தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10263 topics in this forum
-
சிங்கள இராணுவத்தினருக்கு குன்னூர் வெலிங்டனில் பயிற்சியைத் தொடரும் இந்திய அரசின் துரோகம்! ஜூன் 25 செவ்வாய்கிழமை: குன்னூரில் இராணுவப் பயிற்சிக் கல்லூரி முற்றுகை இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழ் இனத்தையே இலங்கைத் தீவில் பூண்டோடு அழிக்க திட்டமிட்டு சிங்களப் பேரினவாத அரசு நடத்திய கோரமான இனப்படுகொலைக்கு அனைத்து விதத்திலும் உடந்தையாக இருந்து செயல்பட்ட காங்கிரஸ் தலைமை தாங்கும் மத்திய அரசு, தாய்த் தமிழகத்துத் தமிழ் மக்கள் நெஞ்சில் ஓங்கி மிதிப்பதுபோல், சிங்கள இராணுவத்தினருக்கு தமிழ்நாட்டில் திரும்பத் திரும்ப அழைத்துக்கொண்டுவந்து பயிற்சி கொடுக்கிறது. கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் நெருப்பு மூண்டதை மத்திய அரசு துச்சமாகக்…
-
- 0 replies
- 292 views
-
-
ஜூன் 30-க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பா?: முதலமைச்சர் பதில் திருச்சி: திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- கொரோனாவை தடுக்க உலக நாடுகள் திணறி வரும் சூழலில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் உயிர்ச்சேதம் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதம் தமிழகத்தில் குறைவாக உள்ளது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கை தமிழக அரசு சரியாக பின்பற்றி வருகிறது. ஊரடங்கால் கொரோனா பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 24,750 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இர…
-
- 1 reply
- 683 views
-
-
ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் – முதலமைச்சர் ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், “1956ஆம் ஆண்டு நவம்பர் 1-ம் நாள் இந்தியா முழுவதும் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில், அப்போதைய மெட்ராஸ் மாகாணத்திலிருந்து ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளத்தின் சில பகுதிகள் பிரிந்து சென்றன. 2019 முதல் நவம்பர் 1ஆம் நாளை தமிழ்நாடு மாநில நாளாக அப்போதைய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகள், தமிழ் உணர்வாளர்கள், தமிழ்க் கூட்டமைப்பினர், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் எனப் பலதரப்பிலும் நவம்பர் 1ஆம் நாள் எல்லைப் போராட்டத்தை நினைவுகூரும் நாளாகத்தான…
-
- 2 replies
- 522 views
-
-
ஜூலை 25 மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறார் கமல்ஹாசன்! மக்கள் நீதி மய்யம் (MNM) கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி மாநிலங்களவையில் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார். கடந்த மாதம் மேல்சபைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டது தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) தலைமையிலான கூட்டணியின் முக்கிய ஆதரவுடன் உறுதி செய்யப்பட்டது. ஜூன் மாதம் நடைபெற்ற இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மாநிலங்களவைத் தேர்தலுக்காக ஆளும் கூட்டணியால் முன்மொழியப்பட்ட நான்கு வேட்பாளர்களில் கமல்ஹாசனும் ஒருவர். மூத்த நடிகரும் அரசியல்வாதியுமான கமல்ஹாசனுடன் திமுக, தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன், புகழ்பெற்ற கவிஞர் மற்றும் எழுத்தாளர் சல்மா, எஸ்.ஆர். சிவ…
-
- 0 replies
- 200 views
-
-
ஜெ சமாதியில் அண்ணன் மகள் தீபா அஞ்சலி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா இன்று மாலை மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா காலமானார். ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதாவின் உடலுக்கு பல்வேறு திரைத்துறையினர், அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். ஜெ.,வின் உடலுக்கு அருகே சசிகலா, இளவரசி ஆகியோரின் குடும்பத்தினர் அருகில் இருந்தனர். அதிமுக அமைச்சர்கள் படிக்கட்டுகளில் அமர்ந்திருந்தனர். ஜெயலலிதாவின் ரத்த உறவான தீபா, ஜெயலலிதாவின் உடலுக்கு அருகே தென்படவில்லை. அதுமட்டுமின்றி போயஸ் கார்டனில் நடந்த சடங்கு சம்பிரதாயங்களில் கலந்து…
