Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இசைப்பிரியா படுகொலையில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவை: ராமதாஸ் இசைப்பிரியா படுகொலையில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை தேவை என்று கூறியிருகிறார் பாமக நிறுவுனர் ராமதாஸ். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், விடுதலைப்புலிகள் இயக்கத் தொலைக்காட்சியின்செய்தி வாசிப்பாளர் இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது குறித்த காணொலி காட்சியை சேனல்-4 தொலைக்காட்சிவெளியிட்டிருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள காட்சிகள் நெஞ்சத்தை பிளக்கும் வகையிலும், இதயத்தை உலுக்கும் வகையிலும் உள்ளன. சேனல்-4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள காணொலியில், சகதி நிறைந்த குளத்தில் கிடக்கும் இசைப்பிரியாவை சிங்களப் படையினர் அழைத்து வருகின்றனர். அவர் மீது ஒரு வீரர் வெள்ளைத் துணியை போர்த்து…

  2. டி.என்.பி.எஸ்.சி. புதிய பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் நீக்கம் - தேர்வர்கள் அதிர்ச்சி சென்னை, டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் நேற்று இரவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் குரூப்-4, குரூப்-2, குரூப்-1 உள்ளிட்ட பலவகையான தேர்வுகளில் என்னென்ன பாடதிட்டங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த தேர்வுகளுக்கான மாதிரி கேள்விகளும் வெளியிடப்பட்டன. இதில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த திருக்குறள் பாடத்திட்ட பகுதி முழுவதுமாக நீக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அதிகாரிகள் நிலையிலான போட்டித் தேர்வுகளான குரூப் 2, குரூப் 2ஏ மெயின் தேர்வின்போது திருக்குறளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. …

  3. 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி இன்று அறிவிக்கப்படும்! 2ஜி வழக்கு தொடர்பாக தீர்ப்பு ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வரும் செப்டம்பர் 20-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி ஷைனி தெரிவித்து இருந்தார். அதன்படி 2ஜி வழக்கு தீர்ப்பு தேதி டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட் இன்று அறிவிக்க உள்ளது. கடந்த காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தின் போது 2ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. திமுகவின் ராஜ்யசபா எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதனை சிபிஐ விசாரணை நடத்தியது. …

  4. மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா 10 ஆண்டுகள் தேர்தலில் நிற்க தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளதாக சட்டப்பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவு அரசாணையாக, தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால், செயலாளர் ஜமாலுதீன் ஆகியோரது உத்தரவு, அரசாணையாக தமிழக அரசிதழில் இன்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டது. அதில், 'லஞ்ச ஒழிப்புச் சட்டம் 1988 பிரிவு 13 (2)-ன்படி, ஊழல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் நீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்துள்ள நிலையில், இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு 191, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ஆகியவற்றின் அடிப்படையில் அவர் தகுதியிழப்பு செய்யப்படுகிறார். அவருக்கு தண்டனை வழங்கப்பட்ட 2…

  5. நச்சு கலப்பு? தமிழகத்தில் விற்பனையாகும் 'பிரெட்'டிலும் மாவட்டம் தோறும் மாதிரி ஆய்வு நடத்த முடிவு டில்லியில் நடத்திய ஆய்வில், 'பிரெட்' வகைகளில், புற்றுநோயை உண்டாக்கும் நச்சு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, 'தமிழகத்திலும், உணவு பாதுகாப்புத்துறை இது குறித்த ஆய்வுகளை நடத்த வேண்டும்' என, நுகர்வோர் அமைப்புக்கள் வலியுறுத்தி உள்ளன. டில்லியில் விற்பனையாகும், 'பிராண்டட்' வகை, 'பிரெட்'களை, அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வு மையம் ஆய்வு செய்ததில், புற்றுநோயை உருவாக்க அதிகம் வாய்ப்புள்ள, 'பொட்டாசியம் புரோமேட்' என்ற, ரசாயனம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு வேதிப்பொருளான பொட்டாசியம் அயோடேட், தைராய்டு பிரச்னையை ஏற்படுத்தும் என, தெரிய வந்துள்ளத…

