தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10246 topics in this forum
-
வரியை உயர்த்தியது தமிழக அரசு – நாளை முதல் மதுபான விலை உயர்கிறது! இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15% உயர்த்தியுள்ளது. இதனால் மதுபானத்தின் விலை உயர்கிறது இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுபானத்தின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை வரியினை தமிழக அரசு 15% உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக சாதாரண வகை 180மிலி மதுபான போத்தலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 10 ரூபாய் கூடுதலாகவும், நடுத்தர மற்றும் ப்ரீமியம் வகை 180மிலி போத்தலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை 20 ரூபாய் கூடுதலாகவும் நாளை முதல் உயர்த்தப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. http://athavannews.com/வரிய…
-
- 0 replies
- 401 views
-
-
மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தூத்துக்குடியில் அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த ஆணைக்குடியை சேர்ந்த இளம்பெண் பானுமதியும், அவரது சகோதரி ஜான்சிராணியும், தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கடந்த திங்கட்கிழமை புகார் மனு ஒன்றை அளித்திருந்தனர். அதில் தாங்கள் சசிகலா புஷ்பா வீட்டில் வேலை பார்த்து வந்தபோது அவரது கணவர் லிங்கேஸ்வரர், மகன் பிரதீப் ஆகியோர் தங்களை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிவித்திருந்தனர். மேலும் சசிகலா புஷ்பாவும், அவரது தாயார் கௌரியும் தகாத வார்த்தைகளால் பேசி, அடித்து துன்…
-
- 0 replies
- 678 views
-
-
"தங்கமகன் மாரியப்பனுக்கு" தபால் முத்திரை வெளியிடப் பட்டது. சேலம்: ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பன் உருவம் பொறித்த தபால் தலையை வெளியிட்டு தபால் துறை சிறப்பித்துள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தின் மாரியப்பன், உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார். மாரியப்பன் டெல்லியில் இருந்து நேற்று விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், பெஞ்சமின் மற்றும் விளையாட்டுத்துறையினர் வரவேற்பு அளித்தனர். அப்போது பேசிய மாரியப்பன், அடுத்த பாராலிம்பிக்கிலும் தங்கம் வெல்ல முயற்சி செய்வதாக கூறினார். சென்னையில் இருந்து சொந்த ஊரான சேலம் மாவட்டம் பெரியவடகம்பட்டி…
-
- 0 replies
- 356 views
-
-
அறை எண் 2008-ல் ஜெயலலிதா! ப.திருமாவேலன், படங்கள்: ஆ.முத்துக்குமார், மீ.நிவேதன் தமிழ்நாட்டு அரசியலோடு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்ட சம்பந்தம் அப்போலோவுக்கு உண்டு. முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., அப்போலோவில் சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது நடந்த தேர்தலில் (1984), அவருக்குப் பதிலாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் சென்றவர்தான் ஜெயலலிதா. எம்.ஜி.ஆருக்கு அடுத்து இவர்தான் என்ற முத்திரையே அவருக்கு விழுந்தது. டெல்லியில் இருந்து வந்த பத்திரிகையாளர் ‘சண்டே’ அனிதா பிரதாப், ‘`நீங்கள் சென்ற இடம் எல்லாம் ஏன் இவ்வளவு கூட்டம் திரண்டது?” என்று ஜெயலலிதாவிடம் கேட்டார். ‘`என்னை ஜெயலலிதாவாக மக்கள் பார்க்கவில்லை. பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்கள…
-
- 0 replies
