Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொங்கு தமிழ்

தமிழ் | தமிழர் | தேசியம் | வரலாறு | பண்பாடு

பதிவாளர் கவனத்திற்கு!

பொங்கு தமிழ் பகுதியில் தமிழ், தமிழர், தேசியம், வரலாறு, பண்பாடு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், தேசியம், வரலாறு சம்பந்தமான அவசியமானதும், நம்பகத்தன்மை உள்ளதுமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நெடுந்தீவுக் கோட்டை . நெடுந்தீவுக் கோட்டை யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த நெடுந்தீவு என்னும் தீவில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரைக்கு அப்பால் மேற்குத் திசையில் அமைந்துள்ள 13 தீவுகளில் மிகப் பெரியதும், குடாநாட்டில் இருந்து கூடிய தொலைவில் அமைந்திருப்பதும் நெடுந்தீவே ஆகும். கோட்டை நெடுந்தீவின் வடக்குக் கரையோரத்தில், சிறிய கடற்கலங்கள் பயன்படுத்தும் இறங்குதுறை ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ளது. 2004 ஆம் ஆண்டின் நிலவரப்படி இக்கோட்டை அழிந்த நிலையில் இடிபாடுகளாகவே காணப்படுகின்றது. இது முருகைக் கற்களால் கட்டப்பட்டுள்ளது . http://ta.wikipedia....ந்தீவுக்_கோட்டை ஓல்லாந்தர் காலக் கோட்டை? நெடுந்தீவு மத்தியில் தற்போதைய வைத்தியசாலைக்கு க…

  2. பருத்தித்துறைக் கோட்டை. பருத்தித்துறைக் கோட்டை இலங்கையை ஒல்லாந்தர் ஆண்ட காலத்தில் யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கடற்கரை ஓரமாக அமைந்துள்ள பருத்தித்துறை நகருக்கு அண்மையில் இருந்த ஒரு கோட்டை. இது கடலுக்குள் நீண்டிருந்த பாறைப் பகுதியில் கட்டப்பட்டிருந்தது. இது இதன் அமைவிடத்தின் வடிவத்துக்கும் அளவுக்கும் பொருந்துமாறு கட்டப்பட்டதால், சிறந்த முறையில் பாதுகாப்பை வழங்கக் கூடியதாக அமையவில்லை . இதன் அமைவிடம் ஒரு முக்கோண வடிவத்தில் இருந்ததால், கோட்டையும் அதே வடிவத்தைப் பின்பற்றியே அமைக்கப்பட்டது. ஏறத்தாழ ஒரு செங்கோண முக்கோண வடிவத்தைக் கொண்டிருந்த இக் கோட்டையின் நீளமான பக்கம் வடக்குப் பக்கம் உள்ள கடலை நோக்கியதாக இருந்தது. இக் கோட்டையின் தரைப் பகுதியை நோக்கி…

  3. பூநகரிக் கோட்டை . வன்னித் தலைநிலத்தையும் யாழ்ப்பாணக் குடாநாட்டையும் பிரிக்கும் யாழ்ப்பாண நீரேரியின் தென்கரையில் பூநகரி என்று அழைக்கப்படும் ஊரில் அமைந்திருந்த ஒரு சிறிய கோட்டை ஆகும். கரையோரத்தில் இருந்து ஒரு மைலுக்கு மேல் தொலைவில் உட்புறமாக அமைந்திருந்த இக் கோட்டையில் முக்கியத்துவம் வாய்ந்த பணிகள் எதுவும் நடந்திருக்க வாய்ப்புக்கள் இல்லை என்பது இலங்கையில் உள்ள ஒல்லாந்தர் கோட்டைகளைப் பற்றி ஆராய்ந்து நூல் எழுதிய நெல்சன் என்பாரது கருத்து. 1620 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசர் 1658 ஆம் ஆண்டுவரை ஆண்டனர். தமது ஆட்சியின் கடைசிக் காலத்தை அண்டி இக் கோட்டையை அவர்கள் நிறுவினர். மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் பாதை நீரேரிக்குத் தெற்கே முடிவ…

