தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10263 topics in this forum
-
இன்று ஈரோடு மாவட்டத்தில் அணைத்து கல்லூரி மாணவர்கள் சார்பில் தனித் தமிழீழம் அமைக்க கோரி மாணவர்கள் ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் செய்தனர் அவர்களை காவல்துறையினர் கைது செய்து பின்னர் மாலை விடுதலை செய்தனர் . http://dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13518:erodu-rain&catid=36:tamilnadu&Itemid=102
-
- 0 replies
- 449 views
-
-
தனித் தமிழீழம் கோரி நடிகர் சூர்யா, கார்த்தி ரசிகர்கள் உண்ணாவிரதப் போராட்டம். [படங்கள் /வீடியோ ] ஈழத் தமிழர்களுக்கு தனி தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி வட சென்னை , தென் சென்னை மற்றும் மத்திய சென்னை மாவட்ட சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர் மன்றத்தினர் இன்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்துகின்றனர். சுதந்திர தமிழ் ஈழத்துக்கான போராட்டம் வரலாறு காணாத அளவில் தமிழகத்தில் நடந்து வருகிறது. மாணவர்கள் முன்னெடுத்த இந்தப் போராட்டம் மக்கள் போராட்டமாக வடிவம் பெற்றுள்ளது. 10 கோரிக்கைகளை முன்வைத்து இவ் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடக்கி உள்ளனர். 1. தனித் தமிழீழம…
-
- 1 reply
- 677 views
-
-
தனித் தீவானது சென்னை: சாலை, ரயில், விமான போக்குவரத்து நிறுத்தம்! சென்னை: கனமழை காரணமாக சென்னையில் சாலை, ரயில் மற்றும் விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டுள்ளதால், சென்னை தனித்தீவாக காட்சியளிக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தன. இந்நிலையில் கடந்த சில தினங்களாக மழை நின்றதன் காரணமாக, பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பி வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் (30-ம் தேதி) முதல் மீண்டும் தமிழகத்தன் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள ஏரிகள் அனைத்தும் நிரம்பியுள்ளது. இதனால், அதிகமான உபரிநீர் திறந்து விடப்பட்டு வ…
-
- 0 replies
- 569 views
-
-
வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தனித்துப் போட்டியிட காங்கிரஸ் தயாராக இருப்பதாக முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்தார். கிராமம் தோறும் காங்கிரஸ், இல்லந்தோறும் கை சின்னம் என்ற முழக்கத்தோடு தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் அரும்பாக்கம், புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் கொடியேற்றும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. எம்.எம்.டி.ஏ. காலனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் கொடியேற்றினார். மத்திய சென்னை மாவட்டத் தலைவர் ரங்கபாஷ்யம் உள்ளிóட்டோர் அதில் பங்கேற்றனர். அப்போது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியது: காங்கிரஸ் கட்சியை…
-
- 2 replies
- 363 views
-
-
