Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ராமேஸ்வரத்தில் இருந்து கச்சதீவிற்கு இந்திய தேசிய கொடியுடன் பேரணியாக வர முயன்ற 50க்கும் மேற்பட்ட பாரத் மக்கள் கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழர்களுக்கு கச்சதீவு பகுதியில் உள்ள பாரம்பரிய உரிமையை நிலைநாட்டும் விதமாக 68 வது சுதந்திர தினத்தில் கச்சத்தீவு சென்று இந்திய தேசிய கொடி ஏற்ற கோவையில் இருந்து பாரத் மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அண்ணாத்துரை தலைமையில் 50க்கும் மேற்பட்டவர்கள் ராமேஸ்வரம் வந்தனர். இதனையடுத்து ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து இந்திய தேசிய கொடியுடன் பேரணியாக கடற்கரை சென்று படகு மூலம் கச்சதீவு சென்று இந்திய தேசிய கொடியை ஏற்றி பாரம்பரிய உரிமையை நிலை நாட்ட இருந்தனர். இந்த நிலையில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் இருந்து பேரணியாக கடற்…

    • 1 reply
    • 400 views
  2. முதல்வராக சசிகலாவை விரும்பாத, 40 அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சட்டசபையில் தனி அணியாக செயல்பட்டு, திமு.க.,வுக்கு ஆதரவு தர முடிவு செய்துள்ளனர். 'இந்த வாய்ப்பை சாதகமாக்கி, நிலையான ஆட்சியை அமைக்க, கவர்னரிடம் அனுமதி கேட்க தயாரா வோம்' என, தி.மு.க., மாவட்ட செயலர்களுக்கு, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஜெயலலிதா மறைவை அடுத்து, பன்னீர் செல்வம் முதல்வராக பொறுப்பேற்றார். எளிமையான முதல்வராக, மக்கள் விரும்பும் வகையில், செயல்பட்டு வந்தார். அவரே, முதல்வராக தொடர்வார் என்ற எதிர்பார்ப்பு, கட்சியினரிடமும், பொதுமக்களிடமும் இருந்தது. பன்னீருக்கு நற்பெயர் கிடைப்பதை விரும்பாத சசிகலா, முதல்வராக துடித்தார். முதல்வரை மிரட்டி, ராஜினாமா க…

  3. ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் ஜெயேந்திரர் விடுதலை! ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் இருந்து காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் உள்பட 9 பேரை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது சென்னை நீதிமன்றம். கடந்த 2002 ம் ஆண்டில், சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வீட்டில் புகுந்த மர்மக் கும்பல், அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில், ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, வேலைக்காரர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து விசாரணை நடத்திய பட்டினப்பாக்கம் காவல்துறையினர், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர், சுந்தரேச அய்யர், ரகு, ரவிசுப்ரமணியம், அப்பு என்ற கிருஷ்ணசாமி, கதிரவன், சுந்தர் என்ற மீனாட்சி சுந்தரம், ஆனந்த் என்ற ஆனந்த…

  4. ராமர் பாலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் திட்டத்தை எக் காலத்திலும் கொண்டு வரக்கூடாது – அண்ணாமலை ராமர் பாலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் திட்டத்தை எந்தக் காலத்திலும் கொண்டுவரக் கூடாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுவே சேது சமுத்திர திட்டத்தில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அண்ணாமலை நல்லூரில் நடைபெற்ற கம்பன் கழக விழாவில் பங்கேற்ற பின்னர் அங்கு உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 1983ஆம் ஆண்டிற்கு பிறகு நிறுத்தப்பட்ட இந்தியா – இலங்கை கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.…

