Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நாவின் மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தில் மாற்றம் கொண்டு வர இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவு வாபஸ் பெறப்படும் என்று கலைஞர் அறிக்கை விடுத்தார். இந்த நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த இன்னும் காலஅவகாசம் உள்ளது. இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை. திமுக எங்களுடன் கூட்டணியில் உள்ளனர். அவர்களுடன் இதுதொடர்பாக பேசுவோம் என்றார். இதனையடுத்து மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து கலைஞரிடம்…

    • 0 replies
    • 436 views
  2. '50 ஆண்டுகளில் மாயமான திராவிட லட்சியங்கள்' சா. பீட்டர் அல்போன்ஸ்மூத்த காங்கிரஸ் தலைவர் திராவிட இயக்கம் புறம் தந்த, சமகால அரசியல் கட்சிகளின் அசலான வடிவங்களையும் கடந்த காலத்தின் வரலாற்றில் புதைந்துபோன அதன் உருவகங்களையும் உள்வாங்கி ஒப்பிட்டுப் பார்க்கும் நேரம் இது. இன்றைய இந்தியாவின் பொருளாதார அரசியல் சமூக பரிணாமங்களைச் செதுக்கிய பெருமை நான்கு இயக்கங்களுக்கு உண்டு. தேசிய இயக்கம், பொதுவுடமை இயக்கம், சோஷலிஸ்ட் இயக்கம் மற்றும் திராவிட இயக்கம் என்ற இந்த நான்கு இயக்கங்கள்தான் சமகால இந்தியாவின் அரசியல் கட்சிகள் அனைத்துக்கும் தந்தையும் தாயுமாக இருந்தவை. பொதுவுடமைவாதிகள், சோஷலிஸ்டுகள்…

  3. 15 JUN, 2024 | 03:57 PM 'அரசாங்க பாடசாலைகளிலும், அரசாங்கத்தின் அனுசரணையுடன் இயங்கும் பாடசாலைகளிலும் படித்து உயர்கல்வி கற்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் 'தமிழ் புதல்வன்' எனும் திட்டம், எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படும்'' என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.‌ மாநில கல்வித் துறை சார்பில் ஐம்பெரும் விழா சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பங்கு பற்றினார். அந்த விழாவில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் பேசியதாவது, '' காலை உணவு, இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன், எண்ணும் எழுத்தும் .. என பள்ளி கல்வித்துறையில் ஏராளமான தி…

  4. என்னை எதிர்ப்பது யாருயா? விழிபிதுங்கி நிற்கும் அ.தி.மு.க எம்.எல்.ஏ. சசிகலா ஆதரவாளரும் அரசு கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் போகும் இடமெல்லாம், அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டியும், அவரது கொடும்பாவியை எரித்தும் போராட்டம் நடக்கிறது. தன்னை எதிர்ப்பது தீபா ஆதரவாளர்களா, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களா, பொது மக்களா என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார், கொறடா. எம்.எல்.ஏ-க்கள், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து, எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களித்ததால், மக்கள் கடும் கோபத்தில் இருந்துவருகிறார்கள். அதன் வெளிப்பாடாகத் தொகுதிகளுக்கு வரும் எம்.எல்.ஏ-க்களை மக்கள் சிறைப்பிடிப்பது, கறுப்புக்கொடி காட்டி முற்றுகையிடுவது எனப் பல விதத்தில் பல நெருக்கடிகளைச் சந்தித்துவருகிற…