    • 0 replies
    • 569 views
  6. இலங்கையில் இருந்து, படகு மூலம் ராமேஸ்வரத்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த துருக்கி நாட்டவர் கைது!இலங்கையில் இருந்து உரிய ஆவணங்களின்றி, படகு மூலம் ராமேஸ்வரம் வந்த துருக்கி நாட்டை சேர்ந்தவரை உளவு பிரிவு போலீசார் கைது செய்தனர். ராமேஸ்வரத்தில் உள்ள சேரன்கோட்டையில் அமைந்துள்ளது கடற்படை முகாம். அந்த பகுதியில் கடற்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக பைபர் படகில் அங்கு சுற்றித் திரிந்த வெளிநாட்டவர் ஒருவரை மடக்கிப் பிடித்தனர்.விசாரணையில், அவர் துருக்கி நாட்டை சேர்ந்த மஹீர் தேவரீம் என்பதும், கஜகஸ்தான், மலேசியா ஆகிய நாடுகளில் வசித்துவந்த அவர், கடைசியாக இலங்கை வந்து யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது. …

  7. இந்தியா நரேந்திரமோடி - தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று மாலையே இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசில் புதிதாக நியமிக்கப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கோபிநாத் முண்டே இன்று காலை டில்லியில் இடம்பெற்ற கார் விபத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து, இந்தியப் பிரதமர் மோடி - தமிழக முதல்வர் ஜெயலலிதா இடையே இன்று பிற்பகல் ஒரு மணியளவில் நடைபெறவிருந்த சந்திப்பு இன்று மாலை 3.30 மணிக்கு இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி இந்தியக் குடியரசுத் தலைவருக்கும் ஜெயலலிதாவுக்குமிடையில் பிற்பகல் 2.30 மணிக்குச் சந்திப்பு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா இன்று காலை டில்லிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் அங்கு த…

  8. 08 JUN, 2024 | 03:59 PM "பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை, அதிமுக மீண்டும் வலிமை பெறும்" என அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரான முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது எடப்பாடி கே பழனிச்சாமி தெரிவித்ததாவது. ''நிறைவடைந்த மக்களவைத் தேர்தலில் 2019 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக பெற்ற வாக்குகளை விட, 2024 ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது ஒரு சதவீத வாக்குகளை கூடுதலாக பெற்றிருக்கிறது. இது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றியாகும். ஒவ்வொரு தேர்தலிலும் சூழலுக்கு ஏற்றவாறு வெற்றி தோல்வி அமையும். ஒரு கட்சி தோல்வி அடைந்தால் மீண்டும் தோல்வி அடையும் என்பது…

  9. சேலத்தில் காவல்நிலையத்துக்கு பூட்டு போட்ட பொதுமக்கள் . சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் காவல்நிலைய போலீசார் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரு பிரச்சனையில் 4 பேரை கைது செய்தனர். 4 பேரையும் காவல்துறையினர் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து 4 பேரின் உறவினர்கள் நீதிமன்றத்தில் மருத்துவ பரிசோதனை செய்யக்கோரி மனு செய்தனர். நீதிமன்றத்திற்கு போனவர்களை போலீசார் மிரட்டியதாக, வீராணம் பொதுமக்கள் காவல்நிலையத்தை வழக்கறிஞர் ஹரிபாபு தலைமையில் முற்றுகையிட்டனர். பொதுமக்கள் காவல்நிலையத்தை பூட்டு போட்டனர். இதையடுத்து போலீசார் பொதுமக்களை கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது. http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13803:saleam-new…

    • 0 replies
    • 569 views
  10. தமிழக மீனவர்கள் 5பேரின் தூக்கை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி நடத்தும் இலங்கை தூதரகம் முற்றுகை போராட்டத்தில் மே17 இயக்கத்தின் தோழர் அருள் முருகன் கண்டன உரை (facebook)

