தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
பெங்களூருவில் 'தண்ணி காட்டிய' தினகரன் பெங்களூரு: பெங்களூருவில் டில்லி போலீசார் கைது செய்ய வந்திருப்பதை தெரிந்து கொண்ட தினகரன், சசிகலாவை சந்திக்காமல், தமிழக எல்லையான அத்திப்பள்ளியுடன் திரும்பி வந்த செய்தி தற்போது வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசியை சந்திக்க செல்வதாக கூறி தினகரன் பெங்களூரு சென்றார். ஆனால் சந்திக்காமல் சென்னை திரும்பினார். டில்லி போலீஸ் வருகை: இது தொடர்பாக உளவுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: தினகரனை சந்திக்க அனுமதி கேட்டு சசி இன்னும் சிறை அதிகாரிகளிடம் மனு அளிக்கவில்லை. சிறை விதிகளின்படி திங்கட்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தான் பார்வையாளர்களை சந்திக்க முடியும். இனி சசியை சந்திக்க வெள…
-
- 0 replies
- 420 views
-
-
ஜல்லிக்கட்டு போட்டி : புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தமிழக அரசு மேலும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. புதிய வழிகாட்டு நெறிமுறை: 1) ஜல்லிக்கட்டு காளைகளுடன் வழக்கமாக 5 முதல் 6 பேர் வரை வரும் நிலையில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு காளைகளுடன் காளை உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் என இருவர் மட்டுமே வர வேண்டும். 2) ஜல்லிக்கட்டு காளையுடன் வரும் காளை உரிமையாளர் மற்றும் உதவியாளர் இருவரும் கொரோனோ பரிசோதனை செய்து கொரோனோ இல்லை என்ற உறுதி சான்று பெற வேண்டும். 3) காளையின் உரிமையாளர் மற்றும் அவரது உதவியாளருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அடையாள அட்டை வழங்கப்படும். 4) அடையாள அட்டை இல்லாதவர்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி…
-
- 1 reply
- 420 views
-
-
பிரபலங்கள், மூத்த வழக்கறிஞர்கள் ஏழை மருத்துவ மாணவர்களுக்கு உதவ வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அறிவுறுத்தல் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த கிரஹாம்பெல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தற்போதைய கல்விகட்டண நிர்ணயம் குறித்து பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவர் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது;- “இந்தாண்டு தமிழக அரசின் உள்ஒதுக்கீடு காரணமாக, அரசு பள்ளி மாணவர்கள் பலருக்கு தனியார் மருத்துவ கல்லூரிகளில் பயில இடம் கிடைத்துள்ளது. இந்த மாணவர்களின் பெற்றோரால், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே தனியார் மருத்துவக் கல்லூரிகளின் தற்போதைய கல்விகட்டண நிர்ணயத்தை ரத்து…
-
- 0 replies
- 420 views
-
-
பாம்பாற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்கவேண்டும் என வலியுறுத்தியும், அமராவதி பாசன பகுதி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரத்தில் ஈடுபட்ட போது வைகோ அவர்கள் ஆற்றிய உரை நன்றி: இமயம் தொலைக்காட்சி https://www.facebook.com/video/video.php?v=783273478399267
-
- 0 replies
- 419 views
-
-
சென்னையில் நிர்வாகமே இல்லை.. மக்களின் வரிப்பணம் எங்கே போனது? கமல் காரசார கேள்வி சென்னை: வெள்ள நிவாரணத்திற்காக மக்களிடமிருந்தே பணம் கேட்கிறது அரசு, இதுவரை வரியாய் செலுத்திய மக்கள் பணம் எங்கேபோனது என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையின் சொகுசு ஏரியா ஒன்றான எல்டாம்ஸ் ரோடு பகுதியில் கமல் வசித்து வந்தாலும், நகரின் பிற பகுதிகளில் மக்கள் படும் துன்பங்களால் சற்று கோபமடைந்துள்ளார். இதுகுறித்து ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கமல் கூறியுள்ளதாவது: இந்த சேதத்தை, இயற்கை பேரிடர் என்று கூறுவது மிகவும் குறைவான வார்த்தை. சென்னைக்கே இந்த நிலை சென்னைக்கே இந்த நிலைமை எனில், தமிழகத்தின் பிற பகுதிகளின்…
-
- 0 replies
- 419 views
-
-
