மாவீரர் நினைவு
மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள்
மாவீரர் நினைவு பகுதியில் மாவீரர் பற்றிய நினைவுப் பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மக்களினதும் மண்ணினதும் விடிவுக்காக தம்மின்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர்களின் நினைவு நாட்கள், வரலாறுகள் சம்பந்தமான பதிவுகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
மாவீரர் நினைவு நாட்களை நாட்காட்டிப் பகுதியிலும் பதிந்து கொள்ள முடியும்.
944 topics in this forum
-
உளப்பலத்தால் உழைத்தவன் கரும்புலி மேஜர் குமுதன். Last updated Feb 1, 2020 அந்த நிகழ்வுகளில் இருந்து குமுதனின் நினைவுகளை பிரிக்க முடியாததாய் இருந்தது. இப்போதெல்லாம் அவனது சுவாசம் அந்த நினைவுகளைத் தழுவியதாகவே வந்து போனது. அதே நினைவுகள் தான் குமுதனின் கண்களையும் நெஞ்சையும் நினைத்துக் கொண்டிருந்தன. வெட்டையும் திட்டுத்திட்டாக வளர்ந்திருக்கும் சிறு பற்றைகளும் நிறைந்து பரந்து விரிந்த அந்தப் பிரதேசத்தின் நெஞ்சைக் கிழிப்பதைப்போல் கிளிநொச்சி நகரினை நோக்கி இராணுவம் முன்னேறிக்கொண்டிருந்தது. பெரிய இராணுவ நகர்வை எதிர்த்து நேருக்குநேர் சமரிட்டுக் கொண்டிருந்த எமது தாக்குதல் அணியின் ஒரு பிளட்டூன் அணித்தலைவனாக குமுதனும் நின்று சமதிட்டுக் கொண்டிருந்தான். ஒவ்…
-
- 0 replies
- 436 views
-
-
ஈழத்தின் புகழ்மிக்க ஊடகவியலாளர் தராக்கி சிவராமின் 7ம் ஆண்டு நினைவாக’ ஈழத்து ஊடகப் பரப்பில் எத்தனையோ ஊடகவியலாளர்கள் தமது பங்களிப்பை தாம் சார்ந்த சமூகத்துக்கும் ஊடகத்துறைக்கும் வழங்கியுள்ள போதிலும், சிவராமுக்கு இணையாக எவரும் இல்லையென்றே கூறுமளவிற்கு அவரது வெற்றிடம் அவர் எமைவிட்டுப் பிரிந்து ஆறு ஆண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் இன்னமும் நிரப்பப்படாமலேயே உள்ளது. தனது சொந்த நலத்தைப் பொருட்டாக மதிக்காமல் தான் சார்ந்த சமூகத்தின் நலத்தைப் பெரிதாகக் கருதிச் செயற்பட்டமையினாலேயே அவர் சக ஊடகவியலாளர்களால் மட்டுமன்றி, தமிழ்த் தேசியத்தின்பால் வாஞ்ஞை கொண்ட அனைவராலும் நினைக்கப்படும், மதிக்கப்படும் ஒருவராகத் திகழ்கின்றார். இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கூற்றில் சிறி லங்காவில் இன …
-
- 15 replies
- 3.5k views
-
-
ஊடகவியலாளர் பு.சத்தியமூர்த்தியின் 13ம் ஆண்டு நினைவுதினம் ஊடகவியலாளர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தியின் 13ம் ஆண்டு நினைவுதினம் நேற்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற நினைவுதின நிகழ்வில் அன்னாரின் உருவ படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்ததுடன் சத்தியமூர்த்தியின் அனுபவங்கள் குறித்தும் இதன்போது பகிர்ந்துகொள்ளப்பட்டது. ஊடகத்துறையில் 1990களில் இருந்து ஈடுபடத் தொடங்கிய இவர், 2009 பெப்ரவரி 12ஆம் திகதி இடம்பெற்ற எறிகணைத் தாக்குதலில் சிக்கி படுகாயமுற்று சிகிச்சைபெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்…
-
- 0 replies
- 433 views
-
-
