தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
தனுஷ்கோடியில்... 58 ஆண்டுகளுக்கு முன்னர், கடலில் மூழ்கிய தரைப்பாலம்... வெளியே தெரிந்தது! ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தனுஷ்கோடி பகுதி. அதுபோல் 1,964-ம் ஆண்டுக்கு முன்பு வரையிலும் ராமேஸ்வரத்தை விட தனுஷ்கோடி மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கி உள்ளது. தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து மற்றும் தனுஷ்கோடி வரை ரயில் போக்குவரத்தும் இருந்துள்ளது. மேலும் பாடசாலை, தபால் நிலையம், மருத்துவமனை, கோவில்கள், துறைமுகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அது மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கியது. கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் 23ஆம் திகதி ஏற்பட்ட புயல் காரணமாக தனுஷ்கோடி நகரமே முழுமையாக அழிந்து போனது. புயல் ஏற்…
-
- 0 replies
- 444 views
-
-
போயஸ் கார்டனில் ஐ.டி. ரெய்டு! #ITRaids முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சசிகலா மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இல்லங்களில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் 187 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில் பல்வேறு ஆவணங்களும், ரொக்கப் பணம் மற்றும் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ந…
-
- 11 replies
- 1.6k views
-
-
சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியில் வைகோ. உண்ணாவிரதப் பந்தலில் சந்திரபாபு நாயுடுவுடன் வைகோ. சீமாந்திரா முதல்வராக பதவி யேற்றுக்கொண்ட விழாவில் தனது நீண்டகால நண்பரும் மதிமுக பொதுச் செயலாளருமான வைகோவுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்து கவுரவித்திருக்கிறார் சந்திரபாபு நாயுடு. சீமாந்திரா முதல்வராக சந்திர பாபு நாயுடு கடந்த 8-ம் தேதி பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவுக்கு பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டவர்களோடு தனது நண்பர் வைகோவையும் சந்திரபாபு நாயுடு அழைத்திருந்தார். இதை ஏற்று, பதவியேற்பு விழாவில் வைகோவும் கலந்துகொண்டார். போராட்டத்திலும் கைகோத்தவர் இவர்கள் இருவரும் நீண்ட கா…
-
- 0 replies
- 602 views
-
-
ஒரிஜினல் ரஜினியா... டூப்ளிகேட் எம்.ஜி.ஆரா? ப.திருமாவேலன் எந்திரன் ரஜினி இப்போது ‘எம்.ஜி.ஆர்’ ரஜினியாக மாறிவிட்டார். அவரது எம்.ஜி.ஆர் பக்தியைப் பார்க்கும்போது புல்லரிக்கிறது. இவ்வளவு எம்.ஜி.ஆர் பக்தியை ஏன் அவர் இவ்வளவு நாளும் வெளியிடாமல் மறைத்து வைத்திருந்தார் என்பது புரிய வில்லை. அரசியல் ஆசை அவரை எம்.ஜி.ஆர் தொப்பியை அணியத் தூண்டியிருக்கிறது. ‘‘அரசியல்ல ஜெயிக் கணும்னா திறமை, புத்திசாலித் தனம், உழைப்பு மட்டும் பத்தாது. சந்தர்ப்பம், சூழ்நிலை, நேரம்... இந்த மூன்றுக்கும் மிகப் பெரிய இடமுண்டு. அரசிய லுக்கு நான் வந்திருக்கணும்னா 1996-லயே வந்திருக்கணும். என்னைக் கட்டாயப்படுத்தி வரவைக்க முடியாது. கட்டாயப் படுத்திக் கல்யாணம் பண்ணினா வாழ்க்கை நல…
-
- 0 replies
- 1.4k views
-
-
"பல உயிர்களை காத்தோம், இப்போது வீதியில் போராடுகிறோம்" - வேலைக்காக போராடும் 2,400 செவிலியர்கள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "கொரோனா காலத்தில் பல உயிர்களை பாதுகாத்த நாங்கள், இன்று எங்கள் பணி பாதுகாப்புக்காக வீதியில் போராடி வருகிறோம்", இது பணி நீக்கம் செய்யப்பட்ட 2 ஆயிரத்து 400 செவிலியர்களுக்காக களத்தில் ஒலிக்கும் செவிலியர் தஸ்நேவிஸின் குரல். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தஸ்நேவிஸ், டிசம்பர் 30ஆம் தேதி பணிக்கு வந்து தனது வழக்கமான கடமைகளை செய்து வந்தார். அவருக்கு அப்போது தெரியாது, இன்று தான் இந்த வேலையில் தனக்கு கடைசி நாள் என்பது. தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை செயலாளர் வெளியிட்ட அரசாண…
-
- 0 replies
- 626 views
- 1 follower
-
-
