இலக்கியமும் இசையும்
இலக்கிய கட்டுரைகள் | நேர்காணல்கள் | கர்நாடக இசை | நவீன இசை
இலக்கியமும் இசையும் பகுதியில் இலக்கிய கட்டுரைகள், நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை சம்பந்தமான தரமானதும் அவசியமானதுமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான இலக்கியக் கட்டுரைகள், படைப்பாளிகளின் நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை பற்றிய தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
204 topics in this forum
-
பாரிஸ் இலக்கியச் சந்திப்பும் கூக்குரல் இட்டோரும் — ராகவன் — கடந்த மார்ச் 30-31 இல் நிகழ்ந்த இலக்கியச் சந்திப்பில் நூல்கள் பற்றிய விமர்சனங்கள் அறிமுகங்கள் அத்துடன் பாலஸ்தீனப் பிரச்சனை, இன முரண்பாடு, மலையக மக்கள், பால் நிலை வேறுபாடுகள், LGBTQ, சாதியம் போன்ற பல்வேறு விடய தானங்கள் பேசப்பட்டன. விவாதங்கள் நிகழ்ந்தன. இரண்டாம் நாள் மாலை நிகழ்விற்கு நாலு பேர் புதிதாக வந்திருந்தனர். அவர்கள் நால்வரும் ஒரே இடத்தில் அமர்ந்திருந்தனர். ஒருவர் யோகு அருணகிரி. மற்றவர் கார்வண்ணன். மூன்றாமவர் நெய்தல் நாடன். மற்றவர் பெயர் தெரியாது. டெலோன் மாதவன் என்ற இரண்டாம் தலைமுறையை சேர்ந்த பிரான்ஸு நாட்டு அறிஞர் பேச அழைக்கப்பட்டிருந்தார். அவர் புவியியலில் டாக்டர் பட்டம…
-
-
- 11 replies
- 1.5k views
-
-
பாலுணர்வை அறிதலும் எழுதுதலும் - ஜெயமோகன் ஹாவ்லக் எல்லிஸ் சமீபத்தில் ஓர் இளம் எழுத்தாளர் எழுதிய நாவலை வாசித்தேன். பாலியல் நிகழ்ச்சிகளை விரிவாக எழுதியிருந்தார். ‘துணிந்து’ எழுதியிருப்பதாக அவர் எண்ணிக்கொண்டிருந்திருக்கலாம். இதற்குமுன் இல்லாதவகையில் எழுதியிருப்பதாக பெருமிதம் கொண்டிருக்கவும்கூடும். இளம்வாசகர்கள் சிலர் அதை வாசித்து “ஆகா!” போட்டிருக்கலாம். அப்படி ஒருவர் கவனம் பெற்றுவிட்டால் பலர் உருவாகி வருகிறார்கள். தமிழ்நாட்டில் பாலியல்வரட்சி மிகுதி. ஆகவே என்றுமே பாலியலெழுத்துக்கு வாசகர்கள் அதிகம். அத்துடன் பெரும்பாலான வாசகர்கள் பாலுறவு மட்டுமே வாழ்க்கை என எண்ணிக்கொண்டிருக்கும் முதிரா இளமையில் வாசிக்க வருகிறார்கள். அவர்கள் இவ்வகை எழுத்துக்களையே தெரிவுசெய்கி…
-
- 1 reply
- 1.7k views
-
-
பின்லாந்தின் நாட்டுப்புறக் காவியக் கதைப்பாடல் கலேவலா: அஸ்கோ பார்பொலா written by கால.சுப்ரமணியம்August 29, 2021 நாட்டுப்புறவியல் துறை உயர்நிலையை அடைந்த நாடுகளில் பின்லாந்து முதன்மையானது. இந்த உச்சத்தை அந்த நாட்டு ஆய்வாளர்கள் தம் தேசியக் கதைப்பாடலான ‘கலேவலா ’ (Kalevala) என்ற வாய்மொழிக் காவியத்தைத் திரட்டிச் செம்மைப்படுத்தி வெளியிட்டதன் மூலம்தான் அடைந்தார்கள் என்றுகூடச் சொல்லலாம். தம் தேசியக் காவியத்தை உலகம் முழுதும் பரப்புவதற்காக நிறைய முயற்சியும் மானிய நிதியுதவிகளும் செய்துள்ளார்கள். அப்படித் தமிழிலும் மிக அட்டகாசமாக அதன் தமிழ் வடிவம் வெளிவந்து எல்லோருக்கும் பெரும்பாலும் இலவசமாக அன்பளிப்பாக விநியோகிக்கப்பட்டது. ஆனால் என்ன துரதிர்ஷடம் என்றால் அதை படித்து இரசிக்க முடி…
