தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
'சசிகலா முன்னரே முதல்வராகி இருக்க வேண்டும்!'- அ.தி.மு.க நிர்வாகியின் ஆவேசம்!! அ,தி.மு.க பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா, கட்சியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. கட்சியின் பொதுச் செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா, கடந்த டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மரணத்தின் பின்னணியில் பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன. செப்டம்பர் 22-ம் தேதி தொடங்கி டிசம்பர் 5-ம் தேதி வரை 75 நாட்கள் அப்போலோவில் நடந்தது என்ன? என்ற கேள்விக்கு இதுவரை தமிழக மக்களுக்கும், அ.தி.மு.க அடிமட்டத் தொண்டர்களுக்கும் யாரும் எந்தப் பதிலும் சொல்லவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பான சர்ச்சையை ஊடகங்களும் இரண்டொரு நாள் வி…
-
- 1 reply
- 797 views
-
-
பிபிஇ உடையில் வந்து வாக்களித்த கனிமொழி மின்னம்பலம் இன்று காலை 7 மணி முதல் தமிழகம் முழுதும், 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு தீவிரமாக நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் உள்ளதால் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மாலை 6 மணி முதல் 7 மணி கொரோனா நோயாளிகள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர் இதையொட்டி, சட்டசபைத் தேர்தலில் கொரோனா நோயாளிகள் வாக்களிக்கத் தேவையான நடவடிக்கைகள் வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டன. பிபிஇ உடை அணிந்து தேர்தல் அலுவலர்கள் தயார் நிலையிலிருந்தனர். இந்நிலையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கனிமொழி எம்.பி, மயிலாப்பூர் எப்பாஸ் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு, பிபிஇ உடையுடன் வந்த…
-
- 2 replies
- 649 views
-
-
'சசி அண்ட் கோ'வின் ஆட்டம் ஆரம்பம் பழனிசாமி பெயரில் சொத்து அபகரிப்பு திருப்பூர்: 'முதல்வர் பழனிசாமியின் உறவினர் என கூறி மிரட்டி, பிரச்னைக்குரிய சொத்தை அபகரித்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, காங்கேயத்தைச் சேர்ந்த இளம்பெண், கலெக்டரிடம் புகார் அளித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே வட்டமலையைச் சேர்ந்தவர் விதுலா; சட்டக் கல்லுாரி மாணவி. தன் தந்தையின் பெயரில் உள்ள, 'பேராசிரியர் சுந்தரம் அறக்கட்டளை'யின் செயலராக உள்ளார். வழக்கு நிலுவையில் உள்ளது. அறக்கட்டளைக்கு சொந்தமான, 6 ஏக்கர் நிலமும், அதில், 1 ஏக்கரில் உள்ள கட்டடமும், வங்கியில் அடமானம் வைக்கப்பட்…
-
- 0 replies
- 1k views
-
-
ஜெயலலிதாவின் அமெரிக்கா சிகிச்சையை தடுத்தவர் விஜயபாஸ்கர்: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு சென்னை: ஜெயலலிதாவின் வெளிநாட்டு சிகிச்சையை தடுத்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்று ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டி உள்ளார். சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) கட்சி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். பிரசாரத்தின்போது, ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த போது, மேல்சிகிச்சைக்காக அ…
-
- 0 replies
- 256 views
-
-
