தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10263 topics in this forum
-
SUN TV INTERVIEW ON SRI LANKAN TAMIL REFUGEES தமிழகத்தில் ஈழ அகதிகள் - சண்டிவி நேர்காணல் - வ.ஐ.ச.ஜெயபாலன் . https://www.youtube.com/watch?v=-JMOPIJgk7A
-
- 0 replies
- 772 views
-
-
தமிழகத்தில் ஈழத் தமிழர் படும் துயரம்- பத்திரிக்கையாளர் சந்திப்பு தமிழகத்தில் ஈழத் தமிழர் படும் துயரம்- பத்திரிக்கையாளர் சந்திப்பு வாருங்கள் தமிழர்களே! பேசுபொருளாக்குவோம் தமிழகத்தில் உள்ள ஈழ தமிழர்கள் பிரச்சனையை... செய்தியாளர் சந்திப்பு அழைப்பு இலங்கையில் நடந்த இனப்படுகொலையையொட்டி தமிழகத்திற்கு தப்பி வந்து ஈழத் தமிழர்கள் பலர் 20 முதல் 30 ஆண்டுகளாக முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 110 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களுக்கும், தமிழகத்தில் வெளிப்பதிவில் தங்கியுள்ள ஈழத்தமிழர்களுக்கும் உரிமைகள் அற்றவர்களாக இங்கு வாழ்கிறார்கள். இலங்கைக்கும் திரும்பிச் செல்ல முடியாத நிலையில் உள்ளனர். அசையும்(…
-
- 0 replies
- 451 views
-
-
தமிழகத்தில் உள்ள அமெரிக்கர்களுக்கு அலெர்ட்! முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் உடல்நிலை குறித்த செய்தி தமிழகம் முழுவதும் பதற்ற நிலையை உருவாக்கி உள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், தமிழகத்தில் அதிகம் மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும்' என தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. http://www.vikatan.com/news/tamilnadu/74188-the-american-state-departme…
-
- 2 replies
- 620 views
-
-
இலங்கையிலிருந்து யுத்தம் காரணமாக தமிழ் நாட்டுக்கு இடம்பெயர்ந்தவர்களில் கணிசமானவர்கள் யுத்தம் முடிந்த பின்னர் இலங்கைக்குத் திரும்பிவிட்டனர். ஆனாலும் இலங்கைக்குத் திரும்ப முடியாத சூழ்நிலையில் பல ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் தமிழகத்தில் பல்வேறு இடங்களிலுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொரோனா நிவாரணமாக உலர்உணவுப் பொதிகளை வழங்கி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி ஒன்றியத்திலுள்ள வாணியாறு ஈழத்தமிழர் முகாம் மக்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு தலைமையிலான குழுவினர் நேற்று(02) நேரில் சென்று நிலைமையினைப் பார்வையிட்டு உலர்உணவுப் பொருட்களை வழங்கி வைத்துள்ளனர். அங்கு ஈழத்…
-
- 0 replies
- 414 views
-
-
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கேன் குடிநீர் நிரப்பும் நிறுவனங்கள் தரச்சான்றிதழ் பெற்றுள்ளனவா? என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு பதிலளிக்க தமிழக மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தரமற்ற வகையில் குடிநீரை கேன்களில் அடைத்து விற்பனை செய்யப்பட்டு வருவதாக பத்திரிகையில் செய்தி வெளியானது. இதையடுத்து, பத்திரிக்கை செய்தியை அடிப்படையாக கொண்டு பசுமை தீர்ப்பாயம் தானாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து தரமற்ற குடிநீர் நிரப்பும் நிறுவனங்களை மூட மாசுகட்டுப்பாட்டு வாரியத்துக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை, புறநகர் பகுதிகளில் தரமற்ற 200க்கும் மேற்பட்ட குடி…
-
- 0 replies
- 401 views
-
-
தமிழகத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்தக்கூடாது – தி.மு.க. மனு தொகுதி மறுவரையறை பணிகளை நிறைவு செய்யாமல் தமிழகத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்தக்கூடாது என்று தி.மு.க புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியிடும் முன் தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும் இந்தப் பணிகளை நிறைவு செய்யாமல் தமிழகத்தில் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே தொ…
-
- 0 replies
- 522 views
-
-
தமிழகத்தில் உள்ளூராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆரம்பம் தமிழகத்தில் உள்ளூராட்சி அமைப்புகளுக்கு இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணிஆரம்பமாகியது. இன்று (வியாழக்கிழமை) காலை, தேர்தல் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகள் சீல் உடைக்கப்பட்டு திறக்கப்பட்டன. பின்னர் காலை 8 மணிக்கு வாக்கு பெட்டிகள் அனைத்தும் பொதுவான வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டு, வாக்கு எண்ணிக்கை ஆரம்பமாகியது. மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 30 மேஜைகளில் வாக்கட்டைகள் கொட்டப்பட்டு எண்ணப்படுகின்றன. அந்தவகையில் ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கண்காணிப்பாளர் மற்றும் 3பேர் வாக்கட்டைகள் எண்ணும் பணியில் உள்ளனர். …
