பொங்கு தமிழ்
தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு
பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
1543 topics in this forum
-
மதிமுக தூண்களின் ஒன்றான நாஞ்சில் சம்பத்து அவர்களின் இலக்கிய உரை.. போலி பாதிரி பகத்பாஸ்பரை ...அதே மேடையில் போட்டு தாக்குவது தனிசிறப்பு. பெரும்பாலும் அரசியல் வாதியாக அறியப்பட்ட இவருடைய இலக்கிய உரையை ஈழ தோழர்கள் கண்டு ரசிக்குக.. டிஸ்கி: நன்றி சொல்லாம யாரும் போககூடாது ரைட்டு..
-
- 6 replies
- 1.5k views
- 1 follower
-
-
தொடரும் மொழிப்போர்... இரா.சிவக்குமார் ஓரினம் தனது அடையாளத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு பல வழிகளிலும் போராடத்தான் வேண்டியிருக்கிறது. நாடு, எல்லை என தனக்கான தன்னாட்சி உரிமையைப் பெறுவதற்கும், அதனை தொடர்ச்சியாகத் தக்க வைப்பதற்குமான கலகங்களும், சச்சரவுகளும் உலகெங்கும் நடைபெற்ற வண்ணமிருக்கின்றன. இதில், அவ்வின மொழியின் இருப்பும், முதன்மை பெறுகிறது. "ஒரு இனத்தை அழிக்க வேண்டுமானால், அது பேசுகின்ற மொழியை முதலில் அழித்துவிடு" எனும் வல்லாதிக்க சித்தாந்தத்தை எதிர்கொண்ட மொழிகளுள், தனிச்சிறப்பிற்குரிய இடத்தைப் பெற்றுத் திகழ்கிறது தமிழ். மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மொழியின் மீது நடத்தப்படுகின்ற, அழித்தொழிப்புப் பணியில் தற்போது வரை தப்பிப் பிழைத்திருக்கிறது என்றால…
-
- 0 replies
- 1.3k views
-
-
பழைய யாழில் இருந்து சண்முகி என்ற சகோதரி இணைத்தது பிடித்திருந்ததால் மீண்டும் வருகிறது. 1)சாப்பிடும்போது வெங்காயம், மிளகாய், பூண்டு உட்பட எல்லாவற்றின் சுவையையும் ரசித்து சுவைத்து உண்டு தட்டைக் காலி பண்ணிடுவார்கள். 2)பரிசுப் பொருட்கள் வைச்சுத் தந்த பெட்டி அதைச் சுத்தி வந்த பேப்பர், அலுமினியக் கடதாசி எல்லாத்தையும் எடுத்துப் பிறகு பாவிப்பதற்காக பத்திரமாக வைப்பார்கள். 3)பல்லில மாட்டிக் கொண்ட உணவுத் துணிக்கைகளை tshick, tshick என்று சத்தம் வர எடுப்பார்கள். 4)விமான நிலைய வாசலில இரண்டு மிகப் பெரிய சூட்கேஸ்களோட நின்று கொண்டிருப்பார்கள். 5)Party ஒன்றுக்கு ஒன்றிரண்டு மணித்தியாலம் பிந்திப் போவதோட அது normal என்றே நினைப்பார்கள். 6)தவறுதலாக முத்திரை குத்தாம வாற தபால் தலைகள…
-
- 16 replies
- 2.3k views
- 1 follower
-
-
ஒவ்வொரு ஊர்களுக்கும் பழங்கதைகள் நிறைய இருக்கும் அவற்றை அகழ்ந்து எடுத்துப் புதுப்பித்து அல்லது எதிர்காலச்சந்ததிக்கு ஆதாரமாக சேகரித்து வைக்கவேண்டியது நம் ஒவ்வொருவர் கடமை. சிறிது சிறிதாக நம் கண் முன்னாலேயே நம்முடைய மூதாதைகளின் ஆவணங்கள் அழிக்கப்படுகின்றன அல்லது தேடல்கள் அற்று மக்கிப் போகின்றன. இத்தகைய ஒரு கால கட்டத்தில் எமது இருப்பின் சாட்சிகள் திட்டமிடப்பட்டு அரச வல்லமையால் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதற்கு எதிராகப் போராடி பாதுகாக்கத் திராணியற்று வாழும் மக்களாக எம்மினம் இன்று வாழத்தலைப்பட்டிருக்கிறது. முகவரி தொலைந்த மனிதர்களாக நீண்ட கால ஒழுக்கில் நம் இனம் வாழ்ந்துவிட முடியாது. இன்றைய காலம் மிகவும் சோதனைக்கு உரியதாக இருப்பினும் எம்மினம் சாதிக்கவேண்டிய பலவிடயங்கள் இருக்கின்றன.…
