Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காங்கிரஸ், தி.மு.க, அ.தி.மு.க - இந்த வாரம் கட்சிகளின் கோஷ்டி சண்டை வாரம்! பிரேக்கிங் நியூஸ்கள் இல்லை, அதிரடி அரசியல் திருப்பங்கள் இல்லை. ஆனாலும் இந்த வாரம் தமிழர்களுக்கு செம டைம்பாஸாகத்தான் இருந்தது. காரணம், இத்தனை நாட்களாக எதிர் தரப்போடு முட்டி மோதிய கட்சிகள் இப்போது தங்கள் கட்சிகளுக்குள்ளேயே மல்லுக் கட்டுகின்றன. 'மிஸ் என்னைக் கிள்ளிட்டான்' ரகத்தில் இருந்து செம சீரியஸான புகார்கள் வர அரசியல் கட்சிகளுக்குள் அனல் பறக்கின்றன. அவற்றை பற்றிய சின்ன ரீகேப் இது. காங்கிரஸ்: கட்சிக்குள் சண்டை என்றால் முதலிடம் இவர்களுக்குத்தானே. தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் பதவியேற்ற நாளில் இருந்தே அவர் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக (அ.தி.மு.கவே யாருக்கு ஆதரவுன…

  2. கொரோனா சிகிச்சைக்காக 50 மணி நேரமாக வேனில் காத்திருந்த வயதான தம்பதியர் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையளிக்க படுக்கை வசதி தட்டுப்பாடு உள்ளது. குறிப்பாக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான கொரோனா நோயாளிகள் சிகிச்சைக்காக வந்தவண்ணம் உள்ளனர். இதற்காக ஆஸ்பத்திரியின் அனைத்து வார்டுகளும் கொரோனா வார்டாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.தீவிரசிகிச்சை பிரிவு, சிறப்பு சிகிச்சை பிரிவு ஆகியனவும் கொரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளன. இதற்கிடையே, கடந்த 22-ந்தேதி வயதான தம்பதியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வேனில் வந்தனர். ஆனால், அவர்களுக்கு படுக்கை வசதி கிட…

  3. கூடங்குளம் அணுவுலைக் கெதிரான போராட்டத்தில் போராட்டகாரர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் வாபஸ் பெற மாநில அரசை வலியுறுத்தியும், மக்களை பாதிக்கும் கூடங்குளம் அணுவுலையை நிரந்தரமாக மூடக்கோரியும் எஸ்.டி.பி .ஐ கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று(03.08.2013) நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஜிம் தலைமை தாங்கினார். வட சென்னை மாவட்ட பொது செயலாளர் எ.கே.கரீம் அனைவரையும் வரவேற்றார். மாநில செயலாளர்கள் ரத்தினம், அமீர் ஹம்சா, வட சென்னை மாவட்ட தலைவர் முகமது ரஷீத், தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது சாலிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பாப்பு…

  4. கழகங்கள் இல்லா தமிழகம்... சீமானையும் வளைக்க துடிக்கும் இந்துத்துவா சக்திகள்- சிக்குவாரா? சென்னை: தமிழர் அரசியல் மற்றும் பண்பாட்டு அடையாள மீட்டெடுப்பு முழக்கங்களை முன்வைக்கும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை 'இந்துத்துவாவாதி' என முத்திரை குத்தி தங்கள் பக்கம் இழுக்கத் துடிக்கிறது இந்துத்துவா சக்திகள். தந்தை பெரியாரின் பேரன்... பிரபாகரனின் தம்பி... மார்க்ஸின் மாணவன்... இதுதான் தொடக்க கால அரசியல் மேடைகளில் சீமான் தம்மைப் பற்றி பிரகடனம் செய்து கொண்டது. திராவிடர் இயக்க மேடைகளில் தொடக்க காலங்களில் பகுத்தறிவு பிரசாரம் செய்தார் சீமான். தலைகீழாக முயற்சி திராவிட அரசியல் கட்சிகளுக்கு மாற்றாக தமிழர் வாழ்வுரிமையை பேசும் அரசியலை முன்வைத்து வருகிறார் சீமான். தமிழகத்…

