தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
ஆட்சி அமைக்க உரிமை: ஆளுநரை சந்தித்த ஸ்டாலின் மின்னம்பலம் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைக் கடந்து திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் திமுக மட்டும் 125 இடங்களில் ஜெயித்துள்ளது. நேற்று (மே 2) திமுக தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் நடந்த திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்றக் கட்சித் தலைவராக அதாவது முதல்வராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து இன்று (மே 5) காலை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை திமுக தலைவர் ஸ்டாலின் சந்தித்தார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் ஆளுநர் மாளிகைக்குச் சென்றனர். …
-
- 1 reply
- 576 views
-
-
சென்னை, பாரிமுனை பேருந்து நிலையம் அருகே உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், கடந்த 2008ம் ஆண்டு ‘ஈழத்தில் நடப்பது என்ன?’ என்ற தலைப்பில் ம.தி.மு.க. சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்துக் கொண்டு பேசினார். அப்போது, தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதாக கூறி அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை உச்ச நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடந்து வருகிறது. வழக்கின் புகார்தாரரான கியூ பிராஞ்ச் முன்னாள் இன்ஸ்பெக்டர் மணி வண்ணன் ஏற்கனவே, கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து, அவரிடம் வைகோ தரப்பு வக்கீல் தேவதாஸ் குறுக்கு விசாரணை செய்தார்…
-
- 0 replies
- 575 views
-
-
'மத்திய அரசின் அனுமதி தேவையில்லை..!'- பேரறிவாளன் விடுதலை வழக்கில் தமிழக அரசு திடீர் மனு! முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளது. ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய 7 பேர் 25 ஆண்டு காலத்திற்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இந்த 7 பேரையும் விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக மத்திய அரசிடம் அனுமதி கேட்டது. இதற்கு மத்திய அரசு அனுமதி தர மறுத்ததோடு, உச்ச நீத…
-
- 1 reply
- 575 views
-
-
தாகூர் பிலிம் சென்டர் இந்தியாவிலேயே முதல் முறையாகத் தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் அற்புதமான ஒலி-ஒளித் தொழில்நுட்பத்துடன் திரையரங்கு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேசத் தரத்தில் சென்னையில் சினிமா பார்க்கும் அனுபவத்துக்கு ஒரு புதிய முகவரி ஒன்று உருவாகியுள்ளது. அருமையான வசதிகளுடன் கூடிய திரையரங்கம் மட்டும் இல்லாமல் திரையரங்கத்தைச் சுற்றியுள்ள இடமும் ஓர் ஓவியக்கூடம் போல உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பசுமையான சூழலில் இயங்கிவரும் அரசு இசை மற்றும் நுண்கலைப் பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் தான் இந்தத் திரையரங்கம் அமைந்துள்ளது. இதன் பெயர் தாகூர் பிலிம் சென்டர். “தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் முயற்சியில் இந்தியாவில் உருவான முதல் தி…
-
- 0 replies
- 575 views
-
-
பேனருக்கு விதிக்கப்பட்ட தடை... புத்தொளி பெறும் சுவர் விளம்பரங்கள் .. சென்னை: பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளதால், தமிழகத்தில் மீண்டும் சுவர் விளம்பரங்களுக்கு மோகம் கூடியுள்ளன.ஒரு காலத்தில் குறிப்பாக சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசியல், சினிமா, உள்ளிட்ட அனைத்துத் துறை விளம்பரங்களும் சுவர் ஓவியங்கள் மூலமே மேற்கொள்ளப்பட்டு வந்தன. கால ஓட்டத்தில் புதிது புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட இயந்திரங்களால் பிளக்ஸ் பேனர்கள் எனும் விளம்பரத் தட்டிகள் அச்சடிக்கப்பட்டன. மாற்று விளம்பரம் பொதுவிடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் அரசியல்வாதிகளும், விளம்பர நிறுவனத்தினரும் மாற்று முறையில் விளம்பரம் செய்யும் நடைமுறையில் ஈ…
