பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1539 topics in this forum
-
இவர்கள் தான் இலங்கையின் பூர்வ குடிகள். "நாகரீகமடைந்த" சமுதாயத்தால் "வேடுவர்கள்" என்று அழைக்கப் படும் பழங்குடி இனம். தென்னிலங்கையில் ஊவா மாகாணத்திலும், கிழக்கு மாகாணத்தில் தொப்பிக்கல, வாகரை போன்ற பிரதேசங்களிலும் அதிகளவில் வாழ்கின்றனர். பெயர் மட்டுமே வேடுவர்கள். ஆனால், அந்த மக்கள் வேட்டையாடுவதுடன், விவசாயமும் செய்கின்றனர். இவர்களுக்கென்று தனியான மொழி உண்டு. "நாகரீகமடைந்த" சிங்களவர்களும், தமிழர்களும், மண்ணுக்காக உரிமைப் போரில் ஈடுபட்டமை, உலகம் முழுவதும் தெரிந்த விடயம். ஆனால், இலங்கையில் மூன்றாவதாக வேடுவ மொழி பேசும் மக்கள் வாழ்வதும், அவர்களது இனமும், மொழியும் அழிந்து கொண்டு வருவதும், வெளியுலகத்திற்கு தெரியாது. சிங்களப் பகுதிகளில் வாழும் வேடுவர்களின் மொழியில், ஆதிக்க மொழியான ச…
-
- 5 replies
- 6k views
-
-
நாமெல்லாம் தமிழ்தான் பேசுகிறோமா? எனபதில் சந்தேகம் வந்துவிட்டது. நான் கொஞ்ச நாட்களாகவே 'மரபு தமிழ் இலக்கணம்' என்கிற நூலைப் படித்துவருகிறேன். அதில் தமிழ் மொழியில் கலந்து கிடக்கும் பிறமொழிச் சொற்களைப் பற்றி விரிவாகக் கொடுத்திருக்கிறார்கள். தமிழ் மொழியை எழுதும்போதும், பேசும்போதும் பிறமொழிச்சொற்களை பயன்படுத்தக்கூடாது என்றும், முடிந்தவரையில் தமிழ் சொற்களையே பயன்படுத்தவேண்டும் என்றும் உள்ளது. அதைப்படித்து சற்று குழப்பமாக இருந்தபோதுதான் எனது தோழி ஒரு கேள்வி கேட்டிருந்தாங்க, அது எப்படி என்றால்? "தமிழ் மொழியில் வடமொழிச் சொற்களை தவிர்க்கவேண்டியது அவசியம்தானா? இது நன்மை கொடுக்குமா?" " இதுதான் கேள்வி. என் மனதிற்குள் மேலும் குழப்பம் கூடிவிட்டது. த…
-
- 19 replies
- 20.3k views
-
-
இந்தோனேசியாவில் தமிழர்கள் சாவகம் (ஜாவா), சுமத்திரா, பாலி, காலிமன்தான் (போர்னியோ), குலவேசி (செலிபிஸ்), இரியன் ஜயா (நீயூகினி) போன்ற 13,700 தீவுகள் அடங்கிய பகுதிகளைத்தான் இன்று இந்தோனேசியா என அழைக்கிறார்கள். இத்தீவுக் கூட்டங்கள் மலேயா தீபகற்பத்திலிருந்து நீயூகினி வரை பரவிக் கிடக்கின்றன. இரியன் ஜயாவின் கிழக்குப் பகுதியிலும், வட போர்னியாவின் பகுதிகளாக இருக்கும் சரவாக், சபா எல்லைகளிலும் மட்டும்தான் இந்தோனேசியாவின் நில எல்லை அமைப்புகளைப் பார்க்கலாம். தென்žனக் கடலும் பசிபிக் பெருங்கடலும் இந்து மாக்கடலும் 74,101 சதுர மைல்கள் அடங்கிய இத்தீவுக் கூட்டங்களைச் சுற்றிலும் அமைந்துள்ளன. தமிழர் குடியேறிய வரலாறு : சங்க கால நூல்களில் இந்தோனேசியாவைப் பற்றிய சில செய்திகள் நமக்குக் கிடைக…
-
- 0 replies
- 2.7k views
-
-
