரும்புலி கப்டன் லக்ஸ்மன் / இசைவாணன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 27 ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகு…

  13. இலக்குத்தவறாத இலட்சியப்பயணத்தில் மேஜர் வேணுதாஸ் 28வது ஆண்டு நினைவு ( 11.12.2019 ) மீள் பதிவு பொன் . வேணுதாஸ் அவர்களைப்பற்றி நாம் எழுதமுனையும் பொழுது மட்டக்களப்புப்பற்றியும் மாவட்ட அரசியல்பற்றியும் எழுதுவது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். அன்னியர் ஆதிக்கத்தால் இழந்துபோன ஈழத்தமிழருக்கான இறமையுள்ள தாயகத்தை இலங்கையின் வடகிழக்கே நிறுவவேண்டுமென்ற இலட்சியத்தை சொல், செயல், சிந்தனை மூலம் பள்ளிப்பருவத்திலிருந்து ஆரம்பித்த இவருடையபணி எமது தேசிய விடுதலை இயக்கத்திற்கு நீண்டகால ஆதரவாளராக செயல்பட்டவர்கள் என்றவரிசையிலும் உள்ளடக்கப்படுகின்றது. கிழக்கு மாகாணம் என்றழைக்கப்படுகின்ற தென்தமிழீழம் மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தமிழர்நிலமாகும். 1948 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிங்க…

  14. திருகோணமலை துறைமுகக் கடற்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகள் மேஜர் ஓசையினியவன் மற்றும் கப்டன் பொறையரசு ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 15.09.2001 அன்று திருகோணமலை துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிக் கலம் மீதான தாக்குதலின்போது கடற்கரும்புலி மேஜர் ஓசையினியவன் இரத்தினம் ராஜ்குமார் அரியாலை, யாழ்ப்பாணம் கடற்கரும்புலி கப்டன் தமிழினியன் (பொறையரசு) செல்வரத்தினம் யோகேஸ்வரன் நெளுக்குளம், வவுனியா தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

  15. இம்மறவனைப் பற்றி எனக்கு ஏதும் தெரியாது.. வேசுபுக்கில் மேய்ந்து கொண்டு போகும்போது இவந்தொடர்பாய் கிடைத்த வைரத்திற்குச் சமனான ஒரு தகவலை இங்கே பதிந்து செல்கிறேன். இவர் கரும்புலிகளைப் பற்றி எடுக்கப்பட்ட திரைப்படமான 'உயிரம்புகள்' இல் ஒரு கரும்புலியாய் வேடம் ஏற்று நடித்தவர் ஆவார்.. ஆனால், பின்னாளில் உண்மையிலேயே ஒரு மறைமுகக் கரும்புலியாகி காற்றோடு கலந்துவிட்டான். என்றென்றும் வாழ்வாய், தமிழர் மனங்களில்!

  16. 18.07.1996 அன்று முல்லைத்தீவு படைத்தளம் மீது மேற்கொள்ளப்பட்ட || ஓயாத அலைகள் – 1 || படை நடவடிக்கையில் முதலாம் நாள் சமரில் வீரகாவியமான லெப்.கேணல் சுதர்சன் உட்பட்ட 158 மாவீரர்களின் 17 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஓயாத அலைகள் – 1 என்ற பெயர் சூட்டப்பட்டு தொடங்கப்பட்ட இந்த படை நடவடிக்கையில் முல்லைத்தீவு சிறிலங்கா படைத்தளம் முற்றாகத் தாக்கியழிக்கப்பட்டது. இதன்போது ஆயிரத்திற்கும் அதிகமான சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டனர். ஆட்டிலறிப் பீரங்கள் இரண்டு உட்பட பலகோடி ரூபா பெறுமதியான போர் கருவிகள் மீட்கப்பட்டன. இந்த நகர்வை முறியடிக்கும் நோக்கில் அலம்பில் பகுதியில் தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படையினரின் நகர்வும் முறியடிக்கப்பட்டு சிறிலங்கா படைத்தரப்பிற்கு பேரிழப்பு ஏற்படுத்தப்பட…

  17. இருவரும் பெண்கள். இருவரும் இலங்கையர்.ஒருவர் தமிழ் இனத்தைச் சேர்ந்த இசைப்பிரியாஇன்னொருவர் சிங்கள இனத்தைச் சேர்ந்த மன்னம்பெரி இருவரும் பயங்கரவாதிகள் என கூறப்பட்டு கொல்லப்பட்டனர். இருவரும் அரச படைகளால் பாலியல் வல்லறவு செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். ஒருவர் 1971ல் வீட்டில் இருந்தபோது இழுத்துச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார். இன்னொருவர் 2009ல் சரணடைந்த பின்பு அரச படையால் கொல்லப்பட்டார். நிராயுதபாணியாக இருந்தவர்களை அதுவும் பெண்களை கொல்வது தவறு இல்லையா என்று கேட்டபோது ஆம். அவர்கள் பயங்கரவாதிகள் எனவே அவர்களை கொல்வது நியாயமே என்றார்கள். சரி. அதற்காக பாலியல் வல்லுறவு செய்து கொல்வது எப்படி நியாயமாகும் என்று கேட்டால் அது சில கட்டுப்பாடற்ற படையினரின் செயல். அதை விசாரித…