-
- 3 replies
- 959 views
-
-
தமிழகத்தில் ஊரக உள்ளூராட்சித் தேர்தல் – வாக்குப்பதிவு ஆரம்பம் தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளூராட்சித் தேர்தலுக்கான முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய நிலையில் இடம்பெற்று வருகிறது. 27 மாவட்டங்களில் உள்ள 156 உள்ளூராட்சி ஒன்றியங்களில் காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணி வரை வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன. உள்ளூராட்சித் தலைவர், உள்ளூராட்சி வார்டு உறுப்பினர், மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய வார்டு உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது. அதற்கமைய, 4700 உள்ளூராட்சித் தலைவர்கள், 37,830 வார்டு உறுப்பினர்கள், 2546 ஒன்றிய வார்டு உறுப்பினர், 260 மாவட்ட வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று தேர…
-
- 0 replies
- 379 views
-
-
தமிழகத்தில் எதிர்வரும் 16-ம் திகதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது April 14, 2019 தமிழகத்தில் எதிர்வரும் 16-ம் திகதி மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் பொதுக்கூட்டம் நடத்தக் கூடாது தமிழகத்தில் எதிர்வரும் 16-ம் திகதி மாலை 6 மணிக்கு மேல், தேர்தல் பிரச்சாரம், பொதுக்கூட்டம், பேரணி நடத்தக் கூடாது என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சா{ஹ அறிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 18-ம் திகதி நடைபெறவுள்ள நிலையில் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பிலே…
-
- 0 replies
- 383 views
-
-
தமிழகத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை ஊரடங்கு நீடிப்பு தமிழகத்தில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமுதாய, கலாசார, அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூட அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதேநேரம், இதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகள் அனைத்தும் அனுமதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 3ஆம் திகதி முதல், 6 தொடக்கம் 12 ஆம் வகுப்பு வரை பாடசாலைகள், அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறையின்றி செயற்படும் எனவும் அறிவிக்கப்பட…
-
- 0 replies
- 305 views
-
-
ஐ.எஸ் அமைப்புக்கு ஆட்களை சேர்த்ததாக கைது செய்யப்பட்டுள்ள முசுருதீன் மற்றும் மனைவி, பிள்ளைகளிடம் நுண்ணறிவுக் காவல்துறையினர் விசாரணை நடாத்தி வருகின்றனர்.மேற்கு வங்காள மாநிலம் மிர்பூம் மாவட்டத்தை சேர்ந்தவர் முசுருதின். இவருக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பதாகக் கூறி நேற்று விஸ்வபாரதி புகையிரதத்தில் வைத்து புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் முசுருதீனிடம் நடாத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாவது, வங்காள மாநிலத்தைச் சேர்ந்த முசுருதீன் 6 வருடங்களாக திருப்பூரில் மளிகைக் கடை நடாத்தி வருவதுடன் ஐஎஸ் அமைப்புக்கு ஆட்களைச் சேர்க்கும் பணியிலும் ஈடுபட்டு வந்தார் என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 6 சிம் அட்டைகள், 2 போலி வாக…
-
- 0 replies
- 519 views
-
-
தமிழகத்தில் ஐ.எஸ்.உடன் தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதிவு! In இந்தியா June 14, 2019 8:51 am GMT 0 Comments 1063 by : Krushnamoorthy Dushanthini ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கோவையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் மூவர் மீது சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் தீவிரவாத செயற்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஏழு இடங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த சோதனை நடவடிக்கைகளின் போது அசாருதீன் என்பவர் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன், அபு…
-
- 0 replies
- 384 views
-
-
சென்னை: தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் 'பிப்பீள் பார் கேட்டில் இன் இந்தியா' என்ற அமைப்பின் செயலாளர் அருண் பிரசன்னா, கடந்த 2015-ல் பொது நல வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் முன் விசாரணைக்கு இன்று (ஆகஸ்ட் 18) வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, தமிழகத்தில் ஒட்டகம் வெட்டத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குத் தாக்கல் செய்த அருண் பிரசன்னா கூறுகையில், "ராஜஸ்தானில் இருந்து ஒட்டகங்கள் தமிழகத்துக்குக் கொண்டு வரப்பட்டு வெட்டப்படுகின்றன. அதைத் தடுக்க போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை எடு…
-
