Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஹைட்ரோ கார்பன் திட்டம் செயற்படுத்தப்பட்டால் மக்கள் போராட்டம் வெடிக்கும் – வைகோ எச்சரிக்கை காவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயற்படுத்தப்பட்டால், மக்கள் போராட்டம் வெடிக்கும் என எச்சரிப்பதாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “தமிழகத்தின் உயிர் ஆதாரமான காவிரி படுகை மாவட்டங்களில் வேளாண்மைத் தொழிலை முற்றிலும் அழித்து ஒழித்துவிட்டு, இலட்சக்கணக்கான மக்களை ஏதிலிகளாக புலம்பெயரச் செய்வதற்கு நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசும், அதற்கு வெண்சாமரம் வீசும் எடப்பாடி பழனிசாமி அரசும் சதித் திட்டத்தைச் செயற்படுத்த முடிவு செய்துள்…

  2. மீண்டும் சூடுபிடித்துள்ள பொள்ளாச்சி விவகாரம்: இளம் பெண்களின் விபரங்கள் திரட்டப்படுகின்றன! பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் முழு இந்தியாவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அங்கு தற்கொலை செய்துகொண்ட இளம் பெண்களின் விபரங்களை சி.பி.ஐ அதிகாரிகள் தற்போது திரட்டி வருகின்றனர். பொள்ளாச்சி விவகாரத்தில் உரிய நடவடிக்கைகளை அரசு மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டுமென சமூக அமைப்புகள், மனித உரிமைகள் ஆணைக்குழு, பொதுமக்கள் என பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையிலேயே குறித்த வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதற்கமைய பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண்கள் மற்றும் சந்தேக மரணங்க…

  3. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... என்னடா இது தமிழுக்கு வந்த சோதனை..! 10 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இந்த பொதுத்தேர்வில், தமிழ் பாடத்தில்தான் குறைந்த அளவிலான பேர் தேர்ச்சி பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தொடங்கி 29-ம் தேதியுடன் இந்த தேர்வு முடிவடைந்தது. மக்களவை தேர்தல் காரணமாக இந்த தேர்வு வேகமாக நடத்தி முடிக்கப்பட்டது. மொத்தம் 9 லட்சத்து 97 ஆயிரத்து 794 பேர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த தேர்வை எழுதி இருந்தார்கள். இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகி உள்ளன. இதில் 95.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 93.3 சதவீதம் பேரும் மாணவிகள் 97 சதவீதம் பேரும் தேர்ச்சி…

  4. படத்தின் காப்புரிமை Getty Images Image caption ராஜீவ் காந்தி ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள நளினி, பேரறிவாளன் ஏழு பேரையும் விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் தீர்மானத்துக்கு தடை விதிக்கவேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மனித வெடிகுண்டால் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டபோது உடன் இறந்த ஒருவரது மகனான எஸ்.அப்பாஸ் உள்ளிட்டவர்கள் இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தனர். தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதா என்…

  5. தமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே – தமிழிசை தமிழர்கள் பிரதமராவதை தடுத்தது தி.மு.க.வே என பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சுமத்தினார். சென்னை விமான நிலையத்தில் வைத்து இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த இவர், மு.க.ஸ்டாலினையும் கடுமையாக விமர்சித்தார். இதன்போது, மூப்பனாருக்கு பிரதமராவதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருந்தாதாக குறிப்பிட்ட அவர், இதனைத் தடுத்தது திராவிட முன்னேற்றக் கழகமே எனக் குறிப்பிட்டார். அதேபோல் டாக்டர் அப்துல் கலாமும் மீண்டும் ஜனாதிபதியாவதைத் தடுத்ததும் தி.மு.க.வே என அவர் குற்றஞ்சாட்டினார். http://athavannews.com/தமிழர்கள்-பிரதமராவதை-தடு/

  6. தமிழகத்தில் 13 வாக்குச்சாவடிகளில் 19ம் தேதி மறு வாக்குப்பதிவு.. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு. தமிழகத்தின் 13 வாக்குசாவடிகளில் வரும் 19ஆம் தேதி மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார். தருமபுரி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் 8 வாக்குச்சாவடிகள், தேனியில் 2 திருவள்ளூர், கடலூர், ஈரோடு லோக்சபா தொகுதிகளுக்கு உட்பட்ட தலா ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வரும் மே 19ஆம் தேதி, அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளது. அன்றைய தினமே இந்த 13 வாக்குச்சாவடிகளிலும் தேர்தல் நடைபெறும் என்று சத்யபிரதா சாஹு இன…

