கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
வளையற் குவியல் ஒன்றைக்காட்டி வல்லமை கேட்டதோர் கவிதை. என் நெஞ்சிலுதித்ததை அங்கு பகிர்ந்தேன். இது கவிதையல்ல ஓர் ஏழையின் குமுறல். அது கீழே. ஓர் ஏழையின் குமுறல் கைநிறையப் போடக் கலர்கலராக் குவிச்சிருக்கு பைநிறையப் பணமிருந்தாப் பார்த்துப் பார்த்து வாங்கிக்கலாம். ஏழைக நம்பளுக்கு எதுக்கிந்த வளையலெல்லாம் வாழ வழியில்லையாம் வளையலொரு கேடா புதுப் புள்ளத்தாச்சிக்குப் போடுவாங்க வளைகாப்பு எட்டு மாதப் புள்ளத்தாச்சி எம் பொழைப்பு கல்லுடைப்பு கல்லுடைக்கும் கைக்கு காப்பு சரிவருமா? நாட்கூலி வாங்கி நானூத்தும் கஞ்சிலதான் ஆத்தா மனம் மகிழும் அவவயிறும் குள…
-
- 6 replies
- 1.2k views
-
-
வெளி நாட்டு சரக்கு தம்பி எங்க விருப்பமான தண்ணி தம்பி மில்லி கொஞ்சம் உள்ள போனால் விட்டமீனு தானே தம்பி வீரம் எல்லாம் ஏறும் தம்பி வீட்டிலையும் பேச்சு தம்பி வொட்கா விஸ்கி விறண்டி என்று இந்த வில்லங்கத்தை போட்டு போனா பாட்டு எல்லாம் தானா வரும் பல கூத்து எல்லாம் கூட வரும் அடிச்சுப் போட்டு இருந்தா தம்பி ஆயிரம் தத்துவத்தோட அடுக்கு மொழியில் கவிதை வரும் அரசியலும் பேச வரும் நேற்று வரை நல்ல பிள்ளை இன்று போத்தலோட போச்சுதெல்லாம் பேச்சும் மாறிப் போச்சு தம்பி பார்ட்டி ஓட வாழ்க்கை தம்பி பிறக்கும் போது இருந்த குணம் இப்போ இல்லையே புதுசா எல்லாம் தலையில் இப்போ மாறிப் போச்சுது வெளி நாட்டு வாழ்கை எல்லோ நாம வெள்ளைக்க…
-
- 3 replies
- 1.2k views
-
-
எந்தக்குழந்தையும் நல்லகுழந்தைதான்..! **************************** பஸ்ஸில் ஏறிய தாயிடம் பிள்ளைக்கு எத்தின வயதென கேட்டார் நடத்துனர். தாய் சொன்னாள் நான்கென்று பிள்ளை சொன்னான் ஆறென்று மெதுவாக.. அதட்டினாள் பிள்ளையை நாலென்று சொல்லு. சினிமாவுக்கு கூட்டிச்சென்றார் தந்தை.. எட்டு வயதுக்கு மேல் டிக்கட் எடுக்க வேண்டுமென்றார்கள். இவனுக்கு ஏழு வயதென்றார் இல்லையப்பா.. ஒன்பதென்றான் பிள்ளை அதற்கு அதட்டி ஏதேதோ சொன்னார் அப்பா இப்போது மதுபான கடையில் பிள்ளை நிற்க்கிறான் இருபது வயதுக்கு மேல்தான் வாங்கலாம் என்றார் கடைக்காரர் இருபத்தி இரண்டென்…
-
- 14 replies
- 1.2k views
-
-
