கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
658 topics in this forum
-
கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 1 பாகம் – 1 / “கடலின் உப்பில் கரைந்த வரலாறு” உடப்பூர் அல்லது உடப்பு (Udappu) என்பது இலங்கையின் வடமேற்கில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூராகும். இக்கிராம மக்கள் திரௌபதியைத் தெய்வமாக்கிக் கோயில் எழுப்பி வழிபடுவதுடன் நாட்டுக்கூத்து, வில்லுப்பாட்டு போன்ற பாரம்பரிய கலை வடிவங்கள் ஆலயத் திருவிழாக் காலங்கள் மற்றும் ஏனைய விழாக்களில் மேடையேற்றி தமிழ் 'இயல் இசை, நாடகத்தை' போற்றி பாதுகாத்து வருகிறார்கள். வடமேல் மாகாணத்தில் கற்பிட்டி தொடக்கம் நீர்கொழும்பு வரை தமிழர்கள் வாழ்ந்து வரும் பகுதியாம். இப் பிரதேசங்கள் யாழ்பாண இராசதாணியின் கீழ் ஆட்சியில் இருந்தற்கு…
-
- 6 replies
- 234 views
-
-
சிறு கதை - 201 / “குனிய மறுத்த மனிதன்” [வளைவில்லா முதுகெலும்பு] ஜெர்மனியின் அமைதியான புறநகர்ப் பகுதிகளில் ஐம்பத்தைந்து, அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு இடம்பெயர்ந்த இலங்கைத் தமிழர், அரவிந்தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவர் தனது வாழ்க்கையை அங்கே மெதுவாகக் ஒவ்வொரு செங்கலாகக், தனது விடா முயற்சியாலும் மனைவியின் ஊக்கத்தாலும் கட்டியெழுப்பினார். இலங்கையில் போரின் நிழலில் தனது வாலிப பருவத்தை கழித்த அவர், சில தசாப்தங்களுக்கு முன்பு தனது தாயகத்தை விட்டு வெளியேறி, நினைவாற்றல் மற்றும் உறுதியை மட்டுமே சுமந்து ஜெர்மனி வந்தார். ஜெர்மனியில், அவர் ஒரு சிறிய தொழிலைத் தொடங்கினார். அது பிரமாண்டமாக இல்லை, ஆனால் அது நேர்மையானது. அவருக்கு அன்பான மனைவி, ஒழுக்கமான குழந்தைகள் மற்றும் அமைதி…
-
- 0 replies
- 80 views
-
-
சிறு கதை - 198 / "காதலர் தினம் [VALENTINE DAY]" / பகுதி 1 அன்று இலண்டன் பல்கலைக்கழக வளாகத்தில், கடுமையான குளிர் காற்று, மனிதர்களின் முகங்களை சிவப்பாக்கியிருந்தது. குளிர் வெறும் உடலுக்கு மட்டும் அல்ல; அந்த நாளில் மனங்களுக்குள் கூட ஒரு எதிர்பார்ப்பு நடுங்கிக் கொண்டிருந்தது. அது 14.02.2025, காதலர் தினம் [வாலண்டைன் டே]. உலகம் முழுக்க காதல் ஒரு நாளுக்குள் அடைக்கப்பட்டு கொண்டாடப்படும் நாள். வேடிக்கையாக இல்லையா? தந்தையர் தினம், தாயார் தினம் எனற வரிசையில், இன்று காதலர் தினம். "நாளைத் தேர்ந்து எடுத்து அன்பு செய்தோரல்ல அவர்கள்; நாம் பிறந்த நொடியிலே அன்பு நம்மோடு பிறந்தது! நன்றி சொல்லாத நாளிலும் தாயின் கரம் குறையாது; நினைவு மறந்த காலத்திலும் தந்தையின் நிழல் விலகாது! நாட்காட்டி…
-
- 2 replies
- 185 views
-
-
