Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைக் களம்

கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

  1. "நெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள்" "நெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள் தஞ்சம் கொடுத்தேன் ஆறுதல் அளித்தேன் வஞ்சனை இல்லாமல் அன்பை கொட்டினாள் கொஞ்சம் மயங்கி சந்தோசம் கண்டேன்!" "மஞ்சள் நிலாவில் குளிர் காய்ந்தோம் மஞ்சத்தில் நெருங்கி அருகில் இருந்தோம் அஞ்சா நெஞ்சத்தாள் எதோ உளறினாள் நஞ்சு கலந்து காதல் வீசினாள்!" "கொஞ்சி வஞ்சி இன்பத்தில் பூத்தாள் வஞ்சனை இதழால் முத்தங்கள் தந்தாள் நெஞ்சத்தை விஞ்சும் கதைகள் சொன்னாள் வஞ்சிவீரி மஞ்ஞை வீராப்பு பேசினாள்!" "நஞ்சு தந்த போதை மயக்கத்திலும் காஞ்சி வீரனாய் அவளை தடுத்தேன் செஞ்ச தெல்லாம் செய்தது போ…

  2. வாழ்க்கை ஒருவழிச்சாலை பயணத்தின் இடையே நாம் பலரைக் கடந்து போகிறோம் சிலர் தொடர்ந்து வருபவர்கள் பலர் கடந்து செல்பவர்கள் மேலும் சிலர் எம்மை உளவு பார்ப்பவர்கள் மனித மனங்கள் விசித்திரமானவை நட்சத்திரங்கள் போல் வித்தியாசமானவை துரதிர்ஷ்டவசமாக யாரும் பார்க்க முடியாதவை எல்லோரும் எல்லோரையும் ஏற்றுக்கொள்ள முடியாதென்ற தத்துவம் நாமறிவோம் …

  3. எரியும் ரகசியங்கள் ----------------------------- ஒருவருக்குமே சொல்லாத ஒன்றை உங்கள் ஒருவருக்கு மட்டுமே சிலர் சொல்லியிருப்பார்கள் ரகசியம் பத்திரம் என்று நீங்களும் உங்களின் சில ரகசியங்களை சிலருக்கு மட்டும் சொல்லியிருப்பீர்கள் பத்திரம் என்று வீடு ஒன்று வாங்கும் விசயம் கூட ரகசியம் என்று சொல்லப்பட்டிருக்கும் அந்த வீட்டை வாங்க முன் இன்னார் இன்னாரை கட்டப் போகின்றார் அதுவும் ரகசியம் என்று சொல்லப்பட்டிருக்கும் அவர்கள் கட்ட முன்னர் எப்போதும் வெளியே சொல்லி விடாதே என்று சத்தியமும் கேட்டிருப்பார்கள் அந்த வீட்டை வா…

  4. "நெஞ்சம் பாடும் வீரவணக்கம்" "நெஞ்சம் பாடும் வீரவணக்கம் இன்றோ வஞ்சம் செய்து மாண்டவர்கள் இவர்களோ கொஞ்சும் மழலையின் தலையும் சிதறியது கெஞ்சும் மங்கையின் கற்பும் பறந்தது தஞ்சம் புகுந்த அப்பாவிகள் எங்கேயோ?" "மஞ்சம் தேடிய போராட்டம் இதுவல்ல குஞ்சும் குழந்தைகளின் எதிர்காலம் நோக்கி விஞ்சும் அடக்குமுறையைத் தட்டிக் கேட்க மிஞ்சும் அநீதி கண்டு கொதித்தெழுந்த நெஞ்சு நிமிர்த்திய தியாகிகள் தெய்வங்களே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  5. "மூன்று கவிதைகள் / 12" விலங்குகளுக்கு விலங்கிட்டு கூண்டில் அடைத்து மனித விலங்குகளை சுதந்திரமாய் விட்டோம் விலங்குகளை ஒவ்வொன்றாக அடக்கி அடக்கி குப்பை மனிதர்கள் செழிக்க விட்டோம்! ஆசையில் மூழ்கி அசிங்கத்தைப் பூசி புண்ணிம் கண்ணியம் புதையுண்டு போக பாதை தவறி அழுக்கைச் சுமந்து மனிதன் வாழ்கிறான் மனிதம் இல்லாமலே! ........................................................ பெரிய தோற்றத்தில் நடக்கும் யானையே உன் அறிவும் உனக்குப் பெரிதோ? சிலவேளை மதம் பிடித்து அலைந்தாலும் உன்னிடம் மதம் [சமயம்] இல்லாதது எனோ? பரிவாக உன்னைக் கவனிக்கும் பாகன் உன் நிழலிலேயே இளைப்பாறுவது தெரியாதோ? வேடிக்கைப் பார்க்கும் மக்களை எல்லாம் தள்ளி நிற்க பயப்படுத்துவது எனோ? பாசத்தின் அருமை உனக்குத் …

