சமூகவலை உலகம்
முகநூல் | இன்ஸ்ராகிராம் | டுவிட்டர் | வாட்ஸப்
சமூகவலை உலகம் பகுதியில் முகநூல், இன்ஸ்ராகிராம், டுவிட்டர், வாட்ஸப் போன்ற சமூகவலைத் தளங்களில் இருந்து பதிவுகள் இணைக்கப்படலாம். எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
இப்பகுதியில் சமூகவலைத் தளங்களில் இருந்து தரமான பயனுள்ள பதிவுகள், பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
ரசிக்கத்தக்க படங்கள், நாகரீகமான துணுக்குகள், மகிழ்வூட்டும் நகைச்சுவை விடயங்கள், கருத்துப்படங்கள் போன்றவற்றைப் இணைப்பதும் பகிர்வதும் அனுமதிக்கப்படுகின்றது.
இவ்வாறு இணைக்கப்படுபவை கருத்துக்கள விதிமுறைகள் பிரிவு 7 இலுள்ள விதிமுறைகளைக் கவனத்தில் கொண்டு பதிவுகள் இணைக்கப்படல் வேண்டும்.
முக்கியமாக சமூகவலைத் தளங்களை மட்டும் ஆதாரமாகக் கொண்டு செய்திகள், அரசியல் அலசல்கள் இணைப்பது தவிர்க்கப்படல் வேண்டும். எனினும் நம்பகத்தன்மை வாய்ந்தவர்களில் முகநூல் குழுமம், பக்கம், சுவர் பகுதிகளில் இருந்து இணைக்கப்படும் காத்திரமான பதிவுகள் அனுமதிக்கப்படும்.
995 topics in this forum
-
1969இல் துலாபாரம் என்று ஒரு திரைப்படம் வந்திருந்தது. யாருமே துணையில்லாமல் தனித்து நின்று போராடும் ஒரு பெண்ணின் கதை. ஒன்றுமே இனிச் செய்ய முடியாது என்ற நிலை வந்த போது உணவில் விசம் கலந்து தானும் உண்டு பிள்ளைகளுக்கும் அவள் கொடுப்பாள். பிள்ளைகள் இறந்து போக அவள் மட்டும் பிழைத்துக் கொள்வாள். அவள் மேல் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு நீதி மன்றில் விசாரணை நடக்கும். இதுவே அந்தப் படத்தின் கதை. சமீபத்தில் யேர்மனியில் நடந்த வழக்கு ஒன்று என்னை 1969க்கு திரும்பி அழைத்துப் போனது. துலாபாரம் படத்தில் இடம் பெற்ற “காற்றினிலே பெருங் காற்றினிலே ஏற்றி வைத்த தீபத்திலும் ஒளி இருக்கும்…” என்ற ஜேசுதாசின் பாடல் இப்பொழுது எனக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உணவில் மரணம் விளைவிக்கும் வில்லைகள…
-
- 1 reply
- 465 views
- 1 follower
-
-
அலாரம். “ டாண் “ எண்டு நல்லூரில அடிச்ச மணி நாலு கிலோ மீற்றருக்கு இங்கால படுத்திருந்த சாந்தக்காவை ஏழுப்பிச்சுது . “டேய் சின்னவா எழும்பு நாளைக்கு சோதினை எண்டு சொன்னியெல்லோ , கொண்ணன் பிந்தித்தான் படுத்தவன் நீ எழும்பு” எண்டு திருப்பித் திருப்பி சொல்லவும் அந்தச் சண்டையில பெரியவன் எழும்பினான். அரைநித்திரையில கட்டில்ல இருந்து எழும்பின