பன்னீர்செல்வம் அணியின் 5 வேன்கள் பறிமுதல்! ஆர்.கே.நகரில் போலீஸ் அதிரடி ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக ஐந்து வேன்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவை ஓ.பன்னீர்செல்வம் அணிக்குச் சொந்தமான வேன்கள் என்று கூறப்படுகிறது. ஆர்.கே.நகரில் வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில், அ.தி.மு.க இரண்டாக பிரிந்து போட்டியிடுகிறது. சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். மேலும் தி.மு.க சார்பில் மருதுகணேஷும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் தேர்தல் களத்தில் உள்ளனர். கடந்த சில நாள்களாக, ஆர்.கே.நகரில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வரு…
-
- 0 replies
- 419 views
-
-
திராவிட ஆட்சி - `வரலாற்றுப் பெருமிதங்களைக் கடந்த ஆய்வு தேவை` வ கீதாஎழுத்தாளர் கடந்த நூறு ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்காலங்களின் செயல்பாடுகளுடன் இணைத்துப் பார்க்க வேண்டியுள்ளது. திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவுற்ற சூழ்நிலையில் இத்தகைய மதிப்பீட்டை நாம் மேற்கொள்வது என்பது பயனுள்ளதாக இருக்கும். திராவிடக் கட்சிகளின் ஆட்சிக் காலம் என்று நாம் கூறிக்கொண்டாலும், எம்.ஜி. ராமச்சந்திரனால் தொடங்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் அதிக காலம் ஆட்சி செலுத்தியுள்ளது. திமுகவின் ஆட்சிக்காலத்தை எடுத்துக் கொண்டால் அது தொடக்கத…
-
- 0 replies
- 471 views
-
-
தி.மு.க வைரவிழாவும் அமித்ஷா வருகை அரசியலும்.. ஜெயலலிதா மரணத்தில் தொடங்கிய அரசியல் அதிர்வு இன்னும் ஓய்ந்தபாடில்லை. இப்படியான ஒரு மாற்றம் அரசியலில் நிகழ்ந்திருக்குமா என்பதுகூடச் சந்தேகம்தான். அந்த அளவுக்குத் தமிழக அரசியல் களம் மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இந்த மாற்றங்களுக்கு பி.ஜே.பி-தான் காரணம் என அரசியல் தலைவர்கள் பலரும் பேசி வந்தாலும் இனி நிகழப்போகும் மாற்றம்தான் தமிழகத்தின் ஹாட் என்கிறார்கள் பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள். தி.மு.க தலைவர் கருணாநிதியின் வைரவிழா என்பது அந்தக் கட்சிக்குச் சம்பிரதாயமாக இருந்தாலும் பி.ஜே.பி அதனை அரசியலாகப் பார்க்கிறது. அதன் காரணமாகவே அமித்ஷாவின் தமிழக வருகையும் தள்ளிவைக்கப்பட்டதாகவும் சொல்கின்றனர். …
-
- 0 replies
- 848 views
-
-
இந்தியக் குடியரசின் 16ஆவது மக்களவைத் தேர்தலின் தமிழகத்துக்கான வாக்கெடுப்பு நாளை (24) நடைபெறவுள்ளது. கட்டம் கட்டமாக நடைபெற்றுவரும் வாக்கெடுப்புப் பணிகள் கடந்த 7ஆம் திகதி ஆரம்பமாகின. இதனடிப்படையில் தமிழகத்தின் 39 தொகுதிகளுக்குமாக வாக்கெடுப்புகள் நாளையதினம் 60,817 வாக்களிப்பு நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளன. (பாண்டிச்சேரியையும் சேர்த்து 40 தொகுதிகள் என கூறப்படுகிறது. ஆனால், பாண்டிச்சேரி தனி இராச்சியம் என்பது குறிப்பிடத்தக்கது). இலங்கை தமிழர்களின் பிரச்சினையை மையப்படுத்திய தேர்தல் விஞ்ஞாபனங்களுடன் களமிறங்கியிருக்கும் ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்ற கழகமும் கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகமும் தமிழக தேர்தலில் அதிக ஆசனங்களைக் குவிக்குமென கருத்துக் கணிப்புகள்…
-
- 0 replies
- 363 views
-
-