-
- 1 reply
- 2.6k views
-
-
சாமுராய் எனப்படுவது ஜப்பானில் தொழில்மயமாக்கத்திற்கு முன் இருந்த ஜப்பானிய படைத்துறையில் (ராணுவத்தில்) இருந்துவந்த ஒரு இனத்திற்கான பட்டம். கி.பி. ஏழாம் நூற்றாண்டிலிருந்து, 19ம் நூற்றாண்டு வரை இவ் வகையான சாமுராய்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட சட்டதிட்டங்களுக்கு கட்டுப்பட்டவர்களாக இருந்துவந்துள்ளனர். புஷிடோ என்ற அறியப்படும் இந்தச் சட்டம் சாமுராய் என்பவர் எப்படி வாழவேண்டும், அவர்களுடைய ஒழுக்கமுறைகள் எப்படிப்பட்டவை எனக்குறிப்பிடுகிறது. சாமுராய்களின் மிகப்பிரபலமான செயலான, தோற்றுப்போய்விட்டால் எதிரியிடம் சரணடையாமல், தன்னைத்தானோ அல்லது மற்ற சாமுராய்களின் வாளாலோ கொல்லப்படுவது. இது கூட அவர்களுடைய சட்டதிட்டங்களில் ஒன்றே. இதில் செபுக்கு என குறிப்பிடப்படும் முறையில் அவர்களின்…
-
- 0 replies
- 1.8k views
-
-
கல்திட்டைகள் (Dolmen) எனப்படுவன, பெருங்கற்காலப் பண்பாட்டைச் சேர்ந்த இறந்தவர்களுக்கான நினைவுச் சின்னங்களில் ஒரு வகையாகும். இது பொதுவாக, மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட செங்குத்தான கற்களையும், அவற்றினால் கிடைநிலையில் தாங்கப்படும் பெரிய தட்டையான கற்பலகை ஒன்றையும் கொண்டிருக்கும். இவை, பொதுவாகப் பொந்து போன்ற அமைப்பை உருவாக்குவதற்காக மண்ணினால் அல்லது சிறிய கற்களினால் மூடி அடைக்கப்பட்டிருப்பது உண்டு. ஆனாலும் பெரும்பாலான இடங்களில், பெரிய கற்களாலான அமைப்புக்கள் மட்டும் இருக்க, அடைப்புக்கள் காலப்போக்கில் அழிந்துவிட்டன. கல்திட்டைகள் உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன. உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் காணப்பட்டதினால். இப் பண்பாட்டுச் சின்னமான கல்திட்டைகளின…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஒரு காலத்தில் தோப்புக்கரணம் போடுவது என்பது பள்ளிகளில் மிகச் சாதாரணமான விஷயம். தவறு செய்தாலோ, வீட்டுப்பாடம் எழுதி வரா விட்டாலோ ஆசிரியர்கள் மாணவர்களைத் தோப்புக்கரணம் போட வைப்பது வாடிக்கை. பரிட்சை சமயத்தில் பக்தி அதிகரித்து மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற தாங்களாகவே பிள்ளையார் முன் தோப்புக்கரணம் போடுவதுமுண்டு. ஆனால் இக்காலத்தில் தோப்புக்கரணம் போடுவதை அதிகமாக நாம் காண முடிவதில்லை. ஆனால் இந்த தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று சொன்னால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா? லாஸ் ஏஞ்சல்ஸைச் சேர்ந்த மருத்துவர் எரிக் ராபின்ஸ் (Dr.Eric Robins) இந்த எளிய உடற்பயிற்சியால் மூளையின் செல்களும் நியூரான்களும் சக்தி பெறுகின்றன என்கிறார். அவர் தன்னிடம் வ…
