Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலக்கியமும் இசையும்

இலக்கிய கட்டுரைகள் | நேர்காணல்கள் | கர்நாடக இசை | நவீன இசை

பதிவாளர் கவனத்திற்கு!

இலக்கியமும் இசையும் பகுதியில் இலக்கிய கட்டுரைகள், நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை சம்பந்தமான தரமானதும் அவசியமானதுமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான இலக்கியக் கட்டுரைகள், படைப்பாளிகளின் நேர்காணல்கள், கர்நாடக இசை, நவீன இசை பற்றிய தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அதே கம்பீரம், அதே ஆளுமை... சாகாவரம் பெற்ற குரல் உங்களுக்கு SPB ஸார் . We miss you!!! 🙏

  2. இலக்கிய வாசகனின் பயிற்சி ஜெயமோகன் August 20, 2020 அன்புள்ள ஜெ, முதலில் ஓநாய் குலச்சின்னம் வாசித்தேன் அதையடுத்தது உங்களின் இலக்கிய வாசிப்பு பரிந்துரைகளை எடுத்துவைத்து கிண்டிலில் கிடைப்பதை ஒவ்வொன்றாக வாசித்து வருகிறேன். “ஓநாய் குலச்சின்னம்” சீனாவின் மங்கோலிய பகுதியில் மேய்ச்சல் நிலச் சமூகம் பரிணாம வளர்ச்சியின் இயற்கை சமக்குலைவுகளும் , மனிதனே பிரதானம் என்ற மாவோவின் சிந்தனையால் ஏற்படும் உள்விளைவுகளும் சொல்லப்பட்டுள்ளது. பொய்த்தேவு கருப்பன் முதலிக்கும் வள்ளியம்மைக்கும் மகனாக மேட்டுத்தெருவில் பிறந்த சோமு, சோமசுந்தர முதலியார் மளிகை மெர்ச்செண்டு என்று வளர்ந்து, பின் சோமுப் பண்டாரமாக, யாருமில்லாத அனாதையாக இறப்பது வரையான கதை. அடுத்தாதாக ஒரு மாற…

  3. எழுத்தாளர் இளங்கோவின் மெக்சிகோ நாவல் வாசிப்பு அனுபவம். காதலும் நம்பிக்கையும் நிறைய வாழ்வை நேசித்த அவனின் அவளின் கதை. வாசித்து முடித்த பிறகும் மனசுக்குள் துயர் நிறைய மெக்சிகோ அலைகிறது.

    • 0 replies
    • 558 views
  4. மேடைவதைகள், சில நெறிகள். ஜெயமோகன் February 19, 2022 (Peter Saul ) இலக்கிய கூட்டங்கள் பற்றிய ஒரு செய்தியை அண்மையில் வாசித்தேன். மறைந்த குமுதம் நிறுவனர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை பற்றி அமுதசுரபி ஆசிரியரும் எழுத்தாளர் சங்கத்தலைவருமாக இருந்த விக்ரமன் ( வேம்பு) ஒரு கட்டுரையில் குறிப்பிடும்போது அவர் தமிழின் தலைசிறந்த பேச்சாளர்களில் ஒருவர் என்றார். பிறரும் அதை பதிவு செய்திருக்கிறார்கள். கல்கி மறைந்தபோது எஸ்.ஏ.பி. ஆற்றிய உரை தமிழின் தலைசிறந்த உரைகளில் ஒன்று என்று அவருடைய மகன் ராஜேந்திரன் தன் குறிப்பொன்றில் பதிவு செய்திருக்கிறார். விவேகானந்தர், பகவத் கீதை இரண்டிலும் பெரும் ஈடுபாடு கொண்டவராகிய எஸ்.ஏ.பி. விவேகானந்தர் நூற்றாண்டின்போது தமிழகத்தின் பல ஊர்களுக்குச் சென்…

  5. இது இசையைப்பற்றி தெரியாதவர்களுக்கு கொஞ்சம் யோசிக்க செய்யலாம். ஆனால் இசை புரிந்தவர்களுக்கு ரொம்பவும் பிரமிப்பாக இருக்கலாம். குறைந்த பட்சம் 25 ஆவது நிமிடத்திலிருந்து பாருங்கள். நன்றி.