தணியாத தாகம் தன்னந் தனிமையிலே தள்ளாடும் வயதினிலே ஜன்னல் ஒர வான் வெளியை வெறித்துப்பபார்க்கிறேன். வாகன ஒடடம் ஜன நடமாட்டம் விரைந்து செல்கிறது எதையோ தேடி ஓடுகிறார்கள்.அன்றாடம் இது ஆடி ஓடி ஓய்ந்து போன கிராமத்துக்கட்டை காலனின் காகித வரவுக்காய் காத்திருக்கிறேன் ஆனாலும் ஒரு தாகம் என் தாயகம் நோக்கி இருப்பினும் முன்பு ஒரு தடவை சென்று தான் பார்த்தேன். என் வீடு தரைமடடமாகி புல் பூண்டு முட் செடிகள் மூத்தவன் ஒரு தடவை ஆள் வைத்து துப்புரவாக்கியவன் இருப்பினும் பஞ்ச பூதங்கள் தீ நிலம் நீர் ஆகாயம் காற்று பொய்த்துப்போகவில்லை மீண்டும் அவை முளைத்திருந்தன நான் நண்பனுடன் குளித்த கிணறு ஓடிவிளையாடிய மைதானம் சாமி கும்பிடும் கோவில் எல்லாம் தூர…
-
- 0 replies
- 1.2k views
- 1 follower
-
-
கனவில் கருங்கூந்தல் கலைய கண்ணிமைகள் காவியம் புனைய கைவிரல்கள் கவி பாட வெண்கழுத்து வெட்கத்தில் சிவக்க செவ்விதழ்கள் சுவை சொட்ட வியர்வையில் துவண்ட உன் எழிலுக்கு துகில் கலைக்க வந்த என் கைகள் காற்றில் கலந்தது! விலகும் உன் பெண்ணியம் கண்டு.
-
- 0 replies
- 1.2k views
-
-
https://www.facebook.com/photo/?fbid=10161088302041950&set=a.10151018148611950
-
- 2 replies
- 1.2k views
-
-
தாகமெடுத்துத் தவிக்கும் தமிழ்நாடே சற்றுப் பொறு விரிகுடா வங்கத்தை விவாகரத்துப் பண்ணிவிட்டு காவிரித் தோழியைக் கட்டித்தழுவக் கங்கை வருகிறாள். எண்ணி ஓர் ஐம்பது ஆண்டுகள்தான். இப்போதே இமயத்திலிருந்து வரும் பனிக்கட்டிகள் எண்ணக் கனவுகளில், எங்கள் உச்சிகளைக் குளிர்விக்கின்றன. எம் கனவில் வங்கத்தைப் பிரியும் கங்கை வளம்தனைக் கொழித்து நிற்க சிங்க மராட்டியத் தலைமை வந்து ‘‘சிஸ்டம் சரியில்லை தீர்த்து வைக்கிறேன் வையத் தலைமை கொள்ள வந்து நிற்கிறேன்‘‘ என்று கவிதை பாடுகிறது. தந்தங்களைப் பிடுங்கிப் பரிசளிக்க சட்டமில்லை! அதனாலென்ன? காவிரி வெற்றிலையைப் பரிசளிப்போம். எப்படியோ மாறிச் சுழித்து பாரதியே நீ கண்ட கனவு நனவாகப் போகிற…
-
- 0 replies
- 1.2k views
-
-
விடிகின்ற விடியலிலே விரைவு வேண்டும் நமது வீதியிலே சுதந்திரமாய் தலை நிமிர்த்தித் திரிய வேண்டும் பறி போகின்ற நிலத்தினையும் காக்க வேண்டும் இப் பாரினிலே தமிழன் புகழ் ஓங்க வேண்டும் இழுக்கல்ல போராட்டம் தெளிதல் வேண்டும் இகல்வெல்ல ஒன்றிணைந்தே முயல வேண்டும் விழுகின்ற தலைமுறையும் வாழ வேண்டும் விடியலிலே புதுதேசம் மலர வேண்டும் சொந்தத்தில் அறிவுடைமை வளர வேண்டும் சோம்பலுற்ற அடிமை நிலை மாற்ற வேண்டும் சொந்தங்கள் தமிழ்மக்கள் எனும் எண்ணம் வேண்டும் சோர்வின்றி இனங்காக்க துடிக்க வேண்டும் வந்தேறிக் கூட்டங்கள் ஓட வேண்டும் வக்கற்ற ஆட்சியினை மாற்ற வேண்டும் குத்தகங்கள் செய்வோரை களைதல் வேண்டும் கூத்தாடிக் கூட்டங்கள் மாய வேண்டும். அறிவிழந்த மனிதரென்றே …
-
- 8 replies