- 1.5k views
-
-
நம்புங்க, முதல்வரை நான் பார்த்தேன்..! மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் ஒப்புதல் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றத் தலைவர் கே.ஆர். ராமசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சி பிரமுகர்கள் தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை சந்தித்து, சட்டமன்ற குழுக்களை உடனடியாக அமைக்க கோரி மனு கொடுக்கச் சென்றனர். அப்போது, தி.மு.க பிரமுகர் துரைமுருகன் ஆளுநரிடம் பேசும்போது, "எழுபது நாட்களுக்கு மேல் ஆகிறது. ஜனநாயக நாட்டில் ஒரு முதல்வரை யாரும் சந்திக்க முடியவில்லை. எல்லாமே மர்மமாக இருக்கிறது..." என்று ஆரம்பித்திருக்கிறார். அப்போது குறுக்கிட்ட ஆளுநர், "நான் முதல்வரை சந்தித்தேனே?" என்றாராம். இதை சற்றும் எதிர்பார்க்காத துரைமுருகன…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழகத்தில், அ.தி.மு.க., மற்றும், தி.மு.க., ஆகியவை, கட்சியை வளர்க்கும் பொருட்டு, பல நிலைப் பதவிகளை உருவாக்கி, அதற்கேற்றபடி அதிகாரத்தை பரவலாக்கி வைத்திருந்தன. ஆனால், அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா மரணம் மற்றும், தி.மு.க., தலைவர் உடல்நலம் குன்றி இருத்தல் ஆகிய காரணங்களால், புதிதாக தலைமை ஏற்றிருக்கும், இரு கட்சிகளின் பொறுப்பாளர் களும், கட்சி ரீதியிலான பதவிகளில் மாற்றம் ஏதும் செய்யாமல், அதிகாரத்தை, தங்கள் கைகளில் மட்டுமே இருக்கும் வகையில் மாற்றி அமைத்து விட்டனர். அ.தி.மு.க.,வில், தலைவர் பதவி, அதைத் தோற்றுவித்த, எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உரித்தானது; எனவே, அதற்கடுத்த, பொதுச் செயலர் பதவியில், பல ஆண்டு காலமாய், ஜெயலலிதா இருந்தார். அவர் மறைந்த …
-
- 0 replies
- 322 views
-
-
சென்னை: ம.தி.மு.க. 20ஆம் ஆண்டு தொடக்க விழா சென்னை கட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. தி.மு.க.வில் இருந்து விலகிய வைகோ, ம.தி.மு.க. என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். கட்சி தொடங்கி இன்றுடன் 20 ஆண்டு ஆகிறது. இந்த நிலையில், 20 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில், பொதுச்செயலாளர் வைகோ தாயகத்தில் கழகக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கி, பொதுமக்கள் முன்னிலையில் சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி முன்னோடிகளும், தோழர்களும், முன்னணியினரும் கலந்து கொண்டனர் http://news.vikatan.com/article.php?module=news&aid=14564
-
- 0 replies
- 374 views
-
-
ஜெ.,வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன: அப்பல்லோ நாளை விளக்கம் சென்னை: ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து அப்பல்லோ மருத்துவனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி, லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே ஆகியோர் நாளை விளக்கம் அளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக, இருவரும் சென்னையில் நாளை மதியம் பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளனர். அந்த சந்திப்பின் போது, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு என்னென்ன சிகிச்சைகள் அளிக்கப்பட்டன என விளக்கம் அளிக்க உள்ளனர். http://www.dinamalar.com/news_detail.asp?id=1704988
-
- 0 replies
- 370 views
-
-