  6. சோழ மன்னனின் பொறாமையும் ஆவேசமும்.. வடக்கில் இருந்த ராஜாவின் நிலை என்ன? https://www.facebook.com/100043983976036/videos/968465944187593?__so__=watchlist&__rv__=video_home_www_playlist_video_list முத்தமிழ்னு பேசுவாங்க.. ஆனால் யாருக்கும் இது தெரியாது! - பாண்டியக்கண்ணன் https://www.facebook.com/FullyNewsy/videos/முத்தமிழ்னு-பேசுவாங்க-ஆனால்-யாருக்கும்-இது-தெரியாது-பாண்டியக்கண்ணன்/721051806580297/

  7. தனி தேசமே தமிழருக்கு ஒரே வழி.! மறைந்த குமரிக்கண்டத்தின் எச்சமேஇலங்காபுரி,ஈழவர் தம் பெருமைதனை உலகிற்கு பறைசாற்றும் நெடிய பாரம்பரியத்தைக் கொண்ட தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டுப் பெருமையை உலகிற்கு எடுத்துரைத்த இராவண வம்சத்தவரின் சிவபூமி.இது வால்மீகி இராமயணத்தில் அறியலாம். இதனை கம்பர், ஒட்டக்கூத்தர் போன்ற வித்துவான்களே ஆதரித்துள்ளனர். இலங்கையின் வரலாறு கிமு ஆறாம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றதாகவும் கலிங்க தேசத்திலிருந்து துரத்திவிடப்பட்ட விஜயனும் அவனது 700 தோழர்களும் வந்து இறங்கியதுடன் ஆரம்பமாகின்றது என்கின்றனர் ஆய்வாளர்கள். எனினும் இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கர், நாகர் ஆட்சி வழித்தோன்றலே என்று மகாவம்சம் கூறுகின்றது. பல்வேறு அரசுகள் ஆட்சி பீடம் ஏறியது, பொலன…

  8. தமிழ் சமூகத்தால் இளையராஜா பெற்றதென்ன? தந்ததென்ன? -சாவித்திரி கண்ணன் மேல்தட்டு வர்க்கத்தின் நலனுக்கான ஐ.ஐ.டியில் இசைப் பயிற்சிகள் தரவுள்ளாராம் இளையராஜா! இளையராஜா என்ற இசைஞானி உருவானது எப்படி? அவரது வளர்ச்சியின் முழுமையான பின்னணி என்ன? இன்றைக்கு அவரைப் பயன்படுத்திக் கொள்ளத் துடிப்பவர்கள் யார்? என்ன நடந்து கொண்டிருக்கிறது..? ‘மேஸ்ட்ரோ இளையராஜா இசை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்’ அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், சென்னை ஐஐடி மற்றும் இளையராஜா மியூசிக் மற்றும் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இடையே கையெழுத்தாகியுள்ளது. மிகப் பிரம்மாண்டமாக கட்டி எழுப்பப்படவுள்ள இந்த சிறப்பு மையம், ஒரு ஆண்டில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் …

    • 2 replies
    • 525 views
  9. இமையம் எழுதிய செல்லாத பணம் என்ற நாவலுக்கு இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாவலை க்ரியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் 1964ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதியன்று பிறந்தார் இவர். பெற்றோர் சூட்டிய பெயர் அண்ணாமலை. தற்போது அரசுப் பள்ளிக்கூட ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். 'கோவேறு கழுதைகள்' என்ற நாவலின் மூலம் தமிழ் எழுத்துலகில் பரவலாக அறியப்பட்ட இமையம், 'கோவேறு கழுதைகள்' , 'ஆறுமுகம்', 'எங் கதெ', 'செடல்', 'செல்லாத பணம்' ஆகிய நாவல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு 'மண் பாரம்', 'கொலைச்சேவல்', 'சாவு சோறு', 'வீடியோ மாரியம்மன்', 'நன்மாறன் கோட்டைக் கதை' ஆகிய தொகுப்புகளாக வெளியாகியிருக்கின்றன. …

