Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பட மூலாதாரம்,FACEBOOK/ILAYARAAJA கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலின் அர்த்த மண்டபத்துக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. அவரை உள்ளே அனுமதிக்காததற்கு அவரது சாதி தான் காரணம் என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. கோயில் விதிகளின் படி அர்த்த மண்டபத்துக்குள் யாரும் நுழையக் கூடாது என்று கோயில் நிர்வாகம் கூறுகிறது. ஶ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் இளையராஜாவுக்கு என்ன நடந்தது? கோயில் நிர்வாகம் என்ன சொல்கிறது? இளையராஜா தரப்பில் அளிக்கப்படும் விளக்கம் என்ன? ஆகமங்களுக்கு 'மூலமே' இல்…

  2. கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் சென்னை அருகே எண்ணூரை அடுத்துள்ள காட்டுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கோகுல், அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர். வழக்கறிஞர் ஆக வேண்டுமென்று கனவு காண்கிறார் அவர். "நான் வழக்கறிஞர் ஆகி எங்கள் ஊரில் எண்ணூர் அனல்மின் நிலையம் போன்ற தொழிற்சாலைகளால் ஏற்படும் பிரச்னைகளை வரவிடாமல் தடுப்பேன். எங்கள் ஊருக்காகப் போராடுவேன்," என்று கூறுகிறார் கோகுல். எண்ணூரில் கடந்த 2017ஆம் ஆண்டு முழு ஆயுட்காலத்தை எட்டியதால் மூடப்பட்ட 450 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் நிலையத்தை, 660 மெகாவாட் திறன் கொண்ட வகையில் விரிவாக்கம் செய்வதற்கான திட்டத்தை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான…

  3. பட மூலாதாரம்,HANDOUT கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம் திருச்சியில் டாட்டூ ஸ்டூடியோ நடத்தி வந்த இளைஞர் ஒருவர் தனது வாடிக்கையாளர்களின் நாக்கை இரண்டாகத் துண்டித்து, டாட்டூ போடுவது, கண்களில் நிறமி பூசுவது போன்றவற்றைச் செய்துள்ளார். மேலும், அவற்றைத் தனது இன்ஸ்டா பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன? மனிதர்களின் நாக்கை பாம்பு போல மாற்றுவது ஏன்? டாட்டூ என்ற பெயரில் திருச்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நபர்கள் பிடிபட்டது எப்படி? அதுகுறித்த வீடியோவில…

  4. காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார் 14 டிசம்பர் 2024, 05:53 GMT ஈவிகேஎஸ் இளங்கோவன் காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று காலமானார். அவருக்கு வயது 75. உடல் நலக்குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ''ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 13 நவம்பர் 2024 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ பணியாளர்கள் எவ்வளவோ முயற்சி செய்த போதிலும் அவர் இன்று (14 டிசம்பர்) காலமானார்'' என்று மியாட் மருத்துவமனை கூறியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி உறுப்பினராக பொறுப்பு வகித்த தனது மகன் திருமகனின் மறைவைத் தொடர்ந்து, 2023-ஆம் ஆண்டு …

  5. இசை கலைஞர் ஜாகிர் உசேன் காலமானார் ADDED : டிச 16, 2024 12:19 AM புதுடில்லி: அமெரிக்காவில் வசித்து வந்த பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன், 73, உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் உசேன், சிறு வயது முதலே பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். இந்திய இசை உலகில் மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலும் புகழ்பெற்றவர். வெளிநாடுகளிலும் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். கடந்த, 40 ஆண்டுகளாக அமெரிக்காவில் வச…

  6. “என் நாட்டுக்கு அனுப்பி வையுங்கள்”: இலங்கை தமிழர் கோரிக்கை! KaviDec 12, 2024 08:14AM இந்தியா வந்து பல ஆண்டுகள் ஆகியும் அடையாள அட்டை வழங்காமல், சொந்த நாட்டுக்கும் அனுப்பாமல் அலைக்கழிக்கப்படுவதாக ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை தமிழர் மண்டியிட்டு கண்ணீர் விட்டு கதறியவாறு போராட்டத்தில் ஈடுபட்டது பேசுப்பொருளாகி உள்ளது.. இலங்கை தமிழரான 37 வயது ஜாய், தனக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், இலங்கைச் செல்ல அனுமதி வழங்க வேண்டும். பல ஆண்டுகளாக தமிழக அரசு அலைக்கழிப்பதாகக் கூறி, நேற்று (டிசம்பர் 11) ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தரையில் மண்டியிட்டு கண்ணீர் மல்க போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து பேசியுள்ள அவர், ”இலங்கை தலைமன்னார் மாவட்டத்தைச் ச…