  4. பெசுச்சூட்டர் கடவைக் கோட்டை. பெசுச்சூட்டர் கடவைக் கோட்டை யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்கிழக்குப் பகுதியில் குடாநாடு தலை நிலத்துடன் இணையும் இடத்துக்கு அருகே, அமைந்துள்ள ஒடுங்கிய நிலப்பகுதியில் உள்ள ஒரு சிறிய கோட்டை ஆகும். இக்கோட்டையும், ஆனையிறவுக் கோட்டை, பைல் கடவைக் கோட்டை என்பனவும் யாழ்ப்பாண நீரேரியின் ஆனையிறவுக்குக் கிழக்கேயுள்ள பகுதிக்கு வடக்கே ஒரே கோட்டில் வரிசையாக அமைந்துள்ளன. தலைநிலத்திலிருந்து குடாநாட்டுக்கான நுழைவழியைக் கண்காணித்துப் பாதுகாப்பதே இக் கோட்டைகளின் நோக்கம். இக் கோட்டைகள் அமைக்கப்பட்டதன் பின்னணியில் யாழ்ப்பாணத்தில் ஒல்லாந்தர் ஆட்சியைப் பாதுகாத்தல், ஒல்லாந்தரின் வணிக நலன்களைப் பாதுகாத்தல், மக்களைப் பாதுகாத்தல் என்னும் நோக்கங்கள் இருந்ததாகத் தெர…

  5. மட்டக்களப்புக் கோட்டை. போர்த்துக்கீச கோட்டை அல்லது இடச்சுக் கோட்டை (ஒல்லாந்து கோட்டை) என அழைக்கப்படும் கோட்டையானது 1628ஆம் ஆண்டு போர்த்துக்கேயரால் கட்டப்பட்டு, ஒல்லாந்துக்காரரால் 1638இல் கைப்பற்றப்பட்டது. இலங்கையிலுள்ள அழகிய சிறிய ஒல்லாந்துக் கோட்டைகளில் இதுவும் ஒன்று. மட்டக்களப்பு தீவுகளில் ஒன்றான புளியத்தீவில் அமைந்துள்ள இது, இன்னும் பழுதடையாமல் காணப்படுகிறது. மட்டக்களப்பு போர்த்துக்கேய கோட்டையின் ஓர் பகுதி. மட்டக்களப்பு போர்த்துக்கேய கோட்டை நுழைவாயிலிலுள்ள பழைய பீரங்கிகளில் ஒன்று. மட்டக்களப்பு போர்த்துக்கேய கோட்டையிலுள்ள பீரங்கி. தூரத்தில் காவல் கோபுரம் தெரிகிறது. பரந்த காட்சி. http://ta.wik…

  6. மன்னார்க் கோட்டை. மன்னார்க் கோட்டை இலங்கையின் மேற்குக் கரையோரத்துக்கு அப்பால் அமைந்துள்ள மன்னார்த் தீவில் அமைந்துள்ள ஒரு கோட்டை ஆகும். அதன் நீளப்பாட்டு அச்சு, வடமேற்கு - தென்கிழக்காக, கரைக்கு ஏறத்தாழச் செங்குத்தாக இருக்குமாறு மன்னார்த்தீவு பாக்கு நீரிணைக்குள் நீண்டு அமைந்துள்ளது. தீவுக்கும், தலைநிலத்துக்கும் இடையே மிகவும் குறுகலான கடற்பகுதியே உள்ளது. மன்னார்க் கோட்டை, தீவின் தென்கிழக்கு முனையை அண்டித் தலைநிலத்தைப் பார்த்தபடி அமைந்துள்ளது. யாழ்ப்பாண இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்த மன்னார்த்தீவை 1560 ஆம் ஆண்டில் போத்துக்கீசர் கைப்பற்றிக்கொண்டனர். போத்துக்கீசர் கைப்பற்றிய யாழ்ப்பாண இராச்சியத்தின் முதல் நிலப்பகுதி இது. இங்கே அவர்கள் தமது கோட்டை ஒன்றைக் க…