-
- 3 replies
- 1.7k views
-
-
'மங்கள விளக்கு ஏற்றல்' பற்றிய ஓர் பார்வை தமிழர்களாகிய நாம் எந்த ஓர் நல்ல காரியம் செய்ய தொடங்கும் போதும் மங்கள விளக்கு ஏற்றியே ஆரம்பிப்பது வழக்கம். அதன் பொருள் என்ன? ஏன் இப்படி செய்கின்றோம்? முதலில் விளக்கு என்றால் என்ன? விளக்கு என்பது: ஒன்றை தெளிவுபடுத்துதல், புரிய வைத்தல், தெரியாத ஒன்றை தெரியவைத்தல், ஒளிவீசுதல் ஆகும். விளக்குகளில் பல வகை உண்டு. அவற்றில் சில: - ஒற்றைக் கால் விளக்கு: ஓர் பெண் தன் இரு கரங்களிலும் விளக்கை ஏற்றி ஓர் காலை பின்னோக்கி நீட்டி மறு காலை முன் நோக்கி மடித்து இரு கரங்களிலும் உள்ள விளக்கை முன் நோக்கி நீட்டினால் எப்படி இருக்குமோ அந்த உருவில் அமைந்ததே ஒற்றைக் கால் விளக்கு. - தூண்டாமணி விளக்கு: இதை மணி போன்று ஒர் கயிற்றிலோ,…
-
- 4 replies
- 24.9k views
-
-
உலக ‘தாய்மொழி தின’ விழா 2011 பிப்ரவரி 21-ம் தேதி தாய்மொழி தினத்தைக் கொண்டாடும் விழா என்பதால் வேலூர் வாசகர் பேரவையும் வி.ஐ.டி பல்கலைக்கழகமும் இணைந்து வேலூரில் இரண்டு நாள் விழாவைக் கொண்டாடுகிறது. இதில் பிப்ரவரி 20 அன்று ‘நாம் வளர தமிழ் வளர்ப்போம்’ என்ற கருத்தரங்கு நடைபெறுகிறது. கருத்தரங்கு நடக்கும் இடம்: டாக்டர் சென்னா ரெட்டி கருத்தரங்கக் கூடம், வி.ஐ.டி பல்கலைக்கழகம், வேலூர். நிகழ்வு ஆரம்பிக்கும் நேரம்: மாலை 3.00 மணி. தலைப்புகளும் பேசுவோரும்: தெய்வத்தமிழ்: திருமதி மா.கவிதா (அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருத்தணி) கல்வித்தமிழ்: பேராசிரியர் பா. கல்விமணி பசுமைத்தமிழ்: திரு சு. தியோடர் பாஸ்கரன் ஆட்சித்தமிழ்: முனைவர் அரணமுறுவல் (செ…
-
- 1 reply
- 1.8k views
-
-
தாய்மொழியில் ஏன் பெயர் வைக்க வேண்டும்? முத்துக்குட்டி தமிழில் ஏன் பெயர் வைக்க வேண்டும்? மொழி தான் ஒருவருடைய அடையாளமாகும். தத்தம் மொழியில் பெயரை வைத்துக்கொள்வது என்பது அடையாளப்படுத்துவதற்கு உதவும். இன்னொரு மொழியில் பெயர் வைப்பதில் என்ன தவறு? இன்னொரு மொழியில் பெயர் வைப்பது என்பது, ‘ஒருவர் தம்முடைய மொழியை விட இன்னொரு மொழியை உயர்வாகக் கருதும்போது’ மட்டுமே நிகழும். இன்னொரு மொழி நம்முடைய மொழியை விட உயர்வானது என்று கருதக் கூடாதா? இன்னொரு மொழியைச் சிறப்பாகக் கருதலாமே தவிர நம்முடைய மொழியை விட உயர்வானது எனக் கருதுவது கூடாது. ஏன்? ஒவ்வொரு மொழிக்கும் சில தனிச் சிறப்புகள் உள்ளன. எ.