சின்னவன் பெட்சீட்டால போத்த படி வந்து மேசையில திருப்பியும் படுத்தான் . பத்து நிமிசத்துக்கு ஒருக்கா “சின்னவா பெரியவா” எண்டு மாறி மாறிக் கூப்பிட்டு கடைசீல என்ன சத்தமில்லை எண்டு வந்து பாத்திட்டு “பார் ஐஞ்சு மணி பெருமாள் கோயில் மணி கேக்குது” எண்டு மனிசி நித்திரை கொண்டவனுக்கு மேல செம்பில இருந்து தண்ணியைத் தெளிச்சு எழுப்பி படிக்க விட்டுது. வீட்…
-
- 2 replies
- 781 views
- 1 follower
-
-
கிளிநொச்சி நீச்சல் தடாகத்தினுள் இரு இளம் ஜோடிகள் களியாட்டம் கிளிநொச்சி நீர் விளையாட்டுச் சங்கம் இதனை அனுமதிக்கின்றதா? கிளிநொச்சி நீர் விளையாட்டுச் சங்கத்தின் நீச்சல் தடாகத்தில் என்ன நடக்கின்றது? கடந்த காலங்களில் பெரும் தொகையான மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சியை வழங்கிய கிளிநொச்சி நீச்சல் தடாகம் தற்போது காம களியாட்டங்கள் நடைபெறும் இடமாக மாறி உள்ளது கிளிநொச்சி மாவட்டத்திற்கான இந்த நீச்சல் தடாகம் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்த முடியாமல் இரும்புத்திரை கொண்டு பூட்டப்பட்டுள்ளது. சிறார்களுக்கான நீச்சல் பயிற்சிகள் யாவும் நிறுத்தப்பட்டு திறமையுடன் செயல்பட்ட பயிற்றுனர் துரத்தப்பட்டுள்ளார். தற்போது பயிற்றுநர்கள் எவரும் இ…
-
- 5 replies
- 722 views
-
-
கண்டம் விட்டு கண்டம் பாஞ்சு O /L எண்ட கண்டம் முடிஞ்சிது எண்ட முதல் அடுத்த கண்டம் தொடங்கீட்டுது. என்ன படிக்கிறதெண்டு தெரியாம A/L க்குப் போய் , ஆர் நல்ல மாஸ்ரர் எண்டு தெரியாம எல்லா கொட்டிலுக்கும் போய் , கடைசீல பிரண்டுக்காக , பாக்கிற சரக்குக்காக எண்டு ரியூசன் மாறி மாறிப் போய் ஒருமாதிரி இந்தக் கண்டத்தையும் முடிச்சிட்டு இருக்க தன்மானம் இருக்கிறவன் தரணி காக்கப் போக அம்மாக்குப் பயந்த நான் இனி என்ன செய்யிறது எண்ட கேள்வி திருப்பியும் வந்திச்சுது. A/L எடுத்தாப் பிறகு வெளிநாட்டுக்கு இல்லாட்டி கொழும்புக்கு ஏதாவது course படிக்கப் பாஸ் எடுத்தோ எடுக்காமலோ தப்பிப் போக வசதி இல்லாத ஆக்களுக்கு கம்பஸ் போறது தான் ஒரே வழி, இல்லாட்டி கடன் வாங்கி கடலால எண்டாலும் கனடா போகோணும். பத்தாம் வகுப…
-
- 2 replies
- 827 views
- 1 follower
-
-