வரும் தேர்தல்களில் தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டால் எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று, அந்தக் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே.வீ.தங்கபாலு கூறியுள்ளார். சேலத்தில் நடந்த காங்கிரஸ் கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசுகையில், கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து சொந்தப் பலத்தில் போட்டியிட்டதாலேயே இப்போது ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. அதேபோல, தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டால், எதிர்காலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும். தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசல் இல்லை. கோஷ்டியே இருக்கக் கூடாது. எந்தக் கட்சியில் கோஷ்டி பூசல் இல்லை. அரசியல் கட்சி என்றால் அதில், கோஷ்டி பூசல் தவிர்க்க முடி…
-
- 8 replies
- 1k views
-
-
தனிநபர் வருமானத்தை எப்படி உயர்த்துவீர்கள்? சரியான விளக்கம் தந்தால் நான்கூட திமுகவில் இணைகிறேன்: சீமான் பிரச்சாரம் நாம் தமிழர் கட்சியின் ஆட்சி அமைந்தால் இலவசங்களே தேவையில்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்றும், மாதந்தோறும் இல்லத்தரசிகளுக்குக் கொடுக்க நிதி எங்கிருந்து வரும் என்றும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். வரும் ஏப்.6-ம் தேதி தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. குறைவான நாட்களே இருக்கும் நிலையில், அதிமுக, திமுகவில் கூட்டணிக் கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு குறித்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிக…
-
- 0 replies
- 340 views
-
-
ஜூனியர் கிரிக்கெட் வீரர்கள் எனப்படும் இலங்கை கிரிக்கெட் வீரர்களில் 16 வயதுக்குட்பட்ட அணியினர் இன்று தமிழகம் வந்தபோது அவர்கள் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்பட்டனர். ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவுள்ள மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர்கள் தமிழகம் வந்துள்ளனர். இங்குள்ள மைதானத்தில் அவர்கள் பயிற்சிக்கு வந்துள்ளனர். இதில் இலங்கையை சேர்ந்த ஜூனியர் கிரிக்கெட் அணியினரின் மீனம்பாக்கம் விமான நிலையம் வந்திறங்கிய நேரத்தில், தமிழகத்தில் இதற்கு எதிர்ப்புக் கிளம்பியது. எனவே, தமிழகத்தில் இவர்களுக்கு தனியாக பாதுகாப்பு வழங்குவது கடினம் என்று தமிழக அரசு தெரிவித்த நிலையில், வீரர்கள் மீண்டும் இலங்கைக்கே அனுப்பி வைக்கப்பட்டனர். த…
-
- 0 replies
- 1.5k views
-
-
தனிமனித கோபங்களை தவிர்த்து செயல்பட வேண்டிய பேரிடர் காலம்: கமல்ஹாசன் உருக்கம் நான் கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று என்று நான் சொன்னதாக சொல்லப்பட்ட வார்த்தைகள் யார் மனதையும் புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், இந்த நேரம் கட்சிகளுக்கு அப்பாற்பட வேண்டிய நேரம், மதங்கள் தனிமனிதக் கோபங்களையும் தவிர்த்துச் செயல்பட வேண்டிய பேரிடர் காலம் என்று உருக்கமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நான் கட்டிய வரிப்பணம் என்னவாயிற்று என்று நான் கேள்வி எழுப்பியது போல் சில ஊடகங்களில் சற்று நாட்களுக்கு முன் வந்த செய்தி நான் அந்த ஊடகங்களுக்கு அளித்த பிரத்தியேக பேட்டி அல்ல. மின் அ…
-
- 0 replies
- 687 views
-
-
தனிமைச் சிறையிலிருந்து விடுபட்டார் உதயகலா மண்டபம் அகதி முகாமில் உள்ள தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த ஈழ அகதியான உதயகலா தனது போராட்டத்தை கைவிட்டுள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதியை அடுத்து இவர் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டுள்ளதாக அவரது கணவரும் திருச்சியில் உள்ள அகதி முகாமில் தங்கியுள்ளவருமான தயாபரராஜ் தெரிவித்தார். நேற்றிரவு தனிமை சிறையில் வைக்கப்பட்டிருந்த உதயகலாவை விடுவித்த பொலிஸார் அவருக்கு மண்டபம் முகாமில் மறுவாழ்வுத்துறை அதிகாரிகள் தனி வீடும் ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும் தனது மனைவி தன்னை வந்து சந்திப்பதற்கு உதவி ஆட்சியாளர் அனுமதி வழங்…
