தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
தற்கொலைகளைத் தடுக்கும் ஆற்றல். நாள்தோறும் தற்கொலைகள் பெருகிவருகின்றன. பசி, நோய், பணம், காதல், ஏமாற்றம், அவமானம், மனநலபாதிப்பு என தற்கொலைக்கான காரணங்கள் பலவாக இருந்தாலும் எல்லோருக்குமான உயிர்வலி ஒன்றாகத்தான் உள்ளது. மனத்தடுமாற்றம் என்பது யாவருக்கும் பொதுவானது. அப்போது மனதை தடுத்து மாற்றம் செய்யும் ஆற்றல் யாருக்கு இருக்கிறதோ அவர் தற்கொலையைத் தடுக்கும் ஆற்றலுடையவராவார். அந்த ஆற்றல் யாருக்கெல்லாம் இருக்கும்..? நம் எல்லோருக்கும் அந்த ஆற்றல் உண்டு. ஆனால் நாம் தான் அதனைப் பயன்படுத்துவதில்லை. நம் மனம் தடுமாறும்போது.. நாம் என்ன எதிர்பார்க்கிறோம்..? நம் குறையைக் கேட்க யாராவது இருக்கமாட்டார்களா? என்பது தானே.. அதைதானே தற்கொலை செய்துகொள்பவர்களும் எதிர்பார்க்கி…
-
- 6 replies
- 1.2k views
-
-
தூரக்கிழக்கு கரை ஓரந்தான் தாழப்பறந்து வரும் மேகந்தான் உங்கிட்டே சேராதோ !! எம்பாட்ட கூறதோ !! ஒண்ணாக நாம் கூடும் சந்தர்ப்பம் வாராதோ !! ஏகாந்த அமைதியில் சுழலும் இன்னிசையும் என்னவளின் நினைவுகளும் இணைந்துவிட்ட ஒர் இனிய இரவில், கற்பனையெனும் காற்றுக் குதிரை ஏறி பால்ம வீதிகளில் பாய்ந்தோடிக் கொண்டிருந்த கணத்தில் எழுந்த ஒரு சின்ன சிந்தையே இந்தப் பதிவின் மூலம்... கற்பனை என்ற சொல்லுக்கும் சிந்தனை என்ற சொல்லுக்கும் அதிக வேறுபாடு கிடையாது என்றே நினைக்கிறேன். ஒழுங்குபடுத்தப் படாத எண்ண ஓட்டங்களை கற்பனை என்றும் சீர்படுத்தப்பட்ட எண்ண ஓட்டங்களை சிந்தனை எனலாம் என்று நினைக்கிறேன். நாளைய பற்றிய ஏக்கங்களும், எண்ணங்களும்தான் மனிதனை உயிர்ப்புடன் வைத்திருக்கவும் புது புதிதாக எதையா…
-
- 6 replies
- 1.4k views
-
-
தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 2 விளையாடி விளையாடித் தமிழ் படிப்போம் சொல்லதிகாரம் ஒரு எழுத்துத் தனித்தோ அல்லது பல எழுத்துக்கள் சேர்ந்தோ ஒரு முளுப்பொருளைத் தருமாயின் அதற்குச் சொல் அல்லது பதம் எனப்பெயர். அதாவது சொல் என்பதற்கு அவசியம் அதன் பொருள் என்னவென்பதே. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று தொல்காப்பியரும் எல்லாச் சொற்களும் பொருள் உள்ள கருத்துள்ள சொற்களே என்று இலக்கண விதிகளும் உண்டு. இதற்கு விதிவிலக்கான சொற்களை அதாவது பொருள் அற்ற சொற்களை அசைச் சொல் எனவும் அழைத்தனர்.விதிவிலக்கான சொற்கள் என்பதற்கு சில உதாரணம் மியா எல்லா என்ற சொற்களும் நாங்கள் ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் ஹலோ என்ற சொல்லும் இன்னும் வேறுபலவும் இருக்கலாம் மியா என்ற சொ…
-
- 106 replies
- 36k views
-
-