-
- 1 reply
- 724 views
-
-
பிரபாகரன் என்ன சித்தனா? தெய்வமா? – நேர்காணல் -தமிழ்க்கவி இதுவரை படித்தவர்கள்: 351 நான்வந்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கான பஸ் பரந்தனைக் கடந்து கிளிநொச்சியை விரைவாக அண்மித்து நீதிமன்ற நிறுத்தத்தில் என்னை இறக்கி விட்டுத் தனது பயணத்தைக் தொடர்ந்தது. கிளிநொச்சிக்கும் எனக்கும் ஒரு பரமார்த்தமான தொடுகைகள் முன்பு இருந்தன. சிறுவயதில் இருந்தே எனது தந்தையார் இங்கு கடமையாற்றியதால் ஏற்பட்டதாலும் இங்கு நெற்செய்கை வயல் இருந்தகாரணத்தினாலும் அது ஏற்பட்டது. நான் கிளிநொச்சியில் இறங்கியபொழுது அந்தக்காலை வேளையிலும் வெய்யில் வெளுத்துக்கட்டியது. வியர்வையில் உடல் தெப்பமாக நனைந்து விட்டதாலும் குறித்த நேரத்திற்கு முதலே வந்து விட்ட காரணத்தினாலும் நீதிமன்ற வளாகத்தின் அருகே…
-
- 7 replies
- 1.8k views
-
-
பிரமிள் இளங்கோ-டிசே 1. ஈழத்திலக்கியம் என வரும்போது தொடர்ந்து வாசிக்கவும் உரையாடவும் வேண்டியவர்களென நான் மு.தளையசிங்கத்தையும் (மு.த), எஸ்.பொன்னுத்துரையையும் (எஸ்.பொ) முன்மொழிந்து வருகின்றவன் . இவர்கள் இருவரையும் விட இன்னொருவரையும் இதில் சேர்க்கலாமோ, விடலாமோ என்கின்ற தயக்கங்கள் எப்போதும் எனக்குண்டு. அது தருமு சிவராம் என்கின்ற பிரமிள். 57 வயதுகள் வரை வாழ்ந்த பிரமிளின் 30 வருடங்கள் இலங்கையிலே கழிந்திருக்கின்றன என வரும்போது அவரை நம்மவராகவே கொள்ளமுடியும். ஒருவகையில் பார்த்தால் அவருடைய மேதமை அவருடைய 20களிலேயே - நிகழ்ந்துமிருக்கின்றது. பிறகான காலங்களில் அவர் அதை விரித்து எடுத்துச் சென்றதையே நாம் எளிதாகப் பார்க்கமுடியும். பிரமிள், அவரின் 20களின் தொடக்கத்…
-
- 0 replies
- 1k views
-
-
பிரமிள்: தனியொருவன் – பாலா கருப்பசாமி 1939ல் இலங்கை, திரிகோணமலையில் பிறந்த பிரமிளின் தமிழ் இலக்கியப் பிரவேசம் 1959ல் தொடங்கியது. ஏழு ஆண்டுகள் சி.சு. செல்லப்பா நடத்தி வந்த எழுத்து சிற்றிதழில் தொடர்ந்து எழுதி வந்தவர் பிரமிள். புதுக்கவிதையைத் தொடங்கி வைத்த பாரதிக்குப் பின் ந.பிச்சமூர்த்தி, க.நா.சு., புதுமைப்பித்தன் போன்றோர் அதை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி வந்ததில் பங்கு வகித்தனர். இந்தக் காலகட்டத்தில் எழுத்து சிற்றிதழ் வழியாக பிரமிளின் பிரவேசம் நிகழ்கிறது. தனது 20 ஆவது வயதில் அவர் கவிதை குறித்து எழுதிய செறிவான கட்டுரைகள் தன்னிகரற்றவை. தமிழ்க் கவிதைக்கு அவரளித்த கொடையாக அவை விளங்குகின்றன. பிரமிள் குறித்து விரிவாக எழுத வேண்டும் என்ற எண்ணம் பல மாதங்களாக இருந்து வந்தது…