-
- 0 replies
- 611 views
-
-
ரூ. 700-க்கு வழங்கப்படும் மெட்ரோ தண்ணீரை தனியார் டேங்கர் லாரிகளிடம் சுமார் ரூ. 5 ஆயிரம் அளவுக்கு கொடுத்து மக்கள் வாங்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னை மக்கள் தனியர் டேங்க் லாரி தண்ணீரை ரூ. 4 ஆயிரம் வரை கொடுத்து வாங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர். கடந்த ஏப்ரலில் ரூ. 2 ஆயிரமாக இருந்த டேங்கர் லாரி தண்ணீர் விலை தற்போது ரூ. 4 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் சில இடங்களில் வற்றி விட்ட நிலையில் சில பகுதிகளில் மக்கள் தனியார் டேங்கர் லாரி தண்ணீரை நம்பியுள்ளனர். சென்னையின் தென் பகுயில் இருக்கும் ராம் நகரை சேர்ந்தவர் ஷாஜி மேத்யூஸ் என்பவர் ஓய்வு பெற்ற சுகாதாரத்துறை பணியாளராக உள்ளார். அவரது வீட்…
-
- 1 reply
- 849 views
-
-
தனியார் பாலில் கலப்படம் நடப்பது உண்மையென்றால் ஏன் விசாரணை நடத்தவில்லை என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி செல்வதற்காக சென்னை விமான நிலையம் வந்த ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தனியார் நிறுவனங்களில் பாலில் ரசாயனங்கள் கலக்கப்படுவதாக கூறுகிறார், அப்படி செய்தால் அதை தடுக்க வேண்டிய பொறுப்பு அவருடையது, பாலில் கலப்படம் உள்ளது என்றால் ஏன் அது குறித்து விசாரணை நடத்தப்படவில்லை. எனவே பால் கலப்படம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்து விசாரிக்க வேண்டும். மாடுகள் விற்க தடை விதிக்கப்பட்டிரு…
-
- 0 replies
- 268 views
-
-
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவீத இடஒதுக்கீடு: ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்ய புதுவை அரசு முடிவு ஐகோர்ட்டில் வழக்கு புதுவையில் தனியார் மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட்டபோது 50 சதவீத இடங்கள் தருவதாக கூறியே அரசிடம் தடையில்லா சான்றிதழ்கள் பெற்றன. ஆனால் ஒப்புக் கொண்டபடி தராமல் 23 சதவீத இடங்களையே ஒதுக்கீடு செய்து வந்தன. இந்தநிலையில் தனியார் மருத்துவக் கல்லூரிகள் புதுவை அரசுக்கு 50 சதவீத இடங்கள் வழங்கக்கோரி பெற்றோர், மாணவர்கள் அமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த 12-ந் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது புதுவை அரசு தரப்பில், ‘மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு…
-
- 0 replies
- 263 views
-
-
தனுஷ்கோடி கடற்பகுதியில் ஆயிரக்கணக்கில் குவிந்த பூநாரைகள் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழ் jayashankar வலசை வரும் பூநாரை என்று தமிழில் அழைக்கப்படும் ஃப்ளமிங்கோ பறவைகள் தற்போது தனுஷ்கோடி கடற்கரையில் ஏராளமாக வந்து குவிந்துள்ளன. ராமேஸ்வரம் அருகே உள்ள தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில் பகுதிக்கு அதிக அளவில் ஆஸ்திரேலிய ஃப்ளமிங்கோ பறவைகள் ஆண்டுதோறும் வலசை வருவது வழக்கம். ஆனால், இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு இந்தப் பறவைகள் மிகப் பெரிய அளவில் தனுஷ்கோடி வந்து குவிந்துள்ளன. கோதண்டராமர் கோவில் அருகே உள்ள கடற் பகுதியில் இவை ஆயிரக் கணக்கில் குவிந்துள்ளன. ஃப்ளமிங்கோக்களில் அன்டீன் ஃப்ளமிங்கோ, அமெரிக்கன் ஃப்ளமிங்கோ, சைலியன் ஃப்ளமிங்கோ, ஜாம்ஸெஸ் ஃப்ளமிங்கோ போன்ற வகைகள…