வணக்கம் உறவுகளே ! மீண்டும் ஒரு போட்டி நிகழ்வினூடாக உங்களைச் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. போட்டி என்னவெனில், நான் ஐந்து சொற்களின் ஆரம்ப எழுத்தையும் இறுதி எழுத்தையும் எழுதுவேன். நடுவே எழுதப்படாத எழுத்துக்களைக் கண்டுபிடித்து சரியான சொற்களைக் கூறவேண்டும். அனைத்துச் சொற்களும் தனித் தமிழ்ச் சொற்களாக இருக்கும். நாற்பத்திஎட்டு மணிநேரம் உங்களுக்கானது. பிரித்தானிய நேரம் இரவு எட்டு மணிக்கு சரியான விடை அறிவிக்கப்படும். யார் முதலில் ஐந்து சொற்களையும் சரியாகக் கண்டுபிடிக்கிறாரோ ????அவருக்கே பச்சை. சரி உறவுகளே! யார் முதலாவது பச்சையை வெல்கின்றீர்கள் பார்ப்போம். கா_ _ _ _ _ ர் க_ _ _ _ _ _று க_ _ _ _ _ _லி போ _ _ _ _ _ ம் பு _ _ _ _ _ வு
-
- 145 replies
- 16.2k views
-
-
பண்டைத் தமிழ் எழுத்தின் காலம் – நடன காசி நாதன் இன்றைக்கிருக்கும் தமிழ் எழுத்தின் மிகப் பழைய வடிவத்தைப் ”பண்டைத் தமிழ் எழுத்து” என்கிறோம். இவ்வெழுத்தைச் சிலர் தற்பொழுது ”தமிழ் பிராமி” என்றும்”தாமிழி” என்றும் எழுதுகின்றனர். தமிழ் பிராமி என்றழைப்பதற்கு அவர்கள் கூறும் காரணம் தமிழ் மொழிக்காக உருவாக்கப்பெற்ற பிராமி எழுத்து என்றும்,அசோகன் பிராமி அல்லது மௌரியன் பிராமியிலிருந்து இவ்வெழுத்துத் தோன்றியதே எனினும் அதிலிருந்து வேறுபட்டது என்றும் கூறுகின்றனர். அவ்வாறெனில் பிராகிருத மொழிக்காக எழுதப்பெற்ற எழுத்தைப் ”பிராகிருத பிராமி” என்று அழைப்பதுதானே சரியாகும். மேலும் அப்பிராமி எவ்வெழுத்திலிருந்து தோன்றியது? திடீரென்று அவ்வெழுத்தை மௌரியர் உருவாக்கிக் கொள்கையில் மற்ற பகுதி மன்னர்கள், க…
-
- 1 reply
- 3.5k views
-
-
நேற்றுப் பூத்த பூஞ்சோலை பூக்கள் பட்டுச் சேலை கட்டி காதல் வாசம் பரப்பினால் மயங்காத வண்டுகளும் உண்டோ !! மொட்டுக்கள் வாசம் பரப்புவதில்லை... மலர்கள் மட்டுமே மனம் பரப்புகின்றன. வாசம் வண்டுகளுக்கு வைக்கப்படும் ஓர் அழைப்பு!! தன்னுள் உள்ள மகரந்தம் பருகப்படும் என்று தெரிந்தே வட்டமிடும் வண்டுகளுக்கு அழைப்பு விடுக்கும் மலர்களைப் போல் இங்கே இவளும் காதலனை போற்றி துதிக்கிறாள். காதலன் மேல் கொண்ட அன்பினால் இவளுக்கு காதலனின் குதிரைக் குளம்படிகள் கூட சந்தனம் போல் தெரிகிறது... அந்த முத்தொள்ளாயிரப் பாடல் இதுதான் ஆடுகோ சூடுகோ ஐதாக் கலந்துகொண்டு ஏடுகோ டாக எழுதுகோ-நீடு புனவட்டப் பூந்தெரியல் பொற்றேர் வழுதி கனவட்டங் கால்குடைந்த நீறு ஆடி மகிழ்வேன் !! சூடிக் களிப்பேன் !! நீண்ட க…
-
- 5 replies
- 1.1k views
-
-
’இலக்கியம்’ என்ற பதம் எதனைக் குறிக்கும் என்பதற்கு விடையளிக்க ஏ.ஜே.கனகரட்னா அவர்களை விடவும் சிறந்தவர் இருக்கமுடியாது. அவர் எதனைக் கூறுகிறார் என்றுபார்ப்போம். “இலக்கியம் என்றபதம் ஆங்கிலத்தில் எதனைக் குறிக்கின்றது என்பதனை ஆராய்தல் தெளிவை ஏற்படுத்தும். ‘‘Literature’’ (இலக்கியம்) - என்றபதம் ,14ஆம் நூற்றாண்டளவில் ஆங்கிலத்தில் புழக்கத்திற்கு வந்தது. அதன் இலத்தீன் வேர்ச்சொல் ‘எழுத்து’ (Letter of the alphabet) எனப் பொருள்படும். இவ்வாறு நோக்கின் எழுத்தில் அல்லது அச்சிலுள்ள சகலதையுமே ‘Literature’ என்ற பதத்துள் அடக்கிவிடலாம். எப்பொருளைப் பற்றியும் அச்சிலுள்ளது ‘Literature’ -இலக்கியம்தான். 14ஆம் நூற்றாண்டில்,பிரஞ்சுமொழியின் பாதிப்பின் ஊடாக ஆங்கிலத்தில் புழக்கத்திற்கு வந்த ‘Literatu…