-
- 7 replies
- 2.7k views
-
-
பிரிட்டிஷ் முத்த அதிர்ச்சியிலிருந்தே தமிழனால் இன்னும் மீள முடியவில்லை - இளைய அப்துல்லாஹ் பேட்டி பிரிட்டனில் தமிழர் வாழ்க்கை என்னவாக இருக்கிறது? பலருடன் உரையாடினேன் என்றாலும், ஒரு பேட்டி விசேஷமாக எனக்குத் தோன்றியது. கவிஞர், சிறுகதையாசிரியர், ஊடகவியலாளர் எனப் பன்முக ஆளுமையான இளைய அப்துல்லாஹ்வுடனான உரையாடல்தான் அது. முல்லைத்தீவில் பிறந்த ஸ்ரீபாலமுருகன் பின்னாளில் எப்படி இளைய அப்துல்லாஹ் ஆனார் என்ற அவருடைய இளமைக் கால இலங்கைக் கதையே ஒரு நாவலுக்கான களம். அவர் ஐரோப்பா வந்து சேர்ந்தது, பிரிட்டனைத் தன்னுடைய நாடாக்கிக்கொண்டது, இங்கு தன்னை நிலைநிறுத்திக்கொள்ள இன்றளவும் அவர் பட்டுக்கொண்டிருக்கும் பாடுகள் யாவையும் அவர் வாய்வழி கேட்கும்போது சுவாரஸ்யமாக்கிவிடுவது அவருடைய கதையாட…
-
- 7 replies
- 2.7k views
-
-
புகலிட இலக்கிய யதார்த்தம் Posted by: sudumanal மேற்குலகம் நோக்கி நாம் (தமிழர்கள்) போரினால் புலம்பெயர்ந்து அதிக பட்சம் முப்பத்தியேழு வருடங்களாகிறது. இந்த முதல் சந்ததி இப்போ இரண்டாவது முன்றாவது சந்ததிகளாக விரிடைந்திருக்கிறது. முதலாம் சந்ததி குறித்து பருண்மையாக சொல்வதெனில் ஓர் ஒடுங்கிப்போன சமூகமாக தமக்குள் குறுகியே அது இயங்கிவந்திருக்கிறது. இந்த ஒடுங்கிப் போதலுக்கு கணிசமானவர்கள் தமிழன் என்ற பெருமிதத்தை அல்லது (இந்துப்) பண்பாட்டை தமக்குள் உயர்த்திப்பிடிப்பதானது உளவியல் ரீதியில் சுயதிருப்திகொள்ள வைக்கிறது. செவ்வாய்க் கிரகத்தை றோவர் தரைதொட்டபோது உலகம் குதூகலித்துக் கொண்டிருக்க, நாம் (தமிழிச்சியாக இல்லாதபோதும்) ஸ்வாதி மோகனின் நெற்றியில் பொட்டைக் கண்டு குதூகலி…
-
- 0 replies
- 454 views
-
-
புதிய குரல்கள்- சாதனாவின் ‘தொலைந்துபோன சிறிய கறுப்பு நிற பைபிள்’ தொகுதியை முன்வைத்து நரோபா பதாகைOctober 6, 2020 (புதிய குரல்கள் பகுதியில் பொதுவாக எழுத்தாளரின் விரிவான நேர்காணல் மற்றும் அவருடைய ஆக்கத்தை பற்றிய விமர்சன கட்டுரை இடம் பெறும். இம்முறை அவைத்தநித்தநியாக இல்லாமல் எழுத்தாளருடன் உரையாடிப் பெற்ற அவரைப் பற்றிய சுருக்கமான அறிமுகம் முதல் பகுதியிலும், கட்டுரை இரண்டாம் பகுதியிலும் இடம்பெறும் வகையில் ஒரே பதிவாக வெளிவருகிறது. கேள்விகளுக்கு பதில் அனுப்பிய எழுத்தாளர் சாதனாவிற்கு நன்றி) எழுத்தாளர் சாதனா – ஒரு அறிமுகக் குறிப்பு கே: உங்களைப் பற்றி யாழ்ப்பாணத்தில் உள்ள புங்குடுதீவில் ஒரு குடும்பத்தில் மூன்றாவது பிள்ளையாக நான் பிறந்தேன். அப்பா ஒரு வாகனச் சாரத…
