கவிதைக் களம்
கள உறுப்பினர்களின் கவிதைகள் | கவிதை மொழியாக்கங்கள்| பாடல் வரிகள்
கவிதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
772 topics in this forum
-
விதியின் சிக்கலான கோடுகளுக்கிடையே இணைந்த சுதந்திரத்துடன், மென்மையாக்கப்பட்ட சொற்கள் இன்னும் உச்சரிக்கப்படுகின்றன. முந்தைய வாழ்க்கை மற்றும் சந்தோசமான நாட்கள் இன்னும் அழைக்கின்றன. மாத்திரைக் குடுவைகள் மட்டுமே நிவாரணமளிக்குமாதலால், மரியாதைக்குரிய தலைகள் குனிந்து, முதுகுத் தண்டுகள் வளையத் தொடங்கின. ஒருபோதும் திருப்பிச் செலுத்தப்படாத சபிக்கப்பட்ட வாழ்வு கிடைத்தபின், எம் பரிபூரண ஆத்மாவின் சபதங்களின் குரல் அடங்கிப் போனது. ஆழ்மனதில் நேசித்த பூமி நினைவுகளுடன் கலந்தது. ஒரு சிறகு காற்றில் மிதந்து வருவதைப் போல, …
-
- 0 replies
- 536 views
-
-
புலராத பொழுதென்று எதுகும் இல்லை கடக்காத துயர் என்று யாதும் இல்லை முடியாத பகை என்று ஒன்றும் இல்லை கூவாத குயில் என்று எங்கும் இங்கில்லை ஒரு நாளும் மறையாத ஒளி வேண்டினேன் ஒரு கோடி தவம் இங்கு நான் செய்கிறேன் ஆனந்த யாழோடு சுரம் தேடுறேன் அதனோடு தனியாக இசை மீட்கிறேன் அறமே தான் வாழ்வாக அதைத் தேடினேன் ஒரு போதும் குனியாத நிலை வேண்டினேன் அறிவோடு ஞானங்கள் தினம் தேடினேன் என்றும் யார் என்று எனைத் தேடினேன் கனவு காணாத மனிதரென்று எவருமில்லை காதல் பேசாத மொழி என்று எதுகுமில்லை காலம் சொல்லாத கதை என்று எதுகும் இல்லை கவிதை இல்லாத உலகு என்று இருப்பதில்லை சிற்பி செருக்காத சிலை என்று ஒன்றும் இல்லை சலங்கை ஒலிக்காத சுரம் என்று யாதும் இல்லை …
-
- 3 replies
- 524 views
-
-
ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 99 எனக்குப் பேய் பிடித்திருக்கிறது அவளுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்கிறார்கள் இருக்கிறதா இல்லையாவென்று தெரியாவிட்டாலும் எனக்கும் பேய் பிடித்திருக்கிறது அவளுக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக மட்டுமின்றி, பேய்களுக்குக் கோயில் இல்லை வேளா வேளைக்குப் பூஜை இல்லை அபிஷேகம் அலங்காரம் காணிக்கை உண்டியல் அறவே இல்லை தேர் இல்லை திருவிழா இல்லை சப்பார பவனி கூட இல்லை கடவுளைப் போல் பேய்கள் சாதி மதம் பார்ப்பதில்லை. ஓட்டத்தான் வேண்டுமெனில் கடவுள்களை ஓட்டிவிட்டு பேய்களை ஓட்டுங்கள் ஒரு சாதாரணக் கவிஞனின் அசாதாரணக் கவிதைகள் 98 பாத்திரமறிந்து பிச்சையிடுகிறது தெய்வம் தங்கத்தட்டில் வைரக்கற்களையும் அலுமினியத் தட்டில் சில்லர…
-
- 228 replies
- 34k views
-
-