  5. தர்மபுரி… பாமகவின் வெற்றி மாங்கனி நழுவியது எப்படி? AaraJun 06, 2024 20:14PM நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் நாற்பது தொகுதிகளிலும் திமுக கூட்டணி முழுமையான வெற்றியை பெற்றுவிட்டது. ஆனால் வாக்கு எண்ணிக்கை ஆரம்பித்த சில மணி நேரங்களில் தர்மபுரி தொகுதி கொடுத்த சர்ப்ரைஸை பாமகவினரும், திமுகவினரும் இன்னமும் மறக்கவில்லை. தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்றிருந்தால் தற்போதைய மோடியின் கூட்டணி ஆட்சி அமைச்சரவையில் தமிழ்நாட்டில் இருந்து அமைச்சராகும் வாய்ப்பு செளமியா அன்புமணிக்கு நிச்சயம் இருந்திருக்கும். ஆனால், குறைந்த வித்தியாசத்தில் வெற்றியை பறிகொடுத்த விரக்தியில் இருக்கிறார்கள் பாமகவினர். தர்மபுரி தொகுதியில் திமுக வேட்பாளர…

    • 1 reply
    • 436 views
  6. போயஸ் கார்டனை இளவரசிக்கு எழுதி வைத்து விட்டார் ஜெ... திடீர் தகவலால் பரபரப்பு! போயஸ் கார்டன் இல்லத்தை இளவரசிக்கு ஜெயலலிதா எழுதி வைத்து விட்டதாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த, அவருக்குச் சொந்தமான போயஸ் கார்டன் வீட்டை, சசிகலாவின் அண்ணன் மனைவி இளவரசிக்கு உயில் எழுதி வைத்து விட்டதாக அவரது தரப்பு கூறுவதாக நியூஸ் 18 தொலைக்காட்சியின் செய்தி தெரிவிக்கிறது. கோடானு கோடி அதிமுக தொண்டர்களை அதிர வைப்பதாக உள்ளது இந்த செய்தி. தமிழக மக்களுக்கும் பெரும் அதிர்ச்சி தருவதாக இந்த செய்தி வந்துள்ளது. VIDEO …

  7. கடலூரில் சீமான் தலைமையில் நடந்த கூட்டத்தில் போலீசாருக்கும் நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கும் இடையே தள்ளு- முள்ளு ஏற்பட்டது. கடலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கும் இன எழுச்சி கருத்தரங்கம், பேரணி-பொதுக்கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பேரணி நடத்த சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. பொதுக்கூட்டம் நடத்த சில நிபந்தனைகளை விதித்தது. இந்த நிலையில் நேற்று காலை கடலூர் டி.வி.எம். திருமண மண்டபத்தில் கருத்தரங்கு நடந்தது. இதில் கலந்து கொண்ட சீமான் அதே இடத்திலேயே திட்டமிட்டபடி இரவு 10 மணி வரை பொதுக்கூட்டம் நடக்கும் என்று கூறினார். ஆனால் கூட்டத்தை விரைந்து முடித்துவிட வேண்டும் என்று போலீசார் கூறினார்கள். அதையடுத்து …

    • 0 replies
    • 436 views
  8. சசி குடும்பம் மிரட்டல்: அமைச்சர்கள் கலக்கம் வருமான வரித்துறை சோதனையை தொடர்ந்து, சசிகலா குடும்பத்தினர் விடுத்த மிரட்டல், முதல்வர் மற்றும் அமைச்சர்களிடம், கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெ., முதல்வராக இருந்த போது, சசிகலா குடும்பத்தினர், மிகப்பெரிய அதிகார மையமாக செயல்பட்டனர். அவர்களின் ஆதரவாளர் களுக்கே, தேர்தலில், 'சீட்' வழங்கப்பட்டது. அமைச்சர்கள், அதிகாரிகள் என, அனைவரை யும் மிரட்டி, காரியம் சாதித்து வந்தனர். அமைச்சர்களும், அவ்வப்போது கப்பம் கட்டி வந்தனர். இவை அனைத்தும், ஜெ.,க்கு தெரிந்தே நடந்தது. ஆட்சி அதிகாரத்தில், நேரடியாக பங்கு வகிக்காத நிலையில், அமைச்சர்கள் வழியே வந்த பணத்தில், சசிகலா குடும்பத…