  10. அ.முத்துலிங்கமும் ஈழப்போரும் July 12, 2021 அன்புள்ள ஜெ, சமீபத்தில் அ.முத்துலிங்கம் அவர்களின் சிறுகதைகள், கட்டுரைகள் தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன். ஈழ எழுத்தாளர்களில் அவருடைய நடை வித்தியாசமானது. பல நாடுகளில் வேலை நிமித்தம் அவர் வசித்ததால் அந்த நாடுகளின் மண் சார்ந்தும் எழுதியிருக்கிறார். ஆனால் என் நண்பர்களில் சிலர் அவர் மீது ஒரு விமர்சனம் வைக்கின்றனர். ஈழப் பிரச்சினைகளில் அவர் மேம்போக்காக எழுதியிருக்கிறார் என்றும் தீவிர ஈழ எழுத்தாளர்களான ஷோபாசக்தி, வாசு முருகவேள், தமிழ்நதி போன்றவர்களை போல் போர் பற்றியும் ஈழ பிரச்சினை குறித்தும் தீவிரமாக எழுதவில்லை என்கின்றனர். என் கேள்வி ஒரு எழுத்தாளன் தன் மண் சார்ந்த பிரச்சினைகளை கட்டாயம் எழுதியே தீர வேண்டுமா?…

    • 1 reply
    • 491 views
  11. தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் புகழ்வணக்க நினைவேந்தல் (நவ.05 – சென்னை தி.நகர்)

  12. 2000க்கு பின் தமிழ் இலக்கிய உலகம் கே.ஜே.அசோக்குமார் ஆகஸ்ட் 13, 2023 1 எழுபதுகளின் தமிழ் சினிமா உலகம் பல புதிய மாற்றங்களைக் கண்டது. புதிய கதைகள், புதிய கூறல் முறைகள், இசையில் இருந்த புதிய பாய்ச்சல் என்று அன்று வந்த திரைப்படங்கள் புதியனவாக இருந்தன. அவற்றுள் ஒரேவகைக்குள் அடக்க முடியாத காட்சி ஊடகத்தை காணமுடியும். கருப்பு வெள்ளையிலிருந்து வண்ணம் என்று வண்ண மாற்றங்கள் நிகழ்ந்தன. பலவகை இசை கோலங்கள் கொண்ட இசையமைப்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது இந்த காலகட்டத்தில்தான். இதே மாதிரியான மாற்றத்தை 2000க்குபின் தமிழில் இலக்கிய உலகில் நிகழ்ந்திருக்கிறது. 2000க்கு பின்னான தமிழ் இலக்கிய விரிவிற்கு இணையத்தின் பெருக்கமும், அச்சு ஊடகத்தின் எளிமையாக்கமும…

  13. போரும் வாழ்வும் – அகரமுதல்வன் கதைகளை முன்வைத்து: ஆர். காளிப்பிரஸாத் அகரமுதல்வனின் காதல் விவரிப்புகள் சுவாரசியமானவை. ஒரு காலத்திற்குப் பிறகு தமிழில் காதல் கதைகள் எழுதுவது நின்றே விட்டது. காதல் அனுபவங்களை கவிஞர்கள் தங்கள் மிகைக் கூற்றுகளுக்கென எடுத்துக்கொள்ள இயல்பான காதல் வர்ணனைகள் உரைநடையில் குறைந்து போயின. காதலும் வீரமும் தமிழரின் பண்பு என்று பள்ளிக்கூடத்தில் படித்திருந்தாலும் இலக்கியத்தில் அவை பாரதிதாசன் காலத்தோடு நின்றுவிட்டன. காதல் வீரம் தியாகம் துரோகம் ஏதும் சமகால இலக்கியங்களில் பெரிதும் இடம்பெறுவதில்லை. வணிக இலக்கியம் அதற்கான ஊடகமாக ஆகியது. அடுத்து திரைப்படங்களிலும் அவை மேலும் நுண்மையாக்கப்பட்டன. தீர அலசப்பட்டன. அவ்வாறே ஒருகட்டத்தில் கேலியாகவும் ஆயின. விடுதலைப் ப…