-
- 0 replies
- 575 views
-
-
கூடங்குளம் அணுமின் நிலையம் யூனிட் 1 இல் இருந்து 925 மெகாவாட் மின்சாரம் மட்டுமே தமிழகத்திற்கு வழங்கப்படும் என்று மத்திய அரசின் அணுசக்தித் துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கத்துக்கு (MADITSSIA), மத்திய அரசின் அணுசக்தித் துறை சார்புச் செயலர் அனுப்பியுள்ள கடிதத்தில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நிலவும் மின்பற்றாக்குறையைப் போக்கும் வகையில் தேவையான மின்சாரத்தை வழங்கவும், கூடங்குளம் அணு மின்நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே வழங்கவும் வலியுறுத்தி மதுரை மாவட்ட சிறு, குறுந்தொழில்கள் சங்கம் சார்பில் 2012 டிசம்பர் 11இல் டெல்லி நாடாளுமன்றம் அருகே போராட்டம் நடத்தப்பட்டது. மேலும் பிரதமர் அலுவலகத்…
-
- 1 reply
- 575 views
-
-
நளினிக்கு வீடு இன்மையால் பரோல் மறுப்பு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்ற, நளினிக்கு சொந்தமாக வீடு இல்லை என்பதனால், அவருக்கு பரோல் வழங்குவதற்கு நன்னடத்தை அதிகாரிகள் மறுத்துவிட்டனர் என்று இந்தியச் செய்தி தெரிவிக்கின்றது. தல்வர் பழனிசாமியை சந்தித்து முறையிட உள்ளதாக, நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள நளினி, வேலூர் பெண்கள் சிறையில் உள்ளார். இதே வழக்கில் தண்டனை பெற்றுள்ள இவரது கணவர் முருகன், வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் உள்ளார். இவர்களது மகள் ஹரித்ராவின் திருமண ஏற்பாடு நடந்துவர…
-
- 0 replies
- 575 views
-
-
அரச வன்முறையின் ஊற்றுக்கண் நாம் முதலில் இதை நம் வாயால் சொல்லிப் பார்ப்போம். ஒரு முதியவரும், அவரது மகனும் என்று இரு உயிர்கள் சிதைக்கப்பட்டுவிட்டன. என்ன காரணத்துக்காக என்று கேட்டால், ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு குறித்த நேரத்தில் அவர்களுடைய கடை மூடப்படாததுதான் காரணம் என்கிறார்கள். ஆக, நீங்களும் இப்படி ஒருநாள் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு, குறித்த நேரத்துக்குள் வீட்டுக்குத் திரும்பாமல் காய்கறிக் கூடையோடு சாலையில் நிற்க நேர்ந்தால் அதற்காக உயிரைவிட நேரிடலாம். அடிபட்டே உயிரை விட வேண்டும். நியாயம் கேட்க வீட்டிலிருந்து உங்கள் பிள்ளை வந்தால், அவரும் மூங்கில் கழிகள் உரிய அடிபட்டுச் சாக வேண்டும். குதத்தில் காக்கிச்சட்டையர்களின் லத்திகள் திணிக்கப்பட்டு ரத்…
-
- 0 replies
- 575 views
-
-
எழும்பூரில் தங்கியிருந்த புத்ததுறவிகள் அனைவரும் வெளியேறினர்! [Tuesday, 2013-03-19 08:49:38] எழும்பூரில் உள்ள புத்தமடாலயத்தில் தங்கியிருந்த புத்த துறவிகள் அனைவரும், நேற்று இரவு, டெல்லி புறப்பட்டுச் சென்றனர். ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழகத்தில், பல்வேறு அமைப்பினர்கள் போராட்டங்களை நடத்தி வந்த சூழலில், ஆன்மிக சுற்றுலா சென்று வந்த இலங்கையைச் சேர்ந்த, 19 புத்த துறவிகள், நேற்று, காலையில் சென்னை, சென்ட்ரலுக்கு வந்தனர். இந்நிலையில், தமிழர்களால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. இதையடுத்து, அந்த 19பேரும் எழும்பூர் புத்தமடாலயத்தில் தங்க வைத்தனர். மேலும், தமிழர்களால் தங்களுக்கு பிரச்னைகள் வரக்கூடும் என்பதால், நேற்று வந்தவர்கள், ஏற்கனவே அங்கு தங்கியிருந்தவர்கள் என…
-
- 1 reply
- 575 views
-
-
போயஸ் கார்டனில் அதிமுக அமைச்சர்கள்...? அதிமுக-வின் பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியின் அமைச்சர்களை போயஸ் கார்டனுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளாராம். இதனையடுத்து, தற்போது அதிமுக அமைச்சர்கள் போயஸ் கார்டனில் கூடியுள்ளதாக தகவல் வந்துள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு சீக்கிரமே வரவுள்ள நிலையிலும், வரும் 9-ம் தேதி சசிகலா தமிழக முதல்வராக பதவி ஏற்பார் என தகவல்கள் கூறப்பட்ட நிலையிலும், தற்போது போயஸ் கார்டனில் அதிமுக அமைச்சர்கள் கூடியுள்ளதாக வெளிவந்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அதிமுக-வின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து 'கட்சி விதிகளின்படி ஐந்தாண்டுகள் தொடர்…
