மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
மட்டக்களப்பு பெற்ற லெப்கேணல். சித்தா மாஸ்டர் 20ம்ஆண்டு நினைவு நாள் மட்டக்களப்பு மாவட்டத்தின் விடுதலைப்புலிகளின் தளப்பகுதி. அடிப்படைப் பயிற்சி முகாம் ஒன்று நிறைவடைந்து புதிய போராளிகள் பல்வேறு முகாம்களுக்கும் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். அத்தகைய வேளைகளில் இயல்பாகக் காணப்படும் புத்துணர்வும், கலகலப்பும் அவர்களின் முகங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆயினும் எமது முகாமிற்கு வரவிருந்த புதிய போராளிகள் அநேகரின் முகங்களில் ஒருவகையான கலக்கத்தை அவதானிக்க முடிந்தது. காரணத்தை ஊகிப்பது அவ்வளவு கடினமல்ல. படைத்துறைப் பயிற்சிப் பிரிவாக செயற்பட இம் முகாம் சற்று வேறுபாடானதுதான். மிகக் கடுமையான விதிமுறைகளுக்கும், விசித்திரமான தண்டனைகளுக்கும் பெயர் பெற்றது. அதேவேளை ஆற்றல்…
-
- 0 replies
- 739 views
-
-
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு - பிரான்சின் மூத்த செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான அலெக்ஸாண்டர் பவுஸ்ரின் அவர்களுக்கான நாட்டுப்பற்றாளர் மதிப்பளித்தல் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள்
-
- 4 replies
- 596 views
-
-
விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் - அரசியல்துறை பொறுப்பாளர் பா.நடேசன் மற்றும் அவருடைய காதல் மனைவி வினிதா சமரசிங்க குணசேகர பற்றி நிசங்க கட்டுகம்பொல (Nissanka Katugampola) என்ற சிங்கள நண்பர் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு மே மாதம் 17 ஆம் திகதிக்கு அண்மித்த நாளொன்றில் நடேசன் படுகொலை செய்யப்பட்டபோது வினிதா, நடேசன் மீது கொண்ட காதலுக்காகத் தன்னைத் தியாகம் செய்தாள் என்ற தொனியில் அவருடைய பதிவு அமைந்துள்ளது. இவர்களுடைய சிறந்த காதல் கதையை எதிர்காலச் சந்ததிக்கு எழுதி வைக்க வேண்டாமா என்று மற்றொரு சிங்கள நண்பரிடம் இவர் கேள்வி தொடுத்துள்ளார். தமிழ் மொழி பெயர்ப்பு வருமாறு... அற்புதமான, அன்பான இந்த காதல் ஜோடியை நாங்கள் முதன் முதலில் 1993 ஆம் ஆண்டு ஒக்டோபர்…
-
- 0 replies
- 290 views
-
-
[size=4]திருமலை பள்ளித்தோட்டம் பகுதியில் இராணுவத்துடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலின் போது வீரசவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன் மற்றும் மட்டக்களப்பு நகர் பகுதியில் சிறீலங்கா படைகளுடன் இணைந்து செயல்ப்பட்ட தேசத்துரோகிகள் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் உதயகீதன் ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் [/size] [size=4]தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்[/size] http://www.facebook.com/karumpulimaveerarkal
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