-
- 0 replies
- 514 views
-
-
ஜெ மரணம்! விடை தெரியாத சில கேள்விகள்!!! | Socio Talk |
-
- 0 replies
- 445 views
-
-
ஜெ-சசி நிறுவனங்களின் பின்னல் வலை விளக்கப்படம் ஜெ-சசி நிறுவனங்கள் பற்றிய முழு விவரங்கள் சென்னை தியாகராய நகரில் இருபுறமும் மரங்கள் வளர்ந்த, கவனத்தை ஈர்க்கும் எந்த அம்சமும் இல்லாத ஒரு வீதியின் அடுக்ககத்தில் ‘கியான்’ (GYAN) என்ற பெயர்ப் பலகை பளிச்சென்று கண்ணில் படுகிறது. ஓரிரண்டு காரணங்களைத் தவிர, அது ஒன்றும் கவனிக்கத்தக்க அடுக்ககம் அல்ல. கதவு எண் 12, கதவு எண் 16 என்ற இரு வீடுகள் மட்டும் சில தனியார் நிறுவனங்களின் பதிவுபெற்ற அலுவலகங்களாகத் திகழ்கின்றன. அந்நிறுவனங்கள், அஇஅதிமுக (அம்மா) கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, அவருடைய…
-
- 0 replies
- 537 views
-
-
மிஸ்டர் கழுகு: ஜெ. ‘மரண’ விசாரணை... சொத்துக் குவிப்பு வழக்கு... அச்சத்தில் சசிகலா! ‘‘ஏதோ வானிலை மாறுதே” - ஹம் செய்தபடியே என்ட்ரி ஆனார் கழுகார். அவரிடம், ‘‘நீங்கள் இப்படிப் பாடினால் அதற்கு ஏதோ அர்த்தம் இருக்கும்’’ என்று கொக்கிப் போட்டோம். ‘‘சொல்கிறேன்... ஜனவரி 12-ல் சசிகலா முதல்வர் பதவி ஏற்பார் என்ற பேச்சு பலமாக அடிபட்டுவந்ததல்லவா... இப்போது அது தாமதம் ஆகலாம் என்று சொல்லப்படுகிறது.” ‘‘ஏனாம்? என்ன சிக்கல்?” ‘‘ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல், 6 மாதங்களுக்கு முன்பே ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம். அதற்குப் பிறகு ஜெ. உடல்நிலை, மரணம் மற்றும் சில காரணங்களால் அதில் தீர்ப்பு வெளியாகாமலேயே இ…
-
- 3 replies
- 645 views
-
-
ஜெ. 17ஆம் திகதி தமிழக முதல்வராகிறார் ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுதலை பெற்ற ஜெயலலிதா எதிர்வரும் 17ஆம் திகதி தமிழக முதலமைச்சராக மீண்டும் பதவியேற்க உள்ளததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், அதற்கான தொடர்பான சுபதினமாக எதிர்வரும் 17ஆம் திகதியை தெரிவு செய்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதாவுக்கு 10 வருடங்கள் அரசியல் வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலை முன்னர் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தின் முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் பதவியேற்றார். இந்த நிலையில், நேற்றைய தினம் அவர் சகல குற்றச்சாட்டுகளிலும் இருந்து விடுதலை செய்யப்படுவதாக கர்நாடக உயர் நீதிமன்றம் அறிவித்தது. 67 வயதான ஜெயலலிதா ஜெயராமிற்கு பெ…
-
- 0 replies
- 351 views
-
-
ஜெ. இலாகா இல்லாத முதல்வர்? எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக அரசு? சென்னை: மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பும் வரை ஜெயலலிதா இலாகா இல்லா முதல்வராக இருப்பார் என்றும் அவர் வசம் தற்போது உள்ள இலாகாக்கள் மூத்த அமைச்சர்களான ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 2 வாரங்களாக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நீண்டகாலம் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என அப்பல்லோ மருத்துவமனை கூறியுள்ளது. இதையடுத்து இடைக்கால முதல்வர் அல்லது பொறுப்பு முதல்வர் ஒருவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் அமைச்சர்கள் ஓ. பன்னீர்செல்வம் …
-
- 2 replies
- 678 views
-
-
ஜெ. இல்லாத சட்டசபை! - ஜாலி ஆளும்கட்சி... லாலி எதிர்க்கட்சி ‘பயம்... பவ்யம்... பரபரப்பு...’ சட்டசபைக்குள் ஜெயலலிதா இருந்தால், அ.தி.மு.க-வினரிடம் இந்த மூன்றும் இருக்கும். இப்போது இந்த மூன்றில் ஒன்றுகூட இல்லை. முதல்வர் ஓ.பி.எஸ் பேசிக்கொண்டிருக்கும்போதே, அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் எழுந்து செல்வதும், சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதுமாகக் காட்சி தருகிறது சட்டசபை. ஜெயலலிதா இருக்கும்போது, அவர் சட்டசபைக்குள் வந்தால், அ.தி.மு.க-வினர் மட்டும் எழுந்து நிற்பார்கள். ஆனால், இப்போது ஓ.பி.எஸ் உள்ளே வந்தால், தி.மு.க-வினரும் சேர்ந்து எழுந்து நிற்கிறார்கள். சபையில் ஜெயலலிதா அமரும்போது, சபாநாயகருக்கு மட்டும் வணக்கம் வைப்பார். ஆனால், ஓ.பி.எஸ்-ஸோ எதிர்க்கட்சியினருக்கும் ஒரு வணக…
