தமிழும் நயமும்
இலக்கணம் | இலக்கியம் | கலைச்சொற்கள் | பழந்தமிழ்க் காப்பியங்கள்
தமிழும் நயமும் பகுதியில் இலக்கணம், இலக்கியம், கலைச்சொற்கள், பழந்தமிழ்க் காப்பியங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழ் மொழி, செவ்வியல் இலக்கியம், இசை, பெருங்காப்பியங்கள் சம்பந்தமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
694 topics in this forum
-
பழந்தமிழர் போர் மரபும் கொற்றவை வழிபாடும் . பழந்தமிழர் தாய்த்தெய்வ வழிபாட்டில் மிக இன்றியமையாத இடம், கொற்றவை வழிபாட்டிற்கு உண்டு. பழந்தமிழர் வழிபட்ட பல்வேறு பெண்தெய்வங்கள் பற்றிய குறிப்புகள் சங்க அகப்புற இலக்கியங்களில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அத்தகு குறிப்புகளைத் திரட்டி ஒருங்கு வைத்து ஆய்கையில் சங்க இலக்கியங்களில் இடம்பெறும் பெண்தெய்வங்கள் கன்னித் தெய்வங்கள், தாய்த் தெய்வங்கள் என இருவேறு நிலைகளில் குறிப்பிடப்பட்டாலும் அவை தாய்த் தெய்வங்களே. பி.எல்.சாமி அவர்களின் கூற்று இக்கருத்துக்கு துணை நிற்பதாகும். “தாய்த் தெய்வத்தைத் தாயாகவும் கன்னியாகவும் உருவகப்படுத்திக் கூறுவது மிகப் பழங் காலத்திலிருந்தே மரபாக உள்ளது. அவளை எல்லோரையும் பெற்ற தாயாகக் கருதுவதும் அழி…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழ், குறிகளும் ஒற்றும் January 23, 2022 அன்புள்ள ஜெ.. எழுத்து குறித்த அடிப்படையான ஒரு கேள்வி.முற்றுப்புள்ளி , காற்புள்ளி போன்றவை ஆரம்ப கால தமிழில் இல்லை… போக போக தமிழில் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. ஆனால் இதன் பயன்பாடு குறித்து ஒரு தெளிவு இன்னும் வரவில்லை என்றே சொல்ல வேண்டும்.. உதாரணமாக விகடன் போன்ற பத்திரிகைளில் எல்லா வாக்கியங்களிலுமே ஓர் ஆச்சர்யக்குறியை போட்டு விடுவார்கள்… ஒரு முறை பாலகுமாரன் எழுத்தை இப்படி ஆச்சர்யக்குறி போட்டு “ அழகு படுத்திய” ஒரு பத்திரிக்கையைக் கடுமையாக சாடி இருந்தார் வாக்கியங்களின் நடுவே ஒரு பிராக்கெட்டை சேர்த்து சுஜாதா அழகாக காமெடி செய்வார்…அடுத்தடுத்த முற்றுப்புள்ளிகள் வைப்பதன் மூலம் ஒ ஸ்லோனசை (நிதானத்தன்மை) ஏற்பட…
-
- 0 replies
- 996 views
-
-
காரணம் ஏன் தெரியுமா? தேன் கொண்டுவந்தவரை பார்த்து நேற்று ஏன் தேன் கொண்டு வரவில்லை என்று ஒருவர் கேட்க்கிறார்.அதற்கு அவர் கூறிய இனிமை பொருந்திய விடை ஐயா நீங்கள் கூறியதை நினைத்தேன் கொல்லி மலைக்கு நடந்தேன் . பல இடங்களில் அலைந்தேன் . ஓரிடத்தில்பார்த்தேன் உயரத்தில் பாறைத்தேன் எப்படி எடுப்ப தென மலைத்தேன் கொம்பொன்று ஒடித்தேன் ஒரு கொடியை பி டித்தேன் ஏறிச்சென்று கலைத்தேன் பாத்திரத்தில் பிழிந்தேன் . வீட்டுக்கு வந்தேன் . கொண்டு வந்ததை வடித்தேன் கண்டு நான் மகிழ்ந்தேன் ஆகையால் சிறிது குடித்தேன் மீண்டும் சுவைத்தேன் உள்ளம் களித்தேன் உடல் களைத்தேன் உடனே படுத்தேன் கண் அயர்ந்தேன் அதனால் மற…
-
- 0 replies
- 1.4k views
- 1 follower
-
-