  5. 16 MAR, 2025 | 11:53 AM உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வது பிறமொழி வெறுப்பல்ல. அது தாய்மொழியை பாதுகாக்கும் முயற்சி” என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக, ஜன சேனா கட்சியின் 12-வது ஆண்டு விழாவில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் அக்கட்சியின் தலைவரான பவன் கல்யாண் பேசி இருந்தார். அப்போது அவர், “இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை. அது தேசத்துக்கு சிறப்பு சேர்க்கும். இது தமிழகத்துக்கும் பொருந்தும். இந்தி மொழியை எதிர்க்கும் தமிழகம், தமிழ் திரைப்படங்களை பிற மொழிகளில் டப்பிங் செய்யக் கூடாது. ஆனால், நிதி ஆதாயத்துக்காக தமிழ் படங்கள் பல மொழிகளில் டப் செய்யப்படுகின்றன” எனக் கூறியிருந்தார். இதற்குப்…

  6. திட்டித் தீர்த்த சென்னை மக்கள் - தப்பித்து ஓடிய அதிமுக எம்.எல்.ஏக்கள் (வீடியோ) நேற்று நடந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள, கூவத்தூரிலிருந்து புறப்பட்ட எம்.எல்.ஏக்களை பொதுமக்கள் ஏகத்துக்கும் திட்டித் தீர்த்து அவர்களை ஓட விட்டனர். சசிகலாவிற்கு எதிராக களம் இறங்கியதால், அவர் பக்கம் எம்.எல்.ஏக்கள் சென்று விடக்கூடாது என, கூவத்தூர் விடுதியில் அவர்களை சசிகலா தரப்பு அடைத்து வைத்தனர். அங்கிருந்து அவர்கள் வெளியேறவும், சுதந்திரமாக முடிவெடுக்கவும் அனுமதிக்கப்படவில்லை. மேலும், நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம் என ஊடகங்களுக்கு அவர்கள் பேட்டியும் கொடுத்தனர். சசிகலாவை எதிர்த்து நிற்கும் ஓ.பி.எஸ்-ற்கு இவர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என தமிழக மக்கள் கருத்து தெரிவி…

  7. அணிகள் இணைப்பு விவகாரத்தில் திருப்பம் பன்னீரும்,பழனியும் விரைவில் தனி ஆலோசனை அ.தி.மு.க., அணிகள் இணைவதில் உள்ள சிக்கல் தீர, முதல்வர் பழனிசாமியும், முன் னாள் முதல்வர் பன்னீர்செல்வமும், தனியாக சந்தித்து பேச வேண்டும் என, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக, இருவரும் ஆலோசித்து வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது. அ.தி.மு.க., வின் இரு அணிகளும் இணைய வேண்டும் என, நிர்வாகிகள் மற்றும் தொண்டர் கள் விரும்பு கின்றனர். சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் மட்டும் விரும்பவில்லை. நிபந்தனை இணைப்பு பேச்சு நடத்த, இரு…

  8. பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அனந்த் குமாரும் சென்றுள்ளார். நியூயார்க்கில் பேட்டியளித்த அனந்த் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இலங்கையில் மனித உரிமைகள் பாதுக்காக்கப்பட வேண்டும். எல்லா குடிமக்களுக்கும் சமஉரிமை வழங்கப்பட வேண்டும். எந்த பிரிவினரும் வஞ்சிக்கப்படக் கூடாது. நமது உணர்வுகளை ராஜாங்க ரீதியாக இலங்கை அரசிடம் வெளிப்படுத்த நாம் தயக்கம் காட்டக் கூடாது. பா.ஜ.க. மீண்டும் மத்தியில் ஆட்சி அமைந்தால் இவற்றை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும். எடுப்போம். இலங்கையின் சமூக அரசியல்-பொருளாதார அமைப்பில் தமிழர்களுக்கு முன்னுரிமை தரும் புதிய வழிமுறையை இலங்கை அரசு ஏற்படுத்தி தர வேண்டு…

    • 1 reply
    • 399 views
  9. தங்கைக்காக விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் : அலறிய பயணிகள்! monishaAug 27, 2022 11:26AM சென்னையிலிருந்து இன்று (ஆகஸ்ட் 27) காலை துபாய் செல்ல தயாராக இருந்த இண்டிகோ விமானத்திற்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இன்று காலை 7.20 மணிக்குச் சென்னையிலிருந்து துபாய் செல்வதற்கு இண்டிகோ விமானம் தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அப்போது, மர்மநபர் ஒருவர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம், துபாய் செல்லும் இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டுடன் ஒருவர் பயணிப்பதாகக் கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த 160 பயணிகளை வெளியேற்றிவிட்டு வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் வ…

