தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
கடந்த 10 ஆண்டுகளாகப் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசு, தமிழக கடற்றொழிலாளர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரண்டு தரப்பினரையும் உடன்பாடு ஒன்றுக்கு கொண்டு வருவதே முக்கியமானதாகும் என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளர் நாராயண் திருப்பதி கருத்துத் தெரிவிக்கையில் ”பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்கள் மற்றும் இந்திய தமிழ் கடற்றொழிலாளர்களுடன் இந்த பிரச்சினை தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்களுடன் பேசி ஒரு தீர்வைக் காணாவிட்டால், இ…
-
-
- 5 replies
- 360 views
- 2 followers
-
-
இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் மீது தொடர்ச்சியாக நடத்தும் தாக்குதல்களை தடுப்பதற்காக கச்சத்தீவை மீட்பது தான் ஒரே வழி என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக மீனவர்கள் முகம் கொடுக்கும் இன்னல்களுக்கு தீர்வு காணவேண்டுமாயின் கச்சத்தீவை மீட்பது மட்டுமே வழி என்று தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம், நாகப்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டும், சிறைபிடிக்கப்பட்டும் தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 1974 ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தப்படி, கச்சத்தீவு இலங…
-
- 0 replies
- 262 views
-
-
தினமலர்: விடிய விடிய சப்பாத்தி சுட்ட கிராம மக்கள் படத்தின் காப்புரிமை DINAMALAR கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க, இரு கிராமத்தினர், விடிய விடிய சப்பாத்திகளை சுட்டுக் கொடுத்ததாக தினமலரில் செய்தி வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே, சென்னகிரி மற்றும் இருசனம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த, 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, தங்கள் பகுதி மக்களிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்மூலம், அரிசி, பருப்பு, நுாடுல்ஸ் பாக்கெட்கள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பாய், போர்வை, துண்டுகள் என, 30 ஆயிரம் ரூபாய…
-
- 0 replies
- 419 views
-
-
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சீமெந்து வீடுகள் November 28, 2018 கஜாபுயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிசை வீடுகளுக்குப் பதிலாக சீமெந்து வீடுகள் கட்டித் தரப்படும் என்று நாகபட்டினம் மாவட்டத்தில் ஆய்வில் ஈடுபட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். கஜா புயலினால் பாதிக்கப்பட்ட நாகபட்டினம் மாவட்டத்தின் நிலவரங்களை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கியதுடன் அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். இதேவேளை, நாகப்பட்டினத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, மாவட்டத்தின் புயல் பாதிப்பு மற்றும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார். …
-
- 0 replies
- 448 views
-
-
கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி 2 மாதங்களாக சுடுகாட்டில் வசிக்கும் அவலம் பட்டுக்கோட்டை அருகே, கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி கடந்த 2 மாதங்களாக குடும்பத்துடன் சுடுகாட்டில் வசித்து வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த கொண்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்லத்துரை (50). இவரது மனைவி செல்வமணி. இவர்களுக்கு முரளி, மூர்த்தி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களும் விவசாய வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த நொவம்பர் மாதம் 16ம் திகதி 110 கிமீ வேகத்தில் வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தில், செல்லத்துரையின் வீடு முற்றிலுமாக சேதமடைந்தது. புதிய வீடு கட்டுவதற்கு பொருளாதார வசதியில்லாத செல்லத்துரையின் குடும்பத்தினர், தங்குவதற்கு வேறு இடமின்றி அர…
-
- 0 replies
- 568 views
-
-
கஜா புயலை தொடர்ந்து தமிழகத்திற்கு தொடரும் ஆபத்து! கஜா புயலினால் பேரழிவை எதிர்நோக்கியிருந்த தமிழகம் தொடர்ந்தும் கடும் காற்று மற்றும் மழையினால் பெரும் பாதிப்பை எதிர்நோக்கி வருகிறது. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு முழுவதும் பரவலாக மழை பெய்ததுடன், இந்த நிலை மேலும் வலுப்பெறும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 24 மணிநேரத்திற்கு தமிழகம், புதுச்சேரி, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரையும் அதிகபட்சமாக 60 கிலோமீற்றர் வரையும் காற்று வீசக்கூடும் என்பதால்…
-
- 2 replies
- 963 views
-
-
கஜா புயல்: புதுக்கோட்டையில் வாழும் இலங்கை அகதிகள் பாதிப்பு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அகதிகள் முகாமில் வாழும் இலங்கை மக்களும் கஜா புயலின் தாக்கத்தால் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர். இந்த முகாமில் சுமார் 450 குடும்பங்கள் வசிப்பதாகவும், இதுவரையில் தமக்கான எந்தவித நிவாரணமும் கிடைக்கவில்லை எனவும் இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இவர்கள் பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வரும் நிலையில், கஜாபுயலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. குடிசை வீடுகளையும், ஓட்டு வீடுகளையும் குடியிருப்புகளாக கொண்ட இவர்கள் தற்போது அதனையும் இழந்து வீதிகளில் வசிக்கின்றனர். அந்தவகையில் புயல் தாக்கி, இன்றுடன் ஐந்தாவது நாளாகிய நிலையில் முற்றுமுழுதாக தமது இயல…
-
- 0 replies
- 580 views
-
-
கஜானாவை சுரண்டிய இரட்டையர்களை வைத்துக்கொண்டு இப்படி பேசுவதா? -அமித் ஷாவுக்கு ஸ்டாலின் பதிலடி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித் ஷா பேசும்போது, வாரிசு அரசியலை ஒழிப்போம் என்று கூறியிருந்தார். ஊழல் செய்த கட்சியான திமுக ஊழலுக்கு எதிராக பேசுவதற்கு தகுதி இல்லை என்றும் கூறினார். இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:- வாரிசு அரசியல் விமர்சனம் வைப்பது கண்ணடி முன் நின்று கரடி பொம்மை விலை கேட்ட நகைச்சுவை போன்று உள்ளது. அரசு கஜானாவை சுரண்டிய இரட்டையர்களை பக்கத்தில் வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் மீது ஊழல் புகார் கூறுவதா? திமுகவுக்கு எதிரான சூழ்ச்சிகள…
-
- 0 replies
- 497 views
-
-
கடத்தப்பட்டு 11 ஆண்டுகளுக்கு பின் கிடைத்த 300 ஆண்டுகள் பழமையான சிலைகள் பட மூலாதாரம்,IDOL WING, TN POLICE 3 மணி நேரங்களுக்கு முன்னர் உளுந்தூர்ப்பேட்டையில் 2011ஆம் ஆண்டில் திருடப்பட்ட சென்னையில் ஒரு வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. பிரபல சிலை கடத்தல்காரரான தீனதயாளனால் இந்தச் சிலைகள் விற்கப்பட்டதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறை தெரிவிக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டையில் உள்ள ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் கடந்த 2011ஆம் ஆண்டு ஜூலை பத்தாம் தேதி இரவு ஒரு கொள்ளைச் சம்பவம் நடைபெற்றது. இதில் கோவிலைச் சேர்ந்த ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி ஆகிய சிலைகள் திருடுபோய…
