Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்- சீமான் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கைக்கு எதிராக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள தனது வீட்டின் முன்பு சீமான் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அந்தபின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அந்தி வந்தால் நிலவு வருவதை போல ஹிந்தி வந்தால் பிளவு வரும் என்று தெரிவித்தார். அத்துடன், ஹிந்தியை இந்தியா என்ற கட்டமைப்பிற்குள் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலம், ஹிந்தியைப் போல் தமிழையும் நாடெங்கும் படிக்கச் சொல்வா…

  2. "அம்மா கொவிட் -19" வீட்டு பராமரிப்பு திட்டம், நாளை ஆரம்பித்து வைக்கப்படுகின்றது இந்தியாவில் முதல் முறையாக வீட்டுத்தனிமையில் இருப்பவர்களுக்கு சிகிச்சையளிக்கும் வகையில், அம்மா கொவிட் – 19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை(வெள்ளிக்கிழமை) ஆரம்பித்து வைக்கின்றார். இத்திட்டத்தின் கீழ் வீட்டுத்தனிமையில் உள்ளவர்களை கண்காணிக்க 20 பேர் கொண்ட மருத்துவ குழு சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டுத் தனிமையில் இருப்பவர்களுக்கு, பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி, வெப்பமானி, வைட்டமின் மாத்திரைகள், 14 முககவசங்கள், கிருமிநாசினி அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். தமிழக அரசு சார்பில் தொடங்கப்பட்டும் இத்திட்…

  3. தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு தடை by : Benitlas நாடு முழுவதும் எதிர்வரும் 22ஆம் திகதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படவுள்ள நிலையில் தமிழகத்தில் கோலாகலமான கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் இந்துக்களின் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி எதிர்வரும் 22ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா காரணமாக விநாயகர் சிலைகள் அமைக்க, வழிபட தடைகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஊரடங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாட அனுமதி அளிக்குமாறு இந்து அமைப்புகள் சில கோரிக்கை விடுத்து வந்தன. இந்நிலையில் தமிழக அரசு தற்போது அதிரடி அறிவிப்பை வெளி…

    • 0 replies
    • 601 views
  4. முதல்வர் வேட்பாளர் யார்?.. அதிமுக தலைமை அலுவலகத்தில் சூடு பறக்கும் ஆலோசனை.! சென்னை: முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அதிமுக தலைமை அலுவலகத்தில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது. வரும் 2021-ஆம் ஆண்டு மே மாதம் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. கருணாநிதி, ஜெயலலிதா இல்லாமல் சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல் இது. எனவே இந்த தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து இப்போதே கட்சிகள் வியூகம் வகுக்கத் தொடங்கிவிட்டன. இந்த நிலையில் அண்ணா, காமராஜர், எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரை முன்னிலைப்படுத்தியே சட்டசபைத் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள் நடைபெற்றன. ஆனால் அவர்கள் இருவரும் தற்போது காலமாகிவிட்டதால் திமுக, அதிமுக ஆகிய கட…

  5. அமெரிக்க தேர்தல் பற்றியா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள்?- தமிழக அரசிடம் நீதிமன்றம் கேள்வி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்தா நளினியும் முருகனும் பேசப்போகிறார்கள் என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நளினியும் முருகனும் உறவினர்களிடம் காணொளி தொடர்பாடல் மூலம் பேச அனுமதி கோரிய வழக்கு சென்னை உயநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு இன்று (புதன்கிழமை) நீதிபதி கிருபாகரன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நளினியையும் முருகனையும் பேச அனுமதித்தால், பன்னோக்கு விசாரணை முகாமையின் விசாரணைக்கு இடையூறாக அமையும் என தமிழக அரசு தெரிவித்தது. இதையடுத்து, அமெரிக்க அதிபர் தேர்தல் பற்றியா நளி…