  7. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் குறிப்பாக ரயில்வே வேலை வாய்ப்புகள் வட இந்தியாவைச் சேர்ந்த இளைஞர்களுக்கே அதிகம் அளிக்கப்படுவதாக தமிழக கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்தக் குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மை? சமீபத்தில் திருச்சியில் உள்ள பொன்மலை ரயில்வே பணிமனையில்…

  8. `உதவிதான் செய்தேன்!' - போலீஸிடம் தெரிவித்த எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஒருவரின் சடலத்தின் அருகில் எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா அமர்ந்திருந்தார். இதனால் சடலமாக கிடந்தவரை பிரான்சிஸ் கிருபா கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீஸாருக்கு எழுந்தது. இந்தத் தகவல் தமிழ் வாசகர் வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வணிகர்தினத்தையொட்டி கோயம்பேடு மார்க்கெட் நேற்று செயல்படவில்லை. இதனால் கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பிளாக் 11-ல் ஒருவர் இறந்துகிடக்க அவரின் அருகில் இன்னொருவர் அமர்ந்திருந்தார். இதைப்பார்த்த மூட்டைத் தூக்கும் தொழிலாளி ஒருவர் கோயம்பேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இன்ஸ்பெக்டர் தீபக்குமார் தலைமையிலான போ…

  9. `300 பேரில் ஒருவர்கூட தமிழர் இல்லை' - திருச்சி ரயில்வே பணிமனையில் வெடித்த போராட்டம் "சமீபத்தில் திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில், பணி நியமனம் செய்யப்பட்ட 300 பேரில் ஒருவர்கூடத் தமிழர் இல்லை" என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனையடுத்து, திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையை முற்றுகையிட முயன்ற தமிழ்த் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டதால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் சமீபகாலமாகத் தமிழர்களுக்கு வேலைவாய்ப்புகள் மறுக்கப்படுவதுடன், வட மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் சேர்க்கப்படுவதாகத் தொடர்ந்து குற்றச்சாட்…

    • 1 reply
    • 1.2k views
  10. இறந்ததாக நினைத்த இந்திய மீனவர் 23 வருடங்களுக்குப் பின்னர் இலங்கை யூடியூப் அலைவரிசையில் தோன்றிய அதிசயம் கடந்த 1996 ஆம் ஆண்டு மே மாதம் 5ந் திகதி தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவருக்கு சொந்தமான விசைபடகில் விஜி, பரதன், சேவியர், ராஜா ஆகிய நான்கு பேர் மீன்பிடிக்கு கடலுக்கு சென்ற நிலையில் மறுநாள் கரை திரும்ப வேண்டிய மீனவர்கள் கரை திரும்பாததால் இவர்கள் நிலை என்னவென்று தெரியாமல் உறவினர்கள் பல நாட்களாக தேடிய நிலையில் மீன்பிடித் துறை சார்பாக கடலில் மாயமானவர்கள் பட்டியலில் இந்த நான்கு பேரும் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு மீன்பிடித்துறை பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனிடயே கடந்த மே மாதம் 9ஆம் திகதி இலங…

  11. ‘தமிழர்களால் டெல்லி மாணவர்களுக்கு வாய்ப்பு பறிபோவது உண்மைதான்’ - கெஜ்ரிவால் கருத்துக்கு நடிகர் பிரகாஷ்ராஜ் ஆதரவு புதுடெல்லி, நடிகர் பிரகாஷ்ராஜ் மத்திய பெங்களூரு நாடாளுமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டார். அவருக்கு ஆம் ஆத்மி கட்சி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவால் நேரடியாக ஆதரவு தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் டெல்லியில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரகாஷ்ராஜ் நேற்று டெல்லி சென்றார். டெல்லியில் அவர் ஒரு வாரம் பிரசாரம் செய்ய இருக்கிறார். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் அவர் நிருப…

