தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் இடை நீக்கம் ரத்து: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! தமிழக சட்டமன்றத்தில் இருந்து தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டதை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி நடந்த தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், தேமுதிக உறுப்பினர் மோகன்ராஜ் பேசும்போது, ஜெயலலிதாவை விமர்சித்து கருத்து தெரிவித்தார். இதனால், சட்டப்பேரவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து, தேமுதிக உறுப்பினர்களை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ததுடன், இப்பிரச்னையை உரிமைக் குழுவுக்கு அனுப்பவும் பேரவைத் தலைவர் உத்தரவிட்டார்…
-
- 0 replies
- 411 views
-
-
சொத்து குவிப்பு: முன்கூட்டியே மேல்முறையீட்டு விசாரணை- ஜெ. கோரிக்கை- சுப்ரீம் கோர்ட்டில் மறுப்பு! டெல்லி: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை முன் கூட்டியே நடத்தக் கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துவிட்டது. உச்சநீதிமன்றத்தில் வரும் 18-ந் தேதி நடைபெறும் விசாரணையின் போது மேல்முறையீட்டு மனு மீது உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் செப்டம்பர் 27ம் தேதியன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. அத்துடன் ஜெயலலிதாவுக்கு ரூ100…
-
- 0 replies
- 411 views
-
-
மனைவியின் தம்பியின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியதால் தி.மு.க பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆத்திரமடைந்தவர்கள், பெண்ணின் வீட்டுக்குத் தீ வைத்தனர். சென்னை குன்றத்தூர் அருகே உள்ள சிறுகுளத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கிரிராஜன். தி.மு.க-வைச் சேர்ந்த இவர், ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து குன்றத்தூர் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கிரிராஜனின் மனைவியின் தம்பி காதலித்துள்ளார். அதற்கு அந்தப் பெண்ணின் அப்பா பாபு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடிக்கு கிரிராஜன் அடைக்கலம் கொடுத்துள்ளார். அதோடு பாபுவிடம் இருவர…
-
- 0 replies
- 411 views
-
-
தமிழக அரசின் கடன் சுமை 5.7 இலட்சம் கோடி ரூபாயாக உயர்வு – நிதியமைச்சர் http://i2.wp.com/athavannews.com/wp-content/uploads/2021/02/1614069329138881-720x430.jpg தமிழக அரசின் கடன் சுமை 5.7 இலட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வரவு செலவுத் திட்டத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்து உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “2021 – 2022ம் ஆண்டிற்கான வருவாய் பற்றாக்குறை 41,417.30 கோடியாக இருக்கும். மூலதன செலவினம் 14.41 சதவீதமாக உயர்ந்து 43,170.61 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.7 இலட்ச…
-
- 0 replies
- 411 views
-
-
இவரு தான் அவரா? இல்ல அவரு தான் இவரா? விஜயகாந்தின் அமெரிக்க வெர்ஷன் - வீடியோ தமிழகத்தில் அன்புமணி ராமதாஸ், தனது போஸ்டர்களில் ஒபாமாவின் ஹோப் பிரச்சாரத்தை காப்பி அடித்தார் எனக் கூறப்பட்டது. ஆனால் அமெரிக்காவில் ஒருவர் நம்ம ஊர் விஜயகாந்தை போலவே நடந்து கொள்கிறார் என்றால் நம்புவீர்களா? தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க ! டெல்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜயகாந்த், தொலைகாட்சி நிருபரை பார்த்து, "தூக்கி அடிச்சுருவேன் பாத்துக்க...!" என்றது தாறுமாறு வைரல். பிரசாரத்தின் போது தொடர்ந்து கேள்விகளை கேட்ட யுனிவிஷன் நிருபரை உட்கார சொல்லி கொண்டே இருந்த ட்ரம்ப், பின்னர் உதவியாளரை அழைத்து, அந்த நிருபரை யுனிவிஷனுக்கு திரும்ப போகச் சொன்னது ( Go ba…
-
- 0 replies
- 411 views
-
-
உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் இன்று (வெள்ளிக்கிழமை) உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்க உள்ளது. உள்ளுராட்சி தேர்தல் அறிவிப்பாணையை இரத்து செய்யக்கோரி தி.மு.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த வழக்குகள் மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு முன்பு குறித்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. இதன்போது நீதிபதிகள், தேர்தலை இரத்து செய்ய முடியாது ஆனால் விதிமுறைகளை முறையாக பின்பற்றாவிட்டால், தேர்தலை தங்களால் நிறுத்தி வைக்க முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் 9 மாவட்டங்களுக்கான தேர்தலை தள்ளி வைக்கமுடியுமா என்பது குறித்தும், பிர…
-
- 0 replies
- 410 views
-
-
ஜெயலலிதாவுக்கு காத்திருக்கும் சவால்கள்.. வழக்கறிஞர் ரத்னம் - அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தற்போதைய சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு என வருகின்ற நாட்களில் அடுத்தடுத்து சவால்கள் காத்திருக்கின்றன. இதனை ஜெயலலிதா எவ்வாறு எதிர்கொள்வார் என தமிழகம் மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் எந்த கூட்டணியையும் எதிர்பார்க்காமல் சிறிய கட்சிகளின் துணையுடன் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலே ஜெயலலிதா களமிறங்கினார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது இருந்த நிலை மாற…
-
- 0 replies
- 410 views
-
-
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தி பிரதமருக்குத் தந்தி அனுப்பும் போராட்டம் நடத்த தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த வழக்குரைஞர்கள் முடிவு செய்துள்ளனர்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் செயற்குழு கூட்டம் காஞ்சிபுரத்தில்நடந்தது. கூட்டமைப்பின் தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் வரும் மார்ச் 23-ஆம் தேதி இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் அமெரிக்கா தீர்மானம் கொண்டுவர உள்ளது. அத்தீர்மானத்துக்கு இந்தியா முழுமையாக ஆதரவு தெரிவிக்க வேண்டும். அத்தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்க வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தந்தி அனுப்ப வேண்டும். அதன்…
-
- 0 replies
- 410 views
-
-
விடுதலைப் புலிகளால் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆபத்து என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியிருப்பது வம்பை விலைக்கு வாங்கும் செயல் என தி.மு.க. தலைவர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசின் இந்த மனுவுக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் மனுவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாடு - கேரளா எல்லையில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்புப் பொறுப்பு, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கேரளா வசம் இருக்கிறது. இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு அளிக்க வேண்டுமென தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்க…
-
- 3 replies
- 410 views
-
-
மதுரையில்..... அமித்ஷா முன்னிலையில், பா.ஜ.க.வில் இணைகிறார் மு.க. அழகிரி? சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகன் மு.க. அழகிரி பாரதிய ஜனதா கட்சியில் இணையப்போவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. மதுரையில் வரும் 15-ந் தேதி பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் தமது ஆதரவாளர்களுடன் அழகிரி ஐக்கியமாவார் என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. காமராஜரின் பிறந்தநாள் ஜூலை 15-ந் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடார் மகாஜனம் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்த விழாவில் பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்று, காமராஜர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். இதன்பின் பகல் 12 மணிக்கு நடக்கும் பொதுக் கூட்டத்தில் அவர் பேசுகிறார். மதுரை ராஜா முத்தையா மன்றத்த…
-
- 3 replies
- 410 views
-
-