- 2 replies
- 304 views
-
-
தமிழகத்தில் ஒரு மாற்று அணி உருவாகுமா? கடந்த பல மாதங்களாக தமிழகத்தின் தேர்தல் களத்தில் ஒரு மாற்று அணி உருவாகவேண்டுமென்று முயன்ற பலரில் நாங்களும் ஒருவர். ஆனால் இன்று அந்த கனவு கனவாகவே போய்விடுமோ என்கிற நிலைதான் இருக்கிறது. தேசிய கட்சிகள் காங்கிரஸ்-பாஜக-மார்க்சிஸ்ட் போன்றவை, மற்றும் மாநில அளவில் தமிழர்கள் நலனை பின்னுக்குத் தள்ளி மக்களின் வாழ்வுரிமைப் பிரச்சனைகளில் கூட நேர்மையான நிலைப்பாட்டினை எடுக்காத அதிமுக , திமுக, தேமுதிக போன்றவைகள் அல்லாத ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்துதல் அவசியம் என்று பலரும் விரும்பினோம். தேர்தல் பாதை திருடர் பாதை என்று ஒதுக்குவதை காட்டிலும், அதில் செயல்படும் கட்சிகள் மூலமாக தமிழர்களின் வாழ்வுரிமை, சமூக கோரிக்கைகளை பிற தளத்தில் பிரதிபலிப்பது அவசியம…
-
- 4 replies
- 574 views
-
-
தமிழகத்தில் ஒரே நாளில் 60 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 8 ஆயிரத்து 718ஆக அதிகரிப்பு தமிழகத்தில் ஒரே நாளில் 60 குழந்தைகள் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 21 மாவட்டங்களில் புதிதாக நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 8 ஆயிரத்து 718 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. பாதிப்புக்கு ஏற்ப சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை என மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் ஊரடங்கும் அமுலில் உள்ளது. இருந்தபோதிலும் ஊரடங்கில் பல்வேறு கெடுபிடிகள் தளர்த்தப்பட்டுள்ளன. இந்நிலையில், கொரோனா வைரசிஸினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கைய…
-
- 0 replies
- 429 views
-
-
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 12 இடங்களில் அகழாய்வு நடத்த அனுமதி by : Dhackshala http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/01/1610526516134302-720x430.jpg தமிழகத்தில் ஒரே நேரத்தில் 12 இடங்களில் அகழாய்வும் 2 இடங்களில் கள ஆய்வும் நடைபெறவுள்ளதாக தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், தொல்லியல் துறையின் பொற்காலமாக இந்தாண்டு இருக்கும் என்றும் 12 இடங்களில் மத்திய தொல்லியல் ஆலோசனை வாரிய நிலைக் குழு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒரே நேரத்தில் 12 இடங்களில்…
-
- 0 replies
- 576 views
-
-
தமிழகத்தில் கடைகள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி - அரசாணை வெளியீடு Getty ImagesCopyright: Getty Images தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில், குறைந்தபட்சம் 10 பேர் கொண்டு கடைகள், ஆண்டில் அனைத்து நாட்களும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 5ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த அரசாணை, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில், கடைகளுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஊழியர்களுக்கு ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும், இரவு 8…
-
- 0 replies
- 241 views
-
-
தமிழகத்தில் கணிசமான மருத்துவர்கள் தாதியரும் கொரோனாவால் பாதிப்பு! தமிழகத்தில் 8 மருத்துவர்களும், 5 தாதியர்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத் துறையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 8 மருத்துவர்களில் இருவர் மாநில அரசின் மருத்துவர்கள் எனவும் இருவர் ரயில்வே மருத்துவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது. 4 மருத்துவர்களும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றுபவர்கள் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 5 தாதியர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வரவதாக தெரிவிக்கப்படுகின்றது. http://athavannews.com/தமிழகத்தில்-கணிசமான-மருத/
-
- 0 replies
- 438 views
-
-
தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட பழமையான கல்வெட்டுகளை பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?- மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு மதுரை தமிழகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பழமையான கல்வெட்டுகள், படிமங்களைப் பாதுகாக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தெரிவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த இளஞ்செழியன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு: இந்தியாவில் கண்டறியப்படும் தொல்லியல் சின்னங்கள், பழமையான கல்வெட்டுகள், படிமங்கள், தொன்மையான எழுத்துக்களை மத்திய தொல்லியல் துறை பராமரித்து வருகிறது. இதில் அராபிக் மற்றும் பெர்சியன் கலாச்சார சின்னங்கள் …