புலமும் தாயகமும்………… போர் நடந்த காலங்களில் புலம் பெயர் தேசங்களில் வாழும் எம்மவர் தாயகத்திற்குச் செய்த பொருளாதார உதவிகள் எம்மைப் பட்டினிச் சாவிலிருந்து தடுத்தது. போர் முடிந்த பின்பு எமது தாயக மண்ணின் புனர்வாழ்வு நடவடிக்கைகளில் புலம்பெயர் தேசங்களில் வாழும் உறவுகளின் பங்களிப்பு போற்றுதற்குரியது. அரசாங்கத்தை மட்டும் நம்பி இருந்தால் இவ்வளவு வேகமாக எம்மால் மீண்டெழுந்து இருக்க முடியாது. அந்த வகையில் அவர்களின் உதவிகள் நன்றிக்குரியது. வணக்கத்துக்கும் உரியது. தாயக மண்ணுக்கான உங்களது சேவைகள் செம்மையுறக் கவனிக்க வேண்டியவை எனச் சிலவற்றை முன் வைக்கிறேன். 01. நீங்கள் தாயகம் வரும் போது பொது நிகழ்வு ஒன்றில் உதவித் திட்டமொன்றை அறிவிக்கிறீர்கள். தொடங்குகிறீர்கள். ஆனா…
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
•கடவுள் முருகனும் தமிழ் பக்தனும் முள்ளிவாய்க்கால் படுகொலைகளும் பக்தன்- முருகா! தமிழ் கடவுளே! ஈழத்தில் எம் இனம் அழிகிறது. நீ கண் திறந்து பார்க்கக்கூடாதா? முருகன்- பக்தா! நான் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்? பக்தன்- எங்களை காப்பாத்து முருகா. எங்களை அழித்தவர்களை பழி வாங்கு முருகா. இந்த முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் நல்ல செய்தி கூறு முருகா! முருகன்- என் கோயில் மீது விமானம் மூலம் குண்டு போட்டவர்கள். இப்போது ஹெலிகொப்டர் மூலம் பூ தூவுகிறார்கள். அவர்களையே என்னால் எதுவும் செய்ய முடியவில்லை அப்புறம் உன்னை எப்படி காப்பாற்றுவேன் என நம்புகிறாய்? பக்தன்- என்ன முருகா இப்படி சொல்லுறாய்? உன்னைவிட்டால் எமக்கு வேறு ய…
-
- 1 reply
- 407 views
-
-
“குறைந்த விலை, பெரிய தேர்வு, 90 சதவீதம் வரை தள்ளுபடி” என அட்டகாசமாக யேர்மனிய சந்தைக்குள் தற்போது நுளைந்திருக்கும்சீன நாட்டு Temu என்னும் இணையத்தள வியாபாரம் பற்றி இப்போது பெரிதாகப் பேசப்படுகிது. நகைகள், தளபாடங்கள், சிறார்கள், பெண்கள், ஆண்கள் ஆடைகள், சமையலறை உபகரணங்கள், வீட்டுக்குத் தேவையானபொருட்கள் என குறைந்த விலையில் பல பொருட்கள் இந்த இணையத்தள விற்பனைப் பகுதியில் குவிந்திருக்கின்றன. உதாரணமாக180 யூரோ பெறுமதியான Adidas தயாரிப்புகளை ஒத்த காலணிகளை 12யூரோவுக்குக் குறைவாகவே Temu தளத்தில் பார்ககமுடிகிறது. Temu அன்றாடம் தேவைப்படும் பொருட்களின் ஒரு மலிவான ஒரு பெரிய சந்தையாக இப்பொழுது இருக்கிறது. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் பொருட்கள் இடைத்தரகர்கள…
-
- 6 replies
- 641 views
-
-
முட்டிக்கு கீழே இருகால்களை இழந்த முன்னாள் பிரிட்டிஸ் கூர்க்கா வீரரின் சாதனை முயற்சி பற்றி விபரிக்கிறது இக்காணொளி.
