கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
773 topics in this forum
-
நான் உன்னைத் தொலைத்து நீ தேட நீ என்னைத் தொலைத்து நான் தேட இருவரும் தேடினோம் எங்கெங்கோ இதுவரை கிடைக்கவில்லை நாமெங்கோ உணர்வுக்குள் சென்று உயிருக்குள் நனைந்து உறவாடி மகிழ்ந்த நாமெங்கே என்னை அழைத்து அளாவிப் பேசிய ஆருயிர் அன்பே நீயெங்கே உன்னை அணைத்து உள்ளம் நனைத்த உன்னுயிர் அன்பே நானெங்கே நம்மை இணைத்த நல்மனம் எங்கே நன்றி சொல்வோம் தினம் இங்கே அல்லும் பகலும் உன் நினைவு அழுது துடிக்குதே என் உணர்வு சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 637 views
-
-
ஆகாயத்தில் இருந்த நிலவு ஆடிப்பாட வந்ததாம் ஆடிப்பாடி முடித்தப் பின்னே அசந்து போனதாம் வீதியெல்லாம் புகைக்காற்று திணறி மேலே சென்றதாம் மேகமெல்லாம் அனல்காற்று தொப்பென்று கீழே விழுந்ததாம் மயக்கம் தெளிய நட்சத்திரம் தண்ணீர் கொண்டு வந்ததாம் மதி கொஞ்சம் மதி தெளிந்து விண்ணிற்கு சென்றதாம் புகை நமக்கு பகையென்று மறக்கின்றோம் தானே புகையிலையாலே தினந்தோறும் இறக்கின்றறோம் வீணே நற்பழக்கம் வேண்டும் உடல்நலம் பேணவே நம்பிக்கை பரிசளிக்கும் மகிழ்வுடன் வாழவே சரவிபி ரோசிசந்திரா
-
- 2 replies
- 783 views
-
-
https://www.facebook.com/photo/?fbid=10159991441351950&set=a.10151018148611950 இலங்கையை ஆள யார்வேண்டும்? அற்பனாய், குடும்பத்துள்ள அனைவரும்சேர நாட்டை விற்பனை செய்திடாத வீரனாயொருவன் வேண்டும் இனமுரண்பாடு தன்னை என்றுமே அணுகவொட்டா குணமுடையோனாய் கொள்கைக் குன்றென ஒருவன்வேண்டும் புத்தனின் மார்க்கம்தன்னைப் புனிதமாய்யேற்று அந்தச் சத்திய வழியிலேகும் தருமனாயொருவன் வேண்டும். இத்தனை தகுதியோடும் இலங்கையில் யாருமுண்டா? அத்தனைபேரும் சொத்தை, ஆளவே தகுதியில்லார். நல்லியல்பிழந்தோர் கெட்ட நடத்தையர் போலிவேசப் புல்லியர், பொய்யர்நாட்டின் புகழினைக் கெடுத்த தீயோர் இல்லையே ஒளியெமக்கென் றிருண்டதோர் காலம்கண்டு சொல்லிட மக்கள்தங்கள் சொகுசுக்காய் வாழ்ந்தகீழோர் …
-
- 6 replies
- 805 views
-
-
ஓடி விளையாடு பாப்பா ஓயாமல் படித்துவிடு பாப்பா கூடி விளையாடு பாப்பா குறைக்கூறலாகாது பாப்பா அகிலத்தில் உயர்ந்தது அன்பு அனைவருக்கும் வேண்டும் நற்பண்பு அன்னைக்கு இணையில்லை எதுவும் ஆசானுக்கு தெய்வமும் பணியும் பசிக்கு உணவிடல் தர்மம் பாவத்தால் தொடரும் கர்மம் பாதகத்தைக் களைத்திடு நீயும் பாருக்குள் செழித்திடும் நேயம் ஆதியில் இல்லையடி சாதி அறவாழ்விற்கு வேண்டுமடி நீதி மெய்க்கு துணையாகும் உயிரும் மெய்ஞானத்திற்கு துணயாகி உயரும் பஞ்சப்பூதத்தின் தனித்துவம் செந்தீ பாரதத்தின் அமரத்துவம் பாரதி பெண்ணுரிமைக்கு வித்திட்டான் மகாகவி பெண்கல்விக்கு அவனே இறைவி அறியாமை அகற்றிடு பாப்பா ஆக்கமாய் உழைத்திடு பாப்பா ஆணவம் நிலைக்காது பாப்பா …
