Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாவீரர் நினைவு

மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.

  1. கடற்கரும்புலி மேஜர் அன்பு கண்ணீரைக்கடந்து… ‘அம்மா…. இன்பருட்டி வானுக்க நிக்கிற சக்கை வண்டியில அண்ணா நிக்கிறானம்மா…..’ மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வேர்த்து விறுவிறுத்தபடி ஓடி வந்த அம்மாவின் சின்னமகன் சொன்னபோது, அம்மாவின் அடிவயிற்றில் தீமூண்டது. வீட்டில் நின்ற கோலத்தோடே செய்த வேலையைப் போட்டுவிட்டு அம்மா கடற்கரைக்கு ஓடினாள். கூடவே அன்புவின் அன்பு உறவுகளும்…… இன்பருட்டி ‘வான்” அன்புவின் உறவுகளால் முற்றுகை இடப்பட்டதோடு, ஒப்பாரியும், ஓலமுமாய் அந்த ‘வான்” அதிர்ந்து கொண்டிருந்தது. அன்புவின் அம்மாவையும், உறவுகளையும், கூட நின்ற போராளிகள் தேற்ற முயன்று தோற்றுப்போய் நின்றார்கள். நிலைமையைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பு பொறுப்பாளரின் தலை…

  2. லெப். கேணல் மணிவண்ணன் நவம்பர் 4, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள்/0 கருத்து வெல்வோம் அல்லது வெற்றிக்காக வீழ்வோம்: இம்ரான் – பாண்டியன் லெப். கேணல் மணிவண்ணன். அடர்ந்த காடு அதற்குள்ளால் நடைபயணம். கடக்க வேண்டிய தூரம் நினைத்துப் பார்க்க முடியாதது. ஆனால் கடந்தாக வேண்டும். நினைத்தவுடன் தண்ணீர் குடித்தவன் பசித்தவுடன் வயிறு நிரப்பிக் கொண்டவன். இந்தப் பயணம் முடியுமட்டும் இவை கிடைக்குமா இல்லையா என்றும் தெரியாமல் எப்படித்தான் பயணிப்பது? அவனது கால்கள் இந்தப்பயணத்திற்கு ஒத்துழைக்குமா என்பதற்கு எந்த ஆதாரங்களுமில்லை. அவன் எப்படித்தான் அடியெடுத்து வைப்பது? இப்போதுதானே அவன் போராளியாகியிருந்தான். பயிற்சிகளை இனித்தான் பெறவேண்டும். அந்தப் பய…

  3. மருதம், முல்லை, பாலை, நெய்தல், குறிஞ்சி எனப்படுகின்ற ஐவகை நிலங்களிலே மருத நிலம் மிக நிறைந்த பூமி கிளிநொச்சி. கிளிநொச்சியின் தலைசிறந்த விவசாயக் கிராமங்களில் ஒன்றுதான் வட்டக்கச்சி. வட்டக்கச்சி மண்ணில் கணபதிப்பிள்ளை தம்பதியருக்கு 19.08.1960இல் ஆண்மகவு ஒன்று பிறந்தது. கோபாலபிள்ளை என்ற இயற்பெயரோடு அவதரித்த குழந்தையே கிறேசி என்ற பெயரோடு ஆக்கிரமிப்பு படை களுக்கு எதிராக, தனது தாய் நிலத்தின் விடியலுக்காக செங்களமாடியது. லெப்.கேணல் கிறேசி, தமிழீழ தேசத்தில் எங்கெல்லாம் ஆக்கிரமிப்பு இராணுவங்கள் நிலைகொண்டுள்ளதோ அங்கெல்லாம் அவரது சுடுகலனும் கனன்றிருக்கும். கள முனைகளில் தொடர்ச்சியாக ஓய்வுளச்சல் இன்றி சுழன்றடித்த வீரன் அவர். செய்வோம் அல்லது செத்து மடிவோம் என்ற வசனத்தை அடிக்கடி சொல்பவர…