மாவீரனே! மாவீரனே! -நீ மண்ணின் மைந்தனே! சாவேயுனைக் கரையாதடா-எங்கள் சந்ததிக்கே நீ உரைகல்லடா! வாழ்வுக் காகவே நீ வாழ்ந்த தில்லையே!-அன்னை தாழ்வை நிமிர்த்தவே-உயிர் தந்த பிள்ளையே! இந்தப் பொழுதிலே உன் இறக்கை முளைக்குதே! கந்தக் கோட்டத்தில் உன் கதைகள் கேட்குதே! விழிகள் உகுத்தநீர் வீழ்ச்சி காண்குதே! ஒளிகள் பொருந்திய உன் உயிரும் அழைக்குதே! சந்நிதி மருங்கில் உன்றன் சார்சிதை அழித்தும் விட்டார்! எம்மனச் சிறையில் உன்னை எவரடா அழிக்கக் கூடும்! இராட்சதர் வந்து எங்கள் இனத்தையே அழித்தும் விட்டார்! பிராட்டியும் கோனும் நின்ற பெருநிலம் மடக்கி விட்டார்! அரக்கர்கள் வருவார்! வந்து அசுரர்கள் ஆக நிற்பார்! இரக்கமில் லாதராகி எங்கள் …
-
- 0 replies
- 772 views
-
-
( வணக்கம் யாழ் உறவுகளே ) எம் தமிழீழ போராட்டத்தில் 25000 ஆயிரம் மாவீர செல்வங்களை இழந்து இருக்கிறோம் / எம் போராட்டத்தில் எனது மச்சான் மான் மூன்று பேர இழந்து இருக்கிறேன் , அவர்களுடன் சிறு வயதில் பழகின அன்பனா நினைவுகளை சுறுக்கமாய் எழுதுகிறேன் 😓/ எனது முதலாவது மச்சான் 1990ம் ஆண்டு போராட்டத்தில் தன்னை இணைத்து கொண்டார் , மச்சானுக்கு மூன்று வயதாய் இருக்கும் போது அத்தை இறந்து விட்டா , தாயில்லா பிள்ளை என்று சொந்தங்கள் மச்சான் மேல் அளவு இல்லா பாசமும் அன்பையும் காட்டி வளத்து விட்டவை / 1990ம் ஆண்டு யாருக்கும் சொல்லாம தன்னை போராட்டத்தில் இணைத்து கொண்டார் , மன வேதனையுடன் உறவினர்கள் ஏன் மச்சான் இப்படி செய்தார் …
-
-
- 19 replies
- 2k views
- 2 followers
-
-
எங்கள் கண்மணிகள் கண்திறக்கின்ற காலம் மாவீரர் வாரம் நவம்பர் 21....27 தமிழ்மக்களின் விடுதலைக்காகவும் சுதந்திரமான வாழ்விற்காகவும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நவம்பர் 27 ஆம் திகதி தமிழ் மக்கள் நினைவிற்கொள்வது தொன்று தொட்டு வந்துள்ள நிலையில் 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் தாயகத்தில் இன அழிப்பினை மேற்கொண்ட பேரினவாத சிறீலங்கா அரசு அதன் பின்னர் தமிழர்களின் சுதந்திரங்ளை பறிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்போரின் போது முதற்க களச்சவாவடைந்த லெப்ரினன் சங்கர் அவர்களின் நினைவாக நவம்பர் 27 ஆம் நாள் ஆண்டு தோறும் மாவீரர் நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. 1990 ஆம் ஆண்டு மாவீரர் வாரமாக 21-27 வரை கடைப்பிடிக்கப்பட்டு பின்னர் மாவீரர்…
-
- 1 reply
- 952 views
-
-
சிறப்பு மருத்துவப் போராளியாகவும் நோயாளிகளின் அன்பிற்குரியவனாகவும் மட்டுமன்றி பின்நாளில் இளம் பல் வைத்தியனாக தமிழீழத்தின் பட்டிதொட்டி எங்கும் அறியப்பட்டவனாகி எம் மக்கள் எல்லோருக்கும் வேண்டியவனுமானான். உடுப்பிட்டி யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு திருமதி கந்தசாமி தம்பதிகளின் தவப்புதல்வனாய். 1975 ஆண்டு “றூபன்” என்ற இயற்பெயருடன் அந்த குடும்பத்தின் வரவாகியவன். குடும்ப பாசத்தை நெஞ்சினில் சுமந்து ஈழமண் காக்க, விடுதலைப் போரிற்கு தன் தோள் கொடுக்கப் புறப்பட்டான். காலம் அவனை மருத்துவத்துறைக்கு அனுப்பியது. .மருத்துவப் போராளியாக இருந்த போதே பல் மருத்துவத்தைக் கற்று அதில் சிறப்பு பெற்று வளர்ந்தான். போராளிகளின் பயிற்சி முகாம் தொடங்கி விசேட பாசறைகள் வரை சுதர்சனின் நடமாடு…
-
- 1 reply
- 457 views
-
-
