Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாணிப உலகம்

வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று

பதிவாளர் கவனத்திற்கு!

வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கிரிப்டோ கரன்சி வர்த்தகத்தில் மனிதர்களை முந்தும் எலி - மிஸ்டர் கோக்ஸ் 27 செப்டெம்பர் 2021 பட மூலாதாரம்,GOXX CAPITAL பலரைப் போலவே மிஸ்டர் கோக்ஸும் கிரிப்டோகரன்சி என்ற வணிகக் கடலுக்குள் குதித்துவிட்டார், என்றாவது ஒருநாள் அது தன்னை பணக்காரர் ஆக்கிவிடும் என்ற நம்பிக்கையுடன். பலரைப் போலவே என்று சொன்னோம் அல்லவா, ஆனால் இரண்டு விஷயத்தில் அவர் மற்றவர்களை விட மாறுபட்டவர். ஒன்று சாதாரண மனிதர்களைப் போல அவர் குறைந்த அளவு லாபம் ஈட்டுவதில்லை. பல தொழில்முறை வர்த்தகர்கள், நிதியங்கள் போன்றவற்றை எல்லாம் அவர் தோற்கடித்துவிட்டார். இரண்டாவது வேறுபாடு, அவர் மனிதர் அல்லர். அவர் ஒரு எலி. வெள்ளெலி. மிஸ்டர் கோக்…

  2. மெர்சிடஸ்-பென்ஸ் கார் தயாரிப்பு நிறுவனமான ஜெர்மனியின் டைம்லர் , 10 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய போவதாக அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் அந்த நிறுவனத்தில் சுமார் 3 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இந்நிலையில், 2022ம் ஆண்டு இறுதிக்குள் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் ஊதியம் மூலம் ஆகும் செலவில் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தவும், எதிர்காலத்துக்கு உகந்த நவீன கார்களை உருவாக்க முதலீடு செய்யவும் டைம்லர் முடிவெடுத்துள்ளது. இதை கருத்தில் கொண்டு ஊழியர்கள் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. முன்கூட்டியே ஓய்வு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் மூலம் ஆட் குறைப்பு செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. https://www.polimernews.com/dne…

  3. எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் உலக பொருளாதார வளர்ச்சி 3% சுருங்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார். 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவாகும் மிகவும் மந்தமான பொருளாதார வளர்ச்சி வேகம் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச முரண்பாடுகளை தீர்ப்பதற்காக சர்வதேச நாடுகளிடமிருந்து கிடைக்கப்பெறும் ஒத்துழைப்பு குறைவடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றுப் பரவலினால் ஏற்பட்ட தாக்கம், ரஷ்ய – உக்ரைன் யுத்தம் மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட சிக்கல்களால், நிதி உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கான கோரிக்கைகளும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டனில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அ…

  4. ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த தாக்குதல் காரணமாக நடக்கும் வர்த்தக ஆண்டில், ஏப்ரல் 2019 - மார்ச் 2020, 160 மில்லியன்கள் அமெரிக்க டாலர்கள் வரை நட்டம் எதிர்பார்க்கப்படுவதாக நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குனர் தெரிவித்துள்ளார். SriLankan Airlines to report loss of up to $160 m due to Easter Sunday attacks: CEO Reuters: Sri Lanka’s state-run carrier could post a loss of as much as $160 million this financial year, as tourist arrivals in the island nation fell following the Easter bombings in April. “The forecast (for fiscal year ending March 2020) soon after the Easter Sunday attack is about $160 million ... but I’ll be happy if I can cap it around $100-$120 million,”…

    • 0 replies
    • 319 views
  5. தனது நிறுவனங்களின் மதிப்பு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் என்றாலும், ஆனால், அந்தளவிற்கு தன்னிடம் ரொக்கமாக பணம் இல்லை என டெஸ்லா (Tesla) நிறுவன தலைவர் எலன் மஸ்க் (Elon Musk) கூறியிருக்கிறார். டுவிட்டரில், சுமார் 3 கோடி பேரால் பின்தொடரப்படும் எலன் மஸ்க், கடந்த 2018ஆம் ஆண்டு, பிரிட்டனைச் சேர்ந்த குகை ஆய்வு வல்லுநரான வெர்னான் அன்ஸ்வொர்த் (Vernon Unsworth) குறித்து வெளியிட்ட அவதூறு பதிவிற்காக, மானநஷ்ட வழக்கை எதிர்கொண்டிருக்கிறார். இந்த வகையில், லாஸ் ஏஞ்சலீஸ் நகர நீதிமன்ற நீதிபதி ஸ்டீபன் வில்சன் (Stephen Wilson) முன் ஆஜரான எலன் மஸ்க்கிடம், தங்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என எதிர்தரப்பு வழக்கறிஞர் வினவினார். இதற்கு பதிலளித்த எலன் மஸ்க், தாம் கையில் ஏராளமாக பணம் வைத்திரு…