🕯️ ஒவ்வொரு ஆன்மாவுக்கும் ஒரு தீபம் / “A Lamp for Every Soul” ஓ… முள்ளிவாய்க்கால் ஆன்மாக்களே காற்றில் அலையும் ஜீவன்களே அலைகளுடன் நகரும் மென்மையானவர்களே உங்களின் முன் தலை குனிந்து வணங்குகிறோம்! உங்கள் துன்பம் மறக்கமுடியாதது உங்கள் பெயர்கள் மறையமுடியாதது உங்கள் கனவுகள் எங்களால் வாழட்டும்! குழந்தைகளைப் பாதுகாத்த தாய்மார்களுக்கும் கதிரவனைக் காணாத குழந்தைகளுக்கும் நம்பிக்கையை மட்டுமே சுமந்த இளைஞர்களுக்கும் நாங்கள் இந்த தீபத்தை ஏற்றுகிறோம்! உங்களை கைவிட்ட உலகிற்கு இந்த தீபம் வழிநடத்தட்டும்! நாங்கள் வழங்க முடியாத பாதுகாப்பை அமைதி சூழ்ந்து கொடுக்கட்டும்! முள்ளிவாய்க்காலின் ஆன்மாக்களே நாங்கள் உங்களைப் போற்றுகிறோம் உங்களுக்காகப் பேசுகிறோம்! ஒவ்வொரு தீபத்திலும் …
-
- 0 replies
- 216 views
-
-
விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் படையணியில் அங்கம் வகித்த ஒவ்வொரு உறுப்பினர்களிடமும் கடற்புலிகளின் மகளீரணியின் சிறப்புத் தளபதியாகவிருந்த பூரணியக்காவைப் பற்றி ஏதொவொரு நினைவுகள் அலைபாய்ந்து கொண்டேயிருக்குமென நம்புகின்றேன். விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் படையணியானது பல தாக்குதல் அணிகளையும் பல நிர்வாக அணிகளையும் தன்னகத்தே கொண்ட ஒரு பெரும்படைக் கட்டமைப்பாகும். இங்கு அனைத்து அணிகளிலும் மகனார் மற்றும் மகளீர் ஆகிய இருபாலாரும் இணைந்தே களப்பணிகள் மற்றும் நிர்வாகப்பணிகள் ஆகியவற்றை முன்னெடுத்திருந்தனர். அந்தவகையில் பூரணியக்கா தான் வகிக்கின்ற பொறுப்பு நிலைகளுக்கு அப்பால் ஒவ்வொரு போராளிகளிடமும் ஒரு நல்ல அக்காவாக தனது வயதில் மூத்தவர்களிடம் ஒரு நல்ல தங்கையாக இடம்பிடித்துக்கொண்டார் என்று கூ…
-
- 0 replies
- 519 views
-
-
மன்னார் மாவட்டம் பெரியமடுவை சொந்த ஊராகக் கொண்ட தென்னரசன் 1994ம் ஆணடு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்து கொண்டான். படைய தொடக்கப் பள்ளியில் அடிப்படை பயிற்சியை முடித்த தென்னரசன் மன்னார் மாவட்ட படையணியில் இணைக்கப்பட்டான். வேவுப் புலியாக தனது களச் செயற்பாடுகளைத் துவங்கிய இளம் போராளி தென்னரசன் மன்னார் பகுதியில நிலைகொண்டிருந்த எதிரியின் தளங்களுக்குள் தனது குழுவை இலகுவாக அழைத்துச் சென்று ஏராளமான தரவுகளை சேகரித்து வந்தான். இவனுடைய நுண்ணறிவு, பொறுமை, திசைகாட்டி மற்றும் வரைபடங்களை சரியாக பயன்படுத்தும் திறன், காடுகளில் விரைவாக நகரும் திறன் ஆகியவற்றால் தனது சக வேவுப் போராளிகளுக்கு சிறந்த முன்னுதாரணமான வேவு வீரனாக தென்னரசன் வளர்ந்தான். சுமார் இரண்டு வருடங்கள் தொடர்ச்சிய…
-
- 0 replies
- 390 views
-
-
11.09.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக்கொண்ட லெப்.கேணல் எழில்வேந்தன், லெப்.கேணல் வேங்கை, லெப்.கேணல் திருவருள் உட்பட்ட கடற்புலிகள் மற்றும்லெப்.கேணல் தமிழ்மாறன்(கஜேந்திரன்) ஆகியோரினதும் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். http://www.tamilthai.com/?p=26450
-
- 6 replies
- 1.6k views
-
-
சிறுத்தையணியில் சீற்றமுடன் பகையளித்து நின்ற லெப்.கேணல் வானதி.! Last updated Mar 20, 2020 விடுதலைப் போராட்ட வரலாறுகளில் முதன்மையான தமிழீழ விடுதலை போராட்டமானது தன்னகத்தே பெரும் போராளிகள் மக்களின் தியாகங்களை சுமந்த வலராறுகள் நாம் அறிவோம். ஆனாலும் மறைமுக கரும்புலிகள் போராளிகளிகளின் உள்ளுணர்வுகளும் தியாகங்களும் பலரது மனங்களுள்ளே மறைந்து போகிறது ஆனாலும் அவர்களின் வாழ்வும் மண்ணிற்க்காய் தம்மை அர்ப்பணித்த தற்க்கொடையும் எம்மையெல்லாம் எம் இலக்கு நோக்கிய பயணத்தில் உந்தி தள்ளும் விசையாக செயற்பட ஏதுவாகிறது. தாயக களங்களில் சமர்களிலெல்லாம் போராளிகளின் தன்னலமற்ற செயற்பாடுகளே வெற்றிகளை எமதாக்கியது. குடும்ப வாழ்வில் இணைந்த பெண் போராளிகளாயினும் போராட்ட வாழ்வின் முன்னுத…