  7. நெஞ்சு வலி: ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி! KaviMar 16, 2023 07:06AM நெஞ்சு வலி காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஸ் இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அந்த தொகுதிக்கு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்காக திமுக அமைச்சர்கள் பட்டாளமே ஈரோடு கிழக்கில் முகாமிட்டு ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தது. இந்நிலையில் ஈவிகேஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கடந்த வாரம் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் எம்எல்ஏவாக பதவி ஏற்றார். இந்த சூழலில் நேற்று அவருக்கு…

  8. நாம் தமிழர் கட்சியின் பிரபல பெண் தலைவர் கட்சி மாறுகிறாரா? கடந்த சில மாதங்களாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அவ்வப்போது கட்சியிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கும் நிலையில், பிரபல பெண் தலைவர் ஒருவர் கட்சியிலிருந்து வெளியேற போவதாகவும், அவர் திராவிட கட்சி ஒன்றில் இணைய இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து பல மாவட்ட நிர்வாகிகள் வெளியேறிக் கொண்டிருக்கின்றனர் என்பதும், சீமானுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் வெளியேறி, சீமான் குறித்து பல்வேறு வகைகளில் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பதையும் பார்த்து வருகிறோம். அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய பெண் தலைவர்களில் ஒருவர் சீமான் மீது அதிரு…

  9. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினதுறையினர் திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக, ஆறு வயது சிறுமி உட்பட ஆறு பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. திண்டுக்கல்லில் சிட்டி ஹாஸ்பிட்டல் என்ற தனியார் மருத்துவமனையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. நான்கு தளங்கள் கொண்ட அந்த மருத்துவமனையின் நேற்றிரவு (டிச. 12) தரைத்தளத்தில் தீப்பற்றியதாகவும் அந்த தீ அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தீ காரணமாக ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி, மருத்துவமனையின் லிஃப்ட்டில் உள்ளே இருந்தவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்…

  10. நவம்பர் 21-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த்தை அவரது போயஸ் கார்டன் இல்லத்தில் சந்தித்துப் பேசினார் சீமான். தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில், `ரஜினிகாந்த்தை சந்தித்தாலே சங்கியாகிவிடுவார்களா.. சங்கி என்றால் நண்பன்.. சக தோழன் என்றே பொருள்' என அவர் சொன்ன பதில் பெரும் சர்ச்சையானது. `ஆர்.எஸ்.எஸ் வலையில் சீமான் விழுந்துவிட்டார்' என தி.மு.க தரப்பு கடுமையாகச் சாடியது. இது தொடர்பான நா.த.க-வின் அதிகாரப்பூர்வ மாத இதழான `புதியதொரு தேசம் செய்வோம்' வாயிலாக கேள்வி பதில் வடிவில் கட்சித் தொண்டர்களுக்கு விளக்கமளித்திருக்கிறார், அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். சீமான், ரஜினி அதில், ``ஐயா ரஜினிகாந்தை நான்…

  11. பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, கணேசன் பெண் பயணியிடம் 10 பவுன் நகையை வழிப்பறி செய்ததாகக் கூறி தனது தந்தையை மகனே காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம், புதன் கிழமையன்று (டிசம்பர் 11) சென்னையில் நடந்துள்ளது. "நம்மை நம்பி வாகனத்தில் வந்தவரிடம் வழிப்பறி செய்வதை எந்த வகையிலும் ஏற்க முடியாது" என்கிறார் குற்றம் சுமத்தப்பட்ட நபரின் மகன். பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவத்தில் என்ன நடந்தது? காவல்துறை சொல்வது என்ன? ஆட்டோவில் திரையை வைத்து மறைத்து வேறு இடத்துக்கு கொண்டு சென்ற ஓட்டுநர் திருச்சி மாவட்டம் குண்டூரில் வசித்து வரும் 80 வயதான வசந்தா மாரிக்கண்ணு, தமிழ் ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் அமெரிக்காவில்…

  12. நான்கு இலங்கையர்கள் தமிழகத்தில் கைது! தமிழகத்தின் ராமேஸ்வரம் தீவிலிருந்து, படகு மூலமாக சட்டவிரோதமாக தங்கள் நாட்டுக்கு திரும்ப முயன்ற 4 இலங்கையர்கள் கைது கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தங்கச்சிமடம் பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட ரோந்துக் குழுவினர், செவ்வாய்க்கிழமை இரவு, தண்ணிரோட்டு கடற்கரைப் பகுதியில் நான்கு பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணப் பைகளுடன் நடந்துகொண்டதைக் கண்டறிந்து அவர்களை சுற்றி வளைத்தனர். விசாரணையில் அவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமைச் சேர்ந்த சசிகுமார் (28 வயது), கோகிலவாணி (44 வயது), வேலூரில் உள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த ராஜ்மோகன் (39 வயது), சிதம்பரம் அகதிகள் முகாமைச…