குறளோடு கவிபாடு / "குறள் 613" "பரந்த இதயத்தில் முயற்சியின் வலுவில் உறுதியான அலையாக சக்தி பிறக்குமே! உலகிற்கு உதவ கொடுக்கும் கையை உன்னத பெருமையாக உலகம் போற்றுமே வசதி செல்வம் மகத்துவம் அல்லவே!" "உழைப்பில் இதயங்கள் என்றும் ஒளிருமே மற்றவர்களையும் உயர்த்த உயரமாக நிற்குமே! அடுத்தவரின் வலியை துடைக்க முயலுமே ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு அழுத்தத்திலும் உதவிடும் மகிழ்வே உயர் பண்பாகுமே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1.3k views
-
-
-
சங்கப் பாடல்களின் முக்கிய சிறப்பியல்பு மானிட வாழ்வின் மீது, அதன் இன்ப, துன்பங்களின் மீது அதற்குள்ள அக்கறையே ஆகும். ஆனால், எந்த ஒரு பாடலும் இயற்கையை விட்டு முற்றிலும் விலகி நிற்க இயலாது. இயற்கை மானிட வாழ்வின் ஒரு நாடகம் அரங்கேறும் மேடையாகவும், பின்னணியாகவும் சங்க இலக்கியத்தில் இடம் பெறுகிறது. இயற்கை அதன் எல்லாத் தன்மைகளிலும் முக்கியத்துவம் பெற்று, மனித வாழ்க்கையை வண்ணமயமாக்குகிறது. அதாவது, இயற்கையின் முன்னிலையில் மனிதன் பெறும் உணர்ச்சிகளைத் தெளிவாகக் காட்டுகிறது. காதலனைப் பிரிந்து துயருறும் தலைவிக்கு கடல்நீரின் "இழும்' எனும் ஓசை, தன் சொந்த அழுகுரலைப் போலவே கேட்கிறது (கலி.…
-
- 0 replies
- 723 views
-
-
ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும் ‘இலை’என்று பெயர். அகத்தி, பசலி, வல்லாரை, முறுங்கை போன்றவற்றின் இலை ‘கீரை’ ஆகின்றது. மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் ‘பூண்டு’ என்று பெயர் அறுகு, கோரை முதலியவைகளின் இலைகள் ‘புல்’ ஆகின்றன. மலையிலே விளைகின்ற உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர் ‘தழை’. நெல், வரகு முதலியவற்றின் இலைகள் ‘தாள்’ ஆகும். சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர் ‘மடல்’. கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள் ‘ …
-
- 0 replies
- 1.2k views
-
-
நாலடியார் -40: காம நுதலியல் முயங்காக்கால் பாயும் பசலைமற்று ஊடி உயங்காக்கால் உப்பின்றாம் காமம்; - வயங்கு ஓதம் நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப! புல்லாப் புலப்பதோர் ஆறு. 391 கடல் அலைகள் ஓயாது மோதுதற்கு இடமான நீண்ட கழிகளினது குளிர்ச்சி பொருந்திய கரையையுடைய அரசனே! கணவனுடன் கூடிப் புணராவிடின் மேனி எங்கும் பசலை படரும்; ஊடி வருந்தாவிடின் காதலானது சுவையில்லாமல் போகும். எனவே முதலில் கூடிப் பின் ஊடுவதும் காதல் நெறியாம். (தலைவனுக்கு வாயில் நேர்ந்த தோழி, தலைவியின் புலவி நீங்கச் சொல்லியது). தம்அமர் காதலர் தார்சூழ் அணியகலம் விம்ம முயங்கும் துணையில்லார்க்கு - இம்மெனப் பெய்ய எழிலி முழங்கும் திசையெல்லாம் நெய்தல் அறைந்த…
-
- 0 replies
- 5.1k views
-
-
உள ஆற்றுப்படுத்தலில் தூசணங்களின் பங்கு உள ஆற்றுப்படுத்தலில் தூசணங்களின் பங்கு — கமலநாதன் பத்திநாதன், களுவன்கேணி — உள ஆற்றுப்படுத்தலில் தூசணங்கள் மற்றும் மரபுத்தொடர்களின் வகிபாகம் உலக இயங்கியலிலே மனித வலுக்களின் பெறுதியானது மிகத் தேவைப்பாடானதாகும். தனித்தனி மனிதர்களின் கூட்டு வடிவமான சமூகம், அதன் உறுப்பினர்களான ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் நடைமுறைகளிலும் சிறப்பான செல்வாக்கை செலுத்துகின்றது. அவ்வாறான வாய்ப்புக்களையும், இருப்புக்களையும் உரிய வகையில் பயன்படுத்தியோரும், தவறாக பயன்படுத்தியோரும் பெறும் பயன்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுகின்றன. இவ்வ…