  4. முதலாவது கடற்கரும்புலிகளின் தாக்குதல் 10.07.1990… எடித்தாராவை எட்டி உதைத்த கடற்கரும்புலிகள் 10.07.1990….! பலர் கருதுவது போல எமது வாழிடமான நிலப்பகுதி மட்டும்தான் தமிழீழத் தாயகம் அல்ல. பழமையும், பெருமையும், செழுமையும் கொண்ட தமிழீழக் கடலும் தமிழர் தாயகம் தான். எமது விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்த வரை எமது கடலிற்கும் முக்கிய பங்குண்டு. விநியோகங்களும், போக்குவரத்திற்கும், வெளி உலகத் தொடர்பிற்கும் இக்கடலே பிரதான பாதையாக இருந்துவருகின்றது. இதை நன்கு அறிந்த சிங்கள அரசு கடற்பயனங்களைத் தடுத்து விடுதலைப் போராட்டத்தை நசுக்கத் திட்டமிட்டது. அதன் பிரகாரம் 1984ம் ஆண்டு திரு.லலித் அத்துலத்முதலி பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற பின் , இந்தக் கடல் எமதும் எமது …

  5. தேசியத் தலைவர் கரங்களால் கைத்துப்பாக்கி பரிசாக பெற்றவர் -லெப் கேணல் கருணா..! லெப் கேணல் கருணா நாகேந்திரம் நாகசுதாகர். வீரச்சாவு. 15.04.2009 சம்பவம்..புல்மோட்டைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனான நேரடி மோதலின் போது. இரண்டாம் கட்ட ஈழப் போரின் இலங்கை இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மக்கள் மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கெதிராக போராடினால்த் தான் தீர்வு என புறப்பட்டவர்களுள் ஒருவனாக கருணாவும் விடுதலைப் புலிகளில் தன்னையும் இணைத்துக் கொண்டு கடற்புலிகளின் இரண்டாவது பயிற்சிப் பாசறையில் தனது ஆயுதப்பயிற்சியை முடித்துக் கொண்ட கருணா மேலதிக பயிற்சிகள் மற்றும் வகுப்புகளுக்காக கடற்புலிகளின் படைத்துறைப் பள்ளிக்குச் செல்கிறான். அங்கு ம…

  6. 90இற்கு முன்னர் நடுவண் கிழக்கு நாடான குவைத்தில் வசித்து வந்த இவர், 1990 இல் ஈராக் குவைத்தை வல்வளைப்பு செய்தபோது அங்கிருந்து வெளியேறி தமிழீழம் வந்தார். பின்னர் 1995இல் வருவாய்த்துறையில் சேர்ந்து பணியாளராக சம்பளத்திற்கு வேலை செய்த இவர், 1999இல் தமிழீழ வருவாய்த்துறைப் பொறுப்பாளரால் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினராக்கப்பட்டார். பின்னர் இவரது திறமையைக் கணித்த பொறுப்பாளர் 2000 இல் வருவாய்த்துறையின் புலனாய்வுப்பிரிவின் பொறுப்பாளராக பணியமர்த்தினார். புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளராக பணியேற்ற பின் பெயர் குறிப்பிடவியலா வகுப்பிக்கப்பட்ட பல செயல்களில் ஈடுபட்டார். இட்ட பணியை நேர்மையுடனும் கண்ணியத்துடனும் தாய்நாட்டிற்கான சேவையென கருதி செய்த இவருக்கு 2008 இறுதியில் சோதனைக் காலம் ஒன்று வ…

  7. லெப். கேணல் மாருதியன் அம்பாறை மாவட்ட தளபதி லெப்.கேணல் மாருதியன் / றஞ்சன் நாம றஞ்சனை பார்க்கவேணும் அது தமிழீழத்தின் எல்லை மாவட்டம். மிக அழகான பச்சைப்பசேல் என்ற வயல் வெளிகளையும் அதன் எல்லையில் எம் வீரமறவர்களை வளர்க்கும் அடர்த்தியான பெரும் கானகத்தையும் பல புலிவீரர்களை ஈன்றெடுத்த அழகிய தமிழ் கிராமங்களையும் கொண்டதுதான் அம்பாறை மாவட்டம். அந்தக் கானகம் எமக்கு பரிச்சயமானதாக இருந்தாலும் புதிதாகச் செல்பவர்களுக்குப் பயம் நிறைந்திருக்கும். அக்காட்டினுள் இருக்கும் புலிகளின் பாசறையில் பகல் வேளைகளில்கூட சூரியனைக் காண முடியாது. எத்திசையில் இருக்கின்றோம் என்பது தெரியாது. அத்தோடு பல மிருகங்களின் வெவ்வேறுபட்ட மிகப் பயங்கரமான சத்தங்கள். மொத்தத்தில் தனியா…