-
- 1 reply
- 661 views
- 1 follower
-
-
ரெக்கை கட்டிப் பறக்குதடீ …….. உலகப் பொருளாதாரம் கொரானாவின் உச்சத்தில இருக்கேக்க எல்லாரும் சைக்கிள் வாங்க நானும் ஒண்டை வாங்கினன். “ அப்பா என்னை சைக்கிளில வைச்சு ஒருக்காச் சுத்துவீங்களோ” எண்டு சின்னவள் கேக்க நானும் மூச்சு வாங்க ஒரு சுத்தி சுத்தீட்டு வந்திறங்க , மனிசி தன்னையும் எண்டு கேக்க சைக்கிள் என்னைப் பாத்து சிரிச்சுது. “ லவ் பண்ணிற காலத்தில ஏறும் ஏறும் எண்டு கேட்டிட்டு இப்ப மாத்திரம் என்ன “ எண்டு மனிசி முறைச்சுது. லவ் , ரொமான்சுக்கு நல்ல வாகனம் ஒண்டு குதிரை இல்லாட்டிச் சைக்கிள் தான். இதில வாற சுகம் காரிலயோ இல்லைத் தேரிலயோ கூட வராது. சைக்கிளில ஏத்திக்கொண்டு போகேக்க முட்டியும் முட்டாமலும் படிற முதுகு , சட்டையோட சேந்து தட்டுப்படிற இடது கால் , பின்னால வருட…
-
- 5 replies
- 828 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் அன்னா ஜார்விஸ் என்ற ஒரு ஆர்வலரின் முயற்சியால் அன்னையர் தினத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அன்னையர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 2ஆவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு அன்னையர் தினம் மே 14ஆம் தேதி கொண்டாடப்படும். அமெரிக்க அன்னையர் தினம் உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டாலும், பல்வேறு நாடுகள் வெவ்வேறு தினங்களில் தனித்தனி அன்னையர் தினத்தை கடைப்பிடிக்கின்றன. அந்த வகையில், உலகம் முழுவதும் அன்னையர் தின கொண்டாட்டங்கள் மற்றும் அவை எப்படி வந்தன என்பதை இங்கே பார்க்கலாம். அமெரிக்க அன்னையர் தினம் அமெரிக்காவில் அன்னா ஜார்விஸ் என்ற ஒரு ஆர்வலரின் முயற்சியால் அன்னையர் தினத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அன்னா 1854 ஆம் ஆண…
-
- 0 replies
- 541 views
- 1 follower
-
-
நான் இதை முழுக்க முழுக்க தென்னகத்தை சேர்ந்த, நகரங்களில் வாழும் மத்திய, மேல் மத்திய வர்க்க வேலை செய்யும் ஆண்களை -குறிப்பாக 70-80களுக்கு முன்பு பிறந்தவர்கள், 80-90 களுக்குப் பிறகு பிறந்தவர்களை – வைத்தே சொல்கிறேன். நான் கல்லூரிகளில் வேலை செய்துள்ளதால் அங்கு அரசு ஊதியம் பெறுகிற கடந்த இரு பத்தாண்டில் வேலைக்கு வருகிறவர்களை ஐம்பது வயதுக்கு மேலானவர்கள் மற்றும் நாற்பதுகளுக்கு கீழிருக்கும் தனியார் சம்பளம் பெறுகிறவர்களுடைய உடல் மொழியை ஒரே சமயம் பார்த்து ஒப்பிடும் வாய்ப்பு கிடைத்தது. அதை வைத்தே இதை சொல்கிறேன். 60-70களின் தலைமுறையை சேர்ந்த ஆண்களிடம் ஒரு ஸ்டைல் உள்ளதாக எனக்கு எப்போதுமே தோன்றியதுண்டு. நான் இதை ஒரு மாணவனாக நாகர்கோயிலிலும் சென்னையிலும் படித்த காலத்திலும் கண்டிருக்கிறேன். …
-
- 0 replies
- 738 views
- 1 follower
-
-