  7. யாப்பகூவ கோட்டை. குருநாகலை மாவட்டத்தின் மகவ என்னும் கிராமத்துக்குச் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் இந்தக் கோட்டையானது அமைந்துள்ளது. ஈழத்தின் கலை வரலாற்றில் இரண்டாவது சீகிரியா என வர்ணிக்கப்படுகிறது. கி.பி 478 தொடக்கம் 496 ஆண்டுகள் வரையான காலப் பகுதிகளில் காசியப்ப அரசன் சீகிரியா கோட்டையை நிறுவி குபேரனைப் போல வாழ்ந்தான் என்று மகாவமிசம் கூறுவதைப் போல இயற்கை அரணாக விளங்கும் யாப்பகுவவை சுப எனப்படும் இராசதாணி தங்கியிருந்து தனது ஆதிக்கத்தை செலுத்தியதாக பௌத்த சாதுக்களின் கல்வெட்டுக்களின் மூலம் அறியக் கிடைக்கிறது. சுப எனப்படுபவர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர். இருந்த போதிலும் பதின் மூன்று பௌத்தப் பிக்குகளின் பௌத்த அனுஷ்டானங்களை பாதுகாத்து வந்துள்ளார். மேலும் 121…

  8. ஆதி மனிதர்கள் திருவள்ளூரில்தான் தோன்றினார்கள், என நிரூபிக்கிறது பட்டரைபெரும்புதூர் அகழாய்வு!ஆதி மனிதர்கள் ஆப்பிரிக்காவில் தோன்றினர் என்பதைத் தகர்க்கிறது பட்டரை பெரும்புதூர், அகரம்பாக்கம் அகழாய்வுகள். திருவள்ளூர் மாவட்டத்தின் குடியம் பகுதியில் ஆதி மனிதர்களின் கற்கால குகை வீடுகள் கண்டெடுக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து சர்வதேச ஆய்வாளர்கள் ஆதிமனிதர்கள் அதிரம்பாக்கத்தில் வாழ்ந்ததாக சான்றுகளை வெளியிட்டனர்.இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம் அதிரம்பாக்கம், பட்டரைபெரும்புதூர் பகுதிகளில் தமிழக அரசு அகழாய்வுப் பணிகளை கடந்த சில ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது. இந்த அகழாய்வுகளில் இதுவரை 351 பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல்லவர் ஆட்சிக் காலத்தில் பெருமூர் என்கிற பெயரில் பட…

  9. பாகிஸ்தானில் கொற்கை, வஞ்சி, தொண்டி, மாத்ரை, உறை, கூடல்கட் மற்றும் கோளி, என்ற தமிழ்ப் பெயர்களில் ஊர்கள் இருக்கின்றன. அதுபோலவே, ஆப்கானிஸ்தானிலும் கொற்கை மற்றும் பூம்புகார் என்ற பெயரில் ஊர்கள் இருக்கின்றன என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் கூறுகிறார்.தமிழ் இலக்கியம் படித்துள்ள பாலகிருஷ்ணன், இந்தியத் தேர்தல் ஆணையராகப் பணியாற்றியவர். சிறந்த தமிழ் அறிஞர். இவரது 'சிந்துச் சமவெளி நாகரிகமும் சங்க இலக்கியமும்’ என்ற கட்டுரை, சிந்துச் சமவெளியில் பயன்படுத்தப்பட்ட மொழி குறித்தும், சங்க காலப் பண்பாடுடன் சிந்து சமவெளிக்கு உள்ள தொடர்பு குறித்தும் முக்கிய விவாதத்தை முன்வைக்கிறது. சிந்து சமவெளி நாகரிகத்தின் வீழ்ச்சி என்பது, சிந்துவெளி மக்களின் ஒட்டுமொத்த முடிவு அல்ல. அதுபோலவே, சங்க இ…