-
- 3 replies
- 1.3k views
-
-
எழுத்துருவாக்கம்: குணா ஜெயசிக்குறு இராணுவநடவடிக்கைக்கு எதிரான மறிப்புச் சமரை படையணிகள் நடாத்திக்கொண்டிருந்த அதேவேளை அந் நடவடிக்கைக்குத் தேவையான பொருட்களை தலைவர் அவர்களின் நீண்டகாலத் திட்டத்தின் அடிப்படையிலும் தலைவர் அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் கடற்புலிகளின் விநியோக அணிகள் செயற்பட்டுக் கொண்டிருந்தவேளையில் அதாவது 01.05.1999 அன்று முல்லைத்தீவுக் கரையிலிருந்து லெப் கேணல் தர்சன் அவர்கள் தலைமையிலான படகுத் தொகுதி 110கடல்மைல்களுக்குச் சென்று கப்பலில் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தவேளையில், 55 கடல்மைல் தூரத்தில் இலங்கைக் கடற்படையின் டோறாப் பீரங்கிப் படகுகள் வழிமறிக்கமுற்பட்ட வேளையில் அக்கடற்படையினருடன் சண்டையிட்டு வந்து கொண்டிருந்த அதே சமயம் தளபதி நி…
-
- 0 replies
- 469 views
-
-
18.02. அன்று வீரச்சாவடைந்த இம் மாவீரர்களின் நினைவு நாள் இன்றாகும். http://www.eeladhesa...=3945&Itemid=53 http://www.eeladhesa...=3947&Itemid=53 http://www.eeladhesa...=3946&Itemid=53 http://www.eeladhesa...=3948&Itemid=53 தமிழீழ தாயக விடியலுக்காய் தங்களது இன்னுயிர்களை ஈகம் செய்த இம் மானமா வீரர்களுக்கும் இதே நாளில் வீரகாவியமாகிய அனைத்து மாவீரர்களுக்கும் ஈழதேசம் தனது வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறது. http://www.eeladhesa...ndex.php?option தமிழ் ஈழம் என்னும் உயரிய இலட்சியத்துக்காக தம்மை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
-
- 6 replies
- 1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறை செயலர் {தமிழீழ நிதிப் பொறுப்பாளர்} பிரிகேடியர் தமிழேந்தி அவர்களின் 07ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். பிரிகேடியர் தமிழேந்தி தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம்,(15.02.1950 – 10.03.2009) தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையை திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களிலும் போராளிகளிலும் நன்மதிப்பு பெற்றிருந்தவர். 10.03.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவடைந்தார். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் இருந்து விடுதல…
-
- 1 reply
- 1.7k views
-
-
பூனைத்தொடுவாயில் காவியமான லெப்.கேணல் வாசன், கப்டன் ஆனந்தபாபு, லெப். கெங்கன் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் காவியமான லெப். மன்மதன், வீரவேங்கை சாந்தா ஆகியோரின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 20.10.1996 அன்று முல்லை மாவட்டம் பூனைத்தொடுவாயில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் கண்காணிப்பு(ராடார்) தளத்தினை தாக்குதவற்காக தரையிறக்கப்பட்ட சிறிலங்கா படைகளின் “கொமாண்டா” அணியினருடனான மோதலின்போது லெப்.கேணல் வாசன் (தனராஜ்) (நந்தகோபால் நவநீதராஜ் - திருகோணமலை) கப்டன் ஆனந்தபாபு (கிறகோரி கிறித்துராஜா - குருநகர், யாழ்ப்பாணம்) லெப்டினன்ட் கெங்கன் (கெங்காதரன்) (மார்க்கண்டேசர் விக்கினராசா - வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட…