  10. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா, பணத்தை கொடுத்து பதவியை வாங்கியுள்ளார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா பணத்தை கொடுத்து பதவியை வாங்கியுள்ளார். அதிமுகவின் தேர்தல் அறிக்கை நிறைவேற்ற 15 லட்சம் கோடி தேவைப்படும். ஏற்கனவே கடனில் சிக்கி தவிக்கும் தமிழகத்தில் அவர்களின் தேர்தல் அறிக்கை எப்படி சாத்தியம் ஆகும். அதிக அளவு பணம் விநியோகிக்கப்பட்டதாக கூறி அரவக்குறிச்சி, தஞ்சாவூர், சட்டமன்ற தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது வேடிக்கையானது, அது அவமானமானது. எதிர்வரும் உள்ளாட்சி தேர்தல், மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் ந…

  11. ''அ.தி.மு.க., அரசுக்கு எதிராக, பூச்சாண்டி காட்டும் தினகரன் தான், '420' எனப்படும், மோசடி பேர்வழி. ஸ்டாலின், நம்பிக்கை யில்லா தீர்மானம் கொண்டு வந்தால், நாங்கள் சந்திக்க தயார்,'' என, டில்லியில், நேற்று, முதல்வர் பழனிசாமி அதிரடி பேட்டி அளித்தார். மேலும், அ.தி.மு.க., அணிகள் இணையும் என, நம்பிக்கை தெரிவித்த அவர், பிரதமரை சந்தித்து, 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும்படி வலியுறுத்தினார். சென்னை, அ.தி.மு.க., தலைமை அலுவலகத் தில், நேற்று முன்தினம், முதல்வர் பழனிசாமி தலைமையில், அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் பங்கேற்ற, ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், 'அ.தி.மு.க., துணை பொதுச் செயலராக தினகரன் நியமிக்கப்பட்டது, சட்ட…

  12. 47 சதவீத ஆண்கள் மதுவுக்கு அடிமை: நாட்டில் நடக்கும் குற்றச்சம்பவங்களுக்கு அரசை ஏன் பொறுப்பாக்க கூடாது?- அரசுக்கு உயர் நீதிமன்றம் பதிலளிக்க உத்தரவு Published : 27 Mar 2019 20:56 IST Updated : 27 Mar 2019 20:56 IST கோப்புப் படம் மதுபோதைக்கு 47 சதவீத ஆண்கள் அடிமையாக உள்ளனர். நாட்டில் நடக்கும் குற்றச்சம்பவங்களுக்கு மதுவிற்கும் அரசே அதற்கு பொறுப்பு என ஏன் அறிவித்து தண்டனை விதிக்கக்கூடாது என அரசுக்கு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் இரண்டு பேர் தற்கொலை செய்த வழக்கில் வீராசாமி உட்பட இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இருவருக்கும் நிபந்தனை முன் …

  13. திண்டுக்கல்: தமிழ்நாட்டில் பாரதியஜனதா, இந்து முன்னணி நிர்வாகிகள் திட்டமிட்டே படுகொலை செய்யப்படுகின்றனர் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். கிறிஸ்துவ-இஸ்லாமிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதைபோல இந்து மாணவர்களுக்கும் உதவித்தொகை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அணி சார்பில் திண்டுக்கல் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது: பாரதிய ஜனதா மற்றும் இந்து இயக்க நிர்வாகிகள் திட்டமிட்டே கொடூரமான முறையில் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த கொலைகள் திட்டமிட்டு நடைபெற்று வருகிறது. இந்த கொலைகளுக்கு சுயகாரணம் தனிப்பட்ட வெறுப்பு, பழிவாங்கும் நடவடிக்கை என்று தம…

