Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தலைவா வா அரசியலுக்கு.. தொண்டர்கள் இருக்கிறோம்! - நம்பி இறங்குவாரா ரஜினி? தமிழகத்தில் இதற்கு முன் எப்போதும் இப்படி ஒரு அரசியல் வெற்றிடம் ஏற்பட்டதில்லை. ஒரு பக்கம் பெரும் ஆளுமையாகத் திகழ்ந்த ஜெயலலிதாவின் மரணம். இன்னொரு பக்கம், திமுக தலைவர் மு கருணாநிதி உடல் நலக் குறைவால் அவ்வளவாக செயல்பட முடியாத நிலையில் இருப்பது. இந்த அரசியல் வெற்றிடத்தை நிரப்ப, இப்போதுள்ள தலைவர்கள் எவருமே தகுதியானவர்களாக, மக்கள் செல்வாக்கு மிக்கவர்களாக இல்லை என்பதுதான் நிதர்சனம். இப்படிப்பட்ட சூழலில், மீண்டும் ரஜினியை தமிழகத்தின் அரசியல் தலைமை ஏற்க அழைக்கத் தொடங்கியுள்ளனர் ரசிகர்கள். தலைநகர் சென்னை மற்றும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அவரை அரசியலுக்கு அழைக்கும் 8 ஷீட் போஸ்டர்கள் பளிச்சிட …

  2. மிஸ்டர் கழுகு: தளபதி Vs தளபதி - கோபபுரம் ஆன கோபாலபுரம்! ‘‘இப்போதெல்லாம் இரண்டு தமிழர்கள் சந்தித்துக்கொண்டால், ‘ரஜினிக்கு ஓட்டுப் போடுவாயா?’ என்றுதான் விவாதித்துக்கொள்கிறார்கள்’’ என்றபடி உள்ளே நுழைந்தார் கழுகார். போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டில் நடந்த சுவாரஸ்யங்கள், நட்சத்திர ஹோட்டலில் பத்திரிகையாளர்களுடன் ரஜினி நடத்திய கலந்துரையாடல், கோபாலபுரத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதியுடனான ரஜினியின் சந்திப்பு என அனைத்தையும் கவர் செய்துவிட்டு வந்திருந்தார் அவர். ‘‘தி.மு.க தலைவர் கருணாநிதியை ரஜினி சந்தித்ததில் என்ன விசேஷம்?’’ என்றோம். ‘‘கருணாநிதியுடனான ரஜினியின் சந்திப்பு, ‘மரியாதை நிமித்தமானது’ என்று சொல்லப்பட்டது. ஆனால், அந்த விவகாரம் பூம…

  3. தளபதி விஜயை இனி வெற்றித் தலைவர் என்று ஒரே குரலுடன் அழைக்க வேண்டும்! தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், விஜய் தலைமையில் சென்னை திருவான்மியூரில் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் மையத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று உள்ளனர். காலை 10 மணி அளவில் கூட்டம் நடைபெறும் மையத்திற்கு வந்த த.வெ.க. தலைவர் விஜய், கொள்கை தலைவர்களின் படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும், மதுபானசா…

  4. ''மதுரை தி.மு.க-வுக்குள் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் மர்ம நாவல் படிப்பதைப் போல விறுவிறுப்பாக இருக்கிறது. கடந்த 6-ம் தேதி கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தலைமைச் செயற்குழு உறுப்பினரான வழக்கறிஞர் கோ.சந்திரசேகரன், பொதுக் குழு உறுப்பினர் எம்.ஏ.பழனிச்சாமி, கொட்டாம்பட்டி சந்தானம், ஆடுதுரை, எஸ்.சுரேந்தர், வரிச்சியூரைச் சேர்ந்த எஸ்.முருகன் ஆகியோர் மீதான நடவடிக்கை, கடந்த 10-ம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது. 'இவர்கள் அனைவரும் தங்கள் செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழகப் பணியாற்ற அனுமதிக்குமாறு தலைவர் கலைஞர் அவர்களிடம் வைத்த கோரிக்கையை ஏற்று அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்துசெய்யப்பட்டு இன்று முதல் தொடர்ந்து கழகப் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்று, அன்பழகன் அ…