Degree 2021 Dec 22 வாயில வைச்ச சுருட்டை பத்த வைக்காமல் lighter ஐ தட்டித் தட்டிக்கொண்டு இருந்த Greig ( கிரேக்குக்கு) , “ Sir முப்படைத்தளபதிகளும் விண்வெளிக் கட்டுப்பாட்டு தலைவரும், உளவுத்துறைத் தலைவரும் வந்திட்டினம்” எண்டு செய்தி வர meeting room க்கு உடன வந்தார். உலகத்து மீடியா எல்லாம் பரபரப்பாக பேசிய ஒரு நியூஸ் , Australia வை கொஞ்சம் கூட உலுக்கி இருந்தது. ஆனாலும் இது இந்தோனேசியாவில் பூகம்பமோ இல்லை பாலியில்( Bali) சுனாமியோ இல்லை. ஐஞ்சு சுவருக்குள் நாள் முழுக்க நடந்த meeting முடிவெடுக்காமல் நீள , “ நாங்கள் ஒரு local agent இட்டை Detail report கேப்பம்” எண்டு முடிவோடு அடுத்த meeting date குறிக்கப்பட்டது. காலமை வந்த call என்னவாக இருக்கும் எண்டு மோப்பம் பிடிச்சு …
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
குடும்பத்தோடு பயணம் செய்யும் போது நம்முடன் ஒரு ஓட்டுநரை கூட்டிச் செல்வது வழக்கம் . இரவு சமயத்தில் நாம் நல்ல ஒரு தங்கும் விடுதியில் அல்லது நண்பர்கள் வீட்டில் தங்கும்போது ஓட்டுனருக்கு தங்குவதற்கு நல்ல ஒரு இடம் நாம் அமைத்து கொடுப்பது குறைவு . அப்படி இருக்கும் பட்சத்தில் ஓட்டுநர் அவரது வாகனத்திலேயே படுத்து தூங்கும் நிலைமை தான் உருவாகிறது. ஒருசில தங்கும் விடுதிகளில் மட்டுமே ஒட்டுநர்களுகான ஓய்வு அறை உள்ளது. பெரும்பாலான விடுதிகளில் அதுபோல் இல்லை. ஓட்டுனருக்கு குறைந்தபட்சம் ஒரு 300 ரூபாய்க்கு அல்லது 500 ரூபாய்க்கு அறையெடுத்து கொடுத்து அந்த ஓட்டுநர் நிம்மதியாக தூங்குவதற்கு நாம் வழி செய்வது குறைவு . அடுத்த நாள் நமக்கு நெருங்கியவர்கள் கூட சுகமாக…
-
- 1 reply
- 917 views
-
-
வயதாவதின் பரிணாமம் பற்றி யோசித்திருக்கிறீர்களா? வயதாவதை நாம் விரும்புவது நாம் குழந்தைகளாக இருந்தபோது தான் பத்து வயதுக்குட்பட்டவரிடம் வயதைக் கேளுங்கள். பளிச்சென்று பதில் வரும் நாலரை. ஆறரை ஏழரை என்றெல்லாம் வரும் அடுத்தவயதுக்குத் தாவும் அவசரம் அந்தப் பிராயத்தில்தான் இருக்கும் பதினம வயதுகளில் வயதைக் கூட்டித்தான் சொல்வோம் குறைக்கமாட்டொம் பதினாறு பதினேழு வயதிலேயே நாம் முதிர்ந்தவர்களாக உணர்வோம் (நான் வளர்ந்து விட்டேன் என்னையும் கணக்கில் சேர்க்க வேண்டும்) 21 வயது ஆகிவிட்டால் எனக்கும் எல்லாம் தெரியும் என்னும் நினைப்பும் கூடவே வரும் முப்பதுகளில் ஏதோ கனவு காண்பது போல் உணர்வோம் நாற்பதுக்கு நாட்களைத் தள்ளுவோம் சந்தேகங்கள் கூடவே வரும் அப்படி இப்படி என்று ஐம்பதை அடைகிறோம் அறுப்து…
-
- 1 reply
- 685 views
- 1 follower
-
-
மருத்துவப் பழம் வாழை இறக்க வந்தவன் ஆக்களே இல்லாத வீட்டை மாறி வந்திட்டனோ எண்டு யோசிக்க , “ஓம் தம்பியவை இங்க தான் இறக்குங்கோ”எண்டு வந்த பெரியவரை , “ அப்பா நீங்க சும்மா இருங்கோ வந்தவனுக்கு கொஞ்சம் கூடத் தாறம் எண்டா இறக்கி கட்டி விடுவாங்கள்” எண்ட மகளின்டை குரல் அவரை அடக்கிச்சுது. வாழை கட்டிக் கொண்டிருக்கேக்க வந்த வானில இருந்து பத்துப் பெடியள் இறங்க வீடே பரபரப்பானது. வந்தவங்கள் கமராவைத்தூக்கிக் கொண்டு போய் லைட்டைப் போட பொம்பிளை ஒரு மார்க்கமா வெளிக்கிட்டு வர , கலியாணம் தொடங்கப் போகுது நாங்கள் பிந்தீட்டம் எண்ட படி வாழைக்காரன் அந்தரப்பட்டான். “ஏன் இப்பிடி அரக்கப் பறக்க நிக்கிறீங்கள் கலியாணம் நாளைக்குத்தானே “ எண்ட படி ஐயா milo packet ஓட வந்து , “ஒண்டும் இல்லை இத…