-
- 0 replies
- 816 views
-
-
புதிய குரல்கள்: எழுத்தாளர் அகரமுதல்வனுடன் ஒரு நேர்முகம் – நரோபா பதாகைJuly 10, 2018 நரோபா பிறப்பு /படிப்பு/ குடும்பம் பற்றி ? என்னுடைய மிகச்சிறிய வயதுகள் இடப்பெயர்விலேயே வளர்ந்தன.எறிகணைகள் வீழ்ந்து வெடிப்பதும், உலங்குவானூர்திகள் மேலிருந்து சுடுவதும்தான் எனது சிறியவயதின் நினைவுகளாக அடர்ந்து நிற்கிறது. நான் முதன்முறையாக ஒரு தொகையான சனங்களின் பிணங்களை இடப்பெயர்வு ஒன்றில் நடந்துகொண்டே பார்த்தேன். அந்த இடத்தைவிட்டு அம்மா என்னை மிகவேகமாக இழுத்துக்கொண்டு ஓடினாள். அம்மா முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக் களத்தில் என்னை எந்த திசைக்கு இழுத்துக் கொண்டு ஓடினாலும் எங்கும் பிணங்களே நிறைந்திருந்தன. இந்த இரண்டு சம்பவங்களுக்கு இடையேதான் என்னுடைய பள்ளிக்கூட வாழ்வும் இருக்கிறது.…
-
- 0 replies
- 852 views
-
-
புத்தகக் கண்காட்சி, இலக்கியக்கூட்டங்களுக்குச் செல்வது அன்புள்ள ஜெ சென்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்வது என் வழக்கம். நான் அதிகமாக நூல்களை வாங்குவதில்லை. என் பணச்சிக்கல் அப்படி. ஆனால் ஆண்டுதோறும் சிறிதாக நூல்களை வாங்கிக்கொண்டுதான் இருக்கிறேன். பெரும்பாலும் நூலகங்களை நம்பியே நூல்களை வாங்கிக்கொண்டிருக்கிறேன். என்னுடைய கேள்வி என்னவென்றால் நூல்களை வாங்குவதற்காகத்தான் புத்தகக் கண்காட்சிக்குச் செல்லவேண்டுமா? என்னை புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதற்காக பலர் கேலியும் கிண்டலும் செய்வதுண்டு. இவர்களில் பலர் கதை கவிதைகள் எழுதுபவர்கள். என்னைப்போன்றவர்கள் செல்வதனால்தான் அங்கே நெரிசல் என்று சொல்வார்கள். “புக்கை எல்லாம் முறைச்சுப் பாத்துட்டு வந்திட்டியா?”என்று கேலிசெ…
-
- 0 replies
- 656 views
-
-
புனைவின் பல வாயில்கள் – ஆர். அபிலாஷ் July 19, 2021 - ஆர்.அபிலாஷ் · இலக்கியம் அ. முத்துலிங்கம் ~ ஜெயமோகன் நேர்காணலில் இருந்து ஒரு கேள்வியும் பதிலும் பகுதியை கார்ல் மார்க்ஸ் தன் பேஸ்புக் பக்கத்தில் எடுத்துப் போட்டு சிலாகித்திருந்திருந்தார். அதில் அ.முத்துலிங்கத்தின் எழுத்தில் வரும் நுட்பமான அவதானிப்புகளை பாராட்டி விட்டு, அவரது எழுத்தில் ஏன் படிமங்கள் வருவதில்லை என ஜெயமோகன் வினவுகிறார். அதற்கு முத்துலிங்கம் சொல்லும் பதிலுக்கு செல்லும் முன் அதென்ன ஜெ.மோ சொல்லுகிற “படிமம்” என நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அசோகமித்திரனின் “தண்ணீர்” நாவலில் நீர் ஒரு குறியீடு. நீரின் கழிவு கலந்த தன்மை, எதையும் தன்னில் கலந்து அழுக்காகும் போதும் ஓரிடத்தில் நின்று விடாமல் ஓட…