- 1.2k views
-
-
நிகழ்வுகளானது சுழலும் போது நினைவுகளானது நீளும் காட்சிகளானது அலை மோதும் அவை உளமதில் ஆட்சி புரியும்! உணர்ந்ததும் உணராததுமாய் உள்ளங்கள் நடிப்பதும் உரைத்திட மறுப்பதும் உண்மைக்குப் புறம்பாகும்! தன்னைத் தானே வென்றவன் தனக்குத் தானே நண்பன் ஆவான் தன்னைத் தானே வெல்லாதவன் தனக்குத் தானே பகைவன் ஆவான்! அறிந்தும் புரிந்தே அநீதிகள் புரிபவரும் துரோகங்கள் புரிபவரும் பாரிற்கு பாரமானவரே! இறந்தவர் பிறப்பதும் பிறந்தவர் இறப்பதும் வாழ்வியலின் நியதியும் உண்மையியலின் நியதியும் ஆகுமே! காலமதின் குரலாய் வையமதில் கேட்டிடும் துன்பமதன் ஓலங்கள் வாழ்வியலின் துயரங்கள்! வஞ்சமதை புதைத்து விட்டு விரோதமதை விரட்டி விட்டு மனிதமதை வளர்த்து விட்டால் மானிடமது செ…
-
- 8 replies
- 1.2k views
-
-
நம்பி வாங்கிய நாய்..! ******************* பஞ்சாயத்து தலைவர் பதிவிலிருந்து.. சாந்தமில்லாத சப்பை முகம் கொண்ட வெளிநாட்டு நாயொன்றை விரும்பி வாங்கினேன். கடனாக.. அயல் வீட்டுத் தொந்தரவை அடக்கலாமென்று.. வாசலில் காவலுக்கு வைத்தால் வரும் எதிரி அனைத்தையும் வரவிடாமல் தடுக்குமென்று.. ஆனால் நாயிப்போ எனது நடு வீட்டுக்குள் கிடந்து.. நான் வளர்க்கும் பிராணிகளை நடு நடுங்க வைக்கிறது. நாளைக்கு என் வீட்டில் நான் இல்லை என்றாலும் நான் பட்ட கடன் சொல்லி நாய் மட்டும் …
-
- 8 replies
- 1.2k views
-
-
காதல்.......ஆனந்த கண்ணீரில்...ஆரம்பித்து.......ஆறுதல் கண்ணீரில்.....முடிகிறது..........!!!முகில்களுக்கிடையே....காதல் விரிசல்.......வானத்தின் கண்ணீர்......மழை..........................!!!நான்வெங்காயம் இல்லை....என்றாலும் உன்னை.....பார்த்தவுடன் கண்ணீர்....வருகிறது................!!!&கவிப்புயல் இனியவன்இறந்தும் துடிக்கும் இதயம்காதல் கஸல் (பதிவு 01)
-
- 0 replies
- 1.2k views
-
-
இறுதியில் கிடைத்த உனதன்பு இளைப்பாறிக் கொண்டு இருக்கிறது இதயத்தில்.... சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 1.2k views
-
-
எச்சரிக்கை! *************** கடிக்க வந்த நாய்க்கு கல்லெறிந்தேன் அது ஓடித் தப்பியது. தேன் கூட்டுக்கு கல்லெறிந்தேன் ஒற்றுமையாக துரத்திவந்தது என்னை ஓடவைத்தது. இது போன்ற ஒற்ருமையே தமிழர்க்கும் தேவை ஒன்றுசேர் இல்லையேல் தனித் தனியாய் நின்று அழிந்தே! போவாய். அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
-
- 5 replies
- 1.2k views
-
-