-
- 0 replies
- 917 views
-
-
இன்று எம்மிடையே வழக்கில் உள்ள தாய் மொழியாம் தமிழ் மொழியின் எழுத்து உருவங்களில் மாற்றங்கள் அத்தியாவசியமானவையா ?? இல்லையா ?? என்பது ஓர் விவாதத்துக்குரிய பொருளாகின்றது . பிராமி எழுத்துக்களில் தொடங்கிய தமிழின் வரிவடிவம் , வட்டெழுத்தில் ஊடறுத்து பாய்ந்து இன்று யூனிகோட்டில் வரை பெரும் வளர்ச்சியை அடைந்துள்ளபொழுதும் , வரிவடிவங்களில் தமிழ் தனது தனித் தன்மையை இழந்திருக்கவில்லை . அனால் வரிவடிவத்தில் மாற்றங்கள் வந்தாலே தமிழ் மொழி மேலும் வளர்ச்சி அடையும் என்ற கருத்துக்களும் இப்பொழுது எழ ஆரம்பித்திருக்கின்றன . அண்மையில் வெளிவந்த ஓர் ஆய்வுக்கட்டுரை இந்த விடையத்தைத் தொட்டுச் செல்கின்றது . அதை உங்களுடன் பகிருகின்றேன் கள உறவுகளாகிய உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்கின்றேன் . நேசமுடன் கோ…
-
- 15 replies
- 9.6k views
-
-
வீரமாமுனிவர் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்த வீரமா முனிவர் பிறந்த தினம் இன்று (1680) கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பது இவரின் இயற்பெயர் .கிறிஸ்துவ மதத்தை இங்கே பரப்ப வந்தவர் அதற்கு இம்மக்களின் மொழியை கற்கவேண்டும் என கற்க ஆரம்பித்தவர் தமிழ் மீது தீராக்காதல் கொண்டார் என்பது வரலாறு . தைரியநாதசாமி என்று தம் பெயரை மாற்றிக்கொண்டு பின்னர் அது வடமொழி சொல் என்றறிந்து வீரமாமுனிவர் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார். 23 நூல்களை தமிழில் இயற்றிய இவர் கிறிஸ்துவின் கதையை தேம்பாவணி என எழுதினார் . அந்நூலில் கதை மா…
-
- 0 replies
- 718 views
-
-
கடிகாரம் - சரியான தமிழ் சொல் தானா? நான் அறிந்த வரை 'நேரம்காட்டி' தான் 'Watch' எனும் ஆங்கிலச் சொல்லுக்கு சரியான தமிழ் சொல் ஆகத் தெரிகிறது. கடிகாரம் என்றால் என்ன? எங்கிருந்து வந்தது? கடி + காரம் (காரமான உணவை கடிப்பது) என்றும் பொருள் கொள்ளலாம். யாழின், நல்லதமிழ் அறிந்தோர்கள் விளக்குவார்களா? நன்றி
-
- 6 replies
- 3.5k views
-
-
கோடைகால வெயில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. வெளியில் போன நான் மிகவும் களைப்புடன் வீட்டுக்குத் திரும்பியிருந்தேன். “ஐயோ சரியான களைப்பாய்இருக்குது ஒரு காபி கிடைக்குமா அம்மா?” தான் செய்த வேலைகளை அப்படியே நிறுத்தி விட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து கையில் காபியுடன் வந்தாள். கையில் வாங்கி மடக் மடக் என்று குடிக்கும் ஆசையில் உறிஞ்சினேன். “ஆ” என்று அலறியப்படி காபீயை அப்படியே மேசையில் வைத்து விட்டு “என்னம்மா காபி கேட்டால் இப்படியா தருவாய்” என்று ஒரு செல்லக் கோபத்துடன் பார்த்தேன். ஒரு காபி குடிப்பதில் தொடங்குகிறது எங்கள் குற்றியலுகர முயற்சி. இங்கு “உறிஞ்சுதல் ” என்று சொல்லும் போது உதடு குவிகிறது. குழந்தைகளை ஆசையுடன் கட்டியணைத்து முத்தமிடும் போது “உம்மா…