-
- 0 replies
- 1.9k views
-
-
முன்பெல்லாம் எந்த சொல்லுக்காவது அர்த்தம் தெரியவில்லை என்றால் அகராதியைப் பார்த்துத் தெரிந்து கொள்வோம். இந்த இணைய உலகில் என்ன செய்வது என்று யோசிக்கத் தேவையில்லை. இருக்கவே இருக்கிறது விக்கிப்பீடியா. பெரும்பாலான சொற்களுக்கான அர்த்தத்தையும், வரலாற்றையும் தெரிந்துகொள்ள உதவுகிறது விக்கி. தமிழ்ச் சொற்கள், வாக்கியங்களுக்கான அர்த்தங்கள், தகவல்களை தெரிந்துகொள்ள தமிழ் விக்கிப்பீடியா உதவுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் தன்னார்வலர்கள் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு தங்களால் ஆன பங்களிப்பைச் செய்து இணையத் தமிழை வளர்த்து வருகின்றனர். அவர்களின் மற்றொரு மைல்கல் விக்கி மாரத்தான். விக்கி மாரத்தான் என்பது ஒரு குறிப்பிட்ட நாள் முழுதும் அனைத்து விக்கி தன்னார்வலர்களும் ஒன்றுகூடி பல்வேறு …
-
- 0 replies
- 592 views
-
-
-
1 தமிழ் - ஓர் உயர்தனிச் செம்மொழி. உயர்தனிச் செம்மொழி என்னும் தொடரில் மூன்று அடைமொழிகள் உள்ளன. உயர், தனி, ;செம் என்பனவே அந்த அடை ;மொழிகள். உயர்ந்தமொழி, தனித்த மொழி, செம்மையான மொழி எதுவோ அதுவே உயர்தனிச் செம்மொழியாகும். உயர்வுத் தன்மை, தனித்தன்மை, செம்மைத் தன்மை ஆகிய மூன்று தன்மைகளையும் கொண்ட மொழியாக நம் தாய்மொழி தமிழ் இருப்பதை இங்கே பார்ப்போம். சொல் வளம் - ஒரு மொழிக்கு உயர்வு அம்மொழியிலுள்ள சொல்வளத்தைப் பொறுத்தே அமையும். கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள உதவும் கருவியே மொழி. கருத்துகளைச் சொற்றொடர்கள் வழியாகவே உணர்த்துகிறோம். சொற்றொடர்களே சொற்களால்தான் உருவாகின்றன. எனவே மொழிக்கு அடிப்படையாக அமைவன சொற்களே. ஆ, ஈ, வா ,போ முதலிய ஒரெழுத்துச் சொற்கள் தமிழில் 50க்…
-
- 0 replies
- 4.4k views
-
-
"பண்டைய தமிழரின் செல்வம் பற்றிய சிந்தனை" இன்று நாம் வாழ்க்கையை வாழ்வாங்கு வாழ்வதற்கும், வளமோடு வாழ்வதற்கும் வழிவகுப்பன, நம் முன்னோர்களின் வாழ்க்கை நெறிகள் ஆகும். இந்த நெறிமுறைகளைப் பத்திரப்படுத்தி அதன் மூலம் எம்மை இன்றும் பக்குவப் படுத்திக் கொண்டு இருப்பன பண்டைய சங்க இலக்கியங்கள் ஆகும். உதாரணமாக பெற்றோர் சேர்த்த செல்வத்தைச் செலவு செய்வோர் உயிருள்ளவராக மதிகக்கப்பட மாட்டார்கள் என்பதையும், பொருள் இல் வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவை என்பதையும், பகுத்துண்டு வாழ்தல் வேண்டும் என்பதையும், மற்றும் நாம் உழைத்து, அதில் கிடைக்கும் செல்வத்தையே நாம் பயன்படுத்தி, அடுத்தவருக்கும் உதவி செய்யப் பயன்படுத்த வேண்டும் என்பதையும் சில சங்க பாடல்கள் மூலம் அறி…
-
- 0 replies
- 611 views
-
-