சென்னையில் சிறப்பு நீதிமன்றம்.... 'கிலி'யில் 75 குற்றப் பின்னணி எம்.எல்.ஏ-க்கள்! சென்னையில் சிறப்பு நீதிமன்றம் ஸ்டார்ட். கிலியில் 75 குற்றப் பின்னணி எம்.எல்.ஏ-கள் `தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகளுக்குத் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்’ என வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யா பொதுநல வழக்கு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டில் போட்டார். நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு, இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, `குற்றப் பின்னணி கொண்ட எம்.பி., எம்.எல்.ஏ-களை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும்’ எனக் கடந்த ஆண்டு நவம்பரில் உத்தரவிட்டது. இதன்பிறகு இந்த வழக்கு கடந்த ஆண்டு …
-
- 0 replies
- 1.5k views
-
-
சென்னையில் பன்றிக் காய்ச்சலுக்கு பெண் ஒருவர் இன்று பலியான சம்பவம் பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் பெயர் அமிர்தலட்சுமி என்பதாகும். இவர் எழும்பூர் கெங்குரெட்டி தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் செல்வகுமாரின் மனைவியாவார். கடந்த சிலதினங்களுக்கு முன்னர் திடீரென காய்ச்சலால் பாதிகப்பட்டார். இதையடுத்து அமிஞ்சிகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு அமிர்தலட்சுமிக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி காணப்பட்டதால் அதற்கான சோதனையும் மேற்கொள்ளப்பட்டது. சோதனையின் முடிவில் அமுதலட்சுமிக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கடந்த 4 ஆம…
-
- 0 replies
- 239 views
-
-
18 SEP, 2023 | 04:14 PM சென்னை: "பாஜகவுடன் கூட்டணி இல்லை. கூட்டணியைப் பொறுத்தவரையில், பாஜக அதிமுக கூட்டணியில் இல்லை. தேர்தல் வரும்போதுதான் அதுகுறித்து முடிவு செய்யப்படும். அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை.இதுதான் எங்களுடைய நிலைப்பாடு. இனிமேல் அண்ணாமலை எங்களது தலைவர்கள் குறித்து விமர்சனம் செய்தால், கடுமையான விமர்சனங்களை அண்ணாமலை சந்திக்க நேரிடும்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். சென்னை ராயபுரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: "ஒரு கூட்டணியில் இருந்துகொண்டு கூட்டணி தர்மத்தை மீறி பேசுகின்ற எந்த ஒரு செயலையும், கருத்தையும் தன்மானம் …
-
- 2 replies
- 312 views
- 1 follower
-
-
கல்வி மட்டுமே நம்மை உயர்த்தும் என்கிறார்கள். சரி. உயர்வு என்றால் என்ன? உயர்ந்த வாழ்க்கைத்தரம், சமூக மரியாதை. இரண்டும் பணத்தினால் கிடைப்பன. எனில் கல்வி நம்மை உயர்த்தும் எனும் போது கல்வியினால் நாம் நிறைய பணத்தைப் பெறலாம் எனக் கூறுகிறார்கள் எனப் புரிந்துகொள்கிறேன். இப்போது நான் கேட்க விரும்பும் கேள்வி எந்த விதமான கல்வி பணத்தை அள்ளிக்கொடுக்கிறது என்பது. எண்பது, தொண்ணூறுகள் வரை அரசு வேலை, அதன் பிறகு தனியாரில் ஐ.டி வேலை, வெளிநாட்டு வாழ்க்கை. இதன் நடுவே சொற்பம் பேருக்கு மருத்துவ, ஐ.ஏ.எஸ் வேலைகள். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது - பணம் அதன் மதிப்பை இழந்துவிட்டது. நான் என் முதல் வேலையில் பெற்ற சம்பளத்திலிருந்து 25 மடங்கு அதிகப் பணத்தை தம் முதல் சம்பளமாக என் மாணவர்கள்…
-
- 1 reply
- 559 views
- 1 follower
-
-
சிறையில் இருந்த காலகட்டத்தில் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை பிரகாஷ் எழுதியிருக்கிறார். சென்னையைச் சேர்ந்த எலும்பியல் நிபுணரான டாக்டர் பிரகாஷ் தன் மருத்துவமனையில் பணியாற்றியவர்களைப் பயன்படுத்தி ஆபாசப் படங்களைத் தயாரித்து, அதனை இணைய தளங்களில் வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இவரால் வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் காவல்துறையிடம் புகார் அளித்ததையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்தப் புகாரின் பேரில் 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரகாஷ் கைதுசெய்யப்பட்டார். முதலில் 2001ஆம் ஆண்டின் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. கொலைமிரட்டல் விடுத்ததாகவும் அவர் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. அவருக்கு உடந்தையாக இருந்ததாக…