-
- 1 reply
- 575 views
-
-
சேலம், :பொது அமைதியை கெடுக்க முயன்ற தினகரன், வெற்றிவேல், புகழேந்தி உள்ளிட்ட நான்கு பேர் கைதாகின்றனர். அவர்களை பிடிக்க சேலம் தனிப்படை போலீசார் சென்னை, பெங்களூரு விரைந்துள்ளனர். இதற்கிடையில் முதல்வருக்கு எதிராக நோட்டீஸ் வினியோகித்த 'மாஜி' எம்.எல்.ஏ., உள்பட ஆறு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்து பரோலில் வெளியே வரும் சசிகலாவால் சர்ச்சை உருவாகாமல் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகே தினகரன் அணியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான வெங்கடாஜலம் தலைமையில் 13 பேர் செப்., 27ம் தேதி காலை 8:00 மணிக்கு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நோட்டீஸ் வினியோகித்தனர். முதல்வ…
-
- 0 replies
- 575 views
-
-
காவிரி விவகாரத்தில் அ.தி.மு.க எம்.பி-க்கள் 5 பேர் ராஜினாமா? முதல்வருடன் அவசர சந்திப்பு #vikatanexculsive #weWantCMB காவிரிப் பிரச்னையில் ஆரம்பம் முதலே மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறவர்கள் நாடாளுமன்ற அ.தி.மு.க எம்.பி-கள் மூவர். திருச்சி தொகுதியின் குமார், கடலூர் தொகுதியின் அருண்மொழித்தேவன், அரக்கோணம் தொகுதியின் ஹரி. இவர்களுடன் ராமநாதபுரம் தொகுதியின் அன்வர் ராஜாவும் இப்போது சேர்ந்திருக்கிறார். டி.டி.வி.தினகரன் கோஷ்டி சார்பில் இருக்கும் ஒரே எம்.பி கோவை தொகுதியின் நாகராஜன். இவர்கள், ஐவரும் இன்று மாலைக்குள் காவிரிப் பிரச்னையில் மத்திய அரசு தமிழகத்துக்குப் பாதகமான முடிவை எடுத்தால், தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்கள். …
-
- 0 replies
- 575 views
-
-
உழைப்பால் புகழ் பெற்று தவறால் சரிவைச் சந்தித்த சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் அண்ணாச்சி என்று அனைவராலும் அழைக்கப்பட்டவர் சரவணபவன் ராஜகோபால். தூத்துக்குடி மாவட்டத்தில் புன்னை நகரிலுள்ள சிறிய கிராமத்தில பிறந்தவராவார். தனது 12 வயதில் இருந்து உழைக்க ஆரம்பித்தார். அப்போது போக்குவரத்து வசதி கூட இல்லாத அந்த அந்த கிராமத்தில் இருந்து பிழைப்பிற்காக சென்னைக்கு வந்த ராஜகோபால், முதலில் ஒரு சிறிய ஹோட்டல் ஒன்றில் மேசை துடைக்கும் பணியாளராகவே தனது பணியை தொடங்கினார். பின்னர் ஹோட்டல் டீ மாஸ்டருடன் பழகி டீ போடுவது எப்படி என்பதை கற்று கொண்டு டீ மாஸ்டராக மாறினார். இதன் பின்னர் பலசரக்குக்டை ஒன்றை தொடங்கினார். அப்போது பகல் வேளையில் கடைக்கு வந்த ஒருவர் அண்ணாச்சி சமான்களை சீக…
-
- 0 replies
- 575 views
-
-
மருதநாயகம் என்ற யூசுஃப் கானை வீழ்த்திய நண்பனின் துரோகம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களையும் நவாபையும் ஒரு சேர எதிர்த்து, தூக்கிலிடப்பட்ட யூசுஃப் கானின் நினைவு தினம் இன்று. சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தளபதியாகவும் ஆளுநராகவும் மாறிய யூசுஃப் கான் கொல்லப்பட்டது எப்படி? அது 1764ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி. மாலை ஐந்து மணி. இருள் நெருங்கிக் கொண்டிருந்தது. மதுரைக் கோட்டையிலிருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் இருந்த ஆற்காடு நவாபின் முகாம் பரபரப்பாக இ…
-
- 3 replies
- 575 views
- 1 follower
-
-
-