மருத்துவ துறையில் 2030ஆம் ஆண்டுக்கான இலக்கை தமிழகம் தற்போதே அடைந்துவிட்டது – முதலமைச்சர் by : Dhackshala http://athavannews.com/wp-content/uploads/2020/06/EPS.jpg மருத்துவ துறையில் 2030ஆம் ஆண்டுக்கான இலக்கை தமிழகம் தற்போதே அடைந்துவிட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மருத்துவ வசதிகளோடு, மனித வளம் மற்றும் உட்கட்டமைப்புகளை உருவாக்குவதிலும் தமிழக அரசு சிறப்பாக செயற்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளைப்போல தனியார் மருத்துவமனைகளும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றன என்றும் மருத்துவம் ஒரு கலை, வணிகம் அல்ல…
-
- 0 replies
- 419 views
-
-
மாவீரர் பூலித்தேவனுக்கு... தமிழில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த, பிரதமர் மோடி! விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவன் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ருவிட்டரில் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், மாவீரன் பூலித்தேவருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கங்களை செலுத்துவதாக கூறியுள்ளார். புலித்தேவனின் வீரமும் உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருவதாகவும் முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்ட அவர், மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2022/1297114
-
- 2 replies
- 419 views
-
-
‘உடம்பை பார்த்துக்குங்க..!’ ஸ்டாலினிடம் உருகிய ஜெயலலிதா! #VikatanExclusive அந்தக்காலம் முதலே திரைக்கலைஞர்கள் உணர்ச்சிவயப்பட்டவர்கள். தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி... பொது வாழ்க்கையானாலும் சரி எப்போது அப்படியே முடிவுகளை எடுப்பர். திராவிட பாரம்பர்யத்தில் ஊறி வளர்ந்த ராதாரவி இப்போது அப்படி ஒரு உணர்ச்சிவயப்பட்டிருக்கிறார். நடிகவேள் எம் ஆர். ராதாவின் புதல்வரான அவர், தந்தையைப் போலவே தடாலடி மனிதர்தான். பழனியில் நடந்த நடிகர் சந்திரசேகரின் மகள் திருமணத்தில், “ஸ்டாலின்தான் அடுத்த முதல்வர் என்றும் தமிழகத்தை வழிநடத்த தகுதியான ஒரே தலைவர் அவர்தான்” என்றும் பேசி அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறார். சர்ச்சைக்கு காரணம் அவர் அ.தி.மு.க வின் முன்னாள் எம…
-
- 0 replies
- 419 views
-
-
பன்னீர்செல்வம் அணியின் 5 வேன்கள் பறிமுதல்! ஆர்.கே.நகரில் போலீஸ் அதிரடி ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக ஐந்து வேன்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். அவை ஓ.பன்னீர்செல்வம் அணிக்குச் சொந்தமான வேன்கள் என்று கூறப்படுகிறது. ஆர்.கே.நகரில் வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில், அ.தி.மு.க இரண்டாக பிரிந்து போட்டியிடுகிறது. சசிகலா அணி சார்பில் டி.டி.வி.தினகரனும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். மேலும் தி.மு.க சார்பில் மருதுகணேஷும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் தேர்தல் களத்தில் உள்ளனர். கடந்த சில நாள்களாக, ஆர்.கே.நகரில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரம் செய்து வரு…
-
- 0 replies
- 419 views
-
-
ஆயுள் கைதிகள் விடுதலையில் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லை: உச்ச நீதிமன்றத்தில் நளினி மனு! Posted Date : 14:41 (07/07/2014)Last updated : 14:53 (07/07/2014) புதுடெல்லி: ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க மத்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டிய தேவை இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் நளினி மனுத் தாக்கல் செய்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை பெற்று பிறகு ஆயுள் தண்டனையாக குறைக்கப் பெற்ற நளினி, உச்ச நீதிமன்றத்தி்ல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், "எனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை 2000ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் 24ஆம் தேதி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. நான் கடந்த 23 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகிறேன். எனக்க…
-
- 0 replies
- 419 views