-
- 0 replies
- 351 views
- 1 follower
-
-
கடந்த காலத் தவறுகளிலிருந்து திமுகவை மீட்டெடுக்க விரும்புகிறேன்! - மு.க.ஸ்டாலின் பேட்டி படம்: பிரபு காளிதாஸ் - படம்: பிரபு காளிதாஸ் திமுகவின் செயல் தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறையும் சூழலில், தன்னுடைய அரசியல் வாழ்விலும் ஐம்பதாவது ஆண்டைக் கடக்கிறார் மு.க.ஸ்டாலின். ஒற்றையாட்சி முறையை நோக்கி நாட்டை பாஜக நகர்த்திவரும் நிலையில், தமிழகத்தில் வரலாற்று நெருக்கடி காலகட்டம் ஒன்றில் இருக்கிறது திமுக. தனிப்பட்ட கனவுகள், கட்சிக்குள்ளான மாற்றங்கள், உருவாகிவரும் அரசியல் சவால்கள், அவர் மீதான விமர்சனங்கள் என்று எல்லாக் கேள்விகளையும் எதிர்கொண்ட ஸ்டாலின் மனம் திறந்து பதில் அளித்தார். திரும்பிப் …
-
- 0 replies
- 266 views
-
-
கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் ஒரு கோடி வடவர்கள் தமிழ் நாட்டில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். நடுவண் அரசும் தமிழக அரசும் இணைந்தே இந்த செயலை செய்துள்ளது. இந்த குடியேற்றத்தினால் தமிழர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கவலைப்பட்டதுண்டா? பல அடுக்குமாடி கட்டிடங்கள் வடவர்களின் முழுமையான குடியிருப்பாக உருவெடுத்து உள்ளது . தமிழகத்தில் உள்ள நீர், உணவு , உறைவிடம் , நிலம், வளங்கள் குடியேறிய மக்களுக்கும் இப்போது பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த பத்து ஆண்டுகளில் மேலும் இரண்டு கோடி வடவர்கள் இங்கு குடியேறுவார்கள் எனத் தெரிகிறது. ஒரு கால கட்டத்தில் தமிழர்களை விடவும் வடவர்களே தமிழகத்தில் அதிமாகவும் வசிப்பார்கள். தமிழர்களின் உரிமைகளையும் தட்டிப் பறிப்பார்கள். …
-
- 0 replies
- 874 views
-
-
பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,பிடிபட்ட தங்க நகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன 2 ஏப்ரல் 2025 கர்நாடக மாநில வங்கியில் கொள்ளையடித்த தங்கத்தை, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள விவசாய கிணற்றில் பதுக்கி வைத்த சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 5 மாதங்களுக்குப் பின்னர் சகோதரர்கள் போலீஸாரிடம் சிக்கியது எப்படி? திசை தெரியாமல் சென்ற விசாரணையில் முக்கிய திருப்பம் எப்படி நடந்தது என்பது குறித்து அதிர்ச்சி தரும் விவரங்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2024 அக்டோபர் 28 ஆம் தேதி, திங்கள்கிழமை. சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பிறகு கர்நாடக மாநிலம், தாவனகரே மாவட்டத்தில் உள்ள நியாமதி எஸ்.பி.ஐ வங்கிக் கிளையில் நுழைந்த ஊழியர்களுக்கு அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. வங்கிக் கிளையின் ஜன்னல் உடைக்கப்பட்டு ல…
-
- 0 replies
- 331 views
- 1 follower
-
-
சென்னை: மணல் மாஃபியாக்களின் சுயநலத்திற்காக, கிராமங்களில் பிரிவினைகள் தூண்டப்படுகின்றன; சமூக நல்லிணக்கம் கெடுகிறது. சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே கடற்கரை மணல் செல்வம் கொள்ளை போவதைத் தடுக்கவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தென்தமிழகத்தின் கடலோரங்களில் இருக்கின்ற, கனிம வளம் பொருந்திய கடற்கரை மணல், அதன் கெட்டித் தன்மையால், கடலோரப் பகுதிகளில் ஒரு தடுப்பு அணையாக, கடல் நீர் உட்புகாத வண்ணம் அப்பகுதி மக்களைக் காத்து வந்தது. அந்த மணலை அள்ளுவதற்கு அரசு அனுமதி அளித்தது. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவைவிட முறைகேடாக, தங்கு தடையின்றி மணல் அள்ளியதைத் தொடர்ந்து, தங்கள் வாழ்வாத…
