சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
986 topics in this forum
-
மூளைச்சாவும் உடல் அவயவங்களின் தானமும் நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் December 16, 2025 1 Minute கடந்த வாரம் யாழ். போதனா வைத்தியசாலையில் மூளைச்சாவு அடைந்த ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட சீறுநீரகங்கள் வேறு தேவையான நபர்களுக்கு பொறுத்தப்படவுள்ளன. இந்நிலையில் மனிதனில் இறப்பு என்றால் என்ன, அதன் வகைகள் என்ன, மூளைச்சாவு என்றால் என்ன, மூளைச்சாவு – சட்ட ரீதியான வலு என்ன மற்றும் மூளைச்சாவின் பொழுது உறவினர்கள் உடல் அங்க தானங்களுக்கு பின்னிற்க மத ரீதியான காரணங்கள் என்ன போன்ற பல்வேறு விடயங்களை இப்பதிவு அலசுகின்றது. மருத்துவத் துறையில் இறப்பு என்றால் எமது இருதயம் நுரையீரல் ஆகியவற்றின் செயற்பாடுகள் அதாவது சுவாசம் மற்றும் இதயத்துடிப்பு ஆகியன முற்றாக நிறுத்தப்படுவதினை தொடர்ந்து மூ…
-
- 0 replies
- 97 views
- 1 follower
-
-
கன்னியா வெந்நீரூற்றும் அழிந்து போகும் நாமும்..! கன்னியா வெந்நீரூறுப் பகுதியில் புதிதாக பெரிய புத்தர் சிலை ஒன்று திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது. எனது தாய் தந்தை அவர்களின் தாய் தந்தை அதற்கு முன் இருந்தவர்கள் என இந்த இடம் முழுமையாக சைவர்களின் வழிப்பாட்டுத் தலங்களால் நிறைந்து இருந்தது. நாம் சிறுவயதில் சென்று நீராடி அருகில் உள்ள சிவன் கோவில் பூசைகளில் கலந்துகொள்வோம். இறந்தவர்களுக்கான பிதிர்கடன் செய்யும் இடமாகவும் இருந்தது. 180 வருடங்கள் பழமையான பிள்ளையார் கோவிலும் அங்குள்ளது. அந்த கோவில் இடம் முழுமையாக தனியாருக்கு சொந்தமானது. குறித்த உரிமையாளர் தனது ஏக்கர் கணக்கான காணியை பிள்ளையார் கோவில் கட்ட வழங்கியிருந்தார். யுத்தம் முடிந்த பின் படிப்படியாக இடங்களை கொள்ளையடிகும் நோக்குட…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
மின்னல் எச்சரிக்கை!! நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் December 10, 2025 1 Minute டிட்வா புயல் மற்றும் மண்சரிவினால் பலர் இறந்த நிலையில் இலங்கையில் மீண்டும் வடகீழ் பருவ மழை தொடங்கியுள்ளது இந்நிலையில் நாளாந்தம் இலங்கையின் பல மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடப்படுகின்றது. இந்நிலையில் மின்னலின் தாக்கத்தினால் வருடாந்தம் 30 தொடக்கம் 50 பேர்கள் இலங்கையில் பரிதாபகரமான முறையில் மரணத்தினை தழுவுகின்றனர். மேலும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் தனி நபர்களின் இறப்புக்கள் பெரிதான சமூக கவனத்தினை ஈர்ப்பதில்லை அத்துடன் பல சந்தர்ப்பங்களில் இத்தரவுகள் தேசிய ரீதியான தரவுகளுக்கு செய்வதில்லை. இதன் காரணமாகவே வருடாந்தம் மின்னலின் தாக்கத்தினால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைவாக காட்டபட்டுள்ளது…