அரசியல் ஆட்சி பிழைத்திடும்வேளையில் அறம் கூற்றாகும் என்றார் ---ஆன்றோர் அறம் கூற்றாகும் என்றார். கூற்றனும் வரவில்லை, கொள்தலும் நிகழலை,அரசியல் பிழைக்கலியோ ? இல்லை, அறனும் கொலையானானோ ? பள்ளிக்குச் செல்லும்பாலகர்,முதியவர் பால் குடி மழலை எல்லாம்,அன்று பால்குடி மழலை எல்லாம் முள்ளிவாய்க்காலில் கொள்ளி வைத்தழித்தானே முழுப்பெரும் சேனையுடன்,பாவி முழுப்பெரும் சேனையுடன். அண்ணனும் தம்பியும் ஆனஅவர் சேனையும் ஆட்சியில் கோலோச்சிறார் இன்றும் ஆட்சியில் கோலோச்சிறார் அனைத்தையும் இழந்திட்ட அப்பாவி மனிதர்கள்அழுதுதான்வடிக்கின்றாரே உறவை நினைத்திங்கு மாய்கின்றாரே அநீதிக்கு ஆட்சியும் நீதிக்குப் பாடையும் ஆண்டவா நீதி எங்கே உந்தன் அருள் ஆட்சி செத்ததிங்கே …
-
- 2 replies
- 1.1k views
-
-
அறம் சிறக்க-நெஞ்சில் மறம் பிறக்க மானத் திறம் இருக்க இரும்புத் தோள்கள் கொண்டு தமிழர் துயர் துடைக்க ஈழ மண் விடுதலையடைய வியர்வை சிந்தி-தங்கள் அயர்வை மறந்து இளமைக் காலக் கனவைத் துறந்து கரிகாலன் படையில் இணைந்து நிலை தளராது-ஈழக் கனவினை மறவாது நெஞ்சில் உரம் இழக்காது நம்மை நம் நாட்டை நலம் பல பேணி நாளும் காத்து-மாற்றானுடன் வெஞ்சமர் புரிந்து-எதிரியை வீழ்த்தி தனித் தமிழீழம் பெற வழிகாட்டியே சந்தனப் பேழைகளில் உறங்கும் மாவீரர்களே!!!! சாகலின் நன்றோ அடிமையாய் வாழ்வது என உணர்ந்து வீறு கொண்டெழுந்து ஆண்டுகொண்டிருக்கும் சிங்கள பேரினவாதத்தின் பிடியினுள் மாண்டு கொண்டிருந்த எம் இனத்தினை மீண்டு கொண்டெழ உரிமை உணர்வினை தூண்டினீர்! உம்முடல் தன்னும் அதனுள் ஓடும் செங்குருதியும் உணர்வும் நரம்பும் எம் …
-
- 2 replies
- 1.1k views
-
-
ஆளுக்கு ஒரு முகமூடிகள் நாளுக்கு ஒரு நாடகங்கள்-பா.உதயன் வெள்ளாடை வேட்டி கட்டி வேதங்கள் பல சொல்லி எல்லோர்க்கும் உதவுவதாய் எல்லாமே தெரிந்தவராய் நல்லாக நடிப்பாரடா சிலர் நல்ல பெயர் வேண்ட அலைவாரடா இவர்கள் பொல்லாத மனிதரடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா நட்பு என்றும் உறவு என்றும் நல்ல பல கதைகள் பேசி கோவில் என்றும் பள்ளி என்றும் கொக்கரித்து திரிவாரடா பின்பு கட்டியதை உடைப்பாரட கண்டபடி கதைப்பாரடா கன வித்தைகளும் செய்வாரடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா ஒற்றுமையை தொலைத்து விட்டு ஆளுக்கு ஆள் கல் எறிந்து பகைப்பாரடா கள்ளம் பல செய்வாரடா கண்ணை மூடிப் பால் குடிக்கும் கள்ளப் பூனை போல் தானடா பின்பு வல்லவர் தான் என்பாரடா வெறும் வாய்ப் புளுகில் வ…
-
- 4 replies
- 1.1k views
-
-
