சுற்றமும் சூழலும்
சுற்றமும் சூழலும் சூழலியல் | காலநிலை அறிவியல்
சுற்றமும் சூழலும் பகுதியில் சூழலியல், வெப்ப தட்பக் காலநிலை ஆய்வுகள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
509 topics in this forum
-
எவரெஸ்ட் மலையிலிருந்து 2 வாரங்களில் 3 ஆயிரம் கிலோ குப்பைகள் அகற்றம் May 1, 2019 எவரெஸ்ட் மலையினை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நேபாள அரசு மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் கிலோ எடையுள்ள குப்பைகளை அங்கிருந்து அகற்றியுள்ளன. நியூசிலாந்தை சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தை சேர்ந்த டென்சிங் ஆகிய இருவரும் கடந்த 1953-ம் ஆண்டில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை தொட்டதன் நினைவாக, எவரெஸ்ட் சிகரத்தை தூய்மைப்படுத்தும் திட்டத்தை நேபாள அரசு கடந்த 14ம் திகதி ஆரம்பித்திருந்தது. இந்த பணியில் நேபாள அரசு மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ள நிலையில் கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் க…
-
- 0 replies
- 506 views
-
-
தீவிரப் புயலாக மாறும் "ஃபனி.." சென்னையில் இன்றிரவு கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை. சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக நேற்று மாறியது. இதற்கு ஃபனி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஃபனி புயலின் திசை மற்றும் செயல்பாடு குறித்து சென்னை வானிலை மைய இயக்குநர் எஸ் பாலச்சந்திரன் செய்தியாளர்களுக்கு விளக்கினார்.ஏப்ரல் 30: அப்போது அவர் கூறுகையில் ஃபனி புயல் நேற்றைய தினம் புயலாக மாறியுள்ளது. இது வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி, மே 1-ஆம் தேதி வடதமிழகம்- தென் ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும்.புயல் திசை: இதனால் வடதமிழகத்தில் மிதமான மழைக்க…
-
- 1 reply
- 857 views
-
-
வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்பு வங்க கடலில் 29ஆம் திகதி புயல் உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் 25ஆம் திகதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அது இரு நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. பின்னர் 29ஆம் திகதி புயலாக மாறுகிறது. இந்த புயல் தமிழகத்தை நோக்கி வர வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக பின்நாட்களில் நகர்வை ஆய்வு செய்கையில் தெரியவரும். தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. புயல் தமிழகத்தை கடந்தால் சென்னையிலிருந்து நாகைக்கு இடைப்பட்ட பகுதியில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரங்களில் …
-
- 0 replies
- 363 views
-
-
பருவநிலை மாற்றத்தின் அடிப்படையில் ‘சிறந்த நாட்டிற்கான குறியீடு’ தரவரிசை பட்டியல் வெளியீடு பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்க உலகநாடுகள் முன்னெடுக்கும் நடவடிக்கைகளின் அடிப்படையில், ‘சிறந்த நாட்டிற்கான குறியீடு’ தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் பொருளியல் நிலை, அந்தநாடு மேற்கொள்ளும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகள், அதன் எரிசக்திப் பயன்பாட்டில் எத்தனை சதவீதம் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி உள்ளிட்ட விடயங்களின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய வெளியிடப்பட்டுள்ள தரவரிசைப் பட்டியலில் நோர்வே முதலிடத்தினை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் நோர்வே முதலிடத்தினை பிடிக்க காரணம் என்ன? நோர்வே அரசாங்கம் 2030ஆம் ஆண்டுக்குள் கர…