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
'திட்வா' புயலால் மழை, வெள்ளம், நிலச்சரிவு என இலங்கை முழுவதும் பெரும் இயற்கைப் பேரிடரை எதிர்கொண்டு வருவதால் நாடு முழுவதும் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 153 பேர் உயிரிழந்த நிலையில் 191 பேரை காணவில்லை என பேரிடர் மேலாண்மை மையம் கூறுகிறது. சுமார் ஒரு லட்சத்து 79 ஆயிரம் குடும்பங்களும், 6.46 லட்சம் தனி நபர்களும் இந்த இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள், தொழிற்சாலைகள், குடியிருப்புப் பகுதிகள் என எங்கும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்படுகின்றனர். மேலும் நிலச்சரிவில் தமிழர்களும் உயிரிழந்துள்ளனர். இலங்கையின் தற்போதைய நிலை என்ன? 'திட்வா' புயலால் அங்குள்ள தமிழர்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது? இந்த காணொளியில் பார்க்கலாம்.…
-
- 5 replies
- 611 views
- 2 followers
-
-
நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் November 16, 2025 1 Minute அண்மைய காலங்களில் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் “மாவா” பாக்கு பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மாவா பாக்கு என்றால் என்ன?, அது எவ்வாறு உடலில் போதையினை ஏற்படுத்துகின்றது?, மாவா பாக்கு உடலில் ஏற்படுத்தும் தீங்கான விளைவுகள் என்ன? மற்றும் அது எவ்வாறு மனிதனை அடிமையாக்குகின்றது என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது. 1. மாவா பாக்கில் என்ன இருக்கின்றது? மாவா பாக்கின் முக்கிய உள்ளடக்கம் மூன்று பொருட்கள்தான்: பாக்கு (Areca Nut): கொட்டைப் பாக்கை சிறு துண்டுகளாக நறுக்கி அல்லது சீவி பயன்படுத்துகின்றனர். புகையிலை (Tobacco): உலர்ந்த புகையிலை இலைகள். சுண்ணாம்பு (Slaked Li…
-
-
- 2 replies
- 381 views
- 2 followers
-
-
கோடி ரூபாயில் யாழில் உருவாகப்பட்ட சொகுசு கப்பல்! வெள்ளோட்டம் குறிகட்டுவானில் | Luxury tourist Ship contact ship Sail lanka 0773874540 - Piradeep 0774023015 - U.Jenushan
-
-
- 12 replies
- 931 views
- 1 follower
-
-
காணொளி: 👉 https://www.facebook.com/watch/?v=720409650518617 👈 வெளிநாட்டு சுற்றுலா பயணியிடம் அசிங்கம் காட்டிய இளைஞன் – வீடியோ வைரல் இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த ஒரு வெளிநாட்டு பெண் பயணியிடம், ஒரு இளைஞன் தனது அந்தரங்க உறுப்பை காட்டும் அசிங்கமான செயல் சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகியுள்ளது. இது ஒரு கடுமையான பாலியல் துன்புறுத்தல் குற்றம் ஆகும். நாட்டின் பெயருக்கும், சுற்றுலா வளர்ச்சிக்கும் பெரும் சேதம் விளைவிக்கும் செயல் இது. Nuraichcholai boys
-
- 4 replies