"மேல் தாவணி காற்றில் பறக்க புல் தரைகள் வெட்கிக் குனிய கால்கள் சொருகியதை கேட்டுப் பாரு நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்!" "நெற்றி உடன் நெற்றி மோதி நெஞ்சு இரண்டும் கலந்து துடித்து நெருப்பாய் எரிந்ததை கேட்டுப் பாரு நெல்லுமணி சொல்லுமடி எங்க காதல்!" …
-
- 0 replies
- 156 views
-
-
"விதை" "விதை விதைத்தவன் வினை அறுப்பான் விளைச்சல் தந்தால் பொருள் ஈட்டுவான் வித்து மடிந்தால் விம்மி அழுவான்!" "வாழ்வும் சாவும் மனித வயலில் தாழ்வும் உயர்வும் வளரும் பக்குவத்தில் விதைப்பு சரியாகட்டும் இதயம் செழிக்கட்டும்!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 273 views
-
-
எத்தனையோ துன்பத்திலே உலகம் கிடக்குது எத்தனையோ துன்பத்திலே உலகம் கிடக்குது இரவு பகலாய் கொரோனா பிடிக்க மனிதன் அலைகிறான் ஆனா இம்பட்டுத்தான் வாழ்கை என்று ஒருத்தன் சொல்கிறான் இனி கடவுள் இருக்கா என்று வந்து குதர்க்கம் பேசுறான் முதலாளித்தும் முடியுது என்று சோசலிசம் சொல்லுது அந்த வல்லரசு நாட்டுக்கெல்லாம் வந்த வினை என்கிறான் கர்மம் வந்து தொலைக்குது என்று அந்த சாமி சொல்லுது அட அடுத்த நாள் உணவுக்காகா மனிதன் அழுகிறான் அவனுக்கு கடவுள் உண்டு இல்லை என்ற விவாதம் தேவையா இல்லை கர்மம் வந்து தொலைக்குது என்று சொல்லத் தேவையா இத்தனைக்கு நடுவினிலே மனிதம் துடிக்குது இனி என்ன செய்வேன் வாழ்வுக்கு என்று ஏங்கி துட…
-
- 2 replies
- 1.1k views
-
-
https://www.google.co.uk/imgres?imgurl=https%3A%2F%2Fresize.indiatvnews.com%2Fen%2Fresize%2Fnewbucket%2F1200_-%2F2023%2F08%2Fchandrayaan-3-5-1691547437.jpg&tbnid=cJLSHrbC4Cr1ZM&vet=12ahUKEwi-lLWblvaAAxXIrycCHQuxAj4QMygKegUIARCUAQ..i&imgrefurl=https%3A%2F%2Fwww.indiatvnews.com%2Fnews%2Findia%2Fchandrayaan-3-update-isro-spacecraft-performes-significant-manoeuvre-closer-to-moon-lunar-surface-2023-08-14-886607&docid=WRXkMNPWYsENMM&w=1200&h=696&q=chandrayaan-3&ved=2ahUKEwi-lLWblvaAAxXIrycCHQuxAj4QMygKegUIARCUAQ சந்திரயானின் வெற்றி மேலைத் திசையினன் அம்புலி சென்று விரைந்து திரும்புகையில் - இங்கு பாலைக்கறந்ததைக் கல்லினில் வார…
-
- 2 replies
- 687 views
-
-
"Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது. உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன். "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!" "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானி…
-
- 0 replies
- 325 views
-
-