    • 1 reply
    • 399 views
  14. மத்தியில் காங்கிரஸ், பா.ஜனதா அல்லாத 3-வது அணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. கூறினார். திண்டுக்கல்லில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:- அகில இந்திய அளவில் காங்கிரஸ் அரசுக்கு அரசியல் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. சுதந்திரம் அடைந்த பின்னர் பெரியஅளவில் ஊழல் காங்கிரஸ் அரசில் தான் நடந்துள்ளன. பிரதமர், மந்திரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. ரெயில்வே மந்திரியின் உறவினர் லஞ்சம் பெற்றுள்ளதால், மந்திரி பதவிவிலக வேண்டும். மக்கள் விரோத கொள்கைகளை மத்திய அரசு கொண்டுள்ளது. இதனால் நாடுமுழுவதும் கொந்தளிப்பு நிலை உருவாகி உள்ளது. இதில் பா.ஜ.க. அரசியல் ஆதாயம் த…

    • 0 replies
    • 399 views
  15. கிரிமினல் ஒருவர் கட்சிக்கு தலைவராகக் கூடாது; சசிகலாவுக்கு அடுத்த அடிக்கு ஏற்பாடு கிரிமினல் வழக்கில் தண்டனைப் பெற்றவர்கள், வாழ்நாள் முழுவதும், தேர்தலில் போட்டியிட முடியாது என்றும், அவர் சாகும் வரை வாக்காளராக இருக்கவே தகுதி அற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் கேட்டு, உச்ச நீதிமன்றத்தில்,டில்லி, பா.ஜ., நிர்வாகியும், வழக்கறிஞருமான அஸ்வினி உபாத்யாயா சார்பில் பொது நல வழக்கு தாக்கல் செய்யபப்பட்டுள்ளது. அந்த வழக்கு, இந்திய அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அந்த வழக்கில், தன்னையும் ஒரு தரப்பாக இணைத்துக் கொண்டு, என்னுடைய தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும் என, தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.,யான பழனிச்சாமி, உச்ச நீதிமன்றத்தில் மனு …

  16. 10 AUG, 2024 | 09:20 AM சென்னை: தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க இலங்கை கடற்படையின் தொடர் அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக மீனவர்கள் கைது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: வங்கக்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 32 பேர்,4 நாட்டுப் படகுகளை இலங்கைகடற்படையினர் சிறைபிடித்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடர்ந்து அராஜக முறையில் சிறைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், இதற்கு நிரந்த தீர்வு காண மத்திய அரசு போதிய முயற்சிகள் எடுக்கவில்லை. தமிழக மீனவ…

  17. கருணாசின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் செருப்பு வீசியுள்ளனர். நடிகரும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான கருணாசின் கார் மீது அடையாளம் தெரியாத நபர்கள் செருப்பை வீசியுள்ளனர். இன்று கருணாஸ் தனது தொகுதியான திருவாடனைக்கு சென்றுவிட்டு அங்கிருந்து திரும்பிய போது மறைந்திருந்த சில நபர்கள் அவரது கார் மீது செருப்புகளை வீசி எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். இது தொடர்பில் கருணாஸ் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். http://globaltamilnews.net/archives/19078

  18. பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் 27 பேர் உயிரிழந்தனர். மேலும் பல குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் மதுபானியில் உள்ள ஒரு பள்ளியிலும் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் தமிழகத்திலும் அதேபோன்ற சம்பவம் நடந்துள்ளது பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. நெய்வேலி என்.எல்.சி. மகளிர் பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு சிறிது நேரத்தில் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் உடனடியாக என்.எல்.சி. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு சிகிச்சை அளி…

    • 0 replies
    • 399 views
  19. எம் கோரிக்கைகள்தாம் எமது உயிர் - தோழர் தியாகு நேர்காணல் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் மாநாடு நடக்க இருக்கிறது. அப்பாவித் தமிழர்களை கொத்துக் கொத்தாக அழித்தொழித்த சிங்களப் பேரினவாத அரசுக்கு இந்த மாநாட்டை நடத்தும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் இந்தியப் பிரதமரோ இந்திய அரசின் வேறொரு பிரதிநிதியோ கலந்துகொள்ளக் கூடாது என்று தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இவற்றில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் தமிழகக் கிளையும் அடக்கம். இம்மாநாட்டில் கலந்துகொள்வது குறித்து இந்திய அரசு இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் இலங்கையில் நடக்க இருக்கும் பொதுநலவாய மாநாட்டைப…