-
- 0 replies
- 701 views
-
-
புனைவு வாசிப்பு அடிமைப்படுத்துமா? ஜெயமோகன் September 21, 2021 Vincent Van Gogh “The Novel Reader” அன்புள்ள ஜெ, நலம்தானே? என் நண்பர்களில் புத்தகம் வாசிப்பவர்கள் மிகக்குறைவு. அவர்களிலேயேகூட பலர் புனைவுகளை வாசிப்பதில்லை. “இருபத்தஞ்சு வயசு வரை கதை படிக்கிறது ஓக்கே. அதுக்குமேலே வாசிச்சா அவன் தத்தி”என்று என் நண்பன் ஒருவன் சொன்னான், கற்பனைக்கதைகள் வாசிப்பது வெட்டிவேலை என்ற எண்ணம் பலரிடமும் உள்ளது. பொதுஅறிவை அளிக்கும் கட்டுரைநூல்களை வாசிக்கிறோம் என்று சொல்வார்கள். அவர்கள் கட்டுரைநூல்கள் என்று சொல்வது பெரும்பாலும் அரசியல்நூல்கள். இடதுசாரி அரசியல்நூல்கள்தான் அதிகமும். சிலர் சேப்பியன்ஸ் போன்ற நூல்களைப் படிப்பார்கள். ஸ்டீவ் ஜாப்ஸின் வாழ்க்கை வரலாறு போன்…
-
- 1 reply
- 685 views
-
-
புலம்பெயர் தமிழ் இலக்கியத்துக்கு வயது ஏறக்குறைய 40 ஆண்டுகளே. மிஞ்சிப் போனால் இன்னும் ஒரு 50, 60 ஆண்டுகள்தான் இப்போதைய தொடர்ச்சியில் அதனால் ஒரு தீவிர அலையாக இயங்க முடியும். அதற்குப் பின்பு அது மெலிந்து ஒடுங்கி விடக் கூடிய சூழலே உண்டு. பிறகு அது வெவ்வேறு மொழிகளில் வேறு விதமானதாகவே இயங்கும். ஆகவே மொத்தமாகப் பார்த்தால் தமிழில் அதனுடைய ஆயுட்காலம் 100 ஆண்டுகளுக்குள்தான். இதற்குள்ளேயே அதனுடைய சாத்தியங்கள், சாதனைகள் எல்லாம். இந்த அவதானிப்பை வேறு யாரும் தங்களுடைய அவதானங்களின் வழியாகவும் வேறு தர்க்கத்தினாலும் மறுத்துரைக்கலாம். ‘இதென்ன வகையான சோதிடம் – ஆருடம்? யாரிந்தத் தீர்க்கதரிசி?’ என்று அவர்கள் நகைக்கவும் கூடும். ஆனால், ‘புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ உருவாகி வந்த வழியை நோக்க…
-
- 0 replies
- 475 views
-
-
புலி எதிர்ப்பு இலக்கியம் என்பது ஒரு நோய்: மலையவன் சில ஈழத் தமிழ் எழுத்தாளர்களுக்கு, புலி எதிர்ப்பு இலக்கியவாதிகளாக இருப்பதுதான் இலக்கிய உலகில் கௌரவமாகவும் இலக்கியச் சந்தையில் இலாபம் தருவதாகவும் இருக்கிறது. மிகவும் வன்மமும் கண்மூடித்தனமும் கொண்ட இந்தப் புலியெதிர்ப்பு வாதம், இன்று முள்ளிவாய்க்காலுக்குப் பிறகும் தொடர்கின்றது என்பது இன்னும் அதிர்ச்சிகரமானது. அண்மையில் முகநூலில் புலி எதிர்ப்பு எழுத்தாளர் ஒருவர், புலிப் பாணி இலக்கியம் தற்போது வளர்ச்சியடைவதாக வருத்தத்துடன் ஒரு தகவலை பகிர்ந்திருந்தார். அதற்கு இன்னொரு முகநூல் பதிவாளர், நல்லதொரு பதிலை வழங்கியிருந்தார். புலி எதிர்ப்பு இலக்கியம் உங்களுக்கு இனிக்கிறது. ஆனால் புலிப்பாணி இலக்கியம்தான் கசக்கிறதா? என்று. …