கட்சி துவங்கி, கால் நூற்றாண்டை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில், ம.தி.மு.க., தேர்தலுக்கு தேர்தல், தோல்வியை தழுவி வருவதால், அக்கட்சி தொண்டர்கள் நொந்து போய் உள்ளனர். வரும் சட்டசபை தேர்தலிலாவது, வெற்றியை ருசிக்க, கட்சி நிர்வாகத்தை பலப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் கட்சி தலைமை உள்ளது. பொறுப்பு: தேசிய அரசியல், வெளி நாட்டு விவகாரங்களில் ஈடுபாடு காட்டும் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, இனிமேல், தமிழக அரசியலில் முழுக் கவனம் செலுத்த வேண்டும். அவருக்கு துணையாக, மகன் துரை வையாபுரிக்கு, மாநில இளைஞர் அணி செயலர் பொறுப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை, மாவட்ட செயலர்கள் வலியுறுத்தும் தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் கட்சிகளில், வாரிசு அரசியல் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. …
-
- 0 replies
- 1k views
-
-
தமிழகத்தில்... நால்வருக்கு, குரங்கம்மை நோய் ? தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உள்பட 4 பேர் குரங்கம்மை நோய் அறிகுறிகளுடன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வில்லுக்குறியை சேர்ந்த தந்தை, மகன், மகள் மற்றும் மேலும் ஒருவரிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் புனேவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. குரங்கம்மை ஏற்படுவதற்கு வெளித் தொடர்பு எதுவும் இல்லாத நிலையில், 4 பேரையும் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாகர்கோவிலில் 4 பேருக்கு குரங்கம்மை அறிகுறிகள்…
-
- 0 replies
- 358 views
-
-
கோவை, திருப்பூர், ஈரோட்டில் குவிக்கப்படும் அதிரடிப்படை - பதற்றத்தில் மாவட்டங்கள் 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட இடங்களில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் வசிக்கும் வீடுகள், அலுவலகங்களை நோக்கி அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களை வீசிச் சென்றுள்ளனர். இந்த சம்பவங்களால் அந்த மாவட்டங்களில் மத்திய அதிரடிப்படை குவிக்கப்பட்டு வருகிறது. என்ன நடக்கிறது? தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திர பிரதேசம், தெலங்கானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, அசாம், மத்திய பிரதேசம், கோவா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் பாப்புலர…
-
- 5 replies
- 594 views
- 1 follower
-
-
தமிழ்நாட்டின் காலநிலை மாற்ற குழுவில் எரிக்சொல்ஹெய்ம் By Rajeeban 24 Oct, 2022 | 09:04 AM தமிழ்நாட்டின் காலநிலை மாற்றத்திற்கான ஆட்சிப்பேரவையின் உறுப்பினராக நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதான பிரதிநிதி எரிக்சொல்ஹெய்ம் நியமிக்கப்பட்டுள்ளார் தனது டுவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். காலநிலைமாற்றம் தொடர்பான தமிழ்நாடு அரசாங்கத்தின் ஆட்சிபேரவையில் இணைத்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளமை குறித்து பெருமிதமடைகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். இந்த பேரவைக்கு தமிழக முதல்வர் தலைவராக உள்ளார்.மீள்புதுப்பித்தக்க சக்தி வளங்களிற்கான வாய்ப்பு தமிழ்நாட்ட…
-
- 43 replies
- 2.4k views
-
-
ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பை ஆவணப்படுத்தும் இளம் பெண் Play video, "ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பை ஆவணப்படுத்தும் இளம் பெண்", கால அளவு 2,15 02:15 காணொளிக் குறிப்பு, ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பை ஆவணப்படுத்தும் இளம் பெண் 3 மணி நேரங்களுக்கு முன்னர் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள குருவக்குடி கிராமத்தைச் சேர்ந்த லாவண்யா என்ற இளம் பெண் ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் அதன் வளர்ப்பு முறையை ஆவணப்படுத்தி வருகிறார். இதற்காக காளைகள் இருக்கும் இடத்திற்கே தனியாகப் பயணம் செய்து காணொளிகளை உருவாக்கி வரும் லாவண்யா, அதை ‘மண்வாசம் லாவண்யா’ என்ற யு டியூப் சேனலில் வெளியிடுகிறார். தயாரிப்பு, படத்தொகுப்பு …