https://www.facebook.com/photo/?fbid=10159991441351950&set=a.10151018148611950 இலங்கையை ஆள யார்வேண்டும்? அற்பனாய், குடும்பத்துள்ள அனைவரும்சேர நாட்டை விற்பனை செய்திடாத வீரனாயொருவன் வேண்டும் இனமுரண்பாடு தன்னை என்றுமே அணுகவொட்டா குணமுடையோனாய் கொள்கைக் குன்றென ஒருவன்வேண்டும் புத்தனின் மார்க்கம்தன்னைப் புனிதமாய்யேற்று அந்தச் சத்திய வழியிலேகும் தருமனாயொருவன் வேண்டும். இத்தனை தகுதியோடும் இலங்கையில் யாருமுண்டா? அத்தனைபேரும் சொத்தை, ஆளவே தகுதியில்லார். நல்லியல்பிழந்தோர் கெட்ட நடத்தையர் போலிவேசப் புல்லியர், பொய்யர்நாட்டின் புகழினைக் கெடுத்த தீயோர் இல்லையே ஒளியெமக்கென் றிருண்டதோர் காலம்கண்டு சொல்லிட மக்கள்தங்கள் சொகுசுக்காய் வாழ்ந்தகீழோர் …
-
- 6 replies
- 804 views
-
-
தமிழீழ மூச்சே எதுக்கம்மா போனாய் முள்ளி வாய்க்கால். ஊரின் பெயரே உன்னை எச்சரிக்கவில்லையோ... இல்லை.. முள்முடி தரித்த தூதரின் நிலை போல் முள்ளி மேல் நடக்கப் பிரியப்பட்டனையோ..?! சத்திய சோதனைக்கு சுய பரிசோதனைக்கு அதுவா வேளை..??! நாலாம் இராணுவ வல்லரசையே வன்னிக் காட்டுக்குள் கட்டிப் போட்டு கால் பறித்து கதறி ஓட வைத்த அனுபவம் இருந்தும்.. ஆழ ஊடுருவல் அங்கொன்றும் இங்கொன்றும் இருந்ததுக்காய் எதுக்கம்மா காலி செய்தாய் காட்டை..! இன்று வன்னிக்காடுகள் கண்ணீர் விடுகின்றன காவல் தெய்வங்கள் இல்லா நிலையில் தம் கால் தறிபடும் தறிகெட்ட தனம் தலைவிரித்தாடுவதால்.…
-
- 0 replies
- 854 views
-
-
இழப்பும் நினைப்பும்… நீலத் திரைக் கடலில் நீராடி வந்த பகலவன்; மஞ்சள் பூசி எழுந்து மனதுக்கு மகிழ்ச்சி தந்தான். கோழிகள் குருவிகள் இரை தேட கொண்டைச் சேவல்கள் பின்தொடர ஆடுகளை மாடுகளை வெளியேற்றி அப்பா சென்றார் கோடிப்; பக்கம் இவற்றைப் பார்த்து இரசித்தபடி எனது பணியைத் தொடர்வதற்கு வேப்ப மரத்தில் குச்சி பிடுங்கி – அதன் வேரில் இருந்து பல் தேச்சேன். செம்பில் கொஞ்சம் நீரெடுத்து தெளித்து மெதுவா முகம் கழுவி காய்ந்த சேலை யொன்றினைக் கையிலெடுத்து முகம் துடைத்தேன் அடுப்பில் காச்சிய ஆட்டுப் பாலை ஆவி பறக்க ஆற்றி எடுத்து மூக்குப் பேணியில் முழுதாய் நிரப்பி முற்றத்தில் தந்தார் அப்பாச்சி. முண்டி முண்டிக் …
-
- 0 replies
- 1.3k views
-
-