-
- 0 replies
- 556 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images உலகின் அரிதான வகையைச் சேர்ந்த ஆமையான மென்மையான ஓடு கொண்ட ஒரு ஆமை சீனாவில் இறந்துள்ளது. இந்த வகை ஆமை சீனாவில் இன்னும் மூன்று மட்டுமே மீதம் உள்ளது. இந்த வகை ஆமையை பெருக்குவதற்காக செயற்கையாக விந்தணுவை, அந்த 90 வயது ஆமைக்கு செலுத்தி இந்த வகை ஆமை இனத்தை பெருக்க ஐந்து முறை முயற்சி செய்தனர். ஆனால், பலனளிக்கவில்லை. படத்தின் காப்புரிமை Getty Images வேட்டையாடுதல், அதன் வாழ்விடத்தை அழித்தல் மற்றும் வரன்முறையற்று மீன் பி…
-
- 0 replies
- 707 views
-
-
இலங்கைக்கு நேராக சூரியன் உச்சம் – மக்களே அவதானம்! சூரியனின் வடக்கு திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 15ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது அதற்கமைய இன்று (வியாழக்கிழமை) வனாத்தவில்லு, ஒத்தப்புவ, சியம்பலகஸ்வெவ, கட்டமுறிச்சான, ரம்பேவ மற்றும் மீகஸ்வெவ ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.10 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக அத்திணைக்களம் கூறியுள்ளது. இதன் காரணமாக குறிப்பிட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படும்படியும் அதிகளவான நீர் அருந்துமாறும் அத்திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதேவேளை மத்திய, சப்ரகமுவ,…
-
- 0 replies
- 933 views
-
-
‘ரோமியோ’ தவளைக்கு கிடைத்தது ‘ஜூலியட்’ நீர் வாழ் பிராணிகளை வளர்க்கும் பூங்காவில் பத்து ஆண்டுகளாக தனித்து வாழ்ந்த தவளைக்கு ஜோடி கிடைத்துள்ளது. ரோமியோ எனும் அழைக்கப்படும் சேவீன்கஸ் நீர் தவளை இத்தனை ஆண்டுகளாக இந்த புவியில் தனித்து இருக்கும் தனி தவளை ரகமாக கருதப்பட்டது. இந்த சூழலில் பொலிவியன் காட்டில் அதற்கு இணையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். இதற்கு ஜூலியட் என ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர். இதன்மூலம் ரோமியோ’ தவளைக்கு ‘ஜூலியட்’ கிடைத்துள்ளது. http://athavannews.com/ரோமியோ-தவளைக்கு-கிடைத்த/
-
- 0 replies
- 439 views
-
-
22 கிலோ பிளாஸ்டிக் கழிவை விழுங்கி பரிதாபமா உயிரிழந்த கர்ப்பிணி திமிங்கலம். கர்ப்பமாக இருந்த மிகப்பெரிய திமிங்கலம் ஒன்று கடலில் நம்மால் கலக்கப்படுகிற பிளாஸ்டிக் கழிவுகளை விழுங்கியதால் பரிதாபமாக இறந்திருக்கிறது.அப்படி இறந்த திமிங்கலத்தை மீட்டெடுத்து ஆய்வு செய்த போதுதான் தெரிந்தது அந்த திமிங்கலத்தின் வயிற்றுக்குள் கிட்டதட்ட 22 கிலோ அளவுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது தெரிந்து வெளியே அகற்றப்பட்டிருக்கிறது. மத்தியத் தரைகடல் மத்திய தரைகடல் பகுதியில் மாசுபாடு அதிகரித்துவிட்டது. அதனால் ஏராளமான பிரச்சினைகள் உண்டாவதற்கான நமக்கான எச்சரிக்கையாகத் தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் கட்டுக்கடங்காமல் கடல் பகுதியில் கலந்து விட்டது. அது மத்திய தரை…