கதை - 195 / தாத்தா கந்தையா தில்லையுடன் மூன்று சகோதரர்களும் கலிஃபா கோபுரமும் மற்றும் துபாய் சாகசமும் / பகுதி 1 🏡 பாகம் 01 – வெல்வின் கார்டன் சிட்டியில் ஏற்பட்ட முதல் ஆரவாரமும் ஆச்சரியமும் காலைக் கதிரவன் மெதுவாக எழுந்து, வெல்வின் கார்டன் சிட்டியின் [Welwyn Garden City] வீதிகளைத் தங்க நிற ஒளியால் அலங்கரித்தது. ஐந்து வயதிற்கும் சற்று குறைவான 'நிலன்', அரை உறக்கத்தில் கண்களைக் கசக்கிக் கொண்டு, கார் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தான். இவ்வளவு சீக்கிரம் தாத்தா ஏன் அவர்களை காரில் கூட்டிக் கொண்டு போகிறார் என்பது அவனுக்குப் புரியவில்லை. குட்டி 'ஆரின்' தனது குழந்தை இருக்கையில் பாதி தூக்கத்தில் இருந்தான்; ஆனால் மூத்த அண்ணன் 'திரேன்' மகிழ்ச்சியுடன் துள்ளிக் கொண்டிருந்தான். உறக்கம் க…
-
- 8 replies
- 369 views
-
-
சிறு கதை - 197 / எல்லாளன் & விஹாரமஹாதேவி (இரு ஆசிரியர்களின் காதல் கதை) திருகோணமலையில் உள்ள அந்த தமிழ் பாடசாலை, வெளியில் பார்க்கும் போது சாதாரண பள்ளிக்கூடமாகத் தோன்றினாலும், உள்ளே அது ஒரு சிறிய பாராளுமன்றம் போல இயங்கியது. சட்டங்களுக்குப் பதிலாக சுற்றறிக்கைகள்; வாக்காளர்களுக்குப் பதிலாக மேற்பார்வையாளர்கள் [இன்ஸ்பெக்டர்கள்]; பாடப் புத்தகங்களை விட உண்மையான அரசியலை, வரலாற்றை நன்கு புரிந்து கொண்ட மாணவர்கள். அங்கு இளம் பட்டதாரி எல்லாளன் கணிதமும் இயற்பியலும் கற்பித்தான். அரசாங்கங்கள் மக்களுக்குக் கீழ்ப்படிந்ததை விட, எண்கள் அவனுக்குக் கீழ்ப்படிந்தன. அதே பாடசாலையில், இளம் பட்டதாரி விஹாரமஹாதேவி தமிழ் மாணவர்களுக்கு சிங்களம் கற்பித்தாள். மொழி ஆயுதமல்ல — ஆனால் அரசும் அதன் கூட்டா…
-
- 0 replies
- 71 views
-
-
கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 01 கண்மணி, தனது இளமைப் பருவத்தில், தன்னம்பிக்கை, ஆர்வம் உள்ளவராகவும், சக மாணவர்களாலும் குடும்பத்தினராலும் போற்றப்பட்டவராகவும் இருந்தாள். அவள் கல்வி, திருமணம், குழந்தைகள் மற்றும் மனநிறைவு [Education, marriage, children, contentment.] கொண்ட வாழ்க்கை எல்லாம் நேர்கோட்டில் நகரும் ஒன்றென்று அன்று நம்பி வளர்ந்தவள். இந்த வரிசை பெண்களுக்கு வேறுபடுவதாக யாரும் அவளுக்குச் சொல்லவில்லை. கண்மணி புத்திசாலி மற்றும் திறமைகள் பல தன்னகத்தே கொண்ட பெண்ணாக, மென்மையான தன்னம்பிக்கையுடன் தனது படிப்பை முடித்து, ஆசிரியராக தொழில் வாய்ப்பும் பெற்றாள். ஆரம்ப பாடசாலையில் ஆசிரியையாக, ஒழுக்கத்தையும் பொறுமையையும் கடைப்பிடித்து மாணவர்களுக்கு முழுமையாக பாடம் விளங்கும் வ…
-
- 5 replies
- 397 views
-
-