எங்கள் தெருவெங்கும் அன்னை பூபதிகள்! தீபச்செல்வன்.. April 19, 2019 ஈழத்தில் அன்னையர்களின் போராட்டத்திற்கு தனித்துவமான இடமுண்டு. தாய்மை உலகில் உன்னதமான உணர்வு. மனிதர்கள் மாத்திரமின்றி அனைத்து உயிரினங்களிலும் தாய்மை மிகவும் உன்னதமானதாக கருதப்படுகிறது. விலங்குகள், பறவைகள் என அனைத்து உயிரினங்களிலும் தாய்மையின் மகத்துவத்தை உணரலாம். ஈழத்து அன்னையர்களின் வாழ்வு துயரத்தில் தோய்ந்தது. இன்றைக்கு ஈழமெங்கும் அன்னையர்கள் தவித்து வாழும் ஒரு வாழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்காக, அவர்களின் விடுதலைக்காக, நீதிக்காக ஈழத்தில் அன்னையர்கள் தெருவில் வாழும் ஒரு போராட்டத்திற்கு நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். அன்னையர்கள் கண்ணீர் சி…
-
- 0 replies
- 858 views
-
-
எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் லெப். கேணல் மல்லி.! எங்கள் தேசம் நிமிர்வுற நிமிர்ந்தவன் மல்லி.! லெப். கேணல் மல்லி, விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவன். இவன் விடுதலைப்போராட்ட காலத்தில் பல களங்களில் தன் முத்திரையைப் பதித்தவன்.இரு தேசங்களின் ஆக்கிரமிப்பு இராணுவங்களுடன் இவன் போராடினான். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு என்னும் இடத்தில் பிறந்தான். நீண்ட போராட்ட வாழ்வில் ஒயாது கடுமையாக உழைத்தவன். தனைவருத்தி தன்னொளி பார்த்தவன். அமைதிப் போர்வையுடன் வந்த இந்தியப் படைகள் முள்ளியவளையில் முகாம் இட்டிருந்தன. 1990ம் ஆண்டில் இம்முகாம் மீதான தாக்குதலில் பங்கேற்று நின்றான். இந்தக் காலப்பகுதியிலேயே அவர்களோடு கூட்டாக நின்ற கும்பல்கள், கிளிநொச்சி 18ம் போர் எனும் இடத்…
-
- 2 replies
- 896 views
-
-
16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் “எடித்தாரா” கட்டளைக் கப்பலைத் தகர்த்து மூழ்கடித்து வீரகாவியமான மூன்று கடற்கரும்புலிகள் உட்பட்ட 14 மாவீரர்களின் 17ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். 16.07.1995 அன்று காங்கேசன்துறை துறைமுகத்தினுள் ஊடுருவிய கடற்கரும்புலிகளை உள்ளடக்கிய கடற்புலிகளின் தாக்குதல் அணி கடுமையான கடற்சமரின் நடுவே சிறிலங்கா கடற்படையின் “எத்தாரா” கட்டளைக் கப்பலை தகர்த்து மூழ்கடித்தது. இந்த வெற்றிகர கடற்சமரில் மூன்று கடற்கரும்புலிகளும், கடற்சமரை வழிநடாத்திய கடற்புலிகளின் தாக்குதல் தளபதி லெப்.கேணல் நரேஸ், கடற்புலிகளின் மகளீர் படையணித் தளபதி லெப்.கேணல் மாதவி ஆகியோர் உட்பட 14 கடற்புலிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர…
-
- 13 replies
- 1.9k views
- 1 follower
-
-
எதிரிக்குப் பேரிடி கொடுத்த லெப்.கேணல் நிர்மா .... லெப்.கேணல் நிர்மா ஞானாந்தன் மேரிசாந்தினி கனகபுரம், கிளிநொச்சி வீரப்பிறப்பு: 23.09.1973 வீரச்சாவு: 28.04.2001 கிளிநொச்சி பளை பகுதியில் படையினரின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவு “இந்தக் கோட்டையில் என்று புலிக்கொடி பறக்கின்றதோ அன்றுதான் எமக்கு விடிவு பிறக்கும்” லெப். கேணல் திலீபனின் உரையைச் சுமந்த காற்று கோட்டையிலே கம்பீரமாக பறந்து கொண்டிருந்த புலிக்கொடியைத் தழுவி வீசியது. மகிழ்ச்சி, பெருமிதம், இன்னும் இனம் புரியாத உணர்வுகள் எல்லாம் கலந்த ஒரு உணர்வில் தமிழர்கள் ஊறிப்போயினர். ‘ஜீவன்’ கானகப் பாசறை வெற்றியைக் கொண்டாடியது. லெப்.கேணல் மாதவி (பின்நாட்களில் கடற்புலிகள் மகளிர் படையண…
