தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
இனி எந்தப் பதவிக்கும் போட்டியிட மாட்டேன்: - வைகோ அதிரடி அறிவிப்பு [Friday 2016-05-06 15:00] இனி வாழ்நாளில் எந்தப் பதவிக்கும் போட்டியிட மாட்டேன் என்று வைகோ கூறினார்.ஆயிரம் விளக்கு தொகுதி மதிமுக வேட்பாளர் சி.அம்பிகாபதியை ஆதரித்து, மாதிரி பள்ளி பகுதியில் வைகோ பிரசாரம் செய்தார். அப்போது, பிரசார பேச்சை வைகோ நிறைவு செய்தபோது மதிமுக தொண்டர் ஒருவர், ""நீங்கள் முதல்வராகத் தேர்தலில் போட்டியிட வேண்டியது தானே'' என்று கேட்டார். அதற்கு, வைகோ அளித்த பதில்: ""அண்ணாவின் கொள்கைகளுக்காக, சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்வதற்காக, மதுக் கடைகளை-ஊழலை ஒழிக்க, தமிழக மக்களைக் காக்க வாழ்கிறேன். எனக்கென சுயநலம் இல்லை. நாடு கெட்டுப் போய் விடக் கூடாது என்பதற்காக பேசுகிறேன். …
-
- 1 reply
- 637 views
-
-
சென்னை: தமிழகம் முழுவதும் கரோனா பரவும் அபாயம் எழுந்துள்ளதாக மாநில சுகாதாரத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், கரோனா பாதிப்பு இருப்பவா்கள், கரோனா தொற்றை மறைத்தால் ஆறு மாதங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா பாதித்த 20 மாவட்டங்களிலும் சுகாதாரத் துறையினா் வீடு, வீடாகச் சென்று ஆய்வு செய்து வருகின்றனா். காய்ச்சல், சளி, சுவாசப் பாதிப்பு இருக்கும் அனைவரும் தனிமைப்படுத்தப்படுகின்றனா். இந்த நிலையில், சுகாதாரத் துறை சாா்பில் வியாழக்கிழமை ஓா் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், தமிழகம் முழுவதும் கரோனா நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கரோனா அறிகுறிகள் இருப்பவா்கள் தாங…
-
- 0 replies
- 357 views
-
-
தமிழகத்தில் அண்மைய நாட்களில் இடம்பெறும் கொலை சம்பவங்கள் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சுவாதி, வினுப்பிரியாவை தொடர்ந்து சேலம், தெலுங்கனூர் பகுதியில் 6 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த சனிக்கிழமை காணமல் போன குறித்த சிறுமி, அயல் வீட்டில் மூடி வைக்கப்பட்ட சமயல் பாத்திரம் ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பில் அதேபகுதியினை சேர்ந்த 17 வயதான சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டு, தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள சிறுவனிடம் மேற்கொள்ளப்பட்டுள்ள விசாரணைகளின் போது பொலிஸாரையே அதிர வைக்கும் சில தகவல்களை சந்தேகநபர் கூறிய…
-
- 1 reply
- 600 views
-
-
நளினி, முருகன் விடயத்தில் மனிதாபிமானத்துடன் நடவுங்கள் -தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் தெரிவிப்பு நளினி, முருகன் விவகாரத்தில் தமிழக அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றவர்கள் நளினி, முருகன். அண்மையில் இலங்கையில் வசித்து வந்த முருகனின் தந்தை மரணமடைந்தார். அவரது இறுதிசடங்கை ‘வாட்ஸ்-அப்’ வீடியோ கோலில் பார்க்க அனுமதி கேட்ட முருகனின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. இந்தநிலையில் இலங்கையில் உள்ள முருகனின் தாயாரிடமும், லண்டனில் உள்ள முருகனின் சகோதரியிடமும், நளினியும், முருகனும் ‘வாட்ஸ்-அப்’ வீடியோ கோலில் பேச அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீத…
-
- 1 reply
- 489 views
-
-
எழுவர் விடுதலை; 30 ஆண்டு சிறைக்கொடுமை போதாதா? 1,007 நாட்கள் ஆகியும் ஆளுநர் காலதாமதம் செய்வது நியாயமல்ல: ராமதாஸ் ராமதாஸ்: கோப்புப்படம் சென்னை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூன் 11) வெளியிட்ட அறிக்கை: ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தவறுதலாக தண்டிக்கப்பட்ட பேரறிவாளன், அந்த வழக்கில் விசாரணை என்ற பெயரில் கைது செய்யப்பட்டு இன்றுடன் 29 ஆண்டுகள் நிறைவடைந்து 30-வது ஆண்டு தொடங்குகிறது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றமே ஆணையிட்டும், அந்த விஷயத்தில் தமிழக ஆளுநர் முடிவ…