  8. கடற்கரும்புலி மேஜர் கோபி நவம்பர் 10, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள் கடற்கரும்புலி மேஜர் கோபி / குமணன். ‘ஒப்பறேசன் தவளை’க்கு இன்னும் பத்தே நாட்கள் தான் இருக்கின்றன. கோபி ஊருக்குப் போனான். தாயினதும், தனயனதும் மகிழ்ச்சிகரமான ஒரு சங்கமம். பாசம் கரைபுரண்ட அன்பு முத்தங்களின் பரிமாற்றம். எப்பவோ கேட்க வேணும்போல இருந்த தனது நீண்டகால மனஉளைச்சலை அம்மா, மகனிடம் இப்போது வெளிப்படுத்தினாள். “உனக்குக் காலும் இல்லைத்தானே தம்பி…… இனியும் இயக்கத்தில இருந்து என்னப்பன் செய்யப்போறாய்……? அந்தத் தாயுள்ளம் ஏக்கங்களோடு ஆதங்கப்பட்டது. “காலில்லாட்டியும் பரவாயில்லையம்மா…… இயக்…

  9. அம்மா….என்னை தேடவேண்டாம் நான் எல்லோருக்குமாகப் போராடப்போகிறேன்.! - கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் Last updated Apr 11, 2020 கரும்புலி மேஜர் அறிவுக்குமரன்.! தென் தமிழீழத்திலிருந்து வேவுநடவடிக்கை ஒன்றை முடித்து 11.04.2000 அன்று தளம் திரும்பிக்கொண்டிருந்த போது திருமலைக் கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் காவியமான கரும்புலி மேஜர் அறிவுக்குமரன் அவர்களின் 20ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழத்தின் போரியல் வரலாற்றில் பல கரும்புலி நடவடிக்கைசென்று மீண்ட வரலாறு இக் கரும்புலிக்கும் உண்டு. ஆண்குரல்:- “அம்மா…. எங்களுடைய தாயகமண்ணின் மீட்சிக்காக…. என்னால் செய்யக்கூடிய தியாகம் எது…

  10. குடாநாட்டைப் பாதுகாத்த புலோப்பளைச் சமர் குடாநாட்டைப் பாதுகாத்த புலோப்பளைச் சமர் 29.09.1993 அன்று நான்குமணி நேரத்தில் நடத்து முடிந்த மாபெரும் சமரைக்கொண்ட மறக்கமுடியாத நாள். மரபுவழிச் சண்டை முறையில், எமது போராட்ட வரலாற்றில், முக்கிய இடம் பெற்றுவிட்ட ஒரு சாதனை நாள். வெட்டவெளியூடாக நன்கு திட்டமிட்டு நகர்ந்த எதிரியின் கவச வாகனப்படையை, புலிகளின் கவச வாகனப்படையை, புலிகளின் மனிதக்கவசம் உடைத்தெறிந்து காவியம் படைத்த நாள். யாழ். குடாநாட்டுக்கு ஏற்படவிருந்த பேரழிவைத் தற்காலிகமாகத் தடுத்த இந்த இந்த வரலாற்றுச் சமரில், 125 படையினர் கொள்ளப்பட்டுள்ளனர்; 284 பேர் படுகாயமடைந்துள்ளனர் என, சிங்கள அரசே அறிவித்துள்ளது. அத்துடன் சிங்களப்படை இந்தச் சமரில் ரி-55…