-
- 3 replies
- 903 views
-
-
தனுஷ்கோடி மணலில் புதைந்த தினம் இன்று... அன்று என்ன நடந்தது? சினிமா தம்பதியினரின் நேரடி சாட்சியம் நூற்றாண்டுகளாக புகழின் உச்சியில் இருந்த நகரம் இது. சிறந்த துறைமுக நகரம், தீர்த்த யாத்திரை தலம் என பெருமைகளை நிரம்பக்கொண்டிருந்த நகரம் இது. இன்று யாருமில்லாத, சொல்லப்போனால் முழுமையாக மறைந்து போன நகரமாக காட்சியளிக்கிறது. புயலின் அசுர தாக்குதலில் தன் சிறப்பை எல்லாம் தொலைத்து விட்டு, சிறுசிறு குவியல்களாய் பல நூறு மணல் மேடுகளில் புதைந்து கிடக்கிறது தனுஷ்கோடி நகரம். தனுஷ்கோடி புயலின் அசுர தாக்குதலுக்குள்ளாகி காணமால் போன தினம் இன்று. ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது அதிகம் புழக்கத்தில் இருந்தது கடல் வழி பயணங்கள் மட்டுமே. அதன் பயணாக இந்தியாவில் இருந்து…
-
- 0 replies
- 466 views
-
-
தனுஷ்கோடியில்... 58 ஆண்டுகளுக்கு முன்னர், கடலில் மூழ்கிய தரைப்பாலம்... வெளியே தெரிந்தது! ராமேஸ்வரத்திலிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தனுஷ்கோடி பகுதி. அதுபோல் 1,964-ம் ஆண்டுக்கு முன்பு வரையிலும் ராமேஸ்வரத்தை விட தனுஷ்கோடி மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கி உள்ளது. தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு கப்பல் போக்குவரத்து மற்றும் தனுஷ்கோடி வரை ரயில் போக்குவரத்தும் இருந்துள்ளது. மேலும் பாடசாலை, தபால் நிலையம், மருத்துவமனை, கோவில்கள், துறைமுகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அது மிகப்பெரிய தொழில் நகரமாக விளங்கியது. கடந்த 1964-ம் ஆண்டு டிசம்பர் 23ஆம் திகதி ஏற்பட்ட புயல் காரணமாக தனுஷ்கோடி நகரமே முழுமையாக அழிந்து போனது. புயல் ஏற்…
-
- 0 replies
- 444 views
-
-
இலங்கையில் உள்ள செல்போன் கோபுரங்களின் சிக்னல் தனுஷ்கோடி வரை எட்டுவதால் கடத்தல் கும்பல்களுக்கு கடற்படையினரிடமிருந்து தப்புவதற்கு வசதியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 1978 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்திலும், தலைமன்னாரிலும் 100 மீட்டர் உயரத்தில் டிரான்ஸ்மிஷன் கோபுரம் அமைக்கப்பட்டு இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தொலைபேசி சேவை அளிக்கப்பட்டது. 1983-ல் இலங்கையில் உள்நாட்டு போர் தீவிரமடைந்தபோது இந்த கோபுரங்கள் மூலம் தொலைபேசி சேவையை வழங்குவது தடைபட்டது. பின்னர் 1988-ல் இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு சென்றபோது மீண்டும் அந்த கோபுரங்கள் செயல்படத் தொடங்கின. இந்த நிலையில், 2003 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கையில் தொலைதொடர்பு துறை தனியார் மயமாக்கப்பட்ட பின்னர், பிரபல இந்திய தனியார் செல்ப…
-
- 1 reply
- 541 views
-
-