-
- 0 replies
- 469 views
-
-
தமிழகத்தில் ஆகஸ்ட் 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு: தளர்வுகள், தடைகள்; முழு விவரம் சென்னை மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி நடத்திய ஆலோசனையின் அடிப்படையில், ஆகஸ்டு 31-ம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக முதல்வர் பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பு: 'இந்தியா முழுவதும், கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. நான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மூத…
-
- 0 replies
- 742 views
-
-
விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 62வது பிறந்த நாள் தமிழகத்தில் நேற்று பரவலாக கொண்டாடப்பட்டது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன். இலங்கைத் தமிழர்களுக்காக அந்த நாட்டு அரசை எதிர்த்து ஆயுதப் போராட்டம் நடத்திய இவர், இலங்கையில் நடைபெற்ற இறுதிப் போரில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பிரபாகரனின் 62வது பிறந்தநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்தியாவில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை இன்னும் தொடர்ந்த போதிலும், பிரபாகரன் பிறந்த நாளை பல்வேறு அரசியல் கட்சிகளும் கொண்டாடின. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் இராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்திருந்த நூல் வெளியிட்டு விழ…
-
- 0 replies
- 555 views
-
-
‘ராமமோகன ராவ் ஊழல் பற்றி சசிகலாவுக்குத் தெரியாதா?' - கொதிக்கும் சீமான் வருமான வரித்துறையின் வளையத்தில் இருக்கிறார் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ். 'ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் துணையோடுதான் இத்தனை ஆயிரம் கோடிகளை சேர்த்திருக்கிறார்கள். இவர்களுக்கு என்ன தண்டனை கிடைக்கப் போகிறது' எனக் கொந்தளிக்கிறார் சீமான். தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோக ராவ் வீட்டிலும் அலுவலகத்திலும் நடத்தப்பட்ட ரெய்டால், அவருடைய ஆதரவு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். 'எப்போது வேண்டுமானாலும் ஐ.ஏ.எஸ்கள் வீட்டில் ரெய்டு நடக்கலாம்' என்பதால், கோட்டைக்குள் பதற்றத்துடன் கால் வைக்கிறார்கள். அதே அளவுக்கு சீனியர் அமைச்சர்கள் மத்திய…
-
- 0 replies
- 468 views
-
-
சசிகலாவை வீழ்த்த நினைத்த அ.தி.மு.க.வின் ராஜகுரு வீழ்ந்த கதை! சசிகலாவை வீழ்த்த நினைத்து அதில் அ.தி.மு.க.வின் ராஜகுருவாக இருந்த தம்பிதுரை வீழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலில் தமிழகம் தத்தளித்துக் கொண்டு இருக்கிறது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலும், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலா தலைமையிலும் கட்சியினர் அணிவகுத்து வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருவதால் கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்று சசிகலா, எம்.எல்.ஏ.க்களை சந்தித்துப் பேசினார். அடுத்து போயஸ் கார்டனில் இன்று தன்னுடைய 33 ஆண்டுகால வாழ்க்கை வரலாறை தொண்டர்களிடம் விளக்கமாக தெரிவித்தார் சசிகலா. அப்போது 'தனக்கு முதல்வர…
-
- 1 reply
- 1.1k views
-
-
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் இலங்கையை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் விங் கமாண்டர் எம்.எஸ். பந்தாரா தசநாயகே, மேஜர் சி.எஸ்.ஹரிஷ் சந்திரா ஹெட்டி யாராச்சிகே ஆகியோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை இலங்கை அரசு நிறுத்தும் வரையும், தமிழக மீனவர்களை தாக்குவதை நிறுத்தும் வரையும் இலங்கையை சேர்ந்த அதிகாரிகளுக்கு இங்கு எவ்வித பயிற்சியும் அளிக்கக் கூடாது என்றும் அவர்களை உடனே வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மதிமுக, விடுதலை சிறுத்தைகள், பெரியார் தி.க., பல்வேறு அமைப்புகள் சார்பில் கடந்த 18ம் தேதி முற்றுகை போராட்டம் நடந்தது. வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரியில் இ…