-
- 1 reply
- 343 views
-
-
டெல்லி: தமிழகத்தில் கருகும் பயிர்களை காக்க 2.44 டிஎம்சி தண்ணீர் போதும் என்று காவிரி டெல்டா பகுதிகளில் ஆய்வு நடத்திய நிபுணர் குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களில் கருகி வரும் பயிர்களை காப்பாற்ற உடனடியாக 9 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது கடந்த திங்கட்கிழமை விசாரணை நடந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தமிழகத்தின் தண்ணீர் தேவை அளவை அறிய நிபுணர் குழுவை அனுப்பி வைக்குமாறு மத்திய நீர்வள கமிஷனுக்கு உத்தரவிட்டது. அதன்படி மத்திய வேளாண்மை துறை துணை ஆணையர் (பயிர்கள்) பிரதீப்குமார் ஷா தலைமையில் மத்திய நீர்வளத்துறை முதன்மை பொறியாளர்கள் மகேந்திரன், ஜேக்கப் ஆகிய 3 பேர் அடங்…
-
- 1 reply
- 759 views
-
-
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உடை கட்டுப்பாடு நேற்று முதல் அமலுக்கு வந்தது. மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாணவ, மாணவிகளிடம் ஆதரவும் எதிர்ப்பும் காணப்படுகிறது. கல்லூரிகளுக்கு வரும் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான உடைகளை அணிந்து வருகின்றனர். டி ஷர்ட், டிராக் ஷூட் ஜிப்பா போன்றவற்றை வகுப்பறைக்கு அணிந்து வருகின்றனர். இதனால் கல்லூரிகளின் கண்ணியத்துக்கு குறைவு ஏற்படுகிறது என்று டி ஷர்ட் மற்றும் ஜீன்சுக்கு தடை விதித்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டது.டி ஷர்ட் அணிந்து வரக்கூடாது. முழுக்கை சட்டை, பேண்ட் அணிந்து வரவேண்டும். மாணவிகள் ஜீன்ஸ், ஸ்லீவ்லெஸ் ஷர்ட் அணியக் கூடாது. சல்வார் கமீஸ் அல்லது சேலை அணிந்துதான் கல்லூரிக்கு வரவேண்டும் என்று உத்தரவில…
-
- 4 replies
- 372 views
-
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது – எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் கூட்டணி அமைச்சரவை கிடையாது என்பதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு எனவும் கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவைக்கு பயணமாகியுள்ளார். இந்த நிலையில், விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தைப் பொருத்தவரை கூட்டணி ஆட்சியை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் அதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் 70 வயது வரை நடித்துவிட்டு…
-
- 0 replies
- 415 views
-
-
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம்! மின்னம்பலம்2022-03-02 திருமணம், இறப்பு நிகழ்வுகளுக்குத் தவிரத் தமிழகத்தில் இதர கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. மூன்றாம் அலை வேகமாகப் பரவி தற்போது ஓய்ந்துள்ளது. தினசரி பாதிப்பு 400க்கும் குறைவாக உள்ளது. இந்நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை நீக்கியுள்ளது தமிழக அரசு. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 15-02-2022-இன்படி, ஒரு சில கட்டுப்பாடுகள் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் உள்துறை அமைச்சக…
-
- 0 replies
- 272 views
-
-
தமிழகத்தில் கொரோனா தொற்றாளர்களுக்கு பிளாஸ்மா சிகிக்சை! கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிக்சை அளிக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் அனுமதி கோரியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பிளாஸ்மா என்பது இரத்தத்தில் உள்ள திரவ மூலக்கூறு ஆகும். இந்நிலையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் பிளாஸ்மாவில் நோய் எதிர்ப்பு அணுக்கள் உருவாகியிருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த எதிர்ப்பு அணுக்களுடனான பிளாஸ்மாவை பாதிக்கப்பட்டவரின் உடலில் செலுத்தும்போது அவர் குணமடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழக அனுமதி கிடைத்த பின்னர் தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை…
-
- 0 replies
- 497 views
-
-
தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 30,000த்தை கடந்தது ARUN SANKAR / Getty தமிழகத்தில் இன்று (ஜூன் 6) புதிதாக 1,458 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30,152-ஆக உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இன்று 19 நபர்கள் இறந்துள்ள நிலையில், இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 251-ஆக உயர்ந்துள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று இறந்த 19 நபர்களில் பெரும்பாலானவர்கள், நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாள்பட்ட வியாதிகளான உயர் ரத்தஅழுத்தம், சிறுநீரக கோளாறு, பல உறுப்புகள் செயலற்ற நிலை, மூச்சுதிணறல் மற…
-
- 0 replies
- 433 views
-