-
Tell a friend
-
Topics
-
44
By கிருபன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
எல்லாம் அனுபமில்லாதவர்களை ஆட்சியில் அமர்த்தியதின் விளைவு. தமிழர்கள் தங்கள் அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுப்பது போல் விளையாட்டு செயல் அல்ல இது. தமிழ் அரசியல் தலைவர்கள் தேர்தல் மேடைகளிலும் பாராளுமன்றத்திலும் தவளைக்கத்து கத்திவிட்டு வீட்டுக்கு வந்தி சிவனேயென போர்த்து மூடிக்கொண்டு படுத்துறங்கலாம். ஆனால் ஆட்சிபீடம் ஏறுபவர்கள் நிதானமும் சமாதானமும் நாட்டின் கணக்கு வழக்கு தெரிந்தவர்களாக இருக்கவேண்டும். இனவாதத்தை நாட்டுப்பற்று என கருதினால் இதுவும் வரும் இதுக்கு மேலேயும் வரும். இது எனது கருத்து மட்டுமே. 😎 எல்லாம் தெரிஞ்சனீர் வந்து செய்து காட்டுமன் எண்டு சொல்லப்படாது கண்டியளோ 🤣
-
https://www.investopedia.com/terms/c/currentaccountdeficit.asp
-
நான் நினைக்கின்றேன் சட்டம் நீதித்துறை களவு பொய் கொலை சார்ந்தே இருப்பதால் இதில் அதிகம் இது போன்ற குற்றச்சாட்டுதல்களும் தவறுகளும் இருக்கமுடியும் என??
-
By நன்னிச் சோழன் · Posted
அடிபாட்டுச் செய்திகள் செய்திகள் இதற்குள் 1999 ம் ஆண்டு திசம்பர் மாதம் 14 ம் திகதி 'தமிழ்நெற்' என்ற ஆங்கில வலைத்தளத்திலும் 'உதயன்' என்ற உள்ளூர் தமிழ் நாளேட்டிலும் வெளிவந்த செய்திகளின் தொகுப்பு உள்ளது. இங்கு குறிப்பிடப்பட்டுள்ள செய்தி வெளியீட்டு நேரமானது தமிழீழ நேரம் என்பதை அறிக. துணைப்படைகள் படைக்கலன்களை அகற்றுகின்றனர் - புலிகளின் குரல் மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=13&artid=4355 செய்தி வெளியீட்டு நேரம்: நண்பகல் 8:57 தமிழாக்கம்: நன்னிச் சோழன், 27/06/2022 சிறிலங்கா தரைப்படையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளுக்குள் விடுதலைப் புலிகள் தொடர்ந்து முன்னேறி வருவதாக புலிகளின் குரல் இன்று நண்பகல் தனது சிறப்பு செய்தி ஒலிபரப்பில் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் "துணைப்படை பிரிவுகள்" அண்மையில் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்து படைக்கலன்கள், கணைகள் மற்றும் ஏனைய படைய தளவாடங்களை அகற்றுவதில் ஈடுபட்டுள்ளதாக வானொலி கூறியது. குடாநாட்டின் தெற்கு முனையில் இன்று சனிக்கிழமை முதல் விடுதலைப்புலிகள் சிறிலங்கா தரைப்படை நிலைகள் மீது தாக்குதல்களை ஆரம்பித்துள்ள நிலையில் இன்று சண்டை தணிந்துள்ளதாக யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா தரைப்படை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனையிறவில் உள்ள முதன்மை சிறிலங்கா தரைப்படை கூட்டுப்படைத்தளத்திற்கு கிழக்கே உள்ள தளங்களில் இருந்து சிறிலங்கா தரைப்படையினர் தந்திரவழிவகையாக பின்வாங்கியுள்ளதாக வட்டாரங்கள் உள்ளூர் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தன. இதேவேளை, யாழ்ப்பாணத்தின் வடக்கில் இன்று சிறிலங்கா தரைப்படை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பை வலுப்படுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனையிறவுப் பரப்பில் உள்ள நிலைகள் சிறிலங்கா தரைப்படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை முறியடித்துள்ளதாகவும் கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட புலிகளைக் கொன்றதாக சிறிலங்கா தரைப்படை வார இறுதியில் கூறியிருந்தது, ஆனால் விடுதலைப் புலிகள் தாம் 38 போராளிகளை மட்டுமே இழந்ததாகக் கூறியது. ஆனையிறவு முகாமுக்கு அருகில் உள்ள மூன்று முக்கிய கரையோரத் தளங்களை கடந்த சில நாட்களில் பரம்பிய போது நூற்றுக்கணக்கான சிறிலங்கா தரைப்படையினரைக் கொன்றதாக அல்லது காயப்படுத்தியதாக விடுதலைப் புலிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு அமைச்சோ சிறிலங்கா தரைப்படை இழப்புகளை 8 பேர் கொல்லப்பட்டனர் என்றது. இதேவேளை, சிறிலங்கா படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சேணேவி மற்றும் கணையெக்கி வேட்டு பரிமாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தென்மராட்சி குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் உள்ள அரச அதிகாரிகள் மற்றும் உதவிப் பணியாளர்கள் சாவகச்சேரி நகரில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இல்லை என்றும், கடைகள் திறக்கப்பட்டாலும், சிலர் இன்று தெருக்களில் பொருட்களை வாங்குவதைக் காணமுடிந்தது என்றனர். அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது, என்றனர். தனங்கிளப்பு பகுதியில் சிறிலங்கா வான்படை தாக்குதல் உலங்குவானூர்திகள் உந்துகணைகளை வீசி எறிவதையும் சுடுவதையும் கண்டதாக குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர். மேலும் விரிப்புகள் தெரியவில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர். வடமராட்சி கிழக்கு கோட்டத்தில் தாளையடி, மருதங்கேணி பிரதேசத்தில் உள்ள வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள் தாளையடியில் உள்ள தேவாலயத்தில் தங்கியுள்ளனர். செம்பியன்பற்று நோக்கி மேலும் வடக்கே செல்ல விரும்புவதாக அப்பகுதி உள்ளாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வாறாயினும், சிறிலங்கா தரைப்படையினர் அவர்களை தற்போது இருக்கும் இடத்திலிருந்து நகர்த்த அனுமதிக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இச்சிக்கலை பரப்பின் பிரதேச செயலாளர் திரு.எஸ்.வேலாயுதப்பிள்ளை யாழ்ப்பாண அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தாளையடியில் 60 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 பேர் தங்கியிருப்பதாக தேவாலய அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் சிங்கள வைத்தியர்களை ஏற்றிச் செல்லுமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் மறுமொழியளித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குடாநாட்டில் சண்டை அதிகரித்துள்ள நிலையில், மருத்துவர்கள் யாழ்ப்பாணத்தில் இருப்பது பாதுகாப்பற்றது என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று தெரிவித்தது. சிறிலங்காவினால் ஒப்படைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் என கூறப்படும் 11 இளைஞர்களின் சடலங்கள் இன்று பிற்பகல் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக கொழும்பில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பேச்சாளர் கர்ச குணவர்தன பின்னர் தெரிவித்தார். ********
Recommended Posts