-
- 0 replies
- 548 views
-
-
வாங்கியப் புத்தகங்கள் வசைப்பாடியது வாசல் வழி வந்து என்னை... நித்தம் தேடித் தேடி சேகரித்தது செல்லரித்துப் போகவா? என ஆவேசம் கொண்டு அறைய கை ஓங்கியது அம்மா என்று நான் அழுதிட என்னை அரவணைத்து வாசிப்பின் பூரணத்தை வாய்மொழியில் விளக்கியது என் ஆருயிர் புத்தகம்... ஒருநாளைக்கு ஒருமுறை என்னைப் புரட்டியாவதுபாருங்கள், என்னுள்ளே! ஆழ்ந்து சென்றதும் புதுமுகம் பிறக்கும், புதுஅகம் கிடைக்கும் படிக்காமல் எங்களை அடுக்கி வைப்பதுபெருங்கொடுமை படித்தால் மட்டுமே கிடைக்கும் அவனியில் பெருமை மெத்தப் படித்தோம் என்று பிதற்றும் தற்பெருமை கல்லாதவரிடம் தோற்கும் தினந்தோறும் ஓதும் எளியவன் சொல் எட்டுத்திக்கும் ஒலிக்கும் படிப்பது …
-
- 0 replies
- 644 views
-
-
-
- 0 replies
- 392 views
-
-
எல்லா மனிதனுக்கும் உரிமைகள் வேண்டும்-பா.உதயன் மக்களின் பணத்தை திருடிய கள்ளர் மானம் இழந்தே போவார்கள் உண்ணக் குடிக்க வளி இல்லை என்றால் மக்கள் தெருவில் இறங்கி எரிப்பார்கள் ஊழல் லஞ்சம் செய்தவன் கூட்டதை இனி ஆளும் கதையை முடிப்பார்கள் உத்தமர் போலே நடித்தவர் வாழ்வை உடைத்தெறியாமல் போகார்கள் மக்களும் இனி மேல் மாறிட வேண்டும் தப்பு செய்தவன் தலைமையில் இருந்தால் எப்பவும் கேள்விகள் கேட்டிட வேண்டும் எதிர் காலம் பற்றி சிந்திக்க வேண்டும் தப்பு செய்தவனை தண்டிக்க வேண்டும் நல்ல தலைமையை மக்கள் தெரியவும் வேண்டும் இனவாதிகள் இனிமேல் இருக்கவும் கூடாது இன மத பேதம் கடந்து போகுதல் வேண்டும் இன்னொரு இனத்தை அழித்தவர் வாழ்வு இறுதி வரைக்கும் நிலைக்காத…
-
- 2 replies
- 341 views
-
-
-
- 1 reply
- 955 views
-
-
பசி பட்டினி பொருளாதாரத் தடை பெரும் போர் இழப்பு இதுவெல்லாம் புதிதல்ல ஈழத் தமிழருக்கு அதுவெல்லாம் கடந்து தான் நடந்து வந்தான் ஆனால் இவை எல்லாம் உங்களுக்கு புதிது தான் அன்று ஒரு நாள் அருகில் ஒரு தமிழ்க் குழந்தை பசி எடுத்து அழுத குரலும் கேட்கவில்லை பிள்ளைகளை தொலைத்து விட்டு பெரும் குரலாய் காடதிரக் கத்திய தாயின் கண்ணீரில் எழுதிய கதை ஒன்றும் உங்கள் காதுகளில் கேட்கவில்லை எதுகுமே கேட்கவில்லை ஈரமனம் எவருக்குமாய் இருந்ததாய் தெரியவில்லை அன்பும் அறமும் தர்மமும் கொண்ட அந்த தம்மபத புத்தனின் சிந்தனையும் உங்களுக்கு புரிந்ததாய் தெரியவில்லை கோபமும் கொலையுமாய் நல்லறிவை தொலைத்து விட்டு ஏதேதோ…
-
- 5 replies
- 1.4k views
-
-
-
- 4 replies
- 947 views
-
-
எச்சரிக்கைக் காட்சிகளால், சிறகுகள் வெட்டப்பட்டு, நசுக்கப்பட்டபோதும், எங்களை அடக்கவென்று, வெறுப்பின் மேலாதிக்க விஷ வன்மங்கள் கொட்டி வரையப்பட்ட, சட்ட மூலங்கள் நிறைவேற்றப்பட்ட போதும், நித மரணத்தால் மட்டுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்களாய், குற்றமேதுமின்றி இன்றுவரை பலர், சிறைவாயிலை நிறைத்துக்கொண்ட போதும், எங்களுக்கு எதிராக அவர்களின் கதவுகள், இன்னும் மூடப்பட்டே இருக்கின்றன. தொலைந்துபோன தன் பிள்ளையை, கைதுசெய்யப்பட்ட தன் தந்தையை, கையளிக்கப்பட்ட தன் தமையனை, இன்னும் தேடியபடி, நீதிக்காக, அவர்தம் விடுதலை வேண்டி, எத்தனை நாட்கள் தவம் கிடக்கிற…