-
- 6 replies
- 1.2k views
-
-
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=xQTcrKhQemk
-
- 6 replies
- 1k views
-
-
கலையழகன் என நினைக்கும் போது, என்றும் மாறாத புன்னகை பூத்த முகமே எல்லோருக்கும் நினைவிற்கு வரும். கள்ளம் கபடமற்ற சிரிப்பும்எல்லோருடனும் அன்பாக, பண்பாக பழகும் தன்மையும், அனைவரையும் உபசரிக்கும் இயல்பும் அவனது இலட்சணங்கள். ஆனால் அவனுக்குள் இருந்த அற்புதமான திறமையும், ஆழமான ஆளுமையும், பன்முகத்தன்மையும் பலருக்குத் தெரியாது. குழந்தைத்தனமான முகத்திற்கு சொந்தக்காரன் பல்வேறு பொறுப்புக்களை தோளில் சுமந்து திரிந்த ஒரு அற்புதமான போராளி என்பது சிலருக்கும் மட்டும் தெரியும். தொடக்கப் பயிற்சியை முடித்துக்கொண்ட கலையழகன், 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தேசியத்தலைவர் அவர்களால் தொடங்கப்பட்ட கேணல் கிட்டு அரசறிவியல் கல்லூரி மாணவனாக இணைத்துக் கொள்ளப்பட்டான். தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு ஏற்ப அரசற…
-
- 11 replies
- 1.2k views
-
-
முதல் பெண் மாவீரர் மாலதியின் நினைவேந்தல் அனுஷ்டிப்பு! விடுதலை போராட்டத்தில் வீரச்சாவடைந்த முதலாவது பெண் மாவீரர் மாலதியின் 35 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று இடம் பெற்றது. கிளிநொச்சியில் நடைபெற்ற மாலதியின் 35 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளார். அத்தோடு அவர் வீரச்சாவடைந்த இடத்தில் நேற்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு வேலன் சுவாமிகளால் மலர்தூவி விளக்கேற்றி அஞ்சலி செய்யப்பட்டது. 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் 10ஆம் திகதி கோப்பாய் கிறேசர் வீதியில் இந்திய இராணுவத்துடனான மோதலில் அவர் வீரச்சாவடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 410 views
-
-
எந்தப்படகு வெள்ளோட்டம் விடவேண்டும் என்றாலும் முதலில் உச்சரிக்கும் பெயர் இவனுடையதுதான். மிராஜ் வகைப் படகுகள் கட்டுமானத்தில் அதன் வெள்ளோட்டத்தின்போது அதில் எத்தனை போராளிகளை ஒரேதடவையில் ஏற்றிவரமுடியும் என தலைவர் பரீட்சித்துப்பார்க்கும்படி கூறியிருந்தார்.முதலில் 30 போராளிகளை ஏற்றிக்கொண்டு ஓடிப்பார்த்து பின்னர் மேலும் முப்பது போராளிகளை ஏற்றிப்பார்த்து ஓடிய எழிற்கண்ணன் ஒரேதடவையில் ஒரு போராளி தனது உடமை மற்றும் தனது சிறியரக AK வகை ஆயுதம் உட்பட மொத்தமாக நாற்பது போராளிகளை ஏற்றியெடுக்க முடியும் என பரிந்துரைத்தான். அதுபோன்று முதன்முதலில் ஸ்ரெல்த் எனப்படும் சிறிய வேகப்படகுக்கான வெள்ளோட்டத்தை செய்து இவன் கொடுத்த தரவுகளையே தலைவருக்கு அனுப்பி வைத்தோம். அதுதா…
-
- 1 reply
- 509 views
-
-
15.11.2007 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் விடுதலை அவர்களின் 4ம் ஆண்டு நினைவு நாள் இன்று. தமிழீழ தாயக விடுதலைக்காய் தன்னை ஈகம் செய்த இந்த வீரமகளிற்கு எமது வீரவணக்கங்கள். இன்றையநாளில் களமாடி வீழ்ந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கம்.