    • 0 replies
    • 878 views
  5. நாகர்கோவில் ரயில் நிலைய விரிவாக்கத்துக்கு மாவட்ட நிர்வாகம் போதிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய ரயில் நிலையங்கள் ஆகும். இந்த ரயில் நிலையங்கள் ரயில்வேதுறைக்கு வரும் வருமான அடிப்படையில் தற்போது ஏ கிரேடு ரயில் நிலையமாக உள்ளன. நாகர்கோவில் ரயில் நிலையம் மூலம் ரயில்வேதுறைக்கு 2011-12-ம் நிதி ஆண்டில் 26 கோடி 27 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்தது. http://tamil.oneindia.in/news/2013/09/08/tamilnadu-nagerkovil-railway-station-extension-works-are-stagnant-183011.html

  6. தள்ளாடும் வயது; தளராத உறுதி 110 வயது அண்ணன் 108 வயது தங்கை வேலை செய்து பிழைக்க ஆச்சரியம் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா தெற்கு பட்டம் ஊராட்சி குப்பனாம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி. இவருக்கு 110 வயதாகிறது. தினமும் கூலி வேலைக்கு சென்று வருமானம் ஈட்டி வருகிறார். ஆரோக்கியமாக உள்ளார். அப்பகுதியில் முள்வேலி அமைக்கும் பணி மற்றும் வயல்களில் நாற்று பறிக்கும் பணிகளை செய்கிறார். கண் பார்வை நன்கு உள்ளது. காது சரியாக கேட்பதில்லை. ‘இது நாள் வரை ஆஸ்பத்திரிக்கு போனதில்ல.. ஊசி போட்டதில்ல.. மருந்து, மாத்திரை சாப்பிட்டதில்லேஎன்கிறார் பொக்கை சிரிப்புடன். இவரது மனைவி ஆச்சியம்மாள் (85), மகன் சவுந்தரராஜன். இவருக்கு திருமணமாகி விட்டது. மன…

  7. தள்ளாத வயதிலும் தனி ஈழம் கோரி வைகோ தாயார் உண்ணாவிரதம் Posted by: Mayura Akilan Published: Friday, March 22, 2013, 10:41 [iST] நெல்லை: தனி ஈழம் கோரியும், கொலைகார ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றவேண்டும் என்பதை வலியுறுத்தியும் வைகோவின் சொந்த ஊரான கலிங்கபட்டியில் அவரது தாயார் மாரியம்மாள் வையாபுரி (வயது 91) உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார். இனப்படுகொலை செய்த ராஜபக்சேவுக்கு தண்டனை, தனி ஈழத்திற்கு பொது வாக்கெடுப்பு என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்காங்கே உண்ணாவிரதம், சாலை மறியல் தீவிரமடைந்துள்ள நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள், இன்று ஆயிரக்கணக்கானோருடன் கலிங்கப்பட்டியில் உண…

  8. தள்ளிப் போகும் பேரறிவாளன் திருமணம்? கண்ணீர் மல்கப் பேசிய அற்புதம் அம்மாள் தமிழ்நாட்டில் அற்புதம் அம்மாள் என்றால் தெரியாதவர்கள் இல்லை. அவரது மகனைச் சிறையிலிருந்து மீட்பதற்காக 31 வருடங்கள் சட்டப் போராட்டத்தைச் சலிக்காமல் நடத்தியவர். எந்தக் கட்டத்திலும் சோர்ந்து போகாமல் இறுதிவரை உறுதியாக நின்று தனது மகனைச் சட்டத்தின் மூலம் விடுதலை பெற்றுத் தந்தவர். பேரறிவாளன் 1991 ஆம் ஆண்டு கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்குத் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், தனது மகன் ஒரு அப்பாவி. விசாரணை என்று அழைத்துப் போன காவல்துறை, அவனை ராஜீவ் கொலை வழக்கில் சிக்க வைத்துவிட்டது என்று கூறி, இடைவிடாமல் போராடி வந்தார் அற்புதம். அதன்பின்னர் இவரது தூக்குத்தண்டனை 20…