- 546 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் பல்லப் கோஷ் அறிவியல் செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் "பொய் சொல்லும் நபரை யாராலும் கண்டுபிடிக்க முடியாது. அப்படியே கண்டுபிடித்தாலும், அது பகுத்தறிவதன் மூலமாகவே இருக்கும். நாம் அதிகமாக மதிக்கும் 'உள்ளுணர்வின்' அடிப்படையில் அல்ல" என்கிறார் 170க்கு மேல் ஐ.க்யூ (IQ) கொண்டவரான சர் ஸ்டீபன் ஃப்ரை. பிபிசியின் 'தி செலிபிரிட்டி டிரெய்ட்டர்ஸ்' (The Celebrity Traitors) என்ற கேம் ஷோவில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு சற்று முன் அவர் இப்படிக் கூறினார். அந்த நிகழ்ச்சியைப் பார்த்தபோது, அவரது கோட்பாடு நிச்சயம் உண்மையாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஏனெனில், அந்த நிகழ்ச்சியில் இருக்கும் 16 "விசுவாசமான" போட்டியாள…
-
- 0 replies
- 211 views
- 1 follower
-
-
-
-
- 2 replies
- 271 views
- 1 follower
-
-
அண்மைக்கலாமாக வடமாகாணத்தில் காற்றின் தரம் குறைந்து வருகின்றது அதாவது யாழ்ப்பாணத்தில் காற்று அதிகளவில் மாசுபட்டு வருகின்றது. தற்பொழுது அது ஆபத்தான நிலைக்கு அண்மித்து உள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது காற்று சுவாசிக்க உகந்தது அல்ல என்று கூறப்படுகின்ற நிலையில் இவ்வாறு மாசுப்படல் பல்வேறு காரணங்களால் நடைபெறுகின்றது அது பற்றி இப்பதிவு விளக்குகின்றது. யாழ் மாவட்டத்தில் இவ்வாறு காற்று மாசு படுவதற்கான காரணங்கள் என்ன? முக்கியமாக அயல்நாடான இந்தியாவில் இருந்து குறிப்பாக டில்லி போன்ற நகரங்களில் இருந்து மாசுபட்ட காற்று யாழ் மாவட்டத்தினை நோக்கி நகர்வதாகும். குறிப்பாக வடகீழ் பருவ பெயர்ச்சி காற்று நிலவும் நவம்பர் முதல் பெப்ரவரி வரையான காலப்பகுதியில் இவ்வாறான மாசடைந்த காற்று யாழ் மாவட்டத்தி…
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நீங்கள் வாசிக்கும்போது உங்கள் தலைக்குள் என்னவெல்லாம் நடக்கிறது என்று எப்போதாவது யோசித்ததுண்டா? கட்டுரை தகவல் அனலியா லோரென்டே பிபிசி நியூஸ் முண்டோ 8 நவம்பர் 2025 " நம் அனுபவத்தின் எல்லைகளை விரிவாக்குவதற்கு வாசிப்பது ஒரு சிறந்த வழியாகும்," மூளையின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்துள்ள கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்தின் உளவியல் முனைவர் ரேமண்ட் மார் இதை விளக்கியுள்ளார். மூளையின் செயல்பாட்டைக் குறித்த ஆய்வுகளின்படி, ஒரு நாவலில் உள்ள கதாபாத்திரத்தின் கதையை வாசிப்பது, அதை நிஜத்தில் வாழ்வதற்குச் சமமானதாக இருக்கிறது. ஆனால், மனிதர்களின் மிக சிக்கலான உறுப்பான மூளையின் புதிரான செயல்பாட்டிற்கும் வாசிப்பிற்கும் இடையிலான உறவு குறித்த விஞ்ஞானிகளின் ப…
-
- 0 replies
- 171 views
- 1 follower
-
-
பழைய சம்பவங்கள் சிலவற்றை நினைவூட்டிய உரை.