  6. இது குளிர் காலம்..! ***************** பார்க்கின்ற மரமெல்லாம் பட்டதுபோல் தெரிந்தாலும் உள்ளுக்குள் உயிர் இருந்து உறக்கமின்றி முளித்திருக்கும். அடுத்த சமர் வரவையெண்னி அரும்புவிட காத்திருக்கும் இழந்த இலையனைத்தும் இருமடங்காய் வளருமென்ற உறுதியுடன் நம்பித்தான் உள்ளுக்குள் உயிர் இருக்கும். இதைப்போலே… சோகங்கள் துக்கங்கள் சுற்றியெமைத் தாக்கினாலும் மனவுறிதி எமக்கிருந்தால் மரம்போலே துளிர் விடலாம் குளிரென்ன கோடையென்ன கொரோனாவே விலகியோடும். -பசுவூர்க்கோபி-

  7. நல்லதோர் வாழ்வு இருந்தது நல்லதோர் வாழ்வு ஒன்று இருந்தது ஒரு காலம் நாலு பேர் வந்து போயினர் நமக்காய் ஒரு வாழ்வு இருந்தது ஒற்றுமை ஒன்று இருந்தது ஒரு காலம் உறவுகள் வந்து போயினர் பிரியாமல் முற்றத்தில் வந்து இருந்தது முழுநிலவு பக்கத்தார் வந்து பேசினர் பல நேரம் ஆயிரம் சனம் இருந்தனர் அருகோடு அமைதியாய் கூடி வாழ்ந்தனர் குலையாமல் அங்கு ஓர் பிரிவும் இல்லை அனாதை என்ற ஓர் சொல்லும் இல்லை அழகான பனை இருந்தது அருகில் ஒரு வேம்பு நின்றது அதன் கிளையில் ஒரு குயில் இருந்தது கூவிப் பல பாடல் கேட்டது காடு இருந்தது காடு நிறையப் பூ இருந்தது பூவோடு கனவு இருந்தது கனவு மெய்ப்படக் காத்து இருந்தது பாட்டும் கேட்டது கூத்தும் கேட்…

    • 0 replies
    • 1.1k views
  8. "சிந்தை சிதறுதடி" "சிந்தை சிதறுதடி மயானம் அழைக்குதடி உந்தன் காலடி வணங்கத் துடிக்குதடி! நிந்தை பேசா உன்னையும் கெடுத்தானே விந்தை உலகமடா கொடியவன் பூமியடா கந்தைத் துணியுடன் வீசிச் சென்றானே!" "தீந்தை விழியால் என்னை மயக்கியவள் சாந்தை பூசி பெட்டிக்குள் போறாளே! வேந்தையும் ஏழையும் ஒன்றே என்றவள் சுந்தரத் தமிழில் கொஞ்சிக் குலாவியவள் சந்திர ஒளியில் தீபமாய் ஒளிர்கிறாளே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  9. Started by uthayakumar,

    மொழி-பா.உதயன் காற்றுக்கும் மொழி உண்டு கடலுக்கும் மொழி உண்டு காலையில் தினம் பாடும் பறவைக்கும் மொழி உண்டு மலை கூடி மொழி பேசும் மௌனமாய் கவி பாடும் அழகான நதி வந்து அதனோடு கதை பேசும் அமுதான தமிழ் போல அந்த குருவிக்கும் மொழி உண்டு மலர் கூட மொழி பேசும் மனதோடு இசை பாடும் அழகான கிளி எல்லாம் அமுதமாய் தமிழ் பேசும் அருகோடு குயில் வந்து அதனோடு சுரம் பாடும் மழை கூடி தினம் வந்து மலரோடு கதை பேசும் இரவோடு இது பேசும் மொழி எல்லாம் தனி ராகம் சிற்பியின் உளியோடு சிலை கூட மொழி பேசும் அவனோடு தனியாக அது பேசும் மொழி வேறு அழகான பாவங்கள் அசைந்து ஆடும் ராகங்கள் மனதோடு அது பேசும் மனிதர்க்கு மட்டு…