மழை வெள்ள பாதிப்புகள்: சென்னை உயர் நீதிமன்றத்தில் குவியும் வழக்குகள்! கொட்டித் தீர்த்து சென்னையை தனித் தீவாக்கி மிதக்கவிட்ட மழை வெள்ளம், நீதிமன்றங்களில் வழக்குகளையும் கொண்டு வந்து குவித்துக் கொண்டிருக்கிறது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபதி ராஜிவ் ராய், பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால்தான் சென்னையில் வெள்ளம் ஏற்பட்டு பல உயிர்கள் பலியாயின என்று ஒரு பொதுநல வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். அத்துடன், வழக்கறிஞர் சூர்ய பிரகாசம் இரண்டு வழக்குகளை மழை - வெள்ளம் தொடர்பாக தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "சென்னையில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 575 views
-
-
வேலூரை 3ஆக பிரித்து.... திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்டங்கள் உதயம்.. முதல்வர் அறிவிப்பு. வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரித்து திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய இரு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். 73-ஆவது சுதந்திர தினம் இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.அவர் அப்போது சுதந்திர தின விழா உரையில், வேலூர் மாவட்டம் மூன்றாக பிரிக்கப்படுகிறது. திருப்பத்தூர், ராணிப்பேட்டையை தலைமையிடங்களாக கொண்டு வேலூர் மாவட்டம் 3-ஆக பிரிக்கப்படுகிறது என அறிவித்தார். தமிழகத்தில் இதுவரை மொத்தம் 32 மாவட்டங்கள் உள்ளன. அரியலூர், பெரம்பலூர் ஆகியவை தனிமாவட்ட…
-
- 0 replies
- 575 views
-
-
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தலைவர் விக்ரமன், பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- மனிதநேயம் கொண்டு அனைத்து பணிகளையும் தாயுள்ளத்தோடு தமிழகத்திற்கு செய்து வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்களின் அன்பான வேண்டுகோள். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயகுமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரை மனிதநேய அடிப்படையில் கருணையோடு விடுதலை செய்ய வேண்டும் என்பதே எங்களது வேண்டுகோள். பேரறிவாளன் உள்ளிட்டோரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்சநீதிமன்றம் 2014 ஆம் ஆண்ட…
-
- 0 replies
- 574 views
-
-
தமிழ்நாடு பட்ஜெட் 2013- முக்கிய அம்சங்கள் Posted by: Chakra Updated: Thursday, March 21, 2013, 12:22 [iST] தமிழ்நாடு பட்ஜெட் 2013- முக்கிய அம்சங்கள் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க ரூ.1500 கோடி மாணவர்கள் இடைநிலைக்கற்றலை தடுக்க ரூ. 381 கோடி ஊக்கத் தொகை அனைவருக்கும் கல்வித்திட்டத்திற்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.381 கோடி ஒதுக்கீடு தேசிய இடைநிலைக்கல்வித் திட்டத்திற்கு ரூ.366.57 கோடி மாணவர்களுக்கு இலவச புத்தகம் வாங்க ரூ.217.22 கோடி இலவச நோட்டுப்புத்தகங்கள் வழங்க ரூ. 110.கோடி வழங்க முடிவு புதிதாக 8 அரசு கலைக்கல்லூரிகள் தொடங்க முடிவு பள்ளிக்கல்விக்கு ரூ. 16,965.30 கோடி ஒதுக்கீடு பெண்கள் மகப்பேறு உதவித் தொகை திட்டத்திற்கு ரூ.220 கோடி ஒதுக்கீட…
-
- 0 replies
- 574 views
-
-
`வேலூரில் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்களால், பள்ளி மாணவிக்கு நடந்த விபரீதம் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது இளம் பெண் அவர். 11ஆம் வகுப்பு படிக்கிறார். இவர் வீட்டுக்குப் பின்புறம் உள்ள குளியலறையில் குளிப்பதை அப்பகுதியை சேர்ந்த மூன்று இளைஞர்கள் வீடியோ எடுத்து மிரட்டியதால் அப்பெண் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். குளிக்கும் வீடியோவை அனுப்பி பணம் கேட்டும், தனியே வருமாறு வலியுறுத்தியும் அவர்கள் தொந்தரவு செய்த நிலையில் சனிக்கிழமை இந்த விபரீத முடிவை சிறுமி எடுத்ததாக காவல் துறை கூறுகிறது. குற்றம்சாட்டப்பட்ட மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மாணவி கொடுத்த வாக்குமூலத்தில், "எனக்குத் தெரியாமல் நான் குளிப்பதை வ…
-
- 1 reply
- 574 views
-
-