  6. தீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக அருகாமையில் ஒரு பள்ளி; அதன் ஆசிரியர் ஜெயமேரி விருதுநகர் கரோனா ஊரடங்கு ஊரை முடக்கினாலும் கருணை உள்ளங்களை முடக்கவில்லை. அப்படி கருணை உள்ளம் கொண்ட ஓர் ஆசிரியர் தான் ஜெயமேரி. அவர், கரோனா ஊரடங்கு காலத்தில் 'அருகாமைப் பள்ளி', என்றொரு திட்டத்தைத் தொடங்கி தான் வசிக்கும் பகுதியில் உள்ள தீப்பெட்டித் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வியை நற்பண்பை கொண்டு சேர்க்கிறார். அருகாமையில் ஒரு பள்ளி உருவான கதையை ஜெயமேரியிடம் கேட்டோம். "பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது தெரியாத நிலை. வீட்டிற்கு வெளியே வெயிலில் சுற்றித் திரியும் குழந்தைகளுக்கு ஏதேனும் சொல்லித் தந்தால் என்ன என்ற யோசனை ஓடிக் …

  7. ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியரா? – கனிமொழி கேள்வி ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியரா? என தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கேள்வி எழுப்பிள்ளார். தனது ருவிட்டர் வலைப்பக்கத்தில் இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர், தனக்கு ஹிந்தி தெரியாததால், விமான நிலையத்தில் CISF அதிகாரியிடம் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசுமாறு கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அதற்கு அந்த அதிகாரிநீங்கள் இந்தியரா ? என கேள்வி எழுப்பியதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் ஹிந்தி தெரிந்தால் தான் இந்தியர் என்று எப்போது முடிவு செய்யப்பட்டது? எனவும் கனிமொழி தனது டுவிட்டர் பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். http://athavannews.com/ஹிந்தி-தெரிந்தால்-தான்-இ/

  8. லெபனான் வெடிப்பு எதிரொலி: சென்னையிலிருந்து அமோனியம் நைட்ரேட்டை அகற்றும் பணி ஆரம்பம்! சென்னை, மணலி கிடங்கில் இருந்த 740 தொன் அமோனியம் நைட்ரேட்டை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், முதற்கட்டமாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) 10 கென்டெய்னர்கள் மூலம் 200 தொன் அம்மோனியம் நைட்ரேட் ஹைதராபாத்திற்கு அனுப்பப்படுகிறது. லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமோனியம் நைட்ரேட் வைக்கப்பட்டிருந்த கிடங்கில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு நகரில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தென்கொரியாவில் இருந்து சென்னைக்கு இறக்குமதி செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட், சென்னை துறைமுகத்தில் சுங்கத்துறையின் சில சட்டப் பிரச்சினைகள் காரணமாக மணல…

  9. National Education Policy 2020 புதிய கல்விக் கொள்கை: உயர்கல்வியில் தமிழ் வழியில் படிக்கும் வாய்ப்பு என்னவாகும்? 31 ஜூலை 2020, 03:27 GMT புதிய கல்விக் கொள்கை - புத்தொளி வீசுகிறதா? புற்றில் இருந்து சீறுகிறதா? இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ள புதிய கல்விக் கொள்கையில் முக்கியமான கூறுகளில் ஒன்றாக வாய்ப்புள்ள இடங்களில், ஐந்தாம் வகுப்பு வரை உள்ளூர் மொழி அல்லது தாய்மொழி வழியாகவே கல்வி கற்பிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது கருதப்படுகிறது. பள்ளிக் கல்வியில் தாய்மொழிக் கல்வி பற்றி குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு உயர்கல்வியில் இந்திய மாணவர்களின் தாய்மொழி அல்லது உள்ளூர் மொழி எவ்வாறு பயன்படுத…

  10. திமுக, அதிமுகவுக்கு அடுத்து... வியூகம் வகுக்கும் பாஜக! மின்னம்பலம் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் 2014 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 4.3 சதவிகித வாக்குகளைப் பெற்றது. 2016 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 6.47 சதவிகித வாக்குகளையும், 2019 மக்களவைத் தேர்தலில் அதிகபட்சமாக 12.7 சதவிகிதம் வாக்குகளைப் பெற்றது. இந்த நிலையில் வரும் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸை விட அதிகமான வாக்கு சதவிகிதத்தை பாஜக பெற வேண்டும் என்கிற எண்ணத்தோடு ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள் தமிழகத்தில் களமிறங்கியுள்ளன. 2017இல் தங்களது பணியைத் தொடங்கிய இந்த அமைப்புகள் குக்கிராமங்கள் முதல் மாநகராட்சி வரையில் பரவலாக காலூன்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. …