-
- 0 replies
- 1.2k views
-
-
🎧 விழிகள் மூடி செவிகள் திறந்தால் தேன் பாயும் புல்லாங்குழல்! காதோடு உறவாடும்,புல்லாங்குழல்! தீக்காயம் பட்ட போதும்,வருந்தவில்லை புல்லாங்குழலை பட்டாபோதும் என்பதில்லை புல்லாங்குழல்! காற்றை இசையாக்கும் வித்தகக் கருவி புல்லாங்குழல்! மௌனமாக இருக்கும் காற்றுத் தீண்டும் வரை புல்லாங்குழல்! உருவில் சிறியது உணர்வில் பெரியது புல்லாங்குழல்! காட்டில் விளைந்து காதோடு உறவாடும் புல்லாங்குழல்! தீயால் துளைத்தபோதும் இசை நல்கும் புல்லாங்குழல்! இதழ் குவித்து விரல் பதித்து காற்றுத் தந்ததும் இசைக்கும் புல்லாங்குழல்! அன்று முதல் இன்று வரை அற்புத இசை புல்லாங்குழல்! எம்மொழியும் சம்மதம் இனிய இசைப் பிறக்கும் புல்லாங்குழல்! கானம் இசைத்து கவலைப் விழிகள் …
-
-
- 21 replies
- 879 views
-
-
இலத்திரனியல் சாதனங்கள்,இணையம்,தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களின் வருகையாலும் ஆக்கிரமிப்பாலும் வாசிப்பு இன்று எம்மை விட்டு தொலைவாகிக்கொண்டு இருக்கிறது…. இயந்திரமாய் ஓடும் வாழ்க்கையில் கிடைக்கும் சிறிது நேரத்தையும் தொலைக்காட்சிக்கும் தொலைபேசிக்கும் கொடுத்துவிடுகிறோம்… எழுத்தாளர்கள் அதிக நூல்களை வாசிப்பவர்கள்.. அவர்களின் உரையை கேட்கும்போது அவர்கள் வாசித்த பலநூல்களின் அனுபவங்கள் எமக்கு கிடைக்கும்… புத்தகங்களை வாசிக்க நேரமில்லாதவர்கள் ஆர்வத்தையும் சிந்தனையையும் தூண்டும் எழுத்தாளர்களின் உரையை கேட்கும்போது நம்மை அறியாமலே பல்வேறு புத்தகங்களை நாம் படித்துவிடுகிறோம் அவர்களின் உரைகளினூடு… எஸ் ராவின் அருமையான இந்த பேச்சை நேரம் ஒதுக்கி கேட்பவர்கள் நிச்சயமாக இனி நான் தொடர்ந்து இங…
-
- 0 replies
- 337 views
-
-
பேய்ச்சி நாவலுக்குத் தடை: ஒரு முழுமையான விளக்கம் by ம.நவீன் • January 1, 2021 http://vallinam.com.my/version2/wp-content/uploads/2020/06/peychi-10015359-550x550h.jpeg 19.12.2020 அதிகாலை நான்கு மணிக்கு எழுந்தபோதுதான் ‘பேய்ச்சி’ நாவல் தடை செய்யப்பட்டதை அறிந்துகொண்டேன். சில இணையத்தளங்களில் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் இந்த கட்டுரையை நான் எழுதிக் கொண்டிருக்கும் இந்த நேரம் வரை பேய்ச்சி நாவல் தடை குறித்த எந்த அறிவிப்பும் உள்துறை அமைச்சிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக எனக்கு கிடைக்கவில்லை. ஊடகச்செய்திகள் வாயிலாகத்தான் நானும் அறிந்துகொண்டிருக்கிறேன். அப்போது நான் ஈப்போவில் உள்ள என் மாமா வீட்டில் இருந்தேன். உடன் போப்பியும் இருந்தான். என்னை விட்டுப் பிரிந்திருப…
-
- 2 replies
- 861 views
-
-