முதுமையும் மறதியும் நினைவு நினைவு மறந்து விட்டது நினைக்காமல் இருக்கவும் முடியவில்லை . அம்மாவின் மறதி என் பிறந்த தினத்தில் எப்பவும் மறக்காமல் வந்து வாழ்த்து சொல்லும் அம்மா இன்று எப்படி மறந்தாளோ . முதுமை வயது திண்டு கொண்டு இருக்கிறது என்னை மறந்து போகிறேன் என்னை என்ன செய்ய . கனவுகள் என் கனவுகளை சட்டமாக்கி கொள்ள அரசிடம் அப்பீல் கொடுத்து இருக்கிறேன் . மறதி மறதி மட்டும் மறக்காமல் இருக்கிறது மற்ரவை எல்லாம் மறந்து விட்டது . மறந்து போகிலேன் எல்லா என் நினைவுகளும் மறந்தே போகிலும் உந்தன் நினைவை மட்டும் மறக்காது இருக்கச் செய்வாய் தாயே . வெள்ளை மயிர் வெள்ளை மயிர் ஒன்று க…
-
- 4 replies
- 1.7k views
-
-
"அரக்கர் கொட்டத்தை காலம் அடக்கும் !" "அப்பாவை கடத்தி இல்லாமல் செய்தான் அநியாயம் கேட்க புத்தனும் இல்லை அம்மாவின் கண்ணீரை இன்று துடைக்கிறேன் அரக்கர் கொட்டத்தை காலம் அடக்கும் !" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
-
- 2 replies
- 1.3k views
-
-
ஆதியும் அந்தமும் கவிதை [துன்பம் / பிரிவில்லையே] "துன்பம் ஒன்றும் புதிது எனக்கல்ல இன்பம் என்றும் நிலைத்ததும் அல்ல! விண்ணில் பறந்தது நிலத்துக்கு விழும் மண்ணில் முளைத்தது மேகம் நோக்கும்!" "காதல் கொண்டேன் அவளை நம்பி மோதல் தந்து பிரிந்து போனாள் சாதல் தேடி குதித்தும் பார்த்தேன் நோதல் தந்தும் உயிர் பிரிவில்லையே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
-
- 0 replies
- 339 views
-
-
தையில் பிறப்பாய் மாசியில் குளிர்வாய் பங்குனியில் உலர்வாய் சித்திரையில் புலர்வாய் வைகாசியில் மிளிர்வாய் ஆனியில் அடிப்பாய் ஆடியில் கூழல்வாய் ஆவணியில் மங்குவாய் புரட்டாதியில் நனைவாய் ஐப்பசியில் பொழிவாய் கார்த்திகையில் சுடர்வாய் மார்கழியில் வீழ்வாய்..! ஆண்டே இது தான் ஆண்டவர் வரலாறு.
-
- 0 replies
- 831 views
-
-
"ஆரத்தியெடுத்து தினம் வணக்கும் தெய்வமானதோ?" "உள்ளங்கள் அறிந்து மகிழ்ச்சி கொண்டு உரிமைகள் பகிர்ந்து தன்னலம் துறந்து உயிரோடு கலந்து உடலோடு உறவாடி உண்மையாய் வாழ்ந்து உற்சாகம் தந்தவளே!" "சொத்தாய் நல்ல குழந்தைகள் பெற்று சொந்தமாய் ஆதரவான உறவுகள் பெற்று சொக்கி போகும் பேரழகு பெற்று சொல்லாமல் கொள்ளாமல் போனது எனோ ?" "ஒட்டிஉரசி கூட இருந்து விட்டு ஒழுங்கை எங்கும் நிலைநாட்டி விட்டு ஒன்றும் சொல்லாமல் எம்மை விட்டு ஒதுங்கி நீமட்டும் சென்றது சரியோ ?" "அன்பாக எம்மை அணைத்து ஆரத்தழுவி அறிவுரை கூறி வாழ்த்தி முத்தமிட்டு அலங்காரம் செய்து க…
-
-
- 7 replies
- 851 views
-
-
-
- 0 replies
- 392 views
-
-