தினகரனை காட்டிக் கொடுத்தது யார்? அ.தி.மு.க.,வின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் கமிஷன் முடக்கியதைத் தொடர்ந்து அதை மீண்டும் பெறுவதற்காக, தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக, அக்கட்சியின் நியமன துணைப் பொதுச் செயலர் தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுன், புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர், ஹவலா ஏஜெண்ட் நரேஷ் உள்ளிட்ட பலரையும், டில்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களை போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரித்தபோது, நடந்தவைகள் அனைத்தையும், அனைவரும் ஒப்புக் கொண்டனர். தினகரனும், மல்லுகார்ஜுனனும் தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டும் விசாரிக்கப்பட்டனர். அப்போது, திருவேற்காட்டில் உள்ள வழக்கறிஞர் கோபிநாத்தும் சம்பந்தப்பட்டிருக்கும் தகவல் வெளிப்பட, அவரையும் விசாரணை வள…
-
- 0 replies
- 410 views
-
-
கமல்ஹாசன் மீது வழக்குப்பதியலாம்! காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு Chennai: நிலவேம்புக் கஷாயம் விவகாரத்தில், மனுதாரர் புகாரில் முகாந்திரம் இருந்தால், நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப்பதிவு செய்யலாம் என்று காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதற்குக் காரணமான கொசுவை அழிக்கும் நடவடிக்கையில் தமிழக சுகாதாரத்துறை ஈடுபட்டுவருவதோடு, நாேய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, பாதிக்கப்பட்டவர்களுக்கும் பொதுமக்களுக்கும் நிலவேம்புக் கஷாயத்தை வழங்கிவருகிறது. இதன…
-
- 1 reply
- 410 views
-
-
ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான உரிமங்கள் கோரி வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் December 22, 2018 ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான உரிமங்கள் கோரி மத்திய மற்றும் தமிழக அரசுகளிடம் வேதாந்தா நிறுவனம் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதியில் உள்ள கச்சா எண்ணெய், எரிவாயு உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏலத்தை மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம் ஏலம் விட்டிருந்தது. இதற்காக, சற்றலைட் மூலம் எடுக்கப்பட்ட படங்களில் கிடைத்த சதுரபரப்பளவில் ஹைட்ரோகார்பன் அமைந்த இடங்கள் கண்டறியப்பட்ட நிலையில் தமிழகத்தின் இரண்டு இடங்களை தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் ஏலத்தில் பெற்றுள்ளது. இங்கு தன் பணியை ஆரம்பிக்க வேதாந்தா, மத்திய அரசிடம…
-
- 0 replies
- 410 views
-
-
`ஆறு மாதத்தில் தேர்தல் வந்தாலும் ரெடி!' - ரஜினி பளீச் நேரடி அரசியலில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் குதித்துள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் இருவரும் போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், `கமலுடன் கூட்டணி வைப்பீர்களா' என்று ரஜினியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, `காலம்தான் பதில் சொல்லும்' என்று பதிலளித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் பேசிய கமல்ஹாசன், `ஜனவரி 26-ம் தேதி முதல் களத்தில் இறங்கப்போகிறேன். பயணத்தை எங்கிருந்து, எப்படி தொடங்குகிறேன் என்பதை வருகிற 18-ம் தேதி வெளியாகும் ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறேன்' என்று அறிவித்து அ…
-
- 0 replies
- 410 views
-
-
சசிகலாவைச் சந்திக்காத ஓ.பி.எஸ்.! -பின்னணி என்ன? தமிழக அமைச்சர்களின் முகங்களில் இயல்புநிலை திரும்பவில்லை. தலைமைச் செயலாளரை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் வீட்டில் சோதனை என வருமான வரித்துறையினர் உறக்கமே இல்லாமல் சோதனை நடத்துகின்றனர். 'ரெய்டின் பின்னணியில் ஓ.பி.எஸ் இருக்கலாம் என கார்டன் தரப்பில் உறுதியாக நம்புகிறார்கள்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். வேலூரைச் சேர்ந்த அரசு ஒப்பந்ததாரர் சேகர் ரெட்டி வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு, தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை வளையத்திற்குள் கொண்டு வந்தது வருமான வரித்துறை. கடந்த மூன்று நாட்களாக நடக்கும் சோதனையில், அமைச்சர்களுக்கு இணையாக ராம மோகன ராவ், அவருடைய மகன் விவேக் ஆகியோரிடம் ஆவணங்களும் த…