கதை - 194 / தை பிறந்தால் … / பகுதி 01 முல்லைத்தீவு கடற்கரையோரக் கடல் கவிதைக்கு மட்டும் சொந்தமானது அல்ல - அது குடும்பங்களுக்கு உணவளித்தது - உழைப்பாளிகளான மீனவரின் கைகளை கடினமாக வடிவமைத்தது - சொல்லப்படாத துயரத்தைச் சுமந்தது. கடல் எப்போதும் அலைகளால் மட்டும் பேசுவதில்லை. சில நேரங்களில் அது மௌனமாக நிற்கும் — அந்த மௌனம் தான் மீனவர்களை அதிகம் பயமுறுத்தும். கதிரவன் அந்தக் கடலுக்குப் பிறந்தான். ஒரு மீனவரின் மகனாக, அவன் கடினமாகப் படித்து, பட்டம் பெற்று, திரும்பி வந்தான் - அவன் தந்தையும், தாத்தாவும், அவர்களுக்கு முன் வாழ்ந்தவர்களும் எல்லோரும் கடலோடு வாழ்க்கையைப் பகிர்ந்தவர்கள். ஆனால் கதிரவன் மட்டும் பல்கலைக்கழகம் பார்த்தவன். “படிச்சா எல்லாம் மாறிடும்னு நினைச்சோம்,” என அவன் தாய…
-
- 2 replies
- 239 views
-
-
கதை - 193 / 'மதத்தைத் தாண்டிய காதல்' அல்லது தேவாலய மணிக்கும் தைப் பொங்கலுக்கும் இடையில் / பகுதி: 01 கிறிஸ்துமஸ் ஈவ் [christmas eve] சந்திப்பு டிசம்பர் 24 அன்று, யாழ்ப்பாணத்தின் அன்றைய மாலை மெதுவாக மங்கிக் கொண்டிருந்தது. நாட்காட்டியில் [காலண்டரில்] அது கிறிஸ்மஸ் ஈவ் [இயேசுநாதர் பிறந்த நாள் பண்டிகைக்கு முந்திய நாள்] என்று எழுதப்பட்டிருந்தாலும், யாழின் வானம் அதை எந்த மத நாளாகவும் கருதவில்லை. அது பைபிளில் காணப்படும் தேதி அல்ல. கிறிஸ்து டிசம்பர் 25 அன்று பிறந்ததாக ஒருபோதும் பைபிளில் கூறப்படவில்லை. அது ஒரு முன்மொழிவு மட்டுமே. அதுவும் கிறிஸ்து இறந்து 340 ஆண்டுகளின் பின்பே. அதனாலோ என்னவோ அது எப்போதும் போலவே — காற்றோடு, உப்புக் காற்றின் சுவையோடு, மண்ணின் நினைவோடு இருந்தது. ஆனாலு…
-
- 2 replies
- 207 views
-
-
கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 01 பகுதி: 01 - நல்லூர் திருவிழாவுக்கு வருகையும் & சந்திப்பும் ஆகஸ்ட் 2025 சூரியன் யாழ்ப்பாணத்தின் மீது பொன்னிறமாக பிரகாசித்தது. அதன் குறுகிய பாதைகளில் மாலைகள், இனிமையான கற்பூரப் புகை மற்றும் தவில் மேளங்களின் இன்னிசை ஒலிகளால் அதன் அரவணைப்பு நிரம்பியிருந்தது. நல்லூர் முருகன் திருவிழா அதன் உச்சத்தை எட்டியிருந்தது - ஆயிரக்கணக்கானோர் பிரகாசமான வேட்டிகளையும் அழகு மின்னும் புடவைகளையும் அணிந்து கொண்டு தெருக்களில் திரண்டனர். அவர்களின் கண்கள் அலங்காரமாக அலங்கரிக்கப்பட்ட தமிழ் கடவுளான, 'அலங்காரக் கந்தனைச்' சுமந்து செல்லும் தேரை நோக்கி உயர்ந்தன. “பஞ்சம் படை வந்தாலும் பட்டினி தான் வந்தாலும்…
-
- 7 replies
- 534 views
-
-
தேசங்களின் குரல்கள் ---------------------------------- இலங்கையிலும், மும்பையிலும் இப்பொழுது ஒரே நேரம் தானே என்று அவர் கேட்கும் போது, ஆமாம் என்று தாமதிக்காமல் சொல்லிய பின் தான் அவரது கேள்வி ஆச்சரியத்தைக் கொடுத்தது. அவர் அப்படிக் கேட்டது மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவர் மும்பையிலிருக்கின்றார் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். நான் வேலை செய்யும் நிறுவனத்திற்கு மும்பையில் ஒரு கிளை இருக்கின்றது. இப்பொழுது அமெரிக்காவிலும், இந்தியாவிலும் தொழில்நுட்ப நிறுவனங்கள் பணியாளர்களை வீடுகளில் இருந்து வேலை செய்வதை முடிந்த வரை குறைக்கும் அல்லது முற்றாகவே தவிர்க்கும் முயற்சிகளை ஆரம்பித்து அதில் வெற்றியும் கண்டுவிட்டார்கள். மும்பையில் அவர்களில் சிலர் தினமும் மூன்று அல்லது நான்கு மணித்தியாலங்கள் …