-
- 0 replies
- 678 views
-
-
ஜெ. உடலை எடுத்து டிஎன்ஏ டெஸ்ட் செய்தால் என்ன.. ஹைகோர்ட் அதிரடி கேள்வி சென்னை: ஜெயலலிதா வாரிசு என கூறும் வழக்கில் அம்ருதாவிடம் ஏன் டிஎன்ஏ சோதனை செய்யக்கூடாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஜெயலலிதாவுக்கு பிறந்த குழந்தை தான்தான் எனக்கூறி பெங்களூரை சேர்ந்த மஞ்சுளா என்கிற அம்ருதா அண்மையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஜெயலலிதாவின் உடலை தோன்டியெடுத்து பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால் அவரது மனுவை நிராகரித்த சுப்ரீம்கோர்ட் மாநில உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு அம்ருதாவுக்கு அறிவுறுத்தியது. இதைத்தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அம்ருதா மேல்முறையீடு செய்துள்ளார். டிஎன்ஏ சோதன…
-
- 7 replies
- 906 views
-
-
ஜெ. உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தேன்: அப்பல்லோவில் ராகுல் காந்தி பேட்டி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று காலை அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றார். உடன் காங்கிரஸ் மாநில தலைவர் திருநாவுக்கரசர் சென்றிருந்தார். ராகுல் காந்தியை அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு மருத்துவர்களை சந்தித்து ஜெ. உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். சுமார் அரை மணி நேரம் மருத்துவமனையில் இருந்தார் ராகுல். பின்னர் மருத்துவமனை வாசலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், …
-
- 3 replies
- 711 views
-
-
ஜெ. உடல்நிலை ரகசியம் என்ன? ஜனாதிபதிக்குச் சென்ற மனு எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் அல்லது முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையை பரிசோதிக்க சிறப்பு மருத்துவர் ஒருவரை நியமித்து அவர் மூலம் அறிக்கை பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ரீகன் எஸ்.பெல் என்பவர், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் மனு கொடுத்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 22-ம் தேதி, உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்றுவரை அவர், அங்கு சிகிச்சையில் இருக்கிறார். ஆனால், அவருடைய உடலுக்கு என்ன பாதிப்பு, அவருடைய சிகிச்சை எந்த நிலையில் இருக்கிறது என்பது பற்றி முறையான தகவல்கள் இதுவரை இல்லை. மேலும், அதிகாரிகள், அமைச்சர்கள் உள்பட யாரும் ஜெயலலிதாவை சந்திக்க…
-
- 0 replies
- 772 views
-
-
ஜெ. சிகிச்சை பெற்றபோது எடுத்த படத்தை வெளியிட விரும்பவில்லை: ரத்த வாரிசுகளுக்கே போயஸ் இல்லம் சொந்தம் - டிடிவி தினகரன் திட்டவட்ட அறிவிப்பு டிடிவி தினகரன் | கோப்புப் படம்: எல்.சீனிவாசன். மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் படம் எங்களிடம் உள்ளது. ஆனால், அதை எந்த விதத்திலும் வெளியிட விரும்ப வில்லை என அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். போயஸ் தோட்ட இல்லம், ஜெய லலிதாவின் ரத்த வாரிசுகளுக்கே சொந்தம் என்றும் அவர் கூறி யுள்ளார். இது தொடர்பாக ‘தி இந்து’ நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘வேதா நிலையம்’ அமைந்துள்ள போயஸ் த…
-
- 0 replies
- 181 views
-
-