  9. தள்ளுபடி? சுப்ரீம் கோர்ட்டில் சசி தாக்கல் செய்த மறு ஆய்வு மனு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, சசிகலா, தனக்கு விதிக்கப்பட்டுள்ள தண்ட னையை மறு ஆய்வு செய்யும் படி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனு, தள்ளுபடி ஆகும் என கூறப்படுகிறது. ஏனெனில், தீர்ப்பில் எந்த குறையும் இல்லை என்பதால், மனுவை நீதிபதிகள் விசாரிக்க வாய்ப்பு இல்லை என, சட்ட வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த விவகாரத்தில், 27ம் தேதிக்குள் முடிவு தெரியும் என, அவர்கள் நம்புகின்றனர். சொத்து குவிப்பு மேல் முறையீட்டு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, நான்கு ஆண்டு சிறை தண்டனை, தலா, 10 கோடி ரூபாய் அபராதத்தை உறுதி …

  10. தழிழகத்தின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலராக உயரும் – ஸ்டாலின் நம்பிக்கை புதிய தொழில் முதலீடுகள், அமைச்சர்கள் மீதான அமுலாக்கத் துறை நடவடிக்கை, அரசியல் சூழல் குறித்து தழிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இடம்பெற்று வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டொலராக உயர்த்துவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முதலமைச்சர் இதன்போது தெரவித்துள்ளார். இதன் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் இடம்பெறவுள்ளதாகவும் அவர் கு…

  11. தவறான நட்பால் வீழ்ந்த ஆலமரம் ஜெயலலிதா! ஜெயலலிதா... இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு பெயர். திரைப்பட நடிகையாகத் தொடங்கிய இவரது வாழ்க்கை, அரசியலுக்குள் நுழைந்ததும் பல அதிர்ச்சியான திருப்பங்களுடன் நகர்ந்தது. அ.தி.மு.கட்சியின் தலைவர் எம்.ஜி.ஆரின் நம்பிக்கைக்குப் பாத்திரமாக விளங்கியதையே தனது பலமாக மாற்றிக்கொண்டார். கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக தமிழகம் முழுவதும் பயணித்தார். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, தமிழக முதல்வரானார். ஆனால், அவரின் வாழ்க்கை முடிவு இனிமையாக இல்லை. இறப்புக்குப் பிறகு அவரைக் குற்றவாளியாக நீதிமன்றம் கூறிவிட்டது. வரலாற்றில் இருந்து நீங்காத கறையாக இது அமைந்துவிட்டது. பணம், புகழ் ஆகியவற்றைக் கொண்டிருந்த ஜெயலலிதாவை இந்த இடத்துக…

  12. தவறான மருந்தால் ஜெ., மரணம்: பி.எச்.பாண்டியன் சென்னை: முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறுகையில், *தவறான மருந்தை கொடுத்ததால் தான் ஜெ., மரணம் அடைந்தார் என சசிகலா உறவினரான டாக்டர் சிவக்குமார் கூறியதாக டிவியில் செய்தி வெளியாகியுள்ளது. *பன்னீர்செல்வத்தை நாம் தான் பாதுகாக்க வேண்டும். இதற்காக நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார். http://www.dinamalar.com/news_detail.asp?id=1706949 சசிகலா மீது எப்.ஐ.ஆர்.,: பி.எச். பாண்டியன் சென்னை: பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் கூறியதாவது: *எங்களையும், பன்னீர்செல்வத்தையும், எம்.எல்.ஏ.,க்களையும். நல்லாட்சியையும் தொந்தரவு செய்யக்கூடாது. *இதை தடு…