  9. ஈழதமிழர்களுக்கு ஆதரவாக, வரும் 18ம் தேதி ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக, தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழு அறிவித்துள்ளது.கடந்த ஒரு வாரமாக, தமிழகத்தில் மாணவர்கள் போராட்டம் சூடு பிடித்து வருகிறது. இந்நிலையில், மாநில அளவில் கல்லூரி மாணவர்களை இணைந்து, தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழுவை உருவாக்கியுள்ளனர். இக்குழுவின், ஒருங்கிணைப்பாளரும், சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவியுமான திவ்யா கூறியதாவது: தமிழகம் முழுவதும் உள்ள மருத்துவம், பொறியியல், சட்டம், கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் இணைந்து, தமிழீழத்திற்கான மாணவர் போராட்ட குழுவை அமைந்துள்ளோம். இக்குழுவில், 19 மாவட்டங்களை சேர்ந்த, 50 கல்லூரிகள் இணைந்துள்ளனர். 31 மாவட்டங்களை சேர்ந்த மாணவர்களும் போராட்டத்தில் ஒன்றி…

  10. ஜெயலலிதாவையே எச்சரித்த விருதுநகர் புள்ளி... சசிகலாவுக்கு எதிராக வாக்குமூலம் அளிப்பாரா!? #VikatanExclusive ஜெயலலிதா மரணத்தில் சசிகலா, தினகரனைச் சிக்கவைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தரப்பினர் மாஸ்டர் பிளான் ஒன்றை போட்டுள்ளனர். அது, சசிகலா குடும்பத்தினருக்குச் சிக்கலை ஏற்படுத்தும் என்று சொல்கின்றன உள்விவர வட்டாரங்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தினகரனுக்கும் இடையே நடந்துவரும் மோதல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் வியூகத்தால் நிலைகுலைந்துள்ளனர் தினகரன் ஆதரவாளர்கள். குறிப்பாகத் தற்காலிகப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட சசிகலாவை நீக்கியதும், 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதும் தினகரன் ஆத…

  11. ஐ.பி.எல். கிரிக்கெட் ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டம் தொடர்பாக டெல்லி போலீசார் நேற்று மேலும் 3 பேரை கைது செய்தனர். அவர்களில் அஜித் சண்டிலாவுடன் நெருங்கிய தொடர்புள்ள மணிஷ் குதேவாவும் ஒருவர். மணிஷ் குதேவா, 2003-2005ல் ரஞ்சி கிரிக்கெட் அணிக்காக விளையாடியவர். நாக்பூரை சேர்ந்த சுனில் பாட்டியா, கிரண்டோலே ஆகிய தரகர்களும் இவர்களுடன் கைதாகினர். அஜித் சண்டிலா ஒரே நேரத்தில் 4 தரகர்களுடன் தொடர்பு வைத்திருந்ததாக டெல்லி போலீசார் கூறினர். சூதாட்ட தரகர்களுடன் ஐ.பி.எல். வீரர்கள் நடத்திய சுமார் 100 மணிநேர செல்போன் உரையாடல்களை இடைமறித்து ஒட்டு கேட்டதன் மூலமாக இவ்விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததாகவும் போலீசார் கூறினர். மேலும், மும்பை, சண்டிகர், கொல்கத்தா, ஐதராபாத் போன்ற நகரங்களில் உள்ள ஓட்டல்களில…

    • 0 replies
    • 436 views
  12. மீண்டும் முதல்வர் பதவி: 'நிதானம்' காட்டுகிறாரா ஜெயலலிதா? கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி, ஜெயலலிதாவை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து முற்றிலுமாக விடுவித்து தீர்ப்பளித்திருக்கிறார். ஆனாலும், மீண்டும் தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொள்வதற்கு ஜெயலலிதா அவசரம் காட்டவில்லை. தீர்ப்பு வெளியாகி 3 நாட்கள் ஆகியும் அமைச்சரவை ராஜினாமா, எம்எல்ஏக்கள் கூட்டம் என எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. ஜெயலலிதா எப்போது பதவியேற்பார் என்று தெரியாததால் ஆளுக்கொரு தேதியை பரப்பி வருகின்றனர். தீர்ப்பு வெளியான நாளில் அதிமுகவைச் சேர்ந்த 151 எம்எல்ஏக்களும் சென்னைக்கு வந்துவிட்டனர். கூட்டத்துக்கான அழைப்பு எப்போது வருமோ என்று அவர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் கட்சி மேலிட…

