மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
12.10.1986 அன்று மன்னார் மாவட்டம் அடம்பன் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிககொண்ட மன்னார் மாவட்ட சிறப்புத் தளபதி லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 24ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். http://www.eeladhesa...ndex.php?option மண்ணின் விடியலுக்காக தம்மையே ஆகுதியாக்கிய இந்த மாவீரருக்கு எனது வீரவணக்கம்
-
- 13 replies
- 1.8k views
-
-
01.08.1997ம் ஆண்டு யெஜசிக்குறு சமர்களத்தில் மேஜர் சிட்டு அவர்கள் வீரகாவியமானார். தனது இனிய குரலால் இன்றும் எல்லோரின் நினைவுகளோடும் வாழும் சிட்டு அவர்களது14ம் ஆண்டு நினைவுநாள் இன்று. 70பாடல்கள் வரை பாடியுள்ளார். முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிட்டு உறங்கிய துயிலிடம் 2003 தாயகம் போனது போது எடுக்கப்பட்ட படம் இது. சிட்டுவின் நினைவாய் புதுவை அவர்கள் எழுதிய நினைவுப்பாடல் சாந்தன் அவர்களால் பாடப்பட்டது. சிட்டு பாடிய *கண்ணீரில் காவியங்கள் என்ற பாடல்.இதுவே சிட்டுவின் முதலாவது பாடல்.
-
-
- 34 replies
- 7.3k views
-
-
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். Saturday, September 17, 2011, 9:10 சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட மின்னல் படைநடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புச் சமரில் 17.09.1991ம் ஆண்டு வீரச்சாவைத் தழுவிக் கொண்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி லெப்.கேணல் ஜஸ்ரின், 2ம் லெப். மில்ராஜ் ஆகிய மாவீரர்களின் 19ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 17.09.2006 அன்று சிறிலங்கா கடற்பரப்பில் கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் அந்தணன், லெப்.கேணல் விதுசன், லெப்.கேணல் கலைச்செல்வன் மற்றும் லெப்.கேணல் வெற்றியரசன், லெப்.கேணல் நான்முகன் உட்பட்ட கடற்புலிகளினதும் …
-
- 18 replies
- 2.2k views
-
-
லெப். கேணல் சேகர் சாவுக்குள் உழைத்த வீரம் ‘சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தளபதி’ லெப். கேணல் சேகர் 1998 சுதந்திர நாளுக்குக் கிளிநொச்சியிலிருந்து கண்டி வீதியால் தலதாமாளிகைக்குப் பேரூந்து வருமென சிங்களத்து ஜெனரல் விடுத்த சவாலுக்குச் சாட்டையடியாகக் கிளிநொச்சித்தளம் மீதான பாய்ச்சலுக்குத் தலைவர் கட்டளையிட்டார். அவரின் கட்டளைக்கிணங்க மையத்தளத்தினுள் முன்னேறிய எமது போராளிகளை வீழ்த்தி எமது முன்னேற்றத்தைத் தடுத்துக் கொண்டிருந்தான் எதிரி. எதிரிக்காக எடுத்த சாட்டையின் அடி எங்கள் முதுகுகளிலேயே விழுந்து விடுமா? எதிரி கொடியேற்றும் நாளில் எங்கள் தேசியக்கொடி அரைக்கம்பத்திற் பறக்குமா? அர்த்தமற்ற உயிரிழப்புக்களுடன் நாம் தளம் திரும்ப நேருமா? தலைவன் இட்ட ஆணையை வீணேபோக…
-
-
- 1 reply
- 1.3k views
-
-
இதுக்குள்ளை இருக்குது கேளுங்கோ! வீரச்சாவு : 1999 https://eelam.tv/watch/border-force-first-woman-maaveerar-ம-தல-வத-எல-ல-ப-பட-ம-வ-ரர-ரத-அவர-கள-ன-வரல-ற_BronIRZ7v31JVGZ.html
-
-
- 4 replies
- 696 views
-
-