-
- 0 replies
- 209 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 200 views
-
-
Thapes Vlogger is at Ahangama Beach, Sri Lanka. deposSntro68a15fm785396h318iitflm7g0uf89i11694g2clmmf1acg4cf · 🇬🇧" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t96/1/16/1f1ec_1f1e7.png" style="border: 0px; border-start-start-radius: 0px; border-end-end-radius: 0px; border-start-end-radius: 0px; border-end-start-radius: 0px; object-fit: fill;"> பிரித்தானியா வாழ் தமிழனுக்கு தெற்கில் நிகழ்ந்து கொண்டிருக்கும் இனத்துவேசம்.. கீழே படத்தில் இருப்பவர் எனது நண்பர். இலங்கையில் பிறந்து சிறு வயதிலையே பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்து அங்கு உயர் படிப்பை முடித்து தொழில்நுட்பத்துறையில் நல்லதொரு வேலையில் இருந்தவர். ஆனாலும் இலங்கை மீது அ…
-
- 0 replies
- 304 views
-
-
பட மூலாதாரம், Getty Images 31 அக்டோபர் 2025 பருவமழை மேகங்கள் கூடி மழை பெய்யத் தொடங்கிவிட்டால் போதும், பல வீடுகளில் ஈசல்கள் கூட்டம் கூட்டமாக மொய்த்துவிடும். அப்படி மழையின்போது வீட்டு உள்ளேயும் வீட்டைச் சுற்றியும் வரும் ஈசல்களைப் பிடித்து இறக்கைகளை பிய்த்துவிட்டு மூங்கில் கூடை ஒன்றில் சேகரிப்பதை ஊர்ப்புறங்களில் பார்த்திருப்போம். ஒரு கூடை நிறைய ஈசல் சேர்ந்த பிறகு அவற்றை வாணலியில் நன்கு வறுத்தெடுப்பார்கள். அப்போதே, ஈசல்களின் தலை தனியே உடல் தனியே பிரிந்துவிடும். பின்னர், தலை மற்றும் மீதமுள்ள இறக்கையை முறம் கொண்டு புடைத்து பிரித்துவிட்டு, வறுக்கப்பட்ட ஈசலை பொறியில் கலந்து சாப்பிடுவது, பொடியாக்கி உணவுடன் சேர்த்துக் கொள்வது எனப் பல வடிவங்களில் அது உணவாகிறது. ஆனால், இந்த ஈசல்கள் …
-
- 0 replies
- 201 views
- 1 follower
-
-
இது NPP க்கு சொம்பு தூக்கும் பதிவல்ல! அண்மையில் இளங்குமரன் பற்றி பதிவு போட்டதும் திடீரென NPP யிட்ட காசு வாங்கிட்டார் என்று கொஞ்சபேர் பேச தொடங்கிட்டினம். நான் முகநூலில் எழுதுவதை குறைக்க நினைப்பதற்கான காரணம் இதுதான். இங்கே இருக்கும் அநேகமான வாசிப்பாளர்களுக்கு யதார்த்தத்தை புரிந்துகொள்ளும் ஆர்வமில்லை . தங்களுக்கு தேவையான பொய்களையும், புரட்டுகளையும் மட்டுமே எதிர்பார்ப்பவர்களாக பெரும்பாலானோர் மாறிவிட்ட சமூகமாகிவிட்டோம். இளங்குமரன் பற்றி நான் அவதானிப்பை வெளியிட்டேன். கட்சி அவரை பயிற்சி கொடுத்து வளர்த்து எடுக்கிறது என்று அவரது நடவடிக்கைகளை பார்த்து கூறி இருந்தேன். அதற்குப்பிறகு நடந்த ஒரு நேர்காணலில் இளங்குமரனே அதை ஒத்துக்கொண்டு உள்ளார். பாராளுமன்ற நாட்களில் இரவு 11 மணிவரை கூட வ…
-
-
- 5 replies
- 399 views
- 2 followers
-
-
In this video I explain, Kinds of Deeds, Legality of Deed of Declaration, Procedure of Deed of Declaration, Problems in the North and East Sri Lanka, Land Scams through Deed of Declaration, Duty of Notary Public, Procedure of Deed Attestation, Registration of Land, Prevention of Fraud, Land Sale Scams, And Etc. இந்த வீடியோவில், உறுதிகளின் வகைகள் எவை? வெளிப்படுத்தல் உறுதி என்றால் என்ன ? காணிப் பதிவு, வெளிப்படுத்தல் உறுதிகள்-காணி மோசடிகள், காணி மோசடிகளை தவிர்ப்பது எவ்வாறு ? என்ற தகவல்களுடன் விளக்கம் வழங்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 234 views