  13. விருதுநகர்: தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. அரசியல் கட்சிகளுக்கு மாற்று அரசியலின் நுழைவு வாயிலாக ம.தி.மு.க. திகழும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். ம.தி.மு.க.வின் மாநில மாநாடு செப்டம்பர் 15 ஆம் தேதி விருதுநகரில் நடக்கிறது. மாநாட்டுக்காக, விருதுநகரில் இருந்து சாத்தூர் செல்லும் ரோட்டில் சூலக்கரை அருகே 25 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு பந்தல் அமைக்கும் பணி இன்று தொடங்கியது. விருதுநகர் மாநாடு மாநாட்டு பந்தலுக்கான பந்தக்கால் நடும்விழா இன்று ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தலைமையில் நடந்தது. அப்போது, நிருபர்களிடம் பேசிய வைகோ, ‘‘தமிழகத்தில் முல்லை பெரியாறு அணை பிரச்னை உள்பட தமிழக மக்களின் நலனுக்காக ம.தி.மு.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. விருதுநகரில் நடக்…

    • 1 reply
    • 436 views
  14. தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு.. December 24, 2018 தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுல்தான்பேட்டை, பல்லடத்தில் இன்று 8-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் தொடர்கின்றது தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த 17-ம் திகதி முதல் கோவை, திருப்பூர், திண்டுக்கல் விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். விவசாயிகள் தூக்கு போட்டு போராட்டம், ஒப்பாரி போராட்டம், கருப்பு துணி கட்டி போராட்டம் என்று தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி…

  15. 18 வயதில் 13 மொழிகள்: போஜ்புரியில் பேசி காணாமல் போனவரை கண்டறிய உதவிய மாணவி பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 16 ஜூலை 2022 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 18 வயதில் 13 மொழிகள் கற்ற சென்னை கல்லூரி மாணவி ஒருவர், திருப்பூரில் காணாமல் போன வடமாநில இளைஞரை கண்டறிய போஜ்புரி மொழியில் பேசி, ரயில்வே காவல்துறைக்கு உதவி, அவரது குடும்பத்துடன் சேர்த்து வைத்துள்ளார். பிறப்பால் கேரளாவைச் சேர்ந்த ஆர்த்ரா, தனது தாயாரின் பணி இடமாற்றம் காரணமாக இந்தியாவில் வடகிழக்கு மாநிலங்கள் உள்பட பல மாநிலங்களில் பேசும் மொழிகளை கற்கும் வாய்ப்பை பெற்றிருந்தார். சிறு வயதில் இருந்த…

  16. படக்குறிப்பு,தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடைக்கும் வீராணம் ஏரி. கட்டுரை தகவல் எழுதியவர், க.மாயகிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 16 மே 2024 சோழ இளவரசர் ராஜாதித்தனால் 1100 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான வீராணம் ஏரி மழைக்காலத்தில் கடல் போல காட்சியளிக்கும். கோடைக்காலத்தில் அவ்வளவு வனப்பாக இல்லையென்றாலும், ஓரளவுக்கு நீர் இருப்பு காணப்படும். ஆனால், இந்த ஆண்டு அந்தப் பிரமாண்ட ஏரி முற்றிலும் வறண்டு காட்சியளிக்கிறது. இந்த ஏரி தமிழ்நாடின் கலாசாரத்திலும் முக்கியமான இடத்தைக் கொண்டுள்ளது. விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்காகப் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்த வீராணம் ஏரி, தற்போது வறண்டு காண…