-
- 6 replies
- 1.1k views
-
-
இன்று என் சொந்த பெயரில் உள்ள முகனூலில் கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தை பற்றி சிம்பிளாக சொல்ல எழுதிய இந்தக் கவிதையால் முகனூல் தற்காலிகமாக என்னை தடை செய்தது. .................................. இவ்வாறே அவர்கள் அரசனின் மாளிகையை சுற்றி வளைத்தனர் அன்று தேவ சபையில் அரசன் பல்லாயிரம் ஆடுகளை கொன்று தன் இந்திரியத்தால் குளிப்பாட்டி விருந்து கொடுத்து இருந்தான். வண்ணாத்திப் பூச்சிகளின் இறைக்கைகளை வெட்டி படையல் போட்டு இருந்தான் அதை புசித்தவர்கள் இன்று அவன் மாளிகையை சுற்றி வளைத்தனர் தங்களின் நாவு வரண்டு எச்சில் வற்றி விட்டதாக கிளர்ந்து எழுந்தனர் தாளா பசியால் …
-
- 9 replies
- 1.2k views
-
-
பல தமிழ் பெற்றோருக்கு மருத்துவம் மட்டுமே படிப்பாக தெரிகிறது அதுக்கென்ன படிப்பது நல்லதுதான் என்ன தான் இருந்தாலும் சும்மாவா மருத்துவ படிப்பும் ஆழமா அறிவோட படித்தால் தானே அங்கும் நுழைய முடியும் எத்தனை தமிழன் மருத்துவர் என்று எங்களுக்கு பெருமை தானே ஆனால் மருத்துவம் மட்டும் படித்தால் போதுமா கழுவவும் துடைக்கவும் தேடவும் தெரியவும் ஆடவும் பாடவும் அறிவோடு எழுதவும் அரசியல் பொருளியல் உளவியல் உயிரியல் சட்டம் சமூகவியல் சர்வதேச அரசியல் தத்துவம் என்றும் இலக்கியம் கலை கவிஞன் என்று எழுதவும் பேசவும் உந்தன் உரிமையை வெல்லவும் புவியியல் அரசியல் பூகோளத்திற்காய் என்றும் எத்தனை பேர் தே…
-
- 5 replies
- 626 views
-
-
கொரோனா இப்போ கொஞ்சம் குறைஞ்சா போல கொல்லாது என்ற துணிவு வந்தா போல சோசல் மூமென்ட் என்று சும்மா ஒரு கதை விட்டிட்டு திரும்பவும் இப்போ தொடங்கியாச்சு ஆட்டமும் கூட்டமும் நாளும் பொழுதும் நல்லா நடக்குது வொட்க்கா அடி வெள்ளி சனி வந்தால் காணும் விடியவே கரிச்சு பொரிச்சு கடிக்க இரண்டு ரேஸ்ருக்கு என்று காரமாய் இறைச்சி பிரட்டி மனுசி கமலம் கூட கண்டிராம காலை விடிய இரண்டு போத்தல் எடுத்து காட்டாமல் ஒளிச்சு வச்சு விடிய விடிய நடக்குது கூத்து இன்னும் சிலர் தனிய இருந்து அடிச்சுப் போட்டு தண்ணி கொஞ்சம் தலைக்கு ஏற டெலிபோன எடுத்து வச்சு கதை வேற விடுவான்கள் ஆயிரம் புலி சிங்கத்தை அடக…
-
- 2 replies
- 444 views
-
-