லெப். கேணல் சந்தோசம் லெப். கேணல் சந்தோசம்: ஒரு முன்னுதாரணமான போராளி. இரட்டை இலக்கத்தில் அங்கத்தவர்களைக் கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கம் விளங்கிய காலத்தில் தாக்குதல்கள் பற்றிய திட்டங்கள் போடப்படும்போது குண்டு வீசுவது என்ற பொறுப்பு சந்தோசத்திற்குதான். வெடிமருந்துகள், இயக்கத்தின் நிதி வசதி இவை மிகக் குறைவாக இருந்த காலம் அது. வீசப்படும் ஒவ்வொரு குண்டுகளுக்கும் நிறையப் பலன் எதிர்பார்க்கப்பட்டது. ஆகவே நிதானமாகச் சரியாகக் குண்டு வீசுவதற்குப் பொருத்தமான ஆளாகச் சந்தோசந்தான் பதிவு செய்யப்பட்டான். ஒவ்வொரு தாக்குதலிலும் இயக்கத்தின் எதிர்பார்ப்புக்கும் ஏற்ற வகையில் செயற்பட்டான் சந்தோசம். பின்னர் கண்ணிவெடியை சரியாகக் குறிதவறாது வெடிக்க வைப்பதற்குரிய நபராவும் தேர்ந்தெடுக்க…
-
- 2 replies
- 1.2k views
-
-
வீரமங்கை செங்கொடியின் 5ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன்,முருகன் மற்றும் வேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த "வீரமங்கை" செங்கொடியின் 5ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்றவேளை அம்மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி வீரமங்கை செங்கொடி ஈகைச்சாவடைந்தார். தன் இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரமங்கைக்கு சீரம் தாழ்ந்த இதய அஞ்சலிகள்.
-
- 9 replies
- 2.3k views
- 1 follower
-
-
கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் விடாமுயற்சி, ஓர்மம், பிடிவாதம், குறும்புத்தனம் என கலந்துகட்டிய ஓர் அருமையான தோழன் இளங்குயிலன். எமது வாகனம் புதுக்குடியிருப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. விசுவமடு றெட்பானாவைத் தாண்டும்போதுதான் அவனைப் பார்த்தேன். எதிர்முனையிலிருந்து சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். வாகனம் ஓரளவு மெதுவாகச் சென்றதால் வடிவாக அவனைப் பார்க்கக் கூடியதாகவிருந்தது. என்றாலும் நம்பமுடியவில்லை. பக்கத்திலிருந்த செல்வனைக் கேட்டேன். செல்வன் அவனைக் கவனிக்கவில்லை. அவன் சைக்கிளோட்டிச் செல்வதைச் சொன்னபோது செல்வனும் நம்பவில்லை. ஏனென்றால் அவன் தனது இரண்டு கால்களையுமே சில மாதங்களின் முன்னர் இழந்திருந்தான். இளங்குயிலனின் இயற்பெயர் பற்றிக் எட்மன்…
-
- 0 replies
- 535 views
-
-
(இவ வீரச்சாவடைந்த திகதி தெரிந்தால் தெரியப்படுத்துங்கள்) எழுதியவர்: எல்லாளன் (2008) நேரம் நண்பகல் 12.00 மணியை கடந்திருந்தது. பக்கத்து தொலைத்தொடர்பு நிலையத்திலிருந்து அப்பாவுக்கு அழைப்பு வந்தது.''மகள் கதைக்கட்டாம்... "அப்பா தொலைபேசி எடுக்க ஓடோடிப் போனார். அப்பாவுக்காகவே காத்திருந்தவள் போல, அப்பா எடுத்ததும் அவள் கதைத்தாள். ''வழமையான நலஉசாவல்..." தம்பி, தங்கச்சியின் படிப்பு பற்றிய கேள்விகள்...." எல்லாம் முடிய, ''நான் வேற இடம் போறனப்பா....அதுதான் எடுத்தனான்....,இனி எடுத்தால் தான் தொடர்பு....நீங்கள் எடுக்காதீங்கோ....சரி வைக்கிறன் அப்பா...."மகளோடு பேசிய நிறைவோடு அப்பா வந்தார். அம்மா இல்லாமல் போனதிலிருந்து அவளுக்கு எல்லாமே அப்பாதான். ஒரு முறை அவள் …
-
- 0 replies
- 364 views
-
-
ஓயாத அலைகள் – 4 படைநடவடிக்கையில் 24.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலிகள் மேஜர் சோபிதன், மேஜர் வர்மன் மற்றும் கப்டன் சந்திரபாபு ஆகியோரின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதேநாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். http://meenakam.com/news/flashnews/2011/10/24/ தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதேநாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எனது வீரவணக்கங்கள்.