-
- 18 replies
- 2.1k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே.. காங்கிரஸ் கட்சி தீவிரவாதத்துக்குத்தான் எதிரியே தவிர ஈழத் தமிழருக்கு அல்ல என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். திமுகவில் இருந்து விலகிய நடிகை குஷ்பு திடீரென டெல்லியில் சோனியாவை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அதன் பின்னர் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கமே- ஈழத் தமிழருக்கு ஆதரவானது காங்: நடிகை குஷ்பு பின்னர் நேற்று சென்னை திரும்பிய குஷ்பு இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்றார். அவருக்கு காங்கிரசார் குஷ்புவை வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் குஷ்பு கூறியதாவது: இந்தியாவை கா…
-
- 44 replies
- 4.9k views
-
-
யானைகளை காவு வாங்கும் மின்சார வேலிகள் - தொடரும் துர்மரணங்களை தவிர்க்க என்ன வழி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதிரி படம் 26 மார்ச் 2023, 05:54 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கடந்த 20 நாட்களுக்குள் மட்டும் வெவ்வேறு மின்சார விபத்துகளால் ஐந்து யானைகள் உயிரிழந்துள்ளன. யானை - மனித மோதல், யானைகள் இறப்பு பற்றிய விவாதங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்த நிலையில் சமீபத்திய துர்மரணங்கள் இதை மேலும் தீவிரப்படுத்தியுள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES …
-
- 1 reply
- 377 views
- 1 follower
-
-
சொத்துக்குவிப்பு வழக்கு... ஜெ. போல சிக்கும் ஓ.பி.எஸ்! முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 21 ஆண்டுகாலக் கொடுங்கனவாகத் தொடர்ந்தது சொத்துக்குவிப்பு வழக்கு. தி.மு.க ஆட்சிக் காலத்தில், தன்மீது தொடரப்பட்ட அத்தனை வழக்குகளையும் உடைத்த ஜெயலலிதாவால், சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து மரணத்துக்குப் பிறகும் விடுதலை பெற முடியவில்லை. அதேபோன்ற ஒரு கடும் வெள்ளத்தில் சிக்கிவிட்டார் ஓ.பன்னீர்செல்வம். இந்த வெள்ளத்தின் முதல் சுழலில் தப்பிய ஓ.பி.எஸ்., இரண்டாவது சுழலில் வசமாகச் சிக்கியிருக்கிறார். ரெய்டுகள் சூழ்ந்த ஜூலை மாதத்தில், ‘ஏன் இந்த விவகாரத்தை சி.பி.ஐ விசாரிக்கக் கூடாது’ என்று சென்னை உயர் நீதிமன்றம் கேட்டு, ஓ.பி.எஸ் மீதான புகாரை, அவர் துணை முதல்வராக அங்கம் வகி…
-
- 0 replies
- 637 views
-
-
18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கு: சபாநாயகருக்கு சாதகமாக தீர்ப்பு!(2ஆம் இணைப்பு) சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் எடுத்த முடிவே சரி என்றும், அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டதில் தவறில்லை என்றும், நீதிபதி சத்தியநாராயணன் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார். இன்று (வியாழக்கிழமை) காலை 10.30 மணியளவில் குறித்த வழக்கின் தீர்ப்பை வாசித்த நீதிபதி, “சட்டமன்ற உறுப்பினர்களின் தகுதி நீக்கம் சட்டவிரோதமானதல்ல, சபாநாயகரின் முடிவில் தவறில்லை” எனக் கூறியுள்ளார். குறித்த 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்க வழக்கானது, சென்னை உயர்நீதிமன்றில் நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்தது. இ…