பேரன் 'இசை'யின் இரண்டாம் பிறந்த நாள்! / It's Grandson's ISAI's second birthday! [13 / 03 / 2025] "பேரனின் இரண்டாம் பிறந்த நாள் பேரொலி முழங்க 'இசை'யுடன் கொண்டாடுவோம்! பேசாமல் ஆடாமல் இருக்க முடியாது பேரறிவுடன் 'இசை' என்றும் வாழட்டும்!" "காலம் ஓடியதை நம்பவே முடியல காற்றாய் வேகமாய் அது பறந்திட்டு? காளன் மாதிரி குட்டையாய் இருந்தாய் கார்த்திகை மீனாய் உயர்ந்து ஒளிர்கிறாய்!" "உடம்பு பிரண்டு எழுந்து உட்கார்ந்து உறுதி கொண்டு விரைந்து தவழ்ந்து உயர்ந்து நின்று பாதத்தால் நடந்து உற்சாகம் கொண்டு வென்று விட்டாய்!" "முழுஆண்டு இரண்டு முடிந்து விட்டது மும்முரமாக கதைகத் தொடங்கி விட்டாய் ! முக்கனி சுவை முழுதாய் கொண்ட முந்திரிகை கேக்கை சுற்றி கூடுவோம்!" "பிறந்த நாள…
-
- 0 replies
- 315 views
-
-
கடைசிப் பக்கத்தில் முடியாது தொடரும் கதைப்புத்தகம் வாழ்க்கை... மற்றவர்கள் சிபாரிசில் கிடைக்கும் உயர்வான வேலையை விட உன் திறமைக்குக் கிடைக்கும் கூலிவேலை மேன்மையானது... அனுசரித்து வாழ்வதே வாழ்க்கை எனினும் எப்போதும் அனுசரித்து வாழ்வது வாழ்க்கையே இல்லை.... தோல்விக்குத் தோள் கொடுங்கள் வெற்றிக்கு அதிகாலை விழித்திருங்கள் விமர்சனங்கள் எந்நாளும் வரவேற்றிடுங்கள் புகழுரையை கேட்காமல் கடந்திடுங்கள் இதுதான் வாழ்க்கையென வாழ்ந்திடுங்கள்... சரவிபி ரோசிசந்திரா
-
- 0 replies
- 789 views
-
-
இன்றைய நாள்(31.05.2020) 39 ஆண்டுகளுக்கு முன் கல்வி ஒளி தந்த யாழ் நூலகத்தின் கடசிநாள். எரியூட்டி எரித்த எதிரிகளும் வெட்கப்படும் நாள். உயிரோடு எரிந்த யாழ் நூலகம்..! 1959இல் ஆலமரமாய் யாழ்நகர் நடுவில் ஆயிரக்கணக்கில் ஓலைச்சுவடிகள் கோப்புக்களோடு.. தொண்நூற்றி ஏழாயிரம். தமிழ்,ஆங்கில.. தொன்மைநிறைந்த புத்தகக் குவியல்கள் எங்களின்.. கல்விக்கண்ணை திறந்த கோயிலாய் காலம் முழுதும்-அந்த ஒளியில் வாழ்ந்தோம். ஏசியாவின் முதல்தரப் படிப்பகம் என்ற பெருமையும் எமக்குக் கிடைத்தது. தமிழனின் உயிரோ கல்விதான் என்று கண்டான் அன்றைய ஆட்சியின் கொடிய…
-
- 2 replies
- 1.1k views
-
-
நீக்கமற்ற நினைவுகளில்......! ____________________________ பதின்மூன்று வயதில் காதலித்தாய். பதின்மக்காதல் உன் வாழ்வை பலிகொண்ட துயரை நானறியேன். ஆனால் உனக்காக அழுதிருக்கிறேன். நீயே ஒரு குழந்தை - உன் வயிற்றில் குழந்தை வந்த போது ஒளித்துத் திரிந்தாய். பிறகு நீ பெரிய மனிசிபோல என்னைத்தாண்டிப் போன தருணங்களில் உன்னோடான உறவு துண்டிக்கப்பட்டது. உன் காதல் உன்னைவிட்டு வேறோரு காதலில் உன்னை வஞ்சித்த போது நீ தனித்துப் போனாய். காலம் எழுதிய கதையில் நீ நான் மறந்தே போனது. அவரவர் வாழ்வு அவசரம் யாரும் யாரையும் தேடவில்லை. உனது ஞாபகமும் அரிதாய் நீ நினைவுகளிலிருந்து மெல்லத் தேய்ந்து மறைந்தே போனாய்.…
-
- 0 replies
- 1.7k views
-
-
