தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10255 topics in this forum
-
மோடியின் பாராமுகம் முதல் முதல்வருக்கான சதுரங்கம் வரை...! -பன்னீர்செல்வத்தின் தைரியமும் சசிகலாவின் கொந்தளிப்பும் #VikatanExclusive #OPSVsSasikala அரசியல் மேகங்கள் போர்க்கோலம் பூண்டுள்ளன. முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் பேட்டியும் சசிகலாவின் குற்றச்சாட்டுகளும் தேசிய அளவில் அனைத்து செய்திகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டன. 'ஆளுநர் வருகையை எதிர்பார்த்திருக்கிறோம்' என தம்பிதுரை நம்பிக்கை தெரிவிக்க, 'இன்னும் ஒரு வாரத்திற்கு ஆளுநர் தமிழகம் பக்கமே வர மாட்டார்' என்கின்றனர் ராஜ்பவன் வட்டாரத்தில். கலங்க வைத்த கடைசி ஃபிளைட்! தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நேரத்திலேயே, ' அடுத்த முதல்வர் யார…
-
- 1 reply
- 384 views
-
-
பிரதமருடன் அ.தி.மு.க எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு பிரதமர் நரேந்திர மோடியை அ.தி.மு.க எம்.பி.க்கள் இன்று திடீரென சந்தித்து பேசினர். கோடியக்கரை பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கடையினர் நேற்று துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் மீனவர்கள் தினேஷ், அரவிந்தன் காயம் அடைந்தனர். அவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த மாதம் இந்தியா- இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம் என்று இலங்கை அரசு உறுதி அளித்திருந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. …
-
- 0 replies
- 384 views
-
-
போலீஸ் மூலம் சசி குடும்பம் அச்சுறுத்துகிறது ஜெ., அண்ணன் மகள் தீபா குற்றச்சாட்டு ''சசிகலா குடும்பத்தினர், காவல் துறை மூலம், என்னை அச்சுறுத்த பார்க்கின்றனர்,'' என, ஜெ., அண்ணன் மகள் தீபா குற்றம் சாட்டினார். சென்னையில், நேற்று அண்ணாதுரை நினை விடத்தில், அஞ்சலி செலுத்த, தீபா சென்றார். அவரது காரை, வி.ஐ.பி.,க்கள் செல்லும் வழி யில் அனுமதிக்க, போலீசார் மறுத்தனர். தீபா ஆதரவாளர்கள், அவர்களுடன், கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின், அவரை அனுமதித் தனர்.இதேபோல், சென்னை, ஆர்.கே.நகரில், தீபா கலந்து கொண்ட நிகழ்ச்சிகளுக்கும், இடையூறு ஏற்படுத்தினர். இது குறித்து, தீபா …
-
- 0 replies
- 384 views
-
-
’’எதுவும் பேசக்கூடாது என்பது ஜனநாயகமா?’’ - மாணவர்கள் மத்தியில் கமல் பளீச் தலைவனாக வரவில்லை; தலைவர்களைச் சந்திக்க வந்திருக்கிறேன் என்று மாணவர்கள் மத்தியில் நடிகர் கமல்ஹாசன் பேசினார். ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து வரும் பிப்ரவரி 21-ம் தேதி `நாளை நமதே’ என்ற பெயரில் அரசியல் பயணத்தைத் தொடங்க இருப்பதாகக் கமல் அறிவித்து, அதற்கான களப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள, தனது இல்லத்தில் ரசிகர்மன்ற நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்தநிலையில், சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அங்கு மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளித்த கம…
-
- 0 replies
- 384 views
-
-
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது! தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (செவ்வாய்க்கிழமை) கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. இதன்போது புதிதாக தெரிவு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்க்கவுள்ளனர். இதற்காக தற்காலிக சபாநாயகராக தி.மு.கவை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர் பிச்சாண்டியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். காலை 10 மணி அளிவில் சட்டசபை கூட்டத்தொடர் கூடவுள்ள நிலையில், இதன்போது புதிதாக தெரிவு செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் அகர வரிசைப்படி பதவிபிரமாணம் செய்துகொள்ளவுள்ளனர். இதனைத் தொடர்ந்து சபாநாயகர், துணை சபாநாயகர்கள் நாளைய தினம் தெரிவு செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2021/1214954