    • 6 replies
    • 1.9k views
  10. "மனமும் மனிதனும்" "மனமும் மனிதனும் போராடும் உலகில் கானம் அழித்து சூழலைக் கெடுக்கிறான் தானம் போட்டு இணையத்தில் பதிக்கிறான் மானம் புரியாமல் மனிதநேயம் தேடுகிறான்!" "மதி நுட்ப சிந்தனையாளனா மரத்துப்போனவனா நெருக்கடி வந்தபின்பே மாற்றுவழி தேடுகிறானா தொழில்நுட்பம் எம்மை அடக்கி ஆள்கிறதா எண்ணம் குறுகியதா மனிதம் தோற்றதா?" "உள்ளம் அலைபாயும் மனிதன் இவன் நெஞ்சம் முழுக்க மெய்யும் பொய்யும் மனது மாந்தனை உயர்த்தும் வீழ்த்தும் மனிதனின் விருப்பம் பாசாங்கும் தேடும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  11. "மூன்று கவிதைகள் / 14" 'புகைப்படக் கவிதை' தோற்றத்தில் பெரியவனே - தும்பிக்கை கொண்டவனே ஆற்றலில் பலமானவனே - நம்பிக்கைத் தோழனே மதம் பிடித்து - சிலவேளை அலைந்தாலும் மதம் [சமயம்] உன்னிடம் - ஒருவேளையும் இல்லையே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ------------------------------------------- 'மலைமுடியில் பனியழகு மனங்கவரும் இயற்கையழகு' மலைமுடியில் பனியழகு - மனங்கவரும் இயற்கையழகு மகளிர் வடிவத்தையும் - மகிமையிழக்கச் செய்து மடவரலின் அன்னநடையையும் - மறைத்து விடுமே! கொடுமுடியில் மஞ்சுபெய்ய - கொடிகளில் வெண்மைபடர கொடிச்சியின் எழிலையும் - கொன்று மங்கலாக்கி கொற்றவையின் கவினையும் - கொடுமையாய் மாற்றுமே! [கந்தையா தி…

  12. "மூன்று கவிதைகள் / 19" 'தூது செல்லாயோ' தூது செல்லாயோ கண்மணியை அழைக்காயோ தூய்மை அன்பில் நட்பை வளர்த்து தூரிகை எடுத்து காதல் வரைந்தவள் தூர விலகிப் போனது ஏனோ? ஓரமாய்த் தள்ளி ஓடியது எதற்கோ? ஈர உள்ளம் உனக்கு இல்லையோ? கால் சலங்கை இசை எழுப்பக் காதணி இரண்டும் சேர்ந்து ஆடக் காமன் வலையில் என்னை வீழ்த்தி காதோரம் கெஞ்சிய வார்த்தை எங்கே? கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ............................................................. புகைப்படக் கவிதை மழலையின் மொழி கேட்டு நான் குழல் ஊதும் கண்ணனை மறந்தேன்! குழவியின் கெஞ்சிக் கொஞ்சிக் குலாவுதலில் அழகு மங்கையின் தழுவலைத் துறந்தேன்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ...............…

  13. என் உயிரானவள்..! ************** மின்னல் வந்த திசையைப்பார்த்தேன்-அவள் கண்கள் தெரிந்தது மேக முகில் அழகைப்பார்த்தேன்-அவள் கூந்தல் பறந்தது முல்லைப்பூவின் மலர்வைப்பார்த்தேன்-அவள் பற்கள் ஒளிர்ந்தது முழுமதியின் வரவைப்பார்த்தேன்-அவள் முகமே தெரிந்தது தேன் சொட்டும் பேச்சைக்கேட்டேன்-தமிழாய் பொழிந்தது தேசத்தின் முதல் பெண் இவழே.. என்னுயிரும் கலந்தது. அவள் வந்தபின்னாலே தமிழனானேன்-எனி ஆகுதியில் எரிந்தாலும் அழிவே இல்லை. -பசுவூர்க்கோபி-

  14. செவ்வாய்ப் பரப்பிருந்து தெரியும் எம் பூமி - View of our Earth from Mars மனிதா உன்னைத்தான்! வானப்பரப்பினிலெம் மண்ணோர் சிறுபுள்ளி காணவும் கூடாக் கடுகு. - எதற்காக உன்னையே எண்ணி உள்ளம் கலங்குகிறாய். செவ்வாய்ப் பரப்பிருந்து, சிற்றொளியைக் காலுகிற பூமியை நோக்குகையில் புழுதிமணியாக, தோற்றமளிக்கிறது தோற்றமற்றும் போகிறது. உன்னை நீ எண்ணிப்பார் உலகத்தில் எத்தனைபேர் …