-
- 0 replies
- 293 views
-
-
‘எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமை’ போராட்டத்தை ஆரம்பித்த சுவீடன் மாணவிக்கு விருது காலநிலை மாற்றத்திற்கு எதிரான ‘எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமை’ போராட்டத்தை ஆரம்பித்த சுவீடன் மாணவிக்கு ஜேர்மன் தொலைக்காட்சி விருது வழங்கியுள்ளது. சுவீடன் மாணவியான கிரேட்டா துன்பேர்க்கின் (Greta Thunberg) பொது நலனை பாராட்டும் வகையில் இந்த ‘கோல்டன் கமரா’ விருது வழங்கப்பட்டுள்ளது. விருதினை பெற்றுக் கொண்ட பின்னர் அங்கு உரையாற்றிய அவர், தத்தமது துறைகளை பயன்படுத்தி காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்த பிரபலங்களிடம் கோரிக்கை விடுத்தார். ஆரம்பத்தில் ஜேர்மன் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி துறையை சார்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த இவ்…
-
- 0 replies
- 249 views
-
-
மோசமான பருவநிலை மாற்றம் – 62 மில்லியன் பேர் பாதிப்பு! மோசமான பருவநிலை மாற்றம் காரணமாக கடந்த ஆண்டு 62 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய நாடுகளின் வானிலை ஆய்வகத்தினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்தரப் பருவநிலை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மில்லியன் பேர் பருவநிலை மாற்றம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தொழில்நுட்ப யுகம் தொடங்கியதிலிருந்து இதுவரை பூமியின் வெப்பநிலை சுமார் ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருங்கடல்களின் வெப்பநிலை கடந்த ஆண்டு எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. வெப்பவாயுக்களால் ஏற்…
-
- 0 replies
- 447 views
-
-
அவை வெறும் மரங்களல்ல Editorial / 2019 மார்ச் 27 புதன்கிழமை, பி.ப. 07:59 Comments - 0 -ஜெரா கடந்த 23ஆம் திகதி, ‘சர்வதேச வன தினம்’ கொண்டாடப்பட்டது. சமநேரத்தில் இலங்கையில் வன அழிப்புக்கு எதிரான கோஷங்களும் கேட்டுக்கொண்டிருந்தன. இந்தநாட்டில் அபிவிருத்தியின் பெயரால், குடியேற்றங்களின் பெயரால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காடுகள் அண்மை வரையில் அழிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறு அழிக்கப்பட்டிருக்கும் பாலை மரமொன்று, நேர்காணல் ஒன்றைத் தருகிறது. வணக்கம் பாலையே, வணக்கம்! என் வாழ்வில் முதல் தடவையாக, மனித வணக்கத்தை கேட்கின்றேன். எனக்கு உங்களைப் போல, வணக்கம் சொல்ல முடியாது. என் கிளைகள் அனைத்தும் உங்களுக்கு வணக்கம் தெரிவிக்கின்றன. (மரத்தின் கிளைகள் சமநேரத்தில் ஆ…
-
- 2 replies
- 1.1k views
-
-
பறக்கும் விமானத்தில் மனித கழிவுகளை என்ன செய்வார்கள் தெரியுமா?
-
- 8 replies
- 944 views
-
-
40 கிலோகிராம் பிளாஸ்டிக்கை உட்கொண்டு உயிரிழந்த திமிங்கிலம் – கடலில் குவியும் கழிவுகள்! பயனற்ற பிளாஸ்டிக் கழிவுகளால் நாளாந்தம் சுற்றுச் சூழல் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றது. பிளாஸ்டிக்கின் பாதிப்பு பற்றி அறியாத பல உயிரினங்கள அவற்றை உட்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்கின்றன. அண்மையில் பிலிப்பைன்ஸ் கடற்பகுதியில் ஒரு சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார் 40 கிலோகிராம் பிளாஸ்டிக் பொருட்களை உட்கொண்ட வளர்ந்த திமிங்கிலம் ஒன்று உயிரிழந்து விட்டது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தின் போது பிளாஸ்டிக் பாவனையின் உச்ச கட்ட அழிவு நிலையை உணரக் கூடியதாக இருந்தது. திமிங்கிலத்தின் குடலில் இருந்து கடல்வள பாதுகாப்பு அதிகாரியொருவர் தொடர்ச்சியாக பிளாஸ்டிக் பொருட்களையு…