‘யாரும் செய்யாததையா செய்துவிட்டேன்’ என்றார் ஜெயலலிதா! சொத்துக் குவிப்பு விசாரணை அதிகாரி நல்லம நாயுடு பேட்டி என்.நல்லம நாயுடு. ஜெயலலிதாவுக்கும் சசிகலா உறவுகளுக்கும் இந்தப் பெயர் சிம்ம சொப்பனம். ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்தில் எஸ்.பி-யாக இருந்து, சொத்துக் குவிப்பு வழக்கில் விசாரணை நடத்தியவர். இவரின் உறுதியான விசாரணைதான் இந்த வழக்கின் அஸ்திவாரம். உச்ச நீதிமன்றம் வரை வழக்கு உறுதியாக நின்று, நீதி கிடைக்க இதுவே காரணமாக அமைந்தது. தீர்ப்பு வெளியாகி உள்ள நிலையில், சென்னை பெரவள்ளூரில் வசிக்கும் நல்லம நாயுடுவைச் சந்தித்தோம். 79 வயதிலும் உறுதியானக் குரலில் பேசுகிறார். வழக்கு பற்றிய தகவல்களை விரல்நுனியில் வைத்திருக்கிறார். “முன்னாள் முதல…
-
- 0 replies
- 1.9k views
-
-
ஜெ. பிறந்தநாளில் ஆடல் பாடல்; நலத்திட்ட உதவிகளுடன் கலக்கும் பன்னீர்செல்வம் அணியினர்! ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின் அணியைச் சேர்ந்த ஆதரவாளர்கள், சென்னையில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்திவருகின்றனர். ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி சசிகலா, பன்னீர்செல்வம், தீபா ஆகியோர் தரப்பு ஆதரவாளர்கள், தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகின்றனர். பன்னீர்செல்வம் அணியினர் சார்பில் சென்னை தண்டையார்பேட்டை மணிக்கூண்டில், ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில், ஏழை எளிய மக்களுக்கு சைச்கிள், பைக் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளைப் பன்னீர்செல்வம் வழங்க இருக்கிறார். …
-
- 0 replies
- 729 views
-
-
ஜெ., மரணம் : 14 கேள்விகளுக்கு பதில் இல்லை! : முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி ''அப்பல்லோ அளித்த முதல் தகவல் அறிக்கைக்கும், தற்போது வெளியிடப்பட்ட அறிக்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. எங்களுக்கு, 14 கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை,'' என, முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: அ.தி.மு.க., நியமன பொதுச் செயலர் விவகாரத்தில், அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? ஜெ.,வால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, ஆறு ஆண்டுகளாகும் நிலையில், தினகரன் மன்னிப்பு கடிதத்தை யார் ஏற்றது? தேர்தல் நடத்தி, புதிய பொதுச் செயலர் நியமிக்கப்படும் வரை, கட்சியை வழிநடத்தும் பொறுப்பு, கட்ச…
-
- 0 replies
- 288 views
-
-
‘அம்மா இடத்தில் நீங்கதாண்ணே...!’ - தினகரனை மிரள வைக்கும் அமைச்சர்கள் 'ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் யார்?' என்பதை நாளை அறிவிக்க இருக்கிறது அ.தி.மு.கவின் ஆட்சி மன்றக் குழு.' தென் மண்டலத்தில் போட்டியிடுவதைக் காட்டிலும், ஆர்.கே.நகரில் போட்டியிட்டு வென்றால், அம்மா இடத்தில் நீங்கள் அமரலாம்' என டி.டி.வி.தினகரனுக்கு ஆலோசனை அளித்து வருகின்றனர் அ.தி.மு.க அமைச்சர்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். தி.மு.க வேட்பாளரை இன்று மாலை அறிவிக்க இருக்கிறது தி.மு.க. ' ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டு 59 ஆயிரம் வாக்குகளை வாங்கிய சிம்…
-
- 0 replies
- 555 views
-
-