மற்ற திராவிட மொழிகளைப் போல, ஆனால் மற்ற பிற இந்திய மொழிகளைப் போல் அல்லாது, தமிழ் மொழி சமஸ்கிருதத்திலிருந்து தோன்றவில்லை. திராவிட மொழிகளில் மிக நீண்ட இலக்கிய மரபைக் கொண்டது தமிழ். தமிழ் இலக்கியங்களில் சில பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று கூறப்படுகின்றன. இருந்தும், கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு. 300ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும். பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் பிரதிபண்ணுவது மூலம்) அல்லது வாய்மொழி மூலம் கடத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுவந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக்கூடக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும், கிபி 3 ஆம் நூற்…
-
- 0 replies
- 690 views
-
-
வளரி என்பது ஓடித் தப்பிப்பவர்களை பிடிப்பதற்கு பண்டைய தமிழரால் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வளைதடி போன்ற ஆயுதம் ஆகும். இதற்கு ஒத்த ஆயுதங்களை வளைதடி, பாறாவளை, சுழல்படை, படைவட்டம் என்றும் அழைத்தனர். அமைப்பு : இது ஆஸ்திரேலிய ஆதிவாசிகளால் உபயோகப்படுத்தப்பட்ட பூமராங் வகை ஆயுத வடிவமைப்பை உடையது. பூமராங் எறிந்தவனுக்கே திரும்பி வந்துவிடும். ஆனால் தமிழனால் பயன்படுத்தப்பட்ட வளரி அப்படியல்ல. வளரிகள் பல்வேறு அமைப்பில் அமைந்துள்ளன. சாதாரணமாக வளைந்த இறக்கை வடிவான மரத்தால் செய்யப்பட்ட துண்டாகும். சில வளரிகளின் விளிம்புகள் பட்டையாக கூராக இருக்கும். ஓடுபவர்களை உயிருடன் பிடிக்க, மரத்தால் ஆன வளரியைப் பயன்படுத்துவது உண்டு…
-
- 11 replies
- 6.7k views
- 1 follower
-
-
வரலாறு: தமிழர்கள் மியான்மாரில் Tamils arrived in Burma during the British rule. Many of them left on their own free will before the Japanese occupation in 1942 and in 1962 when their businesses were nationalized. However, many of them remained in Myanmar and their current population is estimated to as much as 2.9 million. Many of them are engaged in small business and farming. Due to scaracity of jobs, they lack in motivation to study. Over 100 Hindu temples can be found in many parts of the country. This video shows an interview with Mr Solai Thiayagarajan of Yangon was taken in Yangon on the past and present of Myanmar Tamils. The geographically isolated Tami…
-
- 0 replies
- 894 views
-
-
பண்டைய பழந்தமிழர் நெல் முதலிய தானியங்களைச் சேகரிக்கும் கூடு குதிரிடல் (ஆங்கிலம்-granary,bunkering) என்பது வேளாண்மையில் பயன்படுத்தப்படும் முக்கியமான நடைமுறையாகும். நெடுங்காலமாகவே மனிதன் தனது எதிர்காலத்தேவைக்காக, விளைந்த தானியங்களைச் சேமித்து வைக்க இம்முறை பயன்படுத்துப் பட்டு வருகிறது. சிமென்டு, கரி போன்றவற்றையும் பெருமளவில் குதிர்களில் சேமித்து வைப்பதற்குக் குதிரிடல் என்று பெயர்.தமிழகக் கிராமங்களில் உள்ள குதிர்கள் மரம், மண், செங்கல் ஆகியவற்றினைக் கொண்டு சிறுஅளவில் உருவாக்கப்பட்டவை ஆகும்.இக்குதிர்கள் பெரிய அளவுகளில், பல விதங்களில் பயன்படுகின்றன.