  14. முப்பட்டைக்கண்ணாடியினூடே jeyamohanDecember 17, 2024 (1) அண்மையில் எகிப்து சென்றிருந்தபோது அங்கிருக்கும் பிரம்மாண்டமான ஆலயங்களினூடாக நடக்கும் நேரத்தில் எண்ணிக்கொண்டேன். அவை வெறும் ஆலயங்கள் மட்டும் அல்ல. மாபெரும் நூல்களும் கூட. காவியங்கள் என்றே சொல்லத்தக்க அளவுக்கு பிரம்மாண்டமானவை. அவற்றின் சித்திர எழுத்துக்கள் முழுமையாகவே படிக்கப்பட்டுவிட்ட நிலையில், இன்று மானுடத்தின் தொல்வரலாறு குறித்து நமக்கிருக்கும் விரிந்த சித்திரமே அங்கிருந்து உருவாகி வந்ததுதான். ‘அழியாத சொல்’ எனும் சொற்சேர்க்கை எனக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. அவை கல்லில் பொறிக்கப்பட்டமையால் அழிவற்றதாகின்றனவா? இல்லை. எந்த நூலிலும், எங்கும் எழுதப்படாததனாலேயே கூட இந்திய வேதங்கள் அழிவின்மையை அடைந்து இன்…

  15. ஐசாக் அசிமோவின் புனைவுலகங்கள் January 2, 2020ராம்சந்தர் 10 நிமிட வாசிப்பு இன்று ஐசாக் அசிமோவின் நூறாவது பிறந்த நாள். என் மனதுக்கு நெருக்கமான அசிமோவ் சிறுகதைகளின் மூலம் அவர் எழுத்தில் வியக்கவைக்கும் சில தன்மைகளைப் பகிரும் முயற்சியே இக்கட்டுரை. அசிமோவின் கதைகளைப் படிக்கும்போது மனம் உயரப் பறந்து, பல திசைகளில் சிந்தித்தபடி எங்கெங்கோ உலாவிக்கொண்டிருக்கும். அந்த உயரமான இடத்திலிருந்து மனித இனத்தை, நாம் கடந்து வந்த பாதையை, வரலாற்றை, இன்னும் பல மில்லியன் ஆண்டுகளில் செல்லக்கூடிய திசைகளைப் பார்க்கத் தூண்டும். அதிகம் மண்டையைக் காய விடாமல் காகிதம் போல மெல்லியதான இந்த நிலைக்கு மனதைத் தூக்கிச்செல்வதே அறிவியல் புனைவின் நோக்கமோ எனத் தோன்றவைக்கும். இப்படியெல்லாம்…

  16. புலம்பெயர் தமிழ் இலக்கியத்துக்கு வயது ஏறக்குறைய 40 ஆண்டுகளே. மிஞ்சிப் போனால் இன்னும் ஒரு 50, 60 ஆண்டுகள்தான் இப்போதைய தொடர்ச்சியில் அதனால் ஒரு தீவிர அலையாக இயங்க முடியும். அதற்குப் பின்பு அது மெலிந்து ஒடுங்கி விடக் கூடிய சூழலே உண்டு. பிறகு அது வெவ்வேறு மொழிகளில் வேறு விதமானதாகவே இயங்கும். ஆகவே மொத்தமாகப் பார்த்தால் தமிழில் அதனுடைய ஆயுட்காலம் 100 ஆண்டுகளுக்குள்தான். இதற்குள்ளேயே அதனுடைய சாத்தியங்கள், சாதனைகள் எல்லாம். இந்த அவதானிப்பை வேறு யாரும் தங்களுடைய அவதானங்களின் வழியாகவும் வேறு தர்க்கத்தினாலும் மறுத்துரைக்கலாம். ‘இதென்ன வகையான சோதிடம் – ஆருடம்? யாரிந்தத் தீர்க்கதரிசி?’ என்று அவர்கள் நகைக்கவும் கூடும். ஆனால், ‘புலம்பெயர் தமிழ் இலக்கியம்’ உருவாகி வந்த வழியை நோக்க…