- 1 follower
-
-
இது, தெரிஞ்சா... MRI ஸ்கேன் அறைக்குள் நுழையவே மாட்டீ ங்க. கடந்த காலங்களில் மருத்துவத்துறையில் இன்று இருப்பதுப்போல நவீன கருவிகள் அன்று இல்லை. எனவே நோயாளியின் நோய்க்கான காரணத்தை கண்டறிவது ஒரு சவாலான காரியமாக இருந்து வந்தது. பின்னர் எக்ஸ் ரே, ஈசிஜி, எம்ஆர்ஐ போன்ற தொழில்நுட்ப கருவிகள் வந்த பின்னர் மருத்துவர்களுக்கு நோயாளிகளின் பிரச்சனையை கண்டறிவது மிகவும் எளிதாவிட்டது. அதிலும் எம்ஆர்ஐயின் வருகைக்கு பின்னர் நோய்களை துல்லியமாக கணித்து அதற்கு தகுந்த மருத்துவ நடைமுறைகளை எடுக்க மருத்துவர்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. எம்ஆர்ஐ ஸ்கேன் அறைக்குள் நுழையும் போது நம்முடைய அணிகலங்களை கழற்றுமாறு அங்குள்ளவர்கள் அறிவுறுத்துவார்கள். இது பலருக்கும் ஒருவித எரிச்சலை ஏற்படுத்தும். ஆனால் இதற்க…
-
-
- 4 replies
- 501 views
- 1 follower
-
-
அதென்ன குதிரை திறன்? ஏன் கழுதை திறன், புலி திறன், சிங்க திறன், இருக்கக் கூடாதா? எனது பள்ளி நாட்களில் நான் இப்படித்தான் சிந்தித்தேன்! மிக அருமையான வினா! குதிரையை விட வேகமாக ஓடி, அடித்துத் தின்னும் வலிமை படைத்த, புலி, சிங்கம் ஆகிய வலிமையான விலங்குகள் பெயரில் திறன்-அலகு தீர்மானிப்பதுதானே இயல்பாகவும், பொருத்தமாகவும் இருக்கும்! இன்னும் சொல்லப்போனால், சிறுத்தைகள், ஒரு மணிக்கு, 74 மைல் வேகத்தில் ஓடும்! ஏன் இவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டு, குதிரைத்திறன் - HorsePower என்று சொன்னார்களோ? ஒருவேளை, திறன்-அலகு தீர்மானித்தவர்கள், சைவர்களாக இருப்பார்களோ? அப்போதும் உதைக்கிறதே! குதிரையைவிட வேகமாக ஓடும் மான்கள் இருக்க, குதிரைக்கு ஏன் ஓட்டு விழ வேண்டும்? ஒரு மணிக்கு, 74 மைல் வேகத்தில் ஓடும் சி…
-
-
- 4 replies
- 361 views
- 2 followers
-
-
தாமதமாக வந்த விஜய் தான் காரணம்.. https://www.facebook.com/share/v/14PdFXjdaUp/
-
-
- 34 replies
- 1.7k views
- 1 follower
-
-
பதுளையில் வசித்து வரும் ஜீவநேசன் காஞ்சனா தம்பதிகளின் மகன் 2 வயதும் 11 மாதங்களுமேயான மிர்திக் தேவ். இவர் ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளின் அமைவிடத்தை 10 நிமிடங்களில் அடையாளம் காட்டி சோழன் உலக சாதனைப் புத்தகத்தில் தனது பெயரைப் பதிவு செய்தார். இதற்கான நிகழ்வு நேற்று (16) ஹாலிஎல ஹெவன்ஸ் ஹொட்டலில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் இலங்கைக் கிளையின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவானி ராஜா முன்னிலையில் நடைபெற்றது. குழந்தையின் உலக சாதனை நிகழ்வை கூர்மையாக கண்காணித்த நடுவர், குழந்தையின் முயற்சியை உலக சாதனையாக உறுதி செய்தார். சோழன் உலக சாதனை படைத்த மிர்திக் தேவிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், அடையாள அட்டை, நினைவுக் கேடயம் மற்றும் பைல் போன்றவை வழங…
-
- 0 replies
- 157 views
- 1 follower
-
-
Was Ishara Chevwanthi trained in the Intelligence Unit? Important information revealed by the for... பதற்றம் எதுவும் இல்லாது காணப்பட்ட செவ்வந்தி!