    • 6 replies
    • 1.9k views
  12. அமைச்சரவையின் தீர்மானத்திற்கு ஆளுநரின் அங்கீகாரம் – நளினி மனு தாக்கல் 7 பேர் விடுதலை விவகாரத்தில் அமைச்சரவையின் தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி நளினி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) நளினி சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அங்கீகாரம் வழங்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரியே குறித்த மனுவை அவர் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/அமைச்சரவையின்-தீர்மானத்/

  13. தமிழகத்தில் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் தமிழருக்கே என்ற வாதத்தை முன்வைத்து இன்று காலை முதல் #தமிழகவேலைதமிழருக்கே என்ற ஹாஷ்டேக்கும், #TamilnaduJobsForTamils என்ற ஹாஷ்டேக்கும் சமூக ஊடகமான ட்விட்டரில் டிரெண்டிங் பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்த பிரசாரத்தை முன்னெடுத்துள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சமூக வலைத்தளப் பரப்புரை இயக்கம், தமிழ்நாடு அமைக்கப்பட்ட நோக்கங்கள் சிதைக்கப்பட்டு வேலைவாய்ப்புகளில் பிற மாநிலத்தவர்களின் ஆதிக்கம் நிறைந்திருப்பதாகவும், அதற்காகவே இந்…

  14. ஸ்டாலின் மீது வழக்கு பதிவு May 5, 2019 தமிழக முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியதாக தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின் மீது திருவாரூர் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மகடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆரம்பித்திருந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அன்றைய தினம் பிரச்சாரம் மேற்கொண்ட போது கொடநாடு விவகாரம் தொடர்பாகப் பேசிய போது தமிழக முதல்வர் எடப்பாடி மீது கொலைப்பழி விழுந்துள்ளது. அதை மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது என்று விமர்சித்திருந்தார். இதையடுத்து கொடநாடு விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்புப்படுத்தி ஸ்டாலின் பேசியுள்ளார் எனவும் தே…

  15. தமிழகத்தில் பதுங்கியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள்: தேசிய புலனாய்வு அமைப்பு தீவிர விசாரணை தமிழகத்தில் தலைமறைவாக உள்ள 5 ஐ.எஸ். தீவிரவாதிகளை பிடிப்பதற்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) முடிவெடுத்துள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்திற்கு தமிழ்நாட்டில் ஆட்களை திரட்டுவதில் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த காஜா பக்ருதீன் முக்கிய பங்கு வகித்தமை தெரியவந்தது. இவர் சிரியாவுக்கு சென்று தீவிரவாதிகளிடம் ஆயுத பயிற்சி பெற்றவர். சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற இவரை தேசிய புலனாய்வு பிரிவினர் முதலில் கண்டுபிடித்தனர். கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் டெல்லி சென்றபோது தேசிய புலனாய்வு அமைப்பினரிடம் சிக்கினார்…

  16. Started by விசுகு,

    மதுரை - 1945 https://www.facebook.com/Thoongamadurai/videos/315401605780448/UzpfSTEwMDAxOTM2MjM2NTg0MDo0NDI0NzYwMjk2NjA5MTc/

  17. : மலக்குழி தொழிலாளர்கள் துயர் தோய்ந்த தங்கள் கதைகளை பகிர்கிறார்கள் விஷ்ணுப்ரியா ராஜசேகர் பிபிசி தமிழ் உயிருக்கு உத்தரவாதம் இல்லை, ஏராளமான உடல் உபாதைகள், போதிய ஊதியம் இல்லை, சமூதாயத்தில் மரியாதையும் இல்லை. இதுதான் மனித கழிவுகளை அகற்றும் பணியாளர்களின் நிலை. …

  18. மத்திய, மாநில அரசுகளால் தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன – ஸ்டாலின்! தற்போது ஆட்சியில் உள்ள மத்திய, மாநில அரசுகளால் தொழிலாளர்களின் உரிமைகள் நசுக்கப்படுகின்றன எனவும், இதற்கான விடிவுகாலம் எதிர்வரும் 23ஆம் திகதி கிடைக்கும் எனவும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மேதின பேரணி ஒன்று நடைபெற்றது. குறித்த பேரணியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், “நாட்டின் 45 கோடி தொழிலாளர்களின் உரிமைகள் 4.5 corporate companiகளிடம் அடக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், பல நாட்களாக டெல்லியில் போராட…