வானத்தில் வண்ணமாக பூக்கள் பூக்குது வாசலை திறந்து வந்து காலை புலருது காலை புலர்ந்ததென்று யார் சொன்னது காற்றினில் கீதம் ஒன்று கனவில் சொன்னது மீட்டிடும் கைகளினால் வீணை பாடுது விடியதோர் காலம் என்று கீதம் கேக்குது ஆலய மணி ஓசை காதில் கேக்குது அன்பே சிவம் என்று சொல்லி கேக்குது ஆனந்த யாழினிலே ராகம் கேக்குது ஆயிரம் மழை துளியாய் வானம் சிந்துது எந்தன் மன அறைக்குள் இருந்து ஒரு ஓசை கேக்குது மௌனமாக கனவு வந்து கவிதை பாடுது. அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். அன்புடன் உதயன்
-
- 8 replies
- 1.1k views
-
-
-
- 3 replies
- 1.1k views
-
-
"கவிதை' என்றால் என்ன ? பாட்டென்பார்! செய்யுளென்பார்! "கவி'யாலே ஆனதுதான் தமிழ்மொழி என்பார்! "கவிதை' என்னும் சொல்லை எடு; "தை'யை ஓரமாய் நீக்கி வை "கவி' மழையில் நீ நனைவாய்; கவிஞன் ஆவாய்! முதல் எழுத்து "க'வை நீக்கிப் பார்த்தால் முளை விட்டுத் துளிர்க்கின்ற "விதை' கிடைக்கும்,அங்கே விதவிதமாய் சொல் விதைகள் குவியல் ஆகும்! "கவி' என்னும் எழுத்திரண்டை நீக்கிப் பார்த்தால் ஓரெழுத்தில் "தை' மாதம் பிறப்பெடுக்கும்! அந்தத் தை பிறந்தால் அனைவருக்கும் புது வழி ஒன்று பிறந்திருக்கும் "வி' என்னும் எழுத்ததனை விரட்டி விட்டால்-நீ விரும்புகின்ற "கதை' ஒன்று விரிந்தெழும்பும்! விரிந்தெழுந்த "கதை'தனைக் கேட்டுக் கொண்டே விரித்…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஊருக்கு போய் வந்த தம்பர்..! (பாகம்2) ***************************** பெரு மூச்சுவிட்ட தம்பர் பின் தொடர்ந்தார்.. வெளிநாடுகளில் ஒருத்தரும் இல்லாத குடும்பங்களும் வேலை,வீட்டுத்தோட்டம் படிப்பென்று பண்போடுதான் சிக்கனமாய் வாழுதுகள் பாருங்கோ இங்கிருந்து சிலர் ஊருலாப்பென்று ஊருக்கு போய் எதோ சந்திர மண்டலத்துக்கு போய் வந்த மாதிரி வெளிநாட்டைப்பற்றி விளாசித்தள்ளுவார்களாம். பாருங்கோ. வந்து நிற்கிற கொஞ்ச நாட்களுக்குள்ள கிடாய் அடிச்சு கோழி அடிச்சு மதுப்போத்தல்ல விழுந்தடிச்சு பக்கத்து வீடுகளுக்கு பகட்டுக் காட்டி காசையெடுத்து வீசி …
-
- 8 replies
- 1.1k views
-
-
மங்கையவளின் மரக்கறிக் கடை..!(காய்கறிக்கடை) ************************* பகுதி-1 முதலில் தக தகவென்ற மேனியை பார்த்ததும் தக்காழியை வாங்கி வைத்தேன். முந்தானையை பார்த்து முனகினேன் முருங்கக்காய் வரத்து குறைவென்றாள். கையை வைதேன் சும்மா சுறண்டாதீர்கள் மென்மையான தோல் உதிரம் வருமென்றாள் எடுத்து பார்த்தேன் பீற்றூட் கிழங்கு. அவளின் விரலை பிடிப்பதுபோல் எண்ணினேன் முளிந்து பார்த்தாள் எனது கையில் இருந்தது வெண்டிக்காய் உடைக் வேண்டாமென உறுமி விட்டு சிரித்தாள். அவளி…