  17. விளம்பரத்தில் கோக் குடிக்கச் சொன்னதும், திரைப்படத்தில் கோக்கைச் சாடியதும் நடிப்பு என்று விஜய்க்கு நன்றாகத் தெரியும். திரைப்படத்தில் ஒரு காதலுக்காகவோ, மனைவிக்காகவோ உருகுவதும், வாழ்வதும் நடிப்பு என்றும், நிஜத்தில் ஒன்று போனால் இன்னொன்று என்று தன் சொந்த வாழ்க்கையை வெளிப்படையாக வாழும் தெளிவும் கமலுக்கு உண்டு. படத்தில் நூறு பேர் வந்தாலும், ஒற்றை 'பாட்சா'வின் பெயரில் நடு நடுங்க வைத்து, நிஜத்தில் தன் திரைப்படம் வரும் நேரம் தன் அரசியல் கொள்கைகளை மாறி மாறி அமைத்துக்கொள்ளும் தெளிவும் ரஜினிக்குப் புரியும். நடிகர்களோ, நடிகைகளோ அவர்கள் தொழிலில் கவனமாக இருக்கிறார்கள், ரசிகர்கள் நடிப்பை ரசித்து விமர்சித்துப் போகும்வரை எந்தக் குழப்பமும் இல்லை. நடிகர்கள் நடிகைகள் தங்கள் ரசிகர்களைக் கு…

  18. ஸ்டாலின் மீது பல பாலியல் புகார்கள் உள்ளன.. அமைச்சர் பாண்டியராஜன் பகீர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட முன்னணி திமுக தலைவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். இப்போது பாலியல் குற்றச்சாட்டுகள் சொல்லும் காலம் போலும்! மீ டூ விவகாரம் கடந்த ஒரு மாத காலமாகவே பரபரப்பாக போய்க் கொண்டிருகிறது. தமிழகத்தில் சின்மயி வைரமுத்து மேல் பாலியல் குற்றச்சாட்டை சொல்லி இதனை ஆரம்பித்து வைக்க, ஒவ்வொருவராக களம் இறங்கி புகார்களை பதிய ஆரம்பித்து விட்டார்கள்.மீடூதான் இப்படி காலில் சக்கரம் கட்டி சுழன்று வருகிறது என்றால் அதிமுக அமைச்சரின் பாலியல் சம்பந்தமான புகாரை டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் கொளுத்தி போட அ…

  19. பெரியார் அவமதிப்பு : நாம் தமிழர் நிர்வாகி சிறையில் அடைப்பு! Feb 4, 2025 பெரியார் சிலை மீது காலணி வீசியதை அடுத்து கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா நினைவு தினம் நேற்று மாநிலம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. சென்னை ஜாபர்கான் பேட்டையில் நடந்த நினைவு தின நிகழ்ச்சியில் அண்ணா மற்றும் பெரியார் சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது மேடையேறிய சென்னை நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடை பிரிவு செயலாளரான அஜய் (வயது 32), பெரியார் சிலை மீது காலணி வீசினார். இதனைக்கண்டு கொந்தளித்த திமுக மற்றும் பெரியார் அமைப்பினர் அஜயை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் சீமானுக்…

  20. ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: மேல்முறையீட்டு வழக்கின் ஆவணங்கள் பெங்களூரு ஹைகோர்ட்டில் தாக்கல் சென்னை: ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் மேல்முறையீடு வழக்கின் ஆவணங்கள் இன்று பெங்களூரு ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. 18 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவிற்கு நான்கு ஆண்டுகள் சிறையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப் பட்டது. இந்த வழக்கில் ஜெயலலிதாவிற்கு கர்நாடக ஹைகோர்ட் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில், உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது இந்த வழக்கின் மேல்முறையீட்டு ஆவணங்களை 3 மாதத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என ஜெயலலிதா தரப்பு வக்கீல்களுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். ஜ…

  21. சேலம்: இசைப்பிரியா 2008ஆம் ஆண்டே படுகொலை செய்யப்பட்டதற்கு தற்போது கண்டனம் தெரிவித்துள்ள மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், இவ்வளவு நாளும் கோமாவில் இருந்தாரா? என்று ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை, இன்று காலை ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் பேசியதாவது: இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான அமைப்புகள் மீது இதுபோன்ற அடக்கு முறைகள் தொடருமானால் ஒட்டு மொத்த தமிழர்களின் ஆதரவை இழக்க நேரிடும். காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக…