  13. தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்பேன்: ட்விட்டரில் விஜயகாந்த் தில்! சென்னை:'தவறு எங்கு நடந்தாலும் தட்டிக் கேட்பது என் பழக்கம்.சினிமாவில் மட்டுமல்ல, நேரிலும்.' என்று ட்விட்டர் வலைத்தளத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பதிவிட்டுள்ளார். பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரில் விஜயகாந்த் தனது ஃபாலோயர்ஸூடன் உரையாடினார்.தமிழகம் முழுக்க தேமுதிக-தமாகா-மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களுக்கு பல கட்டமாக வாக்குச் சேகரித்து வரும் விஜயகாந்த், முதல்முறையாக ட்விட்டரில் பிரசாரம் மேற்கொண்டார். இதற்கு ட்விட்டர் பக்கத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தின் அரசியல் கட்சித் தலைவர்களில் விஜயகாந்த் மட்டுமே ட்விட்டர் பிரசாரம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்ததக்கது. இதற்கெ…

  14. முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் கடுமையான குடிநீர் பற்றாக்குறையில் சிக்கித்தவிக்கிறது சென்னை நகரம். சுமார் 85 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட இந்த நகரத்திற்கு குடிநீர் எங்கிருந்து கிடைக்கிறது? நெருக்கமான நகரம் …

  15. ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ எந்தக் கூட்டணியில் இருக்கிறாரோ, அந்தக் கூட்டணி வெற்றிபெறாது என்கிற பார்வை தமிழக அரசியல் களத்தில் ஒரு சாராரிடம் உண்டு. பல தேர்தல்களில் வைகோ இடம்பெற்ற கூட்டணிகள், தோல்வியையே தழுவியுள்ளன. அதனால், வைகோ சேரும் கூட்டணி வெற்றிபெறாது என்கிற சென்டிமென்ட் பொதுவாக உண்டு. `வைகோ சென்டிமென்ட்’ என்று சொல்லி, மாற்றுக்கட்சிகளின் மேடைகளிலும், சமூகவலைதளங்களிலும் வைகோவைக் கிண்டல் செய்யும் நிலையும் இருந்துவந்தது. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, ம.தி.மு.க., சி.பி.எம்., சி.பி.ஐ., வி.சி.க ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் நலக்கூட்டணி என்கிற ஓர் அணியை அமைத்தனர். அதில் தே.மு.தி.க-வையும் த.மா.கா-வையும் கொண்டுவருவதில் வைகோ பெரும் பங்க…

  16. சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என இந்திய தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கரூரில் தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 41 பேர் பலியாகியுள்ளனர். அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு பெண்கள், குழந்தைகள் என கூட்டம் கூட்டுவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதை தடை செய்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிதிகளை மீறும் அரசியல் கட்சிகள…

  17. டிஜிட்டல் திண்ணை: ‘தனி உலகத்தில்’ விஜய்.. ரத்த களறியாகும் தவெக உட்கட்சி மோதல்.. ஆதவ் எடுக்க போகும் அதிரடி முடிவு? Published On: 22 Oct 2025, 6:32 PM | By Minnambalam Desk வைஃபை ஆன் செய்ததும் ‘ஆடிய ஆட்டம் என்ன? தேடிய செல்வம் என்ன?’ பாட்டுதான் போடலை போல என சொல்லியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப். என்னப்பா ரொம்பவே சோகமா ஆரம்பிக்கிறீரே.. நமக்கு என்னப்பா சோகம் இருக்கு.. கட்சிகளில் நடக்கிறதை சொல்றோம்யா.. எந்த கட்சியோட நிலைமை இப்படியாம்? எல்லாம் விஜய் தவெகவில்தான்.. கரூர் சம்பவத்துக்குப் பின் விஜய் கட்சியில் சோ கால்ட் 2-ம் கட்ட ‘தலைகள்’ மாறி மாறி குறை சொல்றதும்.. சோசியல் மீடியாவில் ஆட்களை வைத்து அட்டாக் செய்வதும்னு ஒரே ரத்த களறியாகிட்டு இருக்கு.. தவெகவில் அப்படி யார் யாரு…