-
-
மருத்துவ உபகரணங்கள் கொள்வனவு – 2000 கோடி ரூபாய் வழங்குமாறு பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை தமிழகத்திற்கு மருத்துவ உபகரணங்களை கொள்வனவு செய்ய சிறப்பு நிதியாக உடனடியாக 2000 கோடி ரூபாயை வழங்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 3ஆம் கட்டமாக ஊரடங்கு அமுலில் உள்ளது. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக இன்று (திங்கட்கிழமை) ஆலோசனை நடத்தினார். இதன்போது மத்திய அரசிடம் ஏற்கனவே கோரியிருந்த ரூ. 2,000 கோடியை விடுவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள…
-
- 1 reply
- 419 views
-
-
வேலூர்: குடியாத்தம் அருகே பயணிகள் ரயிலின் என்ஜின் தனியாக கழன்று ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு-அரக்கோணம் பயணிகள் ரயில் இன்று வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள கூடநகரத்தில் வந்து கொண்டிருந்தபோது, அதன் என்ஜின் இணைப்பு உடைந்து பயணிகள் பெட்டிகள் துண்டிக்கப்பட்டது. பயணிகள் பெட்டிகளில் இருந்து என்ஜின் துண்டிக்கப்பட்டது தெரியாமல், ரயில் ஓட்டுநர்கள் குடியாத்தம் வரை வந்தனர். அங்கு வைத்து பார்த்தபோது, பயணிகள் பெட்டிகள் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் பயணிகள் பெட்டியைத் தேடி சென்றபோது, அந்த ரயிலின் 15 பெட்டிகள் பயணிகளுடன் நடுவழியில் நின்றது தெரியவந்தது. இதையடுத்து, மீண்டும், ரயில் பெட்டிகளுடன் என்ஜினை இணைக்கு…
-
- 0 replies
- 419 views
-
-
65 வயதிற்குப் பிறகுதான் கமலுக்கு ஞானோதயம் வந்துள்ளது: முதல்வர் நடிகர் கமல்ஹாசன் ஒரு தனியார் டி.வி.க்கு பேட்டியளித்தபோது தமிழக அரசு, தனது விஷ்வரூபம் படம் விவகாரம் குறித்து பேசினார். தமிழ்நாட்டில் தற்போதுள்ள அரசு நான்காண்டுகளுக்கு தொடரக்கூடாது, பொதுத் தேர்தல் வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களையும் கூறினார்.இதற்கு அ.தி.மு.க. சார்பில் கண்டன குரல் எழுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கமல் கருத்துக்கு பதில் அளித்தார். இன்று சேலம் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் ‘‘65 வயதிற்குப் பிறகுதான் கமலுக்கு ஞானோதயம் வந்துள்ளது. விஸ்வரூபம் படம் வெளியாவதற்கு உதவி புரி…
-
- 0 replies
- 419 views
-
-
சென்னை: கோடை வெயில் உச்சத்தை தொட்டுள்ளது. இன்னும் இந்த வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை காலம் துவங்கிய நாள் முதல் காலையிலேய அதிக வெப்பத்தை உணர முடிகிறது. இந்த ஆண்டு வெப்பம் அதிகம் இருக்கும் என வானிலை மையம் அறிவித்தது போல் பல நகரங்களில் வெப்பம் வாட்டி வதைக்கிறது. இன்று நண்பகல் 12 மணி நேர நிலவரப்படி சென்னையில் 40 டிகிரி செல்சியஸ், அதாவது 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அதிகப்பட்சமாக இன்று திருத்தணியில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் இருந்தது. மேற்கில் இருந்து வறண்ட காற்று வீசுவதால் , வடக்கு மாவட்டங்களில் மேலும் வெப்பம் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இன்னும் இரண்டு நாட்களில் வெப்பம் 2 முதல் 4 டிகிரி அதிகரிக்க வாய்ப்ப…
-
- 0 replies
- 419 views
-
-
தினமலர்: விடிய விடிய சப்பாத்தி சுட்ட கிராம மக்கள் படத்தின் காப்புரிமை DINAMALAR கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க, இரு கிராமத்தினர், விடிய விடிய சப்பாத்திகளை சுட்டுக் கொடுத்ததாக தினமலரில் செய்தி வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே, சென்னகிரி மற்றும் இருசனம்பட்டி கிராமங்களைச் சேர்ந்த, 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், 'கஜா' புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, தங்கள் பகுதி மக்களிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்மூலம், அரிசி, பருப்பு, நுாடுல்ஸ் பாக்கெட்கள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, பாய், போர்வை, துண்டுகள் என, 30 ஆயிரம் ரூபாய…
-
- 0 replies
- 419 views
-
-