  11. உலகத்தமிழர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! - சீமான் | நாம் தமிழர் கட்சி உலகத்தமிழர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்! - சீமான் | நாம் தமிழர் கட்சி துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு! இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை! இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி! 2016 - உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு! solomon5050 3 years ago மடிந்து கொண்டிருக்கும் இயற்கை வளங்களை மீட்டெடுக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்தி, தமிழனின் இன உணர்வை தட்டி எழுப்பிக் கொண்டிருக்கும் பணியினை தொடர்ந்து செய்து வந்தும், விவசாய பன்னைகளை ஆங்காங்கே கட்டி எழுப்பவேண்டும் என்ற நம்மாழ்வாரின் கனவினை நனவாக்க துடிப்புடன் செயல்பட்டு கொண்டும், இப்பொழுது நட…

  12. மதுரை மாவட்டம் உலைப்பட்டி கிராமத்தில் விரிவான தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் கோரிக்கை மதுரை மாவட்டம் உலைப்பட்டி கிராமத்தில் விரிவான தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! – சீமான் கோரிக்கை | நாம் தமிழர் கட்சி வீழ்ந்துவிட்ட ஓர் இனம் தன் நிலையிலிருந்து மேல்நோக்கி முன்னேறி எழ வேண்டுமாயின் அது தன் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். நம் முன்னவர்களின் புகழ்மிக்க வரலாற்றைத் தேடிப் போற்றுவதன் மூலமே நம்மை நாம் தேற்றிக்கொள்ளவும், இழிநிலையிலிருந்து மேம்படுதற்கான உந்துதலையும் பெற முடியும். வரலாற்றைத் தொலைத்து விட்ட எந்த ஓர் இனமும் வாழாது; வளராது! எனவே ஐம்பதனாயிரம் ஆண்டுகளுக்கு மூ…

  13. தடகள வீராங்கனை தங்கை கோமதி மாரிமுத்துவிற்கு தமிழக அரசு உறுதுணையாக நின்று மீண்டுவர உதவ வேண்டும் – சீமான் வலியுறுத்தல் தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராகச் சட்டப்போராட்டம் நடத்தி வரும் தடகள வீராங்கனை தங்கை கோமதி மாரிமுத்துவிற்கு தமிழக அரசு உறுதுணையாக நின்று மீண்டுவர உதவ வேண்டும் – சீமான் வலியுறுத்தல் திருச்சி மாவட்டம், முடிகண்டம் கிராமத்தில் மிகவும் எளியப் பின்புலத்தில் வறுமை, ஏழ்மையை எதிர்கொண்டு பசி, பட்டினியோடு காலங்களைக் கடத்தி தந்தையை இழந்தபோதும் தன்னம்பிக்கையை இழக்காது இலட்சியத்தில் வென்று தனது திறமையை உலகுக்கு நிரூபித்து நாட்டிற்கே பெருமை சேர்த்தவர் தங்கை கோமதி மாரிமுத்து. அவரை விளையாட்டில் தோற்கடிக்க முடியாத நிலையில் திட்டமிட்ட சதிச்செயலாலும், பாகுபாட்ட…

  14. எம்.எல்.ஏ.க்கள் கருணாஸ், பவுன்ராஜுக்கு கொரோனா மின்னம்பலம் சட்டமன்ற உறுப்பினர் கருணாஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி முன்களப் பணியாளர்கள், மக்கள் பிரதிநிதிகளுக்கும் தொடர்ந்து கொரோனா உறுதிசெய்யப்பட்டு வருகிறது. இதுவரை நான்கு அமைச்சர்கள் உட்பட இருபதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், மூன்று எம்.பி.க்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபோலவே விஷால் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் திருவாடனை சட்டமன்ற உறுப்பினரும், முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவருமான நடிகர் கருணாஸுக்கு நேற்று (ஆகஸ்ட் 5) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில…