  18. தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்னென்ன? – முழு விவரம்! 4 Jul 2025, 4:17 PM தமிழக வெற்றிக் கழக மாநிலச் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில், சென்னை பனையூரில் இன்று (ஜூலை 4) நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு ஆதரவு காவல் நிலைய மரணங்களை தடுக்க தவறிய திமுக அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் 1. பரந்தூர் விவசாயிகளின் போராட்டத்தைக் கண்டுகொள்ளாத தமிழக அரசுக்குக் கடும் கண்டனம்: வாழ்வாதாரங்களாக விளங்கும் விவசாய நிலங்கள், மக்கள் வாழும் வீடுகள், இயற்கை நீர்நிலைகளை அழித்து உருவாக்கப்படும் பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருடக் கணக்கில் போராடும் விவசாயிகளின் கோரிக்…

  19. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக்கழக மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலில் செப்டம்பர் மாதமே மாநாடு நடைபெறும் எனக் கூறப்பட்ட நிலையில், மாநாடு தள்ளிப்போனது. தற்போது புதிய திகதியை தவெக தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது. கழகக் கொடியேற்று விழாவின்போது. நமது முதல் மாநில மாநாட்டுத் திகதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம். நமது மக்களின் பெரும் எதிர்ப…

  20. தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..? தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து, தீவிர களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் 2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது. இதற்காக மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி பகுதியில் 506 ஏக்கர் பரப்பளவில் இடம் தே…

  21. தவெகவில் இணைந்த செங்கோட்டையன்; சால்வை அணிவித்து வரவேற்ற விஜய் - என்ன நடக்கிறது? பட மூலாதாரம், TVK 27 நவம்பர் 2025, 05:07 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜயின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை நேற்று (நவ. 26) அவர் ராஜினாமா செய்த நிலையில், இன்று தவெகவில் இணைந்துள்ளார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று குரல் எழுப்பிய செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். இன்று தவெக கட்சி அலுவலகத்துக்கு சென்றார். …

  22. தவெகவில் புதிய நிர்வாகக் குழு அறிவித்த கையுடன் விஜய் அதிரடி உத்தரவு! 28 Oct 2025, 8:18 PM தவெக பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதிய நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பனையூரில் நாளை (அக்டோபர் 28) நிர்வாக குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நடவடிக்கைகள் கடந்த ஒரு மாதமாக முற்றிலும் முடங்கின. இதனால் தவெக தொண்டர்கள் மட்டுமின்றி தவெக நிர்வாகிகளும் சரியான வழிகாட்டுதல்கள் இன்றி குழம்பி இருந்தனர். இந்த நிலையில் நேற்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை மாமல்லபுரம் வரவழைத்து சந்தித்த தவெக தலைவர் விஜய், அவர்களுக்கு ஆறுதல் அளித்ததோடு, அனைத்துவிதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் வாக்…

  23. சென்னை: திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் கொலை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. திமுக முன்னாள் அமைச்சர் தா. கிருஷ்ணன் கடந்த 2003ம் ஆண்டு மே மாதம் 20ம் தேதி மதுரை கேகே நகரில் உள்ள அவரது வீட்டுக்கு அருகே அதிகாலை நேரத்தில் நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு வந்தபோது கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் முக அழகிரி, முன்னாள் துணை மேயர் மன்னன், திமுக செயற்குழு உறுப்பினர் எஸ்ஸார். கோபி, திமுக நிர்வாகிகள் முபாரக் மந்திரி, கராத்தே சிவா உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர். மு.க. அழகிரி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். ஆனால் மதுரை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத…

  24. முரளிதரன் காசிவிஸ்வநாதன், மு.நியாஸ் அகமது பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images சென்னைக்கு குடிநீ…

  25. சென்னை அம்பத்தூரை அடுத்த பட்டரவாக்கம் சாலையிலுள்ள தனியார் தொழிற்சாலையில் வடமாநிலத் தொழிலாளர்கள் பணிபுரிந்துவருகின்றனர். இந்த நிலையில், தொழிற்சாலையில் ஆயுத பூஜை கொண்டாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் ஒன்று கூடினர். அதில் பலர் மது அருந்தியிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், அந்தக் கூட்டத்தில் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது. இதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். தகவலறிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை காவலர்கள் நேரில் சென்று மோதலைத் தடுக்க முயன்றனர். கைதுசெய்யப்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் அப்போது வடமாநிலத் தொழிலாளர்கள் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.