-
-
- 7 replies
- 556 views
- 1 follower
-
-
கதை - 192 / "மெழுகுவர்த்தி கேள்வியை சந்தித்தபோது / When the Candle Met the Question" / பகுதி / Part: 01 / In English & Tamil யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மதிய வேளைகளில் வழமைபோல் சுறுசுறுப்பாக இருந்தது. மருத்துவப் பீட மாணவர்கள், குறிப்பாக மூத்த இளங்கலை மாணவர்கள், உடற்கூறியல் குறிப்புகளாலும் தூக்கமில்லாத இரவுகளாலும் சூழப்பட்டு, அந்த சுமைகளுடன் வேகமாக நடந்துகொண்டு இருந்தார்கள். அதேவேளை, குறிப்பாக இளைய கலைப்பீட இளங்கலை மாணவர்கள் புத்தகங்களை கைகளில் ஏந்தி, இலக்கியம், அரசியல் மற்றும் வாழ்க்கைக்கு இடையே அலைந்து திரிந்த எண்ணங்களுடன் மெதுவாக நடந்துகொண்டு இருந்தார்கள். உயரமான, அமைதியான, எதையும் கேள்விகேட்டு அதன் உண்மைத் தன்மையை அறிவதில் எப்பொழுதும் ஆர்வம் கொண்டவனாக, ஆனால் அதே ந…
-
-
- 3 replies
- 255 views
-
-
கற்க கசறும் ------------------ எல்லா மனிதர்களிடமும் ஏதோ ஒரு திறமையாவது இருக்கும் என்கின்றார்கள். ஆனாலும் அது என்ன திறமை எங்களிடம் வந்து இருக்கின்றது என்று பலராலும் கடைசிவரை கண்டுபிடிக்க முடியாமலேயே போய் விடுகின்றது. நாங்கள் சரியான திசையில் தேடுவதில்லை போல. ஒருவேளை இந்த அடிப்படையே பிழையாகவும் இருக்கலாம். திறமை என்று ஒன்று கட்டாயம் அமைவதும் இல்லை போலும். ஒரு வயதுக்குப் பின் ஒழுங்காக நித்திரை கொண்டு எழும்பினாலே, அதுவே பெரிய திறமை என்றாகி விடுகின்றது. ஆகவே இந்த திறமையை துப்பறியும் வேலையை இளமைக் காலத்தில் செய்தால் தான் அதைக் கண்டறியும் சாத்தியம் அதிகம் உண்டு. மேற்கத்தைய நாடுகளில் பாடசாலைகள், கல்லூரிகள், சூழல் என்பன ஒவ்வொருவரிடமும் இருக்கும் தனித்திறமைகளை கண்டறிய கொஞ்சம் அதி…
-
-
- 10 replies
- 610 views
-
-
மரப்பாவம் ----------------- 'உங்கள் வீட்டில் நிற்கும் தென்னை மரத்தை நீங்கள் வெட்ட வேண்டும்.........' என்றார் அவர். அவர் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர். பக்கத்து வீட்டுக்காரரின் மகள். மிகவும் வயதாகிவிட்ட தந்தைக்கு உதவியாக சில மாதங்களின் முன் இங்கு குடி வந்தார். நான் இருக்கும் அமெரிக்காவின் மேற்கு கரையில் ஒரு தென்னை மரம் கூட கிடையாது என்று யாரோ சொல்லக் கேட்டிருக்கின்றேன். மேற்கு கரை எங்கெனும், மேலே கனடா எல்லையில் இருந்து கீழே மெக்சிகோ எல்லையில் வரை உள்ள சில ஆயிரம் மைல்களிலும், தென்னை மரமே இல்லை என்னும் போது, என் வீட்டில் தென்னை மரமா என்ற யோசனையுடன் அவரைப் பார்த்தேன். 'தென்னை மரமா................... என் வீட்டில் இல்லையே..................' 'ஆமாம்.............. அந்த மரம் ம…