"காசேதான் கடவுளடா" & "தர்மம் தலை காக்கும்" "காசேதான் கடவுளடா" "காசேதான் கடவுளடா ஆலயமும் வணிகமடா காதல் வேண்டுமா பரிசு கொடடா காதலர் தினம் வணிக சூழ்ச்சியடா! காலம் தாழ்த்தாமல் கையூட்டு கொடுத்தால் காரியம் நிறைவேறும் வெற்றியும் வருமடா!" "ஆண்டவனை வணங்க அர்ச்சனை வேறு ஆரம்ப கல்விக்கும் நன்கொடை வேண்டுமடா! ஆராத்தி தட்டிலும் ஏதாவது போடணும் ஆலவட்டம் ஏந்தினால் நன்மை கிடைக்குமடா ஆராய்ந்து பார்த்தல் அழுவதா சிரிப்பதா!" "தர்மம் தலை காக்கும்" "தர்மம் வகுத்த வழியில் நின்று கர்வம் மறந்து ஆசை துறந்து ஆர்வம் கொண்டு முனைப்புக் காட்டி அர்த்தம் உள்ள உதவி செய்யின் ஊர் வாழ்த்தும் உலகம் போற்றும்!" "தாய் தந்தை இரு…
-
- 0 replies
- 277 views
-
-
பிரிவுகள் வலியை கொடுத்தாலும் , அந்த பிரிவு மட்டுமே நம்மை தள்ளியும் வைக்கிறது நிரந்தர பிரிவிலிருந்து. தவிப்புகளை தாங்கி துடிக்கும் இதயங்களுக்கு மட்டுமே தெரியும் பிரிவுகளை தவிர்க்க பிரிந்து துடிப்பதில் இருக்கும் வலி ( பேச துடித்தும் பேசாமலே விலகிச் செல்கிறது இங்கு பல உறவுகள் நிரந்தர பிரிவை தவிர்க்க )
-
- 0 replies
- 1.2k views
-
-
எழுதியவை எல்லாம் கவிதையா? என எண்ணிய வேளையில் என்னிடம் பேசியது என் எழுதுகோல் உள்ளத்தில் உறையும் உணர்வை ஊற்றாய் உரைப்பது கவிதையா? நெஞ்சத்தில் நெருடும் நினைவுகளை நிரல்படக் கோர்ப்பது கவிதையா? வலிகளுக்கு அருமருந்தாய் மனதை வருடுவது கவிதையா? வரலாற்றின் பழம்பெரும் உண்மையை அழியாமல் வடிவமைப்பது கவிதையா? இயற்கையின் கொடையை இனிமையாய் இயம்புவது கவிதையா? காதலின் கவிரசத்தைக் காய்ச்சி பருகுவது கவிதையா? எது கவிதை? என்னுள் ஆயிரம் கேள்விகள் உதயம் கவிதை ஆயிரம் எழுதுபவர் பலராம் கவிதையாய் வாழ்பவர் வெகுசிலராம் விதையை விதைத்திடும் கவிதை விடைபெறா உலகின் நடைப்பாதை எது கவிதை? எழுதும…
-
- 14 replies
- 1.7k views
-
-
வெறுப்பினால் எதையும் வெல்ல முடியாது அன்பினால் மட்டுமே அது முடியும். Hatred does not cease through hatred at any time. Hatred ceases through love. This is an unalterable law.” – Buddha —————————————————————————————————————— மண்ணைத் தின்னும் ஆசையோடு-பா.உதயன் இலங்கையில் இப்போ வட கிழக்கில் பேரினவாதம் என்ற பெரும் பேய் மதம் என்ற பெயரில் மண்ணை தின்று கொண்டிருக்கிறது அமைதியாய் அரச மரத்தடியில் இருந்த புத்தரை அங்கும் இங்குமாய் அந்தப் பேய் அவர் அமைதியை குலைத்து இழுத்துத் திரிகிறது பாவம் புத்தர் என்ன செய்வதென்று தெரியமால் இன்னும் அமைதியாகவே இருக்கிறார் அரச மர நிழலோரமாய் அமைதியையும் அன்பையு…
-
- 1 reply
- 841 views
-