-
- 3 replies
- 1.2k views
-
-
சங்க இலக்கியத்தில் வெறியாட்டு என்ற வார்த்தையை அதிகம் கேள்விப் பட்டிருப்பீர்கள். இதைப்பற்றி இணையத்தில் பல கட்டுரைகளை காணலாம். அதைப் பற்றி விரிவாக யாழில் ஒரு திரி இடலாம் என்ற உந்துதலே இது. வெறியாடுதல் என்பதற்கு இரண்டு வகையான விளக்கம் கொடுக்கப்படுகிறது. -> வேலைக் கையிற்கொண்டு ஆவேசம் கொண்டு ஆடுதல். -> பருவ மகளிருக்கு காதல் கொண்ட காதலனை அடைய வேண்டும் என்ற அவாவும், அடைய முடியுமோ என்ற அச்சத்தினாலும் உண்டாகும் ஒருவகை மன நோய். இந்த எண்ணம் முற்றுபெற்று ஊண் உறக்கமின்றி உடல் நலிந்து பேய் பிடித்து போன்ற ஒரு நிலையை வெறி என்றும் அழைப்பர். சங்க இலக்கியத்தில் வரும் ஒரு வீரக் காட்சி....... தம்முடைய கணவன்மாராகிய வெட்சி மறவர்கள் போருக்குப் புறப்படுமுன், அந்தப் போரில் வ…
-
- 0 replies
- 5.6k views
-
-
எம்.ஜி.ஆர். என்ற அதிசயம்! ’’சட்டக்கல்லூரி மாணவனாக நான் இருந்தபோதே எம்.ஜி.ஆர்.மீது கொண்டிருந்த பெரும்பாசத்தை வெறும் வார்த்தைகளுக்குள் சொல்லிவிட முடியாதது. பிற்காலத்தில் அவரின் அன்புக்குரிய தம்பியாகி, அவரது பொற்கால ஆட்சியில் அமைச்சராகவும் நான் இருந்தது எனக்குக் கிடைத்த பாக்கியம். எம்.ஜி.ஆர். முதல்வர் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில்…தினந்தோறும் காலை டிபன் ராமாவரம் தோட்டத்தில்; மதிய உணவும் கோட்டையில் அவரது அறையில்தான். உண்ணுகிற நேரமெல்லாம்கூட ஏழை எளிய மக்களின் நலனையே எண்ணுகிற எம்.ஜி.ஆரின் அக்கறையை உடனிருந்து பார்த்து நெகிழ்ந்திருக்கிறேன். சத்துணவுத்திட்டம், இலவச வேட்டி சேலைத் திட்டம், இலவச காலணித் திட்டம்…இப்படி எத்தனையோ நலத்திட்டங்கள் அவரது பொன்மனத்திலிருந்து உ…
-
- 7 replies
- 1.9k views
-
-
கிறிஸ்துமஸ் நீங்கள் அறிந்ததும் அறியாததும்... கிறிஸ்துமஸ் என்றால் என்ன? " கிறிஸ்துமஸ் " என்ற சொல் கிறிஸ்ட்டஸ் மஸ்ஸே அல்லது கிறிஸ்ட்ஸ் மாஸ் என்ற சொல்லிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கணிப்பு. கிறிஸ்தவ மதத்தார் முதன் முதலாக கிறிஸ்துமஸ் விழாவைக் கொண்டாடத்துவங்கியது ரோமாபுரி நாட்டில் கிறிஸ்து மரித்த பிறகு 336ம் ஆண்டில்தான் என்பது பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களின் முடிவு. 1994ம் ண்டு பிரிட்டானிகா புத்தக தகவல் களஞ்சியம் வெளிப்படுத்தும் குறிப்பொன்றில் 5.5 பில்லியன் உலக மக்கட் தொகையில் 1.8 பில்லியன் கிறிஸ்தவ மக்கள் உலகளவில் வசிப்பதாகவும் அறிவிக்கின்றது. அமெரிக்காவில் வசிக்கும் …
-
- 0 replies
- 6.1k views
-
-
தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்த கணிதமேதை ராமானுஜத்தின் 125 வது பிறந்த நாள் இன்று தேசிய கணித தினமாக பல்வேறு கல்விநிறுவனங்களில் கொண்டாடப்பட்டது. கணித மேதை சீனிவாச ராமானுஜன் 1887 ம் ஆண்டு டிசம்பர்.22ம் நாள் ஈரோட்டில் பிறந்தார். இவரின் கணித அறிவை மக்கள் அறிந்து கொள்ளவும், இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கவும், இவரது பிறந்த தினம், தேசிய கணித தினமாக கடைபிடிக்கப்படும் என சென்ற ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார். உலகின் ஆரம்ப கால கணித வளர்ச்சிக்கு இந்தியா, பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியா தான். ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நூற்றாண்டில் கணிதத் துறையில் இந்தியா பின்தங்கியது. ராமானுஜன் மூலம் 20ம் நூற்றாண்டில் இந்தியா மீண்டும…
-
- 1 reply
- 960 views
-
-
வணக்கம் வாசகர்களே !! கள உறவுகளே !! இத்துடன் இந்த தொடரை நிறைவுக்குக் கொண்டுவருகின்றேன் . உங்கள் ஆதரவிற்க்கு எனது மனமார்ந்த நன்றிகள் . நேசமுடன் கோமகன் ************************************************************************** இராவணனும் இராமாயணமும் இராவணன் வரலாற்றில் ஒரு விதமாகவும் இலக்கியத்தில் ஒரு விதமாகவும் எடுத்து காட்டப்படுகின்றான். இலக்கியத்தை ஆக்குகின்ற புலவர் தமது விருப்பு வெறுப்புக்களையும் கொள்கைகளையும் அவ்விலக்கியத்தில் புகுத்திவிடுவது வழக்கம். கற்பனையில் கதாபத்திரங்களை அமைத்து அதில் கருத்துகளை புகுத்துவதில் எவ்வித தவறும் இல்லை. ஆனால் வரலாற்றில் நல்ல குண இயல்பு உடைய ஒருவனை இலக்கியத்தில் தீய குண இயல்பு உடையவனாக திரித்து இலக்கியம் ஆக்கும் போதுதான்…
-
- 2 replies
- 1.3k views
-
-
புராதன இலங்கை தற்காலத்தில் இலங்கையில் தமிழர் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். ஆனால் அதி பூர்வீக இலங்கையில் தமிழர்கள் மாத்திரமே வாழ்ந்து வந்தனர் என்பது வரலாற்று உண்மையாகும். அவர்களது சமயம் சைவசமயமாகவே இருந்தது. இராமாயணம் போன்ற இதிகாச இலக்கியங்கள் வாயிலாககும் புராணங்கள் வாயிலாகவும் இவ்வுண்மை அறியக் கூடியதாக இருக்கின்றது..எனவே இலங்கை தமிழரின் முதுசொத்து எனலாம். இதுயாராலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மையாகும். இந்த உண்மையை வெளிப்படுத:துவதே இந் நூலின் நோக்கமாகும். புத்தூரில் பிரசித்த நொத்தாசிசாக விளங்கிய உயர் திரு. வ. நாதர் ஏன்பவரால் வெளியிடப்பட்டுள்ள அகத்தியர் இலங்கை என்னும் நூலில் இந்த உண்மை தெளிவாக்கப்பட்;டுள்ளது. இந்த நூலை மதுரையில் வாழ்ந்த உயர்திரு கந்தசாமிச் செட்ட…
-
- 9 replies
- 1.5k views
-
-
எங்கு பார்த்தாலும் உலகம் அழியப் போகிறது என்ற பேச்சாகவே இருக்கிறது. ஒருவேளை அழிந்து விட்டால் நாளை என்ன நடக்கும் என்ற சிந்தையில் விளைந்த எண்ணமே... கொடும் புயலாலோ, மழையாலோ, பூகம்பத்தினாலோ அல்லது ஏதேனும் வேறு காரணத்தினாலோ நாளை உலகம் அழிகிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரு நூறு பேர் மட்டும் உயிர் பிழைத்திருக்கிறார்கள். அழிவிற்கு பிந்தைய நாள் எப்படி இருக்கும்?? முந்தைய நாள் வரைக்கும் அவர்கள் பேருந்தில் சென்றிருப்பார்கள், அலைபேசியில் பேசியிருப்பார்கள், கணிணியை உபயோகித்து இருப்பார்கள். ஆனால் அழிவிற்கு பின் எஞ்சியிருப்பது உயிர் மட்டுமே. எல்லாம் உபயோகித்து இருப்பார்கள் ஆனால் எதையும் உருவாக்கும் வழிமுறை தெரியாது. அடுத்த தலைமுறையினருக்கு பேருந்து இப்படி இருக்கும், அலைபேசியில் இப்ப…