-
-
- 12 replies
- 742 views
- 1 follower
-
-
அழைப்பு மணியின் சத்தம் கேட்டு அவசரமாகக் கதவைத் திறந்தாள், றீட்டா காபென்பிறாண்ட்ல். கதவைத் திறந்தவள் முன்னால் எட்டுப் பேர்கள் நின்றிருந்தனர். நிறத்தால் வேறுபட்ட அந்நிய நாட்டவர்கள். அந்த எண்மரில் ஒருவர் பெண்ணாக இருந்தார். அந்தப் பெண்ணின் முகத்தில் ஒட்டியிருந்த சோகம், குளமாயிருந்த அவளது கண்கள், றீட்டாவின் மனதை கலங்க வைத்தது. "நாங்கள்….."அவர்களில் ஒரு ஆண் அங்கு நிலவிய நிசப்தத்தை நீக்க முயற்சித்தான். றீட்டா அந்த சத்தம் வந்த திசையை நோக்கித் தன் பார்வையைத் திருப்பினாள். வந்திருந்த பெண் மட்டுமல்ல, ஆண்களும் சோகத்தில்தான் இருந்தார்கள். “இலங்கைத் தமிழர்கள். பாரிசிலிருந்து வருகின்றோம். பூரணநாயகியின் விசயம் கேள்விப்பட்டு….” பேச்சை அவர்கள் முடிக்கவில்லை. இல்லை, அவர்களால் மேற்கொண்டு பே…
-
-
- 3 replies
- 364 views
-
-
வாழைப்பூ வடை -------------------------- வீட்டுக்கு வெளியே என்னை இருக்க வைத்திருப்பதற்கு அவன் ஏற்கனவே இரண்டு தடவைகள் மன்னிப்பு கேட்டிருந்தான். வீட்டுச் சுற்றுமதிலுக்கும் வெளியே இரண்டு பிளாஸ்டிக் கதிரைகளையும், ஒரு சின்ன பிளாஸ்டிக் மேசையும் போட்டிருந்தான். எனக்கு துடக்கு என்று அவன் சொன்னான். இறந்தவர் எனக்கு ஆண் வழியில் உறவுமுறை என்பதால் இந்த துடக்கு 31 நாட்கள் வரை இருக்கும் என்றான். அவனின் வீட்டில் ஏதோ கோவில் விரதமோ அல்லது மாலை போட்டிருக்கின்றார்கள், அதனால் என்னை வீட்டின் உள்ளே விடவில்லை என்றும் சொன்னான். நான் அதை சரியாகக் கவனிக்கவில்லை. பிளாஸ்டிக் பொருட்கள் அழிவதும் அரிது, அவற்றை துடக்கு கூட தொட முடியாது போல என்று நினைத்துக் கொண்டே கவனமாக கதிரையின் உள்ளே வசதியாக உட்கார மு…
-
-
- 13 replies
- 618 views
- 1 follower
-
-
இது நான் சில வருடங்களின் முன்னர் எழுதிய நாடகம் ஒன்று. இங்கு யாழ் களத்தில் இருந்தால் இது யாருக்கேனும் உபயோகப்படலாம் என்றும், அத்துடன் நான் எழுதியவை அப்படியே மறைந்து போகாமல் இருக்கவும் கூடும் என்ற நோக்கில் இங்கு இவற்றை பதிவிடுகின்றேன். மோகன் அண்ணாவிற்கும், கள நிர்வாகத்தினருக்கும் மிக்க நன்றி. புதுமைப்பித்தனின் 'கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்' என்னும் அருமையான சிறுகதையை தழுவியே இந்த நாடகத்தை எழுதினேன். அவருடைய இந்தக் கதையும், வேறு பல தலை சிறந்த கதைகளும் சென்னை வாசிகசாலை இணையத் தளத்தில் கிடைக்கின்றது. அவர் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவர் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்..................... https://www.chennailibrary.com/ppn/story/kadavulumkandasamyppillaiyum.ht…