கா. தமிழில் ல,ள,ழ, என்றும் ர,ற என்றும் ன,ண,ந என்றும் அமைந்திரு…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஆசியவியல் நிறுவனத்தின் சார்பில், "ஆசிய பண்பாட்டு வளர்ச்சிக்கு தமிழர்கள் நல்கிய பங்களிப்பு' பற்றிய சர்வதேச கருத்தரங்கு சென்னையில் நடந்தது. சென்னை, தி.நகர் வாணி மகாலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கருத்தரங்கை துவங்கி வைத்து, பிரபல மொழி வரலாற்று ஆய்வாளர்களின் கட்டுரை முடிவுகளிலிருந்து, முக்கிய ஆய்வு முடிவுகளை மேற்கோள் காட்டி தமிழக நிதி அமைச்சர் அன்பழகன் பேசியதாவது: தமிழர்களின் கடல் கடந்த அயல்நாட்டு தொடர்புகளையும், அத்தொடர்புகளின் சமுதாய வரலாற்று பின்னணிகளையும் விரிவாக ஆராய்ந்து நிலை நாட்டும் விதமாக இந்தக் கருத்தரங்கு அமைந்துள்ளது. இந்திய மொழிகளில் தமிழ் மொழி அளவுக்கு, உலகின் பெரும்பான்மையான தொல் பழங்கால மொழிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய மொழியாக வேறு எந்த மொழியும் இ…
-
- 27 replies
- 3.4k views
-
-
ஒரு கொடி பல விடயங்களை பிரதிநிதிப்படுத்தும் ஒன்று. அது ஒரு எண்ணக்கருத்தை, ஒரு விற்பனை பொருளை, ஒரு விளையாட்டுக்கழகத்தை, ஒரு அமைப்பை, ஒரு சமுதாயத்தை, ஒரு நாட்டை பிரதிநிதிப்படுத்துவதாக உள்ளது. நாடுகள் தம்மை கொடி மூலம் பிரதிநிதி படுத்துகையில், பல நாடுகளை கடந்து வாழும் ஒரு இனம் தன்னை எவ்வாறு அடையளாப்படுத்துவது? இன்று தமிழினம் ஒரு உலக இனமாக உள்ளது. இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் என பல நாடுகளில் தமிழர்கள் வாழ்ந்தும் தமிழின படுகொலையை ஏன் நிறுத்த முடியாமல் போனது? ஈழத்தமிழர்கள் தம்மை துணிகரமாக ஒரு கொடி மூலம் பிரதிநிதிப்படுத்தியுள்ளார்கள். ஆனால், இது உலக தமிழினத்தை பிரதிநிதிப்படுத்தவில்லை. உலக தமிழ் அரசியல் வாதிகள், இலக்கியவாதிகள், தமிழர்கள் தமக்கென ஒரு கொடி உருவாக்கல் பற்றி எண…
-
- 0 replies
- 1.1k views
-
-
புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களால் தான் தமிழ் புதிய பன்முக பரிமாண வளர்ச்சியை பெற்றிருக்கிறது. ஐரோப்பிய இலக்கியப் பயணத்தை முடித்துக் கொண்டு இரண்டு நாட்கள் முன்னர்தான் சென்னை திரும்பியிருந்தார் இந்திரன். சற்று களைப்பாகக் காணப் பட்டாலும் மிகவும் உற்சாகமாகவே இருந்தார். கடந்த நாற்பதாண்டு களாக கவிதை, ஓவியம், சிற்பம், சினிமா என்று பல்வேறு துறைகளைப் பற்றி தமிழி லும், ஆங்கிலத்திலுமாகச் சலியாது எழுதி வருகிற வர் என்பதை துளியும் காட்டிக் கொள்ளாத எளிமை. பிரிட்டிஷ் அருங் காட்சியகத்தில் சேக ரிக்கப்பட்ட இந்திய கலைப் பொருட்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் அசோசியேஷன் ஆஃப் பிரிட்டிஷ் ஸ்காலர்ஸ் அமைப்பினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஆப்பிரிக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலமுரியா கண்டம் ஒரு காலத்தில் சுமார் கி.