  11. முடிஞ்சா ரஜினிகிட்ட மோதிப்பாருங்க... ஸ்டாலினுக்கு கராத்தே காட்டும் தியாகராஜன்..! அடுத்த சட்டசபை தேர்தலுக்குள் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி விடுவார் என காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என கராத்தே தியாகராஜன் கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை, கராத்தே தியாகராஜன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கராத்தே தியாகராஜன், ’’நான் பேசிய நாளில் மாவட்ட செயலாளர்கள் பலரும் க…

  12. கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி 2 மாதங்களாக சுடுகாட்டில் வசிக்கும் அவலம் பட்டுக்கோட்டை அருகே, கஜா புயலால் வீட்டை இழந்த விவசாயி கடந்த 2 மாதங்களாக குடும்பத்துடன் சுடுகாட்டில் வசித்து வருகிறார். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த கொண்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி செல்லத்துரை (50). இவரது மனைவி செல்வமணி. இவர்களுக்கு முரளி, மூர்த்தி என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களும் விவசாய வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த நொவம்பர் மாதம் 16ம் திகதி 110 கிமீ வேகத்தில் வீசிய கஜா புயலின் கோர தாண்டவத்தில், செல்லத்துரையின் வீடு முற்றிலுமாக சேதமடைந்தது. புதிய வீடு கட்டுவதற்கு பொருளாதார வசதியில்லாத செல்லத்துரையின் குடும்பத்தினர், தங்குவதற்கு வேறு இடமின்றி அர…

  13. தனித் தீவானது சென்னை: சாலை, ரயில், விமான போக்குவரத்து நிறுத்தம்! சென்னை: கனமழை காரணமாக சென்னையில் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால், சென்னை தனித்தீவாக காட்சியளிக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மழை நின்றதன் காரணமாக, பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் (30-ம் தேதி) முதல் மீண்டும் தமிழகத்தன் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பியுள்ளது. இதனால், அதிகமான உபரிநீர் திறந்து விடப்பட்டு வ…

  14. "தொடங்கியது தேர்தல் பிரசாரம்" - திமுக, அதிமுக, தவெக கட்சிகளின் திட்டம் என்ன? படக்குறிப்பு, சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் கட்சிகள் சந்திக்கப் போகும் சவால்கள் என்ன? கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பெயரில் தேர்தல் பிரசாரத்தைத் தி.மு.க தொடங்கியுள்ளது. 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் இன்று (ஜூலை 7) முதல் அ.தி.மு.க பிரசாரம் தொடங்கியுள்ளது. செப்டம்பர் முதல் தமிழ்நாடு முழுவதும் த.வெ.க தலைவர் விஜய் பயணம் மேற்கொள்ள உள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றிக்கு இந்தப் பயணங்கள் கைகொடுக்குமா? கட்சிகள் சந்திக்கப் போகும் சவால்கள் என்ன? தமிழ்நாடு சட்டமன்ற…

  15. பேரறிவாளனை விடுவிக்க எந்த ஆட்சேபமுமில்லை - ராகுல் இந்திய முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து தனக்கு ஆட்சேபணை எதுவும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் ராஜிவ் காந்தி கொலை தொடர்பாக ஏழு பேர் கைதுசெய்யப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என உத்தரவு வழங்கியது. இருப்பினும் குறித்த இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசாங்கம் இவர்களை தொடர்ந்தும் விளக்கமறியில் தடுத்து வைத்துள்ளது. இந் நிலையில் பேரறிவாளனை விடுவிக்க தங்கள் குடும்பத்திற்கு ஆட்சேபம் இல்லை என காங்கி…