-
- 0 replies
- 937 views
-
-
தாது மணல் எடுக்கப்பட்ட கடற்கரை (ஆவணப்படம்) தமிழக அரசு மாநிலத்தில் கடற்கரை கனிமங்களைத் தோண்டி எடுக்கும் பணியினை நிறுத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறது. தூத்துக்குடி மாவட் டம் வேம்பார், வைப்பாறு உள்ளிட்ட கடலோர பகுதிகளில் சட்டவிரோதமாக தாது மணல் அள்ளப்பட்டு வருவதாக அண்மையில் புகார்கள் எழ, தாது மணல் கொள்ளை குறித்து விசாரணை நடத்தவென வருவாய்த் துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் ஒரு சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் இரண்டு கட்டங்களில் ஆய்வு மேற்கொண்டு தூத்துக்குடியில் சட்டவிரோதமாக ‘கடற்கரை கனிமங்கள்’ எனப்படும் கார்னட், இல்மனைட் மற்றும் ரூட்டைல் போன்றவை தோண்டி எடுக்கப்படுவது குறித்த ஆய்வறிக்கையினை இன்று (செவ்வாய்) அரசிடம் சமர்ப்பித்தனர். இந்நிலையில், வெளியிடப்பட்…
-
- 0 replies
- 440 views
-
-
கடலில் 28 கிலோ மீற்றர் தூரத்தை 10மணி நேரத்தில் நீந்தி சிறுவன் சாதனை March 29, 2019 தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் 28 கிலோ மீற்றர் தூரத்தை 10 மணி நேரத்தில் நீந்தி கடந்து சிறுவன் ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளார். தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த 4ம் வகுப்பில் கல்வி கற்று வரும் 10 வயதான ஜெய் ஜஸ்வந்த் என்பவரே இவ்வாறு சாதனை புரிந்துள்ளார் இலங்கை தலைமன்னாரில் இருந்து ராமேசுவரம் தனுஷ்கோடி வரை 28 கிலோ மீற்றர் தூரத்தை கடலில் நீச்சல் அடித்து கடக்கும் சாதனையை இவர் நிகழ்த்தி உள்ளார். ராமேசுவரம் துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை சிறுவன் ஜெய் ஜஸ்வந்த், பயிற்சியாளர் உள்பட 14 பேர் கொண்ட குழுவினர் ஒரு மீன்பிடி விசைப்படகு மூலமாக தல…
-
- 4 replies
- 938 views
-
-
கடலில் பேருந்துகளை போடும், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக... தமிழக மீனவர்கள் போராட்டம்! இலங்கை மீன்வளத்துறை அதிகாரிகள் பாரம்பரிய மீன்பிடி கடற்பரப்பில் பயன்பாட்டில் இல்லாத பேருந்துகளை போட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். தமிழகத்தில் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று(திங்கட்கிழமை) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது. இந்த மீன்பிடி தடை காலத்தை பயன்படுத்தி மீனவர்கள் தங்களது படகுகளை மராமத்தி பணி செய்து கொள்வது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக மீனவர்கள் மீன்பிடி தடை காலத்தில் தங்களது படகுகளை மராமத்துப் பணி செய்யாததால் மேலும் 15 நாட்கள் மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை மரா…
-
- 38 replies
- 2.5k views
- 1 follower
-
-
நாகப்பட்டினம்: கோடியக்கரை அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தவேலு, செல்லத்துரை, அன்பழகன் ஆகியோருக்கு சொந்தமான 3 விசைப்படகுகள் மற்றும் பட்டினச்சேரியைச் சேர்ந்த பொன்னுசாமிக்கு சொந்தமான 1 விசைப்படகு ஆகியவற்றில் 32 மீனவர்கள் கடந்த 15ம் தேதி மாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் நேற்று முன்தினம் கோடியக்கரை அருகே சர்வதேச கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் அங்கு வந்தனர். எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருப்பதாகக் கூறி அவர்கள் 4 விசைப்படகுகளையும் சுற்றி வளைத்து 32 மீனவர்களையும் கைது செய்து இலங்கைக்கு கொண்…