மு.5,00,000 ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டு ஒரு நீண்ட நிலப்பரப்பு இருந்தது என்கிறார், அறிஞர் ஓல்டுகாம் அவர்கள். பேரறிஞர் எக்கேல் மற்றும் கிளேற்றர் இருவரும் ஒருமனதாக “சந்தாத் தீவுகளிலிருந்து” தொடங்கி ஆசியாவின் தென்கரை வழியாக ஆப்பிரிக்காவின் கீழைக்கரை வரை ஒரு பெரிய நிலப்பரப்பு பரவியிருந்த தாகவும், அங்கே குரங்கையொத்த உயிரினம் “இலமுரியா” (Lemuria) வாழ்ந்தன எனக் கூறுகின்றனர். பேரறிஞர் திரு. கட்டு எலியட் என்பவர் தாம் எழுதிய “மறைந்த இலமுரியா” (Lost Lemuria) என்ற நூலில் காட்டியுள்ள நில வரைபடத்தில் ஒரு பெரிய மலைத் தொடர் மேடைக்கடலில் தொடங்கித் தென் வடக்காகக் கும…
-
- 1 reply
- 2k views
-
-
எமக்குத் தொழில் கவிதை' என்பார் பாரதி. புதுக்கோட்டையைச் சேர்ந்த இளம் பெண் பேச்சாளர் பாரதி கூறுகிறார் "எமக்குத் தொழில் பேச்சு' என்று. பேச்சுக்கலையில் இப்போது பிரபலம், பட்டிமன்றம், வழக்காடு மன்றம்தான். அதிலும் குறிப்பாக, அந்தக் குழுவில் ஒரு பெண் இருப்பது அவசியமான ஒன்று என்பது மாறி, முற்றிலும் பெண் பேச்சாளர்களைக் கொண்டே ஒரு நிகழ்ச்சியை வடிவமைப்பது இப்போதைய புதிய பாணி. அப்படித்தான் நிகழ்ச்சி நடத்துகிறார் இந்தப் பாரதி. 30 வயது நிரம்பிய இவர் எம்சிஏ (கணினியியலில் முதுநிலைப் பட்டம்!) முடித்துள்ளார். தந்தை சந்திரசேகரன்தான் இவருக்கு குரு. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான சந்திரசேகரன், இப்போது தனியார் கல்லூரி ஒன்றின் முதல்வர். தாய் ஜெயலட்சுமி, தங்கை ஸ்ரீவித்யா. கணவர் பாபு. பேச்ச…
-
- 0 replies
- 963 views
-
-
சரியான உச்சரிப்புகள் இல்லாமல் தமிழ் வானொலிகளின் உரையாடல்கள் தமிங்கிலிஸ் மயமாகுவதை தடுப்பதற்கு நாமெல்லோரும் நல்ல தமிழில் உரையாடுவதோடு தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து பழக வேண்டும் என உலக அறிவிப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத், தமிழ்மிரர் இணையத்தளத்தின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார். சிறகுகளை விரித்து பட்டாம்பூச்சியாக பறக்கவேண்டிய சிறுவயதில் அழையாத விருந்தாளியாக இலங்கை வானொலி கலையகத்தில் கால்பதித்த பீ.எச்.அப்துல் ஹமீத், இன்று உலகம் போற்றும் சிறந்த அறிவிப்பாளராகவும் ஒளிபரப்பாளராகவும் பல பரிமாணங்களில் எம் முன் பரிணமித்துக்கொண்டிருப்பது கண்கூடு. இவரின் அறிவிப்புத்துறையின் உள்நுழைவே சற்று வித்தியாசமானது. வானலையில் தனது …
-
- 1 reply
- 1.2k views
-
-
-