-
- 5 replies
- 1.3k views
- 1 follower
-
-
வாழ்க்கை ஒரு செவ்வகம் “ உங்களுக்கு என்ன விசரே பிள்ளைகள் எல்லாம் வளந்திட்டுது “ எண்ட பதில் அரும்பாமலே பல ஆசை இரவுகளை கருக்கி விட்டிடுது இப்ப பலருக்கு. அட ஐஞ்சு அறையோட இருக்கிற இந்தக் காலத்தில இப்படி எண்டால் அந்தக்காலத்தில ஒரே அறையில எட்டுப் பத்தெண்டு பெத்தது எப்பிடி எண்டு எனக்குத் தெரியேல்லை. “ அவள் கெட்டிக்காரி எண்டு கன பிள்ளை பெத்த அம்மாமாரை பாத்துச் சனங்கள் சொன்னது எந்தக் கெட்டித் தனத்துக்கு எண்டு அப்ப விளங்கேல்லை. ஊரில கலியாணம் பேசேக்க சீதனமா கட்டாயமா வீடு மற்றது எல்லாம் extra. சீதனமா வீடு எண்டோன்ன ஏதோ சொத்துக் கிடைச்சிட்டு எண்டு ஆசைப்படக்கூடாது. எழுதிற வீட்டுக்கு சீவிய உரித்து வைச்சுத் தான் எழுதுவினம். அதை விக்கவும் ஏலாது ( அடகு) வைக்கவும் ஏலாது. SJ…
-
- 7 replies
- 1.4k views
- 1 follower
-
-
-
Play video, ""இசை என் அடையாளமாக இருக்க வேண்டும்" - மாற்றுத்திறனாளி பெண்ணின் தன்னம்பிக்கை கதை", கால அளவு 3,44 03:44 காணொளிக் குறிப்பு, "இசை என் அடையாளமாக இருக்க வேண்டும்" - மாற்றுத்திறனாளி பெண்ணின் தன்னம்பிக்கை கதை 20 ஏப்ரல் 2023, 03:41 GMT மேரி ஜெனிட்டா 8 மாத குழந்தையாக இருக்கும்போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அவருக்கு இடுப்பில் ஊசி போடப்பட்டதாகவும் அதன் பின்னர் தனது இரு கால்களும் செயலிழந்துவிட்டதாகவும் அவர் கூறுகிறார். சிறு வயதில் இருந்தே இசையில் சாதிக்க வேண்டும் என்ற ஆசையோடு வளர்ந்த மேரி ஜெனித்தா தற்போது ஒரு குறும்படத்திற்கும், வெளியா…
-
- 0 replies
- 996 views
- 1 follower
-
-
இசை அமைப்பாளர்களின் துரோணாச்சாரியார் தன்ராஜ் மாஸ்டர்! தமிழ் சினிமாவில் மெல்லிசை மன்னர்கள் முதல் ஏ.ஆர்.ரகுமான் வரை எத்தனையோ இசை அமைப்பாளர்கள் ராக ராஜாங்கம் நடத்தி இருக்கிறார்கள். அதில் ஒரு சில இசை அமைப்பாளர்கள் தவிர, பெரும்பாலானவர்கள் மேற்கத்திய மற்றும் கர்நாடக இசை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டது தன்ராஜ் மாஸ்டரிடம்தான். தன்ராஜ் மாஸ்டரிடம் இசை பயின்றவர்களில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், தேவா, வித்யா சாகர், ஷியாம் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். மாஸ்டர்களுக்கு எல்லாம் மாஸ்டராக இருந்து வழி காட்டிய தன்ராஜ் மாஸ்டரை தமிழ் திரை உலகம் பெரிய அளவில் கொண்டா…
-
- 0 replies
- 826 views
-
-
பெற்றோர் பார்க்க வேண்டிய பாடம் https://fb.watch/jCLvxJ1dQ1/
-
- 0 replies
- 776 views
-
-
வாங்க 2023 மார்ச் மாதம் வெடுக்குநாறி மலையில இருந்த ஆதி சிவன் ஆலயம் உடைக்கப்பட்டு அங்க இருந்த சிவலிங்கம் உடைக்கபட்டு இருந்த. இந்த காணொளி 2 வருடங்களுக்கு முதல் நாங்க போகேக்க அங்க எப்பிடி இருந்த எண்டுறத காட்டுது.