    • 0 replies
    • 269 views
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அம்ரிதா பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 10 ஏப்ரல் 2025 கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 2) அன்று பல நாடுகள் மீது பரஸ்பர வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இது உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சீனா தவிர மற்ற நாடுகளுக்கான பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் நேற்று தெரிவித்தார். உயர்ந்து வந்துகொண்டிருந்த தங்கம் விலையானது கடந்த வாரம் டிரம்பின் அறிவிப்பை தொடர்ந்து சரிவை சந்தித்தது. ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று தங்கம் ஒரு கிராமுக்கு (22 கிராட்) 110 ரூபாய் சரிந்து சுமார் 8,500 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து 4 நாட்களுக்கு தங்கத்தின் விலை குறைந்தது. ஏப்ரல் 9 அன்று ஒரு கிராமுக்…

  7. தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹுண்டாய் கார் நிறுவனம், ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் காரை வடிவமைத்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசலை எரிபொருளாகக் கொண்டு இயக்கப்படும் கார்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்துகின்றன. இதற்கு மாற்றாக, தற்போது மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, உலகளவில் பிரபலமடைந்து வருகின்றன. இந்த நிலையில், தென்கொரியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஹுண்டாய் கார் நிறுவனம் ஹைட்ரஜனால் இயங்கும் காரை வடிவமைத்துள்ளது. மின்சார பேட்டரிகளை விட ஹைட்ரஜன் செல் வாகனங்களுக்கு அதிக திறனைத் தருகின்றன. மேலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாக வகையிலும் உள்ளது. அதிக தூரம் பயணிக்கக்கூடிய, பேருந்து, சரக்கு வாகனங்கள், போன்றவற்றிற்கும் இத…

    • 0 replies
    • 489 views
  8. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று, வரலாற்றில் இல்லாத அளவு கடுமையாக சரிந்தது. துருக்கியின் பொருளாதார சரிவின் காரணமாக அதன் நாணயமான லிரா கடும் சரிவை சந்தித்து வருகிறது. இதனால் அண்மைகாலமாக உலக அளவில் டாலருக்கு நிகரான நாணய மதிப்பில் பல்வேறு நாணயங்களும் சரிவினை கண்டுள்ளன. இந்திய ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் வீழ்ச்சி கண்டது. அந்நிய நேரடி முதலீடு குறைவு மற்றும் கச்சா எண்ணெய் விலை ஏற்றமும் ரூபாய் மதிப்பு சரிவில் தாக்கத்தை உருவாக்கியது. இதனால் கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்தநிலையில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்துள்ளது. இன்று காலை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்…

    • 0 replies
    • 505 views
  9. உலகின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான அலிபாபா-வின் தலைவர், ஜாக் மா சொல்கிறார் "ஒரு குழந்தைக்கு முன்னால் ஒரு ஐஸ்க்ரீமையும், 2000 ரூபாய் நோட்டையும் காட்டினால், அது ஐஸ்க்ரீமைத் தான் எடுத்துக் கொள்ளும். அந்தக் குழந்தைக்கு 2,000 ரூபாயில் எத்தனை ஐஸ்க்ரீம்களை வாங்க முடியும் எனத் தெரியாது". "அது போலவே, இன்றைய உலகில் இருக்கும் இளைஞர்களிடம் ஒரு நல்ல வேலைக்கான அப்பாயிண்ட்மென்ட் லெட்டர் அல்லது ஒரு நல்ல Business-க்கான ஐடியாவைக் கொடுத்தால், அவர்கள் நல்ல வேலையைத் தான் தேர்வு செய்கிறார்கள், அந்த பச்சைக் குழந்தயைப் போல" என்கிறார் ஜாக் மா. உண்மை தானே... பாதுகாப்பு, என்ன ஆனாலும் மாதம் பிறந்தால் சம்பளம் வந்து விடும் என்கிற ஒரு சின்ன செண்டிமெண்டில் லாக் ஆகிவிடுகிறோம் தானே. Business…