  17. ஒரு அசல் வாசகனின் அடையாளமும் பகுப்பாய்வு எனும் சீரழிவும் – ஆர். அபிலாஷ் June 3, 2020 - ஆர்.அபிலாஷ் · இலக்கியம் அண்மையில் வாசிப்பு குறித்து நான் எழுதிய கட்டுரைக்கு போகன் சங்கர் செய்த ஒரு எதிர்வினையில் தொல்படிமங்களுக்கு இலக்கியத்தில் உள்ள முக்கியமான இடத்தைப் பற்றி கீழ்வருமாறு பேசுகிறார். நான் அவருடன் ஓரளவுக்கு உடன்படுகிறேன், ஆனால் நிறையவே முரண்படுகிறேன் என்பதால் அவரது மேற்கோளையே இந்த கட்டுரையின் துவக்கமாகக் கொள்கிறேன்: “நல்ல வாசிப்பு என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன்.அன்னோஜனின் கதைக்கு சர்வோத்தமன் சடகோபன் அன்னோஜன் தனது கதையை ஒரு தொன்மத்துடன் இணைத்து முடிக்கவில்லை என்று கவனித்திருந்தார்.ஜெயமோகனை ஆதர்சமாகக் கொண்டவர் அன்னோஜன் எனும்போது இது முக்கியமான …

  18. தமிழ்ச்சூழலில் எழுதுதல்.. இளங்கோ-டிசே இன்று புதிதாக எழுத வரும் பலருக்கு, தமது படைப்புக்கள் பரவலாக வாசிக்கப்படவில்லை என்கின்ற கவலையும் சலிப்பும் இருக்கின்றது. ஒருவகையில் சமூக ஊடகங்கள் வந்ததன் பிறகு, எழுதப்படும் எல்லாமே உடனே கவனிக்கப்படவேண்டும் என்கின்ற பதற்றம் வருவதும் இயல்பானது. ஆனால் எழுத்துக்கு நேரடியான கருத்தைச் சொல்லும் வாசகர்களை விட, வாசித்துவிட்டு அதைப் பகிராமல் இருக்கும் மெளனமான வாசகர்களே அதிகம். சில நாட்களுக்கு முன் ஒரு நண்பர் கவலையுடன் எவரும் தனது படைப்பைக் கவனிக்கவில்லை எனக் கூறினார். எந்தப் படைப்பிற்கும், அது எழுதப்படுவதற்கு எடுக்கும் காலத்தைப்போல், வாசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் ஒரு கால அவகாசம் தேவைப்படும். இணையத்தில் தமிழைப் படித்து அ…

  19. ஈழத்தின் ஆசிரிய/ வெளியீட்டாளர்களும் மின்நூல்களைத் தேடும் முகநூல் வாசகர்களும் May 6, 2021 — என்.செல்வராஜா, நூலகவியலாளர் ,லண்டன் — லண்டனிலிருந்து 2015இல் சேனன் அவர்கள் எழுதிய நாவலின் பெயர் ‘லண்டன்காரர்’. இந்நாவல் லண்டனில் வாழும் விளிம்பு மனிதரைப் பற்றிய கதை. இக்கதை 2011 ஓகஸ்ட் 6 முதல் 11 வரை டொட்டன்ஹாமில் தொடங்கிவைக்கப்பட்ட லண்டன் கலவரத்தின் பின்னணியில் எழுதப்பட்ட முதலாவது தமிழ்க் கதை என்ற சிறப்பினையும் பெறுகின்றது. தனிமனிதர்களால் உருவாக்கப்படும் கலவரங்களின் பின்னால் இருக்கும் அதிகாரத்தின் கட்டமைவைத் தான் நம்பும் ஒரு சித்தாந்தப் பின்னணியுடன் சேனன் அணுகியுள்ளார். இக்கட்டுரை சேனனின் நூல் பற்றியதல்ல. அதில் அவர் விபரிக்கும் ‘லண்டன் கலவரம்’ பற்றிய நினை…