-
- 0 replies
- 613 views
-
-
இருப்பிடம் ஆஸ்திரேலியா ஒரு கண்டம். 29,67,909 சதுர மைல் பரப்புள்ள நாடு. இந்நாட்டின் தலைநகரம் கேன்பரோ. இங்கு ஆங்கிலமே ஆட்சிமொழி. இந்நாடு ஏழு மாநிலமாக பிரிக்கப்பட்டுள்ளது. தமிழர் குடியேறிய வரலாறு : ஆங்கிலேயர் குடியேறுவதற்கு முன்பே, ஆஸ்திரேலியாவில் தமிழர் குடியேறினர் என்பதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. நியூசிலாந்து பழங்குடிகளான மவோரி மக்கள் மத்தியில் 19-ஆம் நூற்றாண்டில் ஒரு வெங்கல மணியை ஆங்கிலேயர் கண்டெடுத்தனர். அதை அங்குள்ள அரும்பொருட்காட்சிக் கூடத்தில் வைத்துள்ளனர். அம்மணியின் மீதுள்ள வாசகம், 15-ஆம் நூற்றாண்டுத் தமிழில் எழுதப்பட்டுள்ளது. அது பின் வருமாறு : "முகையதீன் வக்குசு உடைய கப்பல் உடைய மணி" என்று காணப்படுகிறது. இதன் மூலம் தமிழக வணிகர்கள் எந்தளவிற்கு தூரக்கிழக்கு ந…
-
- 0 replies
- 1.8k views
-
-
http://www.nilapennukku.com/2012/09/relationbetweentamilandjapanese.html ஜப்பான் மொழியின் மூலம் தமிழ் மொழி? இயற்கையும் சரி, வரலாறும் சரி என்றுமே நமக்கு புரியாத புதிராகவே இருக்கும். சில வரலாற்று நிகழ்வுகள் நமக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் தரக்கூடியவை. யாருமே இதுதான் நடந்தது என உறுதிபடக்கூற முடியாது. ஆனால் ஆராய்ச்சி மூலம் கிடைக்கும் பதில்கள் என்றுமே சுவாரஸ்யத்துடன் ஆவலையும் கொடுப்பவை. அதில் ஒன்றுதான் ஜப்பான் மொழியின் மூலம் எந்த மொழி? தமிழா? ஜப்பான் மொழியின் எழுத்துமுறை சீன மொழியை அடிப்படையாகக் கொண்டது. அவ்வாறு சீன எழுத்துமுறை கலப்பதற்கு முன்பாகவே (கி.மு.500 - கி.பி 300களில்) 7000 கிலோமீட்டர் பயணம் செய்து ஜப்பானில் அரிசி விளைவிக்கும் முறையைக் கற்றுக்கொடுக்க சென்ற …
-
- 5 replies
- 2.8k views
-
-
சுமார் 12 வது நூற்றாண்டில் தான் அதாவது 800 வருடங்களுக்கு முன்னர் தான் 'கன்னடம்' என்கிற மொழி தமிழில் இருந்து தனியாக பிரிந்தது. தமிழில் இருந்து பிரிந்த மொழிகள் பலபல . அதில் நமக்கு நெருக்கமானவையாக இன்னும் இருப்பது 3 மொழிகள் . அவை நம்மை சுற்றியுள்ள மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவை. இதில் மலையாளம் என்பது 75% தமிழும், 25% சமஸ்கிருதமும் கலவையாக கொண்ட மொழி . தெலுங்கு மொழியாவது 50% தமிழும், 50% சதவிகிதம் சமஸ்கிருதமும் கலந்தது. கன்னடமானது. 25 % தமிழும், 75% சமஸ்கிருதமும் கலந்தது. இந்த கன்னடம் 800 வருடங்களுக்கு முன்பு நம்மிடம் இருந்து பிரிந்தது. மூவேந்தர்களில் ஒருவரான சோழர்களால் ஆளப்பட்ட நிலம் தான் கர்நாடகம் என்பது இங்கே இருக்கும் நூற்றுக்கணக்கான சோழ வம்சத்து கோயில்களை பார்த…
