தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
மதுரை அருகே உள்ள நாகமலை, புதுக்கோட்டையில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் வந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கிராமங்கள் தோறும் காங்கிரஸ், இல்லந்தோறும் கைச் சின்னம் என்ற சிறந்த லட்சியத்துடன் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறோம். மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு சிறந்த திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. அதுவே காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு அடித்தளமாக இருக்கும். அனைவருக்கும் உணவு, கட்டாயக் கல்வி, கிராமப் புறங்களில் வேலை வாய்ப்பு திட்டம் ஆகிய திட்டங்களால் காங்கிரஸ் கட்சி மக்களின் செல்வாக்கை பெற்றுள்ளது. ஆகவே காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும். தமிழகத்தைப் பொறுத்த வரை வெற்றிக் கூட்டணி அமையும்…
-
- 1 reply
- 364 views
-
-
கட்சி கட்டுப்பாட்டை மீறியதால், மு.க.அழகிரி மீது திமுக தலைமைக்கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. திமுக உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மு.க.அழகிரி நீக்கம் என்று அறிவித்துள்ளது. திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும், இது கட்சியின் ஒற்றுமைக்காக எடுக்கப்பட்ட முடிவு. திமுகவினர் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளார் பேராசிரியர். அழகிரியின் பிறந்த நாளை முன்னிட்டு, கடந்த ஒருமாதத்திற்கு முன்னமே மதுரையில் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்ட ஆரம்பித்தனர் ஆதரவாளர்கள். இதுவே, அழகிரியை கட்சியை விட்டு நீக்கும் அளவிற்கு பிரச்சனையாக அமைந்துவிட்டது. வாழ்த்து போஸ்டரில் இருந்தவை திமுக தலைமையை அதிருப்திய…
-
- 20 replies
- 1.5k views
-
-
சென்னை: பாரதிய ஜனதா கட்சியுடன் நடத்தப்பட்டு வரும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் 2 நாட்களில் இறுதி முடிவு எட்டப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலில் தேசிய மற்றும் திராவிட கட்சிகளுடன் கூட்டனியே இல்லை என்று அறிவித்தது பா.ம.க. அத்துடன் ஜாதிய கட்சிகளுடன் இணைந்து சமூக ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கியிருந்தது பா.ம.க. பின்னர் 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்து பிரசாரத்தையும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணியில் இணைவது குறித்து ரகசிய பேச்சுவார்த்தைகளை பாமக மேற்கொண்டது. இதில் பெரும் இழுபறியே நீடித்து வந்தது. பாமக அறிவித்த 10 தொகுதிகளை விட்டுக் கொடுக்க முடியாது என பிடிவாதம் காட்ட…
-
- 1 reply
- 672 views
-
-
இலங்கை மக்களுக்கான நிவாரண உதவி பொருட்கள் தாங்கிய கப்பலை கொடியசைத்து அனுப்பி வைத்த தமிழக முதல்வர் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு அத்தியாவசிய நிவாரண பொருட்களை அனுப்புகிறது. இதன் முதல் கட்டமாக நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. இதனை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. இதனால் மக்கள் அரசிற்கு எதிராக ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்க இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்…
-
- 6 replies
- 563 views
- 1 follower
-
-
எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் தினகரன் ஆதரவு எம்.பி-க்கள்! தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்துக்கு தினகரன் ஆதரவு மாநிலங்களவை எம்.பி-க்கள் மூன்று பேர் வருகை தந்துள்ளனர். அவர்கள் மூன்று பேரும் தினகரன் அணியில் இருந்து எடப்பாடி பழனிசாமியின் அணிக்குத் தாவலாம் என்று கூறப்படுகிறது. அடுத்த மாதம், 5-ம் தேதி ஜெயலலிதாவின் முதல் நினைவு நாள் வருகிறது. இதையொட்டி, தமிழக அரசு சார்பில் அமைதி ஊர்வலம் ஏற்பாடு செய்யப்படலாம் என்று அ.தி.மு.க வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது குறித்து சென்னை, பசுமைவழிச் சாலையில் இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்தக் கூட்டத்…