ஒரு லட்சம் ஓட்டு: தினகரன் அணி புது 'ரூட்டு' தொகுதி முழுவதும், பணத்தை வாரி இறைக்காமல், ஒரு லட்சம் வாக்காளர்களை மட்டும் தேர்வு செய்து, ஓட்டுக்கு, 5,000 ரூபாய் வீதம், 50 கோடி ரூபாய் செலவு செய்து, வெற்றியை வசப்படுத்த, தினகரன் அணியினர் முடிவு செய்துள்ளனர். ஆர்.கே.நகர் தொகுதியில் வெற்றி பெற்றால் தான், கட்சியையும், ஆட்சியையும், தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற, இக்கட்டான சூழலில், சசிகலா அக்கா மகன் தினகரன், இடைத்தேர்தலில் களமிறங்கி உள்ளார். பொது மக்களிடம் எதிர்ப்பு பலமாக உள்ளதால், வெற்றி பெறுவது கடினம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. சர்வே அனைத்திலும், தி.மு.க.,வுக்கும், பன்னீர் அணிக்கும் இடையே …
-
- 1 reply
- 419 views
-
-
கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா: தி.மு.க. - பா.ஜ.க. இடையே மோதல் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழாவை மிக பிரம்மாண்டமான முறையில் நடத்துவதற்கு திமுக ஏற்பாடுகளைச் செய்துவரும் நிலையில், இந்த விழாவுக்கு அழைப்பது தொடர்பாக திமுக - பாரதீய ஜனதா கட்சிகளிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. திமுக தலைவர் கருணாநிதி 1957-இல் குளித்தலை தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார். அதற்குப் பிறகு நடந்த எந்த சட்டமன்றத் தேர்தலிலும் அவர் தோல்வியடையாமல், மீண்டும் மீண்டும் சட்டப்பேரவைக்குத் தேர்வு செய்யப்பட்டு வருகிறார். கருணாநிதி சட்டமன்றத்தில் நுழைந்து அறுபதாண்டுகள் நிறைவடையும் நிலையில், அதனை பெரிய அளவில் கொண்டாடுவதற…
-
- 0 replies
- 418 views
-
-
அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்கும் திட்டம்: காத்திருப்பு முடிவுக்கு வருமா? பட மூலாதாரம், Getty Images தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரையும் கோவில்களில் அர்ச்சகராக்கும் திட்டத்தின் கீழ் பயிற்சியை முடித்த மாணவர்கள் 12 ஆண்டுகளுக்கு மேலாக கோவில்களில் பணிபுரியும் வாய்ப்பிற்காகக் காத்திருக்கின்றனர். தகுதியின் அடிப்படையில் தங்களை கோவில்களில் நியமிக்க வேண்டும் என்கிறார்கள் அவர்கள். 2006ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக்கப்படலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டு, இதற்கென திறக்கப்பட்ட பயிற்சிப் பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பன்னிரெண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கோவில்களில் தங்கள் நியமனத்திற்காகக் காத்திருக்கின்ற…
-
- 0 replies
- 418 views
-
-
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. மதிப்பெண் பட்டியல்கள் 27ம் தேதி வழங்கப்படும். மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்கண்ட இணையதளங்கள் மூலம் அறிந்துகொள்ளலாம். http://tnresults.nic.in http://dge1.tn.nic.in http://dge2.tn.nic.in http://dge3.tn.nic.in இதில் http://dge3.tn.nic.in என்ற இணைய தளம் GPRS/WAP வசதியுடன் கூடிய செல்போனிலும் தேர்வு முடிவுகள் தெரியும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ள விரும்புவோர் 09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD<space><registration>,<DOB in DD/MM/YYYY> என்ற வடிவில் எஸ்எம்…
-
- 0 replies
- 418 views
-
-
அ.தி.மு.க.வில் இருந்து விலக நாஞ்சில் சம்பத் முடிவு நடிகர் ஆனந்தராஜை தொடர்ந்து அ.தி.மு.க.வில் இருந்து விலக நாஞ்சில் சம்பத் முடிவு செய்து, நெருங்கிய நண்பர்களிடம் கருத்து கேட்டு கடிதம் எழுதி உள்ளதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். நாகர்கோவில்: தமிழக முதல்வராகவும், அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 5-ந்தேதி திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அ.தி.மு.க.வின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும் ஆதரவு தெரிவித்தனர். இன்று அவர், பொதுச் செயலாளராக பொறுப்பேற்று கொள்கிறார்…
-
- 0 replies
- 418 views
-
-