    • 2 replies
    • 910 views
  15. "உயிரின் உயிரே!" "அன்பு கொண்டு .... அருகில் வந்தேன் ஆதரவு சொல்லி .... ஆனந்தம் தருவாயோ? இன்பம் மலர .... இருவரும் சேர்ந்தோம் ஈருடல் ஒன்றாக .... ஈரமான ரோசாவே உலகம் மறந்து .... உவகை கொண்டோமே!" "ஊமை விழியில் .... ஊர்வலம் சென்று எழுச்சி கொண்ட .... எம் காதலே ஏமாற்றாமல் இவனின் .... ஏக்கம் தணியாயோ? ஐம்புலனும் தேடும் .... ஐயமற்ற அழகியே ஒப்பில்லா என் .... உயிரின் உயிரே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  16. "ஆசை, ஏக்கம், வேண்டுதல் மூன்றையும்" [ஆசை திருப்தியடையாது] "ஆசை, ஏக்கம், வேண்டுதல் மூன்றையும் ஆபரணம் ஆக்கித் தன்னை அலங்கரிக்கிறான் ஆகாயம் வரை சேர்க்க அல்லும்பகலும் ஆரவாரத்துடன் ஓய்வு மறந்து ஓடுகிறான் !" "நேசிக்கிறான், வெறுக்கிறான், பகுத்தறிவு மறந்து நேர்த்தி அற்ற செயல்களில் ஈடுபடுகிறான் நேசக்கரம் மறந்து பண்பு தொலைத்து நேராராகி செல்வத்தில் மட்டும் குறியாயிருக்கிறான் !" "விருப்பம் மட்டும் வாழ்வு இல்லை விஞ்ஞான உண்மைகளைப் புரிந்து கொள் விரைந்து விரைந்து செல்வம் குவிக்காதே விருந்தோம்பல் உடன் அன்பையும் வளர் !" "மகிழ்ச்சி என்பது மனிதனின் …

  17. Started by suvy,

    நெருப்பு. எரிக்கிறதுதான் நெருப்பு நெருப்புக்கு எரிக்கத்தான் தெரியும் ஆலயத்தில் எரிந்தால் தீபம் அடுப்புக்குள் எரிந்தால் சமையல் அகல்விளக்கில் எரிந்தால் வெளிச்சம் யாகத்தில் எரிந்தால் அக்நி சிதையில் எரிந்தால் சாம்பல் அடிவயிற்றில் எரிந்தால் பசி ஆகாயத்தில் எரிந்தால் மின்னல் அடர்வனத்தில் எரிந்தால் கோரம் மூச்சில் எரிந்தால் ஏக்கம் சுருட்டில் எரிந்தால் போதை தொடரும் இருட்டில் எரிந்தால் பாதை தெரியும் விழியில் எரிந்தால் காதல் இடையில் எரிந்தால் காமம் மனசில் எரிந்தால் பாசம் ஈருடலில் எரிந்தால் பரவசம் எரிக்கிறதுதான் நெருப்பு நெருப்புக்கு எரிக்கத்தான் தெரியும்......! …

    • 7 replies
    • 2.8k views
  18. வெடிசுமந்தோரே! -------------------- நீங்கள் தமிழ் ஈழத்தை மடிசுமந்தீர் ஆதலினால் வெடிசுமந்தீர்! நாம் உம்மை எம் மனம் சுமந்தோம்! தமிழ் ஈழத்தை அடைவதற்கு உங்கள் பெயர் சொல்லி உறுதி கொள்வோம்! அன்பார்ந்த நன்றியுடன் நொச்சி