-
- 2 replies
- 4.6k views
-
-
ஆத்திசூடி 1. அறம் செய விரும்பு / 1. Learn to love virtue. 2. ஆறுவது சினம் / 2. Control anger. 3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity. 4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy. 5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence. 6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation. 7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise learning. 8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload. 9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast. 10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great. 11. ஓதுவது ஒழியேல் / 11. Discern the good and learn. 12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy. 13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange. 14. கண்டொன்று சொல்லேல் / 14.…
-
- 5 replies
- 2.9k views
-
-
தமிழ் மொழியின் தனிச்சிறப்புகள் யாவை ? ஏன் நாம் தமிழைக் கொண்டாட வேண்டும் ? மகுடேசுவரன் 1. மொழி, அது தோன்றி வாழும் நிலத்தோடு தாவரங்களைப்போன்ற வேர்த்தன்மையுடையது. பூமத்தியரேகையை ஒட்டிய வெப்ப மண்டல நிலப்பகுதியின் மொழியாகிய தமிழும் அதிலிருந்து தோன்றிய திராவிட மொழிகளும் தாடையை நன்றாகத் திறந்து உச்சரிக்க வேண்டிய வை. மேற்கத்திய மொழிகளைத் தாடையைப் பிரிக்காமல் பல்வரிசை ஒட்டியபடி பேசவேண்டும். அவர்கள் வாய்திறந்து பேசினால் குளிர்காற்று உள்புகுந்துவிடும். அந்தக் குளிரைச் சமன்செய்ய உடல் வெப்பம்திரட்ட வேண்டும். ஆனால், தமிழ் அப்படியில்லை. தமிழைப் பேசினால் உடல் வெப்பம் தணிந்து சீராகும். 2. வெப்ப மண்டல நாடுகள் மலைமடுக்கள் குறைந்த நீண்ட நெடிய சமவெளிப் பரப்புகளால் ஆனவை…
-
- 9 replies
- 5.5k views
-
-
நந்தவனங்களை கடந்திருக்கிறேன் சிந்தை சிதறவில்லை. நினைவும் மனமும் நிறையவில்லை. ஆனால் என்றோ உரசிச் சென்ற அவள் சேலையின் வாசம் ஏன் மூக்கின் நுனியில் இன்னும் எஞ்சியிருக்கிறது. கூடினால் ஓடிவிடும் உடலால் கொண்ட மோகம். அணையாமலே எரிந்து கொண்டிருக்கிறது உள்ளத்தில் அவள் சேலை தீண்டிய சின்னஞ் சிறிய நெருப்பு. எண்ணக் கதுப்புகளில் அணைய விரும்பி அவள் தீண்டிச் சென்ற இந்தக் கரங்களை தடவிப் பார்க்கிறேன்.....இனிமையான அந்த இறந்த காலத்தை இந்தக் கவிகள் இன்னமொருமுறை மீட்டுத் தருகிறது விசும்பின் வெண்துளிகள் பூமியைப் நிரப்பும் இன்னிலவுப் பொழுதில், சுனையில் நனைந்து பூக்கள் புணைந்து நெற்றித் தரள நீர் உருளும் அவள் இளமேனி அழகை அள்ளிப் பருகி, இடை தழுவி இமை மூடி இதழ் ஒற்றி இன்பம் துய்க்காமல் இன்னும்…