-
- 7 replies
- 1.3k views
-
-
[size=4]மட்டு. நகரில் காவியமான கரும்புலி மேஜர் உதயகீதன், திருமலையில் காவியமான கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன், 2ம் லெப். வேந்தன், 2ம் லெப். ஈழச்செல்வன், முல்லைத்தீவில் காவியமான 2ம் லெப்.சிவா ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். சிறிலங்கா படைகளுடன் சேர்ந்தியங்கிய தேசவிரோதிகள் மீது மட்டக்களப்பு நகரில் வைத்து 15.10.2001 அன்று மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதலில் கரும்புலி மேஜர் உதயகீதன் (ஆனந்தன் விஜயஜெயந்தன் - அக்கரைப்பற்று, அம்பாறை) வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதே நாள் திருகோணமலை பள்ளித்தோட்டம் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன் (நவசிவாயம் சிவரூபன் - மந்திகை, யாழ்ப்பாண…
-
- 7 replies
- 710 views
- 1 follower
-
-
-
[size=4]தமிழர்கள் வாழும் இடமெங்கும் தமிழீழ விடுதலைக்காகப் போராடி மடிந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் மாவீரர்நாள் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழீழத் தாயகத்தில் மாவீரர் நாளை வெளிப்படையாக நினைவுகொள்ள முடியாவிட்டாலும், தங்கள் ஆழ்மனத்திற்குள்ளே பூசிக்கின்ற நாளாக இருக்கும்.[/size] [size=4]தமிழர்கள் வாழும் ஏனைய நாடுகளில் மிகவும் எழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறவிருக்கின்றன. அதற்கான ஏற்பாடுகளை அந்தந்த நாடுகளிலுள்ள தமிழ்த் தேசியத்திற்கான செயற்பாட்டாளர்கள் மேற்கொண்டு வருகின்றார்கள்.[/size] [size=4]தமிழீழ விடுதலைக்கான ஆயுதவழிப் போராட்டம் மௌனிக்கப்படுகின்ற நிலைக்கு வந்தபோதும், தமிழீழத் தேசிய விடுதலைக்கான போராட்டத்தை வெவ்வேறு முனைகளில் நகர்த்துவதற்கான உத்வேகத்…
-
- 1 reply
- 779 views
-
-
தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு தேசத்தின் குரல்.! தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம் 2006-12-14 எமது சுதந்திர இயக்கத்தின் அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் எனக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட எமது தேசத்தின் ஒளிவிளக்கு இன்று அணைந்துவிட்டது. ஆலோசனை வேண்டி, ஆறுதல் தேடி ஓடுவதற்கு பாலாண்ணை இன்று என்னுடன் இல்லை. இவரது மறைவு எனக்கு மாத்திரமல்ல தமிழீழ தேசத்திற்கே இட்டுநிரப்பமுடியாத பேரிழப்பு. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலமாக மனிதவாழ்வு நிலைக்கிறது. இந்த வாழ்வுக்காலம் எல்லா மனிதர்களுக்கும் ஒரேமாதிரியாக, ஒத்ததாக, ஒருசீராக அமைவதில்லை. காலச்சீரற்றதாக ஒருவருக்குக் கூடி, மற்றவருக்குக் குறுகி, இன்னொருவருக…