  18. மட்டக்களப்பு அம்பிலாந்துறை சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படை முகாம் மீதான தாக்குதலின்போது காவியமான 27 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். மட்டக்களப்பு மாவட்டம் அம்பிலாந்துறைப் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படைமுகாம் மீது 24.08.1995 அன்று விடுதலைப் புலிகளால் தாக்குதல் நடாத்தப்பட்டு படைத் தரப்பிற்கு பலத்த அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன. இத்தாக்குதலின்போது 27 போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு: மேஜர் கதிரேசன் (ஜோன்சன்) (காசிபதி கமலநாதன் - சல்லிதீவு, அம்பாறை) லெப்டினன்ட் சுரேந்தர் (செல்வராசா சங்கர் - கரடியனாறு, மட்டக்களப்பு) லெப்டினன்ட் முகுந்தராஜ் (கருவல்தம்பி காங்கேயன் - செங்கலடி, மட்டக்களப்பு) ல…

  19. “ரங்கண்ணையைப் போல கரும்புலியாகத்தான் போவன் கரும்புலி மேஜர் குமலவன் .! கரும்புலி மேஜர் குமலவன் வீரவணக்க நாள் இன்றாகும். ‘ஓயாத அலை 03’ நடவடிக்கையின் போது 22.05.2000 அன்று யாழ். மாவட்டம் புத்தூர் பகுதியில் நடைபெற்ற கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் குமலவன் / லவன் ஆகிய கரும்புலி மாவீரரின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ”அம்மா இனி இருக்கேலாது, நான் இயக்கத்திற்குப் போகப்போறன்” என்று மகன் சொன்னபோது அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவன் இப்படித்தான் அடிக்கடி விளையாட்டாகச் சொல்லுவான். பின் அம்மாவையே கட்டிப்பிடித்துக் கொண்டு சிரிப்பான். அம்மாவிற்கு பிள்ளை தன்னைவிட்டுப் போய்விடான் என்ற நம்பிக்கை. சிரித்தாள். பாவம் – அன்று அவன் முகத்த…

  20. தமிழீழ விடுதலைப் போரில் ஓராண்டுக்குள் தம்மை ஆகுதியாக்கிய லெப்டினன்ட் இன்பமுதன், லெப்.கேணல் தேவநேயன், கப்டன் வளவன் ஆகிய உடன்பிறப்புக்களில் முதலாவதாக வீரச்சாவை அணைத்துக் கொண்ட லெப்டினன்ட் இன்பமுதனின் 14ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். [size=2][size=4]தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு மாவீரர்கள் கணிசமானோர் வீரச்சாவைத் தழுவியுள்ளனர். இரண்டிற்கும் மேற்பட்ட மாவீரர்களைக் கொண்ட குடும்பங்கள் மிகச் சிறிய எண்ணிக்கையே. இவர்களில் வடமராட்சி கிழக்கு, ஆழியவளைச் சேர்ந்த லெப்டினன்ட் இன்பமுதன், லெப்.கேணல் தர்சன் மற்றும் கப்டன் வளவன் ஆகியோரின் குடும்பமும் அடங்கும் இவ் உடன்பிறப்புக்கள் மூவரும் ஓராண்டிற்குள்ளாகவே தாயக விடுதலைக்கான கடமையின்போது தம்மை ஆகு…

  21. ஈழத்தின் வன்னிப்பகுதியில் அரசாட்சி செய்தவன்தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னிமையின் இறுதி மன்னன். யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்டபின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது. தமிழரின் இறைமை முற்றுமுழுதாகப் பறிபோனது பண்டாரவன்னியனின் வீழ்ச்சியோடுதான். முன்பு, பண்டார வன்னியனின் நினைவுநாளாக வேறொரு நாள்தான் நினைவுகூரப்பட்டு வந்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு எனும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு. வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் ‘பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான்’ எனும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. அதில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமா…

  22. Started by அறிவிலி,

    இரண்டரை வருசத்துக்கு , முன்னாடி எல்லாம் , மாவீரர்கள்னா ஒரு , பயம் இருக்கும், கவலை இருக்கும்,,, அழுகை இருக்கும்! இப்போ அதெல்லாம் இல்ல,,, ஓடிப்போன குதிரைகள் இனி திரும்பிவராது எங்கிற , தைரியத்தில் , போறவன் வாறவன் எல்லாம்............ அத வளர்த்தது , நான் தான் எங்கிற ,, காமெடி பீசுகள் கைல சிக்கிகிட்டது அவர்கள் வரலாறு! அனைத்தையும் இழந்து , எங்களுக்காய் ,,, புலியாய் செத்தவனுக்கு ,, எல்லாவற்றையும் வைத்திருக்கும் , இந்த புண்ணாக்கு கூட்டம் , ஒற்றுமையாய் அஞ்சலி செய்ய தயாரில்லை! மாவீரர் கல்லறைகளை புல்டோசர்கொண்டு கிளறி எடுத்து , எப்பவோ செத்து புதைக்கப்பட்ட , அவர்கள் எலும்புக்கூடுகளை , தெருவோரம் வீசிய சிங்களவன்... எங்களைவிட ஆயிரம் மடங்கு நல்லவ…

  23. படைத்துறை வரைபடத் தளபதி பிரிகேடியர் சசிக்குமார்! பன்னாட்டு சதிகளும் – சிறிலங்கா இராணுவமும் இணைந்து மேற்கொண்ட தமிழின அழிப்பிற்கு எதிராக களமாடி நின்றவேளை…., சிறிலங்க இரானுவத்தின் எறிகணைத் தாக்குதலில் விழுப்புண்ணடைந்தும், முறியடிப்புத் தாக்குதல் சம்பவத்திலும் 15.05.2009 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த உறுப்பினர் படைத்துறை வரைபடத் தளபதி பிரிகேடியர் சசிக்குமார் ஆகிய மாவீரரின் 11ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ விடுதலைப்புலிகளின் முதன்மைத் தளபதிகளில் ஒருவராக விளங்கிய சசிக்குமார் “சசி மாஸ்டர் “என்று அழைக்கப்படும் பிரிகேடியர் சசிக்குமார் அவர்கள், 15.05.2009 …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.