-
- 2 replies
- 502 views
-
-
பட மூலாதாரம்,மாஞ்சோலை செல்வகுமார் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 15 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது 16 ஜூன் 2024 திருநெல்வேலி மாவட்டம் மாஞ்சோலை பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கான குத்தகை காலம் முடிந்து விட்டதால் தோட்டத்தை மூடிவிட்டு, அங்கிருக்கும் தொழிலாளர்களை வெளியேறச் சொல்லிவிட்டது நிர்வாகம். வேறு எங்கு செல்வது எனக் கேள்வி எழுப்புகிறார்கள் தொழிலாளர்கள். ஜூன் 14-ஆம் தேதி. திருநெல்வேலி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தில் கூடியிருக்கும் பெண்கள் மொத்தமாக கதறி அழுதுகொண்டிருக்கிறார்கள். அந்தக் காட்சியைப் பார்ப்பவ…
-
- 0 replies
- 296 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,INSTAGRAM: ISAIVANI படக்குறிப்பு, பாடகி இசைவாணி எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் பாடகி இசைவாணியால் பாடப்பட்ட 'ஐயாம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா' பாடல் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக்கூறி புகார்களை அளித்து வருகின்றன இந்து அமைப்புகள். சுமார் ஆறு வருடங்களுக்கு முன்பாக பாடப்பட்ட இந்தப் பாடல் இப்போது சர்ச்சையாவது ஏன்? பாடகி இசைவாணியால் பாடப்பட்டு, தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் குழுவால் உருவாக்கப்பட்ட 'ஐ யாம் சாரி ஐயப்பா, நான் உள்ள வந்தா என்னப்பா' என்ற பாடல் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் இந்தப் பாடலை உருவாக்கி, பாடியவர்களைக் கைதுசெய்ய வேண்டுமெனவும் தமிழ்நாட்டில் பல கா…
-
- 0 replies
- 509 views
- 1 follower
-
-
வட தமிழகத்தை புயல்கள் அடிக்கடி தாக்குவது ஏன்? தென் தமிழகம் தப்பிக்க இலங்கை காரணமா? imd.gov.in சென்னை, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களை கொண்ட வட தமிழ்நாடு, அதன் புவியியல் அமைவிடம் மற்றும் வானிலை நிகழ்வுகள் காரணமாக, நீண்ட காலமாக புயல்களால் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஃபெஞ்சல் புயலால் சமீபத்தில் ஏற்பட்ட சேதங்களே அதற்கு உதாரணம். தமிழகத்தின் தென் பகுதி, புயல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டாலும், வட தமிழ்நாடு பல்வேறு காரணிகளால் அடிக்கடி மற்றும் தீவிரமான தாக்கங்களை எதிர்கொள்கிறது. புயல் அமைப்புகள் பொதுவாக உருவாகி தீவிரமடையும் வங்காள விரிகுடாவின் தாக்கம் மற்றும் வடக்கு கடற…
-
- 1 reply
- 401 views
-
-
சென்னை மக்களை மனம் திறந்து பாராட்டிய சச்சின்! ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை முதல் 2019-ம் ஆண்டு உலகக் கோப்பை வரை, எம்.ஆர். எப். நிறுவனம் ஸ்பான்ஷராக இணைந்துள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்க, சச்சின் சென்னை வந்திருந்தார். நிகழ்ச்சியில் பேசிய சச்சின், "சென்னையில் பெய்த கனமழைக்கு பிறகு இப்பொழுதுதான் முதன்முறையாக சென்னை வந்துள்ளேன். நான் முன்பு எப்படி பார்த்தேனோ அப்படியேதான் இருக்கிறது. எந்த ஒரு மாற்றமும் எனக்கு தெரியவில்லை. பெரு வெள்ளத்தை சென்னை மக்கள் எதிர்கொண்ட விதமும் என்னை வியக்க வைத்தது. சென்னையில் கனமழையால் பாதிக்கப்பட்டபொழுது மக்களுக்கு உதவிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் எல்லா பகுதியிலும் இருந…
-
- 0 replies