-
- 0 replies
- 411 views
-
-
எதிரியின் பல முன்னேற்றங்களை தடுத்து நிறுத்தி கடுஞ்சமர் புரிந்த லெப். கேணல் வீரமைந்தன் On Feb 13, 2020 லெப். சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணி தாக்குதல் தளபதி லெப்டினன்ட் கேணல் வீரமைந்தன். கிளிநொச்சி மாவட்டம் கோணாவில் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மங்களேஸ்வரன் என்ற இளம் மாணவன் தாயக விடுதலையில் வேட்கை கொண்டு, 1998 ம் ஆண்டு துவக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான். அடிப்படைப் பயிற்சிகளை முடித்துக் கொண்டு வீரமைந்தன் என்ற இளம் போராளியாக கடற்புலிகளில் இணைக்கப்பட்டான். விசேட பயிற்சிகளை பெற்றுக் கொண்ட வீரமைந்தன் , புங்குடுதீவு சிறிலங்கா கடற்படை மீதான தாக்குதலில் தனது கன்னிச் சமரை தொடங்கி திறமுடன் செயற்பட்டான். தொடர்ந்து எமது கடற்பரப்பில் பாதுகாப்பு…
-
- 1 reply
- 760 views
-
-
எத்தடை வரினும் எம்படை நகரும் கப்டன் அன்பரசி படையணி எத்தடை வரினும் எம்படை நகரும் அன்பரசி படையணியின் வீரம்கண்டு எதிரி அதிர்ந்தான். 29.07.1995ம் ஆண்டு அம்பாறை மாவட்டம் 4 ஆம் முச்சந்தி சிறிலங்கா படை முகாம் தாக்குதலின்போது கப்டன் அன்பரசி வீரச்சாவடைந்தாள். அன்பரசி ஒரு சுறுசுறுப்பான விவேகமான போராளி. இவளது ஞாபகமாகவே மட்டு – அம்பாறை மகளிர் படையணிக்கு அன்பரசி படையணி என்று பெயர் சூட்டப்பட்டது. லெப். கேணல் மதனாவினது சுறுசுறுப்பையும், துணிவையும், புத்துணர்வையும், களங்களில் படைநடத்தும் திறமையையும் கண்ணுற்ற மட்டு அம்பாறை மாவட்ட சிறப்புத்தளபதி அவர்கள் படையணியின் முதல் சிறப்புத் தளபதியாக லெப். கேணல் மதனாவை அன்பரசி படையணியின் சிறப்புத்தளபதியாக நியமித்தார்.…
-
- 0 replies
- 1k views
-
-
[size=1]கரும்புலிகளின் வீரத்தை அழியாது காக்கும் நோக்கில் ஆரம்பிக்கபட்ட [/size]http://www.facebook.com/karumpulimaveerarkal[size=1] இந்த முகப்புத்தாக பக்கம் இதுவரை 904 விருப்பங்களை மட்டுமே பெற்றிருக்கிறது தயவு செய்து அனைவரும் இந்த பக்கத்தின் விருப்பு எண்ணிக்கைகளை பெருக்க உதவி செய்யவும் நன்றி [/size] http://www.facebook.com/karumpulimaveerarkal
-
- 0 replies
- 567 views
-
-
எழுத்துருவாக்கம்..சு.குணா. ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையின் தாக்கத்தால் 1998ம் ஆண்டில் விடுதலைப் புலிகளமைப்பில் இணைந்து கொண்டவர்களில் ஒருவனாக இணைந்தவன் தான் தமிழ்முரசு. கரும்புலி லெப் கேணல் சுபேசன் அவர்கள் நினைவாக அவரது பெயரைச் சுமந்த பயிற்சி முகாமான சுபேசன் 02ல் பயிற்சி முடித்து கடற்புலிகளனியில் இணைக்கப்பட்டு மாவீரரான லெப் கேணல் தமிழன் அவர்கள் தலைமையில் செம்மலையில் கடற்புலிகளின் அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சிகள் பெற்று பயிற்சிகள் முடிவடைந்ததும். விடுதலைப் புலிகளால் மேறகொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையான ஒயாத அலைகள் மூன்றில் பங்குபற்றி தனது முதலாவது சமரில் மிகவும் திறம்பட செயற்பட்ட தமிழ்முரசு.அதன் பின்னர் தமிழீழத்திற்க்கு பலம் சேர்க்கின்ற பணிகளுக்க…
-
- 0 replies
- 437 views
-
-