-
- 0 replies
- 239 views
-
-
ஐய்யப்பன் விரதமிருந்த 14 பேர் பயணித்த வான் விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் இந்தியா புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டை அருகே காரைக்குடி-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் காஜிபேட் கிராமத்தைச் சேர்ந்த 14 பேர் மாலை அணிந்து விரதம் இருந்து, கேரள மாநிலம் சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு ஒரு சுற்றுலா வானில் சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்த பின்னர், தமிழகம் வந்து கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து சொந்த ஊர் செல்வதற்காக ந…
-
- 0 replies
- 766 views
-
-
முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் சென்னை மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. காலத்தில் நிலைத்துவிட்ட இந்தப் பெயரை மாநிலத்திற்குச் சூட்ட பல ஆண்டுகாலப் போராட்டத்தையே நடத்த வேண்டியிருந்தது. 1967ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை, "இந்த அவையிலே இன்றைய தினம் " உறுப்பினர்களாக இருக்கின்ற ஒவ்வொருவருடைய வாழ்நாளிலும் மிகுந்த மகிழ்ச்சியையும், நல்ல எழுச்சியையும் தரத்தக்க ஒரு திருநாள் ஆகும். நீண்ட நாட்களுக்கு முன்பே வந்திருக்க வேண்டிய இந்தத் தீர்மா…
-
- 0 replies
- 647 views
-
-
Published By: RAJEEBAN 24 JAN, 2024 | 05:11 PM இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று பல வருடங்களின் பின்னர் பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையாகி தற்போது திருச்சி சிறைமுகாமில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக சிறைக்கைதிகள் உரிமை மையம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. சாந்தனிற்கு கல்லீரல், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சிறைக்கைதிகள் உரிமை மையம் தெரிவித்துள்ளது. திருச்சி சிறப்பு முகாமில் சாந்தனிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை, இதனால் அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னை பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கவேண்டும் என சிறைக்கைதி…
-
- 3 replies
- 429 views
- 1 follower
-
-
நாம் தமிழர் - கோபிச்செட்டிபாளையம்J’aime la Page 6 h · நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள். நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு. ■ மருத்துவம் அனைவருக்கும் இலவசம், ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும். ■ அனைவருக்கும் கட்டணமில்லா செய்வழி (practical) தனித்திறன் கல்வி (ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம்). சாதரண குடிமகனின் பிள்ளைகள் முதல் முதலமைச்சரின் பிள்ளைகள் வரைக்கும் அனைவருக்கும் அரசுப் பள்ளியில் சரியான தரமான இலவசக் கல்வி! ■ ஆட்சியாளர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும். …
-
- 13 replies
- 1.9k views
- 1 follower
-
-
"ஆக" போடாம ஒரு வார்த்தை பேச சொல்லுங்க பார்ப்போம்.. ஸ்டாலினை கலாய்த்த சீமான் "ஆக" போடாம முக ஸ்டாலினை ஒரு வார்த்தை பேச சொல்லு பார்ப்போம்.. எல்லாத்துக்கும் ஆக.. ஆக.. என்ன ஆக?" என்று சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். நேற்று திருவாரூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசும்போது, திமுக, அதிமுக, பாஜகவை கடுமையாக சாடினார். அப்போது திமுக மீது அதிகமாகவே விமர்சித்தார். அவர் பேசியதாவது: "பாஜகவுக்கு ஓட்டு போடாதீங்கன்னு ஒவ்வொரு வீட்டிலயும் போய் சொல்லுது திமுக. உன் வீட்ல சுவிட்ச் போட்டா என் வீட்டில எப்படிறா லைட் எரியும். பயந்து ஏன் நடுங்கறது? எந்த மாதிரியான அணுகுமுறை இது?பாத்து படிக்கும்போதே பத்துவார்த்தை தப்பா இருக்கு. "ஆக' போடாம ஸ்டாலினை ஒரு வார்த்தை பேசச்சொல்…
-
- 2 replies
- 1.4k views
-
-
காங்கிரஸ், பா.ஜ.க. பிரமுகர்களை கிழித்து தொங்கப்போட்ட திருமுருகன் காந்தி.