-
- 0 replies
- 384 views
-
-
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பல்வேறு தமிழ் அமைப்புகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தின. ஆனால் இந்திய அரசு சார்பில் மத்திய மந்திரி சல்மான் குர்ஷித் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இப்போது சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல்கள் சுந்தரவதனம், ராஜேந்திரன் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்வது என்று மத்திய அரசு எடுத்த முடிவும், வெளியுறவுத்துறை மந்திரி சல்மான் குர்ஷித்…
-
- 0 replies
- 384 views
-
-
இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக, தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு, 60 கோடி ரூபாய் லஞ்சம் தர, சசிகலாவின் அக்கா மகன், தினகரன் முயற்சித்தது அம்பலமாகி உள்ளது. இடைத்தரகராக செயல்பட்டவன், 1.30 கோடி ரூபாயுடன் டில்லியில் சிக்கியதை அடுத்து, தினகரன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை வந்துள்ள டில்லி போலீசார், இன்று அவரிடம் விசாரணை நடத்தியதும், கைது செய்யலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது, வாக்காளர்களுக்கு பணத்தை வாரி இறைத்து, ஓட்டுக்களை பெற முற்பட்ட தினகரனின், அடுத்த தில்லாலங்கடி தற்போது அம்பலமாகி உள்ளது. இரட்டை இலை சின்னத்துக்கு, தேர்தல் கமிஷனில், சசிகலா மற்றும் பன்னீர்செல்வம் அணியினர் உரிமை க…
-
- 0 replies
- 384 views
-
-
தமிழகத்தில் ஐ.எஸ்.உடன் தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதிவு! In இந்தியா June 14, 2019 8:51 am GMT 0 Comments 1063 by : Krushnamoorthy Dushanthini ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் கோவையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் மூவர் மீது சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையில் தீவிரவாத செயற்பாடுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஏழு இடங்களில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறித்த சோதனை நடவடிக்கைகளின் போது அசாருதீன் என்பவர் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன், அபு…
-
- 0 replies
- 384 views
-
-
ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப்பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. உலகத் தமிழர் மத்தியில் மதிக்கப்படும் பேரறிஞர் அண்ணாவின் 51ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில் இதனை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) இந்தப் பேரணி இடம்பெற்றது. இந்த அமைதிப் பேரணி சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை நடைபெற்றது. இப்பேரணியில் துரைமுருகன், முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் அனைத்து பிரிவு நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர். இதனையடுத்து மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் …
-
- 0 replies
- 384 views
-
-
லோக்சபா தேர்தலில் பா.ம.க. இடம் பெறும் அணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஒரு போதும் இடம்பெறாது என்று அக்கட்சியின் நிறுவனர் தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் வேல்முருகன் பேசியதாவது: சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்றவை அதிகரித்து வருகிறது. கடுமையான சட்டம் மூலம் முதல்வர் போர்க்கால நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். ஆடிட்டர் ரமேஷ் கொலையில் இது வரை உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஏற்காடு இடைத்தேர்தல் ஏற்காடு தொகுதியில் கட்சி அமைப்பு பணிகள் நடந்து வருகிறது. தேர்தல் அறிவித்த பின்பு எங்கள் முடிவுகள் அறிவிக்கப்படும். ஒரு தொகுதியில் எம்.எல்.ஏ. மரணம் அடைந்து விட்டால்…
-
- 0 replies
- 384 views
-
-