-
-
- 14 replies
- 814 views
-
-
தன்னறம் -------------- நீங்கள் எல்லோரும் நலமா, ஒரு கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது, எப்படி எழுதுவது என்று எனக்கு சரியாகத் தெரியவில்லை. நான் இதற்கு முன்னர் ஏதாவது கடிதம் எழுதி இருக்கின்றேனா என்றும் ஞாபகமில்லை. கடிதங்களை அவரே தான் எழுதினார். வந்த கடிதங்களை வாசித்தது கூட அவரேதான். சில வேளைகளில் சில கடிதங்களில் இருந்த ஒன்று இரண்டு சமாச்சாரங்களை சுருக்கமாகச் சொல்லியிருக்கின்றார். அவர் என்னை எதையும் வாசிக்க விடவில்லை என்றில்லை, உண்மையில் எதையாவது வாசி வாசி என்று எனக்கு அவர் சொல்லிக் கொண்டேயிருந்தார். நான் தான் எதையும் வாசிக்கவில்லை. எனக்கு ஒரு இடத்தில் இருந்து வாசிப்பதற்கு நேரம் இருக்கவில்லை என்று தான் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். அது பொய், நானே உருவாக்கிய ஒரு காரணம் என்று இப்ப…
-
-
- 15 replies
- 799 views
-
-
நிரூபணவாதி --------------------- இங்கே யார் அவர் என்று என்னுடைய பெயரைச் சொல்லி கேட்டான் அவன். அப்பொழுது நேரம் இரவு எட்டு மணி ஆகியிருந்தது. விளையாட்டு ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் என்று ஒரு வழமையாக சொல்லியிருக்கின்றோம். நான் ஆறு ஐம்பது அளவில் அங்கே மைதானத்தில் நிற்பேன். ஏழு மணிக்கு ஓரிருவரும், ஏழரை மணி அளவில் சிலரும் என்று வந்து சேர்வார்கள், அப்படியே விளையாட்டை ஆரம்பித்துவிடுவோம். எட்டு மணி அளவில் அன்று வர இருந்தவர்கள் எல்லோரும் வந்து சேர்ந்துவிடுவார்கள். 'நான் தான் அது............ நீங்கள்..............' 'என் பெயர் சிட்டா............ உங்களுடன் சேர்ந்து நானும் ஆட வந்திருக்கின்றேன்...............' என்று சொன்னவன் தன்னை யார் இங்கே அனுப்பியது என்றும் சொன்னான். 'நல்லது சிட்டா.....…
-
-
- 7 replies
- 559 views
-
-
கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்' / பகுதி: 01 பகுதி: 01 - ஒட்டாவாவில் இருந்து யாழ்ப்பாணம் வரை முதன் முதலில் “கடற்கரை அலைந்து திரிந்தோர்” (Beachcombers) ஆப்பிரிக்காவில் தோன்றிய மனிதர்களே ஆகும். கடற்கரைகளைக் கடந்து, கடலின் வளங்களை உணவாகக் கொண்டு அவர்கள் மெதுவாக ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பின்னர் உலகின் பல பகுதிகளுக்குப் பரவினர் என்பது வரலாறு ஆகும். இதனால், மனித வரலாற்றின் முதல் “நெடுஞ்சாலை”யாக கடற்கரை அமைந்து இருந்தது. அதனாலோ என்னவோ, தாத்தாவும் தன் வெளிநாட்டில் பிறந்து வளரும் பேரப்பிள்ளைகளுக்கு அந்த பெருமை பெற்ற “நெடுஞ்சாலை” வழியாக இலங்கை சுற்றிலாவை ஆகஸ்ட் 2025 இல் ஆரம்பிக்க முடிவு செய்தார். ஆக…