-
- 18 replies
- 1.4k views
-
-
http://www.tamillexicon.com/thirukkural/திருக்குறளுக்கு ஒரு இணைய பக்கம் உங்களது பக்கத்தில் இதை பகிர்ந்து கொண்டால் அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் சென்றடையும் https://www.facebook.com/photo.php?fbid=10151710937322473&set=a.10150180986682473.306131.141482842472&type=1&theater
-
- 1 reply
- 837 views
-
-
-
தமிழ் மொழி நம் தாய்மொழி தமிழாகும். உலகின் பன்மொழி ஆய்வாளர்களினால் முதலில் தோன்றிய மொழி என்ற சிறப்புப் பெற்ற மொழி. அமிழ்தினும் இனியதெனப் புகழப்படுகின்ற மொழி. 9 கோடி தமிழர்களின் தனித்துவமான மொழி. “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” எனப் பாரதியாரால் போற்றப்பட்ட மொழி. கல்வெட்டிலிருந்து கணிணி வரை பரந்த மொழி. தமிழ் மொழி இதுவரை இழந்தவை அகத்தியம் பெருநாரை பெருங்குருகு முதுநாரை முதுகுருகு பஞ்சமரபு பஞ்சபாரதீயம் பதினாறு படலம் வாய்ப்பியம் இந்திரகாளியம் குலோத்துங்கன் இசைநூல் முதலிய எண்ணற்ற அரிய நூல்களும் கல்வெட்டு முதலிய எண்ணற்ற ஆதாரங்களும் தமிழ் வாழும் இடங்கள் தமிழ்நாடு இலங்கை சிங்கப்பூர் மலேசியா பர்மா மொரீசியஸ் தென்னாபிரிக்கா கயானா பிஜி சுரீனாம் ட்ரிடாட் டொப…
-
- 5 replies
- 1.2k views
-
-
தமிழ் இலக்கணப் பரீட்சை எழுத்ததிகாரம் 1.தமிழ் மொழியில் இலக்கணம் ஐந்து அதிகாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது அவை யாவை ? 2.உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் சேர்ந்து அவற்றைச் சார்ந்து பிறப்பதால் உயிர்மெய்யெழுத்துக்களை எவ்வாறு அழைப்பர் ? 3.அ இ உ என்ற மூன்று உயிரேழுத்துக்களின் சிறப்புப்பெயர் என்ன ? 4.அந்த இந்த உந்த என்ற சொற்களை எப்படி அழைப்பர்? 5. எ ஆ ஓ ஏ என்ற எழுத்துக்களின் சிறப்புப்பெயர் என்ன? 6. எழுத்துக்களை இலக்கணத்தில் இரண்டுவகையாகப் பிரிப்பார்கள் அவை எவை? 7.உயிரெழுத்துக்கள் எந்த எழுத்துவகையைச் சேர்ந்தவை? 8.மூன்றுவகையான மெய்யெழுத்துக்களின் பிரிவுகள் எவை? 9.ஒலிக்கும்போது மூக்கினால் காற்று வெளிவரும் மெய்யெழுத்துக்களின் பெயர் என்ன ? …
-
- 62 replies
- 18.4k views
-
-