  5. '50 ஆண்டுகளில் மாயமான திராவிட லட்சியங்கள்' சா. பீட்டர் அல்போன்ஸ்மூத்த காங்கிரஸ் தலைவர் திராவிட இயக்கம் புறம் தந்த, சமகால அரசியல் கட்சிகளின் அசலான வடிவங்களையும் கடந்த காலத்தின் வரலாற்றில் புதைந்துபோன அதன் உருவகங்களையும் உள்வாங்கி ஒப்பிட்டுப் பார்க்கும் நேரம் இது. இன்றைய இந்தியாவின் பொருளாதார அரசியல் சமூக பரிணாமங்களைச் செதுக்கிய பெருமை நான்கு இயக்கங்களுக்கு உண்டு. தேசிய இயக்கம், பொதுவுடமை இயக்கம், சோஷலிஸ்ட் இயக்கம் மற்றும் திராவிட இயக்கம் என்ற இந்த நான்கு இயக்கங்கள்தான் சமகால இந்தியாவின் அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் தந்தையும் தாயுமாக இருந்தவை. பொதுவுடமைவாதிகள், சோஷலிஸ்டுகள்…

  6. சிறப்புக் கட்டுரை: தமிழ்நாடு என்ற வரலாற்று அடையாளம்! மின்னம்பலம்2021-07-19 ராஜன் குறை தமிழ்நாடு என்பது திராவிட பண்பாட்டைச் சார்ந்தவர்களாகவும், தமிழ் மொழி பேசுபவர்களாகவும் தங்களை உணரும் வரலாற்று தன்னுணர்வு கொண்ட மக்கள் தொகுதி வாழும் நிலப்பகுதி, மாநிலம். எந்தவொரு மக்கள் தொகுதியும் இவ்விதமான வரலாற்று தன்னுணர்வு கொள்ளும் வரலாறே அதன் மெய்யான வரலாறு. அதன் பிறகு வரலாற்று எழுதியல் மூலமாக அது தன் தொன்மையான வரலாற்றைத் தொகுத்து எழுதிக் கொள்கிறது. எந்த ஒரு நிலப்பகுதியின் தொன்மையான வரலாறும் அதில் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் வாழும் மக்கள் கொள்ளும் தன்னுணர்வுக்கு ஏற்ப அதன் வரலாறாக எழுதப்படும். உதாரணமாக காலனீய ஆட்சிக்காலத்தில் இந்தியர்கள் என்ற ஒரு மக்கள் தொகுதி அரசியல்…

  7. சொத்துக்குவிப்பு தீர்ப்பு: சசிகலாவின் சீராய்வு மனு மீது இன்று விசாரணை? சசிகலா | கோப்புப் படம்: பிடிஐ சொத்துக்குவிப்பு மேல்முறை யீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி அதிமுக அம்மா அணியின் பொதுச்செயலாளர் சசிகலா தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வரும் என தெரிகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரை கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி கடந்த 2015-ம் ஆண்டு விடுதலை செய்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆ…

  8. 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்படும்! 2ஜி வழக்கு தொடர்பாக தீர்ப்பு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் செப்டம்பர் 20-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி ஷைனி தெரிவித்து இருந்தார். அதன்படி 2ஜி வழக்கு தீர்ப்பு தேதி டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட் இன்று அறிவிக்க உள்ளது. கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தின் போது 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. திமுகவின் ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனை சிபிஐ விசாரணை நடத்தியது. …

  9. சென்னை: சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில், கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் நாளை மறுதினம் தொடங்குகிறது. தமிழகத்தில் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே கடந்த சில வாரங்களாக வெயில் மக்களை வாட்டி எடுத்து வருகிறது. இந்நிலையில், அக்னி நட்சத்திரம் நாளை மறுதினம் தொடங்குவதால் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உக்கிரம் மே 28ஆம் தேதி வரை நீடிக்கும். இந்த ஆண்டில் பல மாவட்டங்களில் கடந்த மாதம் தொடக்கத்திலேயே வெயில் 100 டிகிரியை எட்டியது. கடந்த மாதம் இறுதியில் வெயில் 107 டிகிரி பதிவானது. எனவே, மே மாதத்தில் வெயில் 112 டிகிரி வரை உயர வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளத…