-
- 0 replies
- 403 views
-
-
காலநிலை மாற்றத்துக்கு எதிராக பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்! உலகலாவியரீதியில் பல்லாயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் காலநிலை மாற்றத்திற்கு எதிராக ஒரு நாள் வகுப்பறை பகிஸ்கரிப்பை முன்னெடுத்துள்ளனர். காலநிலை மாற்றத்தின் மீதான உலகளாவிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக சுமார் 150 நாடுகளில் இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து, பிரான்ஸ், இந்தியா, தென் கொரியா, அவுஸ்திரேலியா,பெல்ஜியம், ஜேர்மனி, சுவீடன், சுவிட்சர்லாந்து மற்றும் பல நாடுகளை சேர்ந்த மாணவர்கள் ஏற்கனவே இந்த ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளில் இணைந்துள்ளனர். சுவீடனை சேர்ந்த 16 வயது மாணவியான கிரேடா துன்பேர்க் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட காலநிலை மாற்றத்துக்கு எதிரான ஆர்ப்பாட…
-
- 0 replies
- 503 views
-
-
வடக்கில் அதிக வெப்பம்: மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள சுகாதாரத் திணைக்களம் வடக்கில் அதிகரித்த வெப்பமான சூழல் நிலவி வருகின்ற பாடசாலை மாணவர்கள் உட்பட பொது மக்கள் அனைவருக்கும் உடல் நிலையில் பாதிப்புக்கள் ஏற்படலாமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது. இதனால், மதிய நேரங்களில் வெயிலில் வேலை செய்வதைத் தவிரத்துக் கொள்ளுமாறும் அதிகளவிலான நீராகாரங்களை அருந்துமாறும் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆர்.கேதீஸ்வரன் அறிவுறுத்தியுள்ளார். வடக்கில் அதிகரித்துள்ள வெப்ப நிலை குறித்து யாழ்ப்பாணம், பண்ணையிலுள்ள மாகாண சுகாதார சேவைகள் திணைக்களத்தில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக…
-
- 0 replies
- 412 views
-
-
டேவிட் ஸ்கூமன் அறிவியல் ஆசிரியர் படத்தின் காப்புரிமை Sams கிரீன்லாந்தில் மழைப் பொழிவு அதிகரித்துள்ளதால்…
-
- 0 replies
- 522 views
-
-
காலநிலை மாற்றம்: அரசாங்கத்தின் நடவடிக்கையை வலியுறுத்தி மாணவர்கள் வெளிநடப்பு காலநிலை மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் முகமாக ஜேர்மனில் ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். கல்வி நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்த மாணவர்கள் துறைமுக நகரான ஹம்பேர்க்கில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்ட பேரணியில் ஈடுபட்டுள்ளனர். ‘காலநிலைக்காக பாடசாலை புறக்கணிப்பு’ அல்லது ‘எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமை’ என்ற தொனிப்பொருளில் கடந்த ஓகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்ட போராட்டத்தின் ஒரு அங்கமாகவே நேற்றைய பேரணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்…
-
- 0 replies
- 298 views
-