சென்னை : ""இந்த ஆண்டு முதல் துவக்கப்பட்டுள்ள தமிழ்வழி பொறியியல் படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களில் பெரும்பான்மையினர் நல்ல மதிப்பெண்களை பெறுகின்றனர்,'' என, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் தமிழ்வழி பொறியியல் படிப்புகள் துவக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு சிவில், மெக்கானிக்கல் படிப்புகள் தமிழ் பயிற்று மொழியில் வழங்கப்படுகின்றன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில், தமிழ்வழி பொறியியல் படிப்புகளுக்கான புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அண்ணா பல்கலை துணைவேந்தர் மன்னர் ஜவகர் புத்தகங்களை வெளியிட்டார். பொறியியல் இயற்பியல், பொறியியல் வேதியியல், கணி…
-
- 0 replies
- 844 views
-
-
(14-11-2012 அறிவன்கிழமை மாலை விழுபுரம் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற தேசிய நூலக விழாப் பாட்டரங்கில் கலந்து கொண்டு பாடியது) பெருஞ்சித்திரனார் பேசினால்…! அன்பார் பெரியீர்! அறிஞர்காள்! பாட்டரங்கில் பண்பார் பலபுலவர் பாடவந்த பாவலரே! இன்னன்புத் தாய்க்குலமே! எந்தமிழ நல்லிளைஞீர்! முன்வந்தே போட்டி முனைநிற்கும் மாணவர்காள்! வல்ல செயலாற்றும் வாசகர் வட்டத்தீர்! எல்லார்க்கும் என்றன் இனியவணக் கம்உரித்தே! இன்றைய நூலக இன்விழாப் பாட்டரங்கில் தன்னேரில் தூயதமிழ் வல்லரிமா வான பெருஞ்சித்தி ரப்பெரியார் பேசினால்... என்னும் அருந்தலைப் பொன்றை அளித்துப்பா டென்றனரே! யார்பெருஞ் சித்திரனார்? இங்கறியார்க் காகசில பேர்விளக்கும…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் இந்தோ ஐரோப்பிய மொழித்தொடர்பு
-
- 0 replies
- 1.7k views
-
-
காற்றுக்கு எல்லையுண்டு, கண் காணும் காட்சிக்கு எல்லையுண்டு, கலவிக்கும் புலவிக்கும் எல்லையுண்டு. ஆனால் கனவில் நாம் காணும் காட்சிக்கும் கற்பனைக்கும் எல்லைகள் உண்டோ !!?? செவ்வரி விழிகள் செய்கை மறந்து செயலிழக்கலாம். தேனூறும் இதழ்கள் கசந்து போகலாம். தயங்கி புறத்தூண்டலில் மயங்கி பின் முயங்கும் காலம் அழிந்து போகலாம். ஆனால் வாசிக்கும் எழுத்துக்களால் வழிந்தோடும் கற்பனைகள் வருடிவிடும் காதல் நினைவுகள் ஊன் ஒடுங்கினும் ஓயாது. என்னை இந்த கற்பனை பிரபஞ்சத்தில் படர வைத்த இலக்கிய வரிகள் உங்கள் வாசிப்புக்கு... (Image courtesy: solvanam.com) ஓராயிரம் யானை கொன்றால் பரணி ..போர்ப் பொறி பறக்கும் பரணியில் காதற் பொறியும் பறக்கிறது.பரணி பாட சென்ற கணவன்மார்கள் வெற்றி கண்டு உடனே ஊர் திரு…
-
- 0 replies
- 720 views
-
-
சங்க இலக்கியத்தில் குறுங்கூளியரும் .. உருவெழு கூளியரும் .. சங்க இலக்கியங்கள் பல்வேறு வகையான நிகழ்த்துக் கலைஞர்களின் வாழ்வியல் குறித்துப் பேசுகின்றன. சங்கக் கலைஞர்கள் கலைகளை வளர்ப்பதற்கென்றே தங்கள் வாழ்நாளின் பெரும்பாலான நாட்களைச் செலவிட்டுள்ளனர். கலைவேறு வாழ்கை வேறு என்று அறிய முடியா வண்ணம் அவர்களின் வாழ்வியல் கலையோடு பின்னிப்பிணைந்திருந்தது. அவ்வகையில் இரவலர்க் கலைஞர்களாக அறியப்பெறும் குறுங்கூளியர் குறித்தும், அவரில் மற்றொரு பிரிவினரான உருவெழு கூளியர்கள் குறித்துமான பதிவுகள் சங்க இலக்கியங்களில் விரவியேக் காணப்படுகின்றன. இக்கலைஞர்கள் குறித்து உரையாசிரியர்களிடையே பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இவற்றில் உள்ள சில புரிதல்களை முன்வைப்பதாய் இக்கட்டுரை அமைகிறது.…