  10. சாதிய கொலை வெறியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் தீர்ப்பு: சங்கரின் மனைவி கவுசல்யா பேட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்ததை பொறுக்காத கவுசல்யா குடும்பத்தார் கூலிப்படையை ஏவியதில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி, கூலிப்படைக் கும்பல் சங்கரை வெட்டிக்கொலை செய்தது. அவரது மனைவி கவுசல்யாவையும் அந்தக் கும்பல் வெட்டியது. கவுசல்யா பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். சங்கர் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட…

  11. இலங்கை வந்த தமிழக கரப்பந்து வீரர்கள் கவலையுடன் திரும்பினர் ஆசிய இளையோர் கரப்பந்து (volleyball) போட்டிக்காக இலங்கை சென்றிருந்த தமிழக வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டதும், பயிற்சியாளர் ஆண்டனி, விடுதி மேலாளர் நாகராஜன் ஆகியோர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதும் தமிழக விளையாட்டு வீரர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. தமிழக விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட்டு வரும் தமிழக முதல்வர் இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கொழும்பில் வெள்ளிக்கிழமை (05) தொடங்கிய 10-வது ஆசிய இளையோர் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்றுள்ளது. அதில் தமிழக அரசின் சிறப்பு விளையாட்டு விடுதியைச்…

  12. ஜல்லிக்கட்டு..வாடி வாசலில் பாய தயாராகும் செந்தில் தொண்டமானின் கேஜிஎப்,டைகர்..களத்தில் மிரட்டுமா.? சிவகங்கை: பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு காளைகள் தயாராகி வருகின்றன. இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் வளர்க்கும் காளைகள் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வீரர்களைப் போலவே ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வருகின்றன. ஜல்லிக்கட்டு போட்டிக்கு சென்றுவர கேரவன், தனித்தனி அறைகளில் ஃபேன், ஏர்கூலர், வசதியுடன் கூடிய தங்குமிடம் என இந்த காளைகளுக்கு அனைத்து வசதிகளோடு பராமரிக்கப்பட்டு தீவிர பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. பூர்வீகம் சிவகங்கை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்டவர் செந்தில் தொண்டமான். ஜல்லிக்கட்டுப் போட்டி…

  13. தமிழ்நாட்டை சுடுகாடாக மாற்ற துடிக்கும் தேசத் துரோகிகளின் சூழ்ச்சி

  14. அதிரவைக்கும் வருமான வரி சோதனை: அதிமுகவை நோக்கி குற்றச்சாட்டு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களாக 30க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை நடத்திவரும் சோதனைகளில் சுமார் 163 கோடி ரூபாய் பணமும் 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சோதனைகள் இன்றும் நடந்துவருகின்றன. படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழ்நாட்டில்…

  15. Exclusive: ஜெயலலிதாவுக்கு அளித்த தண்டனையை அதிகரிக்க ஹைகோர்ட்டில் வாதம்- பவானி சிங் தடாலடி பெங்களூரு: நெருக்கடி தந்ததால் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு தரப்புக்காக வாதாடுவதில் இருந்து விலகி கொண்டதாக மூத்த வக்கீல் பி.வி.ஆச்சாரியா கூறியிருக்க கூடாது என்று ஜெயலலிதா வழக்கின் தற்போதைய அரசு வக்கீல் பவானிசிங் தெரிவித்தார். மேலும், ஹைகோர்ட்டில் நடைபெற உள்ள சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையிட்டின்போது ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை அதிகரிக்க கோரி வாதிட திட்டமிட்டுள்ளதாகவும் பவானிசிங் தெரிவித்தார். தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான, ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டபோது அரசு வக்கீலாக நியமிக்க…