  10. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ARCHAEOLOGICAL DEPARTMENT OF INDIA ஆதிச்சநல்லூரில் 17 ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட தொல்லியல் அகழாய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. ஆதிச்சநல்லூரில் வாழ்ந்த மக்களுக்கும், சிந்து சமவெளியின் மொஹஞ்சதாரோவில் வாழ்ந்த மக்களுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? ஆதிச்சநல்லூர் அகழாய்வு முடிவுகள் குறித்து விரிவான தகவல்கள். ஆதிச்சநல்லூர் தொல்லியல் தலத்தில் 2004 - 2005 காலகட்டத்தில் சென்னை மண்டலத்தின் தொல்லியல் துறை கண்காணிப்பாளராக இருந்த டி. சத்யமூர்த்தியும் அவரது குழுவினரும் இந்த ஆய்வை நடத்தினார். 600 ச…

  11. ஆதிச்சநல்லூரில், கிடைத்த பொருட்கள்... 3000 ஆண்டுகள் பழமையானவை. மத்திய அரசு ஆச்சர்ய தகவல்! ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்தவை என்று மத்திய தொல்லியல் துறை ஆச்சர்ய தகவலை வெளியிட்டு இருக்கிறது. உலகின் பழமையான நகரங்களில் ஆதிச்சநல்லூரும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இங்கு செய்யப்பட்ட ஆய்வுகள் எல்லாம் வரலாற்று ஆராய்ச்சியாளர்களை பிரம்மிப்பிற்கு உள்ளாக்கி இருக்கிறது. தூத்துக்குடியில் உள்ள இந்த பழமையான நகரத்தில் இதுவரை செய்யப்பட்ட அகழ்வாராய்ச்சிகள் எல்லாம் நிறுத்தப்பட்டு உள்ளது. தற்போது இங்கு எடுக்கப்பட்ட பொருட்கள் மட்டுமே ஆய்வு செய்யப்படுகிறது. புதிதாக அங்கு அகழ்வாராய்ச்சி எதுவும் நடக்கவில்லை.இந்த நிலையில் ஆதிச்சநல்லூரில் மீண்…

  12. ஆதிச்சநல்லூரைப் போல முக்கூடலில் முதுமக்கள் தாழி கண்டுபிடிப்பு. திருநெல்வேலி: தமிழர் நாகரீக அடையாளமாக விளங்கும் ஆதிச்சநல்லூர் போன்ற மற்றொரு புதைகாடு நெல்லை மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் முக்கூடல் பாப்பான்குளம் அருகே உள்ள பொய்யிலான் பொற்றையை ஒட்டி பறம்பு ஓன்று உள்ளது. இதில் அக்காலத்தில் பெரிய இடுகாடு இருந்துள்ளதை உறுதிப்படுத்தும் விதமாக பழங்கால தாழிகள் அதிகம் புதைந்துள்ளன. சுமார் 2 அடி விட்டமுள்ள தாழிகள் முதல் 4 அடி விட்டமுள்ள தாழிகள் வரை உள்ளன. ஒன்றினுள் ஒன்றாக 3 அடுக்குகளாக தாழிகள் உள்ளன. இவை கருப்பு மற்றும் சிவப்பு ஓடுகளை கொண்டவைகளாக உள்ளன. இந்த பாறையின் ஒரு பகுதி கருஞ்சிவப்பு நிறமுடையதாக உள்ளது. மாவட்டத்தில் வேறு எந்த இடத்திலும் இந்த வண…

  13. ஆதிச்சநல்லூர் - சிந்துவெளி இடையே வியத்தகு ஒற்றுமை - வெளியிடப்படாத ஆய்வு முரளிதரன் காசிவிஸ்வநாதன்பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் 2004ஆம் ஆண்டுவாக்கில் நடந்த ஆய்வின் முடிவுகள் பதினைந்து ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இதுவரை வெளியிடப்படவில்லை. இந்த ஆய்வுகளில் தெரியவந…