    • 4 replies
    • 1k views
  10. இந்தியாவும், சீனாவும் வளரும் நாடுகள் எனக்கூறிகொண்டு, உலக வர்த்தக மையத்தின் சலுகைகளை அனுபவித்து வருவதாகவும், இதனை அனுமதிக்க முடியாது என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். உலக வங்கியானது உலகளவில் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி 2018-ம் ஆண்டுக்கான பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டது. இதில் இந்தியா பின்னோக்கி சென்றுள்ளது. அதாவது 2017-ம் ஆண்டு பட்டியலில் 5-ம் இடத்தில் இருந்த இந்தியா 2018 பட்டியலின் படி 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 2018 பட்டியலின் படி பொருளாதாரத்தின் மொத்த மதிப்பாக 20.5 ட்ரில்லியன் டாலர்களை கொண்ட அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 13.6 ட்ரில்லியன் டாலர்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 5 ட்ரில்லியன் டாலர்கள…

    • 0 replies
    • 293 views
  11. ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறுகுறு தொழில்களுக்கு உதவும் வகையில் பிணையில்லாமல் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தன்னிறைவு இந்தியா டில்லியில் அவர் கூறியதாவது: விரிவான தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் நேற்று அறிவித்திருக்கிறார். பல்வேறு அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பல கட்ட ஆலோசனை அடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. சுயசார்பு பாரதம்(தன்னிறைவு இந்தியா) என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தியா சுயசார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. உலகத்திற்கு உதவி பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், மனிதவளம் மற்றும் தேவை ஆகியவை வளர்ச்சியின் தூண்கள…

    • 2 replies
    • 463 views
  12. ஸகாரா டாவுட்போய் கடந்த தசாப்தத்தில் கொழும்பின் உணவு நிலை கணிசமானளவு வேறுபட்டது. இன்று கொழும்புவாசி ஒருவருக்கு தெரிவு செய்வதற்கு பரந்த அளவிலான சமையல் வகைகள் உள்ளன, மற்றும் நடைமுறையில் ஒவ்வொரு தெருவிலும் ஒரு புதிய உணவகம் உள்ளது. விரைவான வளர்ச்சியை அனுபவிக்கும் பிரிவுகளில் துரித உணவும் ஒன்று. ஸ்ரீலங்காவில் 1993ம் ஆண்டு முதன்முதலில் திறக்கப்பட்ட சர்வதேச துரித உணவுச் சங்கிலி ‘பிஸ்ஸா ஹட்’ ஆகும். யூனியன் பிளேசில் அமைந்திருந்த இந்த புதுமையான கடை உடனடியாகவே நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களிடையே மிகவும் பிரபலம் பெற்றது, குறிப்பாக அதன் விரிவான விளையாட்டுப் பகுதி காரணமாக, அது மேலும் அந்த நேரத்தில் கொழும்பில் எளிதாகக் கிடைக்காத உணவு வகைகளையும் வழங்கியது. அப்போது முதல் ஸ்…

  13. வரும் 2025ம் ஆண்டில் சர்வதேச ஆணுறை சந்தை வளர்ச்சி அதிகரிக்கும் ; அறிக்கை தகவல் சர்வதேச ஆணுறை சந்தை வளர்ச்சியானது வரும் 2025ம் ஆண்டில் 3.70 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும் என அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. நியூயோர்க், உலகில் பாலியல் சார்ந்த வியாதிகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்து வரும் சூழலில், சர்வதேச ஆணுறை சந்தை வளர்ச்சியானது வரும் 2025ம் ஆண்டில் 3.70 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்கும் என அறிக்கையை வெளியிட்டு உள்ள டெக்னோவியோ என்ற சர்வதேச தொழில் நுட்ப ஆராய்ச்சி மற்றும் ஆலோசனை நிறுவனம் தெரிவிக்கின்றது. இந்த வளர்ச்சியானது, ஆண்டுக்கு 8 சதவீதம் என்ற அளவில் இருக்கும். இவற்றில், ஆசிய பசிபிக் பகுதிகளான சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகியவற்றில் 44 சத…