-
-
- 9 replies
- 496 views
- 1 follower
-
-
இங்கு தென் கலிஃபோர்னியாவில் கடந்த வாரம் மேடையேற்றப்பட்ட ஒரு நாடகம் இது. இதை நான் சில நண்பர்களின் உதவியுடன் எழுதி, தயாரித்து இருந்தேன். எங்கள் நண்பர்கள் வட்டத்தால் வருடா வருடம் நடத்தப்படும் தமிழமுதத்தின் 2025ம் ஆண்டு நிகழ்வில் இது மேடையேற்றப்பட்டது. தவிக்கும் தன்னறிவு நாடகம் தென் கலிஃபோர்னியா தமிழ் நண்பர்கள் வட்டம் 2025 சுருக்கம்: செயற்கை நுண்ணறிவின், அல்லது ஏஐ என்று எல்லோராலும் பொதுவாக சொல்லப்படும் தொழில்நுட்பத்தின், அதிவேகப் பாய்ச்சலால், அதன் எல்லை மீறிய பயன்பாடுகளால் சாதாரண மனிதர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் சிக்கல்களை, சிரமங்களை ஒரு சிறிய நாடக ஆக்கமாக உருவாக்கியிருக்கின்றோம். இது செயற்கை நுண்ணறிவிற்கு எதிரான ஒரு கருத்தை முன்வைக்கும் முயற்சி அல்ல. மாறாக, மனிதர்களின் அளவுக…
-
-
- 24 replies
- 992 views
- 1 follower
-
-
“On Sri Lanka’s Coastal ‘Highway’: Grandpa Kandiah Thillai with His Grandchildren” / Part 01 [Original in Tamil 'கதை - 187 / 'இலங்கை கடற்கரை “நெடுஞ்சாலை” யில் தாத்தா, கந்தையா தில்லையுடன் பேரப்பிள்ளைகள்'] Part 01 – From Ottawa to Jaffna The very first “beachcombers” were none other than early humans in Africa. Wandering along the coasts and living off the sea’s abundance, they slowly spread from Africa into Asia, Australia, and eventually the rest of the world. Thus, history remembers the seashore as humanity’s first great “highway.” Perhaps it was for this very reason that Grandpa chose to begin a grand tour of Sri Lanka with his Canadian-born and -raised grandchildren…
-
-
- 2 replies
- 278 views
-
-
1. ஆளில்லா விமானம் --------------------------------- அன்று ஒரு நீண்ட வார விடுமுறையின் நடுநாள். பலரும் அன்று விமானப் பயணமோ அல்லது எந்தப் பயணமுமோ செய்ய மாட்டார்கள் என்பதை அனுமானித்தேயிருந்தோம். ஆனாலும் லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில், திருவிழா முடிந்து வெறுமனே காற்று வாங்கும் கோயில் போல, அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலரின் நடமாட்டமே இருந்தது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. தேர்த் திருவிழா போல எப்போதும் உள்ளேயும், வெளியேயும் கூட்டமும், இரைச்சல்கள் நிறைந்திருக்கும் இடம் இது. இந்த விமான நிலையத்தால் வந்து போகும் வெளிநாட்டவர்கள் நிறையவே குறைகள் சொல்லுவார்கள். அதனால் நான் சொல்லாமல் விடுகின்றேன், அத்துடன் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. எங்கள் கண்களுக்கு தெரிவது போல காகங்களின் இ…
-
-