தகுதி இல்லாதவருக்கு பெரிய பதவி: ஜெ., சொல்லியது சசிக்கு பொருந்தும் 'தகுதி இல்லாதவருக்கு, பெரிய பதவி கிடைத் தால் நிலைக்காது' என, விஜயகாந்த் குறித்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கூறியது, சசிகலாவுக்கு பொருந்துகிறது என, அ.தி.மு.க., வினர் தெரிவித்துள்ளனர். கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வும், தே.மு.தி.க.,வும், கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தேர்தலில், இந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்று, முதல்வராக ஜெயல லிதாவும்; எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந் தும் பதவி ஏற்றனர். சில மாதங்களுக்கு பின், சட்டசபையில் நடந்த விவாதத்தின் போது, அமைச்சர்களை அடிக்கப் பாயும் வகையில், விஜயகாந்த் நடந்து கொண்டார். …
-
- 0 replies
- 574 views
-
-
அதிமுக பொதுச் செயலாளர் இன்னும் முடிவாகவில்லை: பொன்னையன் பொன்னையன் | கோப்புப் படம்: வி.கணேசன் அதிமுக மிகப் பெரிய கொள்கைக் கோட்டை. அதைக் கட்டுக்கோப்பாக வழிநடத்த உள்ள பொதுச் செயலாளார் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை என்று அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் கூறியுள்ளார். இது தொடர்பாக சனிக்கிழமை சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பொன்னையன் கூறியதாவது: ''மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்குப் பிறகு, அதிமுகவின் அடுத்த பொதுச் செயலாளர் குறித்து பல்வேறு வதந்திகள் பரப்படுகின்றன. அவை உண்மையற்ற செய்தி. அவை எல்லாம் வதந்தியே. அவற்றில் துளியும் உண்மையில்ல…
-
- 3 replies
- 574 views
-
-
சூடோபெட்ரின்: மெத்தபெட்டமைன் தயாரிக்கப் பயன்படும் இந்தப் பொருள் தமிழ்நாட்டுக்குள் எப்படி வருகிறது? பட மூலாதாரம்,HANDOUT கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி குற்றம்சாட்ட, அதனை மறுத்திருக்கிறது தமிழக காவல்துறை. போதைப் பொருள் பயன்பாடு தொடர்பான கவனம் தமிழ்நாட்டின் மீது திரும்பியிருக்கும் நிலையில், கடும் நடவடிக்கைகள் எடுத்துவருவதாகக் கூறுகிறது தமிழக அரசு. இந்த விவகாரத்தில் என்ன நடக்கிறது? கடந்த சில நாட்களுக்கு முன்பாக, மேற்கு தில்லியின் கைலாஷ் பார்க் பகுதியி…
-
-
- 3 replies
- 574 views
- 1 follower
-
-
மிஸ்டர் கழுகு: குடியரசு தினத்தை மதிக்காத தமிழக அரசு! கடற்கரையில் இருந்து பறந்து வந்தார் கழுகார்! சிந்தனை வயப்பட்ட முகத்தோடு எதிரில் அமர்ந்தார். ‘‘குடியரசு தினக் காட்சிகளைப் பார்க்கலாம் என கடற்கரைக்குப் போனேன். சில நாட்களுக்கு முன்னால் மக்கள் தலைகளால் நிரம்பி வழிந்த கடற்கரை இன்று வெறிச்சோடிக் கிடந்தது. இதற்குக் காரணம் நிச்சயமாக அரசும் போலீஸும்தான். அமைதியாகப் போராடியவர்களை அராஜகமாகக் கலைத்ததன் விளைவு, ‘குடியரசு தினக் கொண்டாட்டத்துக்குப் போகலாமா’ என்ற பயத்தைக் கிளப்பிவிட்டது. போலீஸ் மீதான கோபத்தால் பலர் வரவில்லை. குடியரசு தினக் கொண்டாட்டத்தின்போது நிரம்பி வழியும் கடற்கரை வெறிச்சோடியது. ‘ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துன’ கதையாகிவிட்டது. ‘யாராவது உள்ளே புகுந்து…
-
- 0 replies
- 574 views
-
-
‘அடுத்து தினகரன்தான்!’ டெல்லி சிக்னலுக்காக காத்திருக்கும் எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில், சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியைப் பறித்துவிட்டோம். அடுத்து, தினகரன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் ஆலோசித்துவருகிறது. டெல்லி கிரீன் சிக்னலுக்குக் காத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியுடன், ஓ.பன்னீர்செல்வம் அணி ஒன்றிணைந்தது. அதன்பிறகு, பொதுக்குழுக் கூட்டத்தை நடத்திய எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், சசிகலாவின் தற்காலிகப் பொதுச் செயலாளர் பதவியைப் பறித்ததோடு, கட்சியைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் தீர்மானங்களை நி…
-
- 5 replies
- 574 views
-