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வக்குமார் பதவி, பிபிசி தமிழ் நீலகிரி மாவட்டத்தில் வீட்டிலிருந்து பணி செய்து வந்த ஐ.டி. பெண் ஊழியர் ஒருவரை, 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்ததாகக் கூறி, 8 நாட்கள் வீட்டிற்குள் முடக்கி வைத்ததுடன், ரூ.16 லட்சத்தையும் ஏமாற்றிப் பறித்துள்ளனர். பல நாட்களுக்குப் பின் புகார் தெரிவித்ததால், பணத்தை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடந்தது என்ன? டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி குறித்து, ஊட்டி சைபர் க்ரைம் போலீசார், பிபிசி தமிழிடம் விளக்கினர். அவர்கள் கூறிய தகவல்களின்படி, குன்னுாரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவர், தனது சேமிப்பை இழந்ததுடன், 8 நாட்கள் வீட்ட…

  14. அநீதிகளுக்கு எதிரான எனது குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும்; ஆதவ் அர்ஜுனா அநீதிகளுக்கு எதிரான என்னுடைய குரல் சமரசமில்லாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும் என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். ‘எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்’ புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும் எனப் பேசியிருந்தார். இது கூட்டணி கட்சிகளிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் துணைப்பொதுச்செயலாளர் அக்கட்சியில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், விசிகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ…

  15. மன்னராட்சிக் கனவு காணும் விஜய் மக்களாட்சியை புரிந்துகொள்வாரா? MinnambalamDec 09, 2024 07:00AM ராஜன் குறை மன்னராட்சிக்கும், மக்களாட்சிக்கும் எத்தனையோ வேறுபாடுகள் இருக்கலாம். எது மிக முக்கியமான வேறுபாடு என்று புரிந்து கொள்ள வேண்டும். மன்னராட்சியில் தனி மனிதர் அரியணை ஏறி ஆட்சிக்கு வருவார். அவர் மன்னராக முடிசூட்டப்பட்டிருந்தால் அவர் தனது ஆயுட்காலம் முழுவதும் மன்னராக இருப்பார். அவர் ஒரு தனி மனிதராகத்தான் பிறப்பின் அடிப்படையிலோ, யானை மாலை போட்டதாலோ, வேறு எந்த காரணத்தாலோ அரசராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். மக்களாட்சியில் கட்சிகள்தான் ஆட்சிக்கு வரும். ஒட்டுமொத்த கட்சியும் ஆட்சி செய்ய முடியாது என்பதால்தான் அந்தக் கட்சியினர் தேர்ந்தெடுக்கும் ஒருவர் முதல்வராகவோ, …

  16. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு (LTTE) மீதான ஐந்தாண்டுத் தடை நீட்டிப்பை டெல்லி உயர் நீதிமன்ற நடுவர் மன்றம் உறுதி செய்துள்ளது. கடந்த மே 14ஆம் திகதி ஐந்தாண்டுத் தடை நீட்டிக்கப்பட்ட பின்னர், சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ – UAPA) கீழ் அந்த நடுவர் மன்றத்தை மத்திய உள்துறை அமைச்சு அமைத்தது. இலங்கையில் தமிழா்களுக்குத் தனி ஈழம் வழங்கப் போராடிய விடுதலைப் புலிகள் அமைப்பு இந்தியாவில் ஏற்கனவே தடை செய்யப்பட்டு இருந்தது. வெளியிடப்பட்ட அறிக்கை அந்தத் தடை முடிவுக்கு வரவிருந்த வேளையில் மேலும் ஐந்தாண்டுக்குத் தடையை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சு உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து அந்த இயக்கத்தை சட்டவிரோத அமைப்பு என்று அறிவிக்க போதிய …

  17. டெல்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் : பொலிஸ் தீவிர சோதனை புதுடெல்லி: டெல்லியில் 40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு பள்ளிகளில் போலீஸார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மதர் மேரி, கேம்ப்ரிட்ஜ் பப்ளிக் பள்ளி, பிரிட்டிஷ் பள்ளி, சல்வான் பப்ளிக் பள்ளி உள்பட 40 பள்ளிகளில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ‘30 ஆயிரம் அமெரிக்க டாலர் வேண்டும்’ - மிரட்டல் மின்னஞ்சல் scottielanza@gmail.com என்ற முகவரியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது. அதை அனுப்பிய நபர், நான் பள்ளி வளாகங்களின் உள்ளே பல இடங்களில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்துள்ளேன். அவையெல்லாம் மிகச் சிறிய அளவிலானவை. அவற்றால் கட…

  18. ஒரே வாரத்தில் 40 தமிழக மீனவர்கள் கைது; இந்திய இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் - அன்புமணி 09 Dec, 2024 | 11:52 AM சென்னை: “கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 40 தமிழக மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது. ராமேஸ்வரத்தில் மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று கூட கடுமையான போராட்டம் நடத்தியிருக்கும் நிலையில், மேலும் 8 மீனவர்களை சிங்களக் கடற்படை கைது செய்திருக்கிறது என்றால், அது இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால் ஆகும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு: “வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 8 பேரை அவர்களின் வி…