    • 0 replies
    • 1.1k views
  19. என்னால் சுவாசிக்க முடியவில்ல-பா.உதயன் உலகுக்கு ஜனநாயகம் கற்பிக்கும் உலகப் போலீஸ்காரனின் உண்மை முகத்தை உலகம் கண்டுகொண்டது காறி துப்புகிறது மனிதம் இவன் முகத்தில் இனி யாருக்கு தேவை உன் உபதேசம் என்றே இனவாதம் மீண்டும் வெள்ளைத் திமிரோடு தான் இன்னும் இருக்கிறது நான் வேறு நீ வேறு என்று கழுத்தை நெரிக்கிறது கறுப்புச் சிறுவனும் வெள்ளைச் சிறுமியும் கை கோர்த்துப் போகும் கனவுகள் எல்லாம் இறந்து கிடக்கிறது மார்ட்டின் லூதரின் இறுதி மூச்சோடு. பா.உதயன் ✍️ one day right there in Alabama little black boys and black girls will be able to join hands with little white boys and white girls as sisters and brothers. I …

    • 2 replies
    • 804 views
  20. "மூன்று கவிதைகள் / 24" 'ஏறு தழுவல்' ஏறு தழுவல் தமிழன் விளையாட்டு வீரம் கொண்ட காளை அடக்கி அடங்கா எதிரிக்கும் அச்சம் கொடுப்பான்! வியர்வையில் வீரம் ஒளிரும் போது மண்ணின் மணம் மார்பில் உறையும் தாயின் மரபு இரத்தத்தில் பேசும்! கோபமல்ல—கட்டுப்பாடே அவன் பலம் அடக்கமல்ல—அறிவே அவன் ஆயுதம்! உயிரை மதித்து காளையை அணைப்பவன் தமிழன்—வீரத்தின் மனித முகம்! கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம் ................................................................ 'கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா' கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா கலந்து பேசி முடிவு எடுக்கலாமா? மனங்கள் இணைந்தால் அதுவே பொருத்தம் மறந்து என்றும் விண்மீனைக் கேட்காதே? நேரம் தீர்மானிக்குமா ஒருவரின் வாழ்வை இதயம் சொ…

  21. அந்தாதிக் கவிதை / "உயிரோடு இணைந்தவளே!" "உயிரோடு இணைந்தவளே உடலோடு கலந்தவளே! கலந்த காதலால் இதயத்தில் மலர்ந்தவளே! மலர்ந்து மயக்கி இன்பம் கொட்டியவளே! கொட்டிய தேளிலும் கொடுமை கூடியவளே! கூடி மகிழ்ந்து பரவசம் தருபவளே! தருவதும் எடுப்பதும் உனது உரிமையே! உரிமை கொண்டு நெஞ்சில் உயர்ந்தவளே! உயர்ந்த எண்ணங்களால் சிந்தனையைத் தூண்டியவளே! தூண்டிய உணர்வுகள் எல்லையைத் தாண்டியும் தாண்டாமல் பிரியாமல் இணைந்தாளே உயிரோடு!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]

  22. எமது உடலின் சதைகளை மட்டும் உண்டு விட்டு எங்களின் எலும்புகளை எறிந்து விட்டு மதம் என்ற போர்வைக்குள் போய் ஒளிந்து கொள்கின்றன ஆண் ஆதிக்கம் என்னும் மனித மிருகங்கள் அன்பே சிவம் என்று அறியாதவர் ஆயிரம் முறை ஆண்டவனை தொழுது என்ன பயன் .

    • 1 reply
    • 998 views
  23. 'காதல் சிறகினிலே' காதல் சிறகினிலே ஒரு வெடிப்பு மோதல் தந்து தூர விலகுது! சாதல் கண்களில் அருகில் தெரியுது கூதல் காற்றும் நெஞ்சை வருடுது! காற்றின் கீதம் எனக்குப் புரியவில்லை வேற்று மொழியாக இதயத்தைத் தாக்குது! கூற்றவன் என்னைக் கட்டி அணைத்து கற்ற அறிவையும் மெல்ல அறுக்கிறான்! பிடிக்கும் என்று முத்தத்தால் கூறியவளே நடிக்கும் உன்னை நம்பியது எனோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 1926 ['காதல் சிறகினிலே'] https://www.facebook.com/groups/978753388866632/posts/32650780024570556/?

  24. மரம் சொன்ன கதை..! அழகான மரங்கள் அழகான பூக்கள் அத்தோடு.. நாங்கள் தரும் பழங்களும் காய்களும் மட்டுமே உங்கள் கண்களுக்கும் வாய்க்கும் ருசிக்கிறது நீர் தேடி உணவு தேடி அலைகின்ற எங்கள் வேர்களை எவருக்குமே தெரிவதில்லை. அதுபோலத்தான் உங்கள்.. தாய் தந்தையரும் வேர்களே! மறந்திடாதீர்கள். -பசுவூர்க்கோபி-

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.