- 701 views
-
-
சென்னை: கடற்கரை நகரில் 'காற்று வியாபாரம்' இந்தியாவில் பெருநகரங்களில் காற்று மாசடைந்துவரும் நிலையில், ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மக்களுக்கு விற்கும் வியாபாரத்தை நிறுவனம் ஒன்று சென்னையில் துவங்கியுள்ளது. மருத்துவ சான்றிதழ் எதுவும் தேவைப்படாத இந்த ஆக்ஸிஜன் சிலிண்டர்களை யார் வேண்டுமானாலும் வாங்கிச் செல்லலாம் என்று அந்த நிறுவனத்தின் விற்பனை முகவர்கள் கூறுகின்றனர். விளையாட்டு வீரர்களுக்கு இந்த சுவாசக் காற்று சிலிண்டர்கள் உதவியாக இருக்கும் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால், காற்றை விலை கொடுத்து வாங்குமளவுக்கு சுற்றுச்சூழல் மாசடைந்துவிட்டதா என்ற கவலைகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். மருத்துவர்களின் அறிவுறுத்தல்…
-
- 0 replies
- 509 views
-
-
ஜட்டி பனியனுடன் வாருங்கள் அனுமதி தருகிறேன்:-கல்லூரி முதல்வர். [வீடியோ ] விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைகல்லூரி மாணவர்கள் 20 பேர் 2வது நாளாக தொடர்ந்து உண்ணா நிலை அற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மேலும் பல மாணவர்கள் கல்லூரியின் முதல்வரிடத்தில் அனுமதி கோரி சென்று உள்ளனர் , அதற்கு அக்கல்லூரியின் முதல்வர் அனுமதி மறுத்தது மட்டுமின்றி அவர்களது போராட்டத்தை கொச்சை படுத்தும் விதமாக பனியன் ஜட்டியோடு வந்து அனுமதி கேளுங்கள் தருகிறேன் என்று ஏகத்தாளமாக பதில் கூறியிருக்கிறார் , மேலும் போராடும் மாணவர்களின் மதிப்பெண்களை குறைப்பேன் , மடிக்கணினி தரமாட்டேன் , டீசீ யை கிழித்து விடுவேன் என்றும் பயமுறுத்தி போராட்டத்தை கைவிடுமாறு வற்புறுத்தி வருகிறார்…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஜெயலலிதா விட்டு சென்ற தமிழகம்: புள்ளி விவரங்கள் தரும் செய்திகள் கடந்த 25 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் தமிழக முதல்வராக ஆட்சி புரிந்த ஜெயலலிதா, விட்டு சென்ற தமிழகத்தின் இன்றைய நிலைமை என்ன? இம்மாநிலத்தின் சிறப்பு அம்சங்கள் எவை? இன்னும் முன்னேற வேண்டிய இடங்கள் என்ன? ஆதாரபூர்வமான புள்ளி விவரங்களின் வழியாக தமிழகத்தின் நிலவரத்தை பார்த்தால் அதிக நிறைகளும், சில குறைகளும் இருக்கின்றன. பொருளாதார குறியீடுகளை எடுத்து கொண்டாலும், சமுதாய குறியீடுகளை (social indicators ) பார்த்தாலும், தமிழ் நாடு மற்ற பல மாநிலங்களை விட எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் தெரிகிறது. உதாரணமாக தமிழ்நாட்டில் 98.8 சதவீத குடியிருப்புகள் மின்சார இணைப்ப…
-
- 0 replies
- 467 views
-
-
சேலம்: சேலத்தில் வேறு, வேறு சாதியைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதால், திருமணம் நடந்த மறுநாளே மணப்பெண் கொலை செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம், மல்லூரை அடுத்த வாணியம்பாடி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் 20 வயது பிரியங்கா. வாணியம்பாடியை அடுத்த குலாளர் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (30). பிரியங்கா சேலம் சக்தி கைலாஷ் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 2ஆம் ஆண்டு படித்து வந்தார். மூர்த்தி கட்டிட மேஸ்திரியாக வேலை பார்க்கிறார். இருவருக்குமிடையே காதல் மலர்ந்து கடந்த சில ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை கஞ்சமலை சித்தர் கோவிலில் இருவரும் பெற்றோர்களுக்கு தெரியாமல் திருமணம் …
-
- 0 replies
- 3.1k views
-