தமிழகம் முழுவதும் நீடிக்கும் கன மழைக்கு இது வரை 13 பேர் உயிரிழப்பு 19:44:39 Monday 2014-10-20 சென்னை: தமிழகம் முழுவதும் நீடிக்கும் கனமழைக்கு இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் 4-வது நாளாக வெளுத்து கட்டும் மழையால் நகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. இதனால் மாநகர் முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வங்ககடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், வடகிழக்கு பருவ மழை தொடங்கியதன் காரணமாகவும் சென்னையில் 4-வது நாளாக கனமழை நீடிக்கிறது. இதன் காரணமாக சென்னையில் பெரும்பாலான இடங்களில் சாலைகளில் வெள்ளப்பெருக்காக காணப்பட்டது. குறிப்பாக பாரி முனை, கோயம்பேடு, பட்டிணபாக்கம் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகள் தண்ணீரில்…
-
- 0 replies
- 384 views
-
-
‘பா.ஜ.க தலைமைக்கு எடப்பாடி பழனிசாமியின் பார்ட்டி ஃபண்ட்!’ - போட்டு உடைக்கும் தங்க.தமிழ்ச்செல்வன் Chennai: ‘பா.ஜ.க அரசுக்கு மாதம் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் பார்ட்டி ஃபண்ட் என்ற பெயரில் வாரிக் கொடுக்கிறார் எடப்பாடி பழனிசாமி’ என அதிர வைக்கிறார் தினகரன் ஆதரவாளரான தங்க.தமிழ்ச்செல்வன். ‘இந்த அரசைக் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தான் கப்பம் கட்டுகின்றனர். இதன்பின்னணியில் குருமூர்த்தி இருக்கிறார்’ எனவும் பட்டியலிடுகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் பெற்ற வெற்றியை ஆளும்கட்சி நிர்வாகிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதைவிடக் கூடுதலாகக் கொதிக்கின்றனர் பா.ஜ.கவினர். கடந்த ஓரிரு நாள்களாக ஆடிட்டர் குருமூர்த்த…
-
- 0 replies
- 384 views
-
-
சென்னை விமான நிலையம் டிசம்பர் 6 வரை மூடப்பட்டது சென்னையில் பெய்த கடும் மழையை அடுத்து, வெள்ள நீர் ஓடுபாதையில் புகுந்ததால், சென்னை விமான நிலையம் டிசம்பர் 6ம் தேதி வரை மூடப்படுவதாக இந்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சென்னை விமான நிலையம் டிசம்பர் 6 வரை மூடல் விமான நிலைய ஆணைய அதிகாரிகள் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு ஒன்றில், நேற்றிரவு ( செவ்வாய்க்கிழமை) சுமார் 8 மணி வரை , மழை இருந்தாலும் விமான சேவைகள் கடினமான சூழலில் இயக்கப்பட்டன, ஆனால் இடைவிடாத மழை விமான நிலையப் பணிகளை ஸ்தம்பிக்கச் செய்துவிட்டதாகக் கூறியது. ஆனால் அதற்குப்பின்னர் ஓடுபாதைகளில் தண்ணீர் சுமார் இரண்டடிக்கு உயர்ந்ததால், விமான ஓடுதளம் சுமார் மூன்று மணி நேரம…
-
- 0 replies
- 384 views
-
-
இராமேஸ்வரம்: இராமேஸ்வரத்தில் விசைப்படகு மீனவர்கள் 3 அம்ச கோரிக்கைகளை முன் வைத்து 5வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் அரசு தரப்பு நடத்திய பேச்சுவார்த்தையானது தோல்வியடைந்தது. இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வேண்டும். கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாத மற்றும் அரசுடைமையாக்கப்பட்ட சுமார் 150க்கும் மேற்பட்ட படகுகளுக்கு உரிய நிவாரணத்தொகை வழங்க வேண்டும், உளர் மீன்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித ஜி.எஸ்.டி வரியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 24ம் தேதி முதல் ராமேஸ்வரத்தில் அனைத்து விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறு…
-
- 0 replies
- 384 views
-
-
சாந்தனின் மரணத்திற்கு தமிழக அரசே காரணம் – எடப்பாடி பழனிச்சாமி. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கை தமிழரான சாந்தன், தாயகம் திரும்ப காத்திருந்த நிலையில் உடலநல குறைவால் உயிரிழந்தமைக்கு தமிழக அரசே காரணம் என அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சாந்தன் உயிரிழப்பு தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சிறையில் 32 ஆண்டுகால நீண்ட சிறைவாசம் அனுபவித்த இலங்கைத் தமிழர்களான ராபர்ட் பயஸ், ஜெயகுமார், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோர் கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இலங்கை குடிமக்கள் என்பதால் அயல் நாட்டிற…
-
- 3 replies
- 384 views
-
-
சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும்- சீமான் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். புதிய கல்வி கொள்கைக்கு எதிராக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக சென்னையில் உள்ள தனது வீட்டின் முன்பு சீமான் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அந்தபின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அந்தி வந்தால் நிலவு வருவதை போல ஹிந்தி வந்தால் பிளவு வரும் என்று தெரிவித்தார். அத்துடன், ஹிந்தியை இந்தியா என்ற கட்டமைப்பிற்குள் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலம், ஹிந்தியைப் போல் தமிழையும் நாடெங்கும் படிக்கச் சொல்வா…
-
- 0 replies
- 384 views
-
-
அடுத்தது இவர்கள்தான்! அதிரவைக்கும் ஹெச்.ராஜா ஃபேஸ்புக் பதிவு டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்து அ.தி.மு.க அமைச்சர்கள் என்று அதிரவைத்துள்ளார் பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா. அ.தி.மு.க பெயரையும், இரட்டை இலைச் சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ள நிலையில், அதனை கைப்பற்றும் முயற்சியில் பன்னீர்செல்வம் அணியினரும், பழனிசாமி அணியினரும் இறங்கியுள்ளனர். இதனிடையே, இரட்டை இலைச் சின்னத்தை பெறும் முயற்சியில் டி.டி.வி.தினகரன் இறங்கியுள்ளார். இதற்காக இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் என்பவரிடம் 50 கோடி ரூபாய் பேரம் பேசியுள்ளார். முதல் கட்டமாக பத்து கோடி ரூபாய் கொடுத்துள்ளார். டெல்லியில் கைது செய்யப்பட்ட சுகேஷ் அளித்த வாக்கும…
-
- 0 replies
- 384 views
-
-
கொதிப்பில் "கதிராமங்கலம்".... சென்னை மெரீனாவில், திடீர் போலீஸ் குவிப்பு ! சென்னை மெரினாவில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறாமல் தடுக்க அவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடபட்டுள்ளனர். கதிராமங்கலத்தில் 12 இடங்களில் ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் எடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2 மாதங்களாக எண்ணெய் கொண்டு செல்லப்படும் குழாய்களை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் கடந்த இரண்டு மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கதிராமங்கலம் பகுதியில் குழாய்களில் நேற்று எண்ணெய் கசிவு ஏற்பட்டது.இதனை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்யக்கோரி கிராம மக்கள் நேற்று…
-
- 2 replies
- 384 views
-
-
கொரோனா இல்லாத சென்னையை உருவாக்க மக்களின் ஒத்துழைப்பே அவசியம்- ராமதாஸ் by : Litharsan கொரோனா இல்லாத சென்னையை உருவாக்க மக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென பா.ம.க. நிறுவனர் இராமதாஸ் கோரியுள்ளார். இதேவேளை, சென்னையில் மட்டும் 14,000 கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளும் அளவுக்கு கட்டமைப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பாக அவர் திருப்தி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் இன்று (வியாழக்கிழமை) தனது ருவிற்றரில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னையில் ஒரே நாளில் 14 ஆயிரம் கொரோனா ஆய்வு செய்யும் அளவுக்கு கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது மனநிறைவளிக்கிறது. இதை 16,000, 20,000 ஆக அதிகரிக்க வேண்டும். சோதனைகளின் எண்ணிக்கையையும்…
-
- 0 replies
- 383 views
-
-
"ஓ.பி.எஸ், தீபா சண்டைக்கு இதுதான் காரணம்!" - ஆர்.கே.நகர்த் தொகுதியில் ஆர்ப்பரிக்கும் இரு அணிகள் ஓ.பன்னீர்செல்வம், தீபா ஆகிய இரு அணிகளுக்கும் இடையே கருத்துமோதல் நீறுபூத்த நெருப்பாக உள்ளது. தேர்தல் பிரசாரத்தில் பன்னீர்செல்வத்தை தீபா குற்றம்சாட்டிப் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.கவைச் சேர்ந்த ஒருதரப்பினர் தீபாவை ஆதரித்தனர். தமிழகம் முழுவதும் தீபாவின் அனுமதியின்றி பேரவை தொடங்கப்பட்டு நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர். இந்தச் சமயத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24ம் தேதியன்று தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பதாக தீபா தெரிவித்தார். ஆனால், அதற்கு முன்பே அரசியல் பயணத்துக்கு அவர் அச்சா…