கம்பனும் கண்ணதாசனும் வளவ.துரையன் இந்த இரண்டு மகாகவிகளும் காலத்தால் அழிக்க முடியாத மாபெரும் காவியம் தரவல்லவர்கள். ஒருவர் கவிச்சக்கரவர்த்தி, மற்றொருவர் கவியரசர். தேரழுந்தூரில் தோன்றி, சடையப்ப வள்ளலால் திருவெண்ணை நல்லூரிலே ஆதரிக்கப்பட்டு ”ஒரு பூனை பாற்கடலைக் குடிப்பதுபோல மாபெரும் இராமகாதை இயற்ற வந்தேன்” என்ற கம்பனும், சிட்டுக்குருவிகள் கூட கூடுகட்டப் பயப்படும், பொட்டல்வெளியான சிறுகூடற்பட்டியிலே பிறந்து, “போற்றுபவர் போற்றட்டும், புழுதிவாரித் தூற்றுபவர் தூற்றட்டும்; ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன், எவர் வரினும் நில்லேன், அஞ்சேன்” என்று ஐம்பத்திரண்டு வயதுவரை வாழ்ந்து சிகாகோ நகரில் தம் வாழ்வை முடித்த முத்தையாவான கண்ணதாசனும் தமிழன்னையின் இரு கண்களைப் ப…
-
- 0 replies
- 3.7k views
-
-
எண்பதுகளில் தமிழ் இலக்கியம் வெங்கட் சாமிநாதன் (தில்லியிலிருந்து அன்று வெளிவந்துகொண்டிருந்த BOOK REVIEW என்ற ஆங்கில இதழ், தமிழ் எழுத்துக்கு என ஒரு தனி இதழ் வெளியிட்டது. அந்த இதழுக்காக தமிழ் இலக்கியத்தின் எண்பதுக்களில் வெளிவந்த தமிழ் எழுத்துக்கள் பற்றி நான் எழுதியது பின் வரும் கட்டுரை. From the Eighties to the Present என்ற தலைப்பில் Book Review-வின் நவம்பர்-டிசம்பர் 1992 இதழில் வெளியான கட்டுரைதான் இங்கு தமிழில் தரப்பட்டுள்ளது. அந்தச் சிறப்பிதழில் பிரசுரமான இரண்டு மற்ற கட்டுரைகள் ராஜூ நரஸிம்ஹன் A Telescopic Arousal of Time என்ற தலைப்பில் அம்பையின் சிறுகதைத் தொகுப்பு Lakshmi Holmstrom-ன் மொழிபெயர்ப்பில் A Purple Sea என்ற தலைப்பில் வெளி வந்த புத்தகத்தைப் பற்றியது. அட…
-
- 1 reply
- 2.7k views
-
-
மாமலையும் ஓர் கடுகாம் ! கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால் மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம் என்பார் கவிஞர் பாரதிதாசன். மாமலைகூட ஓர் கடுகாகத் தெரியும் இந்தக் காதலர்களுக்கு, பெற்றோரிடம் அனுமதி பெறுவது என்பது மாமலையைத் தூக்குவது போல கடினமாகத் தெரிவதுதான் காதலின் விந்தை! தன் காதலைப் பெற்றோருக்குப் புரியவைத்து அவர்களின் அனுமதியோடு திருமணம் செய்துகொள்பவர்களுக்கு தம் வாழ்வில் எதிர்கொள்ளும் மலையளவு துன்பங்கள் கூட கடுகளவாகத் தெரியும்! வாழ்க்கையிலிருந்து வந்ததுதான் இலக்கியம் என்றாலும் இலக்கியத்துக்கும் வாழ்க்கைக்குமான இடைவெளி மிகவும் பெரிது. இலக்கியத்தையும் - வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த உண்மை புலப்படும். ஒரு காதலர் புலம…
-
- 0 replies
- 4.7k views
-
-
தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் விளையாடி விளையாடித் தமிழ் படிப்போம். தமிழ் மொழிக்கு இலக்கணம் இலக்கியம் என்று இரு கண்கள் உள்ளன. இலக்கியம் மக்களின் இன்ப துன்பங்கள் அடங்கிய வாழ்க்கையினை சொற்களின் மூலம் மக்கள் ரசிக்கும் வண்ணம் எடுத்துச் சொல்வதாகும். இலக்கணம் என்பது இலக்கியங்களைச் சீராக உருவாக்கவும் தமிழ்மொழியின் அடையாளம் பாதுகாக்கப்படவும் அதன் மரபு கெடாமல் எழுதி வ ரவும் கற்று வரவும் உதவி செய்து நிற்கின்ற விதிகளாகும். அதாவது இலக்கணம் என்பது தமிழ்மொழியைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் கருவி என்று கூடக் கூறலாம். பெருக்கெடுத்தோடும் ஆற்று வெள்ளம் திசை திரும்பாமல் பல திசைகளில் சிதறி ஓடாமல் ஒரே திசையில் ஓடுவதற்குத் துணையாக இருக்கும் ஆற்றின் கரையைப் போலவே தமிழ் ம…