அதிமுக-வின் இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை: - பன்னிர் செல்வம் சற்று நேரத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு? [Saturday 2017-04-29 13:00] அதிமுக-வின் இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை என ஓ.பன்னிர் செல்வம் சற்று நேரத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் குடும்பத்தால் கட்சிக்கு பிரச்சனை என எண்ணிய எடப்பாடி அணியினர், ஓ.பி.எஸ் அணியுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்த தயார் என கூறினார்கள்.இதற்கு ஓ.பி.எஸ் அணியும் சம்மதம் தெரிவித்ததால் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இரு அணிகளும் இணையும் என எதிர்ப்பார்க்கபட்டது. பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் தலைமையில் 7 பேரும், கே.பி. முனுசாமி தலைம…
-
- 0 replies
- 555 views
-
-
. கோப்புப் படம். ஏற்கெனவே ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ளும் தேதியை மாற்றினார் ரஜினி. தனித்தனியாக ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதில் சிரமம் இருக்கிறது. எனவே மாவட்ட வாரியாக ரசிகர்களை வரவழைத்து புகைப்படம் எடுப்பது எளிதாக இருக்கும் என்று திட்டம் மாற்றிக் கொள்ளப்பட்டிருக்கிறது என்று அதற்கு பதில் விளக்கம் ரஜினி தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து மாவட்டத்திற்கு 500 பேர் வீதம் ரஜினி மே 10-ம்தேதி முதல் ரசிகர்களை சந்திப்பார். தனித்தனியாக அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள விரும்பும் ரசிகர்கள் தலைமை மன்றம் கொடுக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது…
-
- 0 replies
- 736 views
-
-
தீபா - தீபக் மோதல் பின்னணியில் தினகரன்: கார்டனில் நடந்த கலாட்டா சென்னை, போயஸ் கார்டனில், ஜெ., அண்ணன் மகள் தீபாவிற்கும், அவரது சகோதர ருக்கும் இடையே ஏற்பட்ட மோதலுக்கு, தினகரன் தரப்பினரே காரணம் என, தகவல் வெளியாகி உள்ளது. ஜெ.,மறைவுக்கு பின், அவரது சொத்துக்களுக்கு, அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர், உரிமை கொண்டாடி வருகின்றனர். சொத்துக்கள் தொடர்பாக, ஜெ., உயில் எழுதி வைத்துள்ளாரா என்பது குறித்த தகவல் எதுவும், இதுவரை வெளியாகவில்லை. தனிக்கட்சி தற்போதைய நிலையில், ஜெ., சொத்துக்கள் அனைத்தும், சசிகலா குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளன. தீபக்கும், அவர்களின்…
-
- 0 replies
- 273 views
-
-
திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டள்ள அறிக்கையில், நடைபெறவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்பப் படிவங்கள் வருகிற 20-1-2014 முதல் அண்ணா அறிவாலயத்திலுள்ள தலைமைக் கழகத்தில் கிடைக்கும். போட்டியிட விரும்புகின்ற கழகத் தோழர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி முறையாக செய்து, 30-1-2014 அன்று மாலை 6 மணிக்குள் தலைமைக் கழகத்தில் சேர்ப்பித்திட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொதுத் தொகுதி வேட்பாளர் விண்ணப்பக் கட்டணம் - ரூ.25,000/- தனித் தொகுதி மற்றும் மகளிர் விண்ணப்பக் கட்டணம் - ரூ.10,000/- விண்ணப்ப படிவத்தை தலைமைக் கழகத்தில் ரூ.1000/-வீதம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு கூற…
-
- 0 replies
- 365 views
-
-