-
-
- 20 replies
- 2.6k views
- 1 follower
-
-
கப்டன் மலரவன் நவம்பர் 23, 2013 | ஒரு போராளியின் குருதிச் சுவடுகள். “விடுதலைப்படைப்பாளி’ கப்டன் மலரவன்” போர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரியல் வரலாற்றின் ஒரு அங்கமான அந்தப் படைப்பின் கர்த்தா – கப்டன் மலரவன். 1992 கார்த்திகை 23ம் நாள், பலாலி – வளலாயில் 150 காவலரண்களை தாக்கியழித்து பாரிய வெற்றியைப் பெற்ற தாக்குதலில் அந்த விடுதலைப் படைப்பாளி வித்தானான். கப்டன் மலரவனை விடுதலைப்போராட்டம் இழந்து பத்தொன்பது வருடங்கள் கடந்துவிட்டதன் நினைவுநாள் இன்று. கப்டன் மலரவன் ஒரு பன்முக ஆற்றலுள்ள போராளி. விடுதலைப்போராட்டத்தில் அவரது ஆளுமையும் பங்களிப்பும் காத்திரத்தன்மையும் நீ…
-
- 0 replies
- 1.1k views
-
-
கரும்புலி லெப்.கேணல் போர்க் உட்பட போராளிகளின் வீரவணக்கநாள். நவம்பர் 23, 2013 | வீரவணக்க நாள். கரும்புலி லெப்.கேணல் போர்க் மற்றும் லெப் கேணல் மாறன், கப்டன் கஜன் உட்பட 54 போராளிகளின் வீரவணக்கக் நாள் இன்றாகும். || தாய்மண்ணின் விடியலுக்காக புயலான தேசத்தின்புயல்… மாங்குளத்தில் 23.11.1990 அன்று சிறிலங்கா இராணுவப் படைத்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் முகாமை தகர்த்து வெற்றிக்கு வித்திட்டு புயலான கரும்புலி லெப்.கேணல் போர்க்கின் 23ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். நான் புறப்படுகின்றேன்…. இதோட மாங்குளம் முகாம் முடிஞ்சுது ” : கரும்புலி லெப் கேணல் போர்க் கரும்புலி லெப் கேணல் போர்க் அவர்களின் தாக்குதல் திட்டம் பற்றி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் …. …
-
- 0 replies
- 3.5k views
-
-
11.11.1993 அன்று பூநகரி கூட்டுப்படை தளம் மீது மேற்கொள்ளப்பட்ட "தவளை பாய்ச்சல்" நடவடிக்கையில் வீரச்சாவை தழுவிக்கொண்ட (460) மாவீரர்களின் வீரவணக்கநாள் இன்று! வீரவணக்கம்
-
- 3 replies
- 860 views
-
-
11.12.2001 அன்று திருகோணமலை மாவட்டம் பாலத்தோப்பூர் பகுதியில் அமைந்திருந்த சிறிலங்கா படைமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது லெப்.கேணல் மனோஜ் (பாலசிங்கம் வந்தகுமார் - உவர்மலை. திருகோணமலை) மேஜர் குமாரவேல் (செல்வராசா ஆனந்தன் - மாமாங்கம், மட்டக்களப்பு) லெப். கலைமதி (செல்வநாயகம் தர்சினி - மூதூர், திருகோணமலை) 2ம் லெப்.