-
- 2 replies
- 740 views
-
-
மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் ரகசியமும் வைகோ பிரகடனமும்! “அ.தி.மு.க தலைமைக்கழகத்தில் இருக்கிறேன். போட்டோகிராபரை அனுப்பி வைக்கவும்’’ என்று செய்தி அனுப்பினார் கழுகார். அடுத்த அரை மணி நேரத்தில் நம்முன் ஆஜரானார் கழுகார். ‘‘அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் என்ன விசேஷம்?” என்றோம். “ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி, அவரது உருவச்சிலை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை பகுதியில் தயாரிக்கப்பட்ட இந்தச் சிலை, இரண்டு மாதங்களுக்கு முன்பே சென்னை வந்துவிட்டது. தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அளவுக்கே ஜெயலலிதாவின் சிலையும் வைக்கப்பட உள்ளது. சிலையில் கண் பகுதி சரியாக அமையவில்லையென்று, தயாரித்த இட…
-
- 0 replies
- 1.1k views
-
-
கோவை காரில் வெடித்த சிலிண்டர்: 6 தனிப்படை அமைத்து விசாரிக்கும் தமிழ்நாடு காவல்துறை 23 அக்டோபர் 2022, 07:18 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோவை உக்கடம் பகுதியில் இன்று அதிகாலை கார் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் டிஜிபி சைலேந்திர பாபு நேரில் ஆய்வு செய்தார். காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் அதை ஓட்டி வந்தவர் உயிரிழந்ததாக கோவை மாநகர காவல்துறை கூறுகிறது. காரை ஓட்டி வந்தவரின் உடல் முழுவதுமாக கருகியதால் அவரின் அடையாளம் தெரியவில்லை. இந்த நிகழ்வுக்குப் பின் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு, சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி செந்தாமரை கண்ணன், உளவுத்துறை ஐ.ஜி…
-
- 17 replies
- 1.1k views
- 1 follower
-
-
தத்துவார்த்த புரிதல் தேவை - திருமுருகன் காந்தி பிரத்தியேக செவ்வி ஈழத்தமிழர்களுக்காக குரல்கொடுத்து வரும் மே17இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் தமிழகத்தினைச் சேர்ந்த சமுக ஆர்வலருமான திருமுருகன் காந்தி பூகோள அரசியல் போட்டிக்குள் யுத்தகாலத்தில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் மனிதாபிமானச்சட்ட மீறல்கள் குறித்து நீதியைப் பெற்றுக்கொள்ளுதல், உள்ளிட்ட தமிழர்களின் விடயங்களுக்கான அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- யுத்த நிறைவின் பின்னரான சூழலில் ஈழத்தமிழர்களின் பிரச்சினை குறித்து தமிழகத்தில் கரிசனைகள் குறைந்து செல்லும் அதேநேரம் குழப்பகரமான சூழலொன்றும் காணப்படுகின்றதே? …
-
- 0 replies
- 442 views
-
-
‘காலாவை விட காவிரிதான் முக்கியம்’: குமாரசாமி சந்திப்புக்கு பின் கமல் கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியைச் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் பெங்களூரில் இன்று சந்தித்த காட்சி காலாவைவிட காவிரிதான் முக்கியம் என்று கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமியைச் சந்தித்தபின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்தார். கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பின் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடம் கிடைக்காததையடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது. அங்கு முதல்வராக எச்.டி.குமாரசாமி உள்ளார். …
-
- 4 replies
- 924 views
-
-
ராஜ்யசபா தி.மு.க., தலைவர் கனிமொழி எம்.பி.,யை, பிரதமர் மோடி சந்திக்க நேரம் ஒதுக்க மறுப்பதால், காஷ்மீர் வெள்ள நிவாரணத்துக்கு, தி.மு.க., அறிவித்த நிதியை அளிக்க முடியாமல் தவிக்கிறது.காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கு, அனைத்துத் தரப்பி னரும் உதவ வேண்டும் என, பிரதமர் மோடி வேண்டு கோள் விடுத்திருந்தார். நேரில் வழங்க...:இதையடுத்து, தி.மு.க., தலைவர் கருணாநிதி, செப்., 13ம் தேதி வெளியிட்ட அறிக்கையில், ''பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, காஷ்மீர் வெள்ள பாதிப்புக்கு உதவ, பிரதமர் நிவாரண நிதிக்கு, தி.மு.க., சார்பில், 25 லட்சம் ரூபாய் வழங்கப்படும். ராஜ்யசபா தி.மு.க., - எம்.பி.,க்கள், இத்தொகையை, பிரதமரிடம் நேரில் வழங்குவர்,'' என, கூறியிருந்தார்.இதற்கான காசோலையை, தி.மு.க., த…