-
- 10 replies
- 1.3k views
-
-
லெப். கேணல் பொற்கோ குறித்து பொட்டம்மான் கூறுகையில் … தளபதி லெப். கேணல் பொற்கோ பற்றி அம்மான் சொன்னது……….. லெப். கேணல் பொற்கோ சாதாரண போராளிகளை விட பல்வேறு விடயங்களில் மாறுபட்டவராக இருந்தார்” என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டம்மான் தெரிவித்துள்ளார். லெப். கேணல் பொற்கோ அவர்களின் 7 ஆம் ஆண்டு நினைவில் கருத்து பகிர்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்: “போராட்டத்தில் இணைவதற்கு முன்னர் கிறிஸ்தவ பாதிரியாருக்கான கற்கை நெறியில் பொற்கோ இணைந்திருந்தார். அநேகமாக அக்கற்கை நெறியின் நடுப்பகுதியை கடந்த நிலையில் சிங்கள அரசின் இனவெறி தாக்குதலும், 1983 ஆம் ஆண்டின் கொடூரமான இனக்கலவரமும் சேர்ந்து அவரை ஒரு தேசி…
-
- 1 reply
- 674 views
-
-
11-06-2008. அதிகாலை 5.00 மணியிருக்கும். புதுக்குடியிருப்பு- கைவேலிப்பகுதியில் அமைந்திருந்த எனது முகாம் வோக்கி “அல்பா றோமியோ……. அல்பா றோமியோ….. பப்பா சேரா……” என்று தொடர்ச்சியாக அழைத்துக்கொண்டிருந்தது. அரைத்தூக்கத்தில் படுத்திருந்த நான் வோக்கி அழைக்கும் சத்தம் கேட்டதும் அவசரமாக எழுந்து வோக்கியின் அழைப்பை ஏற்றுக்கொண்டபோது எதிர்முனையில் கடற்புலிகளின் நிர்வாகச்செயலகப்போராளி கதைத்தார். “சீர்மாறனும் இன்னும் நான்கு போராளிகளும் வீரச்சாவு. மன்னார்- எருக்கலம்பிட்டியில் எங்கடயாட்கள் நல்ல அடி கொடுத்திருக்கிறார்கள். நவீனரக ராடர்களும் ஆயுதங்களும் எடுத்திருக்கிறார்கள்.” என்றுடி கூறிவிட்டு தொடர்பை துண்டித்துக்கொண்டார் அந்தப்போராளி. இந்தத்தகவல் கிடைத்ததும் நான் உடனேயே குளித்து வெளிக்க…
-
- 0 replies
- 223 views
-
-
2009 மே மாதம், கறுப்பு மாதம். அப்போது நடந்த தமிழ் இனப் படுகொலைகளை மறக்க முடியுமா.