தேவன் (கென்றி செபஸ்ரியான் - மூதூர், திருகோணமலை) ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். இதேநேரம் மட்டக்களப்பு வாழைச்சேனை செற்றடி சிறிலங்கா காவல்துறை நிலையம் மற்றும் படைமுகாம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது கப்டன் சற்குணராஜ் (தம்பிப்பிள்ளை மதியழகன் - மத்தியமுகாம், அம்பாறை) கப்டன் பிரதாவரன் (இராசையா சற்குணம் - மல்வத்தை 2,…
-
- 8 replies
- 829 views
-
-
தோல்வியில் மீளுவோம் ************************ நீண்ட பயணம்…., முடிவு வரும் ஆனால் பாதை கடினமானது. தெரிந்து பயணம் செய்தான் எங்கள் தலைவன். வெற்றிகள் வந்தது தோல்விளும் கூடவே….! பயணத்தின் பாதை அது மிகக் கொடுமையானதாய் கொத்துக் கொத்தாய் விலை கொடுத்தோம் …..! சென்னீரும் கண்ணீரும் சேர்வையாய் குருதியாற்றில் குளிர்தோடிய பயணம் அது முடியும் தருவாயில்…..! இதோ கனவின் கடைசித்துளி நிசமாகியதாய் நினைவு. நாங்கள் வென்றோம்…..! பாதியில் பயங்கரக்கனவு போல் பறிபோன கனவின் மீதமாய் தோற்றுப் போனோம்….! பயணம் முடியாமல் தோல்வியாய் பயணவழி வந்தவர்கள் பயணம் முடியாமல் பாழ் சிறைகளிலும் பயங்கர அறைகளிலும்…..! எனினும் எல்லைகளை எட்டும்வரை பயணத்தில் தங்கள் பாதையை தெரிந்த சிலர் மட்டுமே…
-
- 3 replies
- 863 views
-
-
தமிழீழ வரலாற்றில் அழியா பெயர் லெப்.கேணல் புலேந்திரன்... லெப்.கேணல் புலேந்திரன்(திருமலை மாவட்ட தளபதியும் மத்தியகுழு உறுப்பினரும்) குணநாயகம் தருமராசா பாலையூற்று, திருகோணமலை. வீரப்பிறப்பு:07.06.1961 வீரச்சாவு:05.10.1987 நிகழ்வு:யாழ்ப்பாணம் பலாலி படை முகாமில் இந்திய – சிறிலங்கா கூட்டுச்சதியை அம்பலப்படுத்துவதற்காக சயனைட் உட்கொண்டு வீரச்சாவு அன்பின் புலேந்திரன், தமிழ் மக்களின் பாதுகாப்புக்குத் தானே உத்தரவாதம் என்று எமது ஆயுதங்களைப் பெற்ற இந்தியா, நீ திருமலைக்குப் போவதற்குப் பாதுகாப்புக் கேட்டபோது இந்திய இராணுவத்திலுள்ள மேஜர் கருப்பசாமி உனக்குச் சொன்னார், “இன்றும் இல்லை, இனி எப்போதும் இல்லை” என்று. விடுதலைக்காகப் போரிடும் ஓரினம் தன்னைத் தான…
-
-
- 2 replies
- 1.1k views
-
-
தேசியத் தலைவரின் உயிர் நாடியாக வாழ்ந்து மடிந்த பன்னிரு வேங்கைகள். 1987 செப்ரெம்பர் 26ம் நாள் தமிழீழம் எங்கும் ஒரு துயரம் தோய்ந்த சோகநாளாகவே அமைந்தது. திலீபனின் இழப்பு அனைத்து தமிழர் மனங்களையும் வாட்டிவதைத்தது. சிறீலங்கா – இந்தியா ஒப்பந்தம் மூலம் தமிழீழத்தை ஆக்கிரமித்த இந்திய அரசின் வஞ்சகச்சதியால் மக்களுக்காக வாழ்ந்த அந்த ஒளிவிளக்கு ஓய்ந்தது. இத்தோடு முடிந்துவிட்டது என்று மக்களின் மனத்தில் எண்ணங்கள் ஓட, தமிழீழக் கடற்பரப்பிலே பயணித்துக் கொண்டிருந்த லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட்ட பன்னிரு வேங்கைகளைக் கைதுசெய்து அவர்களின் சாவுகளுக்கு சிறீலங்கா – இந்திய அரசுகள் காரணமாகின. அது அனைத்து மக்களையும் இன்னுமோர் சோகத்தில் ஆழ்த்தியது. 1987ம் ஆண்டு யூலை 29…