  11. மேஜர் பசிலன் நவம்பர் 8, 2020/தேசக்காற்று/சரித்திர நாயகர்கள், வீரத் தளபதிகள்/0 கருத்து சொந்த மண்ணிலேயே அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு திட்டமிட்ட முறையில் அழிக்கப்படுகின்ற தமிழ் மக்கள், தம் உரிமையைப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கையுடன் தமிழ் மிதவாதிகளுக்கு வோட்டுக்களை அள்ளி வழங்கினார்கள். சிங்களப் பேரினவாத அரசு மாநில சயாட்சி, மாவட்டசபை, சமஸ்டி ஆட்சி என்று, உரிமைகளற்ற திட்டங்களைத் தீட்டி இதே மிதவாதிகள் மூலம் ஏமாற்றிய போதும் சாத்வீக முறையிலேயே தம் உரிமைகளைக் கேட்டு நம்பிக்கையுடன் போராடினார்கள் தமிழர்கள். ஆனால் இன ஒழிப்பின் உச்சத்தில், பாரம்பரியப் பிரதேசங்கள் படிப்படியாக அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் ஆக்கப்படு…

  12. தியாகத்தின் மற்றுமொரு சிகரம் தொட்டவர் கேணல் சங்கர் அவர்கள். Canada, Montrealஇல் Air Canadaவுக்கான விமானப் பொறியியலாளராக உயர்வான பணி, பாதுகாப்பான நாடு ஒன்றில் வசதியான வாழ்க்கையைப் பெற்ற ஒருவர், அனைத்தையும் துறந்து, கரடு முரடான வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார். சரளமான ஆங்கிலத்தில் அவரது சிநேகமான பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது. விடுமுறைக்கு இலங்கைக்கு சென்ற அவர், 83 இனக்கலவரத்தை கொழும்பில் நேரில் காண நேர்ந்தது. எம்மக்களின் சுதந்திர வாழ்வின் அவசியத்தை உணர்ந்து போராட்டத்தில் தனது வாழ்வை இணைத்துக் கொண்டார். இவரது இரண்டு சகோதர்களும் கூட மாவீரர்களாவார்கள். சென்னையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில், ஏரோநாட்டிக்ஸ் பிரிவில் பி.இ. படித்த தனது அறிவு மற்றும் அனு…

  13. வியட்னாம் புரட்சிவாதிகள் மேற்கொண்ட தற்காப்பு முறைகளை தமிழீழத்தில் உருவாக்கியவர் மேஜர் அகத்தியர் மேஜர் அகத்தியர் செல்லத்துரை புவினேயராஜ் கோட்டைக்கல்லாறு, மட்டக்களப்பு. வீரப்பிறப்பு:21.06.1967 - வீரச்சாவு: 01.01.1990 நிகழ்வு:முசல்குளத்தியில் புளொட் கும்பலின் முகாம் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு துயிலுமில்லம்: கொடிகாமம் மேலதிக விபரம்: கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்லத்தில் இம் மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது. புலேந்திரன் - குமரப்பா முதலான போராளிகள் இலங்கை - இந்திய கூட்டுச்சதிக்குப் பலியானதைத் தொடர்ந்து 'இனி யுத்த நிறுத்தம் இல்லை ' என தலைவர் பிரபாகரன் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பில் ஒரு கண்ணிவெடித் தாக்குதல் இட…

  14. வரலாறு அவனை என்றுமே நினைவுபடுத்தும்(லெப்.கேணல்.விக்டரின் நினைவாக..) - ச.ச.முத்து யாழ். குடாநாட்டுக்கு அது புதிய காட்சியாக இருந்தது. ஒவ்வொரு ஊர்களின் ஊடாகவும், கிராமங்களின் வழியாகவும், நகரங்களின் ஊடாகவும் அந்த வீரனின் இறுதி ஊர்வலம் மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது. வீதிகளின் இருமருங்கிலும் மக்கள் வரிசையாக நின்று தமது தோட்டங்களிலும்,முற்றங்களிலும் பூத்திருந்த மலர்களை கொண்டுவந்து அவனின் உடல்தாங்கிய அந்த ஊர்திக்கு முன்பாக தூவி கண்ணீர் மல்க நின்றனர். அதற்குமுன்னர் ஒருபோதும் இப்படியான இறுதி ஊர்வல நிகழ்வு உணர்வுடனும், லட்சோபலட்சம் மக்களின் வழியனுப்பலுடனும் நடந்ததே இல்லை. யாழ். மண்ணில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் முகாம்களுக்குள் முடக்கப்பட்டு இருப்பதால் மக்கள் எந்தவித…