பொதுரசனைச் செவ்வியல் உருவாகும் தருணம் jeyamohanNovember 7, 2025 அண்மையில் ஒரு துயரமான மனநிலையில் புதுச்சேரியில் இருந்து கோவைக்கு காரில் வந்து கொண்டிருந்தபோது எண்ணங்களை மாற்றும் பொருட்டு இசையை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். வெவ்வேறு கவிஞர்கள் முருகனைப் பற்றி எழுதிய பாடல்களைப் பற்றி பேச்சு சென்றது. பூவை செங்குட்டுவன் எப்படி ஒரு பக்தி கவிஞர் ஆனார் என்பதை அவர் ஒரு உரையாடலில் சொன்னதை நான் நினைவு கூர்ந்தேன். 2006ல் அவர் இளையராஜாவை சந்திக்க வரும்போது ஒருமுறை சந்தித்திருக்கிறேன். இளையராஜா அவரை ஒரு முனிவரை எதிர் வருவது போல வணங்கி எதிர்கொள்வதை பார்த்தேன். அதன் பிறகு தான் அவர் எவர் என்று விசாரித்து தெரிந்து கொண்டேன். தமிழ் விக்கியில் அவரைப் பற்றிய ஒரு பதிவு போடும்போது மீண்டும் அவருடை…
-
- 1 reply
- 123 views
-
-
ஒரு சின்ன கேள்வி.. நீங்கள் பொன்னியின் செல்வன் வாசித்துவிட்டீர்களா? இது பழுவேட்டரையர் எனும் பெயரில் உள்ள ஐடியினால் Twitter ல பல நாட்களிற்கு முன் கேட்கப்பட்ட கேள்வி கேள்வியை இப்பிடி கேட்கனும் "பொன்னியின் செல்வன் எத்தனை முறை வாசித்திருக்கிறீர்கள்"? என comment உடன் Re Tweet பண்ணி இருந்தேன் பிந்தைய நாட்களில் மணிரத்னம் பொன்னியின் செல்வனை படமாக்க இருப்பதாகவும் ஐஸ்வர்யா தனுஷ் பொன்னியின் செல்வன வெப்சீரிஸ் ஆக எடுக்க இருப்பதாகவும் செய்திகள் வந்தன. பொன்னியின் செல்வன் எடுப்பதில் உள்ள சிக்கலே பொன்னியின் செல்வனின் வாசகர்களின் கற்பனையில் இருக்கும் கதாபாத்திரங்களிற்கு வடிவம் கொடுப்பதற்கான நடிகர்கள் எவரும் இங்கு இல்லை என்பதே.. ஆழ்வார்க்கடியான் பாத்திரத்த…
-
- 11 replies
- 2.1k views
-
-
Polappu Thedi| மலையகத்தான் கதடா 2 Album New Official Video Song 2024 மலையக சமுதாயத்தில் மலையக மக்கள் வாழும் வாழ்க்கை கதையை ஒரு பாடலாக தயாரித்து உங்கள் முன் சமர்ப்பிக்கிறோம் ❤️.
-
-
- 2 replies
- 714 views
- 1 follower
-
-
போரும் வாழ்வும் – அகரமுதல்வன் கதைகளை முன்வைத்து: ஆர். காளிப்பிரஸாத் அகரமுதல்வனின் காதல் விவரிப்புகள் சுவாரசியமானவை. ஒரு காலத்திற்குப் பிறகு தமிழில் காதல் கதைகள் எழுதுவது நின்றே விட்டது. காதல் அனுபவங்களை கவிஞர்கள் தங்கள் மிகைக் கூற்றுகளுக்கென எடுத்துக்கொள்ள இயல்பான காதல் வர்ணனைகள் உரைநடையில் குறைந்து போயின. காதலும் வீரமும் தமிழரின் பண்பு என்று பள்ளிக்கூடத்தில் படித்திருந்தாலும் இலக்கியத்தில் அவை பாரதிதாசன் காலத்தோடு நின்றுவிட்டன. காதல் வீரம் தியாகம் துரோகம் ஏதும் சமகால இலக்கியங்களில் பெரிதும் இடம்பெறுவதில்லை. வணிக இலக்கியம் அதற்கான ஊடகமாக ஆகியது. அடுத்து திரைப்படங்களிலும் அவை மேலும் நுண்மையாக்கப்பட்டன. தீர அலசப்பட்டன. அவ்வாறே ஒருகட்டத்தில் கேலியாகவும் ஆயின. விடுதலைப் ப…