-
-
- 8 replies
- 2.1k views
-
-
2ம் லெப். மாலதி படையணி துணைத் தளபதி லெப்டினன்ட் கேணல் ரத்தி! AdminMay 15, 2022 http://www.errimalai.com/wp-content/uploads/2022/05/%E0%AE%B2%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D.%E0%AE%95%E0%AF%87%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-1024x683.jpg லெப்.கேணல் ரத்தி (கிருஸ்ணபிள்ளை சுபாஜினி) கரவெட்டி, யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 30.06.1975 வீரச்சாவு: 15.05.1997 வவுனியா ஓமந்தையில் ஜெயசிக்குறு நடவடிக்கைக்கு எதிரான சமரில் வீரச்சாவு. 2ம் லெப். மாலதி படையணி துணைத் தளபதி லெப்டினன்ட் கேணல் ரத்தி. எமது தலைவன் பூத்த மண்ணாம் வடமராட்சியின் ஒர் கிராமமான துன்னாலையில் பிறந்து வளர்ந்தவள் தான் ரத்தி. இவள் தனது கல்வியை …
-
- 0 replies
- 373 views
-
-
18.11.1997 அன்று வவுனியா மதியாமடுப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் யோகரஞ்சன் அவர்களின் 13ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தன்னுயிரை ஈகம் செய்த இந்த வீரமறவனுக்கு எமது வீரவணக்கங்கள்.
-
- 12 replies
- 2.4k views
-
-
மண் வீழ்ந்த எம் மறத்திகளுக்காக…. தங்கையர்கள் தாருஜா, போன்றோரின் ஞாபகார்த்தமாக லண்டன் ஐபிசி தமிழில் வாசிக்கப்பட்ட இக்கவிதையை மாவீரர் நாளுக்காக இங்கு பதிகிறேன் அன்னை மண்மீட்புக்காய் அணிவகுத்த தங்கையரே இன்னுயிரை ஈந்தீர் எமக்காய் உம் வாழ்வளித்தீர் பொல்லாப் பகையின் புறங்காணப் போரிட்ட மெல்லியலார் நீங்கள் விதிமாற்றப் பாடுபட்டீர் உங்கள் நினைவெம்மை ஒரு போதும் நீங்காது செங்களத்தில் ஆடிய உம் தீரம் மறக்காது நெஞ்சை நிமிர்த்தி நேர் வந்த குண்டேந்த அஞ்சாது நின்றீர் அக்காலம் போனதுவே! எம்மினத்து மாதர் இரும்பொத்த நெஞ்சினர் ஓர் இம்மியளவும் இதயம் பயமறியா வீரத்தாய்மார்கள் விடுதலையைக் காதலித்து ஆரத்தழுவிய எம் அக்காமார் …
-
- 3 replies
- 805 views
-
-
ஆண்டாண்டு காலமாக அந்நியர்களின் ஆக்கிரமிப்பில் அடைபட்டு, ஆக்கிரமிப்பாளர்களால் ஆண்டுக்காண்டு அடித்துத் துரத்தும் போது ஓடி ஒளிந்து கொண்டிருந்த மென்மையான சுபாவம் கொண்ட இனத்திற்குள், வீரத்தையும் ஓர்மத்தையும் விதைத்து, அடித்த எதிரியை திரும்ப அடித்து ஓட ஓட விரட்டிய வரலாற்றைப் படைத்த வரலாற்று நாயகன் தான் எங்கள் தலைவர். ஓரு குட்டித் தீவில், அதியுச்ச சுயநலமிக்க, ஒற்றுமை என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் சிறுபான்மை இனத்திற்காக, அந்த இனத்தின் ஆட்பலத்தையும் வளங்களையும் வைத்தே, எந்தவித வெளிநாடுகளின் உதவிகளுமின்றி, முப்படைகளையும் உருவாக்கி, சர்வதேச ஆதரவுடன் போரிட்ட ஒரு அரசாங்கத்தை தோல்வியின் விளிம்புவரை கொண்டு செல்லும் ஆற்றல் படைத்த இராணுவ வித்தகன் தான் எங்கள் தலைவர். …
-
- 0 replies
- 535 views
-