-
- 4 replies
- 575 views
-
-
அதிகப்படியான நீரை கேரளா வெளியேற்ற காரணம் என்ன? கருணாநிதி கேள்வி! சென்னை: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து அதிகப்படியான நீரை கேரள அரசு வெளியேற்ற காரணம் என்ன? என்று கருணாநிதி கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ''முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 136 அடியாக குறைக்கக்கோரி, மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய தீர்மானித்திருப்பதாக, கேரள அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப் கூறியிருக்கிறார். முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்திக்கொள்ள உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து நீர் மட்டத்தை உயர்த்துவதற்கான நல்ல வா…
-
- 0 replies
- 537 views
-
-
-
மிஸ்டர் கழுகு: இறுகும் ரெய்டுகள்... நெருங்கும் க்ளைமாக்ஸ்! ‘‘வருமானவரித் துறையின் மொத்த கவனமும் தமிழ்நாட்டின்மீதுதான் இருக்கிறது’’ என்று சொல்லிக் கொண்டே உள்ளே நுழைந்தார் கழுகார். ரெய்டு செய்திகளை அவரே கொட்டட்டும் என்று காத்திருந்தோம். ‘‘2016 சட்டமன்றத் தேர்தலின்போது கரூர் அன்புநாதன் வீட்டில் தொடங்கிய ரெய்டு சூறாவளி, இன்னும் தமிழகத்தைவிட்டு நகரவில்லை. அதன்பிறகு, சேகர் ரெட்டி வீட்டில் ரெய்டு, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு, ஈ.டி.ஏ குழும அலுவலகங்களில் ரெய்டு, தமிழகத்தின் அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் வீட்டில் ரெய்டு, சசிகலா உறவினர்கள் வீடுகளில் ரெய்டு என்று சுழன்றடித்த வருமானவரித் துறையின் பார்வை, தற்ப…
-
- 0 replies
- 2.1k views
-
-
கலாஷேத்ரா பாலியல் புகார்; தலைமறைவான ஹரிபத்மன் கைது! சென்னை கலாஷேத்ரா கல்லூரி மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக புகார் அளிக்கப்பட்ட உதவி பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளைக்கு சொந்தமான ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை பயிற்றுவிக்கும் இக்கல்லூரியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கல்லூரி பேராசிரியர் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பதாக புகார் எழுந்தது. அதை தொடர்ந்து முன்னாள் மாணவிகள் சிலரும் கலாஷேத்ராவில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடப்பதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மகளிர் ஆணையம் கலாஷேத்ரா…
-
- 0 replies
- 759 views
-
-
கறுப்பு நிற ஆடை அணியத் தடை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தருபவர்கள் கறுப்பு நிறத்தில் உடை அணிந்து வரக்கூடாது என சேலம் பெரியார் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தின் 21-ஆவது பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ள நிலையில் இந்நிகழ்வுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கவுள்ளார் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில், ஆளுநரின் வருகையைக் கண்டித்து திராவிடர் விடுதலை கழகம், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டத்திற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் தகவல் வெளியாகியுள்ளது. இதனை அடுத்து, மாநகர காவல்துறையினரின் அறிவுறுத்தலின் படி, பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அழைக்கப…
-
- 0 replies
- 432 views
-
-