மழலைகளுடன் தலைவர் http://www.aruchuna.net/categories.php?cat_id=23&sessionid=265a928656d1979a18260227cc0f41a3&sessionid=265a928656d1979a18260227cc0f41a3'>http://www.aruchuna.net/categories.php?cat_id=23&sessionid=265a928656d1979a18260227cc0f41a3&sessionid=265a928656d1979a18260227cc0f41a3 திருவிழா http://aruchuna.net/categories.php?cat_id=43 தமிழர் விழா http://aruchuna.net/categories.php?cat_id=45 மக்கள் பணி - தமிழீழ காவல்துறை http://aruchuna.net/categories.php?cat_id=54 அரசியல் - அரசியல் சந்திப்புக்கள் http://aruchuna.net/categories.php?cat_id=41 தாயக மக்கள் எழுச்சி http://aruchuna.net/categories.ph…
-
- 0 replies
- 1k views
-
-
மழலைகளுடன் தலைவர் மேதகு பிரபாகரன் http://www.aruchuna.net/categories.php?cat_id=23&sessionid=265a928656d1979a18260227cc0f41a3&sessionid=265a928656d1979a18260227cc0f41a3 முத்தமிழ்வேந்தன் சென்னை
-
- 0 replies
- 614 views
-
-
மழலைகளுடன் தலைவர் மேதகு பிரபாகரன் http://www.aruchuna.net/categories.php?cat_id=23&sessionid=265a928656d1979a18260227cc0f41a3&sessionid=265a928656d1979a18260227cc0f41a3 முத்தமிழ்வேந்தன் சென்னை
-
- 0 replies
- 470 views
-
-
கணினிப் பயன்பாட்டில் தமிழ் மொழியின் எழுத்துக்களை ஒரே மாதிரியாகப் பயன்படுத்த "TAMIL ALL CHARACTER ENCODING 16" மென்பொருளில் ஜ, ஷ, க்ஷ, ஸ, ஹ என்னும் (வடமொழி) கிரந்த எழுத்துகளைப் பயன்படுத்துவதை முதலில் கவனிக்காமல் இருந்துவிட்டு, அப்புறம் ஏன் இப்போது பின்வாங்குகிறார் முதல்வர் கருணாநிதி" என்று கேட்கிறது ஒரு குரல்! ஆகா...! முதல்வர் காலம் க்டந்தாவது தமிழ் குறித்து நல்லறிவு பெற்று, எதிர்க்கவேண்டிய வடமொழி எழுத்துகளை எதிர்திருக்கிறாரே என்று களிப்பேருவகை அடைந்தோம்! கருணாநிதி மத்திய அரசுக்கு எழுதிய மடல் ஏகெனவே தமிழ் ஒருங்குறியில் உள்ள, ஜ, ஷ, க்ஷ, ஸ, ஹ என்னும் ஐந்து எழுத்துகள் குறித்தவை அல்லவாம். இவைபோல் இன்னும் 26 கிரந்த எழுத்துக்களைத் தமிழ் ஒருங்குறியில் சேர்…
-
- 10 replies
- 1.3k views
-
-
தலைக்கு ஊத்தல்! சாவகாசமாக ஒரு எண்ணெய்க் குளியல். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அன்பும், நலமும் வேண்டி செய்யப்படும் ஒரு சடங்கு... விழாக்காலங்களின் தொடக்க நிகழ்வாக... கோடையின் வெப்பத்தை எதிர்கொள்ள உலகம் முழுவதும் மேற்கொள்ளப்படும் ஒரு வழக்கம்...! தமிழ்நாட்டின் விருதுநகர் பகுதியிலோ இது மெதுவாக நடைபெறும் ஒரு கொலை. வறுமையின் கொடுமை தாங்காமல் வயதான தாயை பெற்ற மகனே கொலை செய்யும் கொடூரத்தின் அடையாளம்! தமிழ்நாட்டின் தென்பகுதியில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் வயதான முதியவர்களை பராமரிக்க இயலாமல் அவர்கள் வீட்டு இளைய தலைமுறையே இவ்வாறு செய்யும் நிலைக்கு தள்ளப் படுகின்றனர். 65 வயதான மாரியம்மாவுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, தனக்கும் இது நடக்கலாம் என சந்தேகம் எழுந்தது. அவர் மக…