  14. படத்தின் காப்புரிமை marutisuzuki.com வட இந்திய மாநிலமான ஹரியானாவில் உள்ள குருகிராம் மற்றும் மானேசர் ஆகிய இடங்களில் இருக்கும் தங்கள் தொழிற்சாலைகளை இரண்டு நாட்கள் மூட இருப்பதாக இந்தியாவின் மிக பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆறு மாதங்களாக விற்பனையில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டுள்ளதால், தனது இரண்டு தொழிற்சாலைகளை செப்டம்பர் 7 மற்றும் 9ம் தேதிகளில் மூடிவிட மாருதி சுசுக்கி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த இரு நாட்களும் உற்பத்தி இல்லாத நாட்களாக அந்த நிறுவனத்தால் அனுசரிக்கப்படும். …

  15. 20 ஆண்டுகளில் முதன்முறையாக, யூரோ (EUU) மற்றும் அமெரிக்க டாலருக்கு இடையிலான மாற்று விகிதம் சமநிலையை எட்டியுள்ளது -- அதாவது இரண்டு நாணயங்களும் ஒரே மதிப்புடையவை. செவ்வாயன்று யூரோ $1 ஐ எட்டியது, ஆண்டின் தொடக்கத்தில் இருந்து சுமார் 12% குறைந்தது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பால் ஏற்பட்ட உயர் பணவீக்கம் மற்றும் எரிசக்தி வழங்கல் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றால் தூண்டப்பட்ட கண்டத்தில் மந்தநிலை பற்றிய அச்சங்கள் ஏராளமாக உள்ளன. போருக்கு முன்னர் ரஷ்ய குழாய்கள் மூலம் அதன் எரிவாயுவில் சுமார் 40% பெற்ற ஐரோப்பிய ஒன்றியம், ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயுவை சார்ந்திருப்பதை குறைக்க முயற்சிக்கிறது. அதே நேரத்தில், ரஷ்யா சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தைத் தடுத்து நிறுத்தியது ம…

  16. எமர்ஜென்ஸி ஃபண்டு நிதியை, ஒரே நாளில் உருவாக்குவது என்பது கஷ்டமான காரியம். ஆனால், குறிப்பிட்ட ஆண்டுகளில் சேர்க்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்தால் சேமிக்க முடியும். இன்றைய சூழலில், வேலையிழப்பு பிரச்னைதான் முதன்மையான பேச்சாக இருக்கிறது. ஏனெனில், நம் நாட்டின் பொருளாதார மந்த நிலையால் யாருக்கு எப்போது வேலை போகும் என்றே சொல்ல முடியாத சூழ்நிலை. சம்பளத்தை மட்டுமே நம்பி பல லட்சம் குடும்பங்கள் இங்கே இயங்கிக்கொண்டிருக்கும்போது, திடீர் வேலையிழப்பு அந்தக் குடும்பங்களைத் திக்குமுக்காடச் செய்துவிடும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதுமட்டுமில்லாமல், உடல்நலம் சரியில்லாமல் போவது, விபத்தில் சிக்கி சில மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டிய நிலை ஏற்படுவது போன்ற அவசரச் செலவுகள்…

    • 0 replies
    • 285 views
  17. '2024-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை எட்டுவதே இந்தியாவின் முதன்மை இலக்கு' - பிரதமர் மோடியும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் மீண்டும் மீண்டும் சொல்லும் வார்த்தைகள் இவை. விரிவான கட்டுரைக்கு க்ளிக் செய்க... http://bit.ly/2rJM70x ஒரு டிரில்லியன் என்றால் ஒரு லட்சம் கோடி. அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் மதிப்பு என்ன என்பதையும் 5 டிரில்லியன் டாலருக்கு எத்தனை பூஜ்யம் என்பதையும் கணக்கிட்டுக்கொள்ளுங்கள். "நடப்பு 2019-20-ம் நிதி ஆண்டில் 7 சதவிகித அளவுக்கு மட்டுமே ஜி.டி.பி வளர்ச்சி உயர வாய்ப்புள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள். என்றாலும், இந்த ஆண்டில் நமது பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதமாக உயரும் என்று சொல்லியிருக்கிறார் நிர்மலா …