-
- 0 replies
- 1.5k views
-
-
கொன்றை வேந்தன் பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயரைப் பெற்றது. இதில் 91 அடிப்பாக்கல் உள்ளன கடவுள் வாழ்த்து கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே. நூல் உயிர் வருக்கம் 1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் 2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று 3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று 4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர் 5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு 6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் 7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும் 8. ஏவா மக்கள் மூவா மருந்து 9. ஐயம் புகினும் செய்வன செய் 10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு 11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் 12. ஒளவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு 13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு ககர …
-
- 0 replies
- 2.5k views
-
-
14 பிப்ரவரி 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. பலரும் காதல் கவிதைகளையும் திரைப்பாடல்களையும் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், தமிழில் காதலைப் பேசும் பாடல்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்து வருகின்றன. குறுந்தொகையில் காதலைப் பாடும் அழகிய பத்து பாடல்களை பொருளுடன் இங்கே படிக்கலாம். 1. யாயு ஞாயும் யாரா கியரோ எந்தையு நுந்தையு மெம்முறைக் கேளிர் யானு நீயு மெவ்வழி யறிதும் செம்புலப் பெயனீர் போல அன்பு…
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
தொல்காப்பிய கால பெண்களின் நிலைகள் முனைவர் பூ.மு.அன்புசிவா தொல்காப்பியம் தோன்றிய காலம் பற்றி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட காலக்கணிப்பு ஏதும் இல்லை. பல்வேறு காலக்கட்டங்களில் பல ஆய்வாளர்கள் வௌ;வேறு விதங்களில் இதன் காலத்தை கணிக்க முயன்றுள்ளார்கள். பண்டையக்காலத்தில் பாண்டிய நாட்டில் இருந்து தமிழ் வளர்த்ததாகக் கருதப்படும் மூன்று தமிழ்ச் சங்கங்களில் இடைச் சங்க காலத்தின் இறுதியில் இந்நூல் எழுதப்பட்டதாகச் சிலர் கருதுகிறார்கள். இதன் அடிப்படையிலும், இறையனார் களவியல் உரை என்னும் நூலில் காணப்படும் மேற்படி சங்கங்கள் செயற்பட்ட கால அளவுகளை அடிப்படையாகக் கொண்டும். தொல்காப்பியம் கி.மு 5000 ஆண்டளவில் ஆக்கப்பட்டது என்று இவர்கள் கணித்தார்கள். எனி…
-
- 0 replies
- 1.4k views
-
-
திரைப்பட பாடல்களில் இலக்கணம். திரையுலகம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையக் கூடியது. அதன் மூலம் நாம் ஒரு செய்தியைக் கூறினால், உடனே புரிந்து கொள்ளும் தன்மை, யாருக்கும் உண்டு. இதில் வரும் இலக்கணங்கள் இனிப்புத் தடவப்பட்ட "கசப்பு மாத்திரைகள்" என்று கூறலாம். தமிழ் இலக்கணம் குறித்த சில சான்றுகள் இங்கே உங்களுக்காக... அடுக்குத்தொடர்: ஓடிஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும். இரட்டைக்கிளவி: ஜல்ஜல் எனும் சலங்கை ஒலி சலசல எனச் சாலையிலே. சினைப்பெயர்: பூபூவா பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா. பொருட்பெயர்: கண்ணன் என்னும் மன்னன் பெயரைச் சொல்லச் சொல்ல இடப்பெயர்: வீடு வரை உறவு வீதி வரை மனைவி! காலப்பெயர்: வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் …