- 83 replies
- 5.1k views
- 3 followers
-
-
கதை - 186 / 'நல்லூர்த் திருவிழாவில், மாயையின் மயக்கம்' / பகுதி: 01 ஆகஸ்ட் 2025 யாழ்ப்பாணம் தங்கத்தால் போர்த்தது போல் இருந்தது. நல்லூர் கந்தசுவாமி கோயில் திருவிழா தொடங்கியது, தெருக்கள் உயிர்ப்புடன் மலர்ந்தன. விடியற்காலை முதல் மாலை வரை, சங்குகள், மணி ஓசைகள் மற்றும் மேளங்களின் சத்தங்கள் காற்றில் எதிரொலித்தன. ஒவ்வொரு காற்றிலும் மல்லிகை மாலைகள் மற்றும் கற்பூர புகையின் நறுமணம் வீசியது. இலங்கைத் தீவு முழுவதிலுமிருந்தும் மற்றும் புலம்பெயர்ந்தோரிடமிருந்தும் பக்தர்கள் அற்புதமாக அலங்கரிக்கப்பட்ட, 'அலங்கார முருகனை' வணங்க ஒன்று கூடினர். அவர்களிடையே, இரண்டாம் தலைமுறையாக வெளிநாட்டில் வாழும், யாழ்ப்பாணத்தை அடியாகக் கொண்ட, அருண் என்ற இளைஞன் நடந்து வந்தான். அவன் எளிமையான உடையில் - சாதாரண வ…
-
-
- 7 replies
- 510 views
- 1 follower
-
-
Ribeiro என்னுடைய நண்பன். போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்தவன். ஒரு சிறிய பயண நிறுவனத்தை நடத்தி வந்தான். தொண்ணூறுகளில் நான் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்த போதெல்லாம் என்னுடைய விமானச் சீட்டுகளை அவன்தான் ஒழுங்குபடுத்தித் தந்தவன். முதல் முறை எனக்கான விமானச்சீட்டை ஏற்பாடு செய்யும் போது, என் நீண்ட பெயரைப் பதிவதில் சிரமப்பட்டுக் கொண்டிருந்தான். அவனுக்கு எதற்குச் சிரமம்? என்று நினைத்து, என் பாஸ்போர்ட்டை அவனிடம் நீட்டினேன். அதை வாங்கிப் பார்த்தவுடன் அவன் சொன்னான், “நீ பிறந்த இடம் Point-Pedro அல்லவா? அந்தப் பகுதியில் 'பேட்ரோ' என்னும் போர்த்துக்கல் ஆளுநர் ஒருவர் இருந்துள்ளார்” என்றான். நான் சற்றே ஆச்சரியத்துடன், “என் ஊரைப் பற்றிய விபரம் உனக்கெப்படித் தெரியும்?” என்று கேட்டேன். அதற்கு…
-
-
- 7 replies
- 522 views
- 1 follower
-
-
கதை - 185 / "தாத்தா கந்தையா தில்லையுடன் பேரன் இசை, சொர்க்கத்திற்கு ஒரு கோடை விடுமுறை" / பாகம் 01 விடுமுறை நாட்களில் தாத்தாவும், பேரனும் ஒன்றாக பொழுதைக் கழிப்பது உண்மையில் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும். அதற்காக நான் மூத்த மகளிடம் விடுதலைக்கு வருவது வழக்கம். ஒன்றாக விளையாடுவது, கதை சொல்வது மற்றும் பல சின்ன சின்ன செயல்களில் பேரப்பிள்ளைகளுடன் ஈடுபடுவேன். என் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகப் படிப்பு இலங்கை என்பதால், இங்கு பாடமுறை வித்தியாசம் என்பதால், அதை பெற்றோர்களே பார்த்துக்கொள்வார்கள் அப்படி ஒரு விடுமுறையில், கனடா, ஒட்டாவாவில் ஒரு சூடான ஆகஸ்ட் முன் இரவுப் பொழுது, மகளுக்கும் பேரனுக்கும் பெரிய வாக்குவாதம் வந்து விட்டது. மகள் தொலைபேசியில் முக்கிய வேலை விடயமாக கதைக்கும் பொழ…
-
- 3 replies
- 430 views
-