-
- 0 replies
- 402 views
-
-
தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற, ஓ.பி.எஸ்., - இடைப்பாடி அணியினர் இடையே, இன்று சட்டசபையில் பலப்பரீட்சை நடைபெறுகிறது. அதனால், 1988ல் நடந்த வன்முறை காட்சிகள் மீண்டும் அரங்கேறுமோ என, பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையில், கடைசி நேரத்தில், 16 எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளதால், பரபரப்பு அதிகரித்துள்ளது. ஜெ., மறைவை தொடர்ந்து, முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அ.தி.மு.க.,வின் தற்காலிக பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டார். கட்சியை கைப்பற்றியதோடு, ஆட்சியையும் கைப்பற்ற முடிவு செய்தார்.முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை, வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்தார். அ.தி.மு.க., சட்டசபை கட்சித் தலைவராகி, முதல்வராக முயற்சித்தார். …
-
- 0 replies
- 276 views
-
-
தமிழக ஆளுநரின் முடிவு சரியா? சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது, கட்சித் தாவல் தடைச் சட்டத்தையே மீறுவதாகத்தான் அமையும். எனவே, ஆளுநர் இந்த முறைகளைக் கடைப்பிடிக்காதது வரவேற்புக்குரியது! தமிழகத்தில், அதிமுகவில் உருவான பிளவின் விளைவாக பன்னீர்செல்வம், பழனிசாமி இருவரும் ஆட்சி அமைக்கும் உரிமை கோரியபோது பலரும் பல்வேறு யோசனைகளை முன்வைத்தனர். ‘முன்னதாக முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துவிட்ட பன்னீர்செல்வத்துக்கு முதல் வாய்ப்பு அளிக்க வேண்டும். இரண்டு பேருக்குமே பெரும்பான்மையை நிரூபிக்க ஒரே நேரத்தில் வாய்ப்பளிக்க வேண்டும்’ என்கிற யோசனைகள் அவற்றில் முக்கியமானவை. ஆனா…
-
- 0 replies
- 329 views
-
-
சரத்குமாருக்காக நடந்த சடுகுடு ஆட்டம்! வருமானவரித் துறை ரெய்டு சூறாவளி, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலையே போட்டுத்தாக்கிவிட்டது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கீதாலட்சுமி போன்றவர்களுடன் நடிகர் சரத்குமாரும் கடும் சேதத்துக்கு ஆளாகி உள்ளார். அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் ரெய்டு நடந்தபோது, அவரிடம் அதிகமாகக் கேட்கப்பட்ட கேள்வி, ‘நடிகர் சரத்குமாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தீர்கள்?’ என்பதுதான். அதைத்தான், தன் பேட்டியில் குமுறித் தீர்த்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். அந்த அளவுக்கு சரத்குமாரை வருமானவரித் துறை அதிகாரிகள் குறிவைக்கக் காரணம் என்ன? ‘‘ சரத்குமார் தனது வழக்கமான ஆட்டத்தை, மத்தியில் ஆளும் பி.ஜே.பி-யோ…
-
- 0 replies
- 1.1k views
-
-
உரத் தட்டுப்பாடு: பொட்டாஷ் உரத்துக்கு மாற்றாக நுண்ணுயிர் உரம் - ஆர்வம் காட்டாத விவசாயிகள் ஜோ. மகேஸ்வரன் பிபிசி தமிழ் 15 டிசம்பர் 2021, 11:23 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் பொட்டாஷ் உரத் தட்டுப்பாடும் விலை ஏற்றமும் ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக நுண்ணுயிர் உரங்கள் பயன்பாட்டில் விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும் என வேளாண் அதிகாரிகள் கூறுகின்றனர். தமிழகத்தில் கடந்த மாதம் பெய்த கன மழையில் டெல்டா மாவட்டங்களில் நெல் உள்ளிட்ட பயிர்கள் மூழ்கின. வெள்ளம் வடிந்து, பயிர்கள் தண்டு வலுவாகவும், மணிகள் ஊக்கம் பெற பொட்டாஷ் உரம் தேவையாக உள்ளது. ஆனால், பொட்டாஷ் தட்டுப்பாடு மற்ற…
-
- 0 replies
- 342 views
- 1 follower
-
-