-
- 0 replies
- 2.6k views
-
-
தமிழ் திதிகள் 1.ஒருமை :- பிரதமை 2.இருமை : துவிதியை 3.மும்மை : திருதியை 4.நான்மை : சதுர்த்தி 5.ஐம்மை : பஞ்சமி 6.அறுமை : சஷ்டி 7.எழுமை : சப்தமி 8.எண்மை : அஷ்டமி 9.தொண்மை : நவமி 10.பதின்மை : தசமி 11.பதிற்றொருமை : ஏகாதசி 12.பதிற்றிருமை : துவாதசி 13.பதின்மும்மை : திரயோதசி 14.பதினான்மை : சதுர்த்தசி 15.மறைமதி : அமாவாசை 16.நிறைமதி : பௌர்ணமி குறிப்பு: இவையாவும் தமிழுக்கேற்றவாறு வடமொழியிலிருந்து மொழிபெயர்க்கப்படவில்லை. மாறாக நம் தமிழிலிருந்துதான் வடமொழிக்கு மொழிபெயர்த்து பயன்படுத்தியிருக்கிறார்கள். மாற்றிவிட்டு ஏதாவது ‘கப்சா கதை’ அடிப்பார்கள்.https://dhinasari.com/astrology/astrology-articles/3159-15-திதிகளின்-பெயர்கள்.html
-
- 0 replies
- 4.5k views
-
-
‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்” என்று தம் நூலான ‘வெற்றிவேற்கை”யின் முதல் அடியாக அதிவீரராம பாண்டியன் என்னும் தமிழ்நாட்டு மன்னன் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு கூறிப்போந்தான். ஆனாலும் தற்காலத்திய அறிஞர்கள் சிலர் தமிழர்க்கு இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்பாக எழுத்தறிவு என்பது இம்மியளவும் கிடையாது. வடநாட்டில் ஆட்சி செய்த மௌரிய அரசன் அசோகன்தான் இந்தியாவிலேயே எழுத்தை உருவாக்கினான். அதிலிருந்துதான் தமிழர்கள் தமிழ் எழுத்தை உருவாக்கிக் கொண்டார்கள் என்றும், வேறு சிலர் வடநாட்டு வணிகர்கள் தெரிந்து வைத்திருந்த எழுத்திலிருந்துதான் தமிழ் வணிகர்கள் எழுத்தை உருவாக்கிக் கொண்டனர் என்றும் கூறிவருகின்றனர். இவர்கள் கூறுவது சரியானதுதானா என்று ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். உலக நாடுகள் அ…
-
- 0 replies
- 1.3k views
-
-
திரைப் படங்களில் வரும் பாடல்களில் உள்ள கற்பனைகள் சில சமயம் விமர்சனத்திற்குள்ளாவது சகஜம். கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய ஒரு பாடலை கவிக்கோ அப்துல்ரகுமான் விமர்சனம் செய்தார். "தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவர் இல்லை என்னுயிர் பிரிவதைப் பார்த்து நின்றேன்” என்ற பாடலின் அர்த்தம் என்னவென்றால் தன்னுடைய உயிர் பிரிவதை யாரும் பார்க்க முடியாது. ஆனால் காதலன் தன்னைவிட்டுப் பிரிந்து செல்லும் போது அவளுடைய உயிரே பிரிந்து செல்வதைப் பார்த்து நிற்கின்றாளாம் காதலி எனச் சொல்லும் அற்புதமான கற்பனை இது. ஆனால் இப்பாடலை இந்திப் படப் பாடல் ஒன்றில் கேட்க நேர்கிறது கவிக்கோவிற்கு “யாராவது உயிர் போவதைப் பார்த்ததுண்டா? இதோ என் உயிர் போய்க்கொண்டிருக்கிறது" என்று காதலன் ஒருவன் இந்திப் படத்தில்…
-
- 0 replies
- 985 views
-