  14. உலகின் மூத்த குடி தமிழ் குடி.. அகழ்வாராய்ச்சி முடிவுகளை இந்திய மத்திய அரசு மூடிமறைப்புதிருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் 17 கி.மீ. தொலைவில் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஆதிச்சநல்லூர் என்ற ஊர் உள்ளது. இது ஓர் இடுகாடு. இறந்தவர்களைப் புதைத்த இடம். இதன் பரப்பளவு 114 ஏக்கர். இங்கு 4 அடிக்கு ஒருவர் வீதம் தாழிகளில் இறந்தவர்களை வைத்துப் புதைத்துள்ளனர். தாழி என்றால் பானை என்பது பொருள். இவ்வாறு புதைக்கப்பட்ட பானைகளை முதுமக்கள் தாழி என்றும் ஈமத்தாழி என்றும் கூறுவர். தென்பாண்டி நாட்டில் இத்தாழிகள் ஏராளம் உண்டு. ஆதிச்ச நல்லூரில் ஆயிரக்கணக்கான தாழிகள் வரிசை வரிசையாகக் கிடைக்கின்றன. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய இடுகாடாகும். அது மட்டுமல்ல பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்…

    • 3 replies
    • 1.6k views
  15. கொலை என்றால் வாள் எடுத்து அரிவாள் எடுத்து தலைகளை வெட்டிச் சாய்ப்பது பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் செய்வது என்று பொதுவாகப் பார்ப்பனர்கள் கொலை செய்வது பாவம் என்றும் அஞ்சுபவர்கள் என்றும் எண்ணுவது மக்கள் இயல்பு. ஆனால், பார்ப்பனர்கள் கொலை செய்யவும் தயங்காதவர்கள் சோழர் குல விளக்கு ராஜ ராஜசோழனின் உடன்பிறப்பு அண்ணன் ஆதித்த கரிகாலனைக் கொன்றவர்களே சோழர்களின் காலத்தில் பார்ப்பனர்கள் என்பது வரலாற்றுக் கல்வெட்டு காட்டும் உண்மை. காவிரி வள நாடர், பொன்னி வள நாடர் என்றும் புகழ் விளங்க வாழ்ந்த மரபினர் சோழ மரபினர். இமய வரம்பினில் புலிக்கொடி ஏற்றி இசைபட வாழ்ந்தவர்கள். பாண்டியரைப் போல், சேரர் போல் பழம் பெரு மரபினர். செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணி இராச பாரம்பரியம் என்னும் தலைப்பில் சோழ…

  16. [size=4]ஆதித்த கரிகாலன் சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம் இராஜராஜனின் தமையனும் சுந்தர சோழரின் மகனுமாவான். ஆதித்தன் சிறுவனாய் இருந்த பொழுதே சிங்கம் யானையுடம் போரிடுவதைப் போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட செய்த கண்டராதித்தனின் முயற்சிகளைத் தகர்த்து தன்னுரிமையுடன் வாழ்ந்து வந்த வீரபாண்டியனுடன் போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன. புதுக்கோட்டையின் தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனது வீரம் வெளிப்பட்டதோடு, வீரபாண்டியன் தலைகொண்ட என்று கூறிக்கொள்ளவும் இவனுக்கு வாய்ப்பைக் கொடுத்தது. வீரபாண்டியன் ஆதித்தனால் கொல்லப்பட்டதாகத் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன. குடும்ப வாழ்வில…

  17. ஆதித்த கரிகாலன் உண்மையில் கொன்றது யார்? Aditya Karikalan Death Mystery Revealed | Deep Talks Deepan

  18. நான் நீண்ட நாட்களுக்கு முன்பு என்னுடைய வலைப்பதிவில் ஆதித்த கரிகாலன் கொலை பற்றிய இட்ட இடுக்கைகள். இன்னும் இந்தக் கேள்விகள் என்னுள்ளே அப்படியே இருக்கின்றன. யாழ் களத்தில் பல அறிஞர் பெருமக்கள் இருப்பதால் என் ஐயம் தீர இதைப் பற்றி விவாதிக்கலாம் என்று எண்ணி இதை இடுகிறேன். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தை வாசித்த பின்பு தமிழ் மீது பற்றுக் கொண்ட பலருள் நானும் ஒருவன். வாசித்தவர்களிடம் ஒரு வீரியமான தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டது இந்தப் புதினம். அதற்குப் பின்பு அகிலன், விக்கிரமன்,சாண்டில்யன் மற்றும் பாலகுமாரனின் உடையார் முதற்க் கொண்டு எல்லாம் வாசித்து விட்டேன். ஆனாலும் பொன்னியின் செல்வன் இன்னும் பசுமையாய் இருக்கிறது. இப்புதினத்தை வாசித்த பின்பு எல்லோர் மனதிலும்…