-
- 1 reply
- 301 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Dr Li Chuangye படக்குறிப்பு, மருத்துவர் லீ சுவாங்யே கட்டுரை தகவல் பென்னி லு பிபிசி சைனீஸ் விபெக் வெனிமா பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் 37 வயதான மருத்துவர் லீ சுவாங்யேவின் துயரங்களை வென்றெடுத்த கதை மற்றும் மலை ஏறுதல் மீதான அவரது காதல் ஆகியவை சீனாவில் வைரலானது. போலியோவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சிறுவயதில் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். 16 வயதில்தான் இவர் வாசிக்கக் கற்றுக்கொண்டார். 1988 ஆம் ஆண்டு ஹெனான் மாகாணத்தில் வறுமையில் வாடிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த லீ சுவாங்யேவுக்கு ஏழு மாத குழந்தையாக இருந்தபோது போலியோ தாக்கியது. இது அவரை குதி கால்களில் குந்தி அமர்ந்தால் அன்றி, நடக்க முடியாத நிலைக்கு எடுத்துச் சென்றது. சிறுவயதில், மற்ற …
-
-
- 3 replies
- 385 views
- 1 follower
-
-
தமிழகத்தோடு நெருங்கிய தொடர்புடைய ஈழத்தைச் சேர்ந்த ஒரு சமூக அரசியல் செயற்பாட்டாளர் சொன்னார்,நடிகர் விஜய்யை நேர்காணல் செய்வதற்காக அவருடைய அலுவலகத்தோடு கதைத்து ஒரு நேரத்தை எடுத்திருக்கிறார்.குறிப்பிட்ட நேரத்துக்கு அங்கே போனபோது அங்கே விஜயினுடைய தகப்பன் இருந்திருக்கிறார். விஜய்க்கு பதிலாக அவர்தான் பதில் கூறுவார் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் நேர்காணல் விஜயின் பெயரில்தான் வரும். விஜயின் படங்கள்தான் காணப்படும். அந்த அலுவலகத்தில் நாலைந்து பேர் அமர்ந்திருந்து விஜய்யின் இலக்கத்துக்கு வரும் தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருப்பதையும் மேற்படி செயற்பாட்டாளர் கவனித்திருக்கிறார்.அவர்கள் அனைவரும் விஜய்யின் குரலில் விஜய்யின் பாணியில் விஜய்யைப் போலவே கதைக்கிறார்களாம்.அழைப்பை…
-
- 1 reply
- 284 views
-
-
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையைச் சேர்ந்த 20 வயதான முகுந்தன் மொட்டை மாடியில் செல்போன் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது மின்னல் தாக்கியத்தில் உயிரிழந்துள்ளார். அவரின் செல்போனும் எரிந்த நிலையில் மீட்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. முகப்பேரைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு கல்லூரி மாணவரான முகுந்தன் திங்கட்கிழமை திருமங்கலத்தில் உள்ள அவரது நண்பர் தனுஷின் வீட்டிற்குச் சென்றுள்ளார். நண்பர்கள் அவரது வீட்டின் மொட்டை மாடியில் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது முகுந்தன் செல்போனில் பேசிக் கொண்டிருக்கையில் மின்னல் தாக்கியதால் உயிரிழந்தார். தமிழ்நாட்டில் பருவமழை நெருங்கி வரும் சூழலில் மின்னல் தாக்கி உயிரிழப்…
-
- 1 reply
- 191 views
- 1 follower
-