எனது அன்புத் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் தலைமைச்செயலகம், தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழீழம். மே.21.2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குரிய தமிழீழ மக்களே! விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்துருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று, எமது சண்டையணிகளையும் மரபுப்படையணிகளையும் வழிப்படுத்தி, நெறிப்படுத்திச் சமராடிய எமது வீரத்தளபதி இன்று எம்முடன் இல்லை. இவரது இழப்பால் எமது தேசம் ஆற்றமுடியாத துயரத்திலும் ஆழ்ந்த வேதனையிலும் இன்று மூழ்கிக்கிடக்கி…
-
- 1 reply
- 795 views
-
-
என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி - காணொளி 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது. சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்கப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி பிரிகேடியர் தீபன், பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை “என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்.” தமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அ…
-
- 0 replies
- 462 views
-
-
-
- 1 reply
- 872 views
-
-
அன்னலிங்கம் பகவதி தம்பதியினரின் மூத்த புதல்வன் . ராஜ்கண்ணா என்ற இயற்பெயர் கொண்ட எங்கள் கஜேந்திரன். முல்லைதீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு சிவநகரில் சூரிய உதயத்தை முந்திக்கொண்டு அழகிய குழந்தையாய் பிறந்த பொழுது பெற்றோரும் அறிந்திருக்கவில்லை. இவன் இந்த மண்ணின் மைந்தன் என்று. ஒரே தங்கையும் அன்பு தம்பியுமாய் கலகலப்பான அழகிய குடும்பமாக மகிழ்ச்சியாக இருந்தாலும் தமிழர் நிலங்களில் நடைபெற்ற சிங்கள ஆக்கிரமிப்புக்களைக் கண்டு சிறுவதிலையே சீற்றம் கொண்டான். தானும் போராடவேண்டும் என்று நினைத்து போராட்டத்திற்கு இணைவதற்கு சென்றவனை மீண்டும் வீட்டிற்கு அனுப்பிவைத்தனர். "உனக்கு போராட போற வயது இன்னும் வரவில்லை இப்போது படி" "என்ற தந்தையின் அறிவூட்டலில் சிறிது காலம் அமைதியாய் வ…
-
- 0 replies
- 277 views
-
-
11-06-2008. அதிகாலை 5.00 மணியிருக்கும். புதுக்குடியிருப்பு- கைவேலிப்பகுதியில் அமைந்திருந்த எனது முகாம் வோக்கி “அல்பா றோமியோ……. அல்பா றோமியோ….. பப்பா சேரா……” என்று தொடர்ச்சியாக அழைத்துக்கொண்டிருந்தது. அரைத்தூக்கத்தில் படுத்திருந்த நான் வோக்கி அழைக்கும் சத்தம் கேட்டதும் அவசரமாக எழுந்து வோக்கியின் அழைப்பை ஏற்றுக்கொண்டபோது எதிர்முனையில் கடற்புலிகளின் நிர்வாகச்செயலகப்போராளி கதைத்தார். “சீர்மாறனும் இன்னும் நான்கு போராளிகளும் வீரச்சாவு. மன்னார்- எருக்கலம்பிட்டியில் எங்கடயாட்கள் நல்ல அடி கொடுத்திருக்கிறார்கள். நவீனரக ராடர்களும் ஆயுதங்களும் எடுத்திருக்கிறார்கள்.” என்றுடி கூறிவிட்டு தொடர்பை துண்டித்துக்கொண்டார் அந்தப்போராளி. இந்தத்தகவல் கிடைத்ததும் நான் உடனேயே குளித்து வெளிக்க…
-
- 0 replies
- 217 views
-
-
எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் முகுந்தா.! 19.06.1997 நெடுங்கேணிப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர் மேற்கொண்ட எறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் முகுந்தா அவர்களின் 24ம் ஆண்டு வீரவணக்கநாள் இன்றாகும்.இம்மாவீரருக்கு வீரவணக்கத்தை தெரிவித்து கொள்ளுகின்றோம். எங்கள் விடுதலைக்கான பயணத்தில் அவளது இழப்பு எவராலும் ஈடுசெய்ய முடியாத ஒன்று. ஒரு தனி மனிதப்பிறவி. போராளி என்பதை மீறி, தன்னை அர்ப்பணித்து அவள் ஆற்றிய பணி அதிகம். எத்தனையோ போராளிகள் கூட்டிணைந்து நடத்தும் தாக்கு தல்களின் வெற்றிக்கு மூலவேர்களைத் தாங்கி நின்றவள் முகுந்தா. சாதாரண சம்பவங்களை அல்லாமல் தான் வாழ்ந்த கடைசி நிமிடம்வரை மறக்க முடியாத எத்தனையோ மெய்சிலிர்க்க வைக்கும…
-
- 0 replies
- 351 views
-
-
எல்லாளன் தாக்குதல் 4 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றில் முக்கியத்துவமுடிய தாக்குதல்களின் பட்டியலில் இடம் பிடித்த எல்லாளன் தாக்குதல் நடவடிக்கை 22.10.2007 அன்று தலைவர் அவர்களின் இரகசிய திட்டத்திற்கிணங்க நடத்தப்பட்டு பெரும் வெற்றியும் ஈட்டப்பட்டது. எல்லாளன் நடவடிக்கை என்பது இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அனுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்புக் கரும்புலி அணியினர், 2007 அக்டோபர் 22 முன்காலையில் நடத்திய தாக்குதலாகும். இந்நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளால் தரை மற்றும் வான் வழித் தாக்குதல்கள் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் 21 பேரும்…
-
- 13 replies
- 1.6k views
-
-
‘தலைவர் இருக்கின்ற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்புத்தான் முக்கியம். அண்ணைக்கு நீங்கள் தான் தோள் கொடுக்கவேண்டும். உங்கட பங்களிப்பில்தான் எங்கட மண்ணை மீட்க முடியும். ஆதலால்தான் நாங்கள் கரும்புலி என்ற வடிவம் எடுத்தனாங்கள். வானேறி வந்து குண்டு போடுகிற சிங்கங்களை அவையிட குகைக்கையே சந்திக்கப்போறம்.”கரும்புலி லெப்.கேணல் இளங்கோ தமிழீழ மக்களுக்கு எழுதிய இறுதி மடலின் வரிகள் இது.09.10.2007என் அன்பான மக்களுக்கு, சிங்கள வெறியன் என்ன செய்கின்றான் என நீங்கள் அனைவரும் கண்ணால் பார்க்கிறீர்கள். இருந்தும் சில விடயங்களை சொல்லிவிட்டு போறன். தலைவர் இருக்கிற காலத்திலேயே நாங்கள் நிச்சயம் தமிழீழம் மீட்போம். இது உறுதி. அதற்கு உங்கட பங்களிப்ப…
-
-
- 15 replies
- 1.5k views
-
-
எல்லாளன் நடவடிக்கையில் காவியமான கரும்புலி மாவீரர்களின் வீரவணக்க நாள் கரும்புலி லெப். கேணல் இளங்கோ, கரும்புலி லெப்.கேணல் வீமன், கரும்புலி லெப். கேணல் மதிவதனன், கரும்புலி மேஜர் சுபன், கரும்புலி மேஜர் கனிக்கீதன், கரும்புலி மேஜர் இளம்புலி, கரும்புலி மேஜர் காவலன், கரும்புலி மேஜர் எழிலின்பன், கரும்புலி கப்டன் தர்மினி / திருமகள், கரும்புலி கப்டன் புரட்சி, கரும்புலி கப்டன் கருவேந்தன், கரும்புலி கப்டன் புகழ்மணி, கரும்புலி கப்டன் புலிமன்னன், கரும்புலி கப்டன் அன்புக்கதிர், கரும்புலி கப்டன் சுபேசன், கரும்புலி கப்டன் செந்தூரன், கரும்புலி கப்டன் பஞ்சீலன், கரும்புலி கப்டன் ஈழப்பிரியா, கரும்புலி கப்டன் அருள்மலர், கரும்புலி கப்டன் ஈழத்தேவன், கரும்புலி லெப். அரு…
-
-
- 6 replies
- 3.5k views
-
-
இதுக்குள்ளை இருக்குது கேளுங்கோ! வீரச்சாவு : 1999 https://eelam.tv/watch/border-force-first-woman-maaveerar-ம-தல-வத-எல-ல-ப-பட-ம-வ-ரர-ரத-அவர-கள-ன-வரல-ற_BronIRZ7v31JVGZ.html
-
-
- 4 replies
- 681 views
-