தன் உயிரை மாய்த்த மொடல் அழகி: மரணத்திற்கான காரணம் வெளியானது! கருப்பழகி பிரிவில் பட்டம் வென்ற புதுவை மாடல் அழகி சான்ரேச்சல் காதல் திருமணம் செய்த ஓராண்டில் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 26 வயதான அவர் இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் நடைபெற்ற அழகி போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் மற்றும் விருதுகளை குவித்து தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அதுமட்டுமல்லாது புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு ‘மொடலிங்’ (பேஷன் ஷோ) பயிற்சி வகுப்புக்களையும் எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் அவர், கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெற்றோர் சம்மதத்துடன் சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டனர். இதேவேளை சான்ரேச்சல் தனது திருமணத்திற்காகவும், பேஷன் ஷோ நடத்துவதற்…
-
- 0 replies
- 309 views
-
-
தன் மகளைவிட சிறப்பாக படித்த மாணவனை பெண் கொன்றதாக குற்றச்சாட்டு: பெற்றோர் போராட்டம் நடராஜன் சுந்தர் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES காரைக்கால் பகுதியில், தன் மகளை விட நன்றாகப் படித்ததால் மகளுடன் படிக்கும் மாணவனுக்கு, மாணவியின் தாய் குளிர்பானத்தில் பெயர் கண்டறியப்படாத மாத்திரையைக் கலந்து கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வாந்தி மயக்கத்துடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த குறிப்பிட்ட மாணவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுச்சேரி யூனியன் பிரதேச பிராந்தியங்களில் ஒன்றான காரைக்காலின் நகரப்பகுதியில் வீட்ட…
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
தன்னம்பிக்கைப் பெண் சந்திராவின் கனவு: "இழுத்தடிக்காமல் விவசாயக் கடன், விளை பொருளுக்கு நியாய விலை" அபர்ணா ராமமூர்த்திபிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionசந்திரா, சிவகங்கை மாவட்டம், மேலக்காடு கிராமம் "இரவு 12 மணிக்கு பூப்பறிக்க போவேன். அப்போதுதான் சம்பங்கிப்பூவை பறிக்க முடியும். இரவுதான்…
-
- 0 replies
- 574 views
- 1 follower
-
-
தன்னலமற்ற சென்னை:ஒரு ஊழிகால சென்னைவாசியின் நியாயமான கோரிக்கை! தொடரும் அடை மழை, வீட்டை மூழ்கடித்திருக்கும் வெள்ளம், ’இன்னும் மழை பொழியும்’ என்ற கலவர நிலவரம் என சென்னை ஊழிக்காலத்தை எதிர்கொண்டிருக்கிறது. வெள்ளத்தில் சிக்கியிருக்கும் ஒவ்வொருவருக்கும் அவசர கவனிப்பு தேவை என்பதால், எவருக்கு முதலில் உதவுவது, எவருக்குப் பின்னர் உதவுவது என்ற குழப்பமும் பதட்டமும் நிவாரணக் குழுவினரையே சோர்வடையச் செய்கிறது. வெள்ளம் புகுந்ததால் வீட்டை விட்டு வெளியேறிய பதட்டம், தண்ணீரில் வரும் பாம்பு உள்ளிட்ட உயிரினங்ள் அளிக்கும் பயம். சாப்பாடு-தண்ணீர் இல்லை... இயற்கை உபாதைகள் கழிக்க முடியாத அவஸ்தை, ’ஏரி உடைந்துவிட்டது’ என்று வரும் மிரட்டல் வதந்திகள், பைக், கார் உள்ளிட்ட வாகனங…
-
- 0 replies
- 983 views
-
-
தன்னிடம் உள்ள, எம்.எல்.ஏ.,க்கள் சந்தோஷ மாக இருப்பதாக, சசிகலா கூறினாலும், அவர்கள் மத்தியில், பெரும் புகைச்சல் கிளம்பி உள்ளது. கூவத்துார் விடுதிக்கு நேரில் வந்து, ஒவ்வொரு வரையும் தனித்தனியாக சந்தித்த சசிகலா, பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசியதாக, அவர்கள் புலம்புகின்றனர். 'மொபைல் போனில் பேசக் கூடாது; 'டிவி' பார்க்க கூடாது' என, மன்னார்குடி உறவுகள், ஆளாளுக்கு உத்தரவு கள் போடுவதாலும், எம்.எல்.ஏ.,க்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். மூன்று பக்கமும் கடல் சூழ்ந்து, மனிதச் சங்கிலி போல, உயரமான, தடிமனான மனிதர்களை நிறுத்தி, இருட்டு இடத்தில் அடைத்து வைத்தி ருப்பதால், வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.காஞ்சி மாவட்டம், கல்பாக்கம் அருகில் உள்ள, சொகுசு விடு…