-
- 19 replies
- 1.8k views
-
-
பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு: இன்று ஆரம்பம். பழனியில் கண்காட்சி-கலைநிகழ்ச்சிகளுடன் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில், இம்மாநாட்டில் உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் பங்கேற்பதாக தெரிவக்கப்பட்டுள்ளது.பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று ஆரம்பித்து வைத்துள்ளார். இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்து சுமார் 1 இலட்சம் முருக பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, பழனியில், உலக அளவில் முருகன் மாநாடு நடப்பதால் பழனியே விழாக்கோலம் பூண்டு…
-
-
- 6 replies
- 549 views
- 1 follower
-
-
மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு மேட்டுப்பாளையம் அருகே நடூர் – ஏடிக்காலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த அனர்த்தத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள ஏனையவர்களை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டுப்பாளையம் அருகே நடூர் – ஏடிக்காலனி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காம்பவுண்ட் சுவர் இடிந்து அருகில் உள்ள 4 வீடுகளின் மீது விழுந்துள்ளது. இதில் 4 வீடுகளில் இருந்த 12 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதனையடுத்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஈடுபட்டனர். அ…
-
- 5 replies
- 945 views
- 1 follower
-
-
கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்குமாறு வைத்தியர்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்! கொரோனா வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்குமாறு தமிழகத்தைச் சேர்ந்த வைத்தியர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த நிகழ்வில் எடப்பாடி பழனிசாமி மேலும் கூறியுள்ளதாவது, “இந்திய அளவில் தமிழகம் மட்டுமே கர்ப்பிணி தாய்மார்களுக்கு அதிக நிதியுதவியை வழங்கி வருகின்றது. தமிழக அரசு, சுகாதார சேவையை சிறப்பாக வழங்கி வருவதால் கர்ப்பிணிகள் உயிரிழப்பது குறைவடைந்துள்ளது. இதேவேளை உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸுக்கு தமிழக வைத…
-
- 8 replies
- 697 views
-
-
திருச்சி அதவத்தூரில் 9 ம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கு - 11 தனிப்படைகள் அமைப்பு திருச்சி அதவத்தூரில் 9 ம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கில் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பதிவு: ஜூலை 07, 2020 09:35 AM திருச்சி, திருச்சி அதவத்தூரில் 9 ம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட வழக்கில் 11 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். மாவட்ட எஸ்.பி. ஜியா உல்ஹக் தலைமையில் 11 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. 10-க்கும் மேற்பட்டவர்களைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வழக்கின் விவரம்: திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டை அதவத்தூர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. விவசாயி. இவருடைய மகள் கங…
-
- 1 reply
- 674 views
-
-