2018ன் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர்.. கனிமொழிக்கு விருது.. குவியும் பாராட்டு! 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது திமுகவை சேர்ந்த கனிமொழிக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. பிரபல செய்தி நிறுவனமான லோக்மட் சார்பில் வருடா வருடம் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விருதுகள் வழங்கப்படும். இந்த வருடமும் இதற்கான பெயர்கள் தேர்வு செய்யப்பட்டது.அந்த வருடம் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் பேசியது, எழுப்பிய பிரச்சனைகள், நடந்து கொண்ட விதம், நாடாளுமன்றத்திற்கு வெளியே நடந்து கொண்ட விதம் என்று பல விஷயங்களை மையப்படுத்தி இந்த விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் இந்த முறை 2018 ஆம் ஆண்டுக்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது…
-
- 0 replies
- 389 views
-
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 24வது முறையாக நீட்டிப்பு…! சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைதான முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 24வது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் திகதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர் 3000 பக்கங்களுடன் கூடிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1372460
-
- 0 replies
- 387 views
-
-
சென்னை விமான நிலையத்தில் திமுக முன்னாள் எம்.பி.யிடமிருந்து கைதுப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பியாக இருந்தவர் ஜெயதுரை. இவர் இன்று காலை மதுரை செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு வந்தார். அங்கு அவரை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அவரிடம் எட்டு தோட்டாக்களுடன் ஒரு பிஸ்டல் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து விதிகளின்படி துப்பாக்கியை எடுத்துச் செல்ல முடியாது என்று அதிகாரிகள் கூறினர். பின்னர் அவரிடமிருந்து தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இதனால் கோபமடைந்த ஜெயதுரை உரிமம் பெற்றே துப்பாக் வைத்துள்ளதாகவும், எனவே துப்பாக்கியை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறும் கூறினார். ஆனால் அதனை ஏற்க அதிகாரிகள் மறுத்தனர். பின்னர் தனது உறவினர் ஒர…
-
- 0 replies
- 177 views
-
-
ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி தீர்மானம்! புதுச்சேரியில ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குறித்த தீர்மானம் இன்று (செவ்வாய்க்கிழமை) முதலமைச்சரான நாராயணசாமியால் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்பின்னர் குறித்த தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கண்டித்து தமிழகம், புதுவையில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. புதுவையில் சமீபத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார். குறித்த போராட்டத்தில் கருத்து தெரிவித்த அவர், எக்காரணத்தை கொண்டும் மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் நாங்கள் அனுமதிக்க மா…
-
- 0 replies
- 512 views
-
-
தமிழகத்தில், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அ.தி.மு.க சார்பில் முத்தமிழ்ச் செல்வனும், தி.மு.க சார்பில் நா.புகழேந்தியும் போட்டியிடுகின்றனர். அவர்களை ஆதரித்துப் பேச, விக்கிரவாண்டியில் முகாமிட்டிருக்கும் இருதரப்புத் தலைவர்களும், வாக்காளர்களைக் கவர பல்வேறு யுக்திகளைக் கையாண்டுவருகின்றனர். இந்நிலையில், இன்று அ.தி.மு.க வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட அமைச்சர் கருப்பண்ணன், கானை ஒன்றியத்துக்கு உட்பட்ட செம்மேடு ஊராட்சிக்கு வாக்கு சேகரிக்கச் சென்றார். அப்போது, அவரை வரவேற்கும் விதமாக பறை இசைக் கலைஞர்கள் பறையை இசைத்துக்கொண்டிருந்தனர். அந்த இசையின் பின்னணியில், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின…
-
- 0 replies
- 410 views
-
-