நெல்லை: பாளையங்கோட்டையில் நடைபெற்று வரும் வாலிபால் போட்டியில் மதிமுக பொதுச்செயலர் வைகோ இறங்கி விளையாடிய கலிங்கப்பட்டி வையாபுரியார் அணி வெற்றி பெற்றது. கலிங்கப்பட்டி வையாபுரியார் நினைவு கைப்பந்தாட்டக் கழகம் சார்பில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இடையிலான வாலிபால் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது. 2 ஆவது நாளாக நேற்று நாக் அவுட் முறையில் நடைபெற்ற போட்டியில் 10 அணிகளும், லீக் முறையில் நடைபெற்ற போட்டியில் 4 அணிகளும் பங்கேற்றன. இப்போட்டியினை மதிமுக பொதுச்செயலரும், வையாபுரியார் நினைவு கைப்பந்துக் கழகத் தலைவருமான வைகோ தொடங்கி வைத்தார். முதல் சுற்றில் ஏர்வாடி எல்.வி. விளையாட்டுக் கழக அணியும், தச்சை ராயல் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில் ஏர்வாடி எல்.வி. அணி வெற்றி பெற…
-
- 0 replies
- 1k views
-
-
ஆகமங்கள் என்றால் என்ன, கோவில்களில் அவற்றின் முக்கியத்துவம் என்ன? முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும்போது ஆகமங்களின்படி நியமிக்க வேண்டுமென நீதிமன்றங்கள் அவ்வப்போது கூறிவருகின்றன. ஆகமங்கள் என்றால் என்ன? அவற்றுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் விவகாரத்தில் தீர்ப்பளிக்கும் நீதிமன்றங்கள், அர்ச்சகர் நியமனங்கள் ஆகம விதிகளின்படி நடக்க வேண்டுமென தீர்ப்பளிக்கின்றன. உண்மையில் ஆகமங்கள் என்றால் என்ன, அவற்ற…
-
- 0 replies
- 1.1k views
- 1 follower
-
-
விமர்சனத்துக்கெல்லாம் விளக்கம்... ஆச்சர்யப்படுத்திய ரஜினியின் அரசியல் பேச்சு ! அரசியல் களத்தில் முரண்பாடுகள் நிறைந்த மனிதராகப் பார்க்கப்பட்ட ரஜினிகாந்த்தின் அரசியல் பேச்சு, முதல்முறையாக பலரால் பாராட்டப்பட்டிருக்கிறது. தன் பேச்சுக்கு தானே விளக்கமும், அந்த விளக்கத்துக்கு இன்னொரு விளக்கமும் கொடுக்கவேண்டிய சிக்கலில் இருந்த ரஜினிகாந்த், முதல்முறையாக தன் மீதான பெரும்பாலான விமர்சனங்களுக்குத் தெளிவான பதில் அளித்து மீண்டும் அரசியல் உலகின் கவனத்தை தன்பால் திருப்பியிருக்கிறார். அரசியல் கட்சி ஆரம்பித்து, சுற்றுப்பயணம், கட்சிப் பணிகள் என கமல்ஹாசன் தீவிரமாக இயங்கும் சூழலில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிட..…
-
- 0 replies
- 425 views
-
-
52 நாட்களுக்கு பிறகு உண்ணாவிரதத்தை கைவிட்டார் ராஜிவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன். By RAJEEBAN 30 OCT, 2022 | 01:17 PM 52 நாட்களுக்கு பிறகு வேலூர் ஜெயிலில் ராஜிவ்காந்தி கொலை வழக்கு கைதி முருகன் உண்ணாவிரதத்தை கைவிட்டார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் ஜெயிலில் அடைக்கப் பட்டுள்ள முருகன், பரோல் வழங்க வலியுறுத்தி பலமுறை சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தார். அவர் மீது சிறை விதிமீறல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் சிறை நிர்வாகம் மறுத்துவிட்டது. வழக்கை விரைந்து விசாரிக்க வலியுறுத்தி முருகன் கடந்த மாதம் 8-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்தார். சிறை அதிகாரிகள் அவரிடம் பேச்சு வார…
-
- 0 replies
- 284 views
- 1 follower
-
-
போராட்டங்கள், வன்முறையால் தொழில்துறை பின்னடைவு: தென்மாவட்ட நிலைமையை வெளிப்படுத்திய ரஜினிகாந்தின் கருத்துகள் தூத்துக்குடியில் பேட்டி அளித்த ரஜினிகாந்த். - படம்: அ.ஷேக்முகைதீன் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் தொழில்துறை பின்னடைவுக்கு, தொடர் போராட்டங்களும் வன்முறைகளும் முக்கிய காரணம் என்பதை எதார்த்தமாக ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். மக்களின் அமைதியான போராட்டங்களை சீர்குலைத்து, லாபம் தேடும் விஷமிகளை அவர் சாடியுள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் அவ்வாறு வன்முறை தூண்டிவிடப்பட்டதை தெள்ளத்தெளிவாக ரஜினிகாந்த் தெரிவித்தார். தூத்துக்குடி ஸ்டெ…