ஜெ. சுகவீனத்தால் கவலை... நடிகர் ராமராஜனுக்கு திடீர் நெஞ்சுவலி... மருத்துவமனையில் அனுமதி சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதால் கவலையில் இருந்த நடிகர் ராமராஜனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழின் முன்னணி நாயகர்களுள் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் ராமராஜன். பின்னர் அவர் அரசியலில் குதித்தார். கடந்த 1998ல் திருச்செந்தூர் மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்ட ராமராஜன் எம்.பி., ஆனார். தொடர்ந்து அதிமுகவில் அவர் உறுப்பினராக உள்ளார். இந்த சூழ்நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா சென…
-
- 1 reply
- 527 views
-
-
ஜெ. சுகவீனம் எதிரொலி... அதிர்ச்சியில் அதிமுக பிரமுகர் மயங்கி விழுந்து மரணம். தஞ்சை: முதல்வர் ஜெயலலிதாவிற்கு உடல்நலம் சரியில்லை என்பதைக் கேள்விப்பட்டு, அதிர்ச்சியில் மயங்கி விழுந்த தஞ்சையைச் சேர்ந்த அதிமுக பிரமுகர், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கடந்த வியாழன் அன்று இரவு உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அதிமுக தொண்டர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர்.இந்நிலையில், ஜெயலலிதாவுக்கு உடல்நலக் குறைவு குறித்து கேள்விப்பட்ட தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை கண்டியன் தெருவைச் சேர்ந்த டி.மகேந்திரன் (54) அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். உடனே அவருக்கு மயக்கத்தை…
-
- 0 replies
- 344 views
-
-
ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கால் நீதித்துறைக்கு கெட்ட பெயர்: சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி வேதனை ஹைதராபாத்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஹிந்தி நடிகர் சல்மான்கான் ஆகியோர் மீதான வழக்குகள் விசாரிக்கப்பட்ட விதம் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை கெடுத்துவிட்டது என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும், கர்நாடக மாநில லோக் ஆயுக்தாவின் (லஞ்ச ஒழிப்பு) முன்னாள் தலைவரும், மற்றும் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரலுமான சந்தோஷ் ஹெக்டே கூறினார். ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் சந்தோஷ் ஹெக்டே பேசியதாவது: ஜெயலலிதா மற்றும் சல்மான்கான் வழக்குகளில் அவர்களுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது. வழக்கத்துக்கு மாறாக அவர்களின் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. இதனால் நீதித்துறைக…
-
- 1 reply
- 286 views
-
-
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: மேல்முறையீட்டு வழக்கின் ஆவணங்கள் பெங்களூரு ஹைகோர்ட்டில் தாக்கல் சென்னை: ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு வழக்கின் ஆவணங்கள் இன்று பெங்களூரு ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவிற்கு கர்நாடக ஹைகோர்ட் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது இந்த வழக்கின் மேல்முறையீட்டு ஆவணங்களை 3 மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என ஜெயலலிதா தரப்பு வக்கீல்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். ஜ…
-
- 0 replies
- 435 views
-
-
திருச்சி: ஜெயலலிதா ஜாமீன் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து, பெரியார் பேட்டியளிப்பதாக திருச்சியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து, 'விடுதலை' நாளிதழில் தந்தை பெரியார் விமர்சனம் செய்துள்ளதாக திருச்சியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. 'பெரியார் பேசினால்…?' எனும் தலைப்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில், ''ஜெயலலிதா ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்து வன்முறையில் ஈடுபடும் அ.தி.மு.க. காலிகள் குறித்து உங்கள் கருத்து என்ன?'' என்றும், அதற்கு, ''சமுதாய ஒழுக்கக் கேடாகப் போனதற்கு காரணம், ஒருவன் அயோக்கியத்தனம் செய்கிறான் என்றால் அதை கண்டிக்க வேண்டுமென்று தோன்றாததுதான்!'' என…
-
- 1 reply
- 2k views
-
-