எல்லா வீட்டு வேலியும் பாய்ந்து சட்டியை உருட்டும் பூனைகள் போலே எம்மிலும் பல கள்ளர் இருப்பது தெருஞ்சுக்கடா இவர்கள் பொல்லாத மனிதப் பூனையடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா வெள்ளாடை வேட்டி கட்டி வேதங்கள் பல சொல்லி எல்லோர்க்கும் உதவுவதாய் எல்லாமே தெரிந்தவராய் நல்லாக நடிப்பாரடா சிலர் நல்ல பெயர் வேண்ட அலைவாரடா இவர்கள் பொல்லாத மனிதப் பூனையடா புரிஞ்சுக்கடா மனிதா புரிஞ்சுக்கடா நட்பு என்றும் உறவு என்றும் நல்ல பல கதைகள் பேசி சமூகம் சேவை என்றும் கோவில் பள்ளி படிப்பு என்றும் கொக்கரித்து திரிவாரடா பின்பு கட்டியதை உடைப்பாரட கண்டபடி கதைப்பாரடா ஒற்றுமையை தொலைத்து விட்டு ஆளுக்கு ஆள் கல் எறிந்து பகைப்பாரடா கள்ளம் பல செய்வா…
-
- 8 replies
- 670 views
-
-
நெருப்பு. எரிக்கிறதுதான் நெருப்பு நெருப்புக்கு எரிக்கத்தான் தெரியும் ஆலயத்தில் எரிந்தால் தீபம் அடுப்புக்குள் எரிந்தால் சமையல் அகல்விளக்கில் எரிந்தால் வெளிச்சம் யாகத்தில் எரிந்தால் அக்நி சிதையில் எரிந்தால் சாம்பல் அடிவயிற்றில் எரிந்தால் பசி ஆகாயத்தில் எரிந்தால் மின்னல் அடர்வனத்தில் எரிந்தால் கோரம் மூச்சில் எரிந்தால் ஏக்கம் சுருட்டில் எரிந்தால் போதை தொடரும் இருட்டில் எரிந்தால் பாதை தெரியும் விழியில் எரிந்தால் காதல் இடையில் எரிந்தால் காமம் மனசில் எரிந்தால் பாசம் ஈருடலில் எரிந்தால் பரவசம் எரிக்கிறதுதான் நெருப்பு நெருப்புக்கு எரிக்கத்தான் தெரியும்......! …
-
- 7 replies
- 2.6k views
-
-
உக்ரைன் மோதல்..! **************** ஈழம் எரிவதற்கு உன் பங்களிப்பும் அதிகம் இருந்ததாக.. நாமறிவோம். இருந்தும்.. வலி சுமந்த எமக்குத்தான் உயிரின் வலி தெரியும்-உன் அப்பாவி மக்கள் அழிவு எம்மக்களாகவே பார்க்கிறோம். உன்னினம்,உன்மதம் உன்நிறமென்று எட்டிப்போக எம்மால் முடியவில்லை. ஏனெனில்.. உங்களைப் போன்றவர்களால் நாங்களும் அழிக்கப்பட்ட இனம். இரண்டுதரப்பு.. போரென்பதே உங்களின் கணிப்பும் பிடிவாதமும். இங்கு பெற்றோரை இழந்த பிள்ளைகள் பிள்ளைகளையிழந்த பெற்றோர் கை கால் இழந்த குஞ்சு குருமான்கள் அப்பா இறந்தது தெரியாமல் உணவு…
-
- 6 replies
- 1.9k views
-
-
ஒருநாள் சூரியன் பூமிக்கு இறங்கி வந்தான்! திறந்த விளையாட்டு மைதானம், ஆட்களற்று வெறுமையானது. மாணவர்கள் எங்கும் இல்லை! பறவைகள் அற்ற வனாந்தரமாய், தாயில்லாப் பிள்ளை போல், தனிமையில் கிடந்தது பாடசாலை. மரங்கள் நிழல்களைத் தின்று, ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தன. காகிதப் பறவைகள், காற்றில் சிறகு விரித்துப் பறந்தன. தூசி படிந்த பள்ளி மணி, அடிப்பாரற்று அநாதையாயிருந்தது. துண்டிக்கப்பட்ட இலைகள், காற்றின் அந்தரத்தில் நடம்புரிந்தன. பள்ளிகளைப் போர் சூழ்ந்த பின்னொரு நாளில், வகுப்பறை நாற்காலிகளை, கண்ணீர் பூக்கள் நிறைத்தன. கரும்பல…
-
- 2 replies
- 716 views
-
-