  16. சி.பி.ஐ., வழக்கு நிலுவையில் இருப்பதால், பா.ம.க.,வின் அன்புமணிக்கு அமைச்சர் பதவி அளிக்க பா.ஜ., முன்வரவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. அன்புமணி, ஏற்கனவே கேபினட் அமைச்சராக இருந்தவர் என்பதால், மோடி அமைச்சரவையில் இடம் பெற முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக, பா.ம.க., தலைவர் ஜி.கே.மணி, புதுச்சேரி அனந்தராமன் ஆகியோருடன், டில்லியில் முகாமிட்டிருந்தார். இணை அமைச்சர் பதவியாவது...: அமைச்சர் பதவி வேண்டி, பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங்கை, பா.ம.க., குழு சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியிருக்கிறது. அப்போது, கேபினட் அமைச்சர் இல்லையென்றாலும், இணை அமைச்சர் பதவியாவது அளிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ஆனால், பா.ம.க.,வின் கோரிக்கையை, பா.ஜ., தலைமை ஏற்றுக் கொள்ளவில…

    • 0 replies
    • 568 views
  17. 70 வயது தந்தைக்கு நேர்ந்த கொடுமை..! சென்னையை கண்கலங்க வைத்த சோகம் (வீடியோ) 'தென்னையப் பெத்தா இளநீரு.... பிள்ளையப் பெத்தா கண்ணீரு' என்ற வரி சென்னையில் நிரூபணமாகி இருக்கிறது. வயதான காலத்தில் பெற்றோருக்கு உறுதுணையாக இருந்து உதவிகளை செய்ய வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. ஆனால் அந்த கடமையிலிருந்து பலர் தவறிவிடுகின்றனர். வசதி படைத்தவர்கள் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்படுகின்றனர். வறுமையில் வாடுபவர்களுக்கு வீதிகளே வீடுகளாகிறது. சென்னை தலைமைச் செயலக காலனி பகுதியில் கடந்த மூன்று நாட்களாக நடக்க முடியாத முதியவர் பிளாட்பாரத்தில் படுத்திருந்தார். பசியின் கொடுமையைவிட அவரது மனம் கடும் இறுக்கத்தில் இருந்தது. காரணம், பெற்ற மகனே தன்னை கவனிக்காமல் வீட்டை விட்டு விரட்…

  18. 57 நிமிடங்களுக்கு முன்னர் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து விநாடிக்கு 6000 கன அடி நீர் திறக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது. இன்று காலை 8 மணி முதல் நீர் திறப்பு அதிகப்படுத்தப் பட்டுள்ளதாக பொதுமக்களுக்கு அனுப்பப்பட்டும் எச்சரிக்கை குறுஞ்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடையாற்றில் 8000 கன அடி நீர் விநாடிக்கு திறந்து விடப்படுவதால் கரையோரம் இருக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும் படி, தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பு அந்த குறுஞ்செய்தியில் தெரிவித்துள்ளது. செம்பரம் ஏரியில் இரண்டு நாட்கள் முன்பு வரை விநாடிக்கு 200 கன அடி நீர் திறந்து விடப்பட்டது. இது படிப்படியாக 1000 கன அடி, 2500 கன அடி என உயர்த்தப்பட்டு தற்போது 6000 கன அடி திறந்து விடப்படுகிறது. …

  19. கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் 4 பேர் அதிரடி கைது- என்.ஐ.ஏ. 8 மணி நேர ரெய்டு! சர்வதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் 4 பேர் கோவையில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இலங்கையில் ஈஸ்டர் நாளான ஏப்ரல் 22-ல் தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை குறிவைத்து தற்கொலைப் படையினர் தாக்குதல்கள் நடத்தினர். இதில் 40 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 350க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இத் தாக்குதல்களுக்கு சரதேச பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. இலங்கை மட்டக்களப்பைச் சேர்ந்த சஹ்ரான் தலைமையிலான குழுவினரே தற்கொலைப் படையினராக செயல்பட்டு இந்த நாசாகர செயலை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக இலங்கைக்கு முன்னரே இந்திய புலனாய்வு …