-
- 11 replies
- 1.1k views
-
-
உறவுகள் உறவுகள் இருந்தனர் ஒரு காலம் ஒற்றுமை இருந்தது பலகாலம் கூடியே வாழ்ந்தனர் ஒரு கூட்டில் குலைந்து இப்போ போயினர் சில காலம் அன்புடன் இருந்தனர் ஒரு காலம் அப்பன் அம்மை சொல் படி நடந்தனர் ஆயிரம் சண்டைகள் பிடித்தனர் ஒரு காலம் அடுத்த நாள் மறந்தே சிரித்தனர் இரவின் நிலவில் கதை பேசி கதையில் கனவுகள் கண்டு வந்தோம் இருப்பதை பகிர்ந்து உண்டு வந்தோம் இல்லாது இருந்தும் சிரித்து இருந்தோம் கருப்பையில் விதைத்தது விஷம் இல்லை நாம் உண்டது ஒன்றும் நஞ்சு இல்லை இரத்தத்தில் இருப்பது ஒரு வேர் தான் இது தான் விதி என அறியாயோ வாழ்வுகள் இருப்பது சில காலம் வருவதும் போவதும் ஒரு காலம் உறவுகள் என்பது தொடர் காலம் இதை நீ உணர்வாய்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வாய்மையின் பாதை யாவும் தீயினால் ஆன தன்று நோக்கினில் பிழையை வைத்துப் நோக்கிடும் மூடர் கூட்டம் வாய்மையைக் கேலி பேசி நாளுமே வாதம் செய்வார் தூய்மையாய்க் காணி னாங்கே சீர்மையாய் வாய்மை ஒன்றே! காலமும் கடந்த பின்னே காசினி உன்னை வாழ்த்தும் சீலமே கொண்ட கோவாய்ச் சிறப்புற உன்னைப் பாடும் கோலத்தில் வறுமை கண்டும் கொள்கையில் மாறலாகா ஆல மரத்தின் வேர்கள் ஆகுமே வாய்மை இங்கே! பொய்மையே வென்றிடற் போல்ப் போலியாய்த் தோற்றம் காட்டும் வாய்மையோ தோற்றாற் போல் வாலினைச் சுருட்டி நிற்கும் ஆய்ந்திடின் உண்மை ஆங்கே ஆதவன் கதிராய்த் தோன்றும். ஏய்ப்பவர் வென்றார் அல்லர் என்றுமே நின்றார் அல்லர்! ஆட்பலம் பணப் பலத்தால் ஆட்சியின் அதிகாரத்தால் வனைக…
-
- 8 replies
- 1.1k views
-
-
முதுமையாகிலனோ ——— அப்போ வாய் பொத்தியபடி என் கதை கேட்டவர்களிடம் இப்போ நான் வாய் பொத்தியபடி அவர்கள் கதை கேட்டுக்கொண்டு காலாவதியான பொருள்களைப்போலவே காத்திருக்கிறேன் தூக்கி எறியும் காலம் ஒன்றுக்காக. பா .உதயகுமார் /OSLO
-
- 0 replies
- 1.1k views
-
-
குறளோடு கவிபாடு / "குறள் 1175" "அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் கண்களும் பேசின காதலையும் தந்தன வண்ண உடலின் கவர்ச்சி ஈர்த்தன ஆண்மை கண்டு அவளும் நெருங்கினாள் கண்ட கோலம் காமம் கொடுத்தன!" "பெண்ணின் அழகில் மயங்கி நின்றவனோ எண்ணம் எல்லாம் அவளே என்றவனோ கண்ணீர் தந்து உறவு மறந்து அண்டம் எங்கோ பிரிந்து போனானே கண்ணனை நினைத்து துயிலும் மறந்தேனே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 1.1k views
-