  15. நன்றி லலிதாம்மா நாம் அன்றாட தினசரி வாழ்க்கையில் பிறருக்கு பல வழிகளில் உதவிடும் மனிதர்களைப் பார்க்கிறோம். அவர்கள் எந்தவித எதிர்பலனையும் பாராது அந்த உதவியைச் செய்துவருவதை கவனித்திருப்போம். தள்ளாத வயதிலும் தணியாத ஆர்வத்தோடு சமூக சேவைகளைச் செய்கிறார் லலிதாம்மா. இப்படி எளிய மக்களுக்காக தனது உதவிக்கரங்களை நீட்டியவருக்கு ‘காட்பரி டெய்ரி மில்க்’ நன்றி கூற விரும்புகிறது. அது அவர்களின் சேவைப் பயணத்தை இன்னும் சுகமாக்கும், வலுப்படுத்தும்... உடலும் மனமும் சோர்ந்து தன்னைக் கவனித்துக்கொள்ளவே பலரும் சிரமப்படும் 85 வயதிலும் சமூகசேவை செய்வதற்காக, காலையிலேயே கிளம்பிவிடுகிறார் லலிதாம்மா.அவரைப் பார்த்ததுமே மக்கள் ஓடிவந்து சூழ்ந்துகொள்கின்றனர். ஒவ்வொருவரையும…

  16. இராமர் கோயிலுக்காக... தமிழகத்தில் இருந்து, தங்கத்தால் ஆன செங்கற்கள் அனுப்பிவைப்பு! இராமர் கோயில் கட்டுமானப்பணிகளுக்காக தமிழகத்தை சேர்ந்த சாதுக்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன 2 செங்கற்களை அனுப்பிவைத்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இராமர் கோயில் கட்டுமானத்திற்கான பூமி பூஜை நாளை (புதன் கிழமை) நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு இடங்களில் இருந்து புனித நீர் மற்றும் மண் கொண்டு செல்லப்பட்ட நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த சாதுக்கள் தங்கம் மற்றும் வெள்ளியால் ஆன இரண்டு செங்கற்களை அனுப்பிவைத்துள்ளனர். இராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை சார்பில் அனுப்பிவைக்கப்பட்ட குறித்த செங்கற்களில் ஸ்ரீராம் என தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ம…

  17. பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் 3-ம் இடம் பிரியங்கா கடலூர் பண்ருட்டியைச் சேர்ந்த மாணவி ஒருவர், ஐஏஎஸ் தேர்வில் தமிழக அளவில் 3-ம் இடம் பெற்றுள்ளார். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த பண்டரக்கோட்டையில் வசிக்கும் மருங்கூர் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் சிவப்பிரகாசத்தின் மகள் பிரியங்கா, இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் தமிழக அளவில் 3-ம் இடத்தையும், அகில இந்திய அளவில் 68-வது இடத்தையும் பிடித்து தேர்ச்சி பெற்றுள்ளார். சிவப்பிரகாசத்தின் மனைவி ஏ.பரிமளா ஆனத்தூர் அஞ்சல் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக பணிபுரிந்துவரும் நிலையில், அவரது இளைய மகன் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் படிப்பு படித்து வருகிறார். …

  18. தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பா.ஜ.க.இல் இணையவுள்ளதாக தகவல் – ஸ்டாலின் அவசர ஆலோசனை சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆயிரம் விளக்கு தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் டெல்லியில் இன்று மாலை பா.ஜ.க. தலைவர் நட்டா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை மேற்கொண்டுள்ளார். ஆலோசனை கூட்டத்தில் துரைமுருகன், ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் கலந்துகொண்டுள்ளனர். ஏற்கனவே தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட வி.பி.துரைசாமி ப…

    • 0 replies
    • 559 views
  19. தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே இடம்பெறும் – பழனிசாமி உறுதி! தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை. இரு மொழிக் கொள்கையே தொடரும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர், “தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை. இருமொழி கொள்கையே தொடரும். புதிய கல்விக் கொள்கையில் மும்மொழி கொள்கை இடம்பெற்றிருப்பது வேதனை அளிக்கிறது. தமிழக மக்களின் உணர்வுகளை ஏற்று மும்மொழி கொள்கையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழ் மொழிக்கோ, தமிழர்களுக்கோ பாதிப்பு ஏற்பட்டால் அதனை களைய அரசு …

  20. சிலைகள் அவமதிப்பு: முதல்வர் எடுத்த இரும்பு முடிவு! மின்னம்பலம் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்களின் சிலைகள் மற்றும் பொதுத் தலைவர்களின் சிலைகளுக்கு இரும்பு கம்பியால் பாதுகாப்பு வளையங்கள் அமைக்க பத்து நாட்கள் கெடு விதித்துள்ளது டிஜிபி அலுவலகம். சமீபநாட்களாக தமிழகத்தில் பெரியார், அம்பேத்கர், எம்.ஜி.ஆர் போன்ற அரசியல் கட்சித் தலைவர்கள் சிலையை அவமதித்து சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை சிலர் தொடர்ந்து செய்து வருகிறார்கள். பெரியாருக்கு காவி சாயம், எம்.ஜி.ஆருக்கு காவித் துண்டு என அணிவிக்கப்பட்டது சர்ச்சைகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதுபோன்ற அருவருப்பான சம்பவங்கள் நடக்காமல் தடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினையை நிலைநாட்ட முதல்வர் எடப்பாடி பழனிசா…