-
- 0 replies
- 778 views
-
-
விளம்பரங்கள் பற்றிய புத்தகம் எழுதிய மன்னர் மன்னரின் பேட்டி. மனிதர்களை ஏமாற்ற பதினைந்து உளவியல் கோட்பாடுகள் இருப்பதாக குறிப்பிடுகிறார். ஆர்வமுள்ளோர் பாருங்கள்.
-
- 0 replies
- 763 views
- 1 follower
-
-
வாங்க இண்டைக்கு எங்கட தோட்டத்தினை முழுசா சுத்தி பாப்பம், கிட்டத்தட்ட 100 வகையான மரங்களுக்கு கிட்ட இருக்கு. எல்லாமே இங்க வச்சு ஒரு 3-5 வருசங்களுக்குள்ள வளர்ந்த மரங்கள் தான், பாருங்கோ பாத்து எப்பிடி இருக்கு எண்டு சொல்லுங்கோ. அதே மாதிரி இன்னும் என்ன மரங்கள் வச்சா நல்லா இருக்கும் எண்டு சொல்லுங்கோ.
-
- 1 reply
- 677 views
-
-
வாங்க நாம இண்டைக்கு யாழ்ப்பாணத்தில இருக்க பல தீவுகளில ஒண்டான பாலைதீவுக்கு பயணம் செய்யிறதையும் அங்க என்ன என்ன இருக்கு எண்டும் பாப்பம். அதே நேரம் இந்த தீவை சுத்தி நடக்கிறதுக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் எண்டும் பாப்பம் வாங்க. நீங்க இந்த தீவுக்கு இதுக்கு முதல் பொய் இருக்கீங்களா எண்டும் சொல்லுங்கோ.
-
- 0 replies
- 952 views
-
-
இன்றைய தலைமுறையினருக்கு பிடித்த ஒரே பொருள் - செல்ஃபோன் படிக்காமல் பாஸ் ஆக வேண்டும்.கஷ்டப்படாமல் வேலை கிடைக்க வேண்டும்... யாருக்குமே மரியாதை தரக்கூடாது.. தனக்கு தெரியாத விஷயம் எதுவுமே இல்லை என்ற மனநிலை... எல்லாமே உடனே கிடைக்க வேண்டும்.. காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்... சினிமா, கிரிக்கெட், செல்ஃபோன் இவைதான் உலகம்.. பெண்கள் மீது மரியாதையே இல்லை.. ஆசிரியர்கள், மூத்தோர்கள் எல்லாம் புழு பூச்சி மாதிரி... வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம், அரசியல் குறித்த அடிப்படை புரிதல்கள் கூட இல்லை.. ஒரு பேங்க் செலான் கூட நிரப்பத் தெரியாது.. ஒரு வரி கூட வாசிப்பதில்லை.. …
-
- 4 replies
- 1.3k views
-