-
- 0 replies
- 496 views
-
-
ஜெ. மேல்முறையீட்டு மனு விசாரணையில் சேர்க்கக் கோரி தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் மனுத்தாக்கல்! பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் தங்களையும் சேர்க்கக் கோரி தி.மு.க. பொதுச்செயலர் க. அன்பழகன் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்துள்ளது. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதமும் சசிகலா உள்ளிட்ட மூவருக்கு தலா ரூ10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. ஜெ. மேல்முறையீட்டு …
-
- 0 replies
- 343 views
-
-
திமுக குடும்பத்தின் கஜானாவா மார்டின்..? -சாவித்திரி கண்ணன் லாட்டரி தடை இருந்தும் தமிழ்நாட்டில் கள்ளத்தனமாக லாட்டரி விற்பனை செய்து பல கோடிகளை சம்பாதிக்க திமுக அரசு செய்து தந்த சலுகை மட்டுமல்ல, தற்போது மார்ட்டின் குறிவைக்கப்பட்டதற்கு! அதையும் தாண்டி, திமுக தலைமை குடும்பத்திற்கும், மார்டின் குடும்பத்திற்குமான நெருக்கத்தின் பின்னணி! சான்டியாகோ மார்டின் கோவையை பூர்வீகமாகக் கொண்ட ஒரு லாட்டரி அதிபர். மியான்மரில் (பர்மா) 13 வயதில் குழந்தை தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கிய மார்ட்டின் இந்தியா திரும்பி, மார்ட்டின் லாட்டரி ஏஜென்சி லிமிடெட் என்ற சிறிய லாட்டரி கடையை 1988-ஆம் ஆண்டு திறக்கிறார்.1991 ல் அதை பெரும் நிறுவனமாக்குகிறார். தற்போது அகில இ…
-
- 0 replies
- 394 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் செயற்கை நுண்ணறிவின் யுகமான இந்த காலத்தில் செயற்கை மழை ஒன்றும் புதிய சொல்லல்ல. வெள்ளம், வறட்சி, அதிக வெப்பம், புயல், மற்றும் காட்டுத்தீ போன்ற காலங்களில் அவற்றைக் கட்டுப்படுத்த ஒரு தீர்வாக விவாதிக்கப்பட்டது தான் இந்த செயற்கை மழை. தற்போது, இதைக் கொண்டே டெல்லியில் நிலவி வரும் சுற்றுசூழல் மாசுபாட்டால் ஏற்பட்டுள்ள மோசமான நிலையைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விவாதங்கள் நடந்து வருகின்றன. கடந்த சில தினங்களாகவே டெல்லியில் சுற்றுசூழல் மாசுபாடு மோசமான நிலையிலேயே நீடித்து வருகிறது. அது எந்தளவுக்குத் தீவிரம் என்றால் டெல்லியில் காற்றின் தரக் குறியீடு மதிப்பெண் 401 மற்றும் 500க்கு இடையியே நிலவி வருகிறது. …
-
- 0 replies
- 434 views
- 1 follower
-
-
இந்தியாவின் முதல் செங்குத்தான தூக்குப் பாலம் January 11, 2019 ராமேஸ்வரத்தையும் தமிழகத்தின் ஏனைய பகுதிகளையும் இணைக்கும் இந்தியாவின் முதல் செங்குத்தான தூக்குப் பாலத்தைக் கட்ட இந்திய புகையிரத திணைக்களம் முடிவு செய்துள்ளது. இரண்டு கிலோ மீற்றர் தொலைவில் அமையவுள்ள இந்தப் பாலத்துக்கு 250 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக புகையிரத அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த புதிய பாலத்தில் கப்பல்கள் செல்வதற்காக 63 மீற்றர் நீளத்துக்குத் தூக்கு பாலம் அமைக்கப்படும் எனவும் இந்தப் பாலம் 18.3 மீற்றர்ர் நீளம் கொண்ட 100 ஸ்பான்களையும், 63 மீற்றர் நீளம் கொண்ட நவிகேஷனல் ஸ்பானையும் கொண்டிருக்கும் எனவும் இது தற்போதைய பாலத்தை விட மூன்று மீற்றர் அதிக உயரம் கொண்டதாக இருக்கும் எனவும் தெரிவி…
-
- 0 replies
- 619 views
-