-
- 0 replies
- 410 views
-
-
ஆர்.கே.நகரில் இவர்கள்தான் வெற்றி பெறுவார்கள்! சிங்கப்பூர் புறப்படும் முன் விஜயகாந்த் பேட்டி Chennai: மருத்துவ சிகிச்சைக்காக தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று விமானம் மூலம் சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், ஏற்கெனவே சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றுவந்தார். ஆனால், பேசுவதில் விஜயகாந்த்துக்கு சிரமம் ஏற்பட்டது. இந்த நிலையில், சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றார். முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த விஜயகாந்திடம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தே.மு.தி.க போட்டியிடுமா என்று…
-
- 0 replies
- 410 views
-
-
பன்னீர்செல்வம் பற்றி டிடிவி: உள்கட்சி விரிசலை அதிகமாக்கும் முயற்சியா? தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பதவியில் இறக்கிவிட்டு தன்னை முதல்வராக அமர்த்துவதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக (அமமுக) தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இன்று தனது வீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் 2017ம் ஆண்டு ஜூலை 12ம் தேதி துணை முதல்வர் பன்னீர்செல்வம் தன்னை சந்தித்ததாக கூறியுள்ளார். இந்த தகவலை ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் தெரிவிப்பதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறியுள்ள அவர், பன்னீர்செல்வம் தன்னை மீண்டும் மீண்டும் சந்திக்க முயற்சிப்பதை தடுக்கவே இந்த தகவலை இப்போது வெளியிட்டதாக குறிப்பிட்டுள்ள…
-
- 0 replies
- 410 views
-
-
தமிழக சட்டசபையின்... நூற்றாண்டு விழா இன்று! தமிழக சட்டசபையின் நூற்றாண்டு விழா இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த விழாவின் தலைமை விருந்தினராக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்துகொள்ளவுள்ளார். இதனை முன்னிட்டு தலைமை செயலக வளாகத்தில் 5 அடுக்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை உயர் பொலிஸ் அதிகாரிகளின் நேரடி கண்காணிப்பில் 7 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜனாதிபதி செல்லும் வழிநெடுகிலும் 10 அடிக்கு பொலிஸார் பாதுகாப்புக்காக நிறுத்தப்படுகிறார்கள். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் திறந்து வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்…
-
- 0 replies
- 410 views
-
-
பண மோசடி வழக்கில், அன்பழகனுக்கு ஏழு ஆண்டுகள் சிறை…. March 14, 2019 திமுக முன்னாள் அமைச்சரான மறைந்த கோ.சி.மணியின் மகன் அன்பழகனுக்கு பண மோசடி வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பணமதிப்பழப்பு நடவடிக்கையின் பின்னர் 2017 ஆம் ஆண்டு சென்னையில் எட்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இலத்திரனியல்; பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்களின் பெயர்களில் ஹொங்காங் போன்ற நாடுகளுக்கு 80 கோடி ரூபாய் அனுப்பப்பட்டு மாற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடியில் சென்னையைச் சேர்ந்த லியாகத் அலி, இலியாஸ் பீர் முகமது ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு லிய…
-
- 0 replies
- 410 views
-
-
சென்னை: லோக்சபா தேர்தலுக்கு விறுவிறுப்பாக தயாராகி வரும் மதிமுக அரசியல் ஆலோசனைக்கழு உறுப்பினர், தீர்மானக்குழு உறுப்பினர், தேர்தல் பணித் துணைச் செயலாளர்களை நியமித்துள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணித் துணைச்செயலாளராக பணியாற்றி வந்த திரு. குட்டி (எ) சண்முகசிதம்பரம் அவர்கள் அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, கழகத்தின் அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். இவர் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள அரசியல் ஆலோசனைக்குழுச் செயலாளர் மற்றும் உறுப்பினர்களுடன் இணைந்து கழகப் பணியாற்றுவார். அரசியல் ஆய்வு மைய உறுப்பினர் அரசியல் ஆய்வுமய்ய உறுப்பினர் நியமனம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்…