-
- 1 reply
- 449 views
-
-
தன்னைப் பற்றி ஜெயலலிதா சொன்னவை... தற்போது அவருக்கு நடப்பவை..! தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா, அரிதாக வழங்கிய சில நேர்காணல்களில் தன்னைப் பற்றிப் பகிர்ந்திருந்த வார்த்தைகளோடு, இன்றைய அரசியல் சூழல் காட்சிகளைப் பொருத்திய இந்தப் புகைப்படத் தொகுப்பு... வருத்தம், அதிர்ச்சி, ஆதங்கம், ரௌத்திரம் கடத்தக்கூடியது. ஓர் ஆளுமையின் இறப்புக்குப் பின்னான இந்தக் காட்சிகள், வாழ்வின் நிலையாமையை உணர்த்துபவையும்கூட! 1. ''ஒருவர் சந்தோஷத்தை அடையும் ஒரே வழியாக நான் நம்புவது, மோட்சத்தை அடைவதால் மட்டுமே. அதாவது, பிறப்பில் இருந்து விடுதலை பெறுவது!" - ஜெ. ஜெயலலிதா (1999, சிமி கேர்வலின் 'ரான்டவு (rendezvous)' தொலைக்காட்சி நிகழ்ச்சி) உங்கள் பிணத்துக…
-
- 0 replies
- 307 views
-
-
இலங்கை அதிபர் ராஜபக்சேவை கைது செய்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்தக்கோரியும், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக காஞ்சி மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ராசன் தலைமையில் 40 பேர் பல்லாவரம் தபால் நிலையம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் ராஜபக்சேவின் உருவபொம்மையும் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் போராட்டம் நடத்திய 40 பேரை கைது செய்தனர். http://www.eeladhesam.com/index.php?option=com_content&view=article&id=19783:2013-03-24-14-48-03&catid=1:aktuelle-nachrichten&Itemid=50
-
- 0 replies
- 366 views
-
-
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு... தபால்துறை தேர்வை ரத்து செய்ய வைத்த தமிழக எம்.பிக்கள்! ஒன்றாக சேர்ந்து குரல் கொடுத்தால் எதுவுமே சாத்தியம் என்பதை இந்தி- ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட தபால்துறை தேர்வை ரத்து செய்ய வைத்து இன்று தமிழக எம்.பி.க்கள் நிரூபித்திருக்கின்றனர். தபால்துறை அண்மையில் பல்வேறு பணி இடங்களுக்கு போட்டித் தேர்வை நடத்தியது. பொதுவாக இத்தேர்வு பிராந்திய மொழிகளில் நடத்தப்படும். இம்முறை திடீரென இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இது மிகப் பெரும் சர்ச்சையானது. இது தொடர்பாக வழக்குகளும் தொடரப்பட்டன. இத்தேர்வு முடிவை வெளியிட நீதிமன்றம் தடைவிதித்தது. இந்நிலையில் 989 தபால்துறை ஊழியர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை துறைசார் த…
-
- 0 replies
- 368 views
-
-
தமிழகத்தில் உள்ள ஈழ அகதி முகாம்களில் இருந்து தப்பி வெளிநாடுகளுக்குச் செல்லும் ஆபத்தான பணிகளில் ஈழ அகதிகள் இறங்கியிருக்கின்றனர். கடந்த ஏப்ரல் முதல் வாரம் தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முயன்ற 120 ஈழ அகதிகள் நடுக்கடலில் தத்தளித்தநிலையில் மீட்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 78 பேர் ஆண்கள், 20 பெண்கள், 22 குழந்தைகள். தமிழகத்தில் உள்ள பல்வேறு அகதி முகாம்களைச் சேர்ந்த இவர்கள் நாகப்பட்டிணத்தில் இருந்து ஒன்றாகத் தங்கள் பயணத்தைத் தொடங்கியிருந்தனர். கடந்த ஆண்டும் இதே போல் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல முற்பட்டபொழுது தமிழகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர். உயிர் பிழைப்பதற்காக ஈழத்தில் இருந்து தமிழகம் வந்த ஈழ அகதிகள் ஏன் தமது உயிரைப் பணய…
-
- 1 reply
- 626 views
-