மிஸ்டர் கழுகு: ஜெ. டாக்டர் மாற்றம் ஏன்? காலா படத்துக்கு முதல் ‘ஷோ’ போகிறேன். படம் பார்த்துவிட்டு வந்து தகவல்களைச் சொல்கிறேன் என்று வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பியிருந்தார் கழுகார். படத்தைப் பார்த்துவிட்டு வந்த கழுகார், துணுக்குகளாகச் செய்திகளைக் கொட்டினார். முதலில் தடங்கல்! வழக்குகள், எதிர்ப்புகள் என காலா ரிலீஸ் விவகாரம் ரஜினியைப் படு டென்ஷனாக்கியிருந்தது. தியேட்டர்கள் தரப்பிலிருந்து கடைசி நேரம் வரை ஒத்துழைப்பு இல்லாததால், ரஜினி அப்செட். அடுத்த பட ஷூட்டிங்குக்காக டார்ஜிலிங் போயிருந்தாலும், தமிழக நிலவரத்தை விசாரித்துக்கொண்டே இருந்தார். ஆனால், எல்லா எதிர்ப்புகளையும் காலி செய்துவிட்டது படத்தின் ரிசல்ட். எல்லாப் பக்கங்களிலும் படத்தைப் பற்றி பாஸிட்டிவ்…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜெ. தரப்பு கோபம் ஏன்? பாஜகவின் நெருக்கடிகள்.. பி.வி.ஆச்சார்யா வெளியிட்ட பரபரப்பு தகவல்கள் சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தம் மீது ஜெயலலிதா தரப்பு ஏன் கோபமாக இருந்து மிரட்டியது என்பது குறித்தும் பாரதிய ஜனதா எப்படியெல்லாம் நெருக்கடி கொடுத்தது என்பது குறித்தும் முன்னாள் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தமது சுயசரிதை புத்தகத்தில் விரிவாக பதிவு செய்துள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இவ்வழக்கில் ஓராண்டு காலம் சிறப்பு வழக்கறிஞராகப் பணியாற்றியவர் பி…
-
- 1 reply
- 2.9k views
-
-
ஜெ. தீர்ப்பு எதிரொலி: தமிழ்த் திரையுலகினர் நாளை உண்ணாவிரதம் சென்னையில் 2013-ல் நடைபெற்ற 'இந்திய சினிமா நூற்றாண்டு விழா' நிகழ்ச்சி. | கோப்புப் படம் சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பின் எதிரொலியாக, ஒட்டுமொத்த தமிழ்த் திரையுலகினரும் நாளை (செவ்வாய்க்கிழமை) மவுன உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்கின்றனர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்து எங்களது தமிழ்த் திரையுலகின் வருத்தத்தையும், உணர்வுகளையும் தெரிவிக்கும் வகையில், அறவழியில் ஒரு மாபெரும் மவுன உண்ணாவிரதப் போராட்டத்தை அனைத்து தமிழ்த் திரையுலகின் சார்பாக, சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையின் முன்பு நாளை (செவ்வாய்க்கிழம…
-
- 41 replies
- 3.4k views
-
-
ஜெ. பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்பு. சென்னை: ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் சட்டசபை திமுக எதிர்க் கட்சித் தலைவர் அன்பழகன், சென்னை மேயர்ஸ்டாலின் ஆகியோரும் கலந்து கொண்டனர். கடந்தமுறை அவர் முதல்வரானபோது மேயராக இருந்த ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதைஸ்டாலினே நிருபர்களிடம் சுட்டிக் காட்டியிருந்தார். இந் நிலையில் இம்முறை பதவியேற்பு விழாவுக்கு அவருக்கு அரசின் சார்பில் முறைப்படி அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது. அவரும் அதை ஏற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். முக்கியப் பிரமுகர்கள் வரிசையில் அமர வைக்கப்பட்டிருந்த ஸ்டாலினும் அன்பழகனும் யாருடனும் பேசவில்லை. ஜெயலலிதாவைக் கடுமையாக விமர்சித்து வரும் ப.சிதம்பரத்தின் கட்சியில் உள்ள அவரது தீவிரம…
-
- 1 reply
- 466 views
-
-
ஜெ. பிறந்த நாளன்று அரசியல் பிரவேசம் பற்றி அறிவிப்பு!- ஜெ.தீபா எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த தினமான இன்று, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அவரின் நினைவு இல்லம் மற்றும் நினைவிடத்துக்குச் சென்று மரியாதை செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த தீபா, 'எனக்கு ஆதரவளிக்கும் மக்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி. இளைஞர்கள் மற்றும் மக்களின் கருத்தை அறிந்து அரசியல் பயணம் குறித்து அறிவிப்பேன். ஜெயலலிதாவின் பிறந்த நாளன்று அரசியலில் ஈடுபடுவது குறித்து தெரிவிப்பேன்' என்று பேசியுள்ளார். http://www.vikatan.com/news/tamilnadu/77951-i-will-decide-about-entering-politics-on-jayas-birthday-says-deepa.art
-
- 2 replies
- 802 views
-