  20. சசிகலா முதல்வராக பொறுப்பேற்க ஜெயலலிதா பேரவை தீர்மானம்: அமைச்சர் உதயகுமார் தகவல் ஜெயலலிதா பேரவை கூட்டத்தில் இயற்றப்பட்ட தீர்மான நகலை சசிகலாவிடம் வழங்கினார் அமைச்சர் உதயகுமார். தமிழக முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் ஜெயலலிதா பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். தமிழக முதல்வராகவும், அதிமுக பொதுச்செயலராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுகவின் ஜெயலலிதா பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்த தீர்மானங்கள் இடம்பெற்ற தாளை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வைத்து, அவரிடம் ஆசி பெறுவதற்…

  21. கடந்த 26-11-2014,அன்று சென்னை மயிலாப்பூரில் தமிழீழ விடுதலைப்போரில் இன்னுயிர் ஈர்ந்த தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சியை ஒழுங்கமைப்பதற்க்கான முயற்ச்சிகளை இன உணர்வோடு முன்னெடுத்த திராவிடர் விடுதலை கழகத்த சேர்ந்த நிர்வாகிகளில் ஒருவரான முழக்கம் உமாபதியை சென்னை அமிராமிபுரம் காவல்துறை உதவி ஆய்வாளர்களான இளையராஜா,கலைசெல்வி,மற்றும் கவலர் வடிவேலு,ஆகியோர் கொண்ட குழுவினர் மிகக்கொடூரமாக நாகரிகமற்ற முறையில் தாக்கி இருந்தனர். படுகாயமடந்த உமாபதி சென்னை ராஜிவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார். இத்தாக்குதலை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் நேற்றைய தினம் கண்டன அறிக்கை வெளியிட்டதோடு இன்றைய தினம் உமாபதியை நேரில் சென்…

  22. கோவையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக நடந்த போராட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிய இந்து முன்னணி அமைப்பின் நிர்வாகி ஆனந்தன் புதன்கிழமை நள்ளிரவு அடையாளம் அறியப்படாத நபர்களால் தாக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை கணபதி பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஒன்றின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. பதற்றமான இந்த சூழலில் கோவை மாநகரம் முழுவதும் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் பெருமளவு வசிக்கும் உக்கடம் பகுதியை அடுத்துள்ள ஆத்துப்பாலத்தில், பிப்ரவரி 14ஆம் தேதி முதல் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் அப்பக…

  23. 7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப் பால் தானம் செய்த கோவை பெண்: இவ்வளவு பால் சுரக்குமா? கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SRIVIDYA கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவித்யா என்ற 27 வயது பெண் 7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப் பால் தானம் செய்து சாதனை படைத்துள்ளதாக 'ஏசியா புக் ஆஃப் ரெக்கார்டஸ்' அங்கீகரித்துள்ளது. ஸ்ரீவித்யா தனக்கு சுரந்த அதிகமான தாய்ப்பாலைச் சேகரித்து கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கியில் தானமாக வழங்கியுள்ளார் என்று அந்த மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் பிபிசி தமிழி…

  24. முதல்வருக்கு முட்டுக்கட்டை போடும் சசி குடும்பம்! அரசு விழா ரத்து; அதிகாரிகள் அதிர்ச்சி சசிகலா குடும்பத்தினர் உத்தரவு காரணமாக, முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கவிருந்த, அரசு விழா திடீரென ரத்து செய்யப்பட்டது. இது, அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜெ., மறைவுக்கு பிறகு, தமிழக முதல்வராக, பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். ஏற்கனவே, இரு முறை முதல்வராக பணியாற்றியவர் என்பதால், அவர் முதல்வரானதை அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க., பொதுச்செயலராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். இதை, கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் …

  25. சென்னை: தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனை முற்றுகையிட முயன்ற போது நாம் தமிழர் கட்சியினருக்கும், காங்கிரசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவுச்செல்வம் தலைமையில் அக்கட்சியை சேர்ந்த 200 பேர் இன்று காலை தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்திய மூர்த்தி பவனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை கண்டித்தும், தமிழர்கள் ஏழு பேரின் விடுதலைக்கு தடை போடும் காங்கிரஸ் கட்சியை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது, தமிழர்களுக்கு விரோதமாக காங்கிரஸ் கட்சி செயல்படுகி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.