-
-
- 3 replies
- 1.2k views
-
-
பிரபல தாயகப் பாடகர் இசைக் கலைமணி திரு. குலசிங்கம் அவர்கள் மறைவு (உலகத் தமிழினத்தின் ஒளிவிளக்கு, மலர்தூவ வாருங்கள் போன்ற பாடல்களைப் பாடியவர்) யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீடத்தில் என்னுடன் இசை பயின்ற நண்பன் திரு. குலசிங்கம் அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் கவலையும் அடைகிறேன். மிகவும் இனிய குரல்வளம் கொண்டவர்¸ பழகிட இனிமையான ஒரு கலைஞர். மறக்கமுடியாத சில தாயகப் பாடல்களின் குரலுக்கு சொந்தக்காரர். அவரது குரலின் இனிமையும் காத்திரமும் இன்றும், என்றும் தமிழரின் மனங்களில் நிறைந்திருக்கும். https://www.tamilarul.net/2019/11/Kulasingam.html
-
- 0 replies
- 289 views
-
-
தமிழீழ விடுதலைப் போரில்... முதல் முதலாக, சயனைடு உட்கொண்டு.. சாவினை தழுவிய, வீரத் தமிழ்மகன் சிவகுமாருக்கு வீரவணக்கம்....🙏🙏
-
- 3 replies
- 554 views
-
-
உண்மையில் இன்றைய நாளில் மகத்தானவனின் பிறந்த நாளில் தமிழினத்தின் மகத்தானவனை மகத்தானவனின் ஆலயத்தில் ஈவு இரக்கமில்லாதவர்களால் அழிக்கப்பட்ட இந்த நாளை எம் வாழ்வில் என்றும் மறக்க முடியாது ..................இவர் இறைவனுக்கு ,கிறிஸ்துவுக்கு சாட்சியாக வாழ்ந்தார் ,,,,,,,,,,வீர வணக்கம் ஐயா
-
- 0 replies
- 670 views
-
-
தலைநகர் ஊற்றெடுத்த உப்பாற்றிலே 1971.02.05 அன்று உப்பாற்று மண்ணின் விடிவிற்காக மட்டுமல்லாமல் தமிழீழ மண்ணின் விடிவிற்காகவும் ஆண் மகன் ஒருவனை ஈன்றெடுத்தாள் அன்னை இராசமணி. தாய் தந்தையருக்கு மூன்றாவது இளம்பிறையாக தோன்றியவனுக்கு வசந்தன் என்று செல்லப் பெயரிட்டார்கள். ஆனால் தன் சமுதாயம் அடக்கி ஒழிக்கப்படுவதைக் கண்ட கண்களும் உடலும் தீப்பிழம்புகள் போல சீறிப்பாய்ந்தன. என் இனிய உள்ளங்களுக்கா இந்த நிலை? இதை மாற்றியமைப்பேன் என்று தன்னுள் ஆணையிட்டான். தன் வீட்டைகாப்பது மட்டுமல்லாமல் தன் இனத்தையும் காக்கப் புறப்பட்டான். எவன் எதிரியோ அவனை கொன்று குவிப்பதுவே அவன் செயல். தனக்கு வேண்டிய பயிற்சிகளை மிக வேகமாக கற்றுத் தேர்ந்தான். தோற்றம் சிறிதாக இருந்தாலும் அவனின் குணவியல்வுகளும் …
-
- 5 replies
- 1k views
-