  15. கிட்டண்ணை எண்ண ஓட்டங்களுக்கு ஈடு கொடுப்பது கடினம் இயக்கத்தின் எந்த ஒரு பணியானாலும் புதிய புதிய எண்ணங்களை வெளிப்படுத்துவார்.ஒவ்வொரு துறையும் எப்படி செயல்பட வேண்டும் என்பது பற்றி நீண்டவிரிவுரை நிகழ்த்தும் அளவிற்கு ஒவ்வொன்றையும் பற்றியும் ஆழ்ந்து சிந்தித்து வைத்திருந்தார். வெறுமனே சிந்தித்துவிட்டு, சொல்லிவிட்டு, எழுதிவிட்டு,அதனை மறந்துவிடும் அல்லது கைவிடும் சாதாரணமனிதர் அல்ல கிட்டண்ணை.அவரது எல்லா சிந்தனைகளும் செயல்வடிம் பெறவேண்டும் என்பதில் விடாபிடியானவர்.கிட்டண்ணையின் நிர்வாகத்திறன் வித்தியாசமானது தன்கீழ் பணியாற்றும் எல்லோரையும் தன் வசப்படுத்தும் தான்நினைத்ததைச் செய்ய வைக்கும் திறன் அவரதுதனித்துவமான வெற்றிகளுக்கு காரணமாக அமைந்தது. ஒவ்வொரு வேலைகளையும் தானே திட்டமிட்டு…

  16. மாவீரர் நாள். கார்த்திகை27 ************************ தென்றலாய்,தேமாங்காய் ஈழ தேசத்தின் சுவாசமதாய் உயிர் விதைத்து,உணர்வளித்து உலக முகப் பரப்பில் தமிழீழம் எனப் பொட்டுவைத்த உங்கள் தியாகத்தின் உயிர்நட்ட கோயில்களை என்றும் மறப்போமா? கார்த்திகை மலர் நடுவே கல்லறை தொட்டிலாகும் நீங்கள்.. கண்களைத் திறக்கும் போது தமிழ் ஈழ.. தாயவள் கையணைக்கும் அவளுயிர் காக்க நீங்கள் ஆகுதியானவர்கள்-மீண்டும் அவள் மடி பிறக்கையிலே ஆனந்தமாயிரங்கள். “வீர வணக்கம்” -பசுவூர்க்கோபி-

  17. கடற்கரும்புலி மேஜர் கணேஸ் நவம்பர் 10, 2020/தேசக்காற்று/கடற் கரும்புலிகள்/0 கருத்து சாவுக்கு விலங்கிட்ட நெருப்பு மனிதர்கள் கடற்கரும்புலி மேஜர் கணேஸ் / குயிலன். கிளாலிக் கடலின் அலைகள் நனைத்துச் செல்லும் கால்களில், குருதிக் கறை பிசுபிசுத்த ஒவ்வொரு காலையின் போதும் பிணவாடையைக் காவிவரும் கடற்காற்றின், ஒவ்வொரு வீச்சின் போதும் – அவர்களுக்குள் இனம்புரியாத ஒரு ஆவேசம் கொதித்த எழும். கிளாலிக் களத்தில் தளபதி சாள்ஸ் வீழ்ந்த போது, அது அவர்களுக்குத் தாங்க முடியாத பேரிழப்பாக ஆகிவிட்டது. எல்லாவற்றுக்குமாகச் சேர்த்துப் பதிலடி கொடுக்க அவர்கள் துடித்துக்கொண்டிருந்தனர். வரதனுக்கும் மதனுக்கும் முந்திய 60 நாட்கள் – அவர்கள் …