'அக்டோபரில் பொதுக்குழு!' - எடப்பாடி பழனிசாமிக்கு சிறையிலிருந்து 'ரெட் அலெர்ட்' #VikatanExclusive அ.தி.மு.க அம்மா அணி சார்பில், அக்டோபரில் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த முடிவுசெய்துள்ளார் சசிகலா. அதில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களைத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு 'செக்' வைக்க சசிகலா ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து, கடந்த 12-ம் தேதி பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தினர். அதில், 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 8--வது தீர்மானத்தில், சசிகலாவின் பொதுச்செயலாளர் நியமனம் ரத்து செய்யப்படுவதாகவும் அவரால் நியமிக்கப்பட்ட, நீக்கப்பட்டவ…
-
- 0 replies
- 387 views
-
-
சிறையிலிருந்து ஒரு குரல் டி.அருள் எழிலன் “நான் களைத்துப் போகவில்லை. உற்சாகம் அடைந்திருக்கிறேன். எந்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் எனக்கு தூக்குத் தண்டனை விதித்தார்களோ, அந்த வாக்குமூலமே பொய் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. 'சதிகாரன்’, 'கொலைகாரன்’ என்று என் மீது சுமத்தப்பட்ட களங்கம் கழுவப்பட்டுவிட்டது. நீதிக்கான இந்தப் போராட்டத்தில் நான் இறுதிப் பகுதியில் நிற்கிறேன். இந்த ஒளி, இந்தியாவின் அனைத்து மரண தண்டனை கைதிகளின் கழுத்தின் மீதும் தொங்கிக்கொண்டிருக்கும் தூக்குக் கயிற்றை அறுத்தெறியட்டும்'' என்ற பேரறிவாளனுக்கு இப்போது வயது 42. ராஜீவ் காந்தி கொலைவழக்கில் தூக்குக் தண்டனை பெற்று, தனது மேல் முறையீட்டு மனு மீதான வழக்கின் தன் வழக்கில் இறுதித் தீர்ப்புக்காகக…
-
- 0 replies
- 505 views
-
-
இலங்கையிடமிருந்து விடுவியுங்கள்.! இலங்கை அரசால் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் காரைக்கால் மீனவர்களை விடுவிக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதபடியே மீனவர்களின் குடும்பத்தினர் மனுகொடுத்துள்ளனர். காரைக்காலில் 'பாஸ்போர்ட்' (கடவுச்சீட்டு) சேவை மையம் திறப்பு விழா நிகழ்விற்கு வந்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நிகழ்ச்சி முடிந்து மேடையை விட்டு இறங்க முயற்சித்தார். அப்போது திடீரென காரைக்கால் மாவட்ட மீனவப் பெண்கள் சிலர் அவரை சூழ்ந்துகொண்டனர். தீபாவளிக்கு முன்பு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற காரைக்காலை…
-
- 0 replies
- 347 views
-
-
-
- 0 replies
- 804 views
-
-
அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை! christopherMar 01, 2023 08:47AM தனது பிறந்தநாளை முன்னிட்டு பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, பெரியார் உள்ளிட்டோரின் நினைவிடத்திற்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். அவரின் பிறந்தநாளுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், தனது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். …
-
- 0 replies
- 501 views
-
-
Published By: RAJEEBAN 29 MAY, 2023 | 10:02 AM மதுரை மாவட்டம், ஆனையூர் ஈழத்தமிழர் முகாமில் வசித்துவரும் ரித்யுஷா 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் 600க்கு 591 மதிப்பெண் பெற்றும், மேற்படிப்பு படிக்க வசதியற்ற ஏழ்மைநிலையில் இருக்கும் செய்தியறிந்தவுடன், ரித்யுஷாவின் உயர்கல்வி செலவை முழுமையாக ஏற்றதுடன், கல்லூரியிலும் இடம் பெற்றுக்கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு தொழில்நுட்பத்துறை அமைச்சர், அன்பிற்கினிய சகோதரர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு எனது அன்பையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்என நாம் தமிழ் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார் இது தொடர்பில் சீமான் மேலும் தெரிவித்துள்ளதாவது அடிப்படை வசதிகள் ஏதுமற…
-
- 1 reply
- 311 views
- 1 follower
-
-