  20. 25.3.2013 அன்று சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயற்குழு அவசரக் கூட்டத்தில் 'இனப் படுகொலையை நடத்தி தமிழ்ஈழ மக்களையே அழித்தொழிக்க முயன்ற இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடப்பது எவ்விதத்திலும் பொருத்தமானதோ ஏற்கக் கூடியதோ அல்ல. எனவே அம்மாநாட்டை எக்காரணம் கொண்டும் அங்கு நடத்திடக் கூடாது என்று காமன் வெல்த் தலைமையை இக்கழகச் செயற்குழு கேட்டுக் கொள்கிறது'' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கொழும்பில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்ற கருத்தை திராவிட முன்னேற்றக் கழகமும் 'டெசோ' அமைப்பில் உள்ள மற்ற இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பல்வேறு தமிழ் அமைப்புகளும் தமிழ் இன உணர்வாளர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகிறார்கள். 26.…

    • 1 reply
    • 398 views
  21. spaceplay / pause qunload | stop ffullscreen shift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek . seek to previous 12… 6 seek to 10%, 20% … 60% இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப் பட்ட, சசிகலா அக்கா மகன் தினகரனை, ஐந்து நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, கோர்ட் அனுமதித்துள்ளது. தினகரனை சென்னை அழைத்து வந்து விசாரி…

  22. கேஸினோவில் சூதாடும் ரஜினி : சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் கடும் தாக்கு நடிகர் ரஜினிகாந்த்தை தொடர்ச்சியாக விமர்சித்துவரும் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி, ரஜினியை அமலாக்கத் துறை விசாரிக்க வேண்டுமெனக் கூறியுள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் 2.0, ரஞ்சித் இயக்கத்தில் காலா என இரண்டு படங்களில் நடித்துவரும் ரஜினிகாந்த், தற்போது அமெரிக்காவிற்குச் சென்றிருக்கிறார். காலா படத்தின் ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். உடல்நலம் கு…

  23. இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களில் முதல் ஐ.ஏ.எஸ்.! துணை ஆட்சியராக நியமனம் இந்தியாவில் முதன்முறையாக இலங்கைத் தமிழர் ஒருவர், ஐஏஎஸ்-ஸில் தேர்வாகி தற்போது கோழிக்கோடு மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள படகரா கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பசேகர் காளிமுத்து. இவரின் முன்னோர், கடந்த 1823 ம் ஆண்டு இலங்கைக்குக் குடி பெயர்ந்தனர். ஆங்கிலேயர்கள், இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் வேலைக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமானோரை அழைத்துச் சென்றனர். அதில் இன்பசேகர் காளிமுத்துவின் முன்னோர்களும் அடங்கியிருந்தனர். இந்த நிலையில் கடந்த 1948 ம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பிறகு, இலங்கை அரசு இந்தியாவில் இருந்து அங்கு குடியேறியவர்…

  24. நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய கட்சியோடு கூட்டணி வைத்து தமிழகஅரசியல் களத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி மிகப்பெரிய அங்கீகாரம் பெறும் என தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனர் பண்ருட்டி தி.வேல்முருகன் தெரிவித்தார்.சிதம்பரத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நிறுவனர் தி.வேல்முருகன் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:தமிழக வாழ்வுரிமை கட்சி தமிழகத்தில் மாபெரும் அரசியல் சக்தியாக வளர்ந்து வருவதை ஆண்ட கட்சி, ஆளும் கட்சி தெரிந்து கொள்ள கிராமங்களிலும், வீடுகள் தோறும் கொடிகள் ஏற்றி சுறு, சுறுப்பாக உழைக்க வேண்டும். த.வா.கவை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது. தமிழக வாழ்வுரிமை கட்சி மக்கள் சக்தியாக திகழும். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.