-
- 0 replies
- 383 views
-
-
16 MAR, 2025 | 11:53 AM உங்கள் இந்தி மொழியை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்று நாங்கள் சொல்வது பிறமொழி வெறுப்பல்ல. அது தாய்மொழியை பாதுகாக்கும் முயற்சி” என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் பதிலடி கொடுத்துள்ளார். முன்னதாக, ஜன சேனா கட்சியின் 12-வது ஆண்டு விழாவில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் அக்கட்சியின் தலைவரான பவன் கல்யாண் பேசி இருந்தார். அப்போது அவர், “இந்தியாவுக்கு பல மொழிகள் தேவை. அது தேசத்துக்கு சிறப்பு சேர்க்கும். இது தமிழகத்துக்கும் பொருந்தும். இந்தி மொழியை எதிர்க்கும் தமிழகம், தமிழ் திரைப்படங்களை பிற மொழிகளில் டப்பிங் செய்யக் கூடாது. ஆனால், நிதி ஆதாயத்துக்காக தமிழ் படங்கள் பல மொழிகளில் டப் செய்யப்படுகின்றன” எனக் கூறியிருந்தார். இதற்குப்…
-
- 1 reply
- 383 views
- 1 follower
-
-
http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-14#page-7 http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2017-01-14#page-8
-
- 0 replies
- 383 views
-
-
‘இரட்டை இலை சின்னம் எங்களுக்குத்தான்’ - ஓ.பி.எஸ். அணியினர் உறுதி! தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஜூலை மாதத்திற்குள் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு நாட்களாக அ.தி.மு.க. அணியில் இருந்தவர்கள் 'கருத்து' சொல்வதாக சண்டையை உருவாக்கிக் கொண்டிருந்தனர். தற்போது வரை அ.தி.மு.கவின் இரு அணிகளும் இணைவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. இப்போதோ, இரு அணிகளின் தலைவர்களே 'இனி நாங்கள் சேரமாட்டோம்' என்பதை தங்களின் பேச்சால் உறுதிப்படுத்தி வருகின்றனர். ஏப்ரல் 30-ம்தேதி சேலத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி, 'எங்களிடம் பெரும்பான்மை எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர், கட்சியும்- ஆட்சியும் எங்களிடமே இருக்கிறது. யார் வந்தாலும், போனாலும் கவ…
-
- 0 replies
- 383 views
-
-
தமிழகத்திலிருந்து, இந்தியாவிற்கு அகதிகள் வருகிறார்களாம்.. நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் உளறல். நாடாளுமன்ற கூட்டத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்தியாவுக்கு தமிழ்நாட்டில் இருந்து அதிக அளவில் அகதிகள் வருகின்றனர் என்று பேசியதால் நாடாளுமன்றத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கேட்கப்பட்ட பல்வேறு துணைக் கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலளித்துப் பேசினார். அப்போது, அவர் மியான்மரிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமாக வந்து குடியேறியுள்ள ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் குறித்துப் பேசினார். இந்தியாவுக்கு வருகின்ற அகதிகள் பற்றி கிரண் ரிஜிஜு பேசுகையில், தமிழ்நாடு, பங்களாதேஷ், மியான்மரில் இருந்து இந்தியா…
-
- 0 replies
- 383 views
-
-
கூடங்குளம் அணுமின் நிலையம் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக வந்த தகவல் பொய்யானது என அந்த அணுமின் நிலையம் மறுத்துள்ளது. அங்குள்ள கணிப்பொறிகள் இணையத்தோடு இணைக்கப்படவில்லையென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் உற்பத்தித் திறனுள்ள இரண்டு அணு உலைகள் இயங்கிவருகின்றன. இந்த நிலையில், இந்த அணு மின் நிலையத்தின் கணிப்பொறிகள் மீது DTRACK என்ற வைரஸ் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக கணிப்பொறி மீதான தாக்குதல்களில் கவனம் செலுத்தும் சில ட்விட்டர் பயனாளிகள் சிலர் கூறினர். இந்த DTRACK வைரஸ் மூலம் கூடங்குளம் அணுமின் நிலைய கணினியில் இருந்து சில தகவல்கள், அதனை உருவாக்கியவருக்கு அனுப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. …
-
- 0 replies
- 383 views
-