-
- 1 reply
- 4.2k views
-
-
தமிழகத்தின் தென்கிழக்கே 1500 மைல் தொலைவில் உள்ளசிங்கப்பூருக்கும் தமிழ்நாட்டுக்கும் நெருங்கியத் தொடர்பு இருப்பது இதற்கு ஓர் சிறப்புக்காரணம் ஆகும். தென்கிழக்காசியாவில் உள்ள சிங்கப்பூர் ஒரு சிறிய தீவு, குறுக்கும் நெடுக்கும் 22.5,41.8 கி.மீ. தொலைவே உடையது. 54 அண்டைத் தீவுத் திட்டுக்கள் அடங்கிய சிங்கப்பூர் 618.1 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உடையதாகும். இந்நகரம் ஓர் துறைமுக நகரமாகும். இரப்பர், தகரம், கொப்பரைத் தேங்காய் முதலிய பண்டங்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இத்தீவின் தலைநகரம் சிங்கப்பூர் நகரம் ஆகும். சிங்கப்பூர்-தமிழ்நாடு வரலாறு மலேசியா வரலாறுடன் நெருங்கி இணைந்து வருவது பண்டைய கால சிங்கப்பூர் வரலாறு ஆகும். பண்டைய கால சிங்கப்பூர் வரலாற்றைப் பற்றி அறிய நமக்குப்…
-
- 0 replies
- 1.9k views
-
-
"தமிழ் சைவம் இரண்டும் என் இரு கண்கள்; அவ்விரண்டும் ஒளி குன்றாமல் இறுதிவரை காத்துப் பயன் கொள்வதே என் கடன்; அவை வாழப் பணி புரிவதே என் வாழ்வின் குறிக்கோள்", என வாழ்ந்தவர் தவத்திரு ஆறுமுக நாவலரவர்கள். அவர் யாழ்ப்பாணம் நல்லூரில் கந்தருக்கும், சிவகாமிக்கும் 1822 டிசம்பர் 12ல் (சித்திரபானு மார்கழி 5) தோன்றியவர். அவர் தமிழ் இலக்கிய இலக்கணச் சித்தர்; சாத்திரங்கள், சிவாகமங்கள் கற்றவர்; ஆங்கிலத்திலும் ஸமஸ்கிருதத்திலும் வல்லவர்; சிவனடியை மறவாத சிந்தனையாளர்; உரைநடை கைவந்த வல்லாளர்; நல்லாசிரியர்; நூலாசிரியர்; உரையாசிரியர்; பதிப்பாசிரியர்; சொல்லின் செல்வர்; தனக்கென வாழாத் தகைமையாளர்; தவக்கோலச்சீலர்; இல்லறம் ஏற்காது நற்பணி செய்தவர். அவர் இயற்றிய நூல்கள்: 23; உரை செய்தவை: 8; பரிசோதி…
-
- 0 replies
- 733 views
-
-
Quote by கந்தப்பு "வாழ்த்து (க்)கள்" http://www.yarl.com/forum3/index.php?showtopic=113007#entry836394 வாழ்த்துகளா வாழ்த்துக்களா சரியான சொல்லு? விளக்கமா விளக்கமளிக்கவும்
-
- 20 replies
- 7.6k views
-
-
http://3.bp.blogspot.com/_2SMOVFpZr3M/SaAbqYhXDJI/AAAAAAAAAJc/-9UavYbCgj4/s1600/2009-01-29-1438-55.jpg மக்களைக் காத்தல் மன்னர்க்குக் கடன். உள்நாட்டுக் கலவரம் முதல் வெளிநாட்டு படையெடுப்பு வரை தம் குடிமக்கள் எதிலும் பாதிப்படையா வண்ணம் பாதுகாக்கும் பொறுப்பை நாடாள்வார் ஏற்க வேண்டும். மண், பெண், பொன் என எக்காரணத்தாலும் போர் எழலாம். அதனைத் தடுக்கவும் தொடுக்கவும் அரசுக்குப் படைபலம் வேண்டும். போரினால் உயிர், உடைமை இழப்பு மிகும்; அழிவும் மிகும். தமிழ்ச்சான்றோர் இவற்றை எல்லாம் எண்ணி வருந்தி, போர் இன்றியமையாதவிடத்தும், அது அறத்தின் அடிப்படையிலேயே இருத்தல் வேண்டும் எனச் சில நெறிமுறைகளை வகுத்தனர்.பகை நாட்டின் மீது படையெடுக்கும் முன், அந்நாட்டு அறவோரையும் தன்னாட்டு அறவோரையும் அல்…