-
- 0 replies
- 410 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் பல காரணங்களால் முழுமையாகச் செயல்பாட்டிற்கு வரத் தாமதமாகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 1 மே 2025, 06:49 GMT அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வேலை வாய்ப்பிற்காகக் காத்திருக்கும் மாணவர்கள், விரைவில் தங்களுக்குப் பணி வாய்ப்புகளை வழங்க வேண்டுமெனக் கோருகிறார்கள். ஆனால், பணிநியமனம் செய்யாததற்கு நீதிமன்ற வழக்குகளை அரசு காரணம் காட்டுகிறது. திருப்பத்தூரைச் சேர்ந்த மு. கோகுல்நாத் ஆன்மீகத்தில் மிகுந்த நாட்டமுடையவர். பர்வதமலை அடிவாரத்தில் இருந்த ஆதி சிவலிங்காச்சாரியார் குரு சுவாமி பீடத்தில் மந்திரங்களைக் கற்றுக் கொண்டிருந்தார்.…
-
- 0 replies
- 410 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை Getty Images "ஸ்டெர்லைட் நிறுவனம் நீதிக்கு முன்னாள் தோற்றது. 100 நாள் போராடிய மக்கள், 13 உயிர்களின் ரத்தம் இந்த ஆலையை மூடவைத்துள்ளது." என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையைத் திறக்கலாம் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதை தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் வரவேற்றுள்ளன. உயர்நீதிமன்றத்தை அணுகப் போவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் துவக்கம் முதலே போராடி வந்தவரும் வழக்கில் வாதிட…
-
- 0 replies
- 410 views
-
-
ஆர்.கே.நகரில் ரவுடிகள் குவிப்பு கலவரம் வெடிக்கும் அபாயம் ஆர்.கே.நகர் தொகுதியில், இரு சமூகத்தைச் சேர்ந்த ரவுடிகள், சசிகலா மற்றும் பன்னீர் அணி ஆதரவாளர்கள் என்ற போர்வையில் குவிக்கப்பட்டு உள்ளனர். தேர்தல் நாளன்று, அவர்களுக்குள் மோதல் உருவாகி, கலவரம் வெடிக்கும் அபாயம் உள்ளது என, தமிழக அரசுக்கும், போலீசுக்கும், மத்திய உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், ஏப்., 12ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. சகிகலா அணி சார்பில் தினகரன்; பன்னீர் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகின்றனர்.இத் தொகுதி யில், முக்குலத்தோர் சமுதாயத்தினருக்கு, 10 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன. அதில், மறவர் சமுத…
-
- 0 replies
- 410 views
-
-
தமிழக அரசு நிர்வாகத்தை,முழுமையாக மாற்றி அமைக்கும் வகையில், விரைவில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர் மாற் றப்பட உள்ளனர். ஊழல் நபர்களை நீக்கி, நேர்மையானவர்களை முக்கிய பொறுப்புகளில் நியமிக்க, திட்டமிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, விடுமுறை நாளான நேற்று, முதல்வர் பன்னீர்செல்வம், தலைமை செயலர் கிரிஜா வைத்திய நாதன் ஆகியோர், கோட்டை யில் அவசர ஆலோசனை நடத்தினர். விடு முறை நாளான, நேற்று காலை, 10:00 மணிக்கு, . புதிய தலைமை செயலர் கிரிஜா வைத்திய நாதன், தலைமை செயலகம் வந்தார்உள்துறை செயலர், சட்டத்துறை செயலர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளை அழைத்து பேசினார். பிற்பகலில்,முதல்வர் பன்னீர்செல்வம், தலைமை செயலகம் வந்தார். தலைமை செயல ருடன…
-
- 0 replies
- 410 views
-
-
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்றால் ஜெயலலிதா. ஜெயலலிதா தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது எழுதப்படாதவிதி. ஜெயலலிதா என்ற பெரு விருட்சத்தின் கீழேதான் அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் உயிர் வாழ்கிறது. ஜெயலலிதா விரும்புவதை மட்டும் செய்பவர்கள் தான் அங்கே நிலைத்து நிற்கமுடியும். எதிர்பாராத நேரத்தில் திடீரென உயர் பதவிகள் தேடிவரும் அதே போன்று திடீரென பதவியில் இருந்து தூக்கி எறியப்படுவார்கள். ஜெயலலிதாவின் மனதிலே என்ன இருக்கிறதென்பது யாருக்கும் புரியாது. தமக்கான நல்ல காலம் வரும் வரை அனைவரும் அமைதியாக இருப்பார்கள். ஜெயலலிதாவின் முன்னால் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குவது, அவருடைய காருக்கு கூழைக்கும்பிடு போடுவது, அவர் பறக்கும் ஹெலியைப் பார்த்து முதுகு கூனி …
-
- 0 replies
- 410 views
-