-
- 0 replies
- 481 views
-
-
போர்க்கால இலக்கியம் – ஈழப்போருக்கு முன்பும் பின்னரும் August 16, 2020 அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் கடந்த 15 ஆம் திகதி நடத்திய இணையவழி காணொளி அரங்கில் சமர்ப்பித்த உரை முருகபூபதி போர்க்கால இலக்கியம்பற்றி பேசுவதற்கும் நாம் மற்றும் ஒரு கண்ணுக்குத் தெரியாத எதிரியுடன் போராடும் காலத்திலும் தயாராகியிருக்கின்றோம். இனி கொரோனா கால இலக்கியம் என்பதும் பேசுபொருளாகிவிடும். சமகால போராட்டத்தில் எம்மை பாதுகாத்துக்கொள்ள சமூக இடைவெளி தேவைப்பட்டிருந்தமை போன்று, ஈழவிடுதலைப்போரில் எமது மக்களின் பாதுகாப்பிற்கு பதுங்கு குழிகள்தான் தேவைப்பட்டன. அப்படியிருந்தும் பதுங்கு குழிகளை நோக்கியும் எறிகணை வீச்சுக்கள் நிகழ்ந்தன. குண்டுகள் பொழியப்பட்டன. …
-
- 0 replies
- 611 views
-
-
மகரந்த வெளி – தமிழ் சிறுகதை உலகு தமிழகத்திற்கு வெளியே- சுனில் கிருஷ்ணன் [கோ சாரங்கபாணி] [ஈரோட்டில் 10,11-8-2019ல் நிகழ்ந்த சிறுகதை அரங்கில் பேசப்பட்ட கதைகள் பற்றிய கட்டுரை] தமிழக வரலாற்றில் புலம்பெயர்வு தொல்நெடுங்காலமாக நிகழ்ந்து வருகிறது. வணிகத்தின் பொருட்டு தென்கிழக்கு ஆசியத் தீவுகளுக்கு பயணித்ததாக இருக்கலாம். அல்லது தேசாந்திரியாக நிலமெங்கும் அலைந்து திரிந்ததாகவும் இருக்கலாம் அல்லது போருக்காக மண் நீங்கியதாகவும் இருக்கலாம். செல்லும் இடங்களில் தங்கள் பூர்வீக வாழ்வின் எச்சங்களை எப்போதும் விட்டு வந்தார்கள். பண்டிகைகளாக, சிற்பங்களாக, ஏதோ ஒரு சடங்காக பண்பாட்டு நினைவு பேணப்பட்டு வந்தது. மிகப்பெரிய அளவிலான புலம் பெயர்வு என்பது காலனிய காலகட்டத்தில் நிகழ…
-
- 0 replies
- 794 views
-
-
நெருங்கின பொருள் : வெற்றிராஜா ‘வேண்டுவன’ என தலைப்பிட்டு, பாரதியின் கையெழுத்தில், ‘மனதில் உறுதி வேண்டும்’ என்று துவங்கும் பாடல், கைபேசியில் ஒரு செய்தியாக வந்து இருளில் ஒளிர்ந்தது. மகாகவியின் கையெழுத்தும், சொற்களை பிரித்து பிரித்து அவர் எழுதியிருந்த விதமும் வசீகரிக்க, வரிகளை உச்சரித்து வாசிக்கையில் அது ஒரு கானமாகவே மனதுள் ரீங்கரித்தது. கவிதைக்குள் சறுக்கி சுழன்று ஊஞ்சலாடிய மனம், ”நெருங்கின பொருள்” என்ற வாக்கியத்தில் மீண்டும் மீண்டும் சென்றமர்ந்தது. ”நெருங்கின பொருள் கைப் பட வேண்டும்”. இந்த வாக்கியம் ஒரு ஆப்த வாக்கியமோ? என்ன சொல்ல வருகிறார் பாரதி? பொம்மையை விரும்பும் குழந்தையாய், பணத்தை விழைகின்ற வியாபாரியாய், உன்னதத்தை தேடும் கலைஞர்களாய், நாம் விரும்பும் பொருள் ஒன்…
-
- 0 replies
- 872 views
-