-
- 0 replies
- 964 views
-
-
விழிப்புணர்வு பெறும் மக்கள் தத்தம் மொழியைக் காப்பதில் முனைந்து செயல்படுகிறார்கள். சான்றுக்கு இலாட்விய மக்களைக் குறிப்பிடலாம். சோவியத் ஒன்றியம் சிதறுண்டபோது அதன் பிடியில் அகப்பட்டிருந்த இலாட்வியா தன் மொழி மேம்பாட்டில் கருத்துச் செலுத்தியது. ஊடகத்திலும், மக்கள் உரையாடலிலும் இரஷ்யனுக்குப் பதில் இலாட்விய மொழி ஒலிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. மீறியவர்களுக்குத் தண்டனை வழங்கியது. விளைவு, பத்தே ஆண்டுகளில் இலாட்விய மொழி வணிக மொழியாகவும், உயர்கல்வி மொழியாகவும் ஆகிவிட்டது. பிரிட்டனின் வேல்ஸ் பகுதியில் வெல்ஷ் மொழியைப் புழக்கத்திற்குக் கொண்டு வர விரும்பிய அப்பகுதியின் சட்டமன்றம் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, நெடுஞ்சாலைகளில் முதன்முறையாக ஆங்கிலத்துடன் வெல்ஷ் மொழியையும் அறிவிப்புப் …
-
- 0 replies
- 767 views
-
-
நாட்டுப்பாடல்கள் -கிழக்கிலங்கையின் பொக்கிஷம் பண்டு தொட்டு வாழ்ந்து மறைந்த மனிதர்களிடையே காணப்பட்ட பண்பாடு, வாழ்க்கை முறைமைகள் என்பன அவர்களது இலக்கியம் தோன்ற வழி வகுத்தது எனலாம். அவ்வக் காலங்களில் வாழ்ந்தவர்களது வாழ்க்கைப் பண்புகள் அவற்றைப் பிரதிபலிக்கின்றன. அப்பொழுது அவ்விலக்கியங்கள் செய்யுள் வடிவிலேயே அமைந்திருந்தன. வள்ளுவர் காலத்திலும் செய்யுள் வடிவிலேயே அவை இருந்தமையினால் சாதாரண படிப்பில்லாத மக்கள் அவற்றை விளங்கிக்கொள்ளக் கூடினமாகக் காணப்பட்டது. படித்தறிந்த பண்டிதர்கள் மாத்திரம்தான் அவற்றைப் புரிந்துகொள்ள முடியும். அவற்றைப் ‘பண்டிதர் இலக்கியம்’ என்று சொன்னால் கூட பிழையிருக்காது. ஏனைய மக்கள் அவற்றைப் படித்து அறிந்து அதன் தன்மைகளைப் புரிந்துகொள்வதாயிருந்தால் அ…
-
- 1 reply
- 3.2k views
-
-
மலையாளமாக மாறிவிடும் தமிழ் - எச்சரிக்கும் அறிஞர்கள் கணினி உலகில் மிக ஜாம்ப்வான்களாக உள்ள நிறுவனங்கள் இணைந்து "யூனிகோட் கன்சார்ட்டியம்" எனும் ஒருங்குறி (Unicode) அவையத்தை அமெரிக்காவில் நடத்தி வருகின்றன. கணினியை பயன்படுத்தும் அனைத்து நாடுகளும் இதில் இனை உறுப்பினர்களாக இருக்கின்றன. கணினியில் ஒவ்வொரு மொழிக்குமான எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கான இடங்களை ஒதுக்குவது, சேர்ப்பது, நீக்குவது தொடர்பான முடிவுகளை எடுக்கும் பணியை செய்து வருகிறது இந்த ஒருங்குறி அவையம். கணினி உலகில் சக்தி வாய்ந்த இந்த அவையத்திற்கு, கடந்த மாதம் தமிழ் எழுத்துக்களோடு சமஸ்கிருத்-கிரந்த எழுத்துகளையும் இணைத்து பயன்படுத்துவது தொடர்பாக ஒரு திட்டத்தை அனுப்பி வைத்துள்ளது. மத்திய அரசு.இதனை அறிந்து கொதித…
-
- 2 replies
- 764 views
-