  19. வட தமிழகத்தை புயல்கள் அடிக்கடி தாக்குவது ஏன்? தென் தமிழகம் தப்பிக்க இலங்கை காரணமா? imd.gov.in சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களை கொண்ட வட தமிழ்நாடு, அதன் புவியியல் அமைவிடம் மற்றும் வானிலை நிகழ்வுகள் காரணமாக, நீண்ட காலமாக புயல்களால் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயலால் சமீபத்தில் ஏற்பட்ட சேதங்களே அதற்கு உதாரணம். தமிழகத்தின் தென் பகுதி, புயல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டாலும், வட தமிழ்நாடு பல்வேறு காரணிகளால் அடிக்கடி மற்றும் தீவிரமான தாக்கங்களை எதிர்கொள்கிறது. புயல் அமைப்புகள் பொதுவாக உருவாகி தீவிரமடையும் வங்காள விரிகுடாவின் தாக்கம் மற்றும் வடக்கு கடற…

  20. பட மூலாதாரம்,@THIRUMAOFFICIAL/TVK எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ், சென்னை அம்பேத்கர் நினைவு தினமான இன்று (டிசம்பர் 6) 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற புத்தகத்தை விகடன் பதிப்பகம் வெளியிடுகிறது. அம்பேத்கர் குறித்து 36 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பான இந்த நூலின் வெளியீட்டு விழா கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக சர்ச்சையை எழுப்பியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியைத் துவங்கியிருக்கும் விஜயுடன் இந்த நூல் வெளியீட்டு விழா மேடையை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளன் பகிர்ந்துகொள்ள இருப்பதாக வெளியான தகவல்கள், இரண்டு கட்சிகளுக்கும் கூட்டணி வாய்ப்புகள் சாத்தியமா என்ற கேள்வியை எழுப்…

  21. “மோதிப் பார்ப்போம்...” - திருச்சி எஸ்.பி விவகாரத்தில் சீமான் எச்சரிக்கை கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். கோவை: திருச்சி எஸ்.பி வருண்குமார் விவகாரத்தில், “மோதுவோம் என்றாகிவிட்டது; மோதிப் பார்ப்போம்” என கோவையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறை சார்பில், கலந்துரையாடல் கூட்டம் கோவை ஹோப் காலேஜ் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை (டிச.5) நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்த…

  22. இந்தியாவுக்கு உண்மையான நண்பனாக இருப்பது தமிழீழம் மட்டுமே – பழ. நெடுமாறன். தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தமிழீழப் போரில் உயிர் நீத்த வீரர்களுக்கான மாவீரர் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. உலக தமிழர் பேரமைப்புத் துணைச் செயலர் தமிழ்மணி தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் அய்யனாபுரம் முருகேசன், ராமன், துணைச் செயலர்கள் வழக்குரைஞர் பானுமதி, பொறியாளர் கென்னடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் கலந்து கொண்டு உரையாற்றுகையில், பாலஸ்தீன மக்களைத் தொடர்ந்து படுகொலை செய்து வரும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை போர்க் குற்றவாளி என சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது. இதுபோல, பங்களாதேஷ் உள்பட பல நாடுகளில் போர்க் குற்றவாளிக…

  23. கண்கலங்க செய்த திருவண்ணாமலை நிலச்சரிவு… குழந்தைகள் உட்பட 7 பேர் பலி… 4 பேரின் உடல்கள் மீட்பு! christopherDec 02, 2024 22:50PM திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட 7 பேரில் இதுவரை 4 பேரின் உடல்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள மூவரின் உடல்களை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. கரைகடந்த ஃபெஞ்சல் புயலால் விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்துள்ளது. குறிப்பாக திருவண்ணாமலை பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக தீபமலையில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் அதன் அடிவாரப் பகுதியான வ.உ.சி நகர் கருமாரியம்மன் கோயிலின் பின்புறத்தில் உள்ள வீட்டின் மீது நேற்று மாலை சுமார் 40 டன் எடை கொண்ட பாறை உருண்டு வ…

  24. பட மூலாதாரம்,IMD.GOV.IN படக்குறிப்பு, 'ஃபெங்கல்' புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது நேற்று (நவம்பர் 25) வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (நவம்பர் 26) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வடக்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நாளை (நவம்பர் 27) புயலாக வலுப்பெறக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த புயலுக்கு ‘ஃபெங்கல்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது நவம்பர் 27-ஆம் தேதிக்கு அடுத்த இரு தினங்களில் இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அடுத்த 24 மணி நே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.