  22. இலவச அறிவிப்புகள் : அயர்லாந்து பத்திரிகை விமர்சனம் டப்ளின்: தமிழக சட்டசபை தேர்தலில் அரசியல் கட்சிகள் அறிவித்துள்ள இலவச திட்டங்களை அயர்லாந்து பத்திரிகை ( தி ஐரிஷ் டைம்ஸ்) கடுமையாக விமர்சித்துள்ளது. குறிப்பாக அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை உலக அனைத்து வாக்குறுதிகளுக்கும் தாயாக திகழ்கிறது என்று விமர்சித்துள்ளது. மேலும் தங்கம், இலவச செல்போன், இருசக்கர வாகனத்திற்கு மானியம், என அதிமுக வாரி இறைத்துள்ளது. இந்த திட்டங்கள் போல் அயர்லாந்தில் யாராவது பார்க்க முடியுமா என்றும் கிண்டலடித்துள்ளது. http://www.dinamalar.com/news_detail.asp?id=1521500

  23. டெல்லியில் நடைபெற்ற திட்டக்குழு கூட்டத்தில் தமிழக முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டார். அப்போது, தமிழகத்திற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திட்டக்குழு துணைத் தலைவர் அலுவாலியாவிடம் கேட்டுக்கொண்டார். இந்த சந்திப்புக்குப் பிறகு நிருபர்களை சந்தித்த முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:- 2013-14 நிதியாண்டில் தமிழகத்திற்கு ரூ.37 ஆயிரத்து 128 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. 37 ஆயிரம் கோடி திட்ட இலக்கை கடந்து தமிழகம் சாதனை படைக்கும். பா.ஜனதா கட்சியின் பொறுப்புகளில் இருந்து அத்வானி விலகியது உட்கட்சி விவகாரம். அதுபற்றி கூற முடியாது. வரும் பாராளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்துப் போட்டியிடும். பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதே எங…

    • 0 replies
    • 435 views
  24. தமிழ் ஈழம் அமைந்தாக வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது- பிரதமர் மோடிக்கு, வைகோ கடிதம் 63 Views தெற்கு ஆசியாவில், இந்தியப் பெருங்கடலில், இந்தியாவின் ஆளுமையை நிலைநிறுத்துவதற்கு, தமிழ் ஈழம் அமைந்தாக வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கின்றது என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் சீனச் சார்பு மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத் தீர்மானம், தமிழ் ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு குறித்து பிரதமர் மோடிக்கு வைகோ எழுதிய கடிதத்தில், “தெற்கு ஆசியாவில், இந்தியப் பெருங்கடலில், இந்தியாவின் ஆளுமையை நிலைநிறுத்துவதற்கு, தமிழ் ஈழம் அமைந்தாக வேண்டிய தேவை ஏற்பட்டு இருக்கின்றது. அ…

  25. திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநிலங்களவைத் தேர்தலில் கனிமொழிக்கு காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஆதரவு கேட்டுப் பெறப்பட்டதால், இலங்கைப் பிரச்சினையை தி.மு.க. மறந்து விட்டதாக சிலர் சொல்கின்றனர். கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும், தே.மு.தி.க., மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளிடமும், பின்னர் காங்கிரஸ் கட்சியிடமும் ஆதரவு கேட்டது உண்மைதான். இதில் எந்தக் கட்சியிடமும் எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் மாநிலங்களவைத் தேர்தலையொட்டி மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், ஒரு சிலர் காங்கிரஸ் கட்சியோடு திமுக உறவு கொண்டுவிட்டது. இலங்கைப் பிரச்னையைக் கைகழுவிட்டது என்றெல்லாம் வெறுப்பு அரசியல் செய்கின்றனர் என்று கூறுகின்றனர். இலங்க…

    • 1 reply
    • 435 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.