தனது திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட வரி தொடர்பாக ரஜினிகாந்த் தொடர்ந்திருந்த வழக்கில் அபராதம் விதிக்க நேரிடும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதையடுத்து வழக்கைத் திரும்பப் பெறுவதாக ரஜினிகாந்த் தரப்பு தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு 6.5 லட்ச ரூபாய் சொத்து வரி விதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். ரஜினிகாந்த் தாக்கல் செய்திருந்த அந்த மனுவில், அந்தத் திருமண மண்டபத்திற்கு தான் தொடர்ந்து வரி செலுத்திவருவதாகவும் கடைசியாக பிப்ரவரி மாதம் வரி செலுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா தொற்று பரவலின் காரணமாக, ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் மார்…
-
- 3 replies
- 917 views
-
-
இலங்கைக்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள மாணவர்களின் உண்ணாவிரதம் போராட்டம் தொடர்கிறது. உடல் நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்கள் 25 பேர் மேற்கொண்டுள்ள உண்ணாவிரதம் 4வது நாளை எட்டியுள்ளது. இவர்களில் 4 பேருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், உண்ணாவிரதம் தொடரும் என்ற…
-
- 0 replies
- 404 views
-
-
மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருத்து சொன்னாலும் தி.மு.க.வில் நிலைத்து நிற்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் நடிகை குஷ்பூ. ஸ்டாலினுக்கு எதிராக அவர் கொடுத்த பேட்டியால் தி.மு.க. கூடாரமே சில வாரங்களாக திண்டாடித் தவித்தது. குஷ்பூ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் ஆதரவாளர்கள் கொதித்தார்கள். குஷ்பூ வீட்டைத் தாக்கினார்கள். தி.மு.க. தலைவர் கருணாநிதியும் உடனே நடவடிக்கை எடுத்தார். அதாவது... குஷ்பூவுக்கு எதிராக கருத்துச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். நடிகர் சந்திரசேகரை போனிலேயே வறுத்தெடுத்த கருணாநிதி மகளிரணி நிர்வாகிகளையும் 'என் முகத்திலேயே விழிக்காதிங்க' என சத்தம் போட்டார். இத்தனை நடவடிக்கைகளுக்குப் பிறகும் அம்மணி குஷ்பூ சமாதானம் ஆகவில்லை. இறுதியாக கருணாநிதியின் உத…
-
- 0 replies
- 625 views
-
-
சென்னை: இலங்கை தமிழர்களுக்காகவும் வாழ்வுரிமைக்காகவும் போராட்டம் நடத்தும் தமிழ் அமைப்புகளை தமிழ் பொறுக்கிகள் என்று கொச்சைப்படுத்தும் சுப்பிரமணியன் சுவாமியை கண்டித்து மைலாப்பூரில் உள்ள அவரது வீடு இன்று முற்றுகையிடப்படும் என்று மே பதினேழு இயக்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் கூறுகையில், ''இலங்கை தமிழர்களுக்காகவும் தமிழகத்தில் ஏழை, எளிய மக்களின் வாழ்வுரிமைக்காகவும் பல்வேறு போராட்டங்களை தமிழர் அமைப்புகள் நடத்தி வருகின்றன. இந்த போராட்டங்களை ஆதிக்க சாதி வெறியோடு தரக்குறைவாக பேசுவது, விமர்சிப்பது ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு வாடிக்கையாக இருந்து வருகிறது. கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது அரசிய…
-
- 10 replies
- 921 views
-
-
ஏப்ரல் 29, 2013 தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சட்டமன்றத்தில் ஜனநாயகம் மறுக்கப்படுவதாக கூறினார். கேள்வி நேரத்தின்போது திமுக உறுப்பினர்களுக்கு பேச அனுமதி வழங்கப்படுவதில்லை என கூறிய ஸ்டாலின், அதுபற்றி கேட்டால் திமுகவினர் வெளியேற்றப்படுவதாகவும் தெரிவித்தார். நீலகிரியில் போதிய நீர்நிலைகள் இல்லாத பகுதியில் 7ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் எவ்வாறு மின் திட்டத்தை நிறைவேற்ற முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மக்களை ஏமாற்றுவதற்காகவே இவ்வாறு திட்டம் போடுவதாக குற்றம்சாட்டிய மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் குற்ற நிகழ்வுகள் அதிகரித்திருப்பதாக ப…
-
- 1 reply
- 476 views
-