-
- 224 replies
- 20.6k views
-
-
47 வகை நீர்நிலைகள் 01. அகழி - (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட� �ட நீர் அரண் 02. அருவி - (Water fall)மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது 03. ஆழிக்கிணறு -(Well in Sea-shore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு 04. ஆறு -(River) - பெருகி ஓடும் நதி 05. இலஞ்சி -(Reservoir for drinking and other purposes)பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம் 06. உறை கிணறு -(Ring Well)மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு 07. ஊருணி -(Drinking water tank)மக்கள் பருகும் நீர் நிலை 08. ஊற்று - (Spring) பூமிக்கடியிலிருந� �து நீர் ஊறுவது 09. ஏரி -( Irrigation Tank) வேளாண்மை பாசன நீர் தேக்கம் 10. ஓடை -(Brook)அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுத…
-
- 3 replies
- 2.1k views
-
-
“If all the Research works related to Tamil language are scientifically catalogued into one single spot, the menace of repetition in Tamil language research can be eradicated and a new resurgence will fill to fuel Tamil language development suited for the era of Science” – Dr.Semmal Manavai Mustafa 1. 2. 4 எட்டுத்தொகை அகநூல்களுள் உயிரினக் குழுமம் - Part 1 http://tamillanguagearchives.blogspot.in/2013/09/1-2-4-archive-mmstf-78-part-1.html 1.2.3 - திருந்திய மொழிகள் ; திருந்தா மொழிகள் - திருமுருகன் http://tamillanguagearchives.blogspot.in/2013/09/123-archive-mmstf-77.html 1.2.2 - தமிழ் மாணவர் ஆவணங்கள் - தொல்காப்பிய பொருளதிகார அமைப்புமுறை …
-
- 0 replies
- 943 views
-
-
அஸ்வத்தாமன், என்றொரு யானை! ” அஸ்வத்தாமா…. அஸ்வத்த்….தாமா.. ” துரியனின் குரல் மெலிந்து மிகுந்த வேதனையுடன் வெளிப் பட்டது. பதினெட்டாம் நாள் போர் முடிந்தது. வீமனிடம் துரியன் தன் தொடை பிளந்து விழுந்து கிடக்கிறான். துரியோதனனின் வெற்றிப் பாதைகள் அனைத்தையும் மாயக் கண்ணனின் சூழ்ச்சிகள் தடுத்து நிறுத்திவிட்டன. யாவற்றையும் இழந்து இதோ துரியன் வீழ்ந்து கிடக்கிறான். அவன் கண்கள் அஸ்வத்தாமனை நோக்கி நிலைத்து நின்றது. அஸ்வத்தாமன் சமந்தப் பஞ்சகத்தின் அருகில் அமர்ந்திருந்தான். தன் மடியில் தலை தாழ்ந்து தவித்த துரியோதனனின் கண்கள் அவனைக் கொன்று தின்றன. மஹாரதன் நான், என் தந்தைக்கு அடுத்து சேனையின் அதிபதியாக ஆகவேண்டியவன். துரியோதனன் என்னை ஒரு பொருட்டாக மதிக்கவில்லையே? …
-
- 2 replies
- 1.2k views
-