கூடங்குளம் அணுமின் நிலையம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக வந்த தகவல் பொய்யானது என அந்த அணுமின் நிலையம் மறுத்துள்ளது. அங்குள்ள கணிப்பொறிகள் இணையத்தோடு இணைக்கப்படவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள இரண்டு அணு உலைகள் இயங்கிவருகின்றன. இந்த நிலையில், இந்த அணு மின் நிலையத்தின் கணிப்பொறிகள் மீது DTRACK என்ற வைரஸ் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கணிப்பொறி மீதான தாக்குதல்களில் கவனம் செலுத்தும் சில ட்விட்டர் பயனாளிகள் சிலர் கூறினர். இந்த DTRACK வைரஸ் மூலம் கூடங்குளம் அணுமின் நிலைய கணினியில் இருந்து சில தகவல்கள், அதனை உருவாக்கியவருக்கு அனுப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. …
-
- 0 replies
- 383 views
-
-
குழந்தைகள் கடத்தல் விவகாரம்: நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் குழந்தைகளை கடத்தி, அடைத்து வைத்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக ஆமதாபாத் பொலிஸார் தெரிவித்துள்ளர் குஜராத் மாநிலம்- ஹிராபூரிலுள்ள கிளையின் சார்பில், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வீடு எடுத்து, 4 குழந்தைகளை தங்க வைத்து இருந்ததாகவும், நன்கொடை வசூலிக்க வைத்து அவர்களை சித்ரவதை செய்ததாகவும் நித்யானந்தா மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. இந்த முறைப்பாடு தொடர்பாக நித்யானந்தா, அவரது பெண் சீடர்களும், ஆசிரம நிர்வாகிகளுமான சாத்வி பிரன்பிரிய நந்தா, பிரியதத்வ ரித்தி கிரண் உள்ளிட்டோர் மீது ஆமதாபாத் பொலிஸார் வழக்கு பதிவு செய்தனர். …
-
- 14 replies
- 1.8k views
- 1 follower
-
-
'அன்புமணி ஆகிய நான் ' ஒரு வேளை வியப்பை ஏற்படுத்துகிறாரோ? சென்னை வண்டலூரில் நடைபெற்ற பாமக மாநாட்டில், அன்பு மணி 'ஹைடெக்' மணியாக காணப்பட்டார். வழக்கமாக போடியத்தில் உள்ள மைக் முன்னாள் நின்றுதான் அரசியல்வாதிகள் பேசுவார்கள். ஆனால் அன்பு மணியோ காதில் 'ஜாக் 'மைக் பொருத்திக் கொண்டு ஒரு கால்பந்து நடுவர் போல நடமாடிக் கொண்டே பேசினார். அவரது பேச்சின் சராம்சம் இங்கே: '' தமிழ்நாட்டில் எந்த கட்சி மாநாட்டுக்கும் இவ்வளவு கூட்டம் வந்தது இல்லை. இந்த கூட்டம் பாசத்தால் மட்டுமே வந்த கூட்டம். அத்தனையும் இளைஞர்கள் நிரம்பிய கூட்டம். மேடையில்தான் சிலர் வெள்ளை முடியுடன் இருக்கிறார்கள். ஆனால் கூட்டத்தில் அப்படிய வெள்ளை முடியுடன் யாரும் இல்லை. மாற்றத்தை தேடி வந்த கூட்டம் இது.…
-
- 0 replies
- 884 views
-
-
தமிழக சட்ட சபைத் தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஏழு பேரின் விடுதலையை ஜெயலலிதா கையில் எடுத்துள்ளார். ஜெயலிதாவின் அறிக்கைகள் தமிழகத்தில் மட்டுமல்லாது இந்திய அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லன. தமிழக சட்ட சபைத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதற்காக அரசியல் தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலலையில் மத்திய அரசுக்கு ஜெயலலிதா அனுப்பிய கடிதம் அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. ராஜீவ் கொலையில் கு…
-
- 0 replies
- 948 views
-
-
ம.தி.மு.க மாநாட்டில் இலங்கை தொடர்பில் முக்கிய தீர்மானம்! இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைக்கு, இந்திய மத்திய அரசாங்கம் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு திருச்சியில் நேற்று நடைபெற்ற ம.தி.மு.க மாநாட்டில் 12 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளன. குறிப்பாக இலங்கை தொடர்பாக இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இராமேஸ்வரம் அருகே, பாம்பனிலிருந்து விசைப்படகில், கடந்த ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதி எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 10 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் புத்தளம் சிறையில் அடைக்கப்பட்டு கடந்த, செப்டம்பர் மா…
-
- 1 reply
- 239 views
-