திருப்பதி: இலங்கை அதிபர் பாலசிறிசேன வருகையின்போது, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள தங்க கதவின் பூட்டை திறக்க முடியாமல்போனதால் உடைக்கப்பட்டது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மூலவர் அறையின் கதவு தங்கத்தால் செய்யப்பட்டவை. இந்த கதவு தினமும் அதிகாலை திறக்கப்பட்டு சுப்ரபாத சேவை செய்யப்படும். இந்நிலையில் இலங்கை அதிபர் பாலசிறிசேன, அவரது குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்கள் என 42 பேருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க இன்று அதிகாலை 2.30 மணிக்கு வந்தார். அப்போது, மூலவர் அறையின் தங்க கதவு பூட்டை திறக்க முயன்றனர். ஆனால், அந்த பூட்டை திறக்க முடியவில்லை. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, வெல்டிங் செய்து பூட்டு அகற்றப்பட்டு சுப்ரபாத சேவை செய்யப்பட்டது.…
-
- 2 replies
- 475 views
-
-
சென்னையில் கழிவுநீரை சுத்திகரித்து விநியோகிக்கும் நடவடிக்கை January 15, 2019 சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் குடிநீர் தேவை அதிகரித்துவரும் நிலையில், மழை பொய்த்துப் போகும் ஆண்டுகளில் பெரும் நெருக்கடி ஏற்படுகின்ற நிலையில், கழிவுநீரை சுத்திகரித்து விநியோகிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டும் பருவமழை சரியாகப் பெய்யாத நிலையில், சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம் உள்ளிட்ட ஏரிகள் அனைத்துமே வறண்டுபோயுள்ளன. பெரும்பாலான காலங்களில் இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ளும் சென்னைக் குடிநீர் வாரியம், நகரின் கழிவுநீரைச் சுத்திகரித்து சோதனை முறையில் விநியோகிக்கத் திட்டமிட்டுள்ளது. …
-
- 0 replies
- 468 views
-
-
சீகிரிய மலைக்குன்றின் அகழிகள் அமைந்துள்ள பிரதேசம் பொலித்தீன் அற்ற வலயமாக இயங்கவுள்ளது.நேற்று தொடக்கம் இதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் குறித்த வலயத்திற்குள் சமைக்கப்பட்ட உணவுப் பொருட்களையும், சிற்றுண்டிகளையும் கொண்டு செல்வது தடை செய்யப்படுவதாக மத்திய கலாசார நிதியம் அறிவித்துள்ளது. இங்கு பிஸ்கட்டை கொண்டு செல்லாம். ஆனால் அதற்குரிய பொலித்தீன் பொதிகளை அப்புறப்படுத்தல் கட்டாயமானது. குடிநீர் போத்தல்களின் மூடிகளிலுள்ள பொலத்தீன்களையும், வெளியில் ஒட்டப்பட்டுள்ள லேபிள்களையும் அப்புறப்படுத்த வேண்டும். அவற்றை கொண்டு செல்வதற்கு புதிய பையை அறிமுகம் செய்ய மத்திய கலாசார நிதியம் நடவடிக்கை எடுத்துள்ளது. http://www.…
-
- 0 replies
- 424 views
-
-
கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சிறையில் இருந்தபடி இலாகா இல்லாத அமைச்சராக இருந்துவந்த செந்தில் பாலாஜி தற்போது ராஜினாமா செய்திருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவர் இப்போது ராஜினாமா செய்தது ஏன்? செந்தில் பாலாஜி கைதான 8 மாதங்கள் கழித்து ராஜினாமா போக்குவரத்துக் கழக பணியாளர்களை நியமிப்பதில் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் கூறி, அமலாக்கத் துறையால் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். மின்சாரம் மற்றும் மதுவி…
-
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
முன்னாடி பேன்ஸி கடை.. உள்ளே மினி ஹாஸ்பிட்டல்.. 4000 கருக்கலைப்புகள்.. அதிர வைக்கும் "டாக்டர்" கவிதா திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கடந்த 10 ஆண்டுகளாக 4 ஆயிரம் பெண்களுக்கு கருக்கலைப்பு செய்த போலி டாக்டர் ஒருவர் கணவருடன் கைது செய்யப்பட்டார். திருவண்ணாமலையில் சட்டவிரோதமாக கருகலைப்பு நடைபெறுவதாக எஸ்பிக்கு புகார் எழுந்தது. இதையடுத்து திருவண்ணாமலை முழுவதும் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருவண்ணாமலை ஈசான்ய லிங்கம் அருகே ஒரு பேன்ஸி ஸ்டோரில் போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அந்த கடை உரிமையாளர் கவிதாவிடம் (32) போலீஸார் விசாரித்தனர். அவர் உரிய பதிலை அளிக்கவில்லை. அப்போது கடையில் இருந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் அவர் கருக்கலைப்பு செய்ய வந்ததாக கூறின…
-
- 1 reply
- 1.1k views
-