    • 0 replies
    • 493 views
  18. எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தை அடைந்துள்ளது. தினந்தோறும் 12 மில்லியன் பேரல் உற்பத்தியால் உலகில் பல்வேறு மாறுதல்கள் நிகழ்கின்றன. கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்கா இந்த வளர்ச்சியை அடைந்துவிட்டது. தினமும் 9 மில்லியன் பேரல் எண்ணெய் அமெரிக்காவில் இருந்து அதன் நட்பு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. வெளிநாட்டு உற்பத்தியின் தேவையே இல்லாத நிலை அமெரிக்காவில் உருவாகியுள்ளது. 200க்கும் மேற்பட்ட சிறிய நடுத்தர எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் கடன்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து வால் ஸ்ட்ரீட் பங்குச் சந்தை எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிப்பதால் அமெரிக்காவின் வளர்ச்சியில் விரிசல்கள் தோன்ற ஆரம்பித்து விட்டன. https://www.poli…

    • 0 replies
    • 340 views
  19. உயர் கல்வி மாணவர்கள் உருவாக்கிய விமானம் ஆபிரிக்காவை கடக்கிறது! தென்னாபிரிக்காவில் உயர்கல்வி மாணவர்கள் 20 பேர் இணைந்து, விமானத்தின் உதிரி பாகங்களை கொண்டு சிறிய ரக விமானம் ஒன்றை தமது இருப்பிடத்திலேயே தயாரித்துள்ளனர். ஆயிரக்கணக்கான உதிரி பாகங்களை கொண்டு 4 பேர் அமரக்கூடிய சிறிய விமானத்தை மூன்றே வாரங்களில் அவர்கள் கட்டமைத்துள்ளனர். மாணவர்கள் தயாரித்த இந்த விமானம் தென்னாபிரிக்காவின் தலைநகர் கேப்டவுனில் இருந்து எகிப்தின் கெய்ரோ நகரம் வரையிலான தன் முதல் பயணத்தை அண்மையில் ஆரம்பித்தது. சுமார் 12,000 கிலோமீட்டர் தொலைவுடைய இந்த பயணத்தை நிறைவு செய்ய சுமார் ஆறு வாரங்கள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தை 17 வயதான மேகன் வெர்னர் என்கிற உயர்கல்வி மாணவி …

  20. இலங்கையின் பொருளாதார நிலைப்பாடும் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் தேவையும் அனுதினன் சுதந்திரநாதன் / 2019 ஓகஸ்ட் 12 திங்கட்கிழமை, மு.ப. 01:4 கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி, இலங்கையில் இடம்பெற்ற அசம்பாவித நிகழ்வுகளுக்குப் பின்னர், இலங்கையின் பொருளாதாரத்தில் மாபெரும் வீழ்ச்சி நிலையொன்று ஏற்பட்டதை, யாரும் மறுக்க முடியாது. மூன்றுக்கு மேற்பட்ட மாதங்களை நாம் கடந்துள்ள போதிலும் குறித்த நிகழ்வால் ஏற்பட்ட பொருளாதார அதிர்வுநிலையில் பெரிதாக மாற்றம் ஏற்படவில்லை. இலங்கையின் பொருளாதாரச் செயற்பாடுகள், இந்நிகழ்வுகளுக்கு முன்னதாகவே, மிகப்பெரும் நெருக்கடியிலிருந்ததுடன், அதைத் தீர்ப்பதற்கு, சுற்றுலாத்துறை, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அடிப்படையாகக் கொண்டே, நாட்டின் அபிவிருத்தி இலக்குகள்…

    • 0 replies
    • 862 views
  21. லண்டன் பங்குச் சந்தையை... வாங்கும், ஹாங்காங்..! ஹாங்காங் எக்ஸ்சேஞ்ச் அண்ட் கிளியரன்ஸ் லிமிடெட் லண்டன் பங்குச்சந்தையை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தச் செய்து உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொல்லப்போனால் சர்வதேச பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய விஷயமாகப் பேசப்பட்டு வருகிறது. குளோபல் பவர்ஹவுஸ் அதாவது சர்வதேச அளவில் மாபெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கும் பொருட்டு ஹாங்காங் எக்ஸ்சேஞ்ச், லண்டன் பங்குச்சந்தையை 39 பில்லியன் டாலருக்கு வாங்க விருப்பும் தெரிவித்துள்ளது. தற்போது ஹாங்காங் சந்தையில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. எங்குத் திரும்பினாலும் மக்கள் போராட்டம், அரசு தலையீடு, பெரும் நிறுவனங்கல் முடக்கம், …

    • 2 replies
    • 725 views
  22. அதிபர் டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு இடையிலும் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபரி வர்த்தகம் 2019ம் ஆண்டில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 2019ல் அமெரிக்காவுடனான ஐரோப்பிய ஒன்றியத்தின் உபரி வர்த்தகம் 165.5 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் 231.7 பில்லியன் யூரோக்கள் அளவுக்கு இறக்குமதியும், அதைவிட அதிகமாக 384.4 யூரோக்கள் அளவுக்கு ஏற்றுமதியும் செய்கிறது. 2018ம் ஆண்டைக் காட்டிலும் இது 11 சதவீதம் அதிகமாகும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டிரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் தங்களை மிகவும் மோசமாக நடத்தி வருவதாகவும், அந்நாட்டுடனான வர்த்தக பேச்சுவார்த்தை குறித்து இவ்வாரத்தில் மீண்டும் கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். …

  23. பலருக்கு சோறு தண்ணி இல்ல.! ஆனா இவங்க சொத்து மட்டும் பில்லியன் கணக்குல எகிறுதே.! எப்படி.? கொரோனா பற்றி அதிகம் விளக்கத் தேவை இல்லை. பல குடும்பங்கள் நாள் ஒன்றுக்கு ஒருவேளை உணவு இல்லாமல் சிரமப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.இருப்பினும், உலகில் சில பில்லியனர்களின் சொத்து மதிப்பு, இந்த கொரோனா காலத்தில் கூட சில பல பில்லியன் டாலருக்கு மேல் எகிறி இருக்கிறதாம். எப்படி இவர்களின் சொத்து மட்டும் எகிறி இருக்கிறது? என்ன ஆச்சு என்பதைத் தான் இந்த கட்டுரையில் பார்க்க இருக்கிறோம். அறிக்கை Institute for Policy Studies என்கிற அமைப்பு பில்லியனர்களின் சொத்து மதிப்பு தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதில் அமெரிக்காவின் ஜெஃப் பிசாஸ் மற்றும் எலான் மஸ்கின் சொத்த…

  24. சிறந்த முகாமைத்துவத்தைப் பின்பற்றாத கால மாற்றத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் தம்மை தீர்க்கதரிசனத்துடன் மாற்றிக் கொள்ளத் தவறும் நிறுவனங்கள் எவ்வாறு அடிச்சுவடே தெரியாமல் காணாமல் போக நேரிடும் என்பதற்கு 178 ஆண்டுகள் பழைமையான தோமஸ் குக் நிறுவனத்தின் வீழ்ச்சி ஒரு முன்னுதாரணமாகவுள்ளது. நீண்ட கால வரலாற்றைக் கொண்ட தனது நிறுவனத்தின் பெயருக்குள்ள கௌரவமும் நன்மதிப்பும் தம்மைக் காப்பாற்றும் என அந்த நிறுவனத்தின் முகாமைத்துவத்தினர் கொண்டிருந்த கணிப்பு கடந்த திங்கட்கிழமை கானல் நீரானது. முடக்கப்படுவதிலிருந்து அந்த நிறுவனத்தைக் காப்பாற்ற எந்தவொரு நிதி நிறுவனமோ அரசாங்கமோ முன்வராத நிலையில் திடீரென அந்த நிறுவனம் திவாலாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டமை அதன் பல்லாயிரக்கணக்கான வாடிக…

  25. 2014 க்கு பின்னர் 100 அமெரிக்க டொலர்களை கடந்த மசகு எண்ணெய் ரஷ்யா - உக்ரேன் பதற்றங்களுக்கு மத்தியில் 2014 ஆம் ஆண்டுக்கு பின்னர் முதன் முறையாக ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 100 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது. கடந்த வருடம் பெப்ரவரி 20 க்கு முன்னர் 50 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலையானது வியாழனன்று 101.51 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. எண்ணெய் விநியோகம் ஏற்கனவே மிகவும் இறுக்கமான நிலையில் உள்ளது. உலகின் இரண்டாவது இடத்திலுள்ள எண்ணெய் உற்பத்தியாளரான ரஷ்யாவில் இருந்து எண்ணெய் பாய்ச்சலில் ஏதேனும் இடையூறுகள் ஏற்பட்டால், அது விலையை மேலும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். https://www.vir…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.