கதைக் களம்
கள உறுப்பினர்களின் சிறுகதை | மொழியாக்க கதை| தொடர்கதை | பயண அனுபவங்கள் | நாடகம்
கதைக் களம் பகுதியில் கள உறுப்பினர்களின் சிறுகதை, மொழியாக்க கதை, தொடர்கதை, பயண அனுபவங்கள், நாடகம் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள், மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.
654 topics in this forum
-
அக்காவிடம் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு இப்படி லட்டாக இனிக்கும் என அப்போது எனக்கு தெரித்திருக்க நியாயமில்லை.முடிந்தால் இன்று பின்னேரம் ஆறு மணியளவில் எனது வீட்டிற்கு வருகின்றாயா? இதுதான் தொலைபேசியில் அக்கா சொன்ன செய்தி. ஆறுமணியளவில் அக்கா வீட்டடிக்கு போக பார்கிங் லொட்டில் நாலு கார்கள் நிற்குது,அதைவிட வீதி ஓரங்களிலும் ஏழு எட்டு கார்கள் என்னடா இது அக்காவும் அம்பேயில சேர்ந்துவிட்டவோ என்று எண்ணியபடி போய் காலிங் பெல்லை அமத்தினால் அக்கா கதவை திறந்தபடி “ உன்னைத்தான் பார்த்துக்கொண்டு நிக்கிறம் கீழுக்கு போ” என்று பேஸ்மெண்ட் படிகளை நோக்கி கையை காட்டுகின்றா கீழே போனால் சாரி,சுடிதார் ,பான்ட்ஸ்,பேமுடாஸ்,சோட்ஸ் என்று எல்லா வயசிலும் பொம்பிளைகள் கூட்டம்.. “இவர்தான் தம்…
-
-
- 37 replies
- 4.1k views
-
-
அது ஒரு தனியார் கல்வி நிறுவனம். நான் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த காலம். முதல் வாங்கில் இருக்கும் கூட்டத்தில் நானும் அடக்கம். வாத்தியார்மார் முன்னுக்கு இருகிற படிக்கிற பிள்ளையள் என்று ஒரு நல்லெண்ணத்தில இருக்க, நாங்கள் நசுக்கிடாமல் நல்லாச்சுத்து மாத்து விடுவம். தமிழ் படிப்பித்த ஆசிரியை திடீர் என்று நின்று விட்டார். அன்று புதுசாக யாரோ தமிழுக்கு வரபோகினம் என்று எல்லாருக்கும் டென்சன். அதிபருடன் மெல்லிதாக கருப்பாக கிட்டத்தட்ட நடிகர் நாகேஷ் கருப்பாக இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒருவர். இவர்தான் இனி உங்கள் தமிழ் ஆசிரியர் என்று அறிமுகம் செய்து விட்டு அதிபர் போய்விட்டார். வந்த உடனே "வேற்றுமை " என்று கரும்பலகையில் எழுதி விட்டு முதலாம் வேற்றுமையில் தொடங்கி முழங்கத…
-
-
- 14 replies
- 2.9k views
-
-
அப்பா போன்” மகனிடம் இருந்து போனை வாங்குகின்றேன். “அண்ணை நான் இங்கு பீட்டர்” “பீட்டர் “ “அண்ணை கொம்பனியில இருந்த காரைநகர் பீட்டர் “ “டேய் எப்படி இருக்கின்றாய்? எங்க இருக்கின்றாய்?” “ அண்ணை நான் கனடா வந்து ஒட்டாவில் படித்துமுடித்துவிட்டு இப்ப டெக்ஸ்சசில் வேலை எடுத்து போய்விட்டன், நீங்கள் எப்படி இருக்கின்றீங்கள் அண்ணை ? ஒட்டாவாவில் இருக்கும் போது நீங்கள் அயன்சின் அக்காவை கலியாணம் கட்டி டொராண்டோவில் இருப்பதாக கேள்விப்பட்டனான் .பிள்ளைகள் இருக்கா அண்ணை?” “ இரண்டு பெடியங்கள்,வளர்ந்துவிட்டார்கள் .இப்ப என்ன இருந்தா போல என்ரை நினைவு” “போன மாதம் டொராண்டோவிற்கு ஒரு செத்த வீட்டிற்கு வந்தனான் ,அங்கு நந்தனை கண்டனான் ,அப்ப பழைய கொம்பனி கதைகள் கதைக்கும் போது உங்க…
-
-
- 43 replies
- 5.7k views
-
-
குறிப்பு. பாதைகள் மூடப்பட்டு, இராணுவத்தால் சூழப்பட்ட பகுதிக்குள் இருந்து வெளியேறுவது என்பது அவ்வளவு இலகுவானதல்ல. இரவுகளில் மட்டுமே பயணங்கள் இருளுக்குள் சன நெரிசல்படும் குளுவன் காடுகளூடாக….. சேறு சகதி என நீர்வழிப்பயணங்களாகவும் 90 களின் ஆரம்பங்களில் யாழ்ப்பாண மக்களின் பயணங்கள் அமைந்தன. பாம்பு “க்வ்”………. முனகலும் இல்லாமல் அழுகையும் இல்லாமல் ஈனசுரத்தில் எழுந்து அடங்கியது குரல். அடிவயிற்றைக் கைகளால் அழுத்தியபடி இருண்ட கொட்டிலுக்குள் அவ்வுருவம் சுருண்டு விழுந்தது. அந்தக்கரையில் இருந்த திடீர் தேனீர் கடையின் முன்னால் டிரம்மில் கிடந்த தண்ணீரில் சேறாகிய பஞ்சாபியைக் கழுவிக் கொண்டாள் சுபாங்கி. ஈரம் சொட்டச்சொட்ட பஞ்சாபி உடலோடு ஒட்டியது. சிறு குடிலான திடீர் த…
-
-
- 60 replies
- 9.5k views
-