  20. எளிமையான படைப்புகள் ஜெயமோகன் அன்புள்ள ஜெ நான் தொடர்ச்சியாக இலக்கியங்களை வாசித்துவருபவன் என் வாசிப்புக்கு எளிமையான நடையும்,நேரான அமைப்பும் கொண்ட படைப்புக்களையே விரும்ப முடிகிறது. பெரியநாவல்கள், சிக்கலான நாவல்களை வாசிப்பது சலிப்பை அளிக்கிறது. அவை அறிவார்ந்தவை என்றும் எளிமையான சின்ன படைப்புக்களே கலைப்படைப்புக்களுக்கு உரிய ஓர்மை உள்ளவை என்றும் ஓர் எண்ணம் உருவாகியது. இதை நண்பர்களிடம் சொல்லியபோது நீங்கள் இதை மறுப்பீர்கள் என்று சொன்னார்கள். ஆகவே நீங்கள் என்ன சொல்வீர்கள் என அறியும் ஆர்வம் ஏற்பட்டது.ஆகவே இதை எழுதுகிறேன். உங்கள் பதிலை எதிர்பர்க்கிறேன் ஆர்.மகாதேவன் அன்புள்ள மகாதேவன் இலக்கியவாசகர்கள் கூட சில தற்பாவனைகளுக்குள் சிக்கிக் கொள்வார்கள். அ…

  21. வட்டார மொழிகளின் அரசியலை எதிர்கொள்ளுதல் by vithaiAugust 1, 2021 பன்னிரண்டு வயது வரை யாழ்ப்பாணத் தமிழைப் பேசக்கூடிய கிராமச்சூழலில் வளர்ந்தோம். ‘கெற்றப்போல்கள்’ எனப்படும் கவண்களால் குருவிகளை அடிப்பது விளையாட்டு, பொழுதுபோக்கு. ஊரில் வாய்மொழியாக வந்து சேர்ந்த நம்பிக்கை ஒன்றிருந்தது. ‘தோட்டக்காட்டான் குருவியடிச்சு ரத்தத்தை கெற்றப்போலில் தடவினால் நல்லா அடிக்கும்’. அந்தக் குருவி கத்தும் ஓசை ஒருவகை இரட்டைச் சந்தத்தைக் கொண்டிருக்கும் நாங்கள் அதன் சத்தத்தைப் பின்பற்றி அவ் இரட்டைச் சத்தத்தை ’தோட்டக்காட்டான் – வாடா பாப்பம்’ என்று கூவிக்கொண்டே குருவியைத்தேடி அடிப்போம். இது வட்டாரப் பேச்சு மொழியின் மொழியிலும் மன அமைப்பிலும் பிள்ளைகளுக்கு சமூகம் வழங்கியிருக்க கூடிய மொழி…

  22. இரு வகையான வழக்குகள் written by ஆர்.அபிலாஷ்January 30, 2022 தமிழில் சமூக வலைதளங்கள் வேர்கொண்டு கிளைவிட்டு தழைத்தபோது தோன்றிய ஒரு இயல்பு பேச்சுவழக்கில் நிலைத்தகவல்களை எழுதுவது. பேஸ்புக்கில் குறிப்பாக, ஆங்கிலம், கொச்சையான சொற்கள் கலந்து நேரடியாக ஒரு விசயத்தைச் சொல்லத் தலைப்படும் எழுத்துக்கு இங்கு ஒரு மதிப்பு ஏற்பட்டது. அதே நேரம் வட்டார வழக்குக்குப் பெரிய மதிப்பு இருந்ததில்லை. நீங்கள் எந்தப் பதிவர்களைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து இது மாறும் என்றாலும் பேச்சுவழக்கு என்னதான் எதார்த்தமாகவும் பாசாங்கற்றதாகவும் இருந்தாலும், பொதுவழக்கே பொதுவாகக் கோலோச்சுகிறது. இந்தப் பொதுவழக்கைப் பயன்படுத்துகிறவர்கள் இடையிலும் இலக்கிய வழக்கு மீது ஒரு கிண்டல், மறுப்பு, அது போ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.