-
- 2 replies
- 2.9k views
-
-
சுப்பிரமணிய பாரதி (டிசம்பர் 11, 1882 - செப்டம்பர் 11, 1921). இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி, ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். சுப்பிரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர். தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளர். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே.சு. ஐயர், சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி…
-
- 12 replies
- 7.9k views
-
-
கந்த முருகேசனாரும் ஆறுமுகநாவலரும் - இளங்கோ (இலண்டன்) இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டியிருந்தது. பிறப்பினால் ஏற்றத்தாழ்வுகளைக் கற்பிக்கும் சாதி என்பது மிகக் கேவலமான ஒன்று. ஆனால் ஈழத்தமிழர்களின் சிங்களப் பேரினவாதத்திற்கு எதிரான விடுதலைப் போர் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சிங்கள அரசு தமிழர்களை ஈவிரக்கம் அற்று படுகொலை செய்துவரும் இன்றய கண்ணீர் யுகத்தில் சாதியத்திற்கு எதிரான இந்தப் பதிவு தேவையா என்பதே எனது யோசனையின் காரணம். ஒரு காலத்தில் ஈழத்தில் மிகக் கொடுமையான சாதிய அடக்குமுறை இருந்தது. இலங்கை பொதுவுடைமைக் கட்சிகள் அதற்கு எதிராகப் போராடியிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டம் அதன் கொடுமையை த…
-
- 36 replies
- 6k views
-
-
மகாகவி சுப்ரமணிய பாரதியார் ஒரு பெருங்கடல். உரை நடைக்கவிதைகளின் பிதாமகர். மகா கவி பாரதியின் ஆக்கங்கள் மற்றும் அவரைப்பற்றிய குறிப்புகள் ஆகியவற்றை இங்கு இணைத்து அந்த மாபெரும் கவிஞனை பெருமை செய்வோம். ஆரம்பமாக....
-
- 15 replies
- 10.4k views
-
-
தமிழச்சியின் கத்தி -- புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (Thanks http://library.senthamil.org/134.htm) 1. சுதரிசன் சிங்க் துடுக்கு அகவல் தில்லியில் பாதுசா செங்கோல் செலுத்தினான்; ஆர்க்காட்டுப் பகுதி அவன்ஆ ணைப்படி நவாப்பினால் ஆட்சி நடத்தப் பட்டது. நுவலும்அவ் வார்க்காடு நூற்றெழு பத்திரண்டு பாளைய மாகப் பகுக்கப் பட்டது; பாளையத் தலைவர்பேர் பாளையப் பட்டுகள்; பகர்நற் செஞ்சிப் பாளையப் பட்டாய்த் தேசிங்கு வாழ்ந்தான் சிற்சில ஆண்டுகள். தேசிங்கு வடக்கிருந்து தென்னாடு போந்தவன்; தமிழரை இகழும் தன்மை வாய்ந்தவன்; தேசிங் கினையும் தென்னாடு வெறுத்தது. சிப்பாய் களிலே சிலர்க்கொரு தலைவன் இருப்பான். 'சுபேதார்' என்ப தவன்பெயர். சுதரிசன் சிங்க்எனும் சுபேதா ருக்குத் தேசிங் கிடத்தில் செல…
-
- 0 replies
- 808 views
-