-
- 1 reply
- 543 views
-
-
கடலில் மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்களைக் காணவில்லை October 5, 2018 காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்களைக் காணவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஒருவரின் படகில் கடந்த 26 ம் திகதி காலை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 6 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் அவர்களுடன் குடும்பத்தினரால் தொடர்புகொள்ள முடியவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 26ம் திகதி கடலுக்குள் சென்ற அவர்கள், முதலாம் திகதி கரை திரும்பி இருக்க வேண்டும் என்ற போதிலும் ஆனால் இதுவரையிலும் திரும்பாதமையினைத் தொடர்ந்து அவர்கள் காணமல் போயுள்ளதாக முறைப்பாடு வழங்கியுள்ளனர். இதையடுத்து கடலோர காவல்படையினரும் ம…
-
- 0 replies
- 337 views
-
-
கடலில் வந்த மிதவை - விசாரணைகளில் கடலோர காவல் படை தமிழகத்தின் வேளாங்கண்ணி அருகே, கடலில் மிதந்து வந்த மிதவை கடத்தல்காரர்களுக்கு சொந்தமானதா என்று கடலோர காவல் படை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சரக்கு கப்பல் போக்குவரத்து அதிகம் உள்ள கடல் பகுதிகளில், துறைமுகம் உள்ளே கப்பல் சென்றுவர வழிகாட்டும் விதமாக ‘போயா’ எனும் மிதவையை கடலில் ஆங்காங்கே மிதக்க விடுவது வழக்கம். அத்துடன், தங்கம் மற்றும் போதை பொருட்களை கடல் வழியாக கடத்திச் செல்லும் கடத்தல்காரர்களும், திசையை அறிவதற்காக இதுபோன்ற மிதவைகளை பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், தமிழக்திதின் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே உள்ள புதுப்பள்ளி கடல் பகுதியில் நேற்று (24ம் திகதி) மிதவை ஒன்று மிதந்து வந்துகொண்டிரு…
-
- 1 reply
- 859 views
-
-
இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி தோல்வி Published By: DIGITAL DESK 3 27 FEB, 2024 | 10:43 AM இலங்கையிலிருந்து கடத்திச் செல்லப்பட்டு தமிழகத்தில் கடலில் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை தேடும் பணி ஐந்தாவது நாளாக தொடரப்பட்டு தோல்வியில் முடிந்தது. ராமநாதபுரம் மாவட்டம் வேதாளை சிங்கி வளைகுச்சி கடற்கரைக்கு இலங்கையில் இருந்து நாட்டுப்படகு மூலம் தங்க கட்டிகள் கடத்தி வருவதாக தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து, வியாழக்கிழமை (22) அதிகாலை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் மண்டபம் இந்திய கடலோர காவல் ப…
-
- 0 replies
- 506 views
- 1 follower
-
-
கடலுக்குச் சென்று, காணாமல் போன 19 மீனவர்கள் மீட்பு – 210 மீனவர்கள் கரை சேரவில்லை… October 10, 2018 தூத்துக்குடியில் இருந்து 2 விசைப் படகுகளில் கடலுக்குச் சென்று கடந்த ஒரு வாரமாக எந்த தகவலும் இல்லாமல் இருந்த 19 மீனவர் களையும் கடலோர காவல் படையினர் நேற்றையதினம் மீட்டுள்ளனர். அதேவேளை கன்னியா குமரியில் 18 விசைப்படகுகளில் சென்ற 210 மீனவர்கள் இன்னும் கரை சேரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 விசைப்படகுகளில் 19 மீனவர்கள் கடந்த முதலாம் திகதி கடலுக்கு சென்ற நிலையில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டதனையடுத்து 2 படகுகள் தவிர ஏனைய படகுகள் கரை திரும்பியிருந்தன. இவ்விரு படகுகளையும் மீட்க கடந்த 4 நாட்களாக கடலோர காவல் படையினர், டோனியர் விமானம் மூலம் தேடுதல் பணியில…
-
- 0 replies
- 308 views
-
-