இலங்கை தமிழர் விடுதலை: பிரதமருக்கு கருணாநிதி கடிதம். சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதி நேற்று, பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடித விவரம்:இலங்கை, தமிழ் தேசியக் கூட்டணி தலைவர் சம்பந்தனிடம், தமிழர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப் போவதாக, இலங்கை அதிபர் சிறிசேன சொன்னதை நம்பி தான், தமிழர்கள் அவருக்கு ஓட்டளித்தனர். அதனால், அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளில், இலங்கை சிறைகளில், நீண்டகாலமாக வாடும் தமிழர்களை, விடுதலை செய்வதும் ஒன்று. இதற்கு, 1971ல், சிங்கள அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி, விடுதலை செய்த நிகழ்வு முன்னுதாரணமாக எடுத்துச் சொல்லப்பட்டது.அதன்படி, 12ம் தேதி, இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், அதிபர் சிறிச…
-
- 1 reply
- 418 views
-
-
ஒரு புறநானூற்றுத் தமிழன் எப்படி இருப்பான் என்பதை என் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திய புறநானூறுப் பரப்பரையின் புதிய அத்தியாயத்தின் அந்த மாவீரன் யார் என்று சொன்னால் அது உலகில் மூலை முடக்கு எங்கும் இருக்கும் தமிழர்களின் நெஞ்சங்களில் இருக்கும் ஒரே தமிழன் பிரபாகரன். அவன் பிறந்த இந்நாள் அதுவே நன்நாள் என இயக்குநர் ரி.ராஜேந்தர் கூறியுள்ளார். தமிழீழத் தேசியத் தலைவரின் 60-ஆவது அகவை முன்னிட்டு அவர் வழங்கிய சிறப்பு வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். http://www.pathivu.com/news/35455/57//d,article_full.aspx
-
- 0 replies
- 418 views
-
-
காவிரியில் மணல் சிற்பம் அமைத்து குமரி இளைஞர் விழிப்புணர்வு.! வரும் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை எட்ட வேண்டும் எனும் நோக்கத்தில், கன்னியாகுமரி இளைஞர் ஒருவர் திருச்சி காவிரி ஆற்றில் மணல் சிற்பம் உருவாக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். வரும் ஏப்ரல் 18ம் திகதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக லோக்சபா தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனத் தேர்தல் கமிஷன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அத்துடன், 100 சதவீத வாக்குப்பதிவு நடைபெறுவதற்காக, வாக்காளர்கள் மத்தியில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் ஓசரவிளை கிராமத்தைச் சேர்ந்தவர்…
-
- 0 replies
- 418 views
-
-
சென்னை: சென்னை விமானநிலையத்தின் சரக்கு குடோனில் பயங்கர கதிர்வீச்சு கருவி ஒன்று 5 ஆண்டுகளாக கேட்பாரற்று கிடப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் அருகில் சரக்கு விமான போக்குவரத்து அலுவலகம் மற்றும் குடோன் உள்ளது. அங்கு உயிருக்கு உலை வைக்கும் பயங்கர கதிர் வீச்சு கருவி ஒன்று கேட்பாரற்று கிடக்கிறது. 5 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கருவி அங்கு இருந்துள்ளது. பாதுகாப்பு மிகுந்த விமான நிலைய எல்லைக்குள் இந்த கருவி ‘கார்கோ' பகுதியில் நீண்ட காலமாக யாரும் எடுத்து செல்லாமல் இருப்பது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரி விமான நிலைய அதிகாரிகளுக்கோ, பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கோ தெரிவிக்கவில்லை. சென்னை விமான நிலையம் பாதுகாப்பு எச்சரிக்கையில் உள்ளது. அப்படி இருக்கும் பட்சயத்தில் கதிர்வீச…
-
- 0 replies
- 418 views
-
-
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சென்னை அண்ணா நகரில் உள்ள தனது இல்லத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தேமுதிக இணைந்துள்ளதால், எங்களது கூட்டணி வலுவான அணியாக உள்ளது. தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியின் அணியை பூஜ்ஜியங்களின் கூட்டணி என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். பூஜ்ஜியம் என்று தெரிந்தபிறகும் தேமுதிக அலுவலகத்திலும், விஜயகாந்தின் இல்லத்திலும் பாஜகவினர் காத்துக் கிடந்தது ஏன்? தமிழ் மாநில காங்கிரஸும் எங்களது அணியில் இணைய வேண்டும். அக்கட்சித் தலைவர் ஜி.கே.வாசனுக்கும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%…
-
- 0 replies
- 418 views
-