  16. இலங்கை அரசுடன் தொடர்ந்து நட்புறவு பாராட்டி வரும் மோடி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பா.ஜ., தலைமையிலான தே. ஜ., கூட்டணியில் இருந்து ம.தி.மு.க,. விலகுவதாக கட்சியின் பொது செயலர் வைகோ சென்னையில் இன்று மதியம் தெரிவித்தார். தமிழக மக்களின் விருப்பத்திற்கு மாறாக மோடி செயல்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சமீப காலமாக வைகோ பா.ஜ., அரசை கடுமையா விமர்சித்து வந்தார். இலங்கை தமிழர்கள் தூக்கு, இலங்கை மீனவர்கள் கைது ஆகிய விவகாரத்தில், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு மோடி அரசு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டி இருந்தார். மேலும் மோடியை வைகோ விமர்சிப்பது, கூட்டணியில் இருந்து கொண்டு இவ்வாறு செயல்படுவது சரியல்ல. நாவடக்கம் தேவை என எச்சரிக்கப்பட்டது. பா.ஜ., முன்னணி தலைவர்களில் ஒருவ…

  17. 20 அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த ஆந்திர காவல்துறையையும், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடுவையும் கைது செய்ய வலியுறுத்தி அவருக்கு சொந்தமான மைலாப்பூரில் உள்ள ஹெரிடேஜ் அங்காடியை தமிழர் எழுச்சி இயக்கத்தினர் அடித்து நொறுக்கினர். அவ இயக்கத்தை சேர்ந்த கண்ணன் மற்றும் குமரவேல் ஆகியோரை கைது செய்யப்பட்டு மைலாப்பூர் E1 காவல் நிலையத்தில் வைக்கப்பட்டள்ளனர். http://www.pathivu.com/news/39112/57//d,article_full.aspx

    • 3 replies
    • 1.4k views
  18. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது.. திமிறி எழும் காளைகளை அடக்கி வரும் காளையர்கள் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கியது. பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது நம் வழக்கம். அதன்படி, மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் 3 இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. பொங்கல் தினத்தன்று அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கலன்று பாலமேட்டிலும், காணும் பொங்கல் அன்று அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது.இந்த போட்டிக்காகவே கடந்த 15 நாட்களாக காளைகள், மாடிபிடி வீரர்கள் பதிவு, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவறை மிக தீவிரமாக நடைபெற்று வந்தது. அதன்படி இன்…

  19. புதுச்சேரி: பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் சாராயக்கடையை இடமாற்றம் செய்யும்படி அரசை பலமுறை வலியுறுத்தியும் கேட்காததால் ஆத்திரம் அடைந்த பெண்கள், சாராயக் கடையை அடித்து நொறுக்கினர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி வழுதாவூர் சாலையில் கவுண்டம்பாளையத்தில் இருக்கிறது 6-ம் எண் சாராயக்கடை. இந்தக் கடையில் இன்று காலையில் பத்து மணியளவில் இந்திய கம்யூனிஸ்ட் மகளிரணியைச் சேர்ந்த சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பெண்கள் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பியவாறு திடீரென சாராயக்கடையில் நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த சாராய கேன்கள், பாட்டில்கள் உள்ளிட்டவைகளையும், கடைகளையும் சரமாரியாக அடித்து நொறுக்கினர். இந்த திடீர் தாக்குதலால் சாராயக்கடை உரிமையாளர் மற்றும் …

  20. ஆட்சிப் பீடத்தில் அமருவாரா ஸ்ராலின் !! கருணாநிதி நினைவிடத்தில் திடீரென அஞ்சலி செலுத்தி ஆசி வாங்கியதால் பரபரப்பு !! தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 22 சட்டப் பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் திமுக மற்றும் அதிமுக இடையே கடும் போட்டி இருந்து வந்தது. திமுகவைப் பொறுத்தவரை கருணாநிதி மறைவுக்கும் பிறகு அக்கட்சி சந்திக்கும் முதல் தேர்தல். அதே போல் அதிமுகவும் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஒரு பொதுத் தேர்தலை சந்திக்கிறது. கடந்த ஏப்ரல் 18 மற்றும் மே 19 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற்ற இந்த தேர்தல்களில் பதிவான வாக்குக்குள் நாளை மறுநாள் எண்ணப்படுகின்றன. இதனிடையே நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில்,…

  21. 14 Aug, 2024 | 05:33 PM இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி பாம்பனில் நாட்டுப் படகு மீனவர்கள் இன்று (ஆக.14) ஐந்தாவது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாம்பன் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்குச் சென்ற அலெக்ஸ், ரஞ்சன், சார்லஸ், சூசை மார்டின் ஆகியோருக்கு சொந்தமான நான்கு நாட்டுப் படகுகளை கைப்பற்றி அதிலிருந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த ஆகஸ்ட் 8ம் தேதியன்று கைது செய்தனர். 35 மீனவர்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர்களுக்கு ஆகஸ்ட் 22ம் தேதி வரை வரையிலும் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் புத்தளத்தில் உள்ள வாரியாபொல சிறையில்…