  18. லெப். கேணல் தர்சன் நவம்பர் 4, 2020/தேசக்காற்று/வீரத் தளபதிகள்/0 கருத்து களத்திலெங்கும் ஒலித்த குரல்: கேணல் கிட்டு பீரங்கிப் படையணி பளை – நாகர்கோவில் ஒருங்கிணைப்புத் தளபதி லெப். கேணல் தர்சன் இடைவிடாத எதிரியின் எறிகணை வீச்சுக்கும், காதைப் பிளக்கும் போர் விமானங்களின் குண்டு வீச்சுக்கும் வடமுனைப் போர் அரங்கு முகம் கொடுத்த வண்ணமிருந்தது. அது நீண்ட பல நாட்களாக சிறிலங்கா படையின் பிடியிலிருந்த பளைப் பிரதேசம். ஓயாத அலைகள் – 03 என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க போர் நடவடிக்கை மூலம் ஆனையிறவுத்தளத்தை உடைத்தெறிந்த போது அதனை நாம் வெற்றிகரமாக மீட்டுக்கொண்டோம். ஓயாத அலைகள் தனது தேவை கருதி ஓய்வுக்குத் திரும்பிய காலம், சிறிலங்காப் படைகள்…

  19. கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி எம் மனங்களோடு கலந்து போன கடற்புலி மகளிர் துணைத்தளபதி, கடற்கரும்புலி லெப். கேணல் அமுதசுரபி. தாயகத்தைக் காப்பதற்காய் கனத்த மடிகளாய் கரையைத் தேட முயலும் படகுகள் இயந்திரப் பிழைகளால் வேகம் குறைய, தொடரணியாய் எம் கடற்பரப்பில் நகரும் எதிரிகளோடு மாட்டுப்பட வேண்டிவரும் பொழுதுகளில், அல்பாவின் குரல் உயர் அலை வரிசைச் சாதனத்தில் ஒலிக்க நம்புவோம் நாங்கள் எங்கள் கரை தூரத்தில் இல்லை என்று. “இந்த வாறன். இந்தா வாறன்” உயர் அலை வரிசைத்தாளத்தில் எங்களுக்கு நம்பிக்கையூட்டி, “விடாமல் அடியுங்கோ” என்று கட்டடையிட்டு எங்களின் படகுகளுக்கு தனது படகைக் கொண்டு வந்து காப்பிட்டு, பகைக் கலத்தோடு சண்டை பிடித்து எங்களுக்கு இழப்புகளின்றி கரையேற்றிய அந்த ச…

  20. Started by Paanch,

    இதுவரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் மாவீரரானவர்கள் பற்றி நிலவன் அவர்கள் தந்த விபரம். 1989ம் ஆண்டு நவம்பர் 27 முதல் ஆண்டுதோறும் மாவிரர் நாள் அனுட்டிக்கப்படு வருகிறது. 2008ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் மாவீரர் எழுச்சி நாள் தமிழீழத்தில் அனுட்டிக்கப்பட்ட இறுதி மாவீரர் எழுச்சி நாள்ஆகும். எமது துயிலும் இல்லங்களின் எண்ணிக்கை -27. மாவீரரின் கல்லறை மற்றும் நினைவுக்கல் ஆகியவற்றின் மொத்த எண்ணிக்கை அந்த வருடத்தின் அக்டோபர் 31ம் திகதி வரை 22,114. மாவீரர்கள் வீரச்சாவு அடைந்ததாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை அறிவித்திருந்தது. இவர்களில் 17,305 ஆண் போராளிகளும் 4,809 பெண் போராளிகளும் உள்ளடங்குகின்றனர். கரும்புலிகள் 372 இவர்களில் தரைக் கரும்புலிகள் 113 மற்றும் கடற்கர…

    • 0 replies
    • 619 views
  21. கடற்கரும்புலிகள் ஜெயந்தனும், சிதம்பரமும் கடலில் 04.05.1991 அன்று! AdminMay 4, 2019 கடற்கரும்புலி சிதம்பரம நிறையப் படிக்க வேண்டும் என்று அவன் சின்னவனாக இருக்கும் போது ஆசைபடுவான். ஆனால், குடும்பத்தின் நிலை அவனது கனவுகளைச் சிதைத்தது, நான்காம் வகுப்பிற்குப் பிறகு அவன் புத்தகங்களைத் தூக்கியதில்லை. அவர்கள் குடியிருந்த வீட்டில்தான் ஏழ்மையும் குடியிருந்தது. வீட்டில் அம்மாவும் அக்காமாரும் செய்கின்ற எள்ளுப்பாகுவையும், பலகாரங்களையும் தோளில் வைத்துக்கொண்டு அவன் தெருவில் இறங்குவான். திரும்பி வந்த பிறகுதான் அவர்களின் வீட்டில் அடுப்பெரியும். வளர்ந்தபின் ‘றோலரில்’ கடலில் மீன் பிடிக்கச் செல்வான். மீன் கிடைக்காது போனால், வாட்டத்தோடு திரும்பிவருவான். முற்றத்தில் நிற்கு…