  21. பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை சிற்றுண்டி; புதிய கல்வி கொள்கையில் தகவல் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் காலை சிற்றுண்டியும் வழங்கப்பட வேண்டும் என்று புதிய தேசிய கல்வி கொள்கையில் கூறப்பட்டு உள்ளது. பதிவு: ஆகஸ்ட் 03, 2020 03:20 AM புதுடெல்லி, இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் குழு தயாரித்து வழங்கியுள்ள புதிய தேசிய கல்வி கொள்கைக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்து உள்ளது. கல்வி துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள இந்த புதிய கல்வி கொள்கை வகை செய்கிறது. பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை தாய்மொழியில் கற்கவும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தவும் சிபாரிசு செய்யப்பட்டு இருக்கிறது. பள்ளிக்…

  22. முதல்வருக்கு எதிராக அவதூறு: சீமான் மனு தள்ளுபடி! மின்னம்பலம் அவதூறு வழக்கை ரத்துசெய்யக் கோரிய சீமான் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14-ஆம் தேதி பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், “தமிழக அரசின் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது. மாநில அரசுக்கும், முதலமைச்சருக்கும் அதிகாரம் எதுவும் இல்லை” என்று கருத்து தெரிவித்தார். முதலமைச்சர் குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார். இந்த பேட்டி பல தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டது.இதையடுத்து சீமான் மீது முதலமைச்சர் சார்பில் சென்னை மாநகர குற்றவியல் அரசு வக்கீல் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி…

  23. இலங்கைத் தேர்தலில் எமது நிலைப்பாடு! – ஈழத்தாயக உறவுகளுக்கு சீமான் கடிதம். ⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂⁂ ஈழத்தாயகத்தில் வாழும் என்னுயிர் உறவுகளுக்கு... வணக்கம்! இந்த உலகில் வாழ்கின்ற எல்லாத் தேசிய இன மக்களையும் போல எல்லா வித உரிமைகளையும் கொண்ட ஒரு சுதந்திர வாழ்வினை வேண்டித்தான் எழுபது ஆண்டுகளாக நம் தாய்மண்ணின் விடுதலைக்காக நாம் போராடி வருகிறோம். ஆனால் சிங்களவர்கள் நமக்கான உரிமைகளை மறுத்ததோடு மட்டுமல்லாமல், நாம் இந்த நிலத்தில் வாழ்ந்து விடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்துதான் நம்மை அழித்தொழிக்கும் வேலையைத் தொடங்கினார்கள். பத்தாண்டுகளுக்கு முன்னால் சிங்களப் பேரினவாத அ…

  24. நியூஸ் 18 குணசேகரன் ராஜினாமா! அடுத்து? மின்னம்பலம் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தித் தொலைக்காட்சியின் ஆசிரியராக பணியாற்றிய குணசேகரன் இன்று (ஜூலை 31) தனது ராஜினாமா முடிவை தனது சமூக தளப் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். நியூஸ் 18 தமிழ்நாடு சேனலில் குறிப்பிட்ட கொள்கைக்கு ஆதரவாகவும், குறிப்பிட்ட கொள்கைக்கு எதிராகவும் செய்திகள் தரப்படுவதாக சமூக தளங்களில் புகார்கள் கிளம்பின. இதுகுறித்து நியூஸ் 18 தலைமைக்கு புகார் அனுப்பியிருப்பதாக மாரிதாஸ் என்பவர் தெரிவித்தார். அதையொட்டி மாரிதாஸ் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் குணசேகரன் வழக்குத் தொடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று தனது ராஜினாமா முடிவை அறிவித்துள்ளார் குணசேகரன், “நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியின் தொடக…

  25. தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: தளர்வுகள், தடைகள்; முழு விவரம் சென்னை மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: 'இந்தியா முழுவதும், கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. நான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மூத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.