கடலுக்குப் போன மீனவர்கள் நிலை என்ன? தத்தளிக்கும் கன்னியாகுமரி கன்னியாகுமரி கடலில் மீன்பிடிக்கச் சென்ற டஜன் கணக்கான மீனவர்கள் ஒக்கிப் புயலால் சீற்றத்துடன் உள்ள கடலில் சிக்கிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வரும் நிலையில், காணாமல் போனவர்கள் எண்ணிக்கையோ நிலையோ, இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதனிடையே, கடற்படை கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மீட்புப் பணிகள் குறித்து மீனவர்கள், மீனவர் அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. பிபிசியிடம் பேசிய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான் கடந்த இரண்டு நாள்களில் 203 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இ…
-
- 1 reply
- 671 views
-
-
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே சுமார் 2500 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி கண்டெடுக்கப்பட்டுள்ளது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. குறிஞ்சிப்பாடி அருகே அரசடிக்குப்பம் கிராமத்தில் மழைநீரை வெளியேற்றுவதற்காக நிலத்தை தோண்டியபோது இந்த தாழி வெளிப்பட்டுள்ளது. நில உரிமையாளர் அளித்த தகவலின்படி ஆத்தூர் அரசு கலை கல்லூரியின் வரலாற்றுத்துறை பேராசிரியர் ஜெ.ஆர்.சிவராமகிருஷ்ணன் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில் அரசடிக்குப்பம் கிராமத்தில் கிமு 5-ம் நூற்றாண்டு முதல் மக்கள் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது. இந்த தாழி 120 செ.மீ உயரம் கொண்டது. தாழியின் அருகே, மூட்டுகள் தாழியைச் சுற்றி வட்டவடிவில் வைக்கப்பட்ட லாட்ரைட் கற்கள் காணப்பட்டன. தாழியின் உள்பகுதியில் அடக்கம் ச…
-
- 4 replies
- 1.2k views
-
-
கடலூரில் அசத்தும் இளைஞர்கள்: மருத்துவ குணம் கொண்ட வெட்டிவேரில் முகக்கவசம் தயாரிப்பு வெட்டிவேரில் தயாரிக்கப்படும் முகக்கவசம் கடலூர் ஊரடங்கு காரணமாக தேக்கம் அடைந்துள்ள மருத்துவ குணம் கொண்ட வெட்டிவேரில் முகக்கவசம் தயாரித்து விற்பனை செய்து கடலூர் இளைஞர்கள் அசத்தி வருகின்றனர். வெட்டிவேர் நறுமணமிக்கது மட்டுமல்லாமல் பல மருத்துவ குணங்களையும் கொண்டது. வெட்டிவேரில் இருந்து பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட வாசனைத் திரவியங்கள், அழகு சாதனப் பொருட்கள் என பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்பட்டு வெளி மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல் வெளி நாடுகளுக்கும் அனுப்பப்படுகிறது கடலூர் மாவட்டத்தில் கடலோரப் பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் வெட்டிவேர் சாகுபடி…
-
- 0 replies
- 459 views
-
-
கடலூரில் உண்ணாவிரதம் இருந்த 5 மாணவர்கள் கைது .கலையில் சுமார் 6 மணிக்கு நெய்வேலி மாறன் தலைமையில் மற்றும் அவரது நான்கு நண்பர்கள் , அங்குள்ள தபால் அலுவலகத்திற்கு எதிரில் ஒரு தனியார் இடத்தை தேர்வு செய்து உண்ணாவிரதம் இருந்தார்கள். அவர்களிற்கு அனைத்து கல்லூரி மாணவர்கள் ஐம்பது பேர் ஆதரவு அளித்தார்கள். இந்நிலையில் இந்த உண்ணாவிரத நிகழ்வை காங்கிரஸ் கட்சியினர் பலமாக எதிர்த்தனர் . அவர்கள் காவல்துறை க்கு அதிக அழுத்தம் கொடுத்து உள்ளனர். அவர்கள் எந்த காரணத்தை கொண்டும் மாணவர்கள் அங்கு உண்ணா விரதம் இருக்க கூடாது என்பதில் உறுதியாக இருந்து எதிர்ப்பை காட்டி உள்ளனர் . உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் அழகிரி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் எனபது குறிப்பிடத்தக்கது. கைது செய்ய வந்த காவல்துறைய…
-
- 0 replies
- 350 views
-