  19. Published : 30 Apr 2019 19:23 IST Updated : 30 Apr 2019 19:44 IST ரியாஸ் - கோப்புப் படம் இலங்கை தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதியின் கூட்டாளி சென்னை வந்ததாகவும், சென்னையில் சிலரை சந்தித்ததாகவும் உளவுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் என்.ஐ.ஏ விசாரணையில் குதித்துள்ளது. கடந்த ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் கிருத்துவ தேவாலயம் உள்ளிட்ட பல பகுதிகளில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 253 பேர் உயிரிழந்தனர். ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இதற்கு பொறுப்பேற்றது. அங்குள்ள என்.டி.ஜே அமைப்புக்கும் இதில் தொடர்புள்ளதாக இலங்கை அரசு அந்த அமைப்பையும் தடை செய்தது. குண்டு வெடிப்பு …

  20. "பைகளை எடுத்து வர வேண்டாம்..!” தமிழக தேவாலயங்களிலும் தடை உத்தரவு ’தேவாலயங்களுக்கு வரும் பக்தர்கள், தோள் பை உள்ளிட்ட பொருட்களை எடுத்து வர வேண்டாம்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்திய சந்தேக நபர்கள், தோளில் மாட்டியிருந்த பையில் வைத்தே குண்டை வெடிக்கச் செய்துள்ளனர். இதன் எதிரொலியாக, தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, தேவாலயங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பாதிரியார்களுக்கு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைகளை பொலஸார் வழங்கி உள்ளனர். அத்துடன், தேவாலயங்களும் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் பொலிஸார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

  21. சூடுபிடித்துள்ள தேர்தல் களம் – 4 சட்டமன்ற தொகுதிகள் குறித்த முக்கிய அறிவிப்பு! தமிழகத்தின் அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளில் வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கு இன்று (திங்கட்கிழமை) இறுதிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தொகுதிகளில் எதிர்வரும் 19ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தி.மு.க, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளன. இதன்படி குறித்த தொகுதிகளில் போட்டியிடுவதற்காக 98 வேட்புமனுக்கள் தற்போது வரையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன், இதில் அதிகபட்சமாக அரவக்குறிச்சியில் 42 வேட்புமனுக்களும், சூலூரில் 23 வேட்புமனுக்களும், திருப்பரங்குன்றத்தில் 20 வேட்புமனுக்களும், ஒட்டப்பிடா…

  22. தமிழகத்தில் தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது April 27, 2019 தமிழகத்தில் தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக பெங்களூரு காவல் துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கடந்த 21ஆம் திகதி இலங்கையில் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்றையதினம் சென்னையில் வட மாநிலத்தை சேர்ந்த தீவிரவாதியான கந்தர்ப்பதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் கட்டப்பட்டு வந்த தனியார் மருத்துவமனையில் பாதுகாவலராகக் கடந்த ஆறு மாதமாக பணியாற்றி வந்ததாகவும், இந்த மருத்துவமனையை அடுத்த வாரம் குடி…

  23. ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை தமிழகத்தின் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க, உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையகத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அப்பலோ வைத்தியசாலை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான நீதிபதிகள் அமர்வுக்கு முன்பு, நேற்று வெள்ளிக்கிழமை எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அப்பலோ வைத்தியசாலையில், சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, “ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையகம், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு தொடர்பில்லாத ஆவணங்களை கோருகின்றது. மேலும் சிகிச்சை குறித்த ஆவணங்…

  24. அரசியலை விட்டு விலகத் தயார் - திருமாவளவன் தாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணி பிடிக்கவில்லையென்றால் அரசியலை விட்டு விலகத் தயார் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். பொன்பரப்பியில் நடந்த சம்பவத்தை கண்டித்தும், அங்கு மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்குபற்றினர். இது குறித்து மேலும் தெரிவிக்கையில், “பா.ஜ.க.வும், பா.ம.க.வும் அனைத்து மரபுகளையும் மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன. பா.ஜ.க.விடமிருந்து அப்பாவி இந்துக்களையும், பா.ம.க.விடமிருந்து அப்பாவி வன்னியர்களையும் காப்பாற்ற வேண்டும். பொன்பரப்பி…

  25. நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்..! நாம் தமிழர் கட்சி சார்பில், நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஓட்டப்பிடாரம் (தனி) ஆகிய 4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் எதிர்வரும் மே மாதம் 19ஆம் திகதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க, அ.ம.மு.க ஆகிய கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் பட்டிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.