  22. ஆசியாவின் மிக மோசமான விமான நிலையங்கள் பட்டியலில் சென்னை! கண்ணாடி விழுவதில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் சென்னை விமான நிலையம், தற்போது ஆசியாவின் மிக மோசமான விமான நிலையங்களின் பட்டியலில் இடம் பெற்று புதிய சாதனை(?) படைத்துள்ளது. 'தி கைட் டூ ஸ்லிப் இன் ஏர்போர்ட்ஸ் ' என்ற சுற்றுலா இணையதளம், உலகின் மிக மோசமான விமான நிலையங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், ஆசியாவில் மிக மோசமான விமான நிலையங்கள் பட்டியலில் சென்னை விமான நிலையத்துக்கு 7-வது இடம் கிடைத்துள்ளது. இந்தியாவில் இருந்து இந்த பட்டியலில் முதல் 10 இடத்திற்குள் இடம் பெற்றுள்ள, ஒரே விமான நிலையம் சென்னைதான். இந்த பட்டியலில் நேபாளத் தலைநகர் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையம் முதலிடத்தில் உள்ளது. தாஷ…

  23. இளம் நடிகர்களின் கள நிவாரணப் பணிகளும் கமல்ஹாசனின் ஜன்னலோர வேடிக்கையும்! சித்தார்த், ஆர்.ஜே.பாலாஜி, கமல்ஹாசன் | கோப்புப் படம் சித்தார்த், ஆர்.ஜே.பாலாஜி, விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல இளம் திரையுலக பிரபலங்கள் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் களத்தில் இறங்கி இரவு, பகல் பார்க்காமல் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கமல் ஒரு பேட்டியில் ''ஒரு பாதுகாப்பான அறையில் அமர்ந்து கொண்டு என் சக சென்னை மக்கள் மழையிலும் வெள்ளத்திலும் அவதிப்படுவதை ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறேன். உண்மையில் எனக்கு இப்படி இருப்பது வெட்கமாக இருக்கிறது'' என்று கூறியுள்ளார். நடிகர்களின் களப் பணி …

  24. சென்னையிலே இருக்கிறதே சாதனைதான்! தமிழ்ச் சினிமாவில் பல படங்களில் இந்தக் கதை அமைந்து இருக்கும்.ஏழைக் கதாநாயகன் அல்லது வில்லனால் ஏழையாக்கப்பட்ட கதாநாயகன், "நானும் உன்னைப் போல பணக்காரனாகி,உன்னையும் உன் திமிரையும் அடக்கலைன்னா நான் என் பேரை மாத்திக்கிறேன்!" என்று ஆக்ரோஷமாக கூறி சென்னைக்கு ரயிலேறுவார். ஒரு வழியாக சினிமா இலக்கணத்திற்கே உரியவாறு செல்வந்தரின் அபிமானத்தைப் பெற்று மிகப் பெரிய கோடீஸ்வரராகவும் மாறுவார். அப்புறம் கிராமத்திற்கு திரும்பி, தாம் சவால் விட்ட வில்லனை வாய் பிளக்க வைத்து, கூடவே தனது காதலியை-அநேகமா வில்லனின் மகள்- மணந்து கொள்வதுடன் படம் சுபமாக முடியும். இந்த வகையறா கதைகள் நம் சினிமாக்களில் அரதப்பழசாகிப் போனாலும், அது சென்னையை…

  25. நெஞ்சுவலி… அப்பல்லோவில் அன்புமணி Jan 21, 2025 பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் அன்புமணி இன்று ஜனவரி 21ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் ரோட்டில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயம் தொடர்பான ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மருத்துவர்களின் கண்காணிப்பில் டாக்டர் அன்புமணி இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் இருந்து தகவல்கள் கிடைக்கின்றன. https://minnambalam.com/uncategorized/anbumani-admitted-in-apollo-hospital-angio-surgery/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.