    • 6 replies
    • 19.9k views
  19. ஆதிவாசி என்பது என்ன மொழி? நேற்றைய பிபிசி ஆங்கில உலகசேவயில், இந்திய ரைசிங் என்ற புரோகிராமில் ஆதிவாசீஸ் என்ற சொல்லை பயன் படுத்தினார்கள்( tribe, tribal என்றும் பயன் படுத்தினார்கள் ஆனால் கூடுதலாக, இந்திய செய்தியாளார் ஆதிவாசீஸ் என்ற சொல்லையே பயன்படுத்தினார்) சந்தெகத்தை தயவு செய்து தீர்க்கவும்!

    • 0 replies
    • 928 views
  20. விக்னேஷ்.அ பிபிசி தமிழ் 20 ஆகஸ்ட் 2020, 10:31 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, பெரியாரும் குன்றக்குடி அடிகளாரும் (தமிழர் பெருமை என்ற தலைப்பில் பிபிசி தமிழ் ஒரு சிறப்புக் கட்டுரைத் தொடர் வெளியிடுகிறது. தமிழ் மற்றும் தமிழருக்குப் பெருமை சேர்க்கும் பொருள்கள் குறித்த ஆழமான அலசலாக, சுவை சேர்க்கும் தகவல் திரட்டாக இந்தத் தொடரில் வரும் கட்டுரைகள் அமைய வேண்டும் என்பதே நோக்கம். இது இந்தத் தொடரின் ஏழாவது கட்டுரை.) இந்திய ஒன்றியத்தில் உள்ள மாநிலங்களில் 'நாடு' என்ற பெயரைக் கொண்ட மாநிலங்கள் இரண்டு. ஒன்று தமிழ் நாடு. மற்றொன்று மகாராஷ்டிரம். 'மகாராஷ்டிரா…

  21. ஆத்திசூடி புதிய இசைவடிவில் கேட்டுப் பாருங்கள்!!!

  22. கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன் .க. பதவி, பிபிசி தமிழுக்காக 13 டிசம்பர் 2023 மன்னராட்சி காலகட்டத்தில் கட்டப்பட்ட, இன்று நம் கண்முன்னே காணக் கிடைக்கும் அரண்மனைகளும் கோட்டைகளும் மற்றக் கட்டுமானங்களும் சிதைந்திருக்கலாம், அழிவின் விளிம்பில் நிற்கலாம். ஆனாலும் அவை கம்பீரமானவை, காண்போரை வியக்க வைப்பவை. இவை, முன்னோர்களின் வீரத்தை, போர்த் திறனை, நிர்வாகத் திறனை, வாழ்வியலை, உணர்த்தி நிற்கும் மௌன சாட்சியங்கள். கால ஒட்டம் இந்த சின்னங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சிதைத்து வந்தாலும், தன் கடைசி அடையாளம் இம்மண்ணில் உள்ளவரை இவைதம் பணியை நிறுத்தப் போவதில்லை. கோட்டை என்பது அக்கால அரசர்களால் பாதுகாப்பு காரணங்களுக்காக கட்ட…

  23. வணக்கம், அண்மையில எனது அக்கா தான் யூரியூப்பில் கேட்டு மகிழ்ந்த ஓர் தமிழ்ப்பாடலை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருந்தா. நீங்களும் கேட்டுப்பாருங்கோ, பாடல் மிக நன்றாக இருக்கிது. ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன் தேனார்பூஞ் சோலைத் திருவேங்கடச் சுனையில் மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே. கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன் எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமேல் தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே. செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே! நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல் அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும் படியாய்க் கிடந்துன் பவளவாய்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.