மேலைத்தேச நண்பரே! எதை நீங்கள் இன்று பார்க்கிறீர்களோ, அதை நாங்கள் பார்த்திருக்கிறோம் நண்பரே! உண்மையான உணர்ச்சிகள் கொப்பளிக்கின்ற, சோகத்தின் ஆழத்தை நாம் அனுபவித்திருக்கிறோம். போரின் நடுவே, வளர்ந்த குழந்தைகள் நாம்! ஆதலால் பலமுறை நாம், சொர்க்கத்தை உணர்ந்துள்ளோம் நண்பரே. மரணத்தின் வேதனையை, தனிமையின் கொடுமையை, கொடிய வறுமையை நாம் எதிர்கொண்டோம். பசியின் உக்கிரத்தில் பலநாள் தவித்திருக்கிறோம். போரின் நடுவே நம் இளமையைத் தொலைத்தோம். தினமரணத் துக்கத்துள் தவித்தோம். நாம் விடும் ஒவ்வொரு மூச்சிலும், எம் மண்ணின் ரணம் கலந்துள…
-
- 5 replies
- 681 views
-
-
விசித்திரமான நிகழ்வுகள் நிறைந்த வாழ்க்கையில் வரலாறு முக்கியமானது. அது என்னை விட என்னை அதிகம் அறிந்தது. துயரங்களைக் கடக்க, கடினமான நாட்களில் காலத்தைக் கழிக்க, வலி நிறைந்த அத்தருணங்களை எதிர்கொள்ள, இன்னும் என்னென்னமோ கற்றுத் தந்தது. காலப் பெருவெளியில் சிக்கி நான், சுழலில் சிதைந்த பந்துபோல் பேரழிவுகளுக்கிடையில் அலைந்தேன். பெருங்கடலின் ஆழத்தில், தொலைந்து போன, ஒரு பேய்க் கப்பலானேன். சில சமயங்களில் நான், மென்மையான நித்திய ஒளியில், என் உயரிய நேரத்தை இழந்தேன். இன்னும் சில நேரம், கனவுகள் பிடிப்பவர்களின் …
-
- 2 replies
- 733 views
-
-
-
- 1 reply
- 1.8k views
-
-
இன்று தாய்மொழித்தினம். எமது உயிரினுமினிய தமிழன்னைக்காக நான் 21 பெப்ரவரி 2020 இல் எழுதிய கவிதையை இங்கு பதிவிடுகிறேன்.
-
- 3 replies
- 1k views
-
-
செவ்வாய்ப் பரப்பிருந்து தெரியும் எம் பூமி - View of our Earth from Mars மனிதா உன்னைத்தான்! வானப்பரப்பினிலெம் மண்ணோர் சிறுபுள்ளி காணவும் கூடாக் கடுகு. - எதற்காக உன்னையே எண்ணி உள்ளம் கலங்குகிறாய். செவ்வாய்ப் பரப்பிருந்து, சிற்றொளியைக் காலுகிற பூமியை நோக்குகையில் புழுதிமணியாக, தோற்றமளிக்கிறது தோற்றமற்றும் போகிறது. உன்னை நீ எண்ணிப்பார் உலகத்தில் எத்தனைபேர் …
-
- 2 replies
- 890 views
-
-
படம் சொல்லும் வரிகள் (உயிப்பு) **************************** கல்லறையில் மாண்டாலும் கனிதருவோம் கயவர் எமையழித்தாலும் துளிர் விடுவோம். நல்லவர்கள் ஒருபோதும் இறப்பதில்லை-இந்த நானிலத்தில் அவர் புகழோ குறைவதில்லை. -பசுவூர்க்கோபி.
-
- 4 replies
- 1.1k views
-
-
கொண்டாட்டமே வாழ்வு. - ஜெயபாலன் * பருதியோடு எழுகவென பாடி பல்லுயிர்கள் கொண்டாடும் அதிகாலை. பூப்படைகிற முல்லை என் படுக்கை அறையுள் நுழைகிறாளா?. * எல்லோரும் வாழ்வோம் என்றபடி சன்னலைத் திறந்தேன். கரு முகில் அபாயா அணிந்த நம் முழுநிலவின் புன்சிரிப்பில் விடிகிறது வாழ்வு * என் சின்ன வயசு முழுவதும் முக்காடிட்ட சோனக மாமிகள் தந்த அறியப்படாத சிற்றுண்டிகளின் தேன் கமழ்ந்தது. * வளர் இளம் பருவத்தில் அபாயா அணிந்த அன்னை மேரியும் அம்மனும் ஒன்றென நம்பினேன். வாழ்வு பலவண்ன உறவுகளின் வானவில் என்பதை எப்படி மறந்தோம்? * மா முனிவன் ராமானுஜன் அபாயாவுடன் த…
-
- 2 replies
- 675 views
-