  22. அமைதியான ஆளுமை, ஆர்ப்பாட்டமற்ற ஆற்றல் - லெப். கேணல் சித்தார்த்தன்.! மட்டக்களப்பபு மாவட்டத்தின் விடுதலைப்புலிகளின் தளப்பகுதி. அடிப்படைப் பயிற்சி முகாம் ஒன்று நிறைவடைந்து புதிய போராளிகள் பல்வேறு முகாம்களுக்கும் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தனர். அத்தகைய வேளைகளில் இயல்பாகக் காணப்படும் புத்துணர்வும், கலகலப்பும் அவர்களின் முகங்களில் வெளிப்படையாகவே தெரிந்தது. ஆயினும் எமது முகாமிற்கு வரவிருந்த புதிய போராளிகள் அநேகரின் முகங்களில் ஒருவகையான கலக்கத்தை அவதானிக்க முடிந்தது. காரணத்தை ஊகிப்பது அவ்வளவு கடினமல்ல. படைத்துறைப் பயிற்சிப் பிரிவாக செயற்பட இம் முகாம் சற்று வேறுபாடானதுதான். மிகக் கடுமையான விதிமுறைகளுக்கும், விசித்திரமான தண்டனைகளுக்கும் பெயர் பெற்றது. அதேவேளை ஆற்…

  23. சமர்க் களங்களில் ‘கமரா’க்கள் சமர்க் களங்களில் ‘கமரா’க்கள். புலிகளின் வீரசாதனைகளை; சொல்லப்போகும் ‘போர் ஆவணங்கள்’ ‘ஓப்பறேசன் யாழ்தேவி’ குடாநாட்டின் குரல் வரளையை நெரிக்க சிங்களப் படை முனைப்போடு எத்தனித்த பெருமெடுப்பிலான படையெடுப்பு அது. ஆனையிறவிலிருந்து நகர்ந்தவர்களை, புலோப்பளையில் வைத்து எதிர்கொண்டு புலிகள் நடாத்திய வீரச்சமர் பிரசித்தி பெற்றது. அந்த வரலாற்றுச் சமரைத் தத்ரூபமாகப் படம்பிடித்த இரண்டு புலிவீரர்களை, அண்மையில் தலைவர் அவர்கள் பரிசளித்துப் பாராட்டினார். புலிப்படை வீரர்களின் ஆக்ரோசத் தாக்குதலில் சுருண்டு விழுகின்ற எதிரியின் படையாட்கள். தப்பினோம் பிழைத்தோமென சகாக்களையும் தளபாடங்களையும் கைவிட்டோடுகின்ற சிங்கள வீரர்கள். தகர்த்தழிக்கப்படுகின…

  24. 1995 இல் மணலாறில் காவியமான 180 பெண்போராளிகள் 19 ம் ஆண்டு வீரவணக்க நாள். மணலாறு கோட்டத்தில் அமைந்திருந்த சிறிலங்கா படைகளின் ஐந்து தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது 28.07.1995 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் கோமளா உட்பட்ட 180 வரையான போராளிகளின் வீரவணக நாள் இன்றாகும். தமிழீழ தாயகத்தின் இதயபூமியான மணலாற்றில் சிறிலங்கா அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்த சிங்களக் குடியேற்றங்களிற்கு பாதுகாப்பை வழங்கி வந்த ஐந்து படைத் தளங்களையும் அழித்தொழிப்பதற்காக 28.07.1995 அன்று விடுதலைப் புலிகளால் கடும் தாக்குதல் நடாத்தப்பட்டது. எனினும் சில காட்டிக்கொடுப்புகளால் இத்திட்டம் வெற்றியளிக்காதபோதும் படைத்தளத்திற்குள் ஊடுருவிய விடுதலைப் புலிகள் சிறிலங்கா படைகளின் இர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.