-
பிரான்ஸில்... வரலாறு காணாத வெப்பநிலை! பிரான்ஸில் இம்மாதத்தில் வழமைக்கு மாறாக கடும் வெப்பநிலை நிலவிவருகின்றது. பிரான்ஸில் வழமையாக இந்தக் காலப்பகுதியில் குளிரான காலநிலையே நிலவும். எனினும், மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் சுமார் 98 மணிநேரம் வெப்பநிலை காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த காலநிலை மாற்றம் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும், புவி வெப்பநிலை அதிகரித்து வருவது கவலையளிக்கின்றதென சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைவு ஏற்பட்டுள்ளதோடு, இம்மாதத்தின் நடுப்பகுதியில் இலவச வாகனத்தரிப்பிடம் உள்ளிட்ட சில பகுதிகளில் மாசடைவை தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. …
-
- 0 replies
- 544 views
-
-
பொதுவாகவே குயில்களுக்கு கூடுகட்டி வாழும் பழக்கம் கிடையாது. இவையும் அப்படியே. இனப்பெருக்கம் செய்யும் காலங்களில் சாதுர்யமான ஓர் அரசியலைக் கடைப்பிடிக்கும். உங்கள் வீடுகளைச் சுற்றி மரங்கள் இருக்கின்றனவா? இருந்தால் நீங்கள் அவர்களின் இசையை நிச்சயமாகக் கேட்டிருப்பீர்கள். அந்த இசை உங்கள் காதுகளை ஊடுருவி மூளைக்குள் நுழைந்து அதிகாலையிலேயே அரை மயக்க நிலைக்குக் கொண்டு போவதை நீங்களும் உணர்ந்திருப்பீர்கள். அந்தப் பரவசத்தை இதுவரை உணரத் தவறிவிட்டீர்களா? தொடர்ந்து படித்து அந்த இன்னிசைக்குச் சொந்தக்காரர்களான ஆசிய குயில் குறித்த அறிமுகத்தோடு இனி ரசிக்கத் தொடங்குங்கள். பல பறவைகள் பார்ப்பதற்கு ஒன்றுபோல தோற்றம் கொண்டவையாக இருக்கும். அதில் ஒன்றுதான் ஆசிய குயில். புது…
-
- 0 replies
- 2.5k views
-
-
படத்தின் காப்புரிமை CLAY BOLT Image caption பெண் வாலேஸ் ராட்சத தேனீ ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு்ளளது. அறிவியல் உலகில் அழிந்துவிட்டதாக பல தசாப்தங்களாக கருதப்பட்ட உலகிலேயே மிக பெரிய ராட்சத தேனீ மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கையின் கட்டைவிரலுக்கு ஒத்த பெரியதொரு ரட்சத தேனீ, இந்தோனீசிய தீவு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தீவில் இதுவரை மிக குறைவாகவே ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. சில நாட்கள் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர், உயிரோடு ஒரு பெண் ராட்சத தேனீயை கண்டுபிடித்த வனவிலங்கு நிபுணர்கள், அதனை புகைப்படம் எடுத்து…
-
- 0 replies
- 457 views
-
-
முதலில் பூச்சி இனம், அடுத்து மனித குலமா ? - எச்சரிக்கும் ஓர் ஆய்வு..! மனித செயல்பாடுகளால் ஒரு நூற்றாண்டு காலக்கட்டத்திற்குள் உலகில் உள்ள பூச்சி இனங்கள் முழுவதுமாக அழியலாம் என்கிறது ஓர் ஆய்வு முடிவு. பயாலஜிகல் கன்சர்வேஷன் எனும் சஞ்சிகையில் வெளியான ஆய்வு, இந்த அழிவு தடுத்து நிறுத்தப்படவில்லை என்றால், இது மோசமான விளைவுக்கு வித்திடும். மனிதர்கள் வாழ்வதே கேள்விகுறியாகும் என்கிறது. தீவிர விவசாயம்தான் இதற்கு முதன்மை காரணம் என்று கூறும் ஆய்வு, பருவநிலை மாற்றமும், நகரமயமாக்கலும் பிற காரணிகள் என்கிறது. ஒரு ஆண்டுக்கு 2.5 சதவீதத்தில் பூச்சிகள் மறைவதாகவும், பிரிட்டன்தான் மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறுகிறார்கள் அவர்கள் https://m-tamil.webdunia.…
-
- 0 replies
- 562 views
-
-
படத்தின் காப்புரிமை M Niyas Ahmed மனித குலத்தை விவசாயம் அழிவு பாதைக்கு அழைத்து செல்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் என்கிறது ஓர் ஆய்வு. ஆனால், நேரடியாக அல்ல. இயற்கையின் கண்ணியில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதுதானே? அந்த தொடர்புதான் மனித இருப்பை கேள்விக்குள்ளாக்கப் போகிறது. அழியும் பூச்சி இனம் உலகெங்கும் பூச்சி இனம் மெல்ல அழிந்து கொண்டிருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு. குறிப்பாக சொல்லவேண்டுமானால் உலகில் உள்ள பூச்சி இனங்களில் …
-
- 0 replies
- 841 views
-
-
இதைவிட எளிமையாக ஆபத்தை உணர்த்த முடியாது! -கதவைத் தட்டும் பேரழிவு: தீர்வு எங்கே உள்ளது? நரேஷ் பிரச்சினைகள் எவ்வளவு வலுவானவையாக இருந்தாலும், தீர்வுகள் என்றும் எளிமையானவைதான். இயற்கையும் எளிமையானதுதான். அந்த எளிமையைப் புரிந்துகொள்ள முடியாமல் முட்டி மோதும் இடத்தில்தான் முரண் தொடங்குகிறது. பசுமைப் புரட்சியும், நஞ்சான உணவும் நிலமும் நீரும் மிகப் பெரிய பிரச்சினைகள்தான். ஆனால் அவற்றின் தீர்வு மிக எளிமையானது. அந்த எளிமையைப் புரியவைப்பதுதான் கடினமான வேலை. அதைச் சிறப்பாகச் செய்தவர்களுள் ஒருவர் நம்மாழ்வார். உரங்களை வெறும் உப்புதான் என்றார் அவர். ‘கருவாட்டுல உப்பு போடுறது நுண்ணுயிரிகள் உற்பத்தியாகாம இருக்கத்தான். அதையே நிலத்துல போட்டா நிலத்துலையும் நுண்ணுயிரிகள…
-
- 18 replies
- 3.1k views
-
-
கதவைத் தட்டும் பேரழிவு: பாங்காக் முதல் பலி? நவீன வாழ்வின் அன்றாட நிகழ்வுகளின் விளைவால் இன்று பாங்காக் பேரபாயத்தில் சிக்கியுள்ளது நரேஷ் போபால் விஷவாயுக் கசிவினை நுகர்ந்து ரத்தம் சிந்த இறந்த மனிதர்களின் கதைகளைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள் அல்லவா..? இப்படிக் கற்பனை செய்து பாருங்கள், போபாலில் நடந்ததைப் போல ஒரே இரவில் விஷவாயு சிலிண்டர்கள் வெடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக விஷக்காற்று கசிந்தால்? அதை சுவாசிக்கும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக சித்திரவதைப்பட்டு இறப்பார்கள் அல்லவா? அதுதான் இன்றைய பாங்காக். பாங்காக்கில் உள்ள மக்களின் கண்களில் ரத்தம் கசிகிறது. நாசி தூசிகளால் நிறைந்திருக்கிறது. சிலரின் நுரையீரல் கனம் தாங்காமல் கொதிக்கிறது. மக்கள் ரத்த வாந்தி எடுக்கின்றினர…
-
- 0 replies
- 797 views
-
-
உலகம் ஊழிக்குத் தயாராகிவிட்டது. நீங்கள்? நரேஷ் இதுவரை இந்த நவீன உலகம் புகைப்படங்களில்கூடப் பார்த்திராத கொடூர காட்சி அது. ஊழியின் முதல் எச்சரிக்கை மணி அது. விலங்குகளுக்கு என்று ஒரு குணம் உண்டு. விலங்குகள் மட்டுமல்லாமல், பறவைகளுக்கும் ஆதிகால மனிதர்களுக்கும் அந்த குணம் உண்டு. ’நினைவில் இருக்கும் நீர்நிலைகளை நாடிச் செல்லுதல்’ என்பதே அந்த குணம். விலங்குகளின் ஆதி அறிவில் அந்தப் பாதை புதைந்திருக்கும். பறவைகள் இன்றுவரை சரியான நேரத்தில் சரியான நீர்நிலைகளை நோக்கிப் பயணம் செய்துவருவது அந்த ஆதி ஆறிவின் மூலம்தான். அவை வந்து சேரும் இடங்களில் நிச்சயம் நீர் இருக்கும். இயற்கை அவ்வளவு கருணை கொண்டது. வற்றாத ஊற்றுகளை மட்டுமே